Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siruvargalin Snegithar AL. Valliappa 100
Siruvargalin Snegithar AL. Valliappa 100
Siruvargalin Snegithar AL. Valliappa 100
Ebook199 pages58 minutes

Siruvargalin Snegithar AL. Valliappa 100

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்கு ஏராளமானோர் பலப்பல அற்புதமான பாடல்களை எழுதினார்கள். ஆனால் குழந்தைக்கவிஞர் என்றாலே சட்டென நம் மனதில் தோன்றுபவர் அழ.வள்ளியப்பா அவர்கள். 1901 ஆம் ஆண்டில் கவிமணியின் மூலமாகத் தொடங்கிய தமிழ்க் குழந்தை இலக்கியம் நூறாண்டுகளைக் கடந்து தற்போது தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்காக ஏராளமானோர் பாடுபட்டுள்ளார்கள். அத்தகைய பலப்பல எழுத்தாளர்களில் முக்கியமானவர் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா.

குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அழ.வள்ளியப்பா. அவர் ஏராளமான குழந்தைகளுக்கான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை உடையவர். குழந்தைகளுடன் அன்பாகப் பழகியவர்.

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580138807519
Siruvargalin Snegithar AL. Valliappa 100

Read more from R.V.Pathy

Related to Siruvargalin Snegithar AL. Valliappa 100

Related ebooks

Reviews for Siruvargalin Snegithar AL. Valliappa 100

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siruvargalin Snegithar AL. Valliappa 100 - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    சிறுவர்களின் சிநேகிதர் அழ.வள்ளியப்பா 100

    (அழ.வள்ளியப்பா நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடு)

    Siruvargalin Snegithar AL. Valliappa 100

    (AL. Valliappa Nootrandu Vizha Sirapu Veliyeedu)

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காணிக்கை
    C:\Users\ASUS\Pictures\Camera Roll\2.PNG

    இந்நூல்சிறுவர் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் சிறுவர்களுக்காக 250 நூல்களை எழுதிய மாபெரும் சாதனையாளருமான திரு.தங்கமணி அவர்களுக்கு

    முனைவர் தேவி நாச்சியப்பன்

    குழந்தைக் கவிஞர் இல்லம்

    மனை எண் 2, கதவு எண் 3/628

    9 ஆம் வீதி வடக்கு விரிவு

    சுப்பிரமணியபுரம்

    காரைக்குடி 630003

    அணிந்துரை

    அன்புத் தந்தையாரின் படைப்புகளைப் பலர் ஆய்வு செய்து அவர்களின் வாழ்வியலோடு இணைத்து நூலாக வெளியிட்டுள்ளனர். தந்தையாரின் அறுபதாண்டு மணிவிழாவை முன்னிட்டு சகோதரர் டாக்டர் பூவண்ணன் எழுதிய நூல்தான் அவர்களின் வரலாற்று நூலாக முதலில் வடிவம் பெற்றது. தந்தையாருடன் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர், படித்த பள்ளி, உறவினர் வீடுகள் அனைத்தையும் பூவண்ணன் அவர்கள் நேரில் கண்டும் பலரின் கருத்துக்களைக் கேட்டும் எழுதினார். அதன் பிறகு 7 ஆண்டுகளே தந்தையார் வாழ்ந்தார்கள். அந்த வேளையில் நடந்தவற்றையும் தந்தையாரின் மறைவு குறித்தும் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூலில் டாக்டர் பூவண்ணன் எழுதி முழுமை செய்தார். முழுமையான அந்த வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டு சிலர் குழந்தைக் கவிஞரின் வரலாற்றை புதுக்கவிதை, படக்கதை, வரலாறு என படைத்துள்ளனர்.

    தந்தையாரின் நூற்றாண்டை முன்னிட்டு சகோதரர் ஆர்.வி. பதி அவர்கள் சிறுவர்களின் சிநேகிதர் அழ. வள்ளியப்பா 100 என்ற நூலை எழுதியுள்ளார். இதுவும் ஒரு முழுமையான வரலாற்று நூலாக அமைந்துள்ளது.

    நூறு தலைப்புகளில் சின்னச்சின்ன செய்தியாக அப்பாவைப் பற்றிய தகவல்களைச் சுவைபட தந்துள்ளார். இதிலுள்ள ஓரிரு தகவல்கள் எனக்குப் புதிது. அதுபற்றிய என் ஐயத்திற்கு உடனடியாக அந்தத் தகவல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை அந்த நூலின் பக்கத்தைப் படம் பிடித்து கட்செவி அஞ்சலில் அனுப்பி ஐயம் தீர்த்தார். எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால் அந்த அளவிற்கு வள்ளியப்பா வரலாற்றை நன்கு அறிந்து எழுதியிருக்கிறார். மேலும் விடுபட்ட ஒருசில தகவல்களையும் குறிப்பிட்டுச் சொன்னவுடன் பதிவு செய்தார்.

    குழந்தைக்கவிஞர் வரலாறு அவருடைய நூல்களைப் போல் செம்மையாக வெளிவர வேண்டும் என்ற கவனத்துடன் படைத்திருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். எதைப்பற்றி எழுத வேண்டுமென்றாலும் தரவுகளைத் திரட்டி உடனடியாக நூலாக்கம் செய்யும் சகோதரரின் சுறுசுறுப்பு வியப்புக்குரியது.

    நூலின் அட்டையில் குழந்தைக்கவிஞரைக் கோட்டோவியமாக வரைந்திருக்கும் அன்புத்தங்கை பல்மருத்துவர் அபராஜிதாவின் கைவண்ணம் பாராட்டுக்குரியது.

    நூலினை 98 வயது குழந்தை எழுத்தாளர் அமரர் தங்கமணி அவர்களுக்குக் காணிக்கை ஆக்கியிருப்பது சிறப்பு.

    சகோதரர் ஆர்.வி. பதி அவர்களின் இந்நூல் மாணவர்கள் படித்துப் பயன் பெறத்தக்கது. சகோதரரின் குழந்தை இலக்கியப் பயணம் வெற்றிகரமாகத் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.

    தேவி நாச்சியப்பன்

    09.08.2021

    ஆர்.வி. பதி எம்.ஏ., எம்.ஃபில்.,

    60 குமுதம்

    அணுபுரம் 603127

    செங்கற்பட்டு மாவட்டம்

    9443520904

    என்னுரை

    வணக்கம். குழந்தைகளுக்கு ஏராளமானோர் பலப்பல அற்புதமான பாடல்களை எழுதினார்கள். ஆனால் குழந்தைக்கவிஞர் என்றாலே சட்டென நம் மனதில் தோன்றுபவர் அழ.வள்ளியப்பா அவர்கள். 1901 ஆம் ஆண்டில் கவிமணியின் மூலமாகத் தொடங்கிய தமிழ்க் குழந்தை இலக்கியம் நூறாண்டுகளைக் கடந்து தற்போது தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்காக ஏராளமானோர் பாடுபட்டுள்ளார்கள். அத்தகைய பலப்பல எழுத்தாளர்களில் முக்கியமானவர் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா. 1950 ஆம் ஆண்டில் குழந்தை எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து ஒரு சங்கத்தைத் தொடங்கி சரியாக ஐம்பது ஆண்டுகாலம் (1950-1999) அந்த சங்கம் வெற்றி நடைபோடக் காரணமாக அமைந்தவர் வள்ளியப்பா. இவருடைய முழுமுயற்சியால் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நூல்களை வெளியிடுதல், புத்தகக் கண்காட்சி மற்றும் புகைப்படக் கண்காட்சி, குழந்தைகளுக்கான நாடக விழா, குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் மூலமாக வாழ்க்கை வரலாறு, அறிவியல், கவிதை, நாடகம், சிறுகதை, நாவல் என மொத்தம் ஆறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பிரிவுகளைத் தேர்வு செய்து போட்டி வைத்து அதில் ஒவ்வொரு பிரிவிலும் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் என பிரிவிற்கு இரண்டென நான்கு பதக்கங்களை வழங்கி குழந்தை எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துதல், குழந்தை இலக்கிய மாநாடு நடத்துதல் என பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றன.

    குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அழ. வள்ளியப்பா. அவர் ஏராளமான குழந்தைகளுக்கான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை உடையவர். குழந்தைகளுடன் அன்பாகப் பழகியவர்.

    சில மாதங்களுக்கு முன்னால் எழுத்தாளர் திரு.மா. கமலவேலன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இந்த ஆண்டு வள்ளியப்பாவின் நூற்றாண்டு என்று தெரிவித்தார். அன்று முதல் அதைப் பற்றி யோசித்தவாறே இருந்தேன். சில வாரங்கள் கழித்து என் மனதில் வள்ளியப்பாவின் வாழ்க்கையை 100 அத்தியாயங்களில் ஒரு நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே அதற்கான பணிகளில் ஈடுபட்டேன். அப்போது எழுதிக் கொண்டிருந்த நூல்களுக்கான பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினேன்.

    நூலுக்கான அட்டைப்படத்தை வரைய யாரைத் தேர்வு செய்வது என்று யோசித்த போது சட்டென எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பென்சில் ஸ்கெட்ச் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட உடைய என் மகள் டாக்டர்.ஆர்.வி. அபராஜிதாவிடம் வள்ளியப்பாவின் ஓவியத்தை வரைய வேண்டும் என்று சொன்னதுமே யோசிக்காமல் சரி என்று சொல்லி அதற்கானப் பணிகளைத் தொடங்கி அற்புதமாக வள்ளியப்பாவின் பென்சில் ஓவியத்தை வரைந்தார். இந்த புத்தகத்தின் அட்டையை அலங்கரிக்கும் அழ.வள்ளியப்பாவின் ஓவியம் அற்புதமாக அமைந்திருக்கிறது.

    குழந்தை இலக்கியம் செழித்து வளர பாடுபட்டவரின் நூலினை யாருக்கு காணிக்கையாக்குவது என்று யோசித்த போது என் மனதில் தோன்றிய எழுத்தாளர் திரு. தங்கமணி அவர்கள் வள்ளியப்பாவுடன் பழகியவர். குழந்தைகளுக்காக 250 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். என்ன காரணத்தினாலோ அவரை யாரும் கொண்டாடாமலேயே விட்டுவிட்டார்கள். அவருடைய பழைய புகைப்படத்தை சிரமப்பட்டு பெற்றேன். அப்படியே வெளியிடுவதை விட ஒரு ஓவியரிடம் கொடுத்து மீண்டும் வரையச் சொல்லி வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனது நண்பரும் பிரபல ஓவியருமான நாகர்கோவில் கி. சொக்கலிங்கம் அவர்களுக்கு புகைப்படத்தை அனுப்ப அவர் அன்றே தங்கமணியின் ஓவியத்தை வரைந்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிட்டார். அந்த ஓவியம்தான் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த நூலினை சாதனை எழுத்தாளர் திரு. தங்கமணி அவருக்கு காணிக்கையாக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த நூலினை பின்னால் கொடுக்கப்பட்டுள்ள பார்வை நூல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளேன். கூடுமானவரை வரலாற்றில் தவறுகள் நிகழாவண்ணம் கவனத்துடன் எழுதியுள்ளேன். இவற்றையும் மீறி ஏதேனும் தவறுகள் இருப்பதாகப்பட்டால் உரிய ஆதாரத்துடன் அனுப்பி வைத்தால் அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள குழந்தைக்கவிஞரின் மகளும் குழந்தை இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வருபவருமான முனைவர்.தேவி நாச்சியப்பன் அவர்களுக்கு நன்றி.

    இந்த நூலினை மிகச்சிறப்பாக மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றி.

    இந்த நூலினை வாசிக்கத் தேர்வு செய்திருக்கும் உங்களுக்கும் என் நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி. பதி

    21.09.2021

    பொருளடக்கம்

    1. இராயவரம்

    2. பிறந்தார் வள்ளியப்பன்

    3. சுவீகாரம்

    4. காந்தியின் வழியில்

    5. கவிமணியின் அறிமுகம்

    6. உயர்நிலைக் கல்வி

    7. பாடல் பிறந்தது

    8. நாலாவது அடியார்

    9. மாட்டு வண்டிப் பயணம்

    10. ஒட்டுவால்காரி

    11. விவேகானந்தர் வாசக சாலை

    12. படிக்கும் ஆர்வம்

    13. மீண்டும் ஒரு பாடல் பிறந்தது

    14. பாரதி வாலிபர் சங்கம்

    15. படிப்பிற்கு முற்றுப்புள்ளி

    16. சென்னை பயணம்

    17. என் ஆசான்

    18. இந்தியன் வங்கிப் பணி

    19. திருவிகவின் அறிமுகம்

    Enjoying the preview?
    Page 1 of 1