Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthaga Poomaalai
Puthaga Poomaalai
Puthaga Poomaalai
Ebook145 pages44 minutes

Puthaga Poomaalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“புத்தகப் பூமாலை” என்னும் சிறுவர்களுக்கான இச்சிறுகதைத் தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நெஞ்சை அள்ளும் வித்தியாசமான கதைகள். நல்ல கருத்துகளுடன் எழுதப்பட்ட சிறுகதைகள். இக்கதைகள் காலத்தின் தேவைகளை மனதில் கொண்டு, அவை மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் படைக்கப்பட்டவை, படிப்பவரைச் சிந்திக்க வைப்பவை.

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580160409427
Puthaga Poomaalai

Read more from S.R.G. Sundaram

Related to Puthaga Poomaalai

Related ebooks

Reviews for Puthaga Poomaalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthaga Poomaalai - S.R.G. Sundaram

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புத்தகப் பூமாலை

    (சிறுவருக்கான விழிப்புணர்ச்சிச் சிறுகதைகள்)

    Puthaga Poomaalai

    Author:

    எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்

    S.R.G. Sundaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/srg-sundaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் சிறப்பு

    அணிந்துரை

    நூலாசிரியர் உரை

    1. தாத்தா பாட்டிக்கு...

    2. துணை செய்யும் துணிவு!

    3. எழுந்து நிற்போம்!

    4. புவனாவின் பார்வை!

    5. என் வயது பத்தாயிரம் X 100

    6. பிறந்த நாள் சிறக்க...

    7. தேன் கசந்தது ஏன்?

    8. தேள் மனிதன்!

    9. புத்தகப் பூமாலை

    10. பெங்குவின் பேசினால்...!

    11. கோணல் வழி காணேல்!

    12. படியாமல் கற்ற பாடம்

    ஆசிரியர் சிறப்பு

    குழந்தை இலக்கியச் செம்மல், கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், எம்.ஏ;

    (அகவை 83ல்)

    பிறந்தநாள்: 21.08.1940

    1. குழந்தைகள் சிறந்தால் குவலயம் சிறக்கும் என்பதே இவரது குழந்தை இலக்கியப் படைப்புகளுக்கு ஆதாரமான கொள்கை.

    2. தன் பதினேழாவது அகவை முதல் இன்றுவரை தொடர்ந்து குழந்தை இலக்கியத்திற்கானப் பன்முகப் படைப்புகளில் ஈடுபட்டு வருகிறார். கதை, பாடல்கள், நாடகங்கள், விடுகதைகள், கட்டுரைகள் நூல்கள் எனப் பலப்பல.

    3. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, புலவர் தணிகை உலகநாதன், ரா. அய்யாசாமி (வானொலி அண்ணா), கூத்தபிரான் - இவர்களது வழிகாட்டுதலால் தன் குழந்தை இலக்கியப் பாதையை வகுத்துக் கொண்டவர்.

    4. குழந்தை இலக்கியத்தின் அவசியம், அதன் சிறப்பு, தமிழ் மொழிப்பற்று இவை பற்றிய சித்தனைகளைப் பரப்பி வருகிறார்.

    5. குழந்தை இலக்கிய எழுத்தாளராக, சிறுவர் சங்க அமைப்பாளராக, குழந்தைகளுக்கான நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நூல்கள் படைப்பவராக, பல பிரபல நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளுக்கு நடுவராக எனக் குழந்தை இலக்கியப் பணியில் பல கோணங்களில் ஆர்வமுடன் இன்றும் செயலாற்றி வருகிறார்.

    6. பொதிகை, ஜெயா, மக்கள், கலைஞர் தொலைக்காட்சிகளும், சென்னை வானொலியும், தென்றல் (வட அமெரிக்க மாத இதழ்) தினமணி, இலக்கியப்பீடம், உரத்த சிந்தனை, பொதிகை மின்னல், ஆத்திமாலை, அமுதசுரபி, சென்னை எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளும் இவரைப் பேட்டி கண்டுள்ளன. அளித்துள்ள பேட்டிகள்: 18.

    7. இவரது சிறுகதைகளையும், நாடகங்களையும் ஆய்வு செய்து இருவர் ‘எம்.ஃபில்.’ முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    8. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு சார்ந்த பத்து நாள் குழந்தை இலக்கியப் பட்டறையில் கலந்துகொண்டு கதையாக்கம் பற்றி உரையாற்றி, கதைகள் புனைந்து தந்துள்ளார்.

    9. அரசு மற்றும் தனியார்துறை இவருக்களித்துள்ள விருதுகள் பல. அவற்றுள் வள்ளியப்பா இலக்கியவட்ட விருது, என்.சி.இ.ஆர்.டி(NCERT) விருது, சென்னைத் துறைமுக விருது, பாரதி பணிச்செல்வர் விருது, கவிமாமணி விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    10. சிறுவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 21

    11. பெரியவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 10

    12. பல நூல்கள் ஏறக்குறைய ஐம்பது பள்ளிகளில் துணைப்பாட நூல்களாக இருந்து வந்துள்ளன.

    13. இவரது படைப்புகள் வெளியாகியுள்ள சிறுவர் ஏடுகளும் பல. அண்மையில் வானொலியிலும் (நவம்பர் 2022, பிப்ரவரி 2023), பொதிகை தொலைக்காட்சியிலும் (பிப்ரவரி 2023), சிறுவர் நிகழ்ச்சிகள் அளித்துள்ளார்.

    14. பல பள்ளி விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.

    15. என்.சி.இ.ஆர்.டி.(NCERT) விருது பெற்ற பாப்பா மகிழ பத்துக் கதைகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.

    16. படைத்துள்ள சிறுவர் இலக்கிய நூல்கள் - 16, பெரியவர் இலக்கிய நூல்கள் - 9.

    17. புத்தகப் பூமாலை எனும் இவரது நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் சிகரம் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கு, இவரது கரங்களால் உருவாக்கப்பட்ட புத்தகங்களாலான ஐந்தரை அடி நீள புத்தக மாலை அணிவிக்கப்பட்டது. புரட்சி மாலை எனப் பத்திரிகையுலகால் பாராட்டப்பட்டது.

    18. உரத்த சிந்தனை அமைப்பின் பல கிளைகளுள் ஒன்றான மடிப்பாக்கம் கிளையின் பொறுப்பாளராகப் பணியாற்றி பாராட்டு பெற்றுள்ளார். இவா நடத்தும் பாற்கடல் சிறுவர் சங்கம் பற்றிய நேர்முகப் பேட்டிக்கட்டுரை அமுதசுரபி ‘மே-2022’ இதழில் வெளியாகியுள்ளது. சென்ற 29.05.2022 அன்று, இவர் நடத்திவரும் பாற்கடல் சிறுவர் சங்கம் தனது 44-ஆம் ஆண்டு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.

    யூ-டியூபில்

    19. யூ-டியூபில் Drama by Parkadal Siruvar Sangam' என்று டைப் செய்தால் இவர் எழுதித் தயாரித்த நீலக்கடல் ஓரத்திலே" (கடல் மாதா) எனும் பாட்டுடை நடனத்தைக் (15 மணித்துளிகள்) கண்டுகளிக்கலாம்!, இந்நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டு பராட்டப்பட்ட நாடகமாகும்.

    20. ‘சுந்தரம் தாத்தா கதைகள்' என்ற தலைப்பிலும் இவரது கதைகள், பாடல்கள் திருமதி வேதவல்லி, திருமதி சுமித்ரா இவர்களால், குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டு வருகின்றன.

    21. தொகுப்பு நூல்களில் 2021ம் ஆண்டு சாகித்ய அகேடமியின் சிறுவர் நாடகக் களஞ்சியம் நூலிலும், 2000 ம் ஆண்டில் பழனியப்பா பிரதர்ஸ், 2008-ல் மணிவாசகர் பதிப்பகம் ஆகியோரின் தொகுப்பு நூல்களிலும் இவரது நாடகம் மற்றும் சிறப்பு குழந்தை இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

    22. இவரது இலக்கியப் பயணம் இன்றும் தொடர்கிறது.

    மத்திய அரசின் உயரிய விருதான பால புரஸ்கார் விருதுபெற்ற ரேவதி அவர்களின்

    அணிந்துரை

    என்றும் நிலைத்துப் பயனளிக்கும் உயரிய படைப்புகள்

    எஸ்.ஆர்.ஜி. என்று உரிமையோடு நண்பர்களால் அழைக்கப்படும் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு அறிமுகமானவர். சில ஆய்வுப் பணிகளை எனக்காக ஏற்று தோள்கொடுத்து முடித்த பெருமைக்கு உரிய நண்பர். உயரிய அரசுப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது நீண்டகாலச் சிறுவர் இலக்கியப் பற்றையும், கலைப் பற்றையும், ஆன்மிகப் பற்றையும் நன்கு அறிந்து வியந்திருக்கிறேன். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் எவ்வளவோ முறை இவரது கூட்டுப் பொறுப்பாற்றல் திறனை வியந்து, இவரை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

    எஸ்.ஆர்.ஜி. பல ஆண்டுகளாக பாற்கடல் வானொலி சிறுவர் சங்கத்தை நடத்தி, தனது குடியிருப்புப் பகுதி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள குழந்தைகளின் கலையார்வத்தைப் பலவகையில் ஊக்குவித்திருக்கிறார்.

    Enjoying the preview?
    Page 1 of 1