Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paanaikkul Pona Yaanai!
Paanaikkul Pona Yaanai!
Paanaikkul Pona Yaanai!
Ebook143 pages48 minutes

Paanaikkul Pona Yaanai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"பானைக்குள் போன யானை" (சிந்திக்க வைக்கும் சிறுவர் நாடகங்கள்) என்னும் தலைப்பில், சிறுசிறு நாடகங்களாக 14 நாடகங்களைத் தமது நூலில் வழங்கியிருக்கிறார். ஒருசில நாடகங்களில் பாத்திரங்கள் மனிதர்களாக வருகின்றனர். சிலவற்றில், மிருகங்களும், பறவைகளும் பாத்திரங்களாக மாறியும், பேசியும் கருத்துக்களைக் கூறுவதுபோல் அமைந்துள்ளன.

சிலவற்றில் வெளிப்படுகின்ற நீதியும், கருத்துமே முக்கியமாகும்! அத்தகைய நல்ல நீதிகளை இந்நாடகங்கள் நமக்கு எடுத்தியம்புவது சிறப்பு. செல்போன்களால் ஏற்படும் பெருந்தொல்லை, மறதியினால் வரும் கேடு, ஒற்றுமையே உயர்வானது, பொய் சொல்லுதல் கூடாது, ஒரு நாடகத்தில் நூலகத்தால் கிடைத்த நன்மை, நல்லகுணம் கொண்டவர்களாக இருப்பதே சிறப்பு, குடும்பத்தின் வேலைகளை அனைவரும் பகிர்ந்து செய்ய வேண்டும். அதுவே உயர்வளிக்கும், மூட நம்பிக்கை கூடாது, கரோனா நோய்த் தொற்றால் கிடைத்த நன்மைகள், நோய்த் தொற்று காலத்தில் சிறார்களிடையே இருக்கும் விழிப்புணர்வு (நேசக்கரம்), மறதியால் வரும் துன்பம் என்பன போன்ற வளரும் குழந்தைகளுக்கான நல்ல கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580156008693
Paanaikkul Pona Yaanai!

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Paanaikkul Pona Yaanai!

Related ebooks

Reviews for Paanaikkul Pona Yaanai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paanaikkul Pona Yaanai! - Edaimaruthour Ki Manjula

    http://www.pustaka.co.in

    பானைக்குள் போன யானை!

    (சிந்திக்க வைக்கும் சிறுவர் நாடகங்கள்)

    Paanaikkul Pona Yaanai!

    Sindhikka Vaikkum Siruvar Naadagangal

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    படித்தவர்களின் பாராட்டுப் பாமாலை...

    1. மூன்றும் எங்கே?

    2. மறதி மின்னாவும் புத்திசாலி புஜியும்!

    3. ஒற்றுமையே உயர்வு!

    4. பொய்யை மெய்யாக்கும் கருவி!

    5. பானைக்குள் போன யானை!

    6. தீமையிலும் நன்மை!

    7. நன்மையும் இருக்கு அரசே...

    8. ஆனந்தின் ஆனந்தம்!

    9. பாம்பும் எறும்பும் சொன்ன (அறிவியல்) உண்மை!

    10. கரோனா தந்த மாற்றம்!

    11. நேசக்கரம்!

    12. "மறதி'க்கு பை... பை...!

    13. பன்னாடை

    14. யார் பெரியவர்?

    முன்னுரை

    சிறுகதை நாடகமான வரலாறு...

    சிறார்களுக்கான என் முதல் நாடக நூல் இது என்பதால், முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழ் குறித்து சிறிது சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். நாடகம் படிக்கும் சிறார்கள் இதை அறிந்து கொள்வது அவசியம். பலவிதமான கலைகளில் நாடகக்கலையும் ஒன்று. முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். கண்ணுக்கும் செவிக்கும், மனத்துக்கும் விருந்து படைப்பது இக்கலை.

    உயர் தொழில்நுட்பங்களைக் கொண்டு பிரமிப்பூட்டும் திரைப்படங்கள், திரைக்காட்சிகள், நம்மமுடியாத காணொலிக் காட்சிகள் எல்லாம் இன்றைக்கு வெளிவருகின்றன. இடம், கதை, நடிப்பு, காட்சி, களம், ஒலி, ஒளி, இசை முதலிய தொழில்நுட்பங்கள் ஒன்று சேரும்போதுதான் திரைப்படம் ஓர் ஒப்பற்ற கலையாகத் திகழ்கிறது. இக்கலைவடிவத்தின் ஆணிவேர் - மூலவேர் பல நூறு ஆண்டுகால மனித முயற்சியில் உருவான நாடகக் கலைதான்- நாடகத் தமிழ்தான்.

    நாடகச் சொல் வழக்கை பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம்,

    நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

    பாடல் சான்ற புலனெறி வழக்கினும் (அகத்.53)

    என்கிறது. நாடக வழக்காவது சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல்'' என்கிறார் உரையாசிரியர் இளம்பூரணர். புனைந்துரை வகை" என்பார் நச்சினார்க்கினியர். எனவே, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நாடகம் நிகழ்த்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

    உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளை உடல்வழி, குரல்வழி வெளிப்படுத்துவது நடிப்பு. இதை தொல்காப்பியர் மெய்ப்பாடு' என்பார். நாடக நூலார் இதை சுவை' என்பர். வடநூலார் இதை "நவரசம்' என்பர். (நகை (சிரிப்பு), அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை முதலிய) இந்த ஒன்பது சுவையும் நாடகத்தில் அமைந்திருக்கும்.

    நாடகத் தமிழ் குறித்தும், அதன் தோன்றம், வளர்ச்சி, பங்களிப்பு குறித்தும் பல நூல்கள் பதிவு செய்திருக்கின்றன. நாடகத்தின் வரலாறு மிக விரிவானது. நாடகம் தமிழ் மக்களின் உழைப்போடும் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றித்து வளர்ந்தது. அதனால்தான் அதை நாடகத்தமிழ் எனப் போற்றினர்.

    "மனித வரலாற்றில் நாடகம் என்பது தொன்மைக் காலத்து சமுதாயத்தில் சமயச் சடங்காகவே உருவானது'' என்று ஆங்கில அறிஞர் வில்லியம் ஹார்ட்னல் கூறுகிறார். நாடகத்தின் வரலாறு மிகப் பழைமையானது. பாடலும் ஆடலும் இணைந்த உடல்மொழி கூத்தாயிற்று. கதை தழுவிய கூத்தே நாடகமானது.

    கோயில் திருவிழாக்களில் புராண- இதிகாசக் கதைகளை சிறுசிறு நிகழ்வாக ஆக்கி விடிய விடிய மேடையில் கூத்தாடியும், நடித்துக்காட்டியும் மக்களை மகிழ்வித்தனர். அது பொழுதுபோக்காவும் அமைந்தது. மக்கள் மனத்தில் நன்னெறிகளைப் புகட்டுவதாகவும் அமைந்தது.

    அந்த வகையில் அரிச்சந்திரன் கதை, அல்லி-அருச்சுணன் கதை, நல்ல தங்காள் கதை, பிரகலாதன் கதை, நளன் - தயமந்தி கதை முதலிய பல புராண-இதிகாச கதைகள் நடித்துக் காட்டப்பட்டன. விடுதலை வேட்கை ஊட்டவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாடகங்கள் பெரும் பங்காற்றின. வீதி நாடகம், தெருக்கூத்து, மேடை நாடகம், வானொலி நாடகம் என சிறிது சிறிதாக வளர்ந்து தற்போது தொலைக்காட்சி நாடகம் வரை நாடகக்கலை வளர்ந்துள்ளது. ஆனால், மேடை நாடகங்களும், தெருக்கூத்து, வீதி நாடகங்கள் எல்லாம் இன்றைக்கு அருகி வருகின்றன. சிறார் நாடகங்கள் எழுதுவோரும் இன்றைக்கு அருகி வருகின்றனர். இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்களுக்கெல்லாம் முன்னோடி தெருக்கூத்தும், மேடை நாடகங்களும்தான்.

    பண்டைத் தமிழ் இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களின் அகப்பாடல்களில் நாடகக்கூறுகள் மிகுதியாக உள்ளன. சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதைக்கு உரை எழுதிய அடியார்க்குநல்லார், பண்டை நாடகங்கள் பற்றிய அரிய தகவல்களை அவர் தந்திருக்கிறார். அதில் அரங்கம் அமைவிடம், மேடை, வாயில், இசை, கதை, நடிப்பு, உரையாடல், திரை குறித்த விவரங்களைத் தந்திருக்கிறார்.

    அன்றைக்கு நாடக சபைகளும் பல இருந்தன. பம்மல் கே.சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.என்.ரத்தினம், டி.கே.கிருஷ்ணசாமி, டி.கே.சண்முகம், வேலுநாயர், கோவிந்தசாமி ராவ், நாடக மேதை பத்மஸ்ரீ அவ்வை டி.கே.சண்முகம் போன்றோர் தமிழ் நாடக சபைகளைத் தோற்றுவித்து, நிறுவனர்களாக இருந்து நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர். இப்படி நாடகத் தமிழுக்கென மிக விரிவான வரலாறு உண்டு.

    இனி... இந்நாடக நூல் உருவானது குறித்துச் சொல்ல வேண்டும். சிறார்களுக்கு கதை, கட்டுரை, மொழியாக்கக் கதை (இந்தி, ஆங்கிலம்) எழுதிய எனக்கு நாடகம் எழுத வேண்டும் என்கிற எண்ணத்தையும், ஆவலையும் என்னுள் விதைத்தவர் தினமணி - சிறுவர்மணி பொறுப்பாச்ரியர் ஓவியர் திரு சுமன் என்கிற மணி அவர்கள்தான். அவர் பொறுப்பேற்ற பிறகுதான் சிறுவர் மணியில் "அரங்கம்' என்கிற புதிய பகுதியைப் புகுத்தினார். நலிந்து கிடந்த நாடகத் தமிழுக்கு உயிரூட்டி, பலரையும் எழுதத் தூண்டினார். அதில் நானும் ஒருத்தி.

    மூன்றும் எங்கே?' என்கிற சிறுகதையை அவரிடம் கொடுத்தபோது, குழந்தைகளுக்கு நாடகமும் எழுதத் தொடங்குங்களேன்...?' என்று கூறியதோடல்லாமல், "இந்தக் கதையையே நாடகமாக்கிக் கொடுங்கள்.. உங்களுக்கு நாடகம் சிறப்பாக எழுத வந்துவிட்டால், பிறகு திரைப்பட ஸ்கின் ப்ளே.. மிகவும் எளிதாகிவிடும்...' என்று ஊக்கப்படுத்தினார்.

    முதல் முயற்சியாக மூன்றும் எங்கே?' என்ற சிறுகதை நாடகமாக. அரங்கம்' பகுதியில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. தொடர்ந்து என்னை எழுதத் தூண்டிய அவருக்கே இந்நூலை இன்ப அன்போடு அர்ப்பணிப்பதில் நான் பெரிதும் மகிழ்கிறேன். அதுமட்டுமல்ல, உண்மை தந்த பரிசு, தாத்தா சொன்ன கதைகள் ஆகிய நூல் வெளியீட்டிலும் கலந்து கொண்டு என்னைச் சிறப்பித்தவர். அதேபோல சிறுவர் வரைந்த ஓவியங்களுக்கான கதைகளையும் இவர் கொடுத்த ஊக்கத்தாலும் வாய்ப்பாலும்தான் எழுதத் தொடங்கினேன்.

    சிறுவயதில் (ஐந்தாம் வகுப்பு) எங்கள் வீட்டு மொட்டை மாடியில், என் சகோதரிகளுடன் கி.மு.வில் பிறந்த

    Enjoying the preview?
    Page 1 of 1