Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagaya Veedu
Aagaya Veedu
Aagaya Veedu
Ebook88 pages19 minutes

Aagaya Veedu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உமையவன் எண்ணற்ற படைப்புகள் மூலம் அறிவுலகத்திற்குப் பங்களித்திருக்கிறார். அவரை மூத்த தமிழறிஞர்கள் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

சிறுவர் இலக்கியத்திற்கு அண்மைக் காலங்களில் பங்களிப்பவர்கள் மிகவும் குறைவு. அதிலும் குறிப்பாக, அறிவியல் தொடர்பான செய்திகளை சுவைபடச் சொல்வது இன்னும் அரிது. அந்த முயற்சியில் நூலாசிரியர் ஈடுபட்டு எளிதில் வாசிக்கத் தகுந்த சிறுநூலை கதை வடிவத்தில் உருவாக்கித் தந்திருக்கிறார். உரையாடல் நடையில் அமைந்திருக்கும் இந்த நூல் வாசிப்பில் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

பிரபஞ்சம் உருவானதைப் பற்றி மாணவர்களிடம் ஆசிரியர் விளக்குவதைப்போல ஆரம்பித்த முதல் கதை மாணவர்களுடைய சிந்தனையைத் தூண்டுவதாகஇருக்கிறது. 'ஆகாய வீடு' என்கிற இரண்டாது கதையில் விண்வெளி நிலையத்தைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். பெரியவர்களுக்குக் கூட அதில் புதிய செய்திகள் புதைந்து கிடக்கின்றன.

நாணயங்களை வைத்து தண்ணீர் படாமல் காசு எடுக்கும் கலையிலிருக்கும் அறிவியலைச் சுட்டிக் காட்டுகிறார். மழை எப்படி உருவாகிறது என்பதை நேர்த்தியாகச் சொல்லித் தருகிறார். சூரிய கிரகணத்தைப் பற்றியும் சுவையாகத் தெளிவுப்படுத்துகிறார். ஓசோன் படலத்தின் ஓட்டையைப் பற்றி அக்கறையுடன் பேசுகிறார். மின்னணுக் கழிவுகளைப் பற்றி நம்மை எச்சரிக்கிறார். கழிவுகளை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். பூச்சிகளைப் பற்றி ஆர்வத்தைத் தட்டான் என்கிற பூச்சியைக் கொண்டு விளக்குகிறார்.

இப்படி ஒரே மூச்சில் படித்து விடக் கூடிய எளிய கதைகளை இந்தத் தொகுப்பில் அவர் அளித்திருக்கிறார். பெற்றோர் இதைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்தால் சரளமாகப் படிக்கவும், அறிவியலை அறியவும் இது உதவும். உமையவன் பாராட்டுக்குரியவர்.

வெ. இறையன்பு

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580131905238
Aagaya Veedu

Read more from Umayavan

Related to Aagaya Veedu

Related ebooks

Reviews for Aagaya Veedu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aagaya Veedu - Umayavan

    http://www.pustaka.co.in

    ஆகாய வீடு

    (சிறுவர்க்கான அறிவியல் கதைகள்)

    Aagaya Veedu

    (Siruvarkkana Ariviyal Kathaigal)

    Author:

    'உழவுக் கவிஞர்' உமையவன்

    'Uzuvuk Kavingar' Umayavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/umayavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இந்நூல்

    திருவாசகத்தில் அறிவியல்

    அணிந்துரை - அழகிய ஆகாய வீடு

    அணிந்துரை - அறிவியல் எழுத்தாளர் பட்டியலில் உமையவன்

    என்னுரை - ஆகாயம் நிறையும் அறிவியல்!

    1. பிரபஞ்சம் பிறந்த கதை

    2. ஆகாய வீடு

    3. நாணயங்களின் கண்ணாம்பூச்சி ஆட்டம்

    4. வானுக்கு வந்த மழை

    5. ஒளி இழந்த சூரியன்

    6. பூமியின் சட்டையில் ஓட்டை

    7. கழிவு சொல்லும் அழிவு

    8. தட்டான் கதை

    ஆசிரியர் குறிப்பு

    இந்நூல்

    குழந்தைகளைக் கொண்டாடும்,

    குழந்தைகள் கொண்டாடும்

    இனிய எழுத்தாளர், பன்முகப் படைப்பாளி,

    சிறுவர் கதைச்சொல்லி கன்னிக்கோவில் இராஜா

    அவர்களுக்கு.....

    *****

    திருவாசகத்தில் அறிவியல்

    அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

    அனப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி

    ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்

    நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன

    இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய

    சிறியவாகப் பெரியோன் தெரியின்.

    உருண்டை வடிவில் உள்ள இந்த அண்டத்தில் நூற்றியொரு கோடிக்கும் மேலான விண்மீன்களும், வால் நட்சத்திரங்களும், சூரியன், பூமி, சந்திரன் உள்ளிட்ட கோள்களும் இறைந்து கிடக்கின்றன. அவைகள் தங்களின் ஒளியால் எழிலை கூட்டிக் கொள்கின்றன. இவைகள் உருவில் மிகப் பெரியனவாக இருந்தாலும், நெடுந்தொலைவில் இருப்பதால் சிறியனவாக தெரிகின்றன.

    *****

    அணிந்துரை - அழகிய ஆகாய வீடு

    முதுமுனைவர் வெ. இறையன்பு (இ.ஆ.ப.)

    உமையவன் எண்ணற்ற படைப்புகள் மூலம் அறிவுலகத்திற்குப் பங்களித்திருக்கிறார். அவரை மூத்த தமிழறிஞர்கள் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

    சிறுவர் இலக்கியத்திற்கு அண்மைக் காலங்களில் பங்களிப்பவர்கள் மிகவும் குறைவு. அதிலும் குறிப்பாக, அறிவியல் தொடர்பான செய்திகளை சுவைபடச் சொல்வது இன்னும் அரிது. அந்த முயற்சியில் நூலாசிரியர் ஈடுபட்டு எளிதில் வாசிக்கத் தகுந்த சிறுநூலை கதை வடிவத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1