Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ullangai Ariviyal
Ullangai Ariviyal
Ullangai Ariviyal
Ebook142 pages1 hour

Ullangai Ariviyal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கைரேகை பற்றிய அறிவியல் உண்மைகளை எடுத்துக் கூறும் இந்நூலைப் படித்துப் பார்க்கும் மகிழ்ச்சிகரமான அனுபவம் எனக்குக் கிடைத்தத்தில் பெரு மகிழ்வு கொண்டேன். நூலின் தலைப்பு பற்றிய விஷயத்தில் நான் ஒரு கற்றுக்குட்டி என்றே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்வதானால் நான் கைரேகை பார்த்துப் பலன் கூற வேண்டி எந்தக் கைரேகை நிபுணரிடமும் எனது உள்ளங்கையை நீட்டியதில்லை. நூலை எழுதிய ஆசிரியர் மிகவும் அக்கறையோடு இதிலடங்கியுள்ள விவரங்களை எழுதியுள்ளார். கைரேகை ஜோஸ்யம் ஒரு மூடநம்பிக்கை என்று இன்றைய புதிய தலைமுறையாளர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புக் கூறி வரும் நேரத்தில், இந்த இளம் எழுத்தாளர் புராதனப் பொக்கிஷம் எனப் போற்ற வேண்டிய இத்துறையில், இதன் அறிவியல் பாதையை வெகு ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்துக் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

மனிதர்களுடைய கைரேகை, உள்ளங்கையின் நிற வாகுகள் இவற்றிலிருந்து விரிவாகக் கூறத் துவங்கி அவற்றின் பலாபலன்களை எடுத்துக் கூறியுள்ள விதம் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்வதாகவே அமைந்துள்ளது கண்கூடு. கூறியுள்ளவற்றைப் படவிளக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்கே. இத்துறை பற்றிய ஞானம் ஓரளவு உடனடியாக ஏற்படும் அளவுக்கு உள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

உள்ளங்கை ரேகைகளோடு மட்டுமின்றி கட்டை விரல் மற்ற விரல்களின் தன்மைகளையும் விவரித்துள்ளார். எந்த வகையான விரல்கள் என்னென்ன குணவிசேஷம் கொண்டவை என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

கைரேகை சாஸ்திரம் பற்றிய மாதிரி அட்டவணை ஒன்றையும் தந்து இந்நூலை முடித்துள்ளார் இதன் ஆசிரியர். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கைரேகை பற்றி அந்த வயதிலேயே தெரிந்து கொள்ளாமலிருப்பது நலம் என்று கருதுகிறேன். ஏனெனில் உள்ளங்கை ரேகைகள் இந்த வயதிற்குப் பிறகுதான் ஒழுங்காக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

கைரேகை பற்றிய அறிவியல் உண்மைகள் புத்தகம் கருத்துக் குவியல்களடங்கிய ஒரு அரிய புத்தகம். இதற்கான ஆய்வினை மேற்கொண்ட போது இந்த ஆசிரியர் திரு. கே.பத்மநாபன் எந்த அளவு கடின உழைப்பை அதற்காக நல்கியிருப்பார் என்று தெரிய வருகையில் அவரது பூரண ஈடுபாட்டினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆசிரியரை வாழ்த்த எண்ணி எனது உள்ளங்கையை நான் உயர்த்தினாலே அது அரசியல் கலந்ததாக ஆகிவிடுமென்பதால் எனது கட்டை விரலை வெற்றிப் பாணியில் வளைத்து மட்டும் வாழ்த்துகிறேன்.

- ராம்ஜி (அபஸ்வரம்)

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130304936
Ullangai Ariviyal

Read more from K. Padmanabhan

Related to Ullangai Ariviyal

Related ebooks

Reviews for Ullangai Ariviyal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ullangai Ariviyal - K. Padmanabhan

    http://www.pustaka.co.in

    உள்ளங்கை அறிவியல்

    Ullangai Ariviyal

    Author:

    கே. பத்பநாபன்

    K. Padmanabhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/k-padmanabhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    ஆய்வுரை

    நட்புரை

    என்னுரை

    அணிந்துரை

    கைகளின் நிறங்கள்

    கைகளின் வகைகள்

    கையில் கிரக மேடுகளும், குறிகளும்

    கைகளில் ரேகைகள்

    கைவிரல்களும் நகங்களும்

    கைரேகை பார்க்கும் முறை

    வான்வெளி அதிசயம்!

    பின்னுரை

    மாதிரி அட்டவணை

    உள்ளங்கை அறிவியல்

    A Research on Palmistry

    சமர்ப்பணம்

    என்னை ஆட்கொண்ட எஜமான்

    ஏழுகடல் ஆட்சி செய்யும்

    ஏழு மலையானுக்கு,

    எக்கணமும் தலை சிறந்து,

    எனை மறந்து - நான்

    எழுதியதைப் பிழை பொறுத்தருளி

    ஏற்கனவே என அர்ப்பணிக்கிறேன்.

    சீவகச்செல்வர் சீனி. கிருஷ்ணஸ்வாமி தமிழனாகப் பிறந்தார். தமிழனாக வளர்ந்தார். தமிழனாக வாழ்ந்தார். தமிழ் மொழிக்கு என்றும் அழியாத புகழை உண்டாக்கி வைத்தார். உலகில் இன்று புகழ் பெற்று விளங்கும்படி, ஐம்பெருங் காப்பியங்களில் சிறந்த காப்பியம் சீவகசிந்தாமணி எனும் பெருங்காப்பியத்தை நாடக வடிவில் எழுதி ‘இராசமாதேவி' என்னும் தலைப்பில் பெரும் நூலாக வெளியிட்டு தமிழக அரசின் பரிசைப் பெற்ற சீனி. கிருஷ்ணஸ்வாமியின் மகன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

    தமிழிற்கு அவர் செய்த சேவைகள் ஏராளம். அடியேன் கைரேகையை அறிவியல் என ஏற்றுக் கொள்ள எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு வாசகர்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    நன்றி!

    - கே.பத்மநாபன்

    *****

    ஆய்வுரை

    கைரேகை பற்றிய அறிவியல் உண்மைகளை எடுத்துக் கூறும் இந்நூலைப் படித்துப் பார்க்கும் மகிழ்ச்சிகரமான அனுபவம் எனக்குக் கிடைத்தத்தில் பெரு மகிழ்வு கொண்டேன். நூலின் தலைப்பு பற்றிய விஷயத்தில் நான் ஒரு கற்றுக்குட்டி என்றே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்வதானால் நான் கைரேகை பார்த்துப் பலன் கூற வேண்டி எந்தக் கைரேகை நிபுணரிடமும் எனது உள்ளங்கையை நீட்டியதில்லை. நூலை எழுதிய ஆசிரியர் மிகவும் அக்கறையோடு இதிலடங்கியுள்ள விவரங்களை எழுதியுள்ளார். கைரேகை ஜோஸ்யம் ஒரு மூடநம்பிக்கை என்று இன்றைய புதிய தலைமுறையாளர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புக் கூறி வரும் நேரத்தில், இந்த இளம் எழுத்தாளர் புராதனப் பொக்கிஷம் எனப் போற்ற வேண்டிய இத்துறையில், இதன் அறிவியல் பாதையை வெகு ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்துக் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

    மனிதர்களுடைய கைரேகை, உள்ளங்கையின் நிற வாகுகள் இவற்றிலிருந்து விரிவாகக் கூறத் துவங்கி அவற்றின் பலாபலன்களை எடுத்துக் கூறியுள்ள விதம் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்வதாகவே அமைந்துள்ளது கண்கூடு. கூறியுள்ளவற்றைப் படவிளக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்கே. இத்துறை பற்றிய ஞானம் ஓரளவு உடனடியாக ஏற்படும் அளவுக்கு உள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    உள்ளங்கை ரேகைகளோடு மட்டுமின்றி கட்டை விரல் மற்ற விரல்களின் தன்மைகளையும் விவரித்துள்ளார். எந்த வகையான விரல்கள் என்னென்ன குணவிசேஷம் கொண்டவை என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

    கைரேகை சாஸ்திரம் பற்றிய மாதிரி அட்டவணை ஒன்றையும் தந்து இந்நூலை முடித்துள்ளார் இதன் ஆசிரியர். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கைரேகை பற்றி அந்த வயதிலேயே தெரிந்து கொள்ளாமலிருப்பது நலம் என்று கருதுகிறேன். ஏனெனில் உள்ளங்கை ரேகைகள் இந்த வயதிற்குப் பிறகுதான் ஒழுங்காக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

    கைரேகை பற்றிய அறிவியல் உண்மைகள் புத்தகம் கருத்துக் குவியல்களடங்கிய ஒரு அரிய புத்தகம். இதற்கான ஆய்வினை மேற்கொண்ட போது இந்த ஆசிரியர் திரு. கே.பத்மநாபன் எந்த அளவு கடின உழைப்பை அதற்காக நல்கியிருப்பார் என்று தெரிய வருகையில் அவரது பூரண ஈடுபாட்டினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆசிரியரை வாழ்த்த எண்ணி எனது உள்ளங்கையை நான் உயர்த்தினாலே அது அரசியல் கலந்ததாக ஆகிவிடுமென்பதால் எனது கட்டை விரலை வெற்றிப் பாணியில் வளைத்து மட்டும் வாழ்த்துகிறேன்.

    - ராம்ஜி (அபஸ்வரம்)

    *****

    நட்புரை

    எனக்கு சோதிடம், ரேகைகளில் நம்பிக்கையில்லை யென்றாலும் அறிவியல் ரீதியாக அணுகும் திரு.கே. பத்மநாபன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    ம.நாசர்

    திரைப்பட நடிகர்

    *****

    என்னுரை

    உள்ளங்கை என்ற சொல்லே ஒருவர் உள்ளத்தில் இருப்பதைக் கையில் தெரிவிப்பதால் வந்திருக்கலாம். ரேகைகளைக் கொண்டும் அவருடைய கடந்த கால, நிகழ்கால, எதிர்காலச் சம்பவங்கள் அனைத்தையும் துல்லியமாகச் சொல்லி விட முடியும் என்பதை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு முனிவர்கள் கண்டு பலன்களை கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கலையை அவர்கள் ஒரு சிலருக்கே கற்றுக் கொடுத்துள்ளனர். அதுவும் குருகுல வாசம் என்ற வகையிலும் குரு சிஷ்யன் என்ற முறையிலும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படியெல்லாம் இருந்த போதிலும் கைரேகைக் கலை உலகத்தில் பல நாடுகளில் பரவலாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக இக்கலைக்கு சாஸ்திரம் மட்டுமல்ல, ஒரு அறிவியல் என்ற பெயரும் வந்தது. லிப்ஜிக், ஹால் என்ற ஜெர்மனியப் பல்கலைக் கழகங்களில் 'கைரேகை அறிவியல்' முக்கியமான பாடமாக 17-18 ஆம் நூற்றாண்டுகளில் நடத்தப் பெற்றிருக்கிறது.

    அடுத்த கட்டமாக மருத்துவத்துறை, மனோ தத்துவத்துறை, சமூகவியல் போன்றவைகளுக்கு பயன்பட்டன

    கிரேக்க நாட்டின் தத்துவமேதை மாவீரர் அலெக்ஸாண்டர், இந்த கைரேகைக் கலையை முழுவதும் நம்பியதால்தான் தனக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட 'கைரேகை அறிவியல்' நூல் ஒன்றினை கிரேக்க மொழியில் எழுதுமாறு அரிஸ்டாட்டில் என்ற மேதையிடம் கொடுத்தார். ஆக அச்சுத்தொழில்

    Enjoying the preview?
    Page 1 of 1