Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ainthum Moondrum Onpathu
Ainthum Moondrum Onpathu
Ainthum Moondrum Onpathu
Ebook672 pages7 hours

Ainthum Moondrum Onpathu

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100702836
Ainthum Moondrum Onpathu

Read more from Indira Soundarajan

Related to Ainthum Moondrum Onpathu

Related ebooks

Related categories

Reviews for Ainthum Moondrum Onpathu

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ainthum Moondrum Onpathu - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    ஐந்தும் மூன்றும் ஒன்பது

    Ainthum Moondrum Onpathu

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    இது காலக்கணக்கு!

    அமானுஷ்யமும் அறிவியலும் இணைத்துச் சொல்லும் புனைகதைகள் எப்போதுமே சுவாரசியம் தரக்கூடியவை. ஒன்றை ஒன்று கேள்வி கேட்டுக்கொள்ளும் தர்க்க விவாதங்கள் இந்தக் கதைகளுக்கு இன்னும் விறுவிறுப்பு கூட்டி விடும். எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜனின் கதைகள் இப்படிப்பட்டவைதான். ‘குங்குமம்' இதழில் தொடராக வெளியாகி, இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கும் ஐந்தும் மூன்றும் ஒன்பது அவரது நாவல்களில் மிகவும் தனித்துவமானது.

    அடுத்த நிமிடமோ, அடுத்த நாளோ, அடுத்த வருடமோ, அடுத்த நூற்றாண்டோ... இந்த உலகில் என்னவெல்லாம் நிகழப் போகிறது என்பதைக் கணித்துச் சொல்லும் ‘காலப்பலகணி’ ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? அதை தங்கள் வசப்படுத்திக்கொள்ள யார்தான் துடிக்க மாட்டார்கள்? அப்படி ஒரு தேடலை நோக்கிப் போகும் கதை இது! காலப் பலகணி இருப்பதாகவே வாசகர்கள் நம்பிவிடக்கூடும். இப்படி ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே’ என்ற நினைப்பு இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் எழும்.

    இடையில் இந்தச் சமூகம் குறித்தும், வாழ்க்கைமுறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் குறித்தும் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார் இந்திரா செளந்தர்ராஜன். ஆன்மிக நம்பிக்கைகள், அமானுஷ்ய நிகழ்வுகள், இயற்கை சார்ந்த வாழ்வு என எல்லாம் பற்றியும் கதாபாத்திரங்கள் பேசுகிறார்கள்.

    அறிவியலின் தளத்தில் நின்று ஆன்மிகத்தைப் பார்ப்பதும், ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவியலைப் பார்ப்பதும் இந்த நாவலின் ஸ்பெஷல். திடீர் திருப்பங்களும் வித்தியாச கதாபாத்திரங்களும் அவர்களின் உரையாடல்களும் உங்களை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.

    நாவலின் முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி பக்கம் வரை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சில புத்தகங்களைக் கையில் எடுத்தால், கடைசி வரியைப் படிக்கும்வரை கீழே வைக்க மனம் வராது. ‘ஐந்தும் மூன்றும் ஒன்பது’ அப்படிப்பட்ட உணர்வை உங்களுக்குத் தரும்.

    - ஆசிரியர்

    ***

    என்னுரை

    மிகுந்த சுதந்திர உணர்வோடும், ஒரு வார்த்தையைக் கூட இழந்து விடாமலும், இதுவரை புதின உலகம் கண்டிராத - சகலத்திலும் வேறுபட்ட, அதே சமயம் மானுட வாழ்வு குறித்த யதார்த்தத்தில் இருந்தும், அதன் பரிமாணங்களில் இருந்தும் விலகாமல் ஒரு நாவல் படைக்க வேண்டும் என்பது நெடுநாட்களாகவே என் விருப்பம்.

    இன்று தமிழ்நாவல் சாம்ராஜ்யத்தில் பல வித்தகர்கள் கோலோச்சி வருகிறார்கள். உருவத்தால் மறைந்துவிட்டபோதிலும், உள்ளத்தாலும் தங்கள் படைப்பாலும் இன்றும் கல்கி, சாண்டில்யன், தி.ஜா. கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், லட்சுமி, வை.மு.கோதைநாயகி போன்றோர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். என் சமகாலத்தில் கி.ராஜநாராயணனில் தொடங்கி ஜெயமோகன் வரை இட வலமாக ஒரு ஐம்பது பேராவது எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ராகங்களும், வண்ணங்களும் ஏழான போதிலும், அதன் கலப்புகளில் இருந்து பல நூறு ராகங்களும் வண்ணங்களும் உருவாவது போல, இவர்களிடமிருந்து பலவித வாழ்க்கைப் பாடுகள் கதைகளாய் வந்த வண்ண முள்ளன.

    இவர்களுக்குள்தான் நானுமிருக்கிறேன்.

    ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக முகமும், உயரமும், எடையும் இருப்பது போல, எனக்கான பிரத்யேக முகம் எது என்று எண்ணிப் பார்த்தேன். ஒரு சுயபரிசோதனையை எனக்கு நானே செய்துகொண்டேன்.

    1978 மார்ச் மாதம்தான்நான் முதன்முதலாகக் கதை எழுத விரும்பி பேனா பிடித்தேன். அப்போது எனக்கு வயது 20. ‘சிகரம்’ என்கிற ஒரு சிற்றிதழில் பா.செயப்பிரகாசத்தின் ‘இருளுக்கு இழுப்பவர்கள்’ எனும் சிறுகதையை வாசிக்கப் போக, என்னுள் கனல் வீசத் தொடங்கியது.

    அப்போது நான் சேலத்து வாசி. சேலம் ஒரு மலை சூழ்ந்த நகரம். ஒவ்வொரு மலை மேலும் ஒரு கோயிலும், அதற்கெனத் தனித்த பின்னணிகளும் கொண்ட ஒரு நகரம் அது. இப்படி ஒரு ஊரில் செளராஷ்டிர நெசவாளர்கள் மிகுந்த ஒரு தெருவில் ஒரே ஒரு பிராமண குடும்பமாய் என் குடும்பம் இருக்க, அந்த நடுத்தட்டு வாழ்வுக்குள் எனக்கு ஏற்பட்ட நசுக்கங்களும், வலிகளும், சந்தோஷங்களுமே என் பேனா முனையில் இருந்து என்னை மீறி திமிறிக்கொண்டு வெளிப்பட்டது.

    நான் வசித்த தெருவுக்கு பிரத்யேகமாக ஒரு பெயர் இருந்தபோதிலும் ‘சாராயக்கார தெரு’ என்கிற ஒரு காரணப் பெயரும் இருந்தது. ஒரு அறுபது வயதுப் பெண்மணி சாராய வியாபாரம் செய்திட, அவளிடம் வாங்கிக் குடிக்க தினமும் குடிகாரர்கள் வந்து போவதை அந்த 20 வருட வாழ்வில் நான் ஆயிரம் முறையாவது பார்த்திருப்பேன்.

    இதற்கு நடுவில் பட்டுத் தறிகளில் எனது நண்பர்களின் கடுமையான உழைப்பும், அவர்களின் ஆழமான கலாசார சார்புகளும் மிக ரசமானவை. இந்த ரசங்களுக்குள் இருந்தே என் முதல் கதையான ‘ஒன்றின் நிறம் இரண்டு’ பிறந்தது. ‘கலைமகள்’ குறுநாவல் போட்டியில் அது 800க்கும் மேலான குறுநாவல்களிடையே முதல் பரிசையும் பெற்றது. இதுதான் என் ஆரம்பம்.

    இந்த 2016ல் நான் நூறு தொடர்களைக் கடந்து, 176 நூல்களை வெளியிட்டு,ஆயிரம் மேடைகளுக்கும் மேல் ஏறிப் பெரும் பேச்சாளனாகவும் வடிவம் கொண்டுவிட்டேன்.இவைகளினூடே என் தொலைக்காட்சி எழுத்துக்களும், திரைப்பட எழுத்துக்களும் தனி ரகம். பிராமண குடும்பமாதலால் ஆன்மிகத் தாக்கம் மிக உண்டு. கூடவே இடது சார்பு தாக்கமும் இருந்ததனால், அதன் மேல் எனக்குக் கேள்விகளும் ஆய்வுகளும் உருவாகிவிட்டன. இப்படி ஒரு கலவை, அனேகமாக நானறிய எந்த எழுத்தாளரிடமும் இல்லை. என் எழுத்துக்களும் இந்தக் கலவையில் தோன்றி பெரிய ஈர்ப்புக்கு ஆளாகின. குறிப்பாக, ‘ரகசியம், ‘மர்ம தேசம்', 'சிவம்', 'என் பெயர் ரங்கநாயகி, ‘ருத்ர வீணை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

    இதில் நான் வருந்தவும், வியக்கவும் அனேக விஷயங்கள் உண்டு. பல்லாயிரம் வாசகர்கள் எனக்குக் கிடைத்தது நான் வியந்த விஷயம். என்னை வாசிக்காமலே, அல்லது அங்கும் இங்குமாக கொஞ்சம் போல வாசித்துவிட்டு, சில இடதுசாரிகள் தங்களுக்குள் ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்திக்கொண்டது வருத்தப்பட வைத்த விஷயமாகும்.

    தனித்த முறையில் மிக உணர்வுபூர்வமாக எழுதவே நான் இன்று விரும்புகிறேன். ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ எனும் சொலவடை போகிற போக்கில் கூறப்பட்டதல்ல. அது கண்களைப் போன்றதே. அந்தக் கண்கள் குருடாக இருந்துவிடக்கூடாது. நல்ல காட்சிகளைக் காண்பதாகவும் கண்டதைச் சொல்வதாகவும் இருக்க வேண்டும்.

    ஒரு வெர்சடைல் எழுத்தாளனாக... அதாவது, பன்முகத்தில் நான் செயல்பட்டிருப்பதைக் காலப்போக்கில் அழுத்தமாய் உணர்ந்த நான், இன்று உணர்வுபூர்வத்திடம் மட்டுமே நிலைகொள்ள விரும்புகிறேன். அதே வேளை, நமது தொன்மை, வன்மை, பெருமை மற்றும் சிறுமைகளின் மேல் எனக்குக் கேள்விகளும் உள்ளன.

    இவற்றை உள்ளடக்கிய ஒரு படைப்பைத் தர வேண்டும் என நான் தவிப்பதுண்டு. அப்படிப்பட்ட என் தவிப்புக்கு ஒரு வடிகாலாகத்தான் இந்த ‘ஐந்தும் மூன்றும் ஒன்பது’ நாவல் அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன்.

    ‘குங்குமம்' இதழில் இதற்கு முன் நான் எழுதிய படைப்புகள் பெரும் பார்வைக்கு ஆளாகியுள்ளன. குறிப்பாக, ‘விட்டுவிடு கருப்பா’ என்று நான் எழுதிய தொடர்தான் 'விடாது கருப்பு எனும் பெயரில் தொலைக்காட்சித் தொடராக வந்து சரித்திரம் படைத்தது. அந்த வகையில் இந்த ‘ஐந்தும் மூன்றும் ஒன்பது’ நாவலும் ஒரு மாறுபட்ட படைப்பாக இருக்கும் என்பதில் எள்ளத்தனை ஐயமும் இல்லை.

    இந்நாவல் ஒரு தொல்பொருள் ஆய்வாளரிடம் தொடங்கி ஓடலும் தேடலுமாய் நகர்கிற ஒன்றாகும். இதில் நான் சில புதுமைகளுக்கும் முயன்றேன். வாசிப்பவர்கள் குறைந்தும், பார்ப்பவர்கள் (தொலைக்காட்சி, திரைப்படம்) அதிகரித்தும் வரும் ஒரு காலகட்டம் இது.

    என்னதான் புத்தகக் கண்காட்சிகள் பூத்துக் குலுங்கினாலும், வாலிபம் ஏனோ அங்கே நுழைவதேயில்லை. எனவே எல்லோரையும் வசப்படுத்தும் ஒரு வேட்கையும் எனக்குள் உண்டு. அந்த வேட்கையோடு வழக்கமான காதல், மோதல், குடும்ப உரசல்கள் என்று இல்லாமல் சித்தம், சரித்திரம் என்பதோடு, ‘எல்லாமே கணக்குதான்’ என்கிற ஒரு உண்மையை இதில் நான் நிறுவ முயன்றுள்ளேன்.

    வாசிப்பவர்களுக்குள் சில கருத்துப் பேதங்கள் உருவாகலாம். பலர் என்னோடு ஒத்தும் வரலாம். எப்படி இருப்பினும் முதல் அத்தியாயம் தொடங்கி 59வது அத்தியாயம் வரை உங்களை விமான வீச்சில் இப்புத்தகம் இழுத்துச் செல்லும் என்பது உறுதி. வாசித்தபின் உங்களுக்குள் நிறைய தாக்கங்களும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அநேகமாக இந்த நாவலின் வடிவோடு ஒத்துப் போகிற ஒரு நாவல் கூட நாவல் உலகில் இருக்க வாய்ப்பில்லை. ஒரு சூரியன், ஒரு நிலா போல இதுவும் ஒன்றுதான்!நான் இதை மிகைபடக் கூறவில்லை. இந்தப் புதினத்தை வாசித்து முடித்த நிலையில் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். ‘ஐந்தும் மூன்றும் எட்டுதானே... எப்படி ஒன்பதாகும்’ என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.

    ஒரு மாறுபட்ட படைப்பை நான் படைக்க ‘குங்குமம்' இடமளித்தது என்பது ஒரு பெரிய விஷயம். நூலாகவும் இந்நிறுவனப் பதிப்பகமே வெளியிடுவது எனக்கு மேலும் மகிழ்வளிக்கும் ஒரு விஷயமாகும். இதற்குக் காரணமாக அமைந்த ‘தினகரன்’ நிர்வாக இயக்குநர் திரு. ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்களுக்கும், அமைதியாக இத்தொடரை வழிநடத்திய ‘குங்குமம்’ முதன்மை ஆசிரியர் திரு. தி.முருகன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

    இனி நான் விலகிச் செல்கிறேன். ஐந்தும் மூன்றும் ஒன்பது' எனும் கணக்கை வாசிக்கத் தயாராகுங்கள். நன்றி!

    பணிவன்புடன்,

    இந்திரா செளந்தர்ராஜன்

    மதுரை-3

    1

    உலகில் மொத்தம் ஏழு அதிசயங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். நிச்சயம் நிறைய அதிசயங்கள் இருக்கும். ஏழுதான் என்று அதிசயங்களை ஒற்றை இலக்கத்துக்குள் யார் அடக்கினார்களோ?

    என் வரையில் மனித சமூகத்தின் கடவுள் நம்பிக்கையே கூட ஒரு அதிசயம்தான்!

    பார்க்கின்ற, கேட்கின்ற, பாதிக்கின்ற விஷயங்களால்தான் மனிதமனம் வடிவம் கொள்கிறது. இந்த மூன்றாலும் ஒருவரும் இதுவரை கடவுளை நேரில் பார்த்ததில்லை.

    அப்படியே ஒருவேளை கடவுள் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அவர் மனித இனத்தவர் வடிவில் இருப்பாரா என்பதே என் வரையில் கேள்விக்குறிதான்!

    மனிதன் அறிவாளியாக இருக்கலாம். ஆனாலும் உடலையும் உயிரையும் வென்று காலத்தால் அழிய முடியாதபடி வாழ இயலாதவனே அவன்!

    முயன்றால் மனித இனத்தை முற்றாக அழித்து விடவும் முடியும். எனவே, இப்படி ஒரு இனத்தவராகக் கடவுள் இருக்க வாய்ப்பில்லை என்பதே என் நம்பிக்கை.

    இதுபோல் கடவுள் குறித்துக் கேட்க என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன. ஆனாலும் உலகில் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கையோடு உள்ளனர். இது ஒரு அதிசயம்தானே?

    பேராசிரியர் கணபதி சுப்ரமணியனின்

    ஆய்வுக் கட்டுரையிலிருந்து.

    அன்றைய சூரிய உதயம் மிகவே ரம்யமாக இருந்தது. காலை நேர நடைப்பயிற்சியில் அதை உணர்வதே ஒரு சுகமான அனுபவம்தான்! சீரான வேகத்தோடு நடந்தபடி இருந்தார் கணபதி சுப்ரமணியன். கூடவே அவர் பேத்தி ப்ரியதர்ஷினி, க.சு. எழுபது வயதைத் தாண்டிவிட்டார்.இளம்வயதில் அவரைப் பார்ப்பவர்கள் ஹாலிவுட் நடிகர் சீன் கானரி மாதிரியே இருப்பதாகச் சொல்வார்கள்.இதனால் அவருக்கு 'ஜேம்ஸ் பாண்ட்’ என்கிற செல்லப்பெயரும் உண்டு.

    இன்று சீன் கானரிக்கு வழுக்கை விழுந்துவிட்டது. ஆனால் கணபதி சுப்ரமணியனுக்கு ஒரு முடிகூட கொட்டவில்லை. ‘டை’ அடித்துக்கொண்டால் சள்ளென்று பத்து வயது குறைந்துபோகும். ஆனால், செயற்கைமுறை எதிலும் நாட்டமில்லாததால் அப்படியே விட்டு விட்டதில், தலைமுடியில் ஒரு நல்ல நாரை வெளுப்பு! முடியைப் பெரிதாக வாரிக்கொள்ளவும் அவருக்குப் பிடிக்காது. கோதிவிட்டுக்கொள்வது அவரது மேனரிசங்களில் ஒன்று.

    சமயங்களில் பேத்தி ப்ரியதர்ஷினி எனும் ப்ரியா, மெனக்கெட்டு வாரி விடுவாள். கூடவே பவுடர் போட்டு ஸ்டிக்கர் பொட்டெல்லாம் வைத்துவிடுவாள். அதை எக்காரணம் கொண்டும் கலைத்து விட்டுக்கொள்ளமாட்டார். அப்படியேதான் அட்டெண்ட் செய்யும் கல்லூரி விழாக்களுக்கும் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட்டின் பிரத்யேக அழைப்புகளுக்கும் போய் வருவார். எல்லோரிடமும் பெருமையாக என் பேத்தியின் மேக்கப் என்று ஒரு லீட்கொடுத்து விடுவார். ப்ரியாவும் தாத்தா தனக்குத் தரும் இந்த லிபர்ட்டியை எண்ணி வியந்து போவாள். "லிபர்ட்டி' என்கிற புழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொல்லை ‘சுதந்திரம்' என்று தமிழ்ப்படுத்தலாம்தான். ஆனால், ப்ரியா அதையும் மீறிய ஒன்றாக நினைப்பதால், வேறு சரியான வார்த்தை அகப்படவில்லை.

    நடைப்பயிற்சிக்குக் கூட தாத்தாவும் பேத்தியும் ஒன்றாகத்தான் போவார்கள். இதோ இன்றும்…

    நடக்கும்போது பேசக்கூடாது என்பது அவர்கள் குடும்ப டாக்டரின் கண்டிப்பான உத்தரவு. இந்த மாதிரி உத்தரவுகளை மீறத்தானே நாமும் 47ல் சுதந்திரம் வாங்கினோம்!

    தாத்ஸ்... இன்னிக்கு எத்தன ரவுண்ட்ஸ்?

    வழக்கம் போல மூணு ரவுண்ட்.. அஞ்சு கிலோ மீட்டர்தான்.!

    ரெண்டு ரவுண்டு போறும் தாத்ஸ்.

    "ஏன்?

    நடந்த இடத்துலேயே திரும்பத் திரும்ப நடக்கறது பெரிய போர் தாத்தா…

    அப்ப மாறிப்போம்.

    லேண்ட்ஸ்கேப் எல்லா தெருவிலும் ஒண்ணு மாதிரிதான் இருக்கு. நான் ரொம்பவே டிஸ்டர்ப் ஆறேன் தாத்தா!

    அப்ப நம்ம பங்களாவுல ஒரு ஜிம் ஃபார்ம் பண்ணி, அதுல ஒரு வாக்கர் ரன்னரை பிரதிஷ்டை செஞ்சு அதுமேல மூவாகாம நடப்போமா ?

    நடக்கறதே மூவ்மென்ட்டுக்காகத்தான்...இந்த மூவ் இல்லாத நடை, மனிதனோட குரூரக் கண்டுபிடிப்பு தாத்தா!

    ப்ரியா! நீ ரொம்பவே கரெக்டா யோசிக்கிறே. இப்படி யோசிக்க எனக்கு ஐம்பது வயசு தேவைப்பட்டது…

    இது பதிலா? பாராட்டா? விமர்சனமா?

    மூணும்தான்.

    எனக்கு பதில் வேணும்.

    உனக்கு நம்ம சென்னை தெருக்கள் பிடிக்கலையா?

    உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

    பிடிச்சிருக்கு, பிடிக்கல... இப்ப இந்த டாபிக் எதுக்கு?

    கோபம் வருது தாத்தா... பாருங்க, அந்த காலிசிகரெட் பாக்கெட் அதே இடத்துல நாலு நாளா கிடக்குது! கார்ப்பரேஷன்காரங்க வேலையே பாக்கலன்னு நல்லா தெரியுது. அப்புறம் தெருவுல பாதியை காரை நிறுத்தி ஆக்கிரமிச்சுட்டாங்க. அதுபோக, எவ்வளவு மேடு, பள்ளம்... ரோடு போட்டு எனக்குத் தெரிஞ்சு ஏழு எட்டு வருஷம் ஆகுது. யாருமே கேட்க மாட்டாங்களா?

    - ப்ரியா எதனால் நடைப்பயிற்சி பிடிக்காத மாதிரி பேசுகிறாள் என்பது கணபதி சுப்ரமணியனுக்குப் புரிந்தது.

    தினமும் டி.வில எவ்வளவு மேல்நாடுகளைப் பாக்கறோம்? அதுல ரோடுகளையும் பாக்கறோம். நம்ப ரோடுகளும் இப்படி ஆகணும்னு ஏன் யாரும் நினைக்கறதில்லை? அவங்களுக்காவது ஏசு... இல்ல, அல்லான்னு ஒரே ஒரு சாமிதான். நமக்கு இங்க எத்தனை சாமிங்க! அப்ப கடவுள் அருளும் கருணையும் இங்க அதிகமா இருக்குன்னுதானே அர்த்தம். அப்படின்னா நாம அவங்களவிட எல்லா விதத்துலயும் மேல இருக்க வேண்டாமா?

    -ப்ரியா தன் சமூக அக்கறையை கடவுள் வரை கொண்டு வந்துவிட்டாள். அதுதான் சாக்கென்று கணபதி சுப்ரமணியனும் கப்பென்று ஒரு பிடி பிடித்தார். எல்லாம் நடந்தபடியேதான்... அருகில் பிளாட்பாரக்கோயில் ஒன்று!

    அம்மாடி... இதுல இருந்தே கடவுள் பொய்ங்கறது உனக்குத் தெரியலியா? இன்ஃபேக்ட், அவரே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்துலதானே உக்கார்ந்துருக்கார். பாரு, இந்தப் பாயும்புலி அம்மன் கோயிலே அதுக்கு சாட்சி.

    பாயும்புலி அம்மன் இல்ல. வேம்புலி அம்மன்!

    ஏதோ ஒரு அம்மன்... இவ நிஜமா இருந்தா இந்த ஆக்கிரமிப்புக் கோயிலை ஏத்துப்பாளா? தனக்கொரு கோயில் வட்டி உண்டியலையும் வச்சவனை தன் புலியை ஏவி விட்டே கடிச்சுக் குதறியிருப்பா இல்ல?

    நீ சொல்றதும் சரியாதான் இருக்கு… ஆனா என் அம்மா, அதாவது உன் மருமகள் எப்படி இதை எல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காம பக்திப்பாட்டா பாடிக்கிட்டே போறா?

    கரெக்ட்... இது நல்ல கேள்வி!

    பை த பை ப்ரியா... உன் அம்மா பாட்டெல்லாம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காதுன்னு உனக்கு நல்லா தெரியும். பெத்தவளாச்சேன்னுதான் நீயும் எதுவும் சொல்லாம இருக்கேன்னும் எனக்குத் தெரியும். உன் அப்பன் ஒரு உலகம் சுத்தி... அவனுக்கு சமயத்துல அவன் பேரே மறந்து போயிடுது. அந்த அளவு அவன் கம்பெனி அவனை ஒரு கோட் - சூட் போட்ட அடிமையா ஆக்கி வச்சிருக்கு. அப்படி இருக்கற அவனுக்கு, உன் அம்மா என்ன செய்யறாங்கறதே தெரியாது. ஆனாலும் உன் அம்மா பாடின பாடல்கள்கொண்ட சி.டி நல்லா போகுதாம்! இதை எங்க போய்ச் சொல்ல? எந்த சுவத்துல போய் முட்டிக்க.?

    -கணபதி சுப்ரமணியன் முகத்தைச் சுருக்கிக்கொண்டு கேட்ட அதேவேளை, ஒருவர் எஃப்.எம் ரேடியோவை தன் செல்போனில் கேட்டபடி வாக்கிங்கில் அவர்களைக் கடந்து போனார்.

    எஃப்.எம்.மில் ப்ரியாவின் அம்மா பத்மாசினியின் பக்திப் பாட்டுதான் ஒலித்துக்கொண்டிருந்தது.

    கேட்டியா! சொல்லி வாய் மூடல... ஒருத்தன் கேட்டுக்கிட்டு போறான்!

    ஆமாம் தாத்தா. என் கோபம் அதிகரிக்கற மாதிரியே எல்லாம் நடக்குது. ஏன் தாத்தா, இதையெல்லாம் நம்மால மாத்தவே முடியாதா?

    ஏன் முடியாது? மாறிக்கிட்டேஇருக்கறதுதானேம்மா வாழ்க்கை… வாழ்க்கைன்னா என்ன? மூவ்மென்ட்டுங்கற சலனம்தானே?

    அப்ப பத்திரிகைல வச்சு கிழிகிழினு கிழிப்போமா ?

    கிழிக்கறவங்க கிழிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, எல்லாமே கடல் மழையா பயனில்லாமலே இல்ல போய்க்கிட்டு இருக்கு

    அப்ப என்னதான் தீர்வு?

    சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே. நீ இப்ப 'ட்ரிபிள் ஈ' முடிக்கப்போற. அடுத்து எம்.எஸ் பண்ண யு.எஸ் கிளம்பிடு. அப்படியே அங்கேயே செட்டில் ஆயிடு. இந்த ஊர் உனக்கு வேண்டாம். தாய்நாடு, தகப்பன் நாடுங்கற சென்டிமென்ட் எல்லாம் உன்கிட்டயும் நல்லவேளையா இல்லை!

    அங்கேயும் நிறைய குளறுபடிகள் இருக்கு தாத்தா!

    தெரியும் மா. மனுஷன் எங்கெல்லாம் இருக்கானோ, அங்கெல்லாம் குளறுபடி இருக்கத்தான் செய்யும். ஆனா, ஒரு மார்னிங் வாக்கிங் இங்கநம்மை இவ்வளவு உறுத்தறமாதிரியெல்லாம் அங்க கிடையாது. எப்ப போகும்னே தெரியாத எலக்ட்ரிக் பவர், நாலு நாளைக்கும் அஞ்சு நாளைக்கும் ஒரு தடவை வர்ற கன்டாமினேட்டட் கார்ப்பரேஷன் வாட்டர், நாய்களும் மாடுகளும் திரியற தெரு, இருபத்தி நாலு மணி நேரமும் இரைச்சலா சினிமா பாட்டு ஒலிக்கற டீக்கடை, மீட்டர் போட முறைக்கற ஆட்டோ, போஸ்டர் ஒட்டறதுக்குன்னே கட்டின சுவர்னு கல்தோன்றி மண்தோன்றி அதுக்கும் முன்னால தோன்றிய மூத்த குடிகள் வாழற விசித்திர - வினோத நாடும்மா இது. என் மாதிரி கிழடுகளுக்குதான் விமோசனமில்ல. உனக்கென்ன? பேசாம பறந்துடு!

    -தாத்தா சொல்லி முடிக்கவும், "பிருந்தாவன்’ என்கிற அவர்களது பங்களா வந்திடவும் சரியாக இருந்தது.

    இருவரும் உள்ளே நுழையும்போது ப்ரியாவின் அப்பா அனந்த கிருஷ்ணன் ஒரு ப்ரீஃப்கேஸ், பருத்த ரோலிங் சூட்கேஸ் சகிதம் அவருக்கென அவரது நிறுவனம் அளித்திருந்த காரில் ஏறிக்கொண்டிருந்தார்.

    இருவரையும் கார் கதவுக்கு வெளியில் நின்று ஏற இறங்க பார்த்தார்.

    குட்மார்னிங் என்றாள் ப்ரியா,

    "லக்கேஜ் பெருசா இருக்கு... அப்ராடா? - கேட்டார் கணபதி சுப்ரமணியன்.

    ஆமாம்பா. சைனா போறேன்!

    அடிக்கடி போற போல இருக்கு.

    அங்க ஒரு பிராஞ்ச் இருக்கே.?

    நீ ஒரு கேபிடலிஸ்ட் புரொடக்டர். சீனா புடிச்சிருக்கா?

    ரொம்ம்ம்ப... இங்க விட எங்களுக்கு அங்கதான்பா ஹோப் ரொம்ப இருக்கு...

    ஓ அவங்களும் கெட ஆரம்பிச்சிட்டாங்களா?

    அப்பா…

    சும்மா சொன்னேன்டா. ஹேப்பி ஜர்னி.- கைகுலுக்கினார்.

    அவர் காரில் ஏறிட, அது மென்மையான ஒசையோடு நகரத் தொடங்கியது. ப்ரியா அவள் அறை நோக்கிச் செல்ல, கணபதி சுப்ரமணியன் மாடியில் உள்ள அவர் அறை நோக்கி நடக்க முற்பட்டபோது மெயின் கேட்டில் வாட்ச்மேன், அதெல்லாம் இப்ப யாரையும் பாக்க முடியாதுங்கறேன் என்றான் சத்தமாக.

    திரும்பினார். வாசலில் ஒரு இளைஞனும் இளைஞயும் தெரிந்தனர்.

    யார் அது தங்கவேலு?

    ஐயா, யாரோ ரெண்டு காலேஜ் ஸ்டூடன்ட்டுங்கய்யா…

    அவங்களை உள்ள விடு!

    அவர்கள் உள்ளே வந்தனர். இளைஞன் காபி ஆற்றுவது போல வணக்கம் சொன்னான். இளைஞ சிரிக்க மட்டும் செய்தாள்.

    வாட் டு யு வான்ட்?

    நீங்கதான் ஆய்வாளர் கணபதி சுப்ரமணியனா?

    எக்ஸாக்ட்லி

    நீங்கதான் சார் வேணும்.

    என்ன விஷயம்?

    சந்திரன்ல இருந்து எடுத்து வந்த கல் ஒண்ணு உங்ககிட்ட இருக்காமே?

    அதுக்கென்ன?

    அதைப் பார்த்து அதோட போட்டோ எடுத்துக்கணும்.

    பார்றா... அது என்ன அஜித்தா... ரஜினியா. போட்டோ எடுத்துக்க?

    அவங்க கூடவும் எடுத்துக்க ஆசைதான். இப்ப இந்த போட்டோவை காலேஜ் சாவனிர்ல போடலாம்னு...

    வெரி சாரி! நான் பத்திரிகைக்காரங்க கேட்டப்பவே போட்டோ எடுக்க அனுமதிக்கல. உங்களுக்கும் அதுதான் பதில்!

    அவர்கள் பேந்தப்பேந்த விழித்தனர்.

    வெரி சாரி. புறப்படுங்க - என்றவராக உள்ளே போக முயன்றவரிடம் வாட்ச்மேன் தங்கவேலு, ஐயா! இந்தக் கவரை ஒருத்தர் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்- என்று கொடுத்தான்.

    ஆவலாக வாங்கிக்கொண்டு அவரது அறை நோக்கி மாடிப்படி ஏறினார். எதிர்ப்பட்ட வேலைக்காரி முத்தழகுவிடம் "க்ரீன் டீ என்று மட்டும் சொன்னார். அறையின் சாவி அவர் பாக்கெட்டில் இருக்க, எடுத்துத் திறந்தார். திறந்த மாத்திரத்தில் விளக்குகள் உள்ளே எரிந்தன.

    பெரிய்ய்ய அறை!

    உள்ளே வினோதமான விஷயங்கள் நிறையவே! அறை நடுவே பெரிய மேஜை, அதன் மேல் அந்த நாளைய முதுமக்கள் தாழியில் இருந்து பலதரப்பட்ட மிருகங்களின் எலும்புக்கூடு வரை. ஒரு மனித மண்டை ஓடும் இருந்தது. கூண்டு ஒன்றில் மலேசிய வண்ணச் சிறகுள்ள பறவைகள் சில.

    அவர் கதவைத் திறக்கவும் அவை படபடத்தன!

    அவர் எதையும் கவனிக்காமல் கவரைப் பிரித்தார். அதில் ஒரு நாளிதழ் அளவுக்கான தாள் ஒன்று, எட்டாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. மிகவும் பழைய தாள்! நிதானமாக அதை விரித்தார். அதில் ஒரு வினோத படம். மேலே காலப்பலகணி’ என்கிற ஒற்றை வார்த்தை!

    ***

    2

    பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சரித்திரப் பாடத்தின் மீது எனக்கு ஒரு அலாதி ஈடுபாடு இருந்தது. நான் படித்து வளர்ந்தது திண்டுக்கல்லில், எங்கள் ஊருக்கே ஒரு பெரும் அடையாளம் ஊரின் நடுவில் அமைந்திருக்கும் மலையும் அதன் மேல் உள்ள கோயிலும் கோட்டையும்தான்!

    பள்ளி விடுமுறை என்றாலே அந்த மலை மேல் ஏறிவிடுவோம். மேலே கைதிகளை அடைக்கும் ஒரு சிறைக் கொட்டடி உண்டு. அதனுள் படுக்க முடியும், உட்கார முடியும், எழுந்து நிற்க முடியாது. நான்கடி உயரம்தான் இருக்கும்.இருட்டு வேறு. சிறைவாசிகள் நிற்கவே முடியாமல் வருடக்கணக்கில் அதனுள் எப்படி இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்பேன். என் மனம் மிகவே கனத்துவிடும்.

    கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை அங்கே சில காலம் இருந்ததாகக் கூறுவார்கள். நான் என்னை ஊமைத்துரையாக பாவித்துக்கொண்டு நண்பர்களுடன் நடிப்பேன்.அவர்களும் கைதியாகவும்,சிறைக்கொட்டார அதிகாரியாகவும் நடிப்பார்கள். தென்னை ஓலைதான் சவுக்கு! அதனால் அடிக்கும்போது வலிப்பதுபோல் நடிப்பதில் போட்டி போடுவோம்.

    மேலேயே பாழடைந்த அபிராமி அம்மன் கோயில் இருக்கிறது. அம்மன் நின்ற இடத்தில் நான் போய் நிற்பேன். சாமி போல கையை வைத்துக்கொள்வேன். நண்பர்கள் என்னை பய பக்தியோடு கும்பிடுவார்கள். நானும் சீரியஸாக அவர்களுக்கு அருள் தருவேன். அதெல்லாம் மறக்க முடியாத நாட்கள். மேலே மாலை ஆறு மணிக்கு மேல் இருக்க விட மாட்டார்கள். கைலி கட்டிய ஒருவன் வந்து எங்களைத் துரத்திவிடுவான். இரவானால் அந்த மலைமேல் வைத்து தூக்கில் போட்டவர்களின் ஆவி உலாவத் தொடங்கி விடுமாம்!"

    - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து.

    காலப் பலகணி’ என்கிற அந்த வார்த்தைக்குக் கீழே பூமி உருண்டை போல ஒரு பெரிய வட்டம்; அந்த வட்டத்துக்குள் குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள். வட்டத்துக்கு வெளியே 1947, 1968 என்று வருடத்தினைக் குறிக்கும் எண்கள். கோட்டின் தொடக்கத்தில் திருவள்ளுவராண்டு எண்களும், கோட்டின் முடிவில் ஆங்கில வருட எண்களும் இருக்க, ஊடாக உள்ள கோட்டின் மேல் நிறையவே குறிப்புகள். 998ம் வருடக் கோட்டின் மேல் சோழன் ராசராசன் வம்சாவளியில் ஆத்மஹத்தி’ என்கிற வார்த்தைகள். 1034ம் வருடக் கோட்டின் மேல் 'கடல்கோள் - பெரும்பாழ்' என்கிற வார்த்தைகள். 1947ம் வருடக்கோட்டின் மேல் ‘பரதமிதில் சுக்கிலவன் வெளியேற்றம்' என்கிற வார்த்தைகள்.!

    கணபதி சுப்ரமணியனின் அடர்வான புருவத்தில் வெள்ளிக் கம்பி கணக்காய், நீளநீளமான முடிகள். அவை அவர் நெற்றியைச் சுருக்கும்போது நேர்க்குத்தாக நிற்கும். அப்போதும் நின்றது.

    அந்தப் பெரும் தாளோடு ஒரு கடிதம்! காலப் பலகணி என்கிற அந்தத் தாளை அப்படியே மேஜை மேல் வைத்துவிட்டு அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார். '

    ‘அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!

    தங்கள் கையில் இருக்கும் காலப் பலகணி 90 வருடங்களுக்கு முன்பு என் பாட்டனாராகிய உதிரமுத்து வள்ளுவர் தன் கைப்பட வரைந்த ஒன்றாகும். இது விசித்திரமானது. முன்னதாக சில தகவல்கள்... நாங்கள் வள்ளுவக்குடிகள். சோதிடம் எங்கள் குலத்தொழில். அவ்வகையில் என்பாட்டன் பெயரையே கொண்ட நானும் ஒரு சோதிடன். சோதிடன் என்கிறபோதிலும் கடவுள் நம்பிக்கைஇல்லாதவன். நான் சொல்வதை நம்புவதற்கு உங்களுக்குச் சிரமமாக இருக்கலாம். அதைப் பற்றி கவலைப்படாமல் நான் விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். என் வரையில் கோள்கள் வானில் உலா வருவதால் அவை உண்மை. அதில் பூமியைப் பாதிக்கும் கதிர்வீச்சுத் தொடர்புடைய 'சனி, புதன், சந்திரன், செவ்வாய், சூரியன் சுக்கிரன், வியாழன்’ ஆகிய கோள்கள் உண்மையிலும் உண்மை. இதுபோல சாயா கிரகங்கள் என்னும் ராகுவும் கேதுவும் கூட பாதிப்பை ஏற்படுத்துவதால் அவையும் உண்மை.

    இவற்றின் பாதிப்பை கணிதப்படுத்திக் கூறுவதே ஜாதகமாகும். ஆகவே, ஜாதகமும் என் வரை மறுப்புக்கு அப்பாற்பட்ட உண்மை. ஆச்சரியம் என்னவென்றால், இந்த ஜாதகத்தைக் கணிதமாக மட்டுமே கருதி நான் ஜோதிடம் கூறும்போது சிலருக்கு அது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறது. சிலருக்கு 25 சதவீதம் கூட சரியாக இல்லை. அது எதனால் என்கிற ஆராய்ச்சியில் இப்போது பெரிதும் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்வேலையில் நான் சில ஜோதிட ஏட்டுச் சுவடிகளைத் தேடியபோது எங்கள் வீட்டு உக்ராண அறையின் கீழ் ஒரு பாதாள அறை இருப்பது தெரியவந்தது. அந்த அறைக்குள் அந்த நாளைய கல்கத்தா டிரங்குப் பெட்டிக்குள்தான் இந்த காலப் பலகணி வரையப்பட்ட தாளும், கூடவே அந்த நாளைய ஒரு கையடக்கமான டைரி போன்ற குறிப்பேடும் இருந்தது. என்னவென்று பார்த்தேன். இந்த காலப் பலகணி நம் பாரத தேசத்தில் நடந்த அதிமுக்கிய சம்பவங்களைக் குறிப்பாகக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, 1947ம் ஆண்டுக்கான கோட்டின் மேல், ‘பரதமிதில் சுக்கிலவன் வெளியேற்றம்' என்று உள்ளது. அது நாம் வெள்ளையர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தைக் குறிக்கிறது. 'சுக்கிலம்’ என்றால் வெண்ணிறம்’ என்றும் பொருளுண்டு. அதன்படி பார்த்தால் 1947ம் ஆண்டு சம்பவத்தை அது குறிக்கிறது.இப்படி ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த அதிமுக்கியமான சம்பவங்கள் குறிப்பாக உள்ளன.

    அதாவது, இதில் உள்ளபடிதான் காலத்தால் எல்லாம் நடக்கிறது. அதன்படி, 2015ல் 'விண்ணிலொரு ரத்தினம் மறையும்’ என்று உள்ளது. இதற்கு எனக்குப் பொருள் தெரியவில்லை. இதை எழுதியுள்ள கோட்டின் மேல் கூர்ந்து கவனித்தால், 365 கணுக்கள் மிகச்சிறிய புள்ளிகளாக இருப்பது தெரியும். அந்தக் கணுக்களில் இருபதாவது கணுவின் மேல் இருந்து 'விண்ணிலொரு என்கிற வார்த்தை தொடங்குகிறது. இதை வைத்து "ஜனவரி இருபதாம் தேதி இது நடக்கலாம்’ என நான் கருதுகிறேன். 1947ம் வருடக் கோட்டின் மேல் ‘பரதமிதில்’ என்கிற வார்த்தை, 227வது அனுப்புள்ளியில் ஆரம்பமாகிறது. அது மிகச்சரியாக ஆகஸ்ட் விம் நாளைக் குறிக்கிறது. இதை வைத்தே நானும் இந்த 2015ம் வருடத்துக்கான செய்திக்குறிப்புப்படி, ஜனவரி 20ம் தேதி ஏதாவது நிகழும்’ என்கிற முடிவிற்கு வந்தேன். என் வரையில் இந்த காலப் பலகணி ஒரு கணித அற்புதம்! ஒரு நாட்டுக்கே இது முன்னதாக நடக்கப்போவதைக் கூறுகிறது. ஜோதிடம் என்று இதை சாதாரணமாகக் கூறாமல், ஆங்கிலத்தில் கூறப்படும் prediction எனும் முன்கணிப்பாக இதைக் கருதலாம்.

    நாட்டுக்குப் பலன் கூறும் இந்தப் பல கணி போல, பல அதிசயங்களைக் கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிகுந்த விஷயங்கள் பற்றி என் தாத்தா உதிரமுத்து வள்ளுவன் எழுதி வைத்திருக்கும் ஒரு குறிப்பேடும் என் வசம் உள்ளது.

    இதை வைத்துக்கொண்டு ஒரு ஆராய்ச்சி செய்ய எனக்கு விருப்பம்தான். ஆனால் எனக்கான சோதிடக் கணக்கின்படி, வரும் 27ம் தேதி மாலை நான்கு மணி இரண்டு நிமிட அளவில், மூன்றாவது நிமிடத்துக்கு இடைப்பட்ட நொடிப்புள்ளிகளில் என் மூச்சுக்காற்று நிற்க இருக்கிறது. எனவே, இதைப் பெரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், 'பத்மஸ்ரீ’விருது பெற்றவருமான உங்கள் விருப்புக்கே விட்டுவிடுகிறேன். உங்களைப் பார்த்துப் பேச வந்த என்னை உங்கள் காவல்காரர் உள்ளே விடவில்லை. உங்கள் தொலைபேசி எண்ணும் தெரியாது. அதனால்தான் இந்தக் கடிதம். இதில் என்னுடைய எண் உள்ளது. தயவுசெய்து நான் சாவதற்குள் என்னைச் சந்தித்து என் வசமுள்ள குறிப்பு ஏட்டைப் பெற்றுக்கொள்ளவும். இந்தக் காலப் பலகணி ஜோதிடத்தை கணிதப்படுத்தும் ஆராய்ச்சிக்கும், வருங்காலத்தில் மேலும் நடக்க இருக்கும் முக்கிய சம்பவங்களைத் தெரிந்துகொண்டு எச்சரிக்கையோடு திகழவும் உதவக்கூடும்.

    என் தாத்தாவுக்கு இந்த விஷயத்தில் அந்த நாளில் பெரிதாக உதவ யாருமில்லை. இருந்தும் அவர் தன் சுயமுயற்சியால் காலப் பலகணி உள்ள இடத்தைக் கண்டறிந்து அங்கே பார்த்ததையே படமாக வரைந்து எடுத்து வந்துள்ளார். நீங்கள் முயன்றால் அந்தப் பலகணியைக் கண்டுபிடித்து மேலும் பல ரகசியங்களை அறியலாம். இதற்கு மேல் உங்கள் விருப்பம்.

    இப்படிக்கு,

    உதிரமுத்து வள்ளுவன்’

    கடிதத்தைப் படித்த கணபதி சுப்ரமணியன், திரும்பவும் காலப் பலகணி என்னும் அந்தத் தாளை விரித்துப் பார்த்தார். அநேகமாக எல்லா வருடங்களுக்கும் ஒரு வளைகோடும் அதன் மேல் குறிப்புகளும் இருந்தன. 2014க்கான கோட்டின் மேல் 'மங்களம் மானமுறும்’ என்கிற வார்த்தைகள். இதில் மாவன்னா தொடங்கும் புள்ளியைக் கணித்துப் பார்த்தபோது 267வது புள்ளியாக அது இருந்தது. அதை தேதியாக மாற்ற முனைந்தபோது செப்டம்பர் 24ம் தேதி என்று வந்தது. செப்டம்பர் 24ம் தேதி என்ன நடந்தது என்பதை அன்றைக்குரிய ஆங்கில நாளிதழை எடுத்துப் பார்க்கவும், அதில் பளிச்சென்று செவ்வாய் கிரகத்துக்குச் சென்ற மங்கள்யான் எனும் விண்கலம் பற்றிய செய்தி. பாரத தேசத்தின் மிகப்பெரிய விஞ்ஞான சாதனை!

    கணபதி சுப்ரமணியனிடம் ஒரு கூர்மையான உணர்வு உருவாகத் தொடங்கியது. அப்போது, தாத்ஸ். என்றபடியே கையில் கிரீன் டீயுடன் ப்ரியதர்ஷினி, முத்தழகுகிட்ட டீ கேட்டிருந்தீங்களா? கமான்... என்று நீட்டினாள்.

    அவரோ வெறித்தார்.

    என்ன தாத்தா அப்படிப் பாக்கறீங்க.

    சொல்றேன்... இந்த லெட்டரைப் படி! அப்படியே இந்தப் படத்தையும் பார் என்று டீயை வாங்கி உறிஞ்சத் தொடங்கினார்.

    ப்ரியதர்ஷினியும் ஆர்வமானாள். கடிதத்தைப் படித்துவிட்டு காலப் பலகணியையும் பார்த்தவள், தாத்தா! ஸ்பீல்பெர்க் படம் பாக்கற மாதிரி இருக்கு. இதெல்லாம் உண்மையா? என்று விழிகள் விரிய கேட்டாள்.

    அதை இனிமேதான் கண்டுபிடிக்கணும்.

    எனக்கு இது வேண்டாத வேலை. உனக்குத்தான் இது தொழில். பை த பை, நீ ரிட்டயர்ட் கேஸ் ஆச்சே... என்ன பண்ணப்போறே தாத்தா..?

    நிச்சயம் சும்மா விடப்போறதில்லை.

    அப்ப அந்த உதிரமுத்து வள்ளுவனுக்கு போன் போட்டு பேசப்போறியா ?

    நேர்லயே போகப் போறேன்...

    அப்ப உன் வரைல ஒரு இன்ட்ரஸ்ட்டான அசைன்மென்ட் தொடங்கிடுச்சு. அப்படித்தானே?

    டெஃபனிட்டா ஆமா, இன்னிக்கு என்ன தேதி?

    ஜனவரி 18 தாத்தா."

    இன்னும் இரண்டே நாள்தான் இருக்கு. ‘விண்ணிலொரு ரத்தினம் மறையும்’ங்கறதுக்கு பின்னால என்ன நடக்குதுன்னும் பார்ப்போம்...

    அப்ப நீ இந்தப் படமும் குறிப்புகளும் உண்மைன்னு நம்பத் தொடங்கிட்டியா?

    கடந்த கால சம்பவங்கள் அணு பிசகாம நடந்துருக்கே?

    "தாத்ஸ்... இப்பல்லாம் பிரில்லியன்ட்டா ஏமாத்தறதுதான் ஃபேஷன். மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், கோயில் கலசம், இரிடியம் மெட்டீரியல், நாகரத்னம்... இப்படி டிசைன் டிசைனா ஏமாத்தற கூட்டம் நிறையவே இருக்கு! பீ கேர்ஃபுல்…

    இதுல என்னை ஏமாத்த என்னம்மா இருக்கு?

    அது இப்ப தெரியாது... போகப் போக தெரிய வரலாம். நீ அடிக்கடி டிவில பேசற ஒரு நபர். உன் புக்ஸ் உலகப் பிரபலம். இன்ஃபாக்ட், ஐதராபாத் ஏர்போர்ட் புக் ஷாப்ல உன்னோட ‘ஸ்டோன் சீக்ரெட்ஸ்’ புக்கை என் ஃப்ரெண்ட் வாங்கிட்டு, நிறைய இடம் புரியல... தாத்தாகிட்ட பேசணும்னு சொன்னான்!

    நீ இப்ப என்ன சொல்ல வர்றே.?

    இப்படி அநாமதேயமா வர்ற விஷயங்களை கேர் பண்ண வேண்டாம். இது நிஜமான விஷயமா இருந்தா அது நிச்சயம் தெரியும். நீ சொன்ன மாதிரி இருபதாம் தேதிக்குப் பிறகு இதைப் பத்தி யோசிப்போம். அந்த நபருக்கு போனெல்லாம் பண்ணிடாதே!

    ப்ரியதர்ஷினி கண்டிப்பாகச் சொன்னவளாக, அங்கிருந்த ‘நிலாக்கல்’ பேழையருகே சென்று பக்கத்து சுவிட்ச்சை போட, அதன்மேல் ஃபோக்கஸ் லேம்ப் வெளிச்சம் பட்டது. பேழைக்குள் ஒரு வெல்வெட் துணிமேல் இருந்த ஒரு பேப்பர் வெயிட் அளவிலான அந்த நிலாக்கல் டாலடித்தது.

    எனக்கு இதுவே ஒரிஜினல்தானான்னு சந்தேகமா இருக்கு...என்று நமுட்டுச் சிரிப்போடு முணுமுணுத்தவளை முறைத்துப் பார்த்தவர், அதை பத்து கோடி ரூபாய்க்கு இன்ஷ்யூர் பண்ணியிருக்கேன்... ஜோக்குக்குக் கூட இப்படிப் பேசாத... என்று கத்தினார். அவர் இப்படி பல தடவை கூறிவிட்டார். அவளும் அதைக் கேட்டுச் சிரித்தபடியே, பக்கமாய் உள்ள ஒரு மண்டை ஒட்டைப் பார்த்தாள். அந்த மண்டை ஓடு அவரது தேடலில் ஒரு தாழிக்குள் இருந்து கைப்பற்றப்பட்ட ஒன்று.இரண்டாயிரம் வருஷத்துக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனின் மண்டை ஓடு அது.

    அழிந்தும் அழியாதவன்டா நீ... என்கிற கமென்ட்டோடு, அவள் அடுத்தடுத்து அவரது கண்டுபிடிப்புகளைப் பார்க்கத் தொடங்கினாள். எலும்புகள், பழைய பாத்திரங்கள், சிற்பங்கள், மேல் அங்கி - இப்படிப் பல பொருட்கள்....

    போதும் ப்ரியா. இடத்தை காலி பண்ணு - என்றார் அவர்,

    துரத்தாத தாத்தா... என் கமென்ட்ஸை ரசி. என்றவள் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பார்த்து ஒரு வினாடி திடுக்கிட்டாள். பீரோ ஒன்றின் பக்கவாட்டுச் சுவரில் ஒரு கையில் கேமராவோடு ஒரு நிழலுருவம்!

    ***

    3

    திண்டுக்கல் மலை மேல் ‘இரவானால் ஆவி உலாவும். எனவே ஓடிப்போய்விடுங்கள்’ என்று கூறி எங்களைத் துரத்திய நபரிடம் முதலில் எனக்கு ஒரு பயம் இருந்தது. பிறகு அது நீங்கிவிட்டது. என்னுள் எழும்பிய சில கேள்விகள்தான் காரணம். முதல் கேள்வி, அந்த ஆவிகள் அவனை ஒன்றும் செய்யாதா" என்பதுதான். அடுத்த கேள்வி எப்பொழுதோ மன்னர் காலத்தில் தூக்கிலிடப்பட்டவர்கள் இன்னமுமா ஆவியாக சுற்றிக்கொண்டிருப்பார்கள்?’

    மூன்றாவதாக ஒரு கேள்வியையும் கேட்டுக்கொண்டேன். இறந்தவர்கள் ஆவியாகிறார்கள் என்றால் இந்த நாட்டில் வாழ்கிறவர்களுக்கு சமமாக ஆவிகள் நடமாடியபடி இருக்க வேண்டும். ஆனால், அப்படித் தெரிவில்லையே?

    ஆவியைத் தொட்டு எங்களைத் துரத்திய நபர், இப்படி என்னுள் பல கேள்விகள் எழும்பக் காரணமாகிவிட்டான். அப்போது நாங்கள் குடியிருந்த விடும் திண்டுக்கல் மலையின் அடிவாரத்தில்தான் இருந்தது. எனவே, நினைத்தால் மலை ஏறிவிட முடியும். மேலே போய்விட்டு கீழே வர எனக்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மிக அதிகம்.

    ஒருநாள் இரவு தைரியமாக மேலேறிவிட்டேன். அப்படி ஏறிய பிறகே தெரியவந்தது... அங்கே அந்த நபர் கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்தான். பலர் வந்து குடித்துவிட்டு அங்கங்கே மலைப்பாறைகளின் மேலே கிடந்தனர்!

    பாவிகளைத்தான் அவன் ஆவி என்று கூறிவிட்டான். மனிதன் தன் சுயநலத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்வான் என்பதற்கு இதை நான் உதாரணமாக எடுத்துக்கொண்டேன். திண்டுக்கல் மலை என் மனதில் அழியாத வரலாற்றுப் பதிவாக இப்படிப் பல சம்பவங்களோடு உள்ளது. என் வரலாற்று விருப்பம் அதிகரிக்க அதுவும் ஒரு காரணம்!"

    - கணபதி சுப்ரமணியனின்

    ஆய்வுக் கட்டுரையிலிருந்து.

    அந்த நிழலுருவத்தைப் பார்த்த ப்ரியதர்ஷினியின் முகத்தில் அதிர்வு பரவ ஆரம்பித்தது.

    தாத்தா! கொஞ்சம் இப்படி வா... என்றாள். அவரும் அருகில் வர, சைகையால் பீரோவின் பக்கவாட்டுச் சுவரைக் காண்பித்தாள். இந்த இடைவெளியில் அந்த கேமராவும் கையுமான நிழல் மறைந்து விட்டிருந்தது!

    இப்ப நீ எதைக் காட்டினே. எதுக்கு இந்த மெளன சிக்னல்? - என்று வாய் விட்டே கேட்டார். ஆனால் பதில் கூறாமல் சற்று ஒதுங்கி, பீரோவின் பின்புறம் பார்த்தாள் ப்ரியதர்ஷினி என்கிற ப்ரியா

    பீரோவின் பின்புறத்தில் ஒருவன் ஒளிந்துகொண்டிருந்தான்.

    துணிவாக பீரோ அருகே சென்று அவனை நேருக்கு நேராகப் பார்க்கவும், அவனும் வெறித்தான். ஆனால் இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

    வெளியே வாடா.. என்றவாறு அவன் வர இடம் கொடுத்து சற்றுப் பின்னால் வந்தார். அவனும் தயங்கித் தயங்கி வெளியில் வந்தான்.

    கணபதி சுப்ரமணியனுக்கு கபால உச்சியில் இருந்து உள்பாதம் வரைக்கும் ஒரு கூர்மையான கத்தி இறங்கினது போல் இருந்தது.

    டேய்! யாருடா நீ... திருட்டு ராஸ்கல். இந்த ரூமுக்குள்ளே எப்படிடா வந்தே? என்று பதற ஆரம்பித்தார்.

    அவன் முகம் இப்போது ஓரளவு தெரிந்தது. ஒரு காதில் சிறிய வளையம் போட்டு, கையில் ஃபாஸ்ட் ட்ராக் வாட்ச் கட்டி, ஸ்டோன் வாஷ் சட்டை போட்டு, ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருந்தான். இன்றைய ட்ரெண்டான லோஹிப்பில் அங்குலம் இறங்கினாலும் உள்ளுறுப்பைப் பார்க்க முடிந்த அளவிலான அவனது தோற்றத்தில், அவனது குறுந்தாடியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ரியா இம்மட்டில் ஆளைப் பார்த்த நொடி ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் வேகத்தில் அவனைத் தெரிய முயன்றாள்.

    யாருடா நீ. லயோலாவா, பிரசிடென்சியா... ஃபர்ஸ்ட் இயர்தானே?

    - பளிச் பளிச் என்று அவனை உமிழ்ந்தாள்.

    நான்... நான்... - அவன் தடுமாறினான்.

    ப்ரியா, முதல் ல போலீசுக்கு போன் பண்ணு... நான் கூப்பிட்டேன்னு இன்ஸ்பெக்டர் ராகவேந்திராவை உடனே வரச்சொல். யு ஸ்கவுண்ட்ரல்... என்ன ஒரு தைரியம்? இது என்னோட உயிர் பரவிக்கிடக்கற இடம். இங்கநான் இந்த நாட்டு பிரசிடென்ட்டைக் கூட உள்ள விட யோசிப்பேன். இதுக்குள்ள நீ எப்படிடா வந்தே?

    - அவரிடம் பதற்றமும் சேர்ந்துகொண்டது.

    தாத்ஸ்! டென்ஷன் ஆகாதே. முதல்ல இங்க இருந்து வெளியே ஹாலுக்குப் போவோம். அங்க நின்னு மத்த விஷயங்களைப் பேசுவோம்!

    அடுத்த பத்தாவது நொடி அவர்கள் ஹாலில்! இந்த சத்தம், ப்ரியாவின் தாயான பத்மாசினி, சமையல்காரி என்று சகலரையும் ஹாலில் கூட்டிவிட்டது. அதில் வீட்டு வேலைக்காரி முத்தழகுவும் அடக்கம். அவள் முகத்தில் கணிசமான அளவில் பீதி!

    இந்த கேப்பில் ப்ரியா அவன் கேமராவைப் பறித்துக்கொண்டு அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்து ரீவைண்ட் செய்தாள். நல்லவேளை, அவன் எதையும் ஷுட் செய்திருக்கவில்லை. அவனே அதை சொல்லவும் செய்தான்.

    அக்கா! நான் எதையும் எடுக்கல.

    அக்காவா. நானா. உனக்கா? - ப்ரியாவுக்கு எது பலவீனம் என்பது அவனுக்குத் தெரிய ஆரம்பித்தது.

    "இல்ல, நீங்க ஃபைனல் இயர். நான் நீங்க கெஸ் பண்ண மாதிரி ஃபர்ஸ்ட் இயர் - அதுலயும் கச்சிதமா லயோலா... உங்க ஐக்யூ’பின்ஷார்ப்’

    Enjoying the preview?
    Page 1 of 1