Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mohini Koyil
Mohini Koyil
Mohini Koyil
Ebook279 pages2 hours

Mohini Koyil

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pushpanathan Pillai alias Kottayam Pushpanath is a famous Malayalam author. He wrote many detective novels, mainstream novels, science fiction,
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580103801714
Mohini Koyil

Read more from Kottayam Pushpanath

Related to Mohini Koyil

Related ebooks

Related categories

Reviews for Mohini Koyil

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mohini Koyil - Kottayam Pushpanath

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மோகினி கோயில்

    Mohini Koyil

    Author:

    கோட்டயம் புஷ்பநாத்

    தமிழில்: சிவன்

    Kottayam Pushpanath

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    சமீபகாலமாக முற்றிலும் நம்பவே முடியாத சம்பவங்கள்தான் அங்கு நடந்து கொண்டிருந்தன.

    அரையநல்லூர் கிராமம்!

    பழமையைக் காத்துப் போற்றிவரும் அந்தக் கிராமத்தில் கடந்த சில நாள்களாக மனிதர்கள் பயத்துடன் வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருந்தனர்.

    ஓர் அமாவாசை நாளிரவில்தான் அது ஆரம்பமானது!

    மாலைநேரத்தில் சன்னமான காற்றடித்தது. விரைவிலேயே அது ஒரு சூறைக்காற்றாக மாறியது. மரங்கள் எல்லாம் பேயாட்டம் ஆடின.

    காற்றின் ஓசை அலறல் மாதிரி இருந்தது.

    ஊரின் பெரிய பெரிய வீடுகள்கூட அதிர்ந்தன.

    நள்ளிரவு ஆனபோது வானமே இடிந்து விழுகிறதோ என்று நினைக்கும் அளவுக்குப் பயங்கரமான சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன.

    யாராலும் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை!

    காட்டு யானைகள் உரத்த குரலில் பிளிறுவதையும், குதிரைகள் பீதியுடன் கனைப்புக்குரல் எழுப்புவதையும் கிராமத்தினர் கேட்டனர். உண்மையாக ஊரில் என்னதான் நடக்கிறது என்பதை ஜன்னல் வழியாகப் பார்க்கக்கூட அவர்கள் தயங்கினர்.

    அது உறங்கமுடியாத ஓர் இரவாகவே இருந்தது.

    பொழுது விடிந்தது.

    இரவில் என்னதான் நடந்தது என்பதை அறிய, கிராமத்து மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது கண்ட காட்சிகள் விசித்திரமானவையாக இருந்தன.

    பிரமாண்டமான மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்திருந்தன.

    கிழக்குப்புற மலை உச்சியில் பெரிய யானையைப்போல் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த பாறை உருண்டு ஆற்றில் விழுந்திருந்தது.

    மொத்தத்தில் அந்தக்கிராமத்தின் முகமே மாறிவிட்டாற்போல் இருந்தது.

    அன்று மாலை நேரத்தில் மேலக்காவு மனை தேவதத்தன் நம்பூதிரி தனது மகனை அழைத்தார்.

    கோவிந்தன்குட்டி… இங்கே வா?

    இளைஞனான கோவிந்தன்குட்டி அவரை நெருங்கினான்.

    என்ன இதெல்லாம்… இதற்குமுன் கேள்விப்பட்டிராத சம்பவங்கள் அல்லவா நடந்து கொண்டிருக்கின்றன? போய் என்ன ஏதென்று விசாரித்துவிட்டு வா? அப்பா சொன்னார்.

    அப்பா எதைப்பற்றிச் சொல்கிறார் என்று கோவிந்தன்குட்டிக்குத் தெரியும். தான் போய்ச் சந்திக்கவேண்டியது காஞ்ஞிரக்காட்டு மனை ராமபத்ரன் நம்பூதிரியைத்தான்!

    அரையநல்லூர் கிராமத்தில் உள்ள முக்கியமான இரண்டு பரம்பரைகள் மேலக்காவு மனையும், காஞ்ஞிரக்காட்டு மனையும்தாம்!

    ஒருகாலத்தில் அந்தக் கிராமத்தின் முக்கால் பங்கும் மேலக்காவு மனையினருக்கு உரியதாக இருந்தது. அந்த மனையின் காரணவர்கள் திருவிழாக்கள் நடத்தியும், வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டும், கிராமத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடுப்புகள் வைத்துக்கொண்டும் பாரம்பரியச் சொத்துகளைக் குறைத்துக்கொண்டே வந்தனர். இதில் பெரும்பகுதியை மோசடி செய்து கைப்பற்றிக்கொண்டது, அந்த வீட்டின் காரியஸ்தராக இருந்த சங்கரன் நாயரின் குடும்பத்தினர்தான். சங்கரன் நாயர் இப்போது கிராமத்தின் தலைவரும்கூட. மேலக்காவு மனைக்குக் கடைசியாக மிஞ்சியது பாரம்பரியம் வாய்ந்த அந்தப் பழைய வீடும், அதையொட்டி இருந்த மூன்றரை ஏக்கர் நிலமும்தான்!

    கோவிந்தன்குட்டியின் அம்மா அவனது சிறுவயதிலேயே இறந்துபோனதால், அப்பாவின் அரவணைப்பில்தான் வளர்ந்தான். மகன் மீதிருந்த அதிகப்படியான பாசத்தால் அப்பா இரண்டாம் கல்யாணம்கூடச் செய்து கொள்ளவில்லை.

    இதன் பலனாக கோவிந்தன்குட்டி சிறுவயதிலேயே வேத மந்திரங்களைக் கற்றுக் குடும்பத்துக்குச் சொந்தமான கோயிலிலேயே பூசாரியானான். அதன்பிறகு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனதால் கிராமத்தை விட்டு வெளியேறி வெளியூரிலுள்ள ஒரு கோயிலில் பூசாரியாகச் சேர்ந்தான்.

    அப்பா சொன்னபடி கோவிந்தன்குட்டி சென்ற இடம் காஞ்ஞிரக்காட்டு மனைதான்.

    மந்திர தந்திரங்களில் மிகவும் பெயர் பெற்றது காஞ்ஞிரங்காட்டு மனை.

    அம்மை நோய்கண்டு இறந்துபோன நோயாளிக்கு மந்திரம் ஜெபித்து, அதன் கையில் ஊன்றுதடி ஒன்றைக் கொடுத்து வெட்டிவைத்துள்ள குழிவரை நடக்கச் செய்து, தானாகவே அந்தக் குழியில் படுத்துக்கொள்ளும் அளவுக்கு மந்திரவல்லமை கைவரப் பெற்றவர்கள். அந்தப் பாரம்பரியத்தின் தற்போதைய வாரிசும், மந்திரவாதியும் ராமபத்ரன் நம்பூதிரி.

    அவருக்குத் தெரியாமல் அந்த கிராமத்தில் அசாதாரணமான சம்பவம் எதுவும் நடக்காது என்று கிராமத்தினருக்குத் தெரியும். அப்படியிருந்தும் இதெல்லாம் எப்படி நடந்தன? கோவிந்தன்குட்டியின் மனத்தில் சந்தேகம் தோன்றியது.

    காஞ்ஞிரங்காட்டு மனைக்கு அவன் சிறுவயதில் எத்தனையோ தடவை போயிருக்கிறான். கொஞ்சநாள் ராமபத்ரன் நம்பூதிரியின் சீடனாகவும் இருந்திருக்கிறான்.

    கோவிந்தன்குட்டி அங்கிருந்து சொல்லாமல்கொள்ளாமல் கிளம்பியதற்குக் காரணம், ராமபத்ரன் நம்பூதிரியின் தம்பி நீலகண்டனின் நடவடிக்கைகள்தான்!

    நீலகண்டன் நம்பூதிரி மிகவும் மோசமானவர். துர்மந்திரவாதியான அவரது உபாசனா மூர்த்திகள் ரத்ததாகம் கொண்டு அலைபவர்கள்.

    அவர் எத்தனையோ தடவை விலங்குகளையும், பிராணிகளையும் பலியிடுவதை கோவிந்தன்குட்டி நேரடியாகவே பார்த்திருக்கிறான்.

    ஒரு தடவை பைசாசிகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

    அதை நினைத்தால் இப்போதும் அவன் உடம்பு நடுங்கும்.

    அந்த இல்லத்தின் மேற்குப்பகுதியில், நீலகண்டன் நம்பூதிரிக்கு என்றே பிரத்தியேகமான கோயில் ஒன்று இருந்தது. அந்தக் கோயிலைச் சுற்றி உயரமான சுற்றுமதில் இருந்ததால், உள்ளே நடப்பது எதுவும் வெளியே தெரியாது.

    அந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது ஒரு ருத்திர மூர்த்தியைத்தான்.

    பெரும்பாலான சமயங்களில் அந்தச் சுவர்களின் உட்புறத்திலிருந்து குமட்டல் ஏற்படுத்தும் துர்நாற்றம் புகையாகக் கிளம்பும்.

    நீலகண்டனைப் பார்ப்பதற்கென்றே ஒரு சாரார் வருவதுண்டு. அதுவும் இரவு நேரங்களில் மட்டும். அப்படி வருபவர்கள் சாக்கு மூட்டைகளில் எதையாவது எடுத்து வருவார்கள். சாக்குமூட்டைக்குள் எதெல்லாமோ புரளும் சத்தம் கேட்கும்.

    சாக்குமூட்டைக்குள் இருப்பது என்ன என்று பார்க்கும் அளவுக்கு கோவிந்தன்குட்டிக்குத் தைரியம் ஏற்பட்டதில்லை.

    அப்படி ஒரு நாள் இரவு.

    அதைப்பற்றி நினைத்தபோது, இப்போதும் அவனது உடம்பில் இருந்த ரோமங்கள் பயத்தால் விறைத்துக்கொண்டன.

    நீலகண்டன் நம்பூதிரியின் ரகசியக் கோயிலில், மாலை நேரத்திலிருந்தே என்னென்னவோ பூஜைகள் நடந்துகொண்டிருந்தன.

    இரவு நேரத்தில் நடுவயதுப் பெண்மணி ஒருவரும், அவருடன் ஆண் ஒருவரும் வந்தனர். அவர்களிடம் என்னென்னவோ பொருட்கள் இருந்தன.

    பெண்மணியுடன் வந்த மனிதரின் தோளில் சாக்குமூட்டை இருந்தது. சாக்குக்குள் ஏற்பட்ட விரைவான அசைவை வைத்து அது ஒரு பெரிய பூனையாக இருக்குமென்று நினைத்தான் கோவிந்தன்குட்டி.

    இருப்பினும் தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள விரும்பினான்.

    அவர்கள் சுற்றுமதிலுக்குள் நுழைந்ததும் கோவிந்தன்குட்டியும் அவர்களைப் பின்தொடர்ந்தான். உட்புறம் போனவர்கள் என்ன காரணத்தாலோ வெளிக்கதவை மூடவில்லை.

    கோவிந்தன்குட்டி மறைவாக நின்றுகொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். அப்போது பன்னிரண்டு வயதாக இருந்த கோவிந்தன்குட்டியை அதன் பிறகு கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.

    சாக்குக்கு உள்ளேயிருந்து அவர்கள் வெளியே எடுத்தது பூனைக்குட்டி அல்ல. பிறந்து மூன்று மாதங்கள்கூட ஆகாத ஒரு பச்சிளம் குழந்தையை.

    நடக்கப்போகும் பயங்கரத்தை நினைத்துப் பயத்தால் மிரண்டுபோன கோவிந்தன்குட்டி அங்கிருந்து ஓடினான். அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களிடம் சாக்குமூட்டை இருக்கவில்லை.

    அன்றுடன் தனது மாந்திரீகப் பயிற்சியை முடித்துக்கொண்டு மறுநாளே அங்கிருந்து கிளம்பினான் அவன்.

    அப்பா என்ன ஏதென்று விசாரித்தபோது ஏதேதோ காரணங்கள் சொன்னான். ஆனால், ராமபத்ரன் அப்படிப்பட்ட மாந்திரீகர் அல்ல. ஒருபோதும் அவர் பைசாசிகமான வேலைகளைச் செய்தது இல்லை.

    கோவிந்தன்குட்டி காஞ்ஞிரங்காட்டு மனையின் முன்புறத்தை அடைந்தான்.

    தெருவாசற்படிக்கு முன்பாக எட்டி(காஞ்ஞிர)மரம் ஒன்று இருளால் செய்யப்பட்டதுபோல் நின்றுகொண்டிருந்தது.

    கோவிந்தன்குட்டி அந்த மரத்தை நெருங்கியதும், அதிலிருந்து வௌவால் கூட்டம் ஒன்று விர்ரென்று கிளம்பி ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது. அருவருப்பான குரலை எழுப்பிக்கொண்டு அவை, அந்த மரத்தையே சுற்றிச் சுற்றி வந்தன.

    தெருவாசற்கதவு விரியத் திறந்துகிடந்தது. உட்புறம் பார்த்தபோது பூஜையறை வாசலில் நிலவிளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது.

    தெருவாசற்படியைக் கடந்தான்.

    எவரும் தட்டுப்படவில்லை.

    திருமேனி… கோவிந்தன்குட்டி அழைத்தான்.

    பதிலில்லை. சற்றுநேரம் காத்திருந்த பிறகு மறுபடியும் அழைத்தான். அப்போதும் பதிலில்லை.

    பிறகு தென்புறமிருந்த சவுக்கையைச் சுற்றிக்கொண்டு வீட்டின் பின்புறத்தை அடைந்தான்.

    வீட்டின் வடமேற்குப் பகுதியில் ஏதோ ஒன்று எரிந்து அடங்கியதுபோல் கனல் வெளிச்சம் தட்டுப்பட்டது.

    திருமேனி… மறுபடியும் அழைத்தான்.

    யாரது…? இவ்வளவு தைரியமாக இந்த இடத்துக்கு வந்திருப்பது? முரட்டுத்தனமான குரல் ஒன்று கேட்டது.

    கோவிந்தன் திரும்பிப் பார்த்தபோது, தட்டுப்பட்டவர் சங்கிலி விளக்கைக் கையில் பிடித்திருந்த நீலகண்டன் நம்பூதிரிதான்.

    சிவன் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு பார்த்த அந்த முகம், பழையதைவிடப் பயங்கரமானதாக மாறிவிட்டிருந்தது.

    வௌவால் ஒன்று இறக்கை விரித்திருப்பது மாதிரியான கூட்டுப் புருவங்கள்.

    கழுகின் அலகு போன்று வளைந்த மூக்கு. சிவப்புநிறக் கண்கள். கழுத்தில் பாக்கு அளவுக்குப் பெரிதான ருத்திராட்சங்கள் கோத்த மாலை.

    விளக்கைப் பிடித்திருந்த அவரது கைப்பகுதியில் ரத்தக்கறை படிந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

    நான்தாங்க… மேலக்காவுமனை கோவிந்தன்குட்டி! மிகவும் மெதுவான குரலில் பேசினான்.

    எதற்காக வந்தாய்? நீலகண்டனின் குரலில் எரிச்சல் தெரிந்தது.

    பெரிய திருமேனியைப் பார்க்கிறதுக்காகங்க!

    ஓகோ… அவரையா? அதோ அங்க எரிஞ்சு சாம்பலாகியிருக்கார் பார். அவர் இறந்து ஒரு வாரமாச்சு! அந்தப் பக்கமாக விளக்கை உயர்த்திக்காட்டிய நீலகண்டன் பேசினார்.

    கோவிந்தனுக்குள் பயம் உயரத் தொடங்கியது.

    ராமபத்ரன் நம்பூதிரி இறந்துவிட்டார். ஒருவேளை கொலை செய்யப்பட்டாரோ என்னவோ?

    மேற்கொண்டு பழைய சினேகிதத்தைச் சொல்லிட்டு இங்க வர்ற வேலையெல்லாம் வேண்டாம். கிளம்பு, எனக்கு சிஷ்யர்கள்னு யாரும் வேண்டியதில்லை! சொல்லிவிட்டு நீலகண்டன் திரும்பி நடக்கத் தொடங்கினார்.

    ஒருகணம் நின்றவர், திரும்பி அவனைப் பார்த்தார்; அப்புறம்… சரிவேண்டாம்… நீ சீக்கிரமாகக் கிளம்பு!

    மறுவிநாடி அவர் இருளில் மறைந்தார்.

    கோவிந்தன்குட்டி எரிந்து அடங்கிய சிதையை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பினான். தெருவாசற்படியைத் தாண்டும்போது மறுபடியும் வௌவால்கள் கிறீச்சிட்டபடி பறந்தன.

    கோவிந்தன்குட்டிக்கு இப்போது என்ன நடந்திருக்கும் என்று ஓரளவுக்கு விளங்கியது. அங்கு நடக்கும் அசாதாரணமான சம்பவங்களின் துத்திரதாரி நீலகண்டன்தான்.

    ‘அபாரமான பல சக்திகளும் நீலகண்டன் நம்பூதிரிக்குக் கைவசமாகி விட்டிருக்கின்றன. இருப்பினும் கிராமத்தின் பரதேவதையான தொண்ணூறாம் காவு பகவதியின் சக்தி குன்றிவிட்டதா?’ கோவிந்தன்குட்டி யோசனையில் ஆழ்ந்தான்.

    இல்லத்துக்குத் திரும்பும்போது பகவதி காவு வழியாக நடந்தான்.

    பாதைக்குச் சுற்றும் இருள் அப்பிக்கிடந்தது.

    ஆகாயத்தில் நிலவு, மேகங்களின் பிடிக்குள் அகப்பட்டிருந்தது. இருப்பினும் சன்னமான வெளிச்சம் பாதையில் ஆங்காங்கு திட்டுத்திட்டாகத் தென்படவே செய்தன. - காற்றின் அசைவே இல்லை.

    மரங்கள், செதுக்கி வைத்தவைபோல் நின்றுகொண்டிருந்தன.

    சற்றுத் தொலைவில் கோயில்.

    எத்தனையோ நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கோயில் அது. ஒரு காலத்தில் சக்தி பிரவகித்துக் கொண்டிருந்த கோயிலும்கூட.

    வெகுநாள்களாக அன்றாட பூஜைகள் முடங்கிக்கிடந்தன.

    கோவிந்தன்குட்டி எப்போதாவது அங்கு செல்வதுண்டு.

    உலர்ந்துபோன பாசம், செதில்கள் மாதிரி துருத்திக்கொண்டிருக்கும் சுற்றுமதிலுக்கு உட்புறமிருந்தது கோயில்.

    கோபுர வாசற்கதவுகள் எப்போதோ இற்றுப்போயிருந்தன.

    கோயிலின் முன்புறம் நின்றுகொண்டிருந்த பிரமாண்டமான ஆலமரம் மேற்புறம் இரண்டாகப் பிரிந்து, அதன் கிளைகள் நாலாபுறமும் பரவிப்படர்ந்து பந்தல்போல் ஆகிவிட்டிருந்தன.

    மண்ணைக் கீறிப் பிளந்துகொண்டு வேர்கள் நாகப் பாம்புகளைப்போல் வளைந்து நெளிந்துகொண்டு கன்னாபின்னாவென்று வளர்ந்திருந்தன.

    வாசலருகில் நின்று உள்புறம் பார்த்தான். ஒரே இருட்டாகத் தெரிந்தது.

    கருவறை மட்டுமே உள்ள அந்தக் கோயில், கருமையான ஓர் ஒற்றைக்கல் மண்டபம் போலிருந்தது.

    சுவர் மீது காட்டுக்கொடிகள் ஏகத்துக்குப் படர்ந்துகிடந்தன.

    சுற்றுமதிலைக் கடந்த கோவிந்தன், கருவறைக்கு முன்னால் வந்து நின்றான்.

    சுற்றுப்புறம் பயமேற்படுத்தும் அமைதியுடன் விளங்கியது.

    கருவறை வாசல் மூடியிருந்தது.

    கதவின் இருபுறமும் காவல் நிற்கும் மோகினி சிலைகள் நிலவொளியின் சலனத்தால் தெளிவற்றுத் தெரிந்தன.

    கோவிந்தன் கதவுகளை உள்புறமாகத் தள்ளினான். ‘கரகர’வென்ற ஓசையுடன் அவை உள்வாங்கித் திறந்துகொண்டன.

    பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து, நெருப்புக்குச்சி ஒன்றை உரசிப் பற்ற வைத்தான்.

    உள்புறம் எண்ணெய் வற்றாத திரிகள் உள்ள கல்விளக்கு இருப்பது அவனுக்குத் தெரியும்.

    தீபமேற்றினான். சற்றுத் தயங்கிவிட்டு மேற்புறமாக உயர்ந்த ஜுவாலையில் கோவிந்தன்குட்டி எதிர்பாராத ஒரு காட்சியைக் கண்டான். கூடவே யாரோ அணைத்ததுபோல் தீபம் சட்டென்று அணையவும் செய்தது.

    சந்தேகத்தைப் போக்கிக்கொள்வதற்காக மறுபடியும் தீக்குச்சி ஒன்றை உரசினான்.

    அவனது சந்தேகம் சரியானதுதான்.

    பகவதியின் சிலை மறைந்துவிட்டிருந்தது!

    அப்படியானால் தேவி கோயிலில் இல்லை.

    என்ன செய்வது என்று புரியாமல் ஒருகணம் நின்றான்.

    கிராமத்தைக் காக்கும் காவல்தெய்வத்தையே அந்தக் கல்நெஞ்சக்காரன் இல்லாமலாக்கி விட்டிருக்கிறான்!

    உடனேயே அங்கிருந்து திரும்பி நடக்கத் தொடங்கினான்.

    கோபுர வாசலைக் கடந்து வெளியே காலெடுத்து வைக்க முயன்றபோது, யாரோ பின்புறத்திலிருந்து அவனை அழைப்பதுபோல் தோன்றியது.

    கோவிந்தன்குட்டி… கோவிந்தன்குட்டி!

    அது ஒரு பெண்ணின் குரல்.

    குரல் வந்த திசையைப் பார்த்தபோது, கோயிலின் தென்மேற்கு மூலையில் வளர்ந்திருந்த ஏழிலம்பாலை மரத்தின் அடிப்பகுதியில் யாரோ நிற்பது தெளிவற்றுத் தெரிந்தது.

    இலைகளின் இடைவெளி வழியாக ஊடுருவி வந்த நிலாவின் ஒளிக்கீற்றுத் துணுக்குகள், அது ஒரு பெண்ணுருவம் என்று அடையாளம் காட்டின.

    கோவிந்தன்குட்டியின் உடலில் அவனையும் மீறி ஒருவித நடுக்கம் பரவியது.

    இதற்கு முன்பு எத்தனையோ தடவை இதுபோன்று இரவு நேரங்களில் தனியாகக் கோயில் பகுதியில் அவன் தங்கியிருக்க நேர்ந்திருக்கிறது.

    யானைக் கொட்டில்களில் எத்தனையோ தடவை தனியாகப் படுத்து உறங்கியிருக்கிறான். இருந்தும் இதுவரை இப்படிப்பட்ட அசாதாரணமான சம்பவம் எதுவும் நிகழ்ந்ததில்லை.

    இதோ - இப்போது அமைதி தவழும் சூழ்நிலையில் மரங்களிலும், நிழல்களிலும் கருமையான இருள் குடியிருக்கும் சுற்றுப்புறத்தில் பாலை மரத்தின் அடியில் பெண் ஒருத்தி நின்றுகொண்டிருக்கிறாள்.

    நிச்சயமாக

    Enjoying the preview?
    Page 1 of 1