Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ragasiyam Parama(n) Ragasiyam
Ragasiyam Parama(n) Ragasiyam
Ragasiyam Parama(n) Ragasiyam
Ebook436 pages4 hours

Ragasiyam Parama(n) Ragasiyam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வாசக நெஞ்சங்களுக்கு என் வந்தனங்கள்!

பொதுவாக இப்போது படிப்பவர்கள் குறைந்து பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்ட ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனால் பத்திரிகைகளும் அந்த நாள் போல் பல தொடர்கள், பல சிறுகதைகள் என்று வெளியிடுவதில்லை. ஒரு தொடர், ஒரு சிறுகதை என்று சுருங்கிவிட்டது. இதில் உணர்வு பூர்வமாக எழுதும் போது அதை வாசிக்க பெரிய ஒரு கூட்டம் இல்லை.

எல்லா காலகட்டங்களிலும் க்ரைம் எனப்படும் குற்றவியல் சார்ந்த மர்மக் கதைகளும், அமானஷ்யமான கதைகளும் ஒரு சாரரால் வெகுவாக வாசிக்கப்பட்டு வருகிறது. எனவே நானும் வெகு ஜனங்களுக்கான இதழ்களில் இந்த கலப்பில் எழுதும்போது எளிதாக வெற்றி கிடைத்துவிடுகிறது.

இத்தொடரிலும் அந்த வெற்றி எனக்கு உறுதியானது. வாராவாரம் வாசகர்களை தவிக்கச் செய்தேன்.

இந்த நாவலில் நிறைய ஆன்மிக விஷயங்களும் உள்ளன. நிச்சயமாக இதை வாசித்து முடித்த உடன் சித்தலிங்கபுரம் எங்கே உள்ளது என்று கேட்பீர்கள். சித்தேஸ்வரரையும் தேடத் தொடங்கிவிடுவீர்கள்.

தேடுங்கள்! அவர் அருள் கிடைத்தால் நல்லது தானே? இவ்வேளையில் தொடருக்கு ஓவியம் தீட்டிய திரு தமிழ்ச் செல்வத்துக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

பணிவன்புடன்,
இந்திரா சௌந்தர்ராஜன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580100704550
Ragasiyam Parama(n) Ragasiyam

Read more from Indira Soundarajan

Related to Ragasiyam Parama(n) Ragasiyam

Related ebooks

Related categories

Reviews for Ragasiyam Parama(n) Ragasiyam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ragasiyam Parama(n) Ragasiyam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    ரகசியம் பரம(ன்) ரகசியம்

    Ragasiyam Parama(n) Ragasiyam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    என்னுரை

    வாசக நெஞ்சங்களுக்கு என் வந்தனங்கள்!

    பொதுவாக இப்போது படிப்பவர்கள் குறைந்து பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்ட ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனால் பத்திரிகைகளும் அந்த நாள் போல் பல தொடர்கள், பல சிறுகதைகள் என்று வெளியிடுவதில்லை. ஒரு தொடர், ஒரு சிறுகதை என்று சுருங்கிவிட்டது. இதில் உணர்வு பூர்வமாக எழுதும் போது அதை வாசிக்க பெரிய ஒரு கூட்டம் இல்லை.

    எல்லா காலகட்டங்களிலும் க்ரைம் எனப்படும் குற்றவியல் சார்ந்த மர்மக் கதைகளும், அமானஷ்யமான கதைகளும் ஒரு சாரரால் வெகுவாக வாசிக்கப்பட்டு வருகிறது. எனவே நானும் வெகு ஜனங்களுக்கான இதழ்களில் இந்த கலப்பில் எழுதும்போது எளிதாக வெற்றி கிடைத்துவிடுகிறது.

    இத்தொடரிலும் அந்த வெற்றி எனக்கு உறுதியானது. வாராவாரம் வாசகர்களை தவிக்கச் செய்தேன்.

    இந்த நாவலில் நிறைய ஆன்மிக விஷயங்களும் உள்ளன. நிச்சயமாக இதை வாசித்து முடித்த உடன் சித்தலிங்கபுரம் எங்கே உள்ளது என்று கேட்பீர்கள். சித்தேஸ்வரரையும் தேடத் தொடங்கிவிடுவீர்கள்.

    தேடுங்கள்! அவர் அருள் கிடைத்தால் நல்லது தானே? இவ்வேளையில் தொடருக்கு ஓவியம் தீட்டிய திரு தமிழ்ச் செல்வத்துக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

    பணிவன்புடன்,

    இந்திரா சௌந்தர்ராஜன்

    1

    "மிக மிக உற்சாகமாக இருந்தாள் பிருந்தா! பாவாடை தாவணிக்குள் பன்னீர் புஷ்பம் போல பொலிய பொலிய காட்சி தந்தாள். அம்மா விசாலாட்சிக்கோ கண்ணுபடப் போவது நிச்சயம் என தோன்றியது. எப்போதும் இல்லாதபடி பான் கேக்கால் டச் செய்து புருவங்களை ட்ரிம் செய்து கொண்டிருந்தாள்.

    மாநிறம்தான் ஆனால் செம்பருத்திபோல் முகத்தில் ஒரு புதுச்சிவப்பு. எல்லாம் பக்கத்து வீட்டுக்காரியான தேவியின் உபயம்...

    என்ன தேவி. இவளை டவுனுக்கு கூட்டிண்டு போய்ட்டு வந்தது இந்த அலங்காரத்துக்குத் தானா?

    ஆமாம் மாமி... நான் தான் பியூட்டி பார்லருக்கு கூட்டிண்டு போனேன். 300 ரூபாதான்! எப்படி மாறியிருக்கானு பார்த்தேளா?

    முன்னூறு ரூபாயா... அடிப்பாவி! இங்க பணம் என்ன மரத்துலையா காய்க்குது. அய்யோ... அய்யோ...

    சும்மா இருங்கோ மாமி. இப்படி இருந்தாத்தான் ஆஸ்திரேலியாவிலிருந்து வரப்போற உங்க அண்ணன் பிள்ளை அவினாஷ்க்கும் இவளைப் பிடிக்கும். இல்லன்னா இவ ஆசைப் படலாம். ஆனா அவாளுக்கு ஆசையே வராது. ஆஸ்திரேலியாவில எல்லாரும் பரங்கிப்பழமா இருப்பாங்களாமே. இவள மாதிரி மாநிறமெல்லாம் எடுபடணுமே? தேவி பிராக்டிக்கலாத்தான் பேசினாள். விசாலத்தாலும் அதற்கு மேல் அவளிடம் பேச முடியவில்லை. கச்சிதமாய் அவள் கணவரும் பிருந்தாவின் அப்பாவுமான சுந்தரேசகுருக்கள் கோயில் பூஜை முடிந்து சற்றே வியர்த்த உடம்போடு உள்ளே நுழைந்தபடி இருக்க தேவி நாசூக்காய் விலகிக் கொண்டாள். பிருந்தாவும் எப்பவும் தன்னை அடக்கிக் கொள்ளும் டிவியுள்ள தன் அறையை நோக்கி நகரப் பார்த்தாள்.

    செத்த நில்லு... என்றபடியே முற்றத்தில் கால் கழுவிக் கொண்டார் குருக்கள். தயக்கமும் சற்று பதட்டமுமாய் நின்றாள் பிருந்தா.

    டவுனுக்கு போனியா?

    …………

    உன்னைத்தான்... டவுனுக்கு போனியான்னு கேட்டேன்?

    ஆ... ஆமாப்பா...

    போன இடத்துல தலைமுடியை வெட்டிண்டு சாயத்தை பூசிண்டு ஏதோ கூத்தடிச்சிருக்கே போலருக்கே...?

    அது... அது... பிருந்தா தடுமாற, விசாலம் அவளைக் காப்பாற்ற முயன்றாள்.

    என்னன்னா இது, கூத்துகீத்துன்னுண்டு...? இப்ப எல்லா பொண் குழந்தைகளும் பண்ணிக்கிறது தான்னா! நான்தான் போய்ட்டு வான்னேன். ஆஸ்திரேலியாவிலிருந்து அவினாஷ் வந்து நிக்கும்போது ‘ரொம்ப கர்நாடகமா இருந்தா, எனக்குப் பிடிக்கலன்னு’ சொல்லிட்டா என்ன பண்றது?

    விசாலம் சற்று இடைவெளி விட்டாள். குருக்கள் முகத்தில் அதை ஆமோதிப்பதுபோல் ஒரு மவுனம்.

    இது அவினாஷிக்காக மட்டுமில்ல... இவ அவன் கூட போய் ஆஸ்திரேலியாவுல வாழும்போது கொஞ்சம் அந்த ஊருக்கு தகுந்த மாதிரி இருந்தாத்தானே நன்னாருக்கும்? விசாலம் சொல்லி முடிக்கவும் குருக்கள் கை விரல்களைத் துடைத்தபடியே அவளை பதிலுக்கு கூர்மையாக பார்த்தார். அவர் பெரிதாய் ஏதோ சொல்லப் போகிறார் என்பது விசாலத்துக்கு புரிந்தது.

    அவன் வரும்போது ஒரு வெள்ளைக்காரியோட வந்தா என்ன பண்ணுவே? இந்த கேள்வியை விசாலம் எதிர்பார்க்கவில்லை.

    என்னன்னா இது அபசகுணமா பேசிண்டு... அவன் அப்படிப்பட்ட பிள்ளை இல்லன்னா...?

    அது உன் நம்பிக்கை. ஆனா இன்னைக்கு காலம் எங்கையோ போயிண்டிருக்கு. இதோ இப்பக்கூட கோயிலில் பிராம்மண பையனுக்கும் வெள்ளைக்காரப் பொண்ணுக்கும் மாலை எடுத்துக் கொடுத்து கல்யாணத்தைப் பண்ணி வச்சுண்டு தான் வரேன். அந்த பொண்ணுக்கு கண்ணு எங்க இருக்கு, மூக்கு எங்க இருக்குன்னு தெரியல. அதைப் போய் எப்படி காதலிச்சான்னும் புரியல.

    யாரோ ஒருத்தர் ஏதோ பண்ணா அது நம்ப அவினாஷ்க்கும் பொருந்துமா என்ன... அவனுக்கு இவதான்னும் இவளுக்கு அவதான்னும் சொல்லி சொல்லி வளர்த்தது தான் ஊருக்கே தெரியுமே?

    என்ன வளர்ப்பா? இங்கையே பொழப்பை பார் – வெளி நாடெல்லாம் வேண்டாம்னேன். எங்க கேட்டான் அவன்?

    போறும் உங்க தாய்நாட்டுப் பற்று. மும்பையில் ரயில் பாலத்துல ரயில புடிக்கிற அவசரத்துல முட்டி மோதிண்டு 22 பேர் செத்துப்போயிருக்கான்னு டிவியில் நியூஸ் ஓடிண்டிருக்கு. இது ஒரு பக்கம்னா நூத்துக்கு தொண்ணுத்தி அஞ்சு மார்க் எடுத்தும் சீட் கிடைக்காம தற்கொலை பண்ணிண்டு செத்து போயிருந்து ஒரு பொண்ணு... நம்ப நாடு இப்ப நாடாவா இருக்கு? அது கெட்டு குட்டிச்சுவரா போய் தான் ரொம்ப காலம் ஆயிருச்சே? பேச்சுக்கு பேச்சு கைக்கு கையாய் குருக்களுக்கான பிரத்யேகமான ஓவல் டைப் வெள்ளித்தட்டை எடுத்து வைத்து மதிய உணவை பரிமாறத் தொடங்கினாள் விசாலம். இதுதான் அவர்களின் அன்றாடம்!

    ***

    பிருந்தா நைசா நழுவி வெளியே சென்றாள். தெரு வெறிச்சோடிக் கிடந்தது. கிராமத்துத் தெரு! வீட்டுக்குவீடு வாசலில் மரங்கள்! பெரும்பாலும் பன்னீர் மரங்கள்... வழியெல்லாம் அது உதிர்த்த நாதஸ்வரம் போன்ற பூக்கள்! தெருவின் முடிவில் ஓங்கி உயர்ந்த கோபுரத்தோடு சிவன் கோயில்! அந்த தெருவுக்கும் ‘சிவன் கோயில் தெரு’ என்றுதான் பெயர். ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகள் கடந்த கோயில். அந்த நாளிலேயே சித்தர்களால் கட்டப்பட்டது என்பதால் அவர்கள் பெயரால் 'சித்தலிங்கேஸ்வரர் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.

    ஊர் பெயரும் 'சித்தலிங்கபுரம்' தான்! ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்புவரை நாள் கிழமைகளில் தான் கூட்டம் வரும். இப்போது எல்லா நாளும் திருநாளே! இதில் ஜோதிடர்கள் பங்கும் அதிகம். வியாதியால் அவதிப்படுபவர்கள் சித்தலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து அந்த பாலைக் குடித்தாலே போதும் வியாதிகள் குணமாகிவிடும் என்று சொல்லப்போக தினமும் நிறையவே வியாதியஸ்தர்கள் வரத்தொடங்கிவிட்டனர்.

    அவர்களை அப்படியே அமுக்கி கல்லாகக்கட்டத் தோதாக அகத்தியர் சித்த வைத்தியம், கோரக்கர் சித்த வைத்தியம் என்று திரும்பின பக்கமெல்லாம் வைத்தியசாலைகள்!

    மொத்தத்தில் சித்தலிங்கபுரம் இப்போது பெத்தலிங்கபுரமாகி விட்டது. முன்பு காலையில் ஒரு டவுன் பஸ், மதியம் ஒன்று, மாலை ஒன்று என்று மூன்றே மூன்று சர்வீஸ்தான்! இப்போது முப்பதுக்கும் மேல் சர்வீஸ்கள்...! போதாக்குறைக்கு ஷேர் ஆட்டோக்கள்... அவைகளில் அலறும் சினிமாப் பாடல்கள் என்று சித்தலிங்கபுரம் பொருளாதார ரீதியாக மாறினாலும் சில பழைய சாஸ்திர சம்பிரதாயங்களில் பெரிய மாற்றங்கள் இல்லை.

    யாராக இருந்தாலும் சித்தலிங்கேஸ்வரரை தரிசனம் செய்ய வந்தால் திரும்பிப் போகும் போது ஊர் எல்லையில் பெரிய ஆலமரத்தடியில் அரிவாள் வடிவில் கோயில் கொண்டிருக்கும் கருப்பசாமியைப் பார்த்து தன் கைகளால் பிறரை பாராட்டும் போது தட்டுவது போல் தட்டிக் கும்பிட்டுவிட்டு தான் செல்ல வேண்டும்.

    ஊருக்கே 'கருப்புதான் காவல் தெய்வம்!’ அதனால் சித்தலிங்கபுரத்தில் திருட்டு இல்லை என்று தாராளமாய் கூறலாம். தெருவில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கீழே கிடந்து அதை எடுக்க நேர்ந்தால் அதை யாரும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். கருப்புக்கோயில் குளத்தில் அந்த காசை விட்டெறிந்து கையை நன்றாக தட்டிக்காட்டி 'ஒரு தூசு துரும்பைக் கூட எடுத்துக் செல்லவில்லை பார்த்துக்கொள்' என்பது போல் தான் நடந்து கொள்வார்கள்! தங்கத்தையே கண்டெடுத்தாலும் குளத்தில் போட்டு விடவேண்டும்.

    கருப்பு என்றால் அவ்வளவு பயம்!

    சமீபத்தில் கூட கோயிலுக்கு வந்த ஒரு ஆந்திரா கும்பல் கருப்பு பற்றி அறிந்தும் கும்பிட நேரமில்லை என்று திரும்பிச் சென்று விட வழியிலேயே விபத்து நேரிட்டு ஒருவர் பாக்கியில்லாமல் அவ்வளவு பேரும் ஆஸ்பத்திரியில் கிடக்க நேர்ந்தது. குணமானபின் கூட்டமாக கோயிலுக்கு வந்து கும்பிட்டு விட்டுத்தான் திரும்பி சென்றனர்.

    அப்படிப்பட்ட சித்தலிங்கபுர சிவன் கோயில் தெருவை பிருந்தா பார்த்தபடியிருக்க அன்று செவ்வாய்கிழமை என்பதன் நிமித்தம் கையில் மந்திரக்கோலுமாய், இடுப்பில் ஒரு மூங்கில் கூடையுமாய் நுழைந்திருந்தாள் அந்த இளம் பெண்!

    சோசியம்... ஜக்கம்மா சோசீயம்... முக்காலமும் சொல்லும் 'மொனப்பான சோசீயம்... என்று குரல் கொடுத்தபடி வந்த அந்த இளம் பெண்ணுக்காக காத்திருந்தது போல வீடுகளில் இருந்து பலரும் வெளிப்பட்டு அடடே செம்பவழமா... கொஞ்சம் என் வீட்டுக்கு வந்துட்டுப்போ... என்று அவளுக்கு வரவேற்பளித்தனர். அவள் பெயர்தான் செம்பவழம்!

    வேடிக்கை பார்த்தபடியிருந்த பிருந்தாவோடு இப்போது தேவியும் வந்து சேர்ந்து கொண்டாள்.

    என்ன பிருந்தா செம்பவழத்துக்குத்தான் காத்திருக்கியா?

    ........

    சும்மா சொல்லுடி... உனக்கும் அவினாஷ்க்கும் எப்ப கல்யாணம் நடக்கும். எப்படி நடக்கும்னு அவகிட்ட சோசியம் கேக்க ஆசைப்படுறேதானே?

    பிருந்தா மவுனமாக ஆமோதித்தாள்.

    செம்பவழம் கரெக்டா சொல்லிடுவா. செவ்வாக்கிழம எப்ப வரும்? இவ எப்ப வருவான்னு ஒரு கூட்டம் காத்திருக்கிறதப் பாத்தியா? இவளுக்குத்தான் எவ்வளவு டிமாண்ட்...?

    ஆமா போன வாரம் கூட இவ ஒனக்கு ஏதோ சொன்னா போல தெரியறதே?

    அதுவா. ஆமா சொன்னா!

    என்ன சொன்னா... அதைமட்டும் சொல்லமாட்டியே நீ...

    சொல்றதா இருந்தாத்தான் எப்பவே சொல்லியிருப்பேனே... யார்க்கிட்டையும் வாயத்தொறக்காதேன்னு அவளே ஒரு பூட்டப்போட்டுட்டா நான் என்ன பண்ண? தேவி அலுத்துக் கொண்டாள். உள்ளே குருக்கள் சாப்பிட்டு முடித்தவராய் கயிற்றுக்கட்டிலில் பக்கவாட்டில் டேபிள் பேனை ஓடவிட்டு அதன் காற்றோட்டத்திற்கு நடுவில் தூங்க ஆரம்பித்தார்.

    மாலை 5 மணிக்கு மேல் போய் சன்னதியை திறந்தா போதும். பிருந்தாவுக்கும் அவர் தூங்குவதே சரி எனப்பட்டது. யார் வீட்டிலோ எஃப் எம் ரேடியோவில் மூச்சு விடாத ரேடியோ ஜாக்கியின் குரலும் அதைத் தொடர்ந்து 'செஃல்பி புள்ள’ பாடலும் ஒலிக்க ஆரம்பித்தது.

    பிருந்தாவிடம் இனம் புரியாத ஒரு சலனம்.

    ஏண்டி ஒரு மாதிரியா இருக்கே.... உன் அப்பா நீ ஃபேஷியல் பண்ணதைப் பார்த்துட்டு திட்டிட்டாரா...?

    அதெல்லாம் இல்லடி... அவர் சொன்ன ஒரு விஷயம்தான் என் மனசை சலனப்படுத்திடுத்து...

    என்னடி சொன்னார் அப்படி?

    அவினாஷ் அத்தான் பிரமாச்சாரியா போன மாதிரியே திரும்பி வரணும்னு மனசு துடிக்கிறது. அத்தான் யாரோ ஒரு வெள்ளக்காரியை கல்யாணம் பண்ணிட்டு ஜோடியா வந்து நின்னா...?

    ஓ... உனக்கு இப்படி ஒரு பயமா...? விடு... செம்பவழம் எதா இருந்தாலும் கரெக்ட்டா சொல்லிடுவா...

    நெஜமா...?

    நீ, அவகிட்ட உன் கைய நீட்டு... அப்பத்தெரியும்!

    தேவி முருக்கேற்றுவது போல் சொல்ல, நெடுநேரம் கழித்து வந்த செம்பவழத்தின் எதிரில் மருதாணி பூசிய அழகிய தன் கரத்தை நீட்டினாள் பிருந்தா. செம்பவழமும் பித்தளைப் பூண் போட்ட தன் மந்திரக்கோலின் நுனியை அவள் யில் வைத்து அழுத்திவிட்டு பின் தன் நெற்றிக்கு கொண்டு சென்று தன் குலதெய்வத்தை அழுத்தமாய் தியானித்தவள் விதிர்த்துப் போனாள். உடம்பெல்லாம் சிலிர்க்க கோலை திரும்ப எடுத்துக் கொண்டாள்.

    தாயி... இனி இந்தக் கையை யாருக்காவும் எதுக்காகவும் யார்க்கிட்டையும் காட்டாதே... அதிக ஆசையும் எதுமேலையும் வைக்காதே. இது கை இல்ல காக்கை... என்றவள் விறுவிறுவென்று கிளம்பிவிட்டாள். அவளது கால்சதங்கை சப்தம் தேய்ந்து அடங்கும்வரை வீட்டுவாசலில் மல்லிகைக் கொடிக்கு கீழாக நின்று விட்ட பிருந்தாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அவள் சொன்னதை வீட்டினுள் இருந்து கேட்டிருந்த விசாலத்தின் முகத்தில் பீதி வேகமாய் பரவ ஆரம்பித்திருந்தது! தேவியும் யோசிக்க ஆரம்பித்திருந்தாள்!

    2

    ஒரு புழுதிப்புயலோடு வந்து நின்றது அந்த ஆட்டோ. அதிலிருந்து 2 சூட்கேஸ், ஒரு ஷோல்டர் பேக் சகிதம் உதிர்ந்தான் அவினாஷ்.

    10 கிலோ மீட்டர் கூட இல்லாத அந்த பயணத்துக்கு 350 ரூபாய் வாங்கிக் கொண்டான் ஆட்டோக்காரன். ஆட்டோவில் மீட்டர் ஒரு வெற்று உபகரணமாக காட்சி தந்தது. அவினாஷ் அதை குறைந்த பட்சம் ஒரு வெற்றிலை டப்பாவாகவாவது பயன்படுத்தச் சொன்னபடியே தான் பணத்தை தந்தான்.

    வாசலில் சப்தம் கேட்டு எட்டிப்பார்த்த பிருந்தா முகத்தில் ஒரு குபீர் சந்தோஷம்.

    அய்யோ அத்தான் என்று பாவாடை தடுக்க பாய்ந்து வந்தாள். ஆட்டோ புறப்பட்டுவிட அவினாஷ் தன் அத்தை மகளை பல ஆண்டுகளுக்குப்பிறகு நேருக்கு நேராய் பார்த்தான். அவளும் அவனை வெட்கத்தோடு பார்த்தாள்.

    ஹாய் என்று சொன்னான். பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்தாள்.

    என்ன பிருந்தா... ஹாய்னா சிரிக்கறே... பதிலுக்கு ஹாய் சொல்லணும். காலேஜுக்கெல்லாம் போய் படிச்ச தானே? கேட்டுக் கொண்டே இரு சூட்கேஸ்களையும் இரு கையில் தூக்க முனைய பிருந்தாவும் ஒத்தாசித்தாள்.

    இருவரும் உள் நுழைந்தனர். பக்கத்து வீட்டு தேவி இதை பார்த்தபடி இருந்தாள். மெல்ல அவளும் அவர்கள் பின்னாலேயே உள்ளே வந்து தாழ்வாரத்தில் நின்று அவினாஷை வெறித்தாள்.

    நல்ல உயரம், ஜீன்ஸ் பேண்ட், டீஷர்ட், கூலிங்கிளாஸ், நவீன மிலிட்டரி கட் என்கிற 2018ன் அப்பட்டங்கள்... அடிக்கடி ஸ்ப்ரே செய்து கொள்வானோ, என்னவோ அந்த இடத்தில் ஒரு விதமான வாசம்.

    தாழ்வாரத்தை கடந்த ரெட் ஆக்சைட் பூசிய சிமென்ட் தரைமேல் சில பிரம்பு நாற்காலிகளும் மரபெஞ்சும் இருந்தது. ஒரு பிரம்பு நாற்காலியில் அப்படியே ஷு கால்களோடு அமர்ந்து சற்று சோம்பல் முறித்தவன்.

    வீடு அப்படியே இருக்கு... கொஞ்சங்கூட மாறலை என்றான். பிருந்தா அவன் முகத்தையே பார்த்தபடி இருக்க தேவி அவன் கால்களைப் பார்த்தவளாய் பிருந்தாவுக்கு சைகை கொடுக்க முனைந்தாள்.

    என்னடி?

    புரியற மாதிரி சொல்லு.

    கால்ல ஷடி... வாசல்லயே கழட்டி விடாம வந்துட்டார். உங்கப்பா பார்த்தா அவ்வளவுதான்... தேவி அவன் காதுபடவே சொல்லவும் அவினாஷ் கொஞ்சம் கேலியாய் சிரித்துக் கொண்டே ஷவைக் கழட்ட முனைய, பிருந்தா சட்டென்று மண்டியிட்டு அவன் ஷுவைத் தான் கழற்ற முனைந்தாள்.

    நோ... நோ... நான் பார்த்துக்கிறேன். நீ விலகு... என்று அவனே கழட்டினான்.

    ஏன் நான் கழட்டக்கூடாதா? முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு கேட்டாள் பிருந்தா.

    பிட்டி கேர்ள்... வந்ததும் வராததுமா என் காலைத் தானா நீ பிடிக்கணும்? எனக்கு நான் இன்னும் சிட்னியிலேயே இருக்குற ஞாபகம்

    ஓ... அங்க ஆத்துக்குள்ளேயே ஷூ போட்டுண்டு நடப்பேளா...?

    அது ஷூ கிடையாது. இன் அவுஸ் கான்வாஸ்...

    அப்படின்னா...?

    போகட்டும்... வேர் ஈஸ் அத்தை... அத்திம்பேர்?

    ஓ... அம்மாவா? அம்மா செங்கமலப் பாட்டிய பார்க்க போயிருக்கா. அப்பா இப்பத்தான் கோயிலுக்குப் போனார்...

    ஆமா... போன் பண்ணா யாரும் எடுக்க மாட்டீங்களா?

    பண்ணேளா?

    சுத்தம்... நான் ரயிலை விட்டு இறங்கினதுல இருந்தே போன் பண்ணிக்கிட்டு இருக்கேன்...

    சாரி... சைலண்ட் மோட்ல இருக்கும் என்று சமாளித்த பிருந்தா முன் அவனே கழட்டிய ஷூக்களை வாசலுக்கு போய் வைத்துவிட்டு வந்தான்.

    அத்தான் காபி போடட்டுமா... சாப்பிடுவேள்தானே...? என்று உபசரிப்பை தொடங்கினாள் பிருந்தா...

    என்னடி கேள்வி... போய் முதல்ல காபி போடுடி... என்று தேவியும் தூண்டினாள்.

    ஆமாம்... நீ யாரு, சொல்லவேயில்லையே?

    நான்... நான்... பிருந்தாவோட தோழி தேவி, பக்கத்து அகம்

    என் ஃப்ரெண்ட் தான்... என்று பிருந்தாவும் வழி மொழிந்தாள்.

    நைஸ்... நீ பார்க்க க்யூட்டா அழகா இருக்கே... அவினாஷ், தேவியை எதார்த்தமாக ‘அழகா இருக்கே' என்று சொன்ன நொடி பிருந்தாவின் முகத்தில் குத்து விழுந்தது போல் ஒரு அதிர்வு. தேவிக்கோ ஜில்லென்று வானில் பறப்பது போல் இருந்தது.

    தேங்க்யூ... தேங்க்யூ வெரிமச்... நான் M.Sc வரை படிச்சிருக்கேன். பிருந்தாவையும் படிக்க கூப்பிட்டேன். ஆனா உங்க அத்திம்பேர் அவளுக்கு ப்ளஸ்டூவே போறும்னு தடுத்துட்டார். தேவி இதுதான் சாக்கு என்று தன்னைப்பற்றி வாசிக்கவும் பிருந்தாவுக்கு அதிர்ச்சி படபடப்புக்கு மாற்றிக் கொண்டது.

    போதுண்டி உன் M.Sc., புராணம். நீ போய் கொஞ்சம் எங்கம்மாவைக் கூப்பிடு. எனக்கு இங்க அத்தான் கூட நிறைய வேலை இருக்கு. என்று அவளை கத்தரிக்க முனைந்தாள். தேவிக்கு அது புரிந்தது. ஒரு மாதிரி வெறித்துப் பார்த்தவளை போடிஈஈ... என்று இழுத்து ஆலோபித்தாள்.

    தேவியும் அரைமனதாய் விலகத் தொடங்கினாள்! அவினாஷம் உடை மாற்ற ஆயத்தமானான். அதற்காக அவன் சட்டை பனியனைக் கழற்றவும். புசு புசு வென்று நிறைய முடிகளோடு அவன் மார்புப்புறம் தெரிந்த்து. அது பிருந்தாவை வைத்த கண் எடுக்கவிடவில்லை.

    என்ன பிருந்தா அப்படி பாக்குறே?

    எவ்ளோ முடி?

    அப்படியா... இட்ஸ் கொயட் நேச்சர்...

    என்ன நேச்சரோ... இங்க நான் கரிசலாங்கண்ணி தைலமா தேய்ச்சு குளிக்கிறேன். பூனை வால் மாதிரி ஒரு முழத்துக்கு மேல் வளரமாட்டேங்கிறது.

    நோ ப்ராப்ளம்... இந்த நீளமான கூந்தல், அதுல பின்னல்ங்கறது எல்லாம் ஒல்ட் ட்ரெடிஷன். இப்பல்லாம் பாப்கட் தான் ஆப்ட்! ஆஸ்திரேலியாவுல கிராப்பும் பாப்பும்தான் இப்போதைய ட்ரெண்ட்...

    அப்ப நான் அங்க வந்தாலும் பாப்கட் பண்ணிக்கணுமா? பிருந்தா உற்சாகமாய் கேட்டாள். அந்த நொடி அவளை சற்று ஆழ்ந்து நோக்கியவன் அதை நீ வரும் போது பார்த்துப்போம் என்றான் கண்களை சிமிட்டியபடி... அவன் பதிலில் ‘நீ வராமல் போகக்கூட வாய்ப்புள்ளது' என்பது போன்ற தொனி!

    பிருந்தாவுக்கு இம்முறை நெஞ்சில் குத்து விழுந்தாற் போல் இருந்தது!

    வயற் காட்டுக்குள் ஒரு மையத்தில் இருந்தது அந்த சிறிய கோயில். பழங்காலக் கோயில் - ராஜகாளிகாம்பாள் சன்னதி! குறுக்கு வழியில் வருபவர்கள் யாராக இருந்தாலும் வரப்பில் தான் நடந்தாக வேண்டும். மடிசார் அணிந்திருந்த நிலையில் விசாலமும், கூடவே செங்கமலப்பாட்டியும் அந்த வரப்பில் நடந்தபடி இருந்தனர். கோயிலுக்குள் பூஜை நடப்பதற்கு அறிகுறியாக மணி சப்தம் ஒலித்துக் கொண்டிருந்தது.

    செங்கமலப்பாட்டிக்கு 70 வயசாகிறது. இருந்தும் நல்ல திடகாத்திரத்துடன் மைக்கேல் மதன காமராஜன் என்கிற கமல்ஹாசன் படத்தில் வரும் ஒரு லொள்ளுப்பாட்டி கணக்காய் இருந்தாள். இளம் பெண்போல் நடந்தாள். நடக்கும் சமயம் வரப்பின் ஊடே நல்ல பாம்பு ஒன்று கடந்து போயிற்று. அப்போது நின்று பயமின்றி அதைப் பார்த்து போய்த் தொலை... எதுக்கு இந்த அன்ன நடை... என்று ஒரு பெண்ணைப் பார்த்து பேசுவது போலவே பேசினாள். பின் தொடர்ந்து வந்த விசாலம் மாமிக்கு எல்லாமே வியப்பாக இருந்தது.

    பாட்டி உங்களுக்கு, ஆனாலும் தைரியம்... என்றாள்.

    என்கிட்ட இருக்கிற ஒரே செல்வம்டி அது... என்றாள் பாட்டியும் பதிலுக்கு...

    ஆமா... இப்படி அந்த ஜோசியரைத் தேடி வரோமே அவர் கோயில்ல இருப்பார் தானே?

    இருக்காம எங்க போய்டப்போறார்? அதுலையும் கொஞ்ச நாளா அவருக்கு யானைக்கால் வியாதி வேற... அதனால உக்காந்த இடத்த விட்டு எங்கேயும் போறது கிடையாது...

    அவரைப் பார்க்க இப்ப வடநாட்ல இருந்தெல்லாம் கூட வர்றதா சொன்னேளே...

    வடநாட்டுல மட்டுமா... லோகம்பூரா இருந்து வரா... டில்லில இருந்து ஒரு மந்திரி வந்து பார்த்துட்டு போயிருக்கார்... நடந்தபடியே இருவரும் பேசிக்கொண்டனர். இருபுறமும் தழைத்துக்கிடக்கும் மணச்சநல்லூர் சம்பா நெல் ரகம்... ஆங்காங்கே கொக்குக் கூட்டம் கண்களுக்கு திவ்யமாக நண்டு வேட்டையில் இருந்தது.

    சீரான வேகத்தில் சில்லென்ற காற்று! இந்த தடவை நல்ல வெள்ளாமை போல இருக்கு... என்று சொன்னபோது கோயில் வந்துவிட்டது. கோயிலுக்கு வெளியே ஏராளமான செருப்புகள். அதுவே உள்ளிருக்கும் கூட்டத்தை உணர்த்திவிட்டது. இருந்தும் செங்கமலப்பாட்டி கோயில் குருக்களுக்கு உறவு முறை என்பதால் தாண்டி உள்செல்ல முடிந்தது.

    சிகப்புப் பட்டுப்புடவையில் ராஜகாளிகாம்பாவும் மகா திவ்யமாய் காட்சி தந்தாள். கற்பூர ஆரத்திக் காட்டி விசாலம் வசம் குங்குமம் தந்தவர், செங்கமலத்துக்கு எலுமிச்சம் பழத்தை தந்தார்.

    சன்னதிக்கு வலது பக்கத்தில் சிறிதாய் ஒரு கல்மண்டபம். அதில்தான் ஜோசியர் நாற்காலி ஒன்றில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஜாதகங்களைப் பார்த்தபடி இருந்தார். அவர் முன்னால் ஒரு ஐம்பது பேர் வரை இருந்தனர்.

    எல்லோர் முகங்களிலும் ஒரு இனம் புரியாத தவிப்பு. செங்கமலம் அந்த கூட்டத்தைக் குடைந்து கொண்டு அவர் முன்னால் போய் நின்றாள். அவரும் ஏறிட்டார்.

    அடடே அய்யர் வீட்டம்மாவா?

    ஆமா... செத்த எனக்கு ஒரு ஜாதகம் பார்த்து அனுப்பியிருங்களேன்...

    கொஞ்சம் பொறுங்க. போய் சன்னதில ஆத்தாள பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருங்க. இவங்களை அனுப்பிட்டு கூப்பிடுறேன்.

    கொஞ்சம் அவசரம்னேனே...

    உங்க விஷயத்துல நான் அவசரப்பட விரும்பல. நீங்க வயல் வரப்புல கால் வைக்கும் போதே இங்க கவுளி சொல்லிடிச்சு. கவனமா பார்க்க வேண்டிய ஜாதகம் உங்க ஜாதகம்.

    எனக்கில்லை... இதோ இவ பொண்ணுக்கு

    நானும் அதைத்தான் சொன்னேன்...

    அதன் பின் செங்கமலமும் விசாலமும் சன்னதிக்கே திரும்பினர். காளி கம்பீரமாய் அவளை பார்த்தாள். விசாலத்துக்கு அவளை பார்க்கவும் பாரதியார் ஞாபகம் வந்தது. காளியோடு பாரதி பேசுவானாமே....? சண்டையெல்லாம் போடுவானாமே...?

    வல்லமை தாராயோ, இந்த வையகம் பயனுற வாழ்வதற்கே... சொல்லடி சிவசக்தி. எனை சுடர்மிகு அறிவுடன் ஏன் படைத்தாய்? அவன் பாடல்கள் ஞாபகம் வந்தது. ஆனாலும் காளி அவனை பெரிதாக வாழ்விக்க வில்லை. அற்ப வயதில் செத்துப்போனான்... அதுவும் மிக அநியாயமாக யானை மிதித்து.

    இவள் பால் பக்தி கொண்ட ஒருவனை இவளால் பாதுகாக்க முடியவில்லை? அவன் பாடல்களை வைத்துக் கொண்டு ஒரு பெரும் கூட்டமே இப்போது பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறது... கலியுகத்தில் நல்லதற்கே காலம் கிடையாது. என்பது தான் மெய்யோ?, விசாலம் காளியைப் பார்த்து சிந்தித்தபடியே இருந்தாள். மெல்லிய இருட்டு... சன்னதி தீப வெளிச்சம்... ஒருவித மந்தமான சூழல். புறத்திலிருந்து ஜோசியரின் குரலிலும் அதில் அவர் சொல்லும் பலா பலன்களும் காதில் விழுந்தபடி இருந்தன.

    ஒருவர் ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே திருப்பி மடக்கி தந்தவராக உனக்கெல்லாம் ஜோசியம் சொல்ல முடியாது. நம்பிக்கையில்லாமல் எதுக்கு இங்கு வந்தே? இடத்தை காலிபண்ணு... என்று சொல்வது காதில் விழுந்தது.

    அவர் செயல் பயத்தைக் கூட தந்தது.

    விசாலம் கைவசம் பிருந்தா ஜாதகம்.

    பிருந்தாவின் பிறப்பும் மறக்க முடியாதபடி ஒரு பிறப்பு. நல்ல சூரிய கிரகணத்தின் போது கால் வெளிவரப் பிறந்தவள்! அன்று செவ்வாய்க்கிழமை கேட்டை நட்சத்திரம் வேறு. கிரகணத்தின்போது பிறந்த பெண் - விசேஷ சக்தியும் உண்டு, துவேஷ சக்தியும் உண்டு என்று ஆளுக்கு ஆள் ஏதேதோ சொன்னார்கள். அதன்பின் அவள் பிறப்பு பற்றி யாரிடமும் பேசுவதில்லை என்றாகிவிட்டது.

    ஆனால் இப்போது பேசியாகணும். முறைப்பையன் வரவிருக்கிறான். அவனுக்கு திருமணம் செய்து தந்து உறவை தொடர்வது ஒருபுறம். அவன் பிருந்தாவை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும்... இப்படி எவ்வளவோ எண்ண ஓட்டங்கள்!

    அந்த எண்ணங்களின் ஓட்டத்தோடு காளியையே பார்த்த படி அமர்ந்திருக்க குருக்கள் நடுநடுவே மற்றவர்களுக்காக ஆரத்தி காட்டும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

    ஒரு வழியாக எல்லாரும் விலகிவிட்ட நிலையில் விசாலத்துக்கு அழைப்பு வந்தது. அவளும் ஒடினாள். ஜாதகத்தை அவர் முன் நீட்டினாள். அவரும் எதிரில் உட்காரச் சொன்னார். பின் தலைக்குமேல் எரியும் ட்யூப்லைட் வெளிச்சத்தில் கண்கள் இடுங்க ஜாதகத்தைப் பார்க்க தொடங்கினார்.

    பொண்ணு ராஜாத்தியா இருப்பா... கிரகணத்தின்போது பொறந்துட்டதுதான் செத்த நெருடல்... என்ற அவர் ஜாதகம் பார்க்கும் போது செங்கமலப்பாட்டி மெல்லிய பின் பாட்டுபாட ஜோதிடரும் ஜாதகத்தை மூடினார். பின் ஒரு பெரு மூச்சு விட்டார். விசாலத்துக்கு பக் பக்கென்றது! ஜோதிடரும் அவரை உற்றுப் பார்த்தார்.

    என்ன பார்க்கிறேள்.

    நான் சொல்றபடி செய்வியா?

    என்ன செய்யணும். ஜாதகம் என்ன சொல்றது?

    இப்ப நடக்கிற காலகட்டம் சரியில்லை. உங்க பொண்ணு வீட்டை விட்டே வெளியே போகாம இருக்குறது நல்லது. ரொம்ப நல்லது.

    Enjoying the preview?
    Page 1 of 1