Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kai Niraiya Vairam
Kai Niraiya Vairam
Kai Niraiya Vairam
Ebook80 pages50 minutes

Kai Niraiya Vairam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பம்பாய் சேட்டிடமிருந்து அவரின் பரம்பரை வைரங்களான (பதினேழு வைரக்கற்கள்) கொள்ளையடிக்கப்படுகிறது. இவை சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்வதாக தகவல் போலீஸாருக்கு கிடைக்கவே, கடத்தலில் ஈடுபட்ட ராபர்ட் (ம) விஸ்வம் இருவரையும் போலீஸார் கைது செய்கின்றனர். ஆனால் வைரம் இவர்களிடம் இல்லை என்பதே உண்மை. இந்த வைரம், கண்ணன்-சுபத்ரா தம்பதியின் கையில் எப்படி வந்தது? இந்த கதையில் வரும் வைரத்தின் மகிமையைப் பற்றி தெரிந்துக்கொள்ள வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580100709117
Kai Niraiya Vairam

Read more from Indira Soundarajan

Related to Kai Niraiya Vairam

Related ebooks

Related categories

Reviews for Kai Niraiya Vairam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kai Niraiya Vairam - Indira Soundarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கை நிறைய வைரம்

    (வைரத்தின் மகிமை)

    Kai Niraiya Vairam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ‘வைரங்களிலேயே பீங்கள வைரம்தான் அபூர்வமானது! இதன் பூர்வீகம் சீனம். இதை அணிந்தவர்களைக் கன்னிப் பெண்கள் கால்கடுக்கச் சுற்றி வந்து காதலிப்பார்கள். இளமையை ஈர்ப்பதில் இதன் கதிர்களுக்கு அலாதி சக்தி...’

    வைர மாலிகா

    டெலிபோன் சிணுங்கியது.

    ரிசீவரை கையிலெடுத்தார் இன்ஸ்பெக்டர் ருத்ரா!

    போலீஸ் ஸ்டேஷனா?

    பின்ன என்ன காயலாங்கடையா, யாருய்யா பேசறது?

    "யாரு பேசறதுங்கறது அப்புறம்; விஷயம்தான் முக்கியம்! ஏறத்தாழ அஞ்சுகோடி பெறுமானமுள்ள ‘பதினேழு வைரக்கற்கள்’ இப்ப சேலம் வழியா கடத்தப்பட்டுகிட்டிருக்கு.

    உங்க டிபார்ட்மெண்ட்டுக்கு நல்லா பரிச்சயமான ராபர்ட்டோட குரூப்தான் காரியத்துல ஈடுபட்டிருக்கு.

    இந்த போன் காலை நீங்க ரிசீவ் பண்ணிகிட்டிருக்கிற இந்த வினாடியில், அவங்களோட ஜீப் அயோத்தியா பட்டணம் தாண்டி சேலத்துக்குள்ள நுழைஞ்சிருக்கும். ஜீப் நம்பர் TN-07-V. 1008.

    மத்ததெல்லாம் உங்க சாமர்த்தியம்.

    விஷயத்துல மைக்ரான் அளவுகூட பொய் கிடையாது.

    அவ்வளவும் பம்பாய்ல ஒரு சேட்கிட்ட திருட்டுப்போன வைரங்கள்; சேட் ஒரு மத்திய மந்திரியோட ரிலேஷன்!

    வடக்கு இந்த கேஸ் ரொம்ப சீரியஸ் கேஸ். இங்க எப்படிங்கறது போகப்போகத் தெரியும்.

    டெலிபோன் முடங்கிக்கொண்டது. ருத்ரா இலேசாக வியர்த்து விட்டிருந்தார். மணிகட்டைப் பார்த்து கொஞ்சம் படபடத்தார் கிரைம். பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அந்த நேரம் பார்த்து மஃப்டியில் ஸ்டேஷனுக்குள் நுழையவும் விழிகளை தீர்க்கமாக வெறித்தார்.

    என்ன ருத்ரா... ஏன் அப்படி பாக்கறே?

    ஒரு சீரியஸான விஷயம் சந்திரசேகர்! ஒரு அநாமதேய போன் கால் ஒரு வைரக் கடத்தலைப் பற்றி சொல்லி இப்பத்தான் முடங்கிச்சு.

    கடத்தல் வைரம் இந்நேரம் அம்மாபேட்டை காலனி வரை வந்திருக்கும்

    என்ன சொல்றே ருத்ரா?

    பேச நேரமில்லை… வா போய்கிட்டே பேசுவோம் என்று சப்இன்ஸ்பெக்டர் பிரசாத்தையும் அள்ளி ஜீப்பில் ஜீப்பில் போட்டுக்கொண்டு ஜீப்பை நிமிண்டவும் அது வலியோடு எகிறியது.

    தார்ச்சாலை மையத்து வெள்ளைக் கோடுகள் மின்னல் வேகத்தில் விழுங்கிச் சீறியது.

    என்ன ருத்ரா என்ன விஷயம்?

    ராபர்ட் குரூப் அஞ்சு கோடி வைரக் கடத்தல்ல ஈடுபட்டிருக்காங்களாம். அவ்வளவும் திருட்டு வைரம் சேலம் வழியா கிராஸ் ஆகிகிட்டிருக்கு

    எதுல கடத்தறாங்க?

    ஜீப்புல; நம்பர் TN-07-V. 1008. ஐ திங்க் சென்னைல இருந்து சேலம் வழியா கோயம்புத்தூர் போய்கிட்டிருக்கணும். இல்லைன்னா ஈரோடு மதுரைன்னு எங்காவது போய்கிட்டிருக்கணும்.

    ருத்ராவின் விளக்கம் மூவரையும் குண்டூசி முனையாக்கியது.

    பார்வையில் பருந்து புகுந்தது. பாதை வாகனங்கள் ஒவ்வொன்றும் சல்லடையாக சலிக்கப்பட எங்கே அந்த TN-07-V. 1008.

    TN-07-V. 1008. திணறிக் கொண்டிருந்தது.

    என்னடா ஆச்சு? பின்பக்கமாய் அமர்ந்திருந்த ராபர்ட் டிரைவிங் சீட்டிலிருக்கும் விஸ்வத்தை பார்த்து கடூரமாக் கேட்டான்.

    ஏர்லாக்... பிராப்ளம் ராபர்ட் என்ன செய்யலாம்?

    உம்... இந்த ஜீப்பை கொளுத்தி தீ வைக்கலாம். ராபர்ட் சலித்து முடித்த சமயம் ஜீப் ஓரமாக ஒரு புளியமர நிழலில் அப்பாடா என்று புகுந்து நிற்க பந்தைப் போல் எகிறிக் குதித்தான் ராபர்ட்.

    சரி, சரி... நீயும் இறங்கு, போற வர பஸ்களை கைய காட்டு. எதுல இடம் கிடைச்சாலும் ஏறி இன்னும் ஐந்து மணி நேரத்துல மதுரை போயாகணும்.

    வண்டி?

    "பொல்லாத வண்டி. திருட்டு ஜீப்தானே? சொந்தக்காரன் வந்து தானா

    Enjoying the preview?
    Page 1 of 1