Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalikka Neramillai Uruvana Kathai
Kaadhalikka Neramillai Uruvana Kathai
Kaadhalikka Neramillai Uruvana Kathai
Ebook195 pages1 hour

Kaadhalikka Neramillai Uruvana Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லவத்திற்குமே ஒரு காரண காரியம் இருக்கும். ஆங்கில நாளிதழின் பணிகளில் ஈடுபட்டு, பிரஷர் குக்கரின் உள்ளே இருந்த நான், அவ்வப்போது தமிழில் புதினங்களை எழுதி, எனது பிரஷரை ரிலீஸ் செய்வேன். இதுவரை பதினைந்து நாவல்களை எழுதி இருக்கிறேன். எனது புதினங்களை வானதி பதிப்பகம், தி ஹிந்து பதிப்பகம், ஸ்ரீ பதிப்பகம் ஆகியவை வெளியிட்டிருப்பினும், புஸ்தகாவில் இப்போதுதான் நான் காலடி எடுத்து வைக்கிறேன்.

கொரோனா கோர தாண்டவமாடி அனைவரையும் வீடு சிறையில் வைக்க, பொழுது போகாமல், முகநூல்களில் முக்கியமான கொலை வழக்குகளை பற்றி எழுதி வந்தேன். அப்போது ஒரு முகநூல் நண்பர், கொரோனா சமயத்தில் கொலைக்கதைகள் எதற்கு ? உங்கள் அப்பாவை போன்று நகைச்சுவை விஷயங்களை எழுதுங்களேன். குறிப்பாக காதலிக்க நேரமில்லை உருவான கதையை பற்றி கூறுங்களேன். பொழுது போகும் '' என்று லட்சுமி நாராயணன் என்பவர் வேண்டியிருந்தார். விளையாட்டாகத்தான் காதலிக்க நேரமில்லை உருவான கதையை எழுத துவங்கினீன். அது பெரும் ஆதரவும், வரவேற்றும் பெற்று, இன்று புஸ்தகாவில் இடம் பெற்று விட்டது.

காதலிக்க நேரமில்லை உருவான விதம், காரணம், அனைத்தையுமே, நகைச்சுவை மற்றும் ஸ்வாரஸ்ய சம்பவங்களாக விவரித்திருக்கிறேன். எனது தந்தை இந்த படத்தின் வசனகர்த்தா சித்ராலயா கோபு அவர்கள், எனது பால்யத்திலிருந்தே எனக்கு விவரித்த சம்பவங்கள், இயக்குனர் ஸ்ரீதர், சி வி ராஜேந்திரன், காஞ்சனா, முத்துராமன், நாகேஷ், ராஜஸ்ரீ, சச்சு ஆகியோருடன் பேசும் பொது அவர்கள் தெரிவித்த சுவையான சம்பவங்கள், அனைத்தையும் திரட்டி காதலிக்க நேரமில்லை உருவான கதையை கூறியிருக்கிறேன்.

ஒரு மாலை பொழுதில் பீச்சுக்கு காற்று வாங்க சென்ற ஸ்ரீதரும்-கோபுவும் எப்படி ஒரு காலத்தால் அழிக்கமுடியாத காவியத்தை உருவாக்கினார்கள்.- என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதினேன்.

கொரோனா, பொருளாதார சீர்குலைவு போன்ற பிரச்சனைகளை மறந்து சற்று நேரம் சிரிக்க, ரசிக்க, உதவும், இந்த கதை.

இதனை இ- புத்தகமாக வெளியிடும் புஸ்தகாவுக்கு எனது நன்றிகள்.

- காலச்சக்கரம் நரசிம்மா

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580132105325
Kaadhalikka Neramillai Uruvana Kathai

Read more from Kalachakram Narasimha

Related to Kaadhalikka Neramillai Uruvana Kathai

Related ebooks

Reviews for Kaadhalikka Neramillai Uruvana Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalikka Neramillai Uruvana Kathai - Kalachakram Narasimha

    http://www.pustaka.co.in

    காதலிக்க நேரமில்லை

    உருவான கதை

    Kaadhalikka Neramillai

    Uruvana Kathai

    Author:

    காலச்சக்கரம் நரசிம்மா

    Kalachakram Narasimha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kalachakram-narasimha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 1

    வீனஸ் பட நிறுவனத்தாருடன் கல்யாண பரிசு படத்தை இயக்கி, பிறகு அவர்களிடம் இருந்து பிரிந்து அவர்கள் அலுவலகத்தின் மாடியிலேயே ‘சித்ராலயா’ என்கிற நிறுவனத்தை நிறுவியிருந்தார், ஸ்ரீதர். நண்பர் கோபு, வின்சென்ட், திருச்சி அருணாச்சலம், சி வி ராஜேந்திரன், ஆகியோர் செயல் பங்குதாரர்களாக திகழ்ந்தனர். சித்ராலயா நிறுவனத்தின் சின்னம் தோணி. ஒரு தோணியை கட்டுமஸ்தான ஒரு வாலிபன் செலுத்த, அவன் முன்பாக ஒரு பெண் அமர்ந்து கொண்டிருப்பதை போன்று அமைக்கப்பட்டிருந்தது, சித்ராலயாவின் மாஸ்காட்!

    'அலைக்கடலில் ஒரு தோணி

    திரைப்படங்களில் தனி பாணி’

    என்று கம்பீர குரல் பின்னணியாக ஒலிக்க, புறப்பட்டிருந்த அந்த சித்ராலயா தோணி, ஏற்கனவே தேனிலவு மற்றும் நெஞ்சில் ஒரு ஆலயம் என்கிற இரண்டு வெற்றி படங்களை அளித்திருந்து, அடுத்தது என்ன என்கிற ஆர்வத்தினை உண்டு பண்ணியிருந்த நேரம்.

    கல்யாண பரிசு, போலீஸ்காரன் மகள், நெஞ்சில் ஒரு ஆலயம் என்று சோகங்களை பிழிந்து தந்திருந்த ஸ்ரீதர், மனதில் பல சோக கதைகளை அசை போட்டபடி, தனது பால்ய நண்பன் கோபு வசிக்கும் திருவல்லிகேணிக்கு தனது ஹெரால்ட் காரில் பயணித்தார்.

    செங்கல்பட்டு நாலாம் கிளாசில் இருந்து ஒன்றாக படித்து, ஒன்றாகவே நாடகம் போட்டு ஒன்றாகவே பிரம்படி எல்லாம் வாங்கியிருந்ததால், திரைப்படத்திலும் ஒன்றாகவே பயணித்துக் கொண்டிருந்தனர், இருவரும்.

    பாரதியார் வாழ்ந்த திருவல்லிக்கேணியில் வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் இருந்தது கோபுவின் மாமியார் வீடு. மாமியார் வீட்டின் மாடியிலேயே ஒரு போர்ஷனை வாடகைக்கு எடுத்து குடியிருந்தார் கோபு. மொட்டைமாடியில் ஏறினால் சிலுசிலு என்று பீச் காற்று வீசும். ஸ்ரீதருக்கு அந்த மொட்டைமாடி மிகவும் பிடிக்கும்.

    கோபுவை தேடி ஸ்ரீதர் அன்றாடம் திருவல்லிக்கேணி வருவது அக்கம்பக்கம் பெண்களுக்கு தெரிய வர, தினசரி இரண்டு பெண்களாவது வாயில் புடவை தலைப்பை வைத்து கொண்டு நெஞ்சில் ஒரு ஆலயம் கல்யாணகுமார் மறைவுக்கு துக்கம் கேட்டு விட்டு போவார்கள்.

    என்ன இருந்தாலும், நீங்கள் டாக்டரை சாக விட்டிருக்க கூடாது! என்று ஸ்ரீதரிடம் கூறினார்கள்.

    அந்த செத்துபோன டாக்டரோட சொத்தை வச்சுதான், அடுத்த படத்தை எடுக்க போறோம். அதனாலதான் அவரை சாக அடிச்சோம்! என்று கோபு தனது பாணியிலேயே பதில் கொடுக்க, அந்த பெண்கள் உண்மையாகவா என்பது போல விழிப்பார்கள். அவர்கள் ஸ்ரீதரிடம் கடைசியாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள்.

    உங்க பாணி வித்தியாசமா இருக்கு. இதே மாதிரி குடும்பபாங்கா, உணர்ச்சிபூர்வமான படங்களை கொடுங்கோ... என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஸ்ரீதரும், கோபுவும் காபி குடித்துவிட்டு, காந்தி பீச்சுக்கு புறப்பட்டார்கள். அன்றாடம், அவர்கள் இருவரும் சந்திக்கும் இடம் அதுதான். அங்கே அமர்ந்து அடுத்த படத்தை பற்றி ஆலோசனை செய்வார்கள்.

    பீச்சுக்கு சென்று காரை காந்தி சிலை பின்பாக நிறுத்திவிட்டு அந்த சிவப்பு ஹெரால்ட் காரின் பானட்டின் மீது அமர்ந்தபடி இருவரும் பேசத்துவங்கினர்.

    ஸ்ரீதர் ஒரு சோக காதல் கதையை கூற ஆரம்பித்தார். ஏறக்குறைய நெஞ்சிருக்கும் வரை கதைதான்.

    இன்னும் எத்தனை நாளைக்கு லேடீஸ்ச அழ வைக்க போறே, ஸ்ரீ? இந்த தடவை, நாம ஏன் ஒரு காமெடி படம் எடுக்கக்கூடாது? - கோபு கேட்க, ஸ்ரீதர் அதிர்ந்தார்.

    என்னடா பேசறே? போலீஸ்காரன் மகள், புனர் ஜென்மம், கல்யாண பரிசு, நெஞ்சில் ஒரு ஆலயம் மாதிரி சீரியஸ் சப்ஜெக்ட் கொடுத்தவனை போய் காமடி படம் எடுக்க சொல்றே. தேனிலவு ஒண்ணு செஞ்சோம். அது ஒண்ணும் நமக்கு பெரிய பெயரை கொடுக்கலை. என்றார் ஸ்ரீதர்.

    எல்லாமே ஒரு எக்ஸ்பிரிமெண்ட்தானே ஸ்ரீ! அப்படி பார்த்தா நெஞ்சில் ஒரு ஆலயத்திற்கு நாம கதை சொல்லி பேசினது ஜெமினி சாவித்திரி தானே. அவங்க டேட்ஸ் கிடைக்கலைனுதானே வடிவேல் மாஸ்டர் ட்ராமாவுல நடிச்ச முத்துராமனை புக் பண்ணினோம். கல்யாணகுமாரை தமிழ்நாட்டுல யாருக்கு தெரியும்? இன்னைக்கு நெஞ்சில் ஒரு ஆலயம் ஹிட். சும்மா ஒரு சேஞ்சுக்கு காமடி படம் எடுக்கலாம்... என்று வேப்பிலை அடிக்க தொடங்கினார் கோபு

    ஸ்ரீதர் பிடி கொடுக்கவேயில்லை.

    என்கிட்டே எல்லாரும் செண்டிமெண்ட்தான் எதிர்பார்ப்பாங்க. கொஞ்ச நேரம் முன்னாடி உங்க வீட்டுல, அந்த பெண்கள் என்ன சொன்னாங்க. நெஞ்சில் ஒரு ஆலயம் மாதிரியே ஒரு படம் கொடுங்கனு தானே சொன்னாங்க. நான் காமெடி எடுத்தா நல்லா இருக்காது... என்றார் கோபு.

    பிறகு கோபு வேப்பிலையை தூக்கி போட்டுவிட்டு ஸ்ரீதர் கூறிய சோக கதையை கேட்க ஆரம்பித்தார். ஒரு இடத்தில் ஸ்ரீதருக்கே சலிப்பு தட்டி விட்டது.

    வேண்டாம்டா கோபு! இந்த கதை வேண்டாம். வேற எதையாவது நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம். என்று புறப்பட எத்தனித்தார்.

    அதுக்குதான் சொல்றேன், ஸ்ரீ! கோபு புறப்பட்டவரை தடுத்து வேப்பிலைக்கு பதிலாக வேப்ப மரத்தால் அடித்தார்! இந்த தடவை காமெடி ட்ரை பண்ணுவோம். நீதான் ரொமான்ஸ் ல் கிங் ஆச்சே! ரோமன் ஹாலிடே மாதிரி எவெர்க்ரீன் ரொமான்ஸ் படம் ஒன்னு தமிழ்ல வந்ததே கிடையாது. கலர்ல சிலுசிலுனு ஒரு லவ் சப்ஜெக்ட் எடுத்தா பிரமாதமா இருக்கும்...." கோபு சொல்ல, ஒரு வழியாக வழிக்கு வந்தார் ஸ்ரீதர்.

    சரி! உன் ஆசையை கெடுப்பானேன். என்ற ஸ்ரீதர், மீண்டும் பானெட்டின் மீது ஏறி உட்கார்ந்தார். சிலுசிலுவென்று காற்று அடிக்க, ஸ்ரீதரும், கோபுவும் கதை ஒன்றை டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.

    திரைப்பட துறையை சேர்ந்த நால்வர் அரசியலில் சேர்ந்து தங்களது ஆளுமையால் உயர்ந்து, பிறகு மறைந்து மெரினாவில் வடகோடியில் புதைக்கப்பட்டு நினைவிடங்களை பெற்றார்கள்.

    ஆனால், எவ்வித ஆர்பாட்டமுமில்லாமல், திரைப்படத் துறைக்கு நிரந்தர நினைவாக திகழ போகும் ஒரு திரைப்படத்தின் கதையை மெரினாவில் தென்கோடியில் காந்தி சிலைக்கு பின்பாக உருவாக்கத் துவங்கினர், ஸ்ரீதரும், கோபுவும்

    அவர்கள் உருவாக்கிய அந்த கதை மக்கள் மனதில் இன்னமும் வாழ்ந்து வருகிறது. ஒரு காவியமாக

    *****

    அத்தியாயம் 2

    ஸ்ரீதரும், கோபுவும் கதை பேச துவங்கினார்கள்.

    ஒரு அக்கா தங்கை ரெண்டு பெரும் எங்கே போனாலும், ஒண்ணாவே போவாங்க, வருவாங்க! என்று துவங்கினார்,

    ரெண்டு பெரும் ஒரே ஆளை லவ் பண்றாங்களாக்கும்? - கோபு கிண்டலாக கேட்டார். ஸ்ரீதருக்கு எப்பவும் முக்கோணம் தானே பிடிக்கும்

    அதுதான் இல்லே.! இந்த கதையில முக்கோணமே கிடையாது! -- என்று சிரித்த ஸ்ரீதர், ரெண்டு பெரும் பெரிய எஸ்டேட் ஓனர் பெண்கள். லீவு விட்டதும், தங்களோட ஊருக்கு போறாங்க" ஸ்ரீதர் கூறினார்.

    அப்படினா, நாம ஊட்டி போறோமா? -- கோபு கேட்டார்.

    ஆமா! நீதானே சிலுசிலுனு கலர்லே ரோமன் ஹாலிடே மாதிரி படம் கேட்டே! அவங்க ஊருக்கு திரும்பி போறாங்க. அந்த எஸ்டேட்ல ஒரு பையன் ஏழை குடும்பத்து பையன். ஆனா ஷோக்கான ஆளு. அவனுக்கும் பெண்களுக்கும் மோதல் வருது. அவன் சின்ன பொண்ணை லவ் பண்றான். அந்த பெண்ணுக்கும், அவளோட அப்பாவுக்கும் அந்தஸ்து மோகம் அதிகமா இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு தன்னோட நண்பனை தன்னோட அப்பாவா வேஷம் போட்டுக்கிட்டு வரச்சொல்றான் அந்த நண்பன் ஏற்கனவே பெரிய பொண்ணோட காதலன். என்றார் ஸ்ரீதர்.

    பேசிக்கொண்டே வந்த ஸ்ரீதருக்கு இங்கே ஸ்பீட் பிரேக் போல கதை நின்று விட்டது.

    இங்கேருந்து எப்படி மூவ் பண்றது? சரி நாளைக்கு பேசுவோம்? என்று கூறிவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டார்கள்.

    விவேகானந்தர் இல்லம் எதிரே திடீரென்று கோபுவுக்கு ஒரு மின்னல் தோன்றியது.

    ஏன் ஸ்ரீதர்! அந்த வாலிபனுக்கு ஹெல்ப் செய்ய அப்பா வேஷம் போட்டுக்கிட்டு நண்பன் வர்றான். ஒரு வேளை, அந்த வேஷம் போட்ட நண்பனின் அப்பாவே, தனது நண்பனான அந்த பெண்களோட அப்பாவை பார்க்க வந்து, அவரை இவனுக்கு அறிமுகப்படுத்தி Confuse செஞ்சா எப்படி இருக்கும்? என்று கேட்க,

    Enjoying the preview?
    Page 1 of 1