Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vikrama... Vikrama... - Part 2
Vikrama... Vikrama... - Part 2
Vikrama... Vikrama... - Part 2
Ebook1,078 pages8 hours

Vikrama... Vikrama... - Part 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இந்த மாபெரும் நூலில் உள்ள விக்கிரமாதித்தன் கதை நாம் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான். காக்கையிடம் வடையை பெற நரி செய்த தந்திரம் பற்றி ஒரு கதை உண்டு. அனேகமாக இதை அறியாதவர்கள் இருக்க முடியாது.

அதற்கு பிறகு அனைவரும் அறிந்த அல்லது அறிய வேண்டிய ஒரு கதை விக்கிரமாதித்தன் கதை!

விக்கிரமாதித்தன் என்ற உடனேயே வேதாளம் நினைப்பும் நமக்கு வந்துவிடும். அன்று பள்ளி மாணவர்களாக இருந்து இன்று குடும்பஸ்தர்களாகிவிட்டவர்கள் நிச்சயம் விக்கிரமாதித்தன் பற்றியும் அவன் தம்பி பட்டி பற்றியும் அறிந்திருப்பார்கள்.

ஆனாலும் அவன்பற்றி மிக விரிவாகவும் அதே சமயம் வேதாளம் அவனுக்கு சொன்ன கதைகளை புதிய கோணத்திலும், உரிய முறையிலும் பார்த்து சில மாற்றங்களுடன் நான் இந்த விக்கிரமாதித்தன் கதையை வழங்கியுள்ளேன்.

அந்த நாளைய விக்கிரமாதித்தன் கதையோடு அவன் இன்று பிறந்திருந்தால் எப்படி இருக்கும் என்றும் சிந்தித்து அதன் போக்கிலும் ஒரு கதை இதில் சொல்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703080
Vikrama... Vikrama... - Part 2

Read more from Indira Soundarajan

Related to Vikrama... Vikrama... - Part 2

Related ebooks

Related categories

Reviews for Vikrama... Vikrama... - Part 2

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vikrama... Vikrama... - Part 2 - Indira Soundarajan

    www.pustaka.co.in

    விக்ரமா... விக்ரமா...

    பாகம் - 2

    Vikrama... Vikrama...

    Part 2

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For other books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    ஒரு முக்கியச் செய்தி!

    எட்டு காண்டங்களின் ரத்ன சுருக்கம்

    படிகள் பதினெட்டு

    உயிர்ப் பறவை!

    மாயங்கள்!

    மாயக்கன்னி!

    'ரகசியங்கள்'

    காண்டங்கள்

    மந்திரங்கள்

    தந்திரங்கள்

    விக்ரமா விக்ரமா

    பதினேழாம் அத்தியாயம்

    என்னுரை

    (வணக்கத்தோடு துவங்குகிறேன். முதல் பாகத்தை வாசித்து முடித்திருப்பீர்கள். இது இரண்டாம் பாகம் மட்டுமல்ல... இறுதிப் பாகமும் கூட...)

    பாக்கெட் நாவலில் வெளிவந்தபோதே இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஒரு தொடர்கதை போல ஒரு தொடர் நாவல் வரவேற்பைப் பெற்றது என்பது எனக்குத் தெரிந்து தமிழ் பத்திரிகை உலகில் நிகழ்ந்திருக்கும் ஒரு புதுமை என்றே கூறுவேன்.

    அதிலும் இன்றைய இதழ்களில் தொடர்கதைகள் கூட வழக்கொழிந்து வருகின்றன. கேட்டால் 'வாசகர்கள் இப்பொழுது வெகுவாக மாறிவிட்டார்கள்... பெரும்பாலோர் டி.விக்குத் தாவிவிட்டார்கள். எனவே பொறுமையாக யாரும் தொடர்கதைகள் படிப்பதில்லை’என்று ஒரு பதில் வருகிறது.

    நான் கூட அந்தப் பதிலில் உண்மை இருப்பதாக நம்பியிருந்தேன். ஆனால், இந்த விக்ரமனின் வெற்றி, அதில் உண்மையில்லை - கொடுக்கும் விதமாய் கொடுத்தால் எல்லா காலங்களிலும் படிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை எனக்குப் புரிய வைத்துள்ளது.

    இப்படி வெற்றிபெற கதையின் கருப்பொருளும் ஒரு காரணம். நம் இந்திய இலக்கியச் செல்வங்களில் ராமாயண மகாபாரத வரிசையில் விக்கிரமாதித்தன் கதைகளுக்கும் ஒரு தனி இடம் உண்டு. அப்படி ஒரு சாகாவரம் பெற்ற இலக்கியத்தில் ஹைடெக் சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்து இன்றைய காலத்திற்கேற்ப நான் எழுதியதே இந்த புதினம். சிலர் இதை பல்கலை கழகத்தில் பாடமாய் வைக்கலாம். இதில் அவ்வளவு கணம் உள்ளது என்றனர்.

    இதை ஒரு Fantasy ஆக, illusion ஆக எண்ணியவர்கள் கூட நாவலை வாசித்துவிட்டு நான் சொன்ன விதத்தைப் பார்த்து பாராட்டவே செய்தனர்.

    வெகு சுகமான ஒரு கற்பனை இது என்று கூறியவர்கள் பலர்.. இந்த கற்பனைப்படி விக்கிரமாதித்தன் இன்று பிறந்து வந்து இந்த நாட்டைச் சீர்திருத்தினால் உண்மையில் மகிழ்வோம் என்றவர்கள் பலர்.

    மொத்தத்தில் நல்ல தாக்கங்களை இது ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு அரிய பெரிய முயற்சியாகவும் என்வரையில் அமைந்துவிட்டது.

    நான் காலமாகிவிட்டாலும் என் எழுத்துக்கள் காலமாகாமல் காலத்தோடு கலந்து வாழ வேண்டும் என்று விரும்புகின்றவன் நான்.

    எனது எத்தனை எழுத்துக்கள் இப்படி காலத்தைக் கடந்து வாழும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த விக்கிரமா வாழும். இது நிச்சயம்.

    எனக்கு அது போதும்.

    இன்றைய தினத்தில் நான் எழுதிய நாவல்களிலேயே மிகப் பெரிய ஒரு நாவல் இது... திருமகள் பதிப்பகத்தார் வெகு சிறப்பாக வெளியிட்டுள்ளனர். இவ்வேளையில் அனைவருக்கும் என் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

    விக்கிரமாதித்தன் கதையைச் சொல்பவர்கள், கேட்பவர்கள், எழுதுபவர்கள், வெளியிடுபவர்கள், புத்தகமாய் வைத்திருப்பவர்கள் என்று எவராக இருந்தாலும் அவர்களுக்கு நல்ல காலமே என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அந்த நம்பிக்கை பலிக்கட்டும்.

    அன்புடன்

    இந்திரா சௌந்தர்ராஜன்

    முதல் காண்டத்தின் கதைச் சுருக்கம்

    ஒரு முக்கியச் செய்தி!

    'விக்கிரமாதித்தன் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்களும் கிடைக்க வேண்டும்’ என்று போஜராஜன் வேண்டிக் கேட்டுக்கொள்ள, விக்கிரமாதித்தன் கதையைச் சொன்ன 32 பதுமைகளும் 'அவ்வாறே ஆகட்டும்' என்று ஆசீர்வதித்தனவாம். அப்படியானால் இதை வாசிக்கும் உங்களுக்கும் எல்லா நலன்களும் இனி ஏற்படப் போகின்றன!

    எட்டு காண்டங்களின் ரத்ன சுருக்கம்

    பூர்வ ஜென்மம்: எல்லா வித சாஸ்திரங்களையும் வேதங்களையும் கரைத்துக் குடிக்க வேத பிராம்மணன் சந்திரவர்ணன் இறுதியாக மந்திர தந்திர சாஸ்திரத்தையம் வேதாளம் ஒன்றிடம் கற்க நேருகிறது.

    அதன்விளைவாக நால்வகை வருணத்தைச் சேர்ந்த பெண்களை மணக்கும் சந்திரவர்ணனுக்கு அரச குலத்தைச் சேர்ந்த சித்திரரேகை மூலம் பிறந்தவனே விக்கிரமாதித்தன். மற்ற மூன்று மனைவியர்களான பிராம்மணப் பெண்ணான கல்யாணி, வைசிய குலத்தை சேர்ந்தவளான கோமளாங்கி, மற்றும் தாசி குலத்தை சேர்ந்த அலங்காரவல்லி என்கிற முவருக்கும் வல்லபரிஷி, பட்டி, பர்த்ருஹரி என்று விக்கிரமாதித்தனுக்கு சகோதரர்கள் பிறக்கின்றனர்.

    இவர்களில் பர்த்ருஹரியும், வல்லபரிஷியும் சிறிது காலம் நாடாண்டு விட்டு கானகத்திற்குச் சென்றுவிட, பட்டி, விக்கிரமாதித்தனுக்குத் துணையாக நிற்க, விக்கிரமாதித்தன் நாடாளத் தொடங்குகிறான்.

    ஒரு சராசரி அரசனாக தான் திகழ்வதில் விருப்பமில்லாத விக்கிரமாதித்தன் பட்டியோடு சேர்ந்து சில விசித்திரமான செயல்களில் ஈடுபடுகிறான். அதில் ஒன்று ஆலவனம் ஒன்றில் உள்ள காளி மாதா முன் இருக்கும் ஏழு உறிகளை ஒரே வீச்சில் வெட்டிச் சாய்ப்பது என்பது... அதன் விளைவாக காளிமாதா விக்கிரமாதித்தன் எதிரில் தோன்றி நவநிதிகளை அவனுக்கு அள்ளித் தருகிறாள். விக்கிரமாதித்தனும் அதன் எதிரொலியாக உஜ்ஜயினியைத் தலைநகராக்கி ஒரு மாவேந்தன் ஆகிறான். அப்படியே இந்திரன் சபையில் ஊர்வசிக்கும் ரம்பைக்குமான நாட்டியப் போட்டியில் யார் சிறந்தவர்கள் என்பதைக் கண்டறிந்து இந்திரனின் பரிசாக நவரத்ன சிம்மாசனத்தைப் பெறுகிறான்.

    இந்த சிம்மாசனத்தைப் பரிசாகப் பெறுகின்றவர்கள் 1000 வருடங்கள் இந்த உலகை வெற்றிகரமாக ஆள்வார்கள் என்பது வரம்.

    அண்ணன் 1000 ஆண்டு வாழும்போது தம்பி என்ன செய்வது? பட்டி உடனே காளி மாதாவிடம் சென்று தன் சிரத்தைப் பலியாகக் கொடுக்க முனைந்து காளியிடம் இருந்து 2000 வருடம் வரை வாழும் வரம் பெறுகிறான்.

    விக்கிரமாதித்தனும் பட்டியோடு தானும் இணைந்து வாழ விரும்பி ரத்ன சிம்மாசனத்தில் ஆறுமாத காலமே அமர்ந்து ஆட்சி செய்வது என்று முடிவுக்கு வருகிறான். மீதி ஆறு மாத காலத்தை பட்டி ஆள, அப்போது விக்கிரமாதித்தன் காட்டிற்குச் சென்று விடுவான்.

    இப்படிச் செய்தால் விக்கிரமாதித்தனும் பட்டியுடன் சேர்ந்து 2000 ஆண்டுகள் வரை இந்த உலகினை ஆளலாம் அல்லவா?

    இந்நிலையில் ஞானசீலன் என்கிற கெட்ட சன்யாசிக்கு விக்கிரமாதித்தனின் உயிர் மேலும் அவனது ரத்ன சிம்மாசனத்தின் மீதும் ஒரு கண் விழுகிறது. அதை அடையும் நோக்குடன் விக்கிரமாதித்தனிடம் வருகிறான். இவன் ஏற்கெனவே 999 பேரை காளி மாதாவுக்குப் பலி கொடுத்திருப்பவன். இவனது 1000 - ஆவது பலிக்குரிய தலைதான் விக்கிரமாதித்தன். விக்கிரமாதித்தனின் தலையை வெட்டுமுன் அவனைக் கொண்டே வேதாளம் ஒன்றைக் கவர நினைக்கிறான்.

    இந்த வேதாளம் சர்வ வல்லமை உடையது. எஜமானன் இடும் கட்டளை எதுவாயினும் ஈடேற்றக் கூடியது. எனவே ஞானசீலனுக்கு வேதாளம் தேவைப்படுகிறது. வேதாளத்தை வசப்படுத்த விக்கிரமாதித்தனால் மட்டும்தான் முடியும் என்பது ஞானசீலன் எண்ணம்.

    விக்கிரமாதித்தனும் ஞானசீலனின் தவறான உள் நோக்கத்தை அறிந்திருப்பினும் ஒரு முனிவனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதை அரசனின் கடமை என்கிற அடிப்படையில் வேதாளத்தைக் கவர்ந்து வர மயானத்திற்கு செல்கிறான்.

    வேதாளமோ அவனுக்கு வசப்படாமல் புதிர்கள் நிரம்பிய கதைகளைக் கூறிக்கொண்டே இருக்கிறது.

    அது எப்பொழுது வசப்படும்? எப்படி வசப்படும்?

    புனர்ஜென்மம்: ரத்ன சிம்மாசனத்திற்கு மொத்தம் 32 படிகள். அதில் படிக்கு ஒரு பதுமை உள்ளது. அந்த பதுமைகள் அன்னை பார்வதியின் தோழிகள். ஒரு சாபத்தால் ரத்ன சிம்மாசனத்து பதுமைகள் ஆகிவிட்டன.

    அந்தப் பதுமைகள் உள்ள படியினை மிதித்து மேலே ஏறி அமர்ந்து ஆட்சி செய்ததன் காரணமாக விக்கிரமாதித்தனுக்கு ஒரு சாபம் ஏற்படுகிறது. அதன்படி அவன் வரிசையாக ஜென்மம் எடுத்து அந்த பதுமைகளை மணம் செய்து கொள்ளும்போதே அவனது சாபமும் நிவர்த்தியடையும். அந்த வகையில் விக்கிரமாதித்தனின் 32-வது பிறப்பு இப்பொழுது நிகழ்ந்துள்ளது. அவனை மணப்பதற்காக 32 - வது பதுமையான ஞானப்பிரகாசவல்லி பதுமையும் தீபா என்கிற பெயரில் இன்று பிறந்து ஒரு அபலையாக தன் மாமனாலேயே விபசாரத்தில் ஈடுபடுத்தப் பார்த்து விக்ரமனின் உதவியால் மீண்டும் இன்று அவனது பாதுகாப்பில் உள்ளாள்.

    அன்று விக்கிரமாதித்தனாக இருந்த நாளில் விக்கிரமாதித்தனின் தலையை 1000-ஆவது தலையாக கருதிய ஞானசீலன் இப்பொழுது நந்தன் பைராகியாக, அன்றைய வேதாளம் இன்று வேதாள் சிங்காக என்று அவர்களும் பிறவி எடுத்து வந்துள்ளனர்.

    விக்கிரமாதித்தனுக்கு அன்று மந்திரியாக விளங்கிய பட்டி தான் இன்று விக்ரமனின் நண்பனாக - சகோதரனாக உள்ள பட்டாபி - அன்று மயானத்தில் புலையனாக இருந்த கருப்பன் இன்று காளியப்ப சுவாமியாக மீண்டும் விக்கிரமாதித்தனாகிய விக்ரமனுக்கு உதவி செய்ய வந்து விட்டான்.

    இன்றைய விக்ரமன் வள்ளுவக்குடி என்னும் ஊரில் உள்ள நாடி ஜோதிடர். தில்லை நாயக வள்ளுவருக்கு கிடைத்த 32 ஏட்டுக்கட்டுகள் மூலம் தானே விக்கிரமாதித்தன் என்று அறிய வந்தும் நம்ப மறுக்கிறான்.

    பிறவி மாயை அவனை ஆட் கொண்டு விஞ்ஞான பூர்வமாகவே எதையும் பார்க்க வைக்கிறது. காலமும் விதியும் கைகோர்த்து நடந்ததில் விக்ரமனுக்கும் நந்தன் பைராகிக்கும் தொடர்பு ஏற்படுகிறது. நந்தன் பைராகி இன்று பின்லேடன், வீரப்பனுக்கு சமமாகத் தேடப்படும் ஒரு தீவிரவாதி. பலவித சதிச் செயல்களில் 999 பேரைக் கொன்றிருப்பவன். அவனது 1000-ஆவது டார்கெட் தான் விக்ரமன்.

    அதே சமயம் வேதாளமாகிய வேதாள் சிங்கும் நந்தன் பைராகிக்கு வசப்படாமல் ஒளிந்து கொண்டிருக்கிறான்.

    நந்தன் பைராகி, வேதாள் சிங் இவர்களின் தேடலுக்கு நடுவில், அதிசயப் பிறவியான விக்கிரமாதித்தனை பலரும் தேடியபடி உள்ளனர். பலரால் விக்ரமன்தான் விக்கிரமாதித்தன் என்பதையே நம்பவே முடியவில்லை.

    எப்படி இருப்பினும் விக்ரமன் ஒரு விஞ்ஞான அற்புதம். விக்ரமன் தான் விக்கிரமாதித்தன் என்பதற்கு ஒரே சாட்சி அந்த 32 கட்டு ஏடுகள்.... அவைகளை முதலில் தில்லை நாயக வள்ளுவர் தான் வைத்திருந்தார். ஆனால், அது களவாடப்படப் பார்த்ததால் அதை அவர் பாதுகாக்க முயலவும் அது விதி வசத்தால் காட்டில் உள்ள ஒரு காளிகோவில் ஆலமரத்துப் பொந்தில் பாம்பு ஒன்றின் காவலில் போய்ச் சேர்ந்து விட்டது..

    அது அங்கு இருப்பதை பத்திரிகை ஆசிரியர் தேவராஜன், அனாதை ஆஸ்ரமக் காப்பாளர் அண்ணா நாராயணன், தில்லை நாயக வள்ளுவர், அவரது மகன் இளைய வள்ளுவன், காளியப்ப சாமி, பட்டாபி என்று ஆறே ஆறுபேர்தான் அறிவார்கள்.

    அவ்வப்போது அந்த ஏட்டுக்கட்டை எடுத்து ஒவ்வொரு காண்டமாக அவர்கள் பார்த்து அதன்படி நடந்து முடிந்தபின் அடுத்தடுத்த காண்டங்களைப் பார்ப்பதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மிக ரகசியமாகவே இது நடந்து வருகிறது.

    விக்ரமனும் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல நந்தன் பைராகியிடம் வசப்பட்டு அவன் சொல்லும் வேலையை எல்லாம் செய்தவனாக இருக்கிறான்.

    விக்கிரமன் தன்னை உணருவானா...? அவனது சக்தி அவனுக்குத் தெரிய வருமா? அவனது பிறப்பு நோக்கம் என்ன...? இந்த 32-வது பிறப்பில் அவன் எதையெல்லாம் சாதிக்கப் போகிறான்? இந்த கேள்விகளுக்கு விடையைத் தேடி ஆலமரப் பொந்தில் உள்ள ஏட்டுக்கட்டுகளை எடுத்து அதில் எட்டாம் காண்டத்தையும், ஒன்பதாம் காண்டத்தையும் பார்த்த தில்லை நாயக வள்ளுவர் திகைத்துப் போகிறார்.

    அப்படி என்ன அந்த எட்டு, ஒன்பது காண்டங்களில் உள்ளது.

    ***

    படிகள் பதினெட்டு

    இனி...

    தில்லை நாயக வள்ளுவரின் முகம் போன விதம் பார்த்து அண்ணா நாராயணனும், தேவராஜனும் கூட குழம்பிப் போயினர். காளியப்பசாமி மட்டும் தனக்கே உரிய நிதானத்துடன் பொறுமையாக நடப்பதைக் கவனித்தபடி இருந்தார். ஆனால் பட்டாபி துடித்தான்.

    வள்ளுவரே... ஏழாம் காண்டத்தைப் படிச்ச மாதிரியே... எட்டு ஒன்பதையும் படியுங்கள். ஏன் அப்படியே நின்னுட்டீங்க?

    நிக்க வெச்சுடுச்சுங்க தம்பி... இந்த ஏடுங்க.

    என்ன சொல்றீங்க...? விபரமா சொல்லுங்க.

    எப்படிச் சொல்வேன்… நம்ம விக்ரமன் தம்பி அந்த தீபா பொண்ணைப் பார்த்த நொடி பூர்வ ஜென்ம ஞாபகமெல்லாம் அதுக்கு வந்துடும்...

    அதுதான் ஏழாம் காண்ட செய்தி. நீங்க எட்டு, ஒன்பதைப் படியுங்க. அதுதான் இப்ப முக்கியம்...

    விக்ரமன் தன் சக்தியை உணர்ந்தாலும் அந்த நந்தன் பைராகி பேச்சைக் கேட்கறது மட்டும் மாறவே மாறாதாம்...

    அப்புறம்?

    என்ன அப்புறம்... வள்ளுவரே நீங்க அந்த ஏட்டுக் கட்டுகளைப் படியுங்க. அந்த பாடல் எந்த அளவுக்கு நமக்குப் புரியுதுன்னுதான் பாத்துடுவோம்...

    - தேவராஜன் குறுக்கில் புகுந்து பாடலையே படிக்கச் சொல்ல, வள்ளுவரும் படிக்கத் தயாரானார்.

    'காண்டம் எட்டு' என்று எழுதப்பட்ட ஓலைக்கட்டைப் பிரித்தார். அதில் இரண்டே இரண்டு ஓலைகள். இரண்டிலும் நான்கு நான்கு வரிகளில் அதாவது எட்டு வரிகளில் பாடல்கள்.

    ‘வள்ளுவனே தொடர்ந்திடுவாய்...

    தன்னையறிந்த விக்கிரமனும் முன்னை வினைகளை எண்ணியே முற்றிலும் பேச்சு அற்றிடுவான்! என்னே விந்தை இது என்றே விண்ணைப் பார்த்துத் துதித்திடுவான். இந்த மண்ணை இனி மலர்த்துவதே என் நோக்கம் என்று தீபப் பெண்ணை அணைத்து சபதம் செய்வான். எட்டாம் காண்டம் இதும் சத்தியமே... ஒன்பதை உடன் நோக்க உத்தமமே..."

    - வள்ளுவர் பாட்டை வாசித்து முடித்தார். அதில் பெரிய பொருள் குழப்பம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. தேவராஜனும் அண்ணாவும் புருவ வளைவுகளுடன் பார்த்துக் கொண்டனர்.

    சரி அந்த ஒன்பதாவது காண்டத்தைத்தான் வாசியுங்களேன். - பட்டாபி திரும்பவும் தூண்டிவிட்டான்.

    இதுவரை வாசிச்ச காண்டத்து பாட்டெல்லாம் தொட்டுத் தொட்டு வழியைக் காட்டினுச்சு. ஆனா இந்த காண்டத்து செய்தி ஏண்டா படிச்சோம்னு இருக்கு...

    பீடிகை போதும் வள்ளுவரே... படியுங்க. படிச்சாதானே என்னன்னு தெரிஞ்சுக்க முடியும்..?

    படிக்கிறேன். ஒரு வகைல இது நமக்கெல்லாம் எச்சரிக்கை.

    படியுங்க... அப்புறமா நாங்களும் சொல்றோம். அது எச்சரிக்கையா இல்லையான்னு...

    - தில்லைநாயக வள்ளுவர் அதன்பின் அவர்களை ஒரு முறை ஆழமாகப் பார்த்தார். அந்த பார்வையில் ஒருவித மன்றாடல். பிறகு மெல்ல வாசிக்கத் தொடங்கினார்.

    'காண்டமது ஒன்பதுவும் கர்மமதைக் கூறுவதாம்...

    ‘காண்பவரில் ஒருவர் உயிர் வானேறப் போகிறதாம்.

    மாண்டவரை மடித்துவைத்தே மந்திரத்தால் ஜாலம் – செய்யும்

    தாண்டவனாம் பைராகி தானேகி வருவானே...

    வருபவனும் காண்டங்களை வசமாக்கிக் கொள்வானே...!’

    - வள்ளுவர் வாசித்து முடிக்க அதன் பொருள் விளங்கி விட்ட அதிர்ச்சி தேவராஜனை உடனே தொற்றிக் கொண்டது. காளியப்ப சாமியோ அண்ணாந்து வானம் பார்த்து 'நமச்சிவாயம்' என்று முணு முணுத்தார்.

    பட்டாபி இளமைக்கே உரிய துடிப்பைக் காட்டலானான்.

    என்ன வள்ளுவரே... இந்த காண்டம் இப்படி வந்துடிச்சு. 'காண்பவரில் ஒருவர் உயிர் வானேறப் போகிறதாம்'னா என்ன அர்த்தம்... இங்க இருக்கற நம்ம ஆறுபேர்ல ஒருத்தர் சாகப்போறோமா?

    ஆமாம்ப்பா... அது மட்டுமில்ல... அந்த பைராகி இங்க வந்து இந்த ஏட்டுக்கட்டை எல்லாம் அவன் எடுத்துக்குவான்னும் குறிப்பு வந்துருக்கு...

    அய்யா... இது முதலுக்கே மோசமாக இருக்கே.

    இப்ப நாம எதைப்பத்தி பேசறதுலையும் அர்த்தமே இல்லை. நடக்கறது தான் எப்பவும் நடக்கும்...

    அது எப்படி? இந்த ஏட்டுக்கட்டு அந்த நந்தன் பைராகி கைக்கு போயிடும்னா அது எப்படிப் போகும். நாம இங்க வெச்சா அவன் இங்க வந்து எடுத்துக்குவானா?

    பட்டாபி... ஏட்டை விடு. ஆறுபேர்ல ஒருத்தர் செத்துப் போகப் போறோம்னு வந்துருக்கே... அதைக் கவனிச்சியா?

    ரொம்ப முக்கியம் அந்த குறிப்பு தான். வள்ளுவரே... என்ன இப்படி வந்துருக்கு? - தேவராஜன் குரல் லேசாக நடுங்கியது.

    அதுசரி... எப்பவும் நமக்கு சாதகமாக - நாம் விரும்பற மாதிரியே வருமா என்ன...

    ஒரு உயிர் போகப் போகுதுன்னா எப்படி...? அது யார்?

    யார்னா...? நம்ம ஆறு பேர்ல ஒருத்தர்! நிச்சயமா பட்டாபியும், காளியப்பரும் கிடையாது. ஏன்னா இவங்க ஜென்ம ஜென்மமா தொடர்ந்து வர்றவங்க. விக்கிரமாதித்தன் கடமை முடியறவரை இவங்க வாழ்ந்தே ஆகணும். ஆகையால் இவங்க இருக்க வாய்ப்பு இல்லை. மீதி இருக்கற நம்ம நாலுபேர்ல ஒருத்தர்தான் சாகப் போறோம்...

    - தில்லை நாயக வள்ளுவர் ஒரு சாதாரண விஷயத்தைச் சொல்கிற மாதிரி அதைச் சொன்னார்.

    இல்ல... நம்ம யாருக்கும் எந்தக் கெடுதலும் நடக்கக்கூடாது. நாமெல்லாம் ஒரு நல்ல ஒரு நல்ல காரியத்துக்காக சேர்ந்துருக்கோம்... அது முடியறவரை நமக்கு யாருக்கும் எதுவும் நடக்கக் கூடாது...

    - பட்டாபி வெடித்தான்.

    வள்ளுவரே... தப்பா எடுத்துக்காம அடுத்தடுத்த காண்டங்களை இப்பவே படிச்சுப் பார்த்தா என்ன?

    ஏன்... அந்த நந்தன் பைராகி கிட்ட போனாலும் அதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாதுன்னு நினைக்கறீங்களா?

    அதுமட்டுமில்ல... நான் இப்பவே இங்க இருக்கற எல்லா ஏட்டுக் கட்டையும் போட்டோ எடுத்துக்கவும் விரும்பறேன். அப்படி எடுத்துக்கிட்டு இதை நாம இங்கையே எரிச்சுட்டா...? – தேவராஜன் பயங்கர புத்திசாலி போல பேசியதைக் கேட்டு வள்ளுவர் முகத்தில் ஒருவித கேலிச் சிரிப்பு.

    என்ன வள்ளுவரே சிரிக்கிறீங்க?

    சிரிக்காம என்ன பண்ணச் சொல்றீங்க...

    ஏன்... நான் தப்பா எதாவது சொல்லிட்டேனா...?

    நிச்சயமா... நீங்க வாழ்க்கையையும் புரிஞ்சுக்கலை. இந்த ஏடுகளையும் புரிஞ்சுக்கலை...

    எதை வெச்சு அப்படி சொல்றீங்க...?

    இந்த ஏடுகளை நீங்க நம்பறீங்கதானே?

    அப்படியே நடக்கும் போது நம்பித்தானே தீர வேண்டியிருக்கு வள்ளுவரே...

    அப்ப ஒரு பக்கம் நம்பிகிட்டே அதுக்கு எதிரா நடந்துக்க நினைக்கறீங்களே... அது முட்டாள்தனமா உங்களுக்குத் தெரியலியா?

    ஓ... நீங்க அப்படி வர்றீங்களா... அப்ப என்னோட இந்த கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க... இப்படி முன்னாடியே நமக்கு தகவல் தெரியவரதுக்கு ஒரு காரணம் இருக்கும் தானே?

    நிச்சயமா... உங்களுக்குன்னு இல்லை. இந்த உலகத்துல இருக்கற யாரா இருந்தாலும் சரி, அவங்களுக்கு ஜோதிடம் மூலமா முன்னாடியே நடக்கப் போற ஒரு விஷயம் தெரிய வருதுன்னா அதுக்கு சரியான ஒரு காரணம் இருந்தே தீரணும்.

    அந்தக் காரணத்தை நான் எப்படிப் பாக்கறேன்னா... எச்சரிக்கையாக நடந்து நீ தப்பிச்சுக்கோன்னு அது, முன்னாடியே வந்து சொல்றதாதான் நான் நினைக்கறேன்.

    அப்ப இப்ப நீங்க எப்படி நடந்துக்க விரும்பறீங்க?

    அதான் சொன்னேனே... இந்த ஏட்டுத் தகவல்களை நாம முதல்ல போட்டோ எடுத்து பாதுகாப்பா வெச்சுப்போம். அப்புறமா இதை அழிச்சிடுவோம். இது இருந்தா தானே அந்த பைராகி தேடி வருவான். இதை அடையவும் செய்வான்...?

    புத்தியைக் கொண்டு இப்படியெல்லாம் சிந்திச்சுப் பாக்கறதுல தப்பு ஒண்ணும் இல்லை. ஏன்னா இப்படி எல்லாம் சிந்திக்கத்தான் புத்தியே இருக்கு. ஆனாலும் என் அனுபவத்துல சொல்றேன். நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் நடந்துக்க முடியாது ஆசிரியர் சார்...

    ஏன் நடந்துக்க முடியாது… நீங்க இப்பவே அடுத்த காண்டத்தைப் பிரியுங்க. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...

    - தேவராஜன் ஆணையிடுவது போல சொன்னதைத் தொடர்ந்து வள்ளுவர் தன் மகனைத்தான் பார்த்தார். அப்படி அவர் பார்த்தால் என்ன பொருள் என்று அவனுக்குத்தான் தெரியும்...

    குரு... என்னை இந்தக் கட்டுங்களை எடுத்து படிக்கச் சொல்றீங்களா?

    இல்லை... இதோ இந்த தேவராஜன் சாரே இதை எடுக்கட்டும். நீ படிக்க உதவி மட்டும் செய்தா போதும்...

    - தில்லை நாயக வள்ளுவர் சொல்ல தேவராஜன் சற்று பரபரப்பானார். கையிரண்டையும் போட்டு தேய்த்துக் கொண்டார். மரப் பொந்தையும் பார்த்தார். உள்ளே மெல்லிய இருளில் கட்டுகள் கிடந்தன. 'அவ்வளவையும் அப்படியே வாரி வெளியே எடுத்துவிட்டால் முடிந்தது. காரில் போய்க் கொண்டேகூட மற்ற விஷயங்களைச் செய்து கொள்ளலாம்' என்று எண்ணியவர் மெல்ல அந்த மரப்பொந்து அருகே சென்றார். திரும்பவும் கையிரண்டையும் தேய்த்துக் கொண்டு அந்த பொந்துக்குள் கையை விட நீட்டினார். அதே நொடி உள்ளே அது வரையில் கண்ணிலேயே படாதபடி கிடந்த நாகமானது சரேலென்று நிமிர்ந்தது.

    ஒரு கிழவனின் கைத்தடி அவன் இடுப்பு உயரத்திற்கு தரையைத் தொட்டு நிற்பது போல அந்த பொந்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று, நான்கடி உயரத்திற்கு எழும்பியது அது. கண்களில் கூர்மை. வாயில் சீற்றம். அந்த இரட்டை நாக்கு நொடிக்கு ஒரு முறை நீண்டு நீண்டு உள் அடங்கி அவ்வளவு பேரையும் ஒரு மிரட்டு மிரட்டியது. பார்த்தீர்களா... இதுக்கு மேலையும் தொட்டுத் தொட்டு நீங்க அதை நெருங்க முயற்சி செய்தா அதோட பதில் தாக்கமும் பெரிசா இருக்கும்...

    - வள்ளுவரின் எச்சரிக்கையோடு தன் கைவசம் இருந்த ஏடுகளைத் தூக்கி அந்த பொந்துக்குள் போட்டார் தேவராஜன்.

    அண்ணாவும், பட்டாபியும் அப்படியே வாயைப் பிளந்து விட்டனர்.

    வாங்க... திரும்பி நடங்க. இனியும் நாம இங்க இருக்கறது நம்ம யாருக்கும் நல்லதில்லை... என்றபடியே அவர்களைத் தள்ளிக் கொண்டு தார்ச்சாலை மேல் ஒரு ஓரமாக நிற்கும் காரை நோக்கி நகர்ந்தார். அரைமனதாக அவர்களும் புறப்பட்டனர். காளியப்ப சாமி மட்டும் தனக்கே உரிய ஞானத்தோடு வாயைத் திறந்தார்.

    "நாமெல்லாம் பொம்மைங்க... ஆடறவன் ஆட்டிவைக்கறபடி ஆடுறவங்க... இந்த எண்ணம் நமக்குள்ள பலமா இருந்துட்டா போதும். நாம் எதைப் பத்தியும் கவலைப்படவேண்டாம்.

    நம்மைவிடப் பெரியது காலம். நம்மை எல்லாம் நடமாட விட்டு ஒரு புள்ளியில் சந்திக்க வெச்சு வழிநடத்திக்கிட்டு போறதும் அதுதான். எனக்குத் தெரியும் எப்ப எதை எப்படி செய்யணும்னு. ஆகையால இப்ப இந்த காண்டங்கள்ல வந்தபடி நடக்கப் போறதை இதுவரை தூர இருந்து பார்த்த மாதிரியே பார்ப்போம். மத்தது போகப்போக தானா தெரிஞ்சிட்டு போகுது."

    காளியப்ப சுவாமியின் விளக்கம் இதமாக இருந்தாலும் ஒரு உயிர் போய்விடும் என்கிற அந்த எச்சரிக்கை உள்ளே பயமாய் உருத்திரள ஆரம்பித்தது....

    அது யாராக இருக்கும்?

    ஆறு பேருமே இதயம் நடுங்க யோசிக்கத் தொடங்கினர். காரும் வேகமாக காலகதியில் உருள ஆரம்பித்தது.

    "மாளவதேசத்தை நினைத்தாலே எல்லோர்க்கும் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். காரணம் அந்த தேசத்தில் நிலவும் அமைதி மற்றும் வளம்...

    ரிஷ்ய சிருங்கரின் கால்கள் அனுதினமும் அந்த மண்ணின்மேல் படுகின்றாற்போல மழைவளத்திற்கும் மாளவ தேசத்தில் பஞ்சமில்லை. இதனால் ஊரில் எங்கும் திருட்டு பயம் என்பதே இல்லாத ஒரு நிலை விளங்கி வந்தது.

    மாளவதேசத்து அரசன் மகாபரனும் நல்லதொரு நீதிமான். அரச இலக்கணத்துக்கு மிகமிகப் பொருத்தமானவன்.

    எப்பொழுதும் ஒரு ஊரின் வளம் என்பது அந்த ஊரில் வசிக்கும் மூன்று உயிர்களைச் சேர்ந்தது. முதல் உயிர் அந்த ஊரை நம்பி வாழும் பசுக்கள். அடுத்த உயிர் அவைகளை ரட்சிக்கும் பிராம்மணர்கள். மூன்றாவதாக அந்த நாட்டு அரசன்.

    இவர்கள் தங்கள் கடமையைச் சிறப்பாக செய்தால்தான் மழையானது சரியாகப் பொழியும். காற்றும் வீசவேண்டிய விதத்தில் வீசி பயிர் பச்சைகளும் செழித்து வளரும். அதிலும் பசுக்களுக்கு உற்பாதம் ஏற்படும் பொழுது மண்ணில் எந்த செல்வமும் தங்காது.

    ஏன் என்றால் அது ஒன்றுதான் தன் உடல் முழுக்க ரத்தமாய் ஓடும் திரவத்தைப் பாலாக்கி தன் மடியில் நிரப்பி தான் ஈன்ற கன்றுக்கு மட்டுமின்றி மற்ற உயிர்களுக்கும் வஞ்சனையின்றி அதைத் தருகிறது. அதன் சிறுநீரும் கோமியமாய் எந்தவிதமான அசுத்த விளைவுகளும் ஏற்படுத்தாமல் பஞ்ச பூத அழுக்குகளையே சுத்திகரிக்க வல்லதாக உள்ளது. அதன் சாணமும் சூரியக் கதிரையே சுத்திகரித்து வியாதிக்குக் காரணமான கிருமிகளை வளர விடாமல் செய்கிறது. ஒரு விலங்கு தான் வெளிவிடும் ஒவ்வொரு விஷயத்தாலும் சமூகத்திற்கு பயனளிப்பது என்பது பசுவிடம் மட்டும்தான். மற்ற உயிர்கள் உணவை உட்கொண்டாலும் வெளியேற்றுவதில் நாற்றமும் நலிவும் இருக்கும். பசுமட்டும் விதிவிலக்கு. பசுவைப் போல் மற்ற மிருகங்களும் பாலைத் தரலாம். ஆனாலும் பசுவின் அளவுக்கு எந்த ஒரு உயிரினமும் பால் தருவதில்லை. அந்தப் பாலிலும் கொழுப்பு முதலிய அம்சங்கள் அளவுக்கு மிகுதியாக இருக்கும்.

    எனவே விசேஷப் பிறப்பான பசுவின் உடம்பில் மொத்த தேவர்களும் குடியேறினார்கள். கைலாசபதியான அந்த ஈசனும், வைகுண்டபதியான நாராயணனும் சத்யலோகத்து சரஸ்வதி, ஸ்ரீலோக லஷ்மி, ஸ்ரீ புரத்து சக்தி வசிப்பதை பாக்யமாகக் கருதுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் ஒரு படி மேல் சென்று தங்கள் இருப்பிடத்தை விடவும் பசுவின் பாசம் உயர்ந்தது என்றும் கூறியுள்ளனர்.

    பசுவை - அதன் தாய்மையை - தன்னலமற்ற தெய்விகத்தை உயர்வு படுத்துவதற்காக அவர்கள் இவ்வாறு கூறவில்லை. தங்கள் வசிப்பிடச் சிறப்பை விடவும் பல சிறப்பு பசுவின் தேகம் முழுக்க இருக்கிறது. எனவே ஒரு பசு ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் சகல தெய்வங்களும் குடி கொண்டிருக்கும் ஒரு கோயில் அங்கே இருப்பதாகப் பொருள்.

    எனவேதான், பிற உயிர்வதை கூட மன்னிப்புக்கு உரியது. பசுவதை மட்டும் பெற்ற தாயைக் கொன்றதற்கு சமமான பிழையுடையதாகக் கருதப்பட்டது. இதை உணர்ந்தே மன்னன் மகாபரனும் தனது மாளவ நாட்டில் பசுக்களைப் போஷிப்பதற்கென்றே ஒரு கோசாலையை நிர்மாணித்து பசுக்கள் அங்கே எந்தத் துன்பமும் இன்றி வாழ வழிவகை செய்து கொடுத்தான்.

    மகாபரனின் நாட்டில் பிராம்மணர்களும் அன்றைய பொழுதுக்காக மட்டும் வாழ்ந்தார்கள். தினம் பிச்சை கேட்டு நடந்து அரிசிபெற்று அதில் சோறு பொங்கித் தின்று பின் அதிலும் மீதமிருந்தால் நாளைக்கு என்று வைத்துக் கொள்ளாமல் தானம் செய்துவிட வேண்டும். இது பிராம்மண லட்சணம் மட்டுமல்ல... எஞ்சிய நேரத்தில் வேதங்களைப் போஷித்து உலக நன்மைக்காக ஜெபதபங்களில் ஈடுபட வேண்டும். பிறர் நலம் மட்டுமே தன்னலம். தனக்கு என்று தனியே ஒருநலமும் இல்லை என்கிற மனநிலையும் அதில் உறுதியும் கொண்டு வாழும் மனிதர் யாராயினும் அவர் பிராம்மணரே... அப்படிப் பார்த்தால் மாளவதேசம் முழுக்க வசிக்கும் ஒவ்வொருவரும் பிராம்மண லட்சணத்துடன்தான் இருந்தார்கள். மூன்றாவதாக அரசன் மகாபரன்… அரசன் என்கிற அகந்தை துளியும் இல்லாதவன். தினம் ஒருகுடிமகன் வீட்டுக்குச் சென்று அவர்களோடு அமர்ந்து அவர்கள் வீட்டுச் சமையல் எதுவாக இருப்பினும் அதை அறுசுவைக்கு மேல் நினைத்து உண்ணுபவன். தன்வரையில் மாளவதேசத்துமக்கள் அவ்வளவு பேருமே தன்னோடு இணைந்து பிறந்தவர்கள் என்பது அவன்கருத்து..

    இப்படி முக்கிய மூன்று உயர் அம்சங்களுமே உலகமே போற்றும்படி தனிச்சிறப்புடன் கடமை தவறாமல் நிகழ்ந்ததால் மாளவ தேசத்தில் தர்ம தேவதையும் வந்து குடிகொண்டு விட்டாள்.

    அதிலும் குறிப்பாக மாளவ தேசத்து அரண்மனையை ஒட்டியுள்ள ஒரு கல்மண்டபத்தில் அவள் வந்து அமர்ந்து கொண்டு ஊராரின் செழித்த நிலையைப் பார்த்துப் பார்த்து மாய்ந்து கொண்டிருந்தாள்.

    ஒருநாள் அவள் கல்மண்டபத்தில் அமர்ந்து சகலத்தையும் கவனித்தபடி இருக்கையில் வீரவரன் என்று ஒரு வீரனும் அவன் மனைவி வல்லபி, மகள் சுந்தரி, மகன் கேசவன் என்றும் நான்கு பேர் மாளவதேசத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். ஊருக்கே புதியவர்களான அவர்களுக்கு ஏற்படப்போகும் அனுபவத்தையும் தர்ம தேவதை கவனிக்க விரும்பினாள். ஒரு முதிய பெண் வடிவமெடுத்து வீரவரன் எதிரில் சென்றாள். வீரவரனும் அவளைப் பார்த்து வணங்கிவிட்டு அவளிடம் மாளவதேசம் பற்றி கேள்விகள் கேட்கத் தொடங்கினான்.

    தாயே...! இதுதானே மாளவதேசம்?

    அதில் என்ன சந்தேகம். திரும்பும் இடமெல்லாம் மகிழ்ச்சி எங்கிருக்கிறதோ அது மாளவ தேசமாகத்தான் இருக்கும்.

    அப்படியா... ஏன் அந்த கைலாயம், வைகுண்டத்தில் எல்லாம் கூட இங்குள்ள அளவு மகிழ்ச்சி கிடையாதா?

    நான் அப்படிக் கூறவில்லை. அது கடவுளரின் இருப்பிடம். அங்கே ஞானத்துக்கே முதலிடம். இங்கோ அப்படியில்லை. இங்கே மகிழ்ச்சிக்கு பஞ்சமேயில்லாமல் வாழலாம்.

    ஆஹா... அப்படியா? இப்படிக் கூட ஒரு ஊர் இந்த உலகில் இருக்க முடியுமா என்ன?

    இது என்ன கேள்வி? இல்லாமல்தான் இந்த ஊரில் நின்று கொண்டு இந்த ஊரைப் பற்றியே கேட்கிறாயா...?

    மிகவும் மகிழ்ச்சி. நான் விராட நாட்டான். பல காரணங்கள் உத்தேசித்து நான் குடும்பத்துடன் கால் போன போக்கில் புறப்பட்டுவிட்டேன். வழியில்தான் இந்த மாளவ தேசம் பற்றி அறிந்து இங்கே வந்தேன். உலகிலேயே நான் இப்படி ஒரு ஊரைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. பார்த்ததுமில்லை.

    மிகவும் மகிழ்ச்சி. ஏதாவது உதவி தேவை என்றால் இங்கே நேராக மன்னரிடமே சென்று கூறலாம். உடனே அவர் ஆவன செய்து தருவார்...

    ஆஹா.... என்ன ஒரு அற்புதமான நிலைப்பாடு. நான் இப்பொழுதே அரசரைச் சென்று பார்த்து நாங்கள் இந்த மண்ணில் வசிக்க ஒரு வீடு வேண்டும் என்று கேட்கப் போகிறேன்...

    போ போ... நீ வீடு கேட்டால் அவர் மாளிகையையே பரிசாகத் தந்து விடுவார். அவரிடம் சென்று உதவி என்று ஒன்றைக் கேட்டே நெடு நாட்களாகிவிட்டது - என்று தர்ம தேவதை முதிய பெண்மணி வடிவில் அவர்களை வழியனுப்பி வைத்தாள்.

    - வீரவரனும் தன் மனைவி மக்களை அங்கேயே கல்மண்டபத்தில் விட்டுவிட்டு அரண்மனை நோக்கி நடந்தான். செல்லும் வழியெல்லாம் அவன் கண்களில் அரிய காட்சிகளே பட்டன. மாளவ தேசத்துப் பெண்கள் மிக அழகாக இருந்தார்கள். ஆனால் ஒருத்தியிடம் கூடப் பகட்டோ துளியும் இல்லை. அதற்காக அவர்களிடம் செல்வமோ தங்க நகைகளோ இல்லை என்று பொருள் இல்லை. தங்க நகைகளை அவர்கள் தங்கள் வீட்டு கிளிகளுக்கும், நாய்களுக்கும் அணிவித்திருந்தனர். ஒரு சீமான் தனது குதிரைக்கு உடம்பு முழுக்க தங்க நகைகளைப் பூட்டி அதன்மேல் அமர்ந்து சென்றால் அது துன்பப்படும் என்று எண்ணியவர்போல அதைப்பிடித்து சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தார். வீரவரனுக்கு எல்லாமே பெரும் திகைப்பாக இருந்தது.

    ‘அடேயப்பா... என்ன ஒரு செல்வவளம்!' என்று மூச்சு முட்டிற்று. அப்படியே அரண்மனைக்குள் நுழைந்தான். பிற தேசங்களில் என்றால் அன்னியர்கள் அரண்மனைப் பக்கம் கூட செல்ல முடியாது. காவல்வீரர்கள் தடுத்து நிறுத்துவார்கள். மிக முயற்சி செய்தாலும் பயனிருக்காது. அதிகபட்சமாக அரண்மனை கொத்தவாலையோ, இல்லை காவலர் தளபதிகளில் யாராவது ஒருவரையோ பார்க்கலாம். அவ்வளவுதான்....

    ஆனாலும் மாளவதேச அரண்மனையில் நேர் எதிரான நிலைப்பாடு. வீரவரன் தான் அரசனைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூற, - நேராக வீரவரன் அரசன் மகாபரன் முன்னால் அழைத்துச் செல்லப்பட்டான். அரசன் மகாபரனும் தன் அரண்மனை சகாக்களுடன் பரமபதம் விளையாடிக் கொண்டிருந்தான்.

    வீரவரன் வந்து வணங்கி நிற்கவும் மகாபரன் அவனை ஏறிட்டு பின் அமரப் பணித்தான்.

    அரசே... நான் உங்களிடம் உதவி கேட்டு வந்திருக்கும் ஒரு அகதி. என்னைப் போய் சரிக்கு சமமாக அமரச் சொல்கிறீர்களே...!

    தவறு நண்பனே... மாளவதேசத்துக்குள் எந்த ஒரு உயிர் காலை எடுத்து வைத்துவிட்டாலும் அந்த உயிர் என் உயிருக்கு சமமான உயிர். அது தன்னை அகதி என்றோ, பஞ்சை பராரி என்றோ கூறிக்கொள்ளக் கூடாது.

    - மகாபரனின் பதிலால் வீரவரன் உள்ளம் குளிர்ந்து போனது.

    சரி... நீ வந்த விஷயத்தைக் கூறு.

    நான் இனி இந்த தேசத்தில் - குறிப்பாக உங்கள் அருகிலேயே தங்கிவிட விரும்புகிறேன்.

    பிறகு...?

    இப்படி ஒரு ஊரை நான் பார்த்ததில்லை. மக்களும் அரசராகிய நீங்களும் தான் என்ன ஒரு அடக்கம்! ஊரில் தான் எவ்வளவு மகிழ்ச்சி...!

    அந்த மகிழ்ச்சி ஒன்றுதான் என் குறிக்கோள் நண்பனே... ஆமாம் உன் பெயர் என்ன?

    வீரவரன்...

    அருமையான பெயர். நீ இப்பொழுதே அரண்மனை அன்னசத்திரம் ஒன்றில் சென்று உன் குடும்பத்தவரோடு தங்கிக் கொள்ளலாம்.

    வேந்தே...!

    இன்னமும் ஏதாவது வேண்டுமா?

    அதெல்லாம் இல்லை. நான் உழைத்துப் பிழைப்பதையே விரும்புகின்றவன். எனவே உங்கள் அரண்மனையில் எனக்கொரு நல்ல வேலையைப் போட்டுக் கொடுங்கள்.

    ஆஹா.... உன் கொள்கையை நான் மிக மதிக்கிறேன். எவ்வளவுதான் இந்த நாட்டில் செல்வமிருந்தாலும் பிராம்மணர்கள் இங்கே நாளைக்கு என்று எடுத்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதே போல எல்லாருமே 'அன்றைய தினமே வாழ்க்கை. நாளை என்பது வந்து பிறகே' என்று நினைப்பவர்கள். இன்றுதான் நம் கைகளில் இருப்பது. எனவே இதை எந்தக் களங்கமும் இன்றி அனுபவித்துவிட வேண்டும் என்கிற எண்ணமே எல்லோரிடமும். உன்னிடமும் வித்யாசமான அதே சமயம் நேர்மையான எண்ணங்கள் இருக்கின்றன. உன்னை நான் மிகமிகப் பாராட்டுகிறேன்.

    'பாராட்டுவதைவிட எனக்கொரு வேலை தருவதே தங்கள் வரையில் நான் பெரிதாகக் கருதுகிறேன்.

    உண்மைதான். ஆனால் உனக்கு என்ன வேலை தருவது? எனது துணிமணிகளைக் கூட நானே துவைத்து விடுகிறேன். குறைந்தபட்சம் அந்த வேலையைக் கூட உனக்கு என்னால் தாமுடியவில்லை. நான் என்ன செய்வது?

    அப்படியெல்லாம் கூறாதீர்கள். மனமிருந்தால் மார்க்கம் உண்டு. தாங்கள் அறியாததா?

    சரி... நான் இதுவரை அரண்மனை நுழைவாயிலுக்கு காவலர்களையே நியமித்ததில்லை. எதற்கு என்று வாளா விருந்துவிட்டேன். இன்று நீ இவ்வளவு தூரம் கேட்பதால் உனக்கு அந்த வேலையைக் கொடுத்துவிடுகிறேன். நீ நாளை முதல் அரண்மனை நுழைவாயிலில் வந்து நின்று கொள். சரிதானே?

    - அரசன், உடனே அவனுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட வீரவரன் முகத்தில் ஒரே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி துளியும் குறையாதபடி வீரவரனும் மன்னன் மகாபரனை வணங்கிவிட்டு தன் மனைவிமக்களைச் சந்திக்க கல்மண்டபம் நோக்கி ஓடினான். அவர்களிடம் விஷயத்தைக் கூறி அரசர் தனக்கு வேலை கொடுத்து விட்டதையும் கூறியவன் 'இனி நமக்கு, துன்பம் என்பதே இல்லை' என்று மனைவியிடம் கூறவும் அருகே அமர்ந்து அவ்வளவு பேச்சையும் கேட்டபடி இருந்த தர்ம தேவதை முகம் மட்டும் எதனாலோ பொலிவிழந்து போய் வானத்தை சோகமாகப் பார்த்தது.

    வீரவரன் அதையெல்லாம் கவனிக்கவில்லை. உடனேயே தன் மனைவி மக்களுடன் அரண்மனை அன்னதான சாலைக்குச் சென்றான். அப்படியே அருகேயே ஒரு அழகிய வீட்டை அவனுக்கு அரசன் ஒதுக்கியிருந்தான். அதை வீரவரன் அறிந்து பூரித்துப் போனான்.

    மறுநாளே அரசன் சொன்னது போல் அரண்மனை நுழை வாயிலில் காவலுக்குப் போய் நின்றுவிட்டான். அவனது காவலை அங்கு பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இது என்ன புதிதாக இருக்கிறது? என்றெல்லாம் கேட்டார்கள்.

    புதிதுதான்.. மிகமிகப் புதிது இந்தக் காட்சி. நான் ஒன்றும் கள்ளர்களுக்கு பயந்து காவல் காக்க இங்கே வரவில்லை. ஒருவகையில் இது என் கடமை. அப்படியே பொதுமக்கள் யாராவது ஏதாவது உதவி கேட்டால் அதையும் செய்வேன். என்று சாதுர்யமாகப் பேசி அனைவரையும் சமாளித்தான் வீரவரன்.

    அரசன் அவனது பொறுமையை - புத்திசாலித்தனத்தை எல்லாம் கேள்விப்பட்டு அவனை அழைத்துப் பாராட்டினார். அப்படியே அவனுக்குத் தினம் ஐநூறு பொற்கழஞ்சினையும் ஊதியமாகத் தந்திட கட்டளையிட்டார். தினம் ஐநூறு பொற்கழஞ்சு என்பது மாளவதேசத்தில் தேவையே இல்லாத ஒன்று. எனவே வீரவரன் அந்த சம்பளப் பணத்தைப் பெரிதாக எடுத்து சேமித்து வைக்காமல் அதைக் கொண்டு நிஜமாலுமே பலருக்கு உதவிகள் செய்யத் தொடங்கினான்.

    இதை மொத்த ஊரும் பார்த்து வியந்தது. ஒரு காவல்காரன் இவ்வளவு பெரிய பரோபகாரியா என்று கேட்டது. அவன் புகழ் இறுதியாக அரசன் மகாபரன் காதுக்கும் சென்றது. ஆசையாக அவனை அழைத்த அரசனும் மனதாரப் பாராட்டினான். பின் வீரவரனைக் கட்டிக் கொண்டவன் 'இனியும் உன்னை சராசரி காவலில் நான் வைத்துக் கொண்டிருந்தால், அது எனக்கு இழுக்கு. நாளை முதல் நீ என் மந்திரிகளில் ஒருவன்' என்றார் அரசர் மகாபரன்.

    வீரவரனும் உச்சி குளிர்ந்து போனான். அப்படியே இல்லம் திரும்பியவன் மனைவி மக்களிடம் விஷயத்தைக் கூறினான். அவர்களும் மிகமகிழ்ந்தனர். அதன் பின் ஒரு அழகிய புரவிமேல் ஏறி அப்படியே ஏகாந்தமாக ஊரை வலம் வர ஆரம்பித்தான். அப்படியே அந்த கல்மண்டபத்தையும் அடைந்தான். அங்கே தர்மதேவதை அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் குப்பென்று சோகம். ஊரே மகிழ்ச்சியில் திளைத்தபடி இருக்க... அவள் மட்டும் சோகத்தில் இருப்பதைப் பார்த்த வீரனுக்கு வியப்பான வியப்பு. நேரே அவளிடம் சென்று,

    தாயே... என்னை நினைவிருக்கிறதா? என்றுதான் கேட்டான்.

    அவளும் விரக்தியாகச் சிரித்தபடி ஏன் இல்லாமல்...? நீ வீரவரன்... உன் மனைவி வல்லபி, மகள் சுந்தரி, மகன் கேசவனுடன் மன்னர் மகாபரன் ஆளும் இந்த மாளவ தேசத்துக்கு ஒரு நாடோடியாக ஒருநாள் வந்தவர்கள்தானே?

    - தர்ம தேவதை சோகம் கலையாதபடி திருப்பிக் கேட்டது.

    பரவாயில்லை. உனது ஞாபக சக்தியை நான் பாராட்டுகிறேன். ஆமாம்... உன் முகம் ஏன் வாடிக் கிடக்கிறது?

    அதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?

    இது என்ன கேள்வி தாயே...! இந்த தேசத்தில் துக்கத்தோடு ஒருவர் கூட இல்லை என்று எண்ணியிருந்தேன். நீ இருப்பது எனக்கு ஆச்சரியம் தருகிறது.

    நான் சொல்வதைக் கேட்டால் துக்கம் உன்னையும் சூழ்ந்து கொள்ளும்.

    மாளவ தேசத்தில் - மகாபரரின் ஆட்சியில் துக்கமா....? ஆச்சரியமாக மட்டுமல்ல. அதிர்ச்சியாகவும் உள்ளது.

    நீ இப்பொழுது வந்தவன்...! உனக்கே என் பதில் அதிர்ச்சி தருகிறதே... உண்மை தெரிந்த எனக்கு எப்படி எல்லாம் இருக்கும்?

    அது என்ன உண்மை....? அதை முதலில் கூறு.

    என்னால் அதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

    போதும் பீடிகை. விஷயத்துக்கு வா...

    சரி. ஆனால், நான் கூறப்போவதை நீ யாரிடமும் கூறக் கூடாது.

    முதலில் விஷயத்தைக் கூறு... பிறகு நான் அதுபற்றிய முடிவுக்கு வருகிறேன்.

    இல்லை... நீ எனக்கு உறுதி கூறவேண்டும்.

    இப்படியே நாம் பேசினால் விடிந்து விடும். நீ விஷயத்தைக் கூறு.

    சரி. அதற்கு முன் நான் யார் என்பதை நீ முதலில் தெரிந்து கொள்.

    நீ யார்?

    அப்படிக் கேள்...

    - தர்ம தேவதை அவனிடம் தான் யார் என்பதைக் கூறிவிட்டு, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளத் தயாரானது. சில நொடிகளில் அது கையில் தராசுடன் ஒரு அன்னப்பட்சி மேல் அமர்ந்து ஆயிரம் கோடிப் பிரகாசமுள்ள ஒரு தேவதைப் பெண்ணாய் தேவதேவியாய் காட்சியளித்தது. வீரவரன் அதைப் பார்த்து திக்குமுக்காடி விட்டான். அப்படியே பரவசமாகி கைகளைக் கூப்பி வணங்கவும் செய்தான்.

    இப்பொழுது தெரிகிறதா நான் யாரென்று?

    இப்பொழுதும் தெரியவில்லை.

    நல்லது... நானோர் தேவதை. என் கடமை தர்மத்தை ரட்சிப்பது. அதனால் என்னை தர்ம தேவதை என்பார்கள்.

    தர்ம தேவதையா? வாய் பிளந்தான் வீரவரன்.

    தர்ம தேவதையேதான். இந்த பூவுலகில் மாளவ தேசத்தில் தான் தர்மம் நன்கு ரட்சிக்கப்படுகிறது. எனவே மனமகிழ்ச்சியுடன் நான் இங்கேயே இருந்துவிட்டேன். இப்பொழுது அதற்கும் ஒரு முடிவு வந்துவிட்டது.

    தர்ம தேவதையே... அந்த முடிவு என்ன என்றுதான் கூறேன்...

    கூறுகிறேன். இந்த தேசத்தின் அத்தனை சிறப்புக்கும் காரணமான மகாபரன் இன்னும் இரண்டு நாட்களில் உயிரை விடப்போகிறான்...

    - தர்மதேவதை அப்படிச் சொன்னதுதான் தாமதம் வீரவரன் ஸ்தம்பித்துப் போனான்.

    தர்ம தேவதையே... என்ன கூறுகிறாய் நீ?

    உள்ளதைக் கூறுகிறேன். அவனது ஆயுள் இன்னும் இரு தினங்கள்தான். அவன் இறந்துவிட்டால் இந்த தர்ம பூமியில் எல்லாமே மாறிவிடும். எனக்கென இருந்த ஒரு நாடும் என்னை விட்டுச் சென்று விடப்போவதை நினைத்தே நான் கலங்கிப் போனேன்.

    என்ன தேவதையே.... தர்மத்தை ரட்சிக்கும் உன்னால் மன்னர்க்கு நீண்ட ஆயுளை அருளாக வழங்க முடியாதா? இல்லை அவர்தான் அதற்கு தகுதியற்றவரா?

    அப்படி இல்லை... ஆயுளைத் தரும் தகுதி எனக்கில்லை. அது அந்த ஈசனுக்கே உரியது.

    அப்படியானால் அவரிடம் சென்று கூறலாமே...

    பதிலுக்கு அவர் ‘அவ்வளவு தூரம் தர்ம ரட்சணை செய்தவருக்காக மனிதர்கள் யாரும் பரிந்து கொண்டு வரவில்லையா?' என்று கேட்பாரே...?

    எப்படி... எப்படி...?

    உன்னைப் போல ஒரு மானிடன் அதைக் கேட்கலாம். நான் கேட்க முடியாது. சுருக்கமாகக் கூறிவிட்டேன்.

    அவ்வளவுதானே... நான் கேட்கிறேன்.

    அது அவ்வளவு சுலபமல்ல. நரர்களாகிய உங்கள் சக்தியும் அதன் எல்லையும் வரையறுக்கப்பட்டவை.

    பிறகு என்னதான் வழி?

    இருக்கிறது... இன்னும் பலப்பல ஆண்டு உயிர்வாழும் தகுதியுடைய ஒரு உயிரை, அந்த உயிரின் தந்தை விருப்பமுடன் இறை நிவேதனமாக்கினால் அதனால் பரமன் மகிழ்வார். அரசனின் ஆயுளும் அதிகரிக்கும்.

    அவ்வளவுதானே... எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். ஐந்து வயதுதான் ஆகிறது. அவனை நான் இறை நிவேதனமாக்கி அரசனின் ஆயுளுக்கு வேண்டிக் கொள்கிறேன். போதுமா?

    ஆஹா... அற்புதம். உன்னை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

    முதலில் ஆயுள் நீட்டிப்பு. பிறகே மற்ற எல்லாம். இப்பொழுதே புறப்படுகிறேன்.

    - வீரவரன் ஆவேசமாக அங்கிருந்து புறப்பட்டான். அதே சமயம் மன்னன் மகாபரனும் மாறுவேடத்தில் ஒரு பிச்சைக்காரன் போல நகர்வலம் வந்தபடி இருந்தான். அவன் பார்வையில் ஆவேசமாக செல்லும் வீரவரன் படவும் அவனைப் பின்தொடரத் தொடங்கினான்.

    வீரவரன் நேராக அரசன் அவனுக்கென அளித்திருந்த வீட்டுக்குதான் சென்றான். அவன் மனைவி மக்கள் அவனை வரவேற்று சிரித்தனர். மனைவி வல்லபி மட்டும் அவன் முகத்தில் தெரியும் பதட்டத்தை வைத்து ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறாற்போல் தெரிகிறதே என்றாள்.

    ஆம் வல்லபி...

    என்னிடம் கூறலாமே...

    கூறித்தானே ஆகவேண்டும்.

    எதுவாக இருந்தாலும் கூறுங்கள்.

    - வல்லபி தயாரானாள். வீரவரனும் தர்மதேவதையிடம் நடந்த வாதப்பிரதிவாதத்தை அப்படியே போட்டு உடைத்தான். வல்லபி முகத்திலும் அதிர்ச்சி பரவி அடங்கியது.

    வல்லபி...

    சொல்லுங்கள்...

    நமது அரசர் நீண்டநாள் வாழ வேண்டும். இப்படி ஒரு அரசர் உலகுக்கு கிடைப்பது அபூர்வம். அபூர்வத்தை காலம் கொண்டு சென்று விடக்கூடாது.

    உண்மைதான். நமது மகன் கேசவனை நாம் தாராளமாக உயிர்பலி தருவோம். கேசவனிடம் இதைச் சொன்னால் அவனும் எவ்வளவு மகிழ்ச்சி அடைவான் தெரியுமா?

    - வல்லபி சாதாரணமாக அந்த பெரும் தியாகத்தைப் பற்றிப் பேச வீரவரனுக்கும் உச்சி குளிர்ந்து போனது. பிச்சைக்காரன் வடிவில் பின்தொடர்ந்து வந்து அவ்வளவையும் கவனித்துக் கொண்டிருந்த அரசன் மகாபரனுக்கோ அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நம்ப முடியாத பேரதிசயமாகவே இருந்தது. மகாபரன் ஒளிந்திருந்து கவனித்தபடி இருக்க - மகன் கேசவனை அழைத்து வல்லபியும், வீரவரனும் விஷயத்தைக் கூறினார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்ட கேசவன் எந்தப் பதட்டமும் கொள்ளவில்லை.

    அப்பா.... அம்மா... உங்கள் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பம் என்றான். அரசனிடம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

    அப்படியானால் நாளைய தினமே நாம் இவனை இறைவனுக்குக் காணிக்கையாக்கிவிடுவோம். என்று கூறிய வீரவரன் நான் கிளம்புகிறேன். அரசர் ஒருவேளை நான் எங்கே என்று தேடினாலும் தேடலாம் என்றபடியே புறப்பட்டுச் சென்றான்.

    அரசனிடமும் ஒரு புது முடிவு!

    அரண்மனை!

    வீரவரனை அரசன் மகாபரன் அழைத்திருந்தார்.

    வந்தனம் அரசே...

    நல்லது வீரவரா... இந்த மாளவ தேசம் உனக்கு பிடித்திருக்கிறதா?

    என்ன கேள்வி இது அரசே! தர்ம தேவதையே வானுலகை விட்டு வந்து வாழும்போது எனக்கு மட்டும் கசக்குமா?

    இங்கே உனக்கு ஒரு குறையும் இல்லையே?

    ஒரு குறையுமில்லை என்பதுதான் இந்த மண்ணில் உள்ள ஒரே குறை.

    நன்றாகப் பேசுகிறாய் நீ. சரி இன்று உன் பணியில் யாரையாவது சந்தித்துப் பேசினாயா?

    ஆம் அரசே. பெண்மணி ஒருத்தியைச் சந்தித்தேன். பேசினேன்.

    என்ன பேசினாய்...?

    மன்னிக்கவும் அரசே... அதை நான் கூற விரும்பவில்லை.

    அது என்ன அவ்வளவு ரகசியமா...?

    ஒரு வகையில் பார்த்தால் அப்படித்தான்.

    அரசன் என்பவன் எஜமானன். அவனிடம் எதையும் மறைக்கக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?

    தெரியும். ஆனாலும் நான் உங்களிடம் இன்று நடந்ததைக் கூற முடியாத நிலையில் உள்ளேன்.

    அப்படி என்ன உனக்கு சங்கடமான நிலை?

    வேண்டாம். இதற்கு மேல் எதையும் நீங்கள் கேட்க வேண்டாம்.

    நீ கூறாவிட்டால் நாளையே உன்னை நான் தூக்கில் போடும்படி ஆகிவிடும்.

    தாராளமாகப் போடுங்கள். ஆனால் ஒரு வேண்டுகோள்?

    என்ன?

    இன்று எனக்கு விடுதலை தாருங்கள். எனக்கு ஒரு கடமை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வந்து விடுகிறேன். அதன்பின் என்னைக் கண்டதுண்டமாய்க் கூட வெட்டுங்கள்.

    - வீரவரன் கடைசிவரை அந்த விஷயத்தைக் கூறவில்லை. அரசனுக்கோ அவனது உறுதி ஆச்சரியத்தைக் கூட்டிற்று.

    உன்னை விடுவிக்க முடியாது. அதே சமயம் உன் மனைவி மக்களையும் கைது செய்து சிறையில் அடைக்கப் போகிறேன்.

    அரசே...!

    இப்பொழுதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. என்ன நடந்தது என்று கூறு. நான் உன்னை விட்டுவிடுகிறேன்.

    அதை மட்டும் என்னால் கூற முடியாது அரசே...!

    அப்படியானால் உன் மனைவி மக்களை நான் சிறையில் தள்ளுவதும் தவிர்க்க முடியாத ஒன்று.

    - அரசன் சொன்னதோடு அதற்கான ஆணையையும் ஈடேற்றினான். அவ்வளவையும் கவனித்துக் கொண்டிருந்த மந்திரிக்கு அரசனின் செயல் அதிர்ச்சியளித்தது.

    என்ன மந்திரி... உங்கள் முகம் போகும் போக்கே சரியில்லையே... - அரசன் மந்திரியிடமும் கேள்வியை விடுத்தார்.

    உண்மைதான் அரசே.... ஒரு அணுவளவு தர்மப் பிசகும் நமது நாட்டில் இதுவரை நடந்ததில்லை. அதிலும் தாங்கள் இவ்வளவு கடுமையாக ஒரு சாதாரண விஷயத்துக்கு நடந்து கொண்டதேயில்லை.

    இது சாதாரண விஷயமில்லை மந்திரி...

    என்ன கூறுகிறீர்கள்... வீரவரன் ஒரு விஷயத்தைக் கூறமறுப்பது என்பது அவன் உரிமை. அதை மீறி அவனைக் கூறச்சொல்வது எப்படி சரியாகும்? அடுத்தவர் உரிமையில் நீங்கள் தலையிடலாமா?

    "நான் இன்று அப்படித் தலையிடத்

    Enjoying the preview?
    Page 1 of 1