Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanintha Mana Deepangalai! Part - 1
Kanintha Mana Deepangalai! Part - 1
Kanintha Mana Deepangalai! Part - 1
Ebook457 pages4 hours

Kanintha Mana Deepangalai! Part - 1

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580106004473
Kanintha Mana Deepangalai! Part - 1

Read more from Jaisakthi

Related to Kanintha Mana Deepangalai! Part - 1

Related ebooks

Reviews for Kanintha Mana Deepangalai! Part - 1

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanintha Mana Deepangalai! Part - 1 - Jaisakthi

    http://www.pustaka.co.in

    கனிந்த மனத் தீபங்களாய்! பாகம் - 1

    Kanintha Mana Deepangalai! Part - 1

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    1

    வாழ்க வளமுடன் என்று மகளைத் தூய தமிழில் மணிவாசகம் வாழ்த்திய போது அது இயல்பாய் ஒலித்தது. அப்பாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள் குந்தவி.

    அம்மா ஒரு பக்கம் மகிழ்ச்சியோடு நின்றிருந்தாள். 'கங்கிராட்ஸ்' என்று வாழ்த்தினான் அண்ணன் பரஞ்ஜோதி. கீதா அண்ணி கூட ஒரு அரைப் புன்ன்கையுடன் வாழ்த்தினாள்.

    'நல்லவேளை, பதினாறு பேரும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு அப்பா வாழ்த்தலையே' என்று சிரித்தான் அருண்மொழி. அது பதினாறு பேர் இல்லைடா, பதினாறு பேறு என்று செல்லக்குட்டு குட்டினாள் குந்தவி.

    அம்மா வெளியுலகுக்குப் போகிறாய், நாலும் நாலு விதமாய் இருக்கும். எல்லாத்தையும் மனசில் வாங்கி அப்புறம்தான் பேசணும். உனக்குச் சொல்ல வேண்டியதில்லை, இருந்தாலும் ஜாக்கிரதை என்ற அப்பா அறிவுரைகள் தந்தார்.

    அப்பா முதல் நாளே பயமுறுத்தாதே அப்பா, அக்கா தானே தெரிஞ்சுப்பா என்றான் அருண்.

    'ஆமப்பா, அவளாத் தெரிஞ்சுக்கறதுதான் கரெக்ட்' என்றார் மணிவாசகம்.

    வரலாற்றுத் துறை விரிவுரையாளராக வேலை கிடைத்திருந்தது. விரிவுரையாளராக வேண்டும் என்ற அவளது இந்த ஆசை இவ்வளவு விரைவாக நிறைவேறும் எனறு அவளே எதிர்பார்க்கவிலலை

    உள்ளுரிலேயே வேலை கிடைத்த மகிழ்ச்சி குடும்பத்தில் நிறைந்திருந்தது.

    அக்கா பெஸ்ட் ஆஃப் லக் என்ற நந்தினியின் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டாள்.

    அருண், நீ போய் அக்காவைக் காலேஜ்ல விட்டுட்டு வந்துரு என்று கார் சாவியை அப்பா கொடுக்கப் புறப்பட்டுப் போனார்கள். 'அப்பாடா, என்று ஈஸிச் சேரில் சாய்ந்தார் அப்பா.

    இன்னும் ஒரு டோஸ் காஃபி சாப்பிடுங்க என்று தர்ம பத்தினி நீட்டிய காஃபியை வாங்கிக் கொண்டார்.

    பத்திரிகையிலே கண்ணை ஓட்டிக் கொண்டே இடதுபுறம் திரும்பிய போது பெரிய மகனும் மருமகளும் நகராமல் நிற்பதை கண்டார்.

    'என்னடா' என்று கேட்கலாம் என்று நினைத்தார். பின் அவனேதான் சொல்லட்டுமே என்று பார்க்காதவரைப் போல் பேப்பரைப் பிடித்துக் கொண்டார்.

    சொல்லுங்கன்னா? என்று மருமகள் கணவரை இடிப்பதும், மகன் தயங்குவதும் சரி, வா சாயங்காலம் பாத்துக்கலாம் என்று அவன் சொல்வதும் தெரிந்தது.

    சரி அப்ப சாயங்காலம் பாத்துக்கலாம். இப்பக் காஃபியைக் குடிப்போம் என்று அவரும் சொல்லிக் கொண்டார்.

    டம்ளரைக் கையில் எடுத்தார்.

    ***

    இவ்வளவு நேரந்தான் கழிசசு வந்தா என்ன பண்றதுங்கறேன்? என்று பொன்னம்மாவிடம் இரைந்து கொண்டிருந்தாள் நந்தினியின் அம்மா சரஸ்வதி.

    ஒரு நாளைக்கு லேட்டா வந்தா என்ன ஆகுதுங்க. உங்களுக்கு ஒரு லோட்டா காஃபி மிச்சமுங்க என்று சிரித்தாள் பொன்னம்மா.

    ஆமாம் போ. ஒரு லோட்டாக் காஃபி மிச்சம் பண்ண ஒன்பது பாத்திரம் கழுவணுமாக்கும் என்றார் சரஸ்வதி.

    பொன்னம்மா காரணம் இல்லாமல் தாமதமாக வரமாட்டாள் என்று தெரியும். இருந்தாலும் ஒரு மிரட்டு மிரட்டி வைத்தால், அப்புறம் அடிக்கடி நடக்காதல்லவா?

    அப்புறமுங்க குந்தவியம்மா வேலைக்குப் போயிட்டாங்களா? போகையில நானும் கூட நாலு நல்ல வார்த்தை சொல்லியனுப்பனுமின்னு இருந்தனுங்க அதுக்குள்ளே ஒரு பஞ்சாயத்து வந்து போடுச்சுங்க என்று சொல்லிக் கொண்டே பாத்திரங்களை அள்ளிப் போடடுக் கொண்டாள். ஆமா உனக்கு எப்பப் பாரு ஊருப் பஞ்சாயத்துதான். என்று கடிந்தாற் போல் சொல்லி விட்டு என்னவாமா என்று அசிரத்தையாய்க் கேட்பது போல் கேட்டாள் சரஸ்வதி.

    எல்லாப் பொம்பளைங்களுக்கும் ஏதோ ஒரு கஷ்டத்தைக் கொடுத்துப் போடறானே கடவுள். நம்ம பக்கத்து வூட்டுல வனிதான்னு ஒரு பொண்ணு ஏதோ ஒரு வேலைக்குப் போகுது. அளவாச் சம்பாதிக்குது.

    ஏன் வீட்டுக்காரரு என்னவானாரு?

    அந்த பாளாப் போனவன்தான் அவளை வுட்டுட்டு வேற ஒருத்தியைக் கட்டிட்டானுங்களே

    அடப்பாவமே

    செரி. ஆனாத் தொலையுதுன்னா இந்தப் புள்ளகிட்ட வந்து காசு குடுன்னு அடிக்கடி ரகளைதான். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தனுங்க. இன்னிக்கு என்னாலயே முடியலீங்க. விளக்குமாத்துக் கட்டையை எடுத்துட்டுப் போனனுங்க டேய் இந்தப் புள்ளை கேசு போட்டான்னா நீ கம்பி எண்ணோணும். அப்படியிருக்கீல, நீ இவளை மிரட்டி மிரட்டிக் காசு புடுங்கீட்டுத் திரியிற. அவளுக்கு அப்பனாத்தா இல்லீன்னுதான் இந்த மிரட்டு, மிரட்டறே, உனக்குத் தொக்காப் போச்சு, நானிருக்கறன்டா அவளுக்கு, இந்தப் பக்கம் வந்தியோ இதிலயே சாத்திப் போடுவேன்னு மிரட்டிப் போட்டு வந்தனுங்க் பாரு உன்னய வெட்டிப் போடறன்னு. புலம்பிட்டுப் போனான்ங்க. அந்தப் புள்ளையச் சாப்பிட வச்சுப் போட்டு வந்தனுங்க.

    சரஸ்வதி ஒரு நிமிடம் விக்கித்துப் போனார். பேசுவது என்னமோ கரடு முரடாக இருந்தாலும் நல்ல மனசுக்காரி என்று நினைத்துக் கொண்டார்.

    'என்னவோ போ ஏதோ ஒண்ணைச் சொல்றே. எதுக்கும் ஜாக்கிரதையாய் இருந்துக்க. நீ வேற தனியா இருக்க. போக வர ஏதாவது தொல்லை பண்ணினா என்ன பண்ணுவே' என்றாள்.

    ம் நானாருன்னு நெனச்சீங்க. எனறகுட்ட வாலாட்டிப் போடுவானா அந்த பய, நானு கட்டின சுவத்தை இடிச்சுப் போட்டு, இடிந்த சுவத்துக்கு மண்ணும் வச்சுப் போட்டு வாரவளாக்கும். தெரிஞ்சுக்குங்க என்றாள்.

    ஏனோ சரஸ்வதிக்கு குந்தவியின் ஞாபகம் வந்தது. அவளுக்கு வாழ்க்கை நல்ல விதமாய் அமைய வேண்டும் என்ற கவலை பிறந்தது.

    அம்மா பசிக்குது அருணின் குரல் கேட்டது.

    எதையாவது அந்த வயித்துக்கு அடை சரசு அப்பத்தான் அலட்டல் அடங்கும் என்று மணிவாசகம் சிரிக்கும் குரல் கேட்டது.

    சரஸ்வதி நகாந்தார். பெண் கல்யாணத்துக்கு வந்து விட்டாள். இன்னும் இந்த மனிதர் விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கிறாரே என்ற எண்ணம் சரஸ்வதிக்கு ஓடியது.

    ***

    என்னமோ பொறு குந்தவி வேலைக்குப் போகட்டும், கேக்கறேன்னு சொன்னீங்க, இப்ப புஸ்வாணமாட்ட வந்துட்டீங்க. எனறு பரஞ்ஜோதியைப் பார்த்துப் பொரிந்தாள் கீதா.

    சும்மா அவசரப்படாதே கீதா நாம கேக்கப் போறதென்ன சாதாரண வி்ஷயமா, இன்ணைக்குத்தான் குந்தவி வேலைக்குப் போறா. உடனே இதை ஆரம்பிக்கணுமா? என்றான்.

    குந்தவிக்கு ஏதாவது ஏற்பாடு ஆகட்டும்னுதானே இதுவரைக்கும் சொன்னீங்க. அதெல்லாம் எனக்கு தெரியாது. இண்ணைக்குச் சாய்ங்காலம் கேட்கறேன்னு சொல்லியிருக்கீங்க. நீங்க கேட்கலே நானே கேட்டுருவேன். சாய்ங்காலம் சீக்கிரம் வந்துடுங்க. எதாவது லேட்டா கீட்டா வந்தீங்க எனக்கு கெட்ட கோபம் வந்துடும் ஆமா, என்றாள் கீதா.

    உனக்கு எண்ணைக்கு நல்ல கோபம் வந்தது என்று சொல்லிக் கொண்டான் அவன். மனதுக்குள்தான்.

    ***

    கல்லூரி வாயிலுக்குள் நுழையும்போது படபடப்பாக வந்தது குந்தவிக்கு. ஏற்கனவே பலமுறை பேச்சுப் போட்டி. பாட்டுப் போட்டி என்று வந்த கல்லூரிதானே என்று சமாதானப்படுத்திக் கொண்டாள்.

    முதல்வரைச் சந்தித்து முறைப்படி அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டாள். வரலாற்றுத் துறையில் துறைத் தலைமையில் இருக்கும் பேராசிரியையை அழைத்து அறிமுகப் படுத்தினார் முதல்வர். சரிம்மா, இவங்க கூடப் போ, இண்ணைக்கே பாடம் ஆரம்பிச்சுடலாம் என்றார் முதல்வர்.

    சரிங்க மேடம் என்று சொல்லித் துறைத் தலைவருடன் போனாள்.

    இரட்டை நாடி உடம்பும் தூக்கிக் கட்டிய கொண்டையுமாய் அறிவு ஜீவிகளுக்கேயான கண்ணாடியும் அணிந்து கொண்டு கனகம்பீரமாக நடந்த பூரணி மேடத்துடன் சமதையாய் நடக்கவே கடினமாக இருந்தது. நேராகத் தன்னுடைய அறைக்கு அழைத்துப் போய் சில அறிவுரைகள் சொன்னார். பிறகு டிபார்ட்மெண்டுக்கு போகலாம் என்று அழைத்துப் போனார்.

    இவங்க மிஸ் அம்பிகா என்று ஒரு இளவயதுப் பெண்ணை அறிமுகப்படுத்தினார். வணக்கம் சொல்லி வெல்கம் என்றாள்.

    மிசஸ் ராதிகா என்று இன்னொரு பொண்ணை அறிமுகப் படுத்தினார். இது திருமதி. சாவித்திரி, இது திருமதி. கோதை என்று இரு நடுத்தர வயதுப் பெண்களை அறிமுகப்படுத்தினார்.

    ஒரு பெரிய அறையை இருபுறமும் கேபின்களாகத் தடுத்திருந்தார்கள். அவரவருக்கும் சிறிய அறை போலத் தனிமை கிடைக்குமாறு செய்திருந்த அமைப்பு அவளுக்கு பிடித்தது.

    இவர் சரவணன் நம்ம கல்லூரியிலேயே படித்து விட்டு இங்கேயே வேலைக்கு வந்திருக்கிறார் என்றார். இது கிங்ஸ்லி என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார். வணக்கம் சொன்னான்.

    எங்கே மேடம் வானதி வல்லீங்களா? என்றான் அவன்.

    வானதியா? என்று ஒரு நிமிடம் திகைத்த அவள் பிறகுதான் அவன் தன் பெயரை வைத்துக் கமெண்ட் அடிக்கிறான் எனப் புரிந்து சுதாரித்துக் கொண்டாள். ஓ பழையாறைக்குப் போயிருக்கிறாள். குடந்தை சோதிடரைப் பார்த்து விட்டு இந்த அகடமிக் இயருக்குள் வந்து விடுவாள் என்றாள்.

    அறையில் சிரிப்பொலி எழுந்தது. கிங்ஸ்லி, உன் அரட்டைக்குப் பதில் கொடுக்க ஒரு ஆள் வந்தாச்சே என்று பூரணி சிரித்தார்.

    இவர் சிவநாதன், அன் அசெட் டு த டிபார்ட்மென்ட் என்றார்.

    கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாள். என்ன கேள்விப்பட்டீங்க என்றான் கிங்ஸ்லி, ஆற்றங்கரை நாகரீகங்கள் என்ற இவருடைய கட்டுரை படிச்சிருக்கேன். எகிப்திய பிரமீடுகள். லெமூரியாக் கண்டம் பற்றிய இவருடைய கருத்துக்கள் பற்றி எங்க பேராசிரியர் கருணாகரன் சொல்லியிருக்கார்." என்றாள்.

    ஐ ம் ஆனர்ட் மேடம் என்று வணக்கம் சொன்னான்.

    அன்றைக்கெல்லாம் பெரிதாக வேலை கொடுக்கப்படவில்லை. பெயருக்கு ஒரு வகுப்பு எடுத்தாள். நூலகம் போனாள். முதல் நாள் அனுபவத்தை மகிழ்ச்சியோடு சுமந்து கொண்டு வீட்டுக்குப் போனாள். அங்கே நடக்கப்போகும் நாடகத்தை அறியாமல்.

    ***

    அன்றிரவு என்றைக்கும் இல்லாத வழக்கமாய் அப்பா சாப்பிடும் நேரத்திற்கு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள் பரஞ்ஜோதி. அண்ணி கீதாவும் உடன் வருவதைப் பார்த்து நந்தினி ஆச்சரியமாய் அருணைப் பார்த்தாள். கண்ணைச் சிமிட்டினாள். அருண் தோளை ஒரு குலுக்கு குலுக்கி விட்டு இட்டிலியை எடுத்துத் தட்டில் போட்டுக் கொள்ள ஆரம்பித்தான்.

    எல்லாரும் மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பரஞ்ஜோதி மெதுவாகத் தந்தையைப் பார்த்தாள். செருமிக் கொண்டான்.

    அப்பா அலட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வேணும்னால் அவனே சொல்லட்டுமே என்று எண்ணம். அம்மா அடுப்படியில் தோசை வார்த்துக் கொண்டிருந்தாள்.

    அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே என்றான் பரஞ்ஜோதி.

    கொஞ்சமென்னடா நிறையவே பேசலாம். காலையில் இருந்தே உன்னை எதுவோ அழுத்திக்கிட்டேயிருக்கு. கொட்டிரு. நீ சாப்டாச்சுன்னா போய் வெயிட் செய். நா வரன் என்றார்.

    பரஞ்ஜோதி கீதாவைப் பார்த்தான். இரண்டு பேரும் டிராயிங் ரூமில் காத்திருந்தார்கள். சரியாக அரைமணி நேரம் காக்க வைத்து விட்டு மனைவி மகள்கள் மற்றொரு மகன் சகிதம் அப்பா வந்தார்.

    அப்பா இவங்களெல்லாம் எதுக்கு. நாம மட்டும் பேசினாப் போதாதா? என்றான் பரஞ்ஜோதி.

    என்னடா இப்படிச் சொல்றே. நம்ம வீட்டிலேதான் எந்த ஒளிவு மறைவும் இல்லையே. சும்மா சொல்லு

    பரஞ்ஜோதி முகம் வாடிப் போனான். மீண்டும் கீதாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்காதது போல மேலே பார்த்தாள்.

    இல்லப்பா, எனக்கு ஒரு ஆப்ளிகேஷன்

    சொல்லு

    எனக்கு ஆஃபிசில் லோன் போடலாம்னு ஒரு வசதி குடுத்திருக்காங்க. எனக்குன்னு நீங்க கட்டிருக்கிற வீட்டை என் பேருக்கே எழுதிக் கொடுத்திட்டீங்கன்னா லோன் போட்டு மேலே கட்டலாம்னு இருக்கேன்

    பரஞ்ஜோதி இப்படிக் கேட்டதும் ஹாலில் கனத்த அமைதி நிலவியது. "இல்லப்பா. யாராவது வேலைக்கு வரவரைக்கும் நா இதைப் பத்திப் பேச வேண்டாம்னு இருந்தேன்

    ஓ, இன்னிக்குக் குந்தவி வேலைக்குப் போயிட்டாளாக்கும்? அதான் பேச்சை ஆரம்பிச்சுட்டே"

    ……….

    சரி பரஞ்ஜோதி நா சில கேள்வியெல்லாம் கேட்டுட்டு வரேன். அதுக்கு நீ பதில் சொல்லு. அப்புறமா முடிவு பண்ணலாம் என்றவர் தொடர்ந்து இது வரைக்கும் உன் சம்பளம் என்னன்னு கேட்டிருக்கேனா

    இல்லை

    வீட்டுக்கு எவ்வளவு தரேன்னு கேட்டிருக்கேனா

    ……….

    உன் ஒய்ப் நகை, நட்டு எவ்வளவுன்னு இதுவரை கேட்டிருக்கேனா?

    இல்லை

    இல்லை. ஆனா அவ இருபத்தைந்து பவுன் கொண்டு வந்திருக்கா. என்றான்.

    ஆ அது சரி அது எவ்வளவோ இருக்கட்டும். உங்க தாத்தா சொத்துன்னு இந்த ஊர்ல ஏதாவது இருக்காடா

    இல்லை

    ஆனா நானாத் தோணி சம்பாதித்து இங்க இடம் வாங்கி நாலு பேருக்கும் வீடு கட்டியிருக்கேன். அது போக நாம இருக்கறதுக்கு எல்லா வசதிகளோடும் இந்த வீடு இருக்கு. எல்லோருக்கும் பிரைவசி இருக்கிற மாதிரி வசதி செஞ்சு குடுத்திருக்கேன். இதுல என்ன குறைப்பா உனக்கு?

    குறையெல்லாம் ஒண்ணும் இல்லப்பா. ஆனாலும் நாளைக்கு என் குழந்தைகளுக்கு நானும் ஏதாவது சேமிக்க வேண்டாமா? நீங்க செஞ்சா மாதிரி

    வெரிகுட், ரொம்ப சந்தோஷம் என்றவர் தொடர்ந்து அப்ப ஒண்ணு செய், துடியலூர்லே இடம் வாங்கி போட்டிருக்கியே. அதிலேயே வீடு கட்டு. நான் கட்டியிருக்கிற வீடுகள் நாலு குழந்தைகளுக்கும் எனக்கு பின்னால கிடைக்கும். என்னோட காலத்துல ஒண்ணும் கிடைக்காது. இப்பவே குடுத்தா நாளைக்கு எனக்கே தேவை ஏற்பட்டா என்ன செய்யறது? இங்க வீட்டில எல்லா வசதியும் செஞ்சு குடுத்திருக்கேன். சந்தோஷமாய் இங்க இருக்கலாம். ஒரு தப்பும் இல்லை" என்றார்.

    மனைவியின் முன்னால் பரஞ்ஜோதிக்கு அவமானமாகப் போய்விட்டது. ஆனால் அப்பாவின் பிடிவாதம் அவனுக்குத் தெரியும். மெதுவாக என்னப்பா, நீங்கள் ஒரே பிடியாய் இப்படிச் சொல்கிறீர்கள்.

    அதெல்லாம் அப்படித்தான் என்றார். விவாதத்துக்கே இடம் வைக்காமல். பிறகு ஒரு நிமிடம் யோசித்து விட்டுப் பிறகு சொன்னார். வேணும்ன்னா ஒரு ஹெல்ப் பண்றேன். சரஸ்வதி நகைப் பெட்டிகளை எடுத்துட்டு வா என்றார். பார். நாலு பேருக்கும் ஒரே போல செஞ்சு வச்சிருக்கேன். உன் மனைவிக்கு ஒரு செட் எடுத்துக்கோ. நகைகளை அடகு வச்சுச் சமாளி" என்று சரஸ்வதியை விட்டு நகைகளைக் கொடுத்தார். மற்ற பெட்டிகளைக் கொண்டு போய் வைக்கச் சொன்னார்.

    பேப்பரைக் கையில் எடுத்துக் கொண்டார். சபை கலையலாம் என்பது போல சபை கலைந்தது.

    ***

    போ கீதா, உன் பேச்சைக் கேட்டுக்கிட்டு போய் அப்பாவைக கேள்வி கேட்டதே தப்பு. நீ குடுக்கற மாசப் பணத்துக்கு உனக்கு வீடு வேறயான்னு அப்பா கேட்காமக் கேட்ட மாதிரி இருந்தது. ஆனாலும் அப்பா எப்படி எல்லாம் ஒரே மாதிரி செஞ்சு வச்சிருக்கார். அவருகிட்டே போய் நாம வீடு எழுதிக் குடுன்னு கேட்டிருக்கலாமா? என்றான்.

    சும்மாயிருங்க. கேட்டதுனாலதான் இப்ப நாப்பது பவுன் குடுத்தாங்க. இல்லாட்டி எப்பவோ குடுப்பாங்க. இப்பப் போட்டு அனுபவிக்காம வேற எப்ப போட்டு அனுபவிக்கறதாம்? என்றாள்.

    அப்போ நகையெல்லாம் வீடு கட்டத் தரமாட்டியா, அப்புறம் எப்படி வீடு கட்டறதாம். என்றான்

    என்னவோ செய்ங்க. நா இதையெல்லாம் இந்த வயசுல போட்டுக்காம எப்ப போடறதாம்?

    உம் உன்னைக் கட்டிட்டு நா நல்லா அனுபவிக்கறேம்பா என்று சொல்லிக் கொண்டான் பரஞ்ஜோதி. மனதுக்குள்தான்.

    ***

    என்னங்க, நா ஒண்ணு கேட்கட்டுமா? என்று மெதுவாக ஆரம்பித்தாள் சரஸ்வதி.

    நீயுமா. சரி கேளு என்றார் மணிவாசகம்.

    நீங்க யாருக்காக சம்பாதிக்கிறீங்க? நாலு குழந்தைகளுக்குத் தானே? நாலு வீடும் அவங்களுக்காகத்தானே கட்டினீங்க? அவங்கவங்க பொருளை அவங்கவுங்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே? என்றாள்.

    சரசு உனக்கு வீடே உலகம். உலகமே தேவையில்லைங்கற மாதிரி ஒரு வாழ்க்கை அமைஞ்சு போச்சு. எல்லாத்திலயும் பால் மனசு உனக்கு, உறவுகள்ளாம் இன்றைக்கு பணத்தின் அடிப்படையில் மாறிக்கிட்டிருக்குன்னு உனக்கு புரியலை என்றார்.

    என்னங்க பெத்த புள்ளை கூடவா நம்மளை ஏமாத்திருவான் என்றாள்.

    இரு, இரு யாருன்னு சொன்னே? என்றார்.

    பெத்த புள்ளே

    ம்...பெத்த புள்ளே, என்று பொருமினார் மணிவாசகம். பாரு, சரஸ்வதி அவன் நம் பெத்த புள்ளையா இன்னைக்குப் பேசலே. தான் ஒரு தனியாள். தன் குடும்பம் வேறு என்ற ரிதியிலேதான் வீட்டைக் எழுதிக் கொடுங்கன்னு அவன் கேட்டான். நாம பெத்த பையனா இருந்தா அவன் என்ன கேட்டிருக்கணும்? என்னப்பா குந்தவிக்கு வேலை கிடைச்சாச்சு. மாப்பிள்ளை பார்க்கலாமர்ன்னு கேட்டிருக்கலாம். இன்னும் சொல்லப் போனா குந்தவி கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா செலவுக்கும் நான் தயாராய் இருக்கேன், இவனை நம்பி இல்லை. அப்ப இது பத்தி இன்னும் முனைப்பா இருக்கணும். அதை விட்டுட்டுப் பேச வந்துட்டான். அட குந்தவி கல்யாணம் கூட வேண்டாம். எனக்குன்னு உள்ள வீட்டிலே தனிக்குடித்தனம் போறேன்னு கேட்டிருந்தா கூட நா சந்தோஷா ப் பட்டிருப்பேன். மாசம் ஒரு தொகையைக் கொடுத்துட்டு ஒரு பெரிய தொகையை பேங்கில் போடறாண்டி. எங்கே குந்தவி கல்யாணத்துக்கு நா பணம் கேட்டுடுவேனோன்னு யோசனை பண்ணி இப்ப இந்தப் பாட்டு பாட ஆரம்பிச்சாச்சு

    சரஸ்வதி வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படியா சங்கதி என்று எண்ணிக் கொண்டவள், இந்த மனிதரையா காலையில் விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்தோம் என்று அவளுக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டது. பிறகு கேட்டாள். பின்னே ஏன் நீங்க ஒரு நாள் கூட இதைப்பத்தியெல்லாம் அவன்கிட்டே பேசலை என்றாள்.

    எதுக்காகப் பேசணும்? இப்படியெல்லாம் யோசிக்கறது இன்னைக்கு எல்லா வீட்டிலும் குழந்தைகளோட இயல்பாய் போயிடுச்சு. உன்னை மாதிரி சுயநலவாதி இல்லைடா நான்னு காட்டத்தான் நகையைக் காட்டினேன். ஒண்ணு புரிஞ்சுக்கோ. நம்ம காலத்துக்கும் நானோ நீயோ யார்கிட்டேயும் கையேந்தாத நிலைமை இருக்கிற மாதிரி நான் பாத்துக்குவேன். நான் பாத்துக் குடுகக்கறதை அவங்க வாங்கிக்கணும். மத்தபடிக்கு அவங்கவங்க உலகத்துல மோதிப் பாக்கணும். முட்டிப்பாக்கணும். கையூணிக் கரணம் போடணும். அதனாலதான் குந்தவியை வேலைக்குப் போக அனுமதிச்சிருக்கேன். புரியுதா? பேசிக் கொண்டே திரும்பி பார்த்தார். சரஸ்வதி தூங்கி போயிருந்தாள்.

    மணிவாசகம் புன்னகைத்துக் கொண்டார். செக்கு மாடு மாதிரி, ஆனா ஒரு சின்ன உலகத்துக்குள் சந்தோஷமாக வளைய வந்துட்டிருக்கே, நாலு பெத்திருக்கே. நாலும் நாலு விதம். அது மட்டுமில்லே, நாலுவிதமான உலகத்தையும் உனக்குக் காட்டப் போறாங்க. உனக்கு அதிர்ச்சியாயிருக்குமோ, ஆனந்தமாய் இருக்குமோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என்று ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு விட்டு தானும் படுத்தார்.

    ***

    மறுநாள் காலை டைனிங் டேபிளில் நந்தினி சுவாரசியமாக பிரெட்டில் ஜாம் தடவிக் கொண்டே அப்பாவைக் கேட்டாள்.

    ஏப்பா, நகை பண்ணினதுதான் பண்ணினீங்க. என்னை கேட்டுட்டுப் பண்ணிருக்கலாமில்ல. புடிச்ச டிசைனா பண்ணிருக்கலாம்.

    இப்ப என்ன? செய்தாப் போச்சு

    நந்தினி சொல்றதுதான் கரெக்ட். நீங்க என்னைக் கூட கேட்டிருக்கலாம்பா. எப்பவோ வரப்போற வைஃபுக்கு நகை யாரு கேட்டா? எனக்கொரு பர்ஸனல் கம்ப்யூட்டர் வாங்கியிருக்கலாம்.

    இப்பத்தான் என்ன வாங்கினாப் போச்சு இதைக் கேட்டவுடன் அருண் தலையைக் குனிந்து கொண்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டான்.

    என்னடா முணுமுணுக்கறே

    ஒண்ணுமில்லே. ரொம்பத் தப்புப் பண்றீங்கன்னு சொன்னேன்.

    என்ன தப்புப் பண்றேன்?

    ஆமா, பின்னே. கேக்கறதுக்கு முன்னால எல்லாத்தையும் அள்ளி நீட்டினா நாங்க வாழ்க்கையை எப்போ புரிஞ்சுக்கறது என்று அருண் கேட்டவுடன் அப்பா ஒரு நிமிடம் மலைத்துப் போனார். பிறகு மெதுவாக தலையைத் திருப்பி குந்தவியைப் பார்த்தார். குந்தவியும் ஆச்சரியமாக அருணைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    என்னம்மா. குந்தவி நேத்திலிருந்து நானும் பார்க்கறேன். நீ ஒண்ணும் சொல்லலையே என்றார்.

    குந்தவி அப்பாவை ஒரு நட்புடன் பார்த்தாள். சொல்ல என்னப்பா இருக்கு. நீங்க எங்களையெல்லாம் ஒரு குறையில்லாம வளர்த்திருக்கீங்க. இன்ணைக்கு வரைக்கும் உங்க கடமையை செஞ்சுட்டு வரீங்க. உங்களை மாதிரி ஒரு அம்மா, அப்பா கிடைச்ச புண்ணியமே எனக்கு நிறைவா இருக்கு. மேலே நீங்க கொடுக்கிற எதுவுமே இம்மெட்டீரியல்தாம்பா. இப்ப என்னுதுன்னு சொல்லியிருக்கீங்களே இதெல்லாம் கொடுக்க முடியலைன்னாலும் பரவாயில்லை. என்னோட ஸ்டேட்மென்ட் இதுதான். என்ன, இதை நான் சொன்னா கொஞ்சம் சினிமா டயலாக் மாதிரி தெரியும்னுதான் நா ஒண்ணும் சொல்லலை என்றாள்.

    அப்பா அம்மாவைப் பார்த்தார். அம்மா மகிழ்ச்சியுடன் நின்றாள். கொன்னுட்டக்கா, கை கொடு என்று அருண் கொஞ்சம் குதித்து கைகுலுக்கிக் கலாட்டா செய்து சூழ்நிலையை இதமாக்கி விட்டுக் கிளம்பிப் போனான்.

    பரஞ்ஜோதியும் மனைவி பின் தொடர வந்தான். அப்பா எதுவுமே நடக்காதது போல, வாப்பா பரஞ்ஜோதி, உனக்கு பிடித்த 'பூரி உருளைக்கிழங்கு' சாப்பிடு என்று கிளம்பிப் போனார்.

    2

    குந்தவி சுவாரசியமாக ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியை விவரித்துக் கொண்டிருந்தாள். அவளது சரளமான ஆங்கிலத்தில் லயித்துப் போயிருந்தார்கள், மாணவர்கள்.

    சரி இன்றைக்குப் பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருக்கா? இன்னொரு முறை தொகுத்துச் சொல்லட்டுமா? என்று தொகுத்துச் சொன்னாள். பிறகு உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா? என்றாள் தமிழில்.

    எனக்கு ஒண்ணு சொல்லணும் என்றான். ஒரு மாணவன்.

    சொல்லுங்க

    உங்க புடவை நல்லாருக்கு வகுப்பே நமுட்டுச் சிரிப்பு சிரித்தது. குந்தவி ஒரு நிமிடம் நின்றாள். பிறகு பளீரென சிரித்தாள்.

    ஓ, தாங்க்ஸ் என்றாள். பிறகு வேறு எதாவது உருப்படியாக பாட சம்பந்தமாக என்றாள். வகுப்பு மீண்டும் நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.

    மணியடிக்கவும் வெளியே வந்தாள். கிங்ஸ்லி தயாராக நின்றிருந்தான்.

    என்ன மேடம். பையன் டபாய்க்கிறானா? என்றான்.

    பின்னே, டபாய்க்கலைன்னா அவன் பையனே இல்லையே சிரித்தாள். அப்போது அந்த பக்கமாக சிவநாதன் வரவும் குட்மார்னிங் சொல்லி நடந்தாள்.

    ராதிகா வந்தாள். இருவரும் கான்டீன் போனார்கள்.

    அப்புறம் காலேஜெல்லாம் எப்படியிருக்கு என்றாள் ராதிகா.

    நல்லாத்தான் இருக்கு என்றாள்.

    அதற்குள் கோதையும் சாவித்திரியும் வந்தார்கள். ராதிகா கோதையைப பார்த்ததும் எரிச்சலான மாதிரி இருந்தது. நான் வரேன் என்று சொல்லிவிட்டு நகாந்து விட்டாள்.

    சாவித்திரி குந்தவியை நோக்கி மென்மையாகச் சிரித்தார். குந்தவி இன்னைக்கு என்னோட ட்ரிட் என்றார். குந்தவி மையமாகச் சிரித்து ஓ, தாங்ஸ் என்றாள்.

    கோதை கிசுகிசுப்பான குரலில் குந்தவி, ராதிகாகிட்டே பாத்து நடந்துக்கணும். அது ஒரு டைப் என்றார்.

    அவள் திடுக்கிட்டுப் போய் சாவித்திரியைப் பார்க்கவும், அவர் எதையும் கண்டு கொள்ளாதவர் போல் மைசூர் போண்டா நல்லா இருக்கில்லே என்றார்.

    குந்தவி இரண்டுக்கும் பொதுவாய்த் தலையை ஆட்டி வைத்தாள். என்ன நீங்க காலமே கார்ல வந்தாப்ல இருந்தது என்றார் கோதை. ஆமா, ஓசி, அப்பா கார் என்றாள் குந்தவி. அதைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்தைப் பற்றியெல்லாம் விசாரித்தார்.

    ஒரு கட்டத்தில் குந்தவியே எரிச்சலாக உணர்ந்தாள். சாவித்திரி தலையிட்டு விடுங்க, ஒரே நாளிலேயே குழந்தையை பயமுறுத்தாதீங்க எனவும் தான் பேச்சை மாற்றினார்.

    பரவாயில்லே. குந்தவி நல்ல வசதியான வீட்டுப் பொண்தான் என்று ஒரு தீர்மானத்துக்கு வந்தார். அதே சமயம் சிவநாதனும் கிங்ஸ்லியும் வரவும் சாவித்திரி அவர்களை அழைத்தார்.

    என்ன கோதைக்கா, குந்தவி மேடம் வாழ்க்கை வரலாறு முழுவதும் கேட்டாச்சா? என்றான் சிவநாதன்.

    ஏன் உனக்கு இன்னும் இன்னைக்கு யாரும் கிடைக்கலையாக்கும் என்றார் அவர்.

    சாவித்திரி அவர்களுக்கும் ஆர்டர் செய்தார். குந்தவி. என்ன ஹெல்ப் வேண்ணாலும் சிவநாதனைக் கேட்கலாம் என்றார் சாவித்திரி. குந்தவி சிவநாதனிடம் மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டாள்.

    சார் உங்களைப் பத்தி எங்க கருணாகரன் சார் நிறையச் சொல்லியிருக்கார்.

    மேடம் எப்பவும் அடுத்தவங்க சொல்றதை வச்சு ஒரு முடிவுக்கு வரக் கூடாது. நீங்களா தெரிஞ்சுக்கணும் இப்ப பாருங்க, நீங்க ரொம்ப அருமையாகக் கிளாஸ் எடுக்கறீங்களாம், பசங்க சொல்றாங்க. ஆனா நா அதை நேரில் பார்க்கணும். நானும் சாவித்திரியக்காவும் நாளைக்கு வரோம். உங்க கிளாசுக்கு. என்றான்.

    வாங்க சார் என்றாள். நா கொஞ்சம் லைப்ரரிக்கு போகணும் என்று நகர்ந்தாள்.

    நான் எப்ப அவ கிளாசுக்கு வரேன்னு சொன்னேன்? என்றார் சாவித்திரி.

    வாங்கக்கா. ப்ளீஸ். ரொம்ப அருமையா கிளாஸ் எடுக்கறாங்களாம். இவனைக் கூட்டிட்டுப் போனா இவன் சிரிச்சு வைப்பான் என்றான்.

    நூல் நிலையம் நுழைந்தாள். சற்று நேரம் கழித்து வேறு ஒரு புத்தகம் எடுக்கச் சென்றாள். அந்தப்புறம் இரண்டு ஆண்களின் மெல்லிய குரல் கேட்டது.

    சிவநாதா. என்ன இப்பவும் அமர்த்தலா பதிலே சொல்லமாட்டேங்கறே.

    என்ன பதில் சொல்லணும் சார்

    இல்ல செமத்தியா மூளையோட உங்க டிபார்டமன்டிற்கு ஒரு ஆள் வந்திருக்கு. அதைப் பத்திப் பேசவே மாட்டேங்கறே

    வேணாம் சார். மாமிகிட்டே சொன்னா உங்க டிஃபன் கட் தெரியுமா?

    அட போய்யா.அந்த டிஃபன் கட் ஆனா அதைத் தின்னு தொலைக்கறதிலேயிருந்து விடுதலை. எப்படியாவது இந்தப் பொண்ணாவது ஆகுமான்னு பாரு. ஐயோ முறைக்காதப்பா. நீயே பெரிய விசுவாமித்திரரு. உன்னை மாதிரி திருநீலகண்டருங்க தான் கவுந்தா செமத்தியாக் கவுந்துருவீங்க.

    வேண்டாம். இன்னொருத்தர் அனுமதியில்லாம அவங்களைப் பத்திப் பேசக் கூடாது. நா தேடின புத்தகம் கிடைச்சுருச்சு. விடுதலை என்று வெளியே வந்தான் சிவநாதன்.

    ஏய், சிவநாதா என்று அழைத்துக் கொண்டு வந்த வெங்கடேசலு இருவருமே அவளை எதிர்பார்க்கவில்லை. சற்றுத் திணறித்தான் போனார்கள்.

    இருந்தாலும் சட்டென தேறிக்கொண்ட சிவநாதன் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தான்.

    ரொம்ப சந்தோஷம் என்று உளறிக் கொட்டி விட்டு நகாந்தார்.

    அவர் பேசியது ஏதாவது காதிலே விழுந்திருந்தா தப்பா நினைச்சுக்காதீங்க மேடம். அடிப்படையில ரொம்ப நல்லவர். என் மேலே ரொம்ப அக்கறை. என்று லேசாகப் புன்னகைத்தான்.

    பரவாயில்லை சார். கருணாகரன் சார் கூட அப்படித்தான் என்றாள்.

    நேத்துப் பேசினார். உங்களைப் பத்தி ரொம்ப புகழ்றார். அப்படின்னா நீங்க ரொம்ப இன்டஜலின்டாதான் இருக்கணும்.

    அது அவரோட பெருந்தன்மை சார் என்றாள் அவள்.

    டிபார்ட்மென்டில் கைப்பையை எடுத்த போது பக்கத்தில் ராதிகாவிடம் கோதை சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. ராதிகா, புதுப் பொண்ணு உன்னை மாதிரி கலகலப்பில்லை. அழுத்தம். வசதி வேற. கர்வம் வேறயிருக்கும் போலிக்கு. எதுக்கும் எச்சரிக்கையாய் இரு.

    குந்தவிக்கு கோபம் குப்பென்று ஏறியது. ஒரு நிமிடம் அப்படியே சேரில் உட்கார்ந்து கொண்டாள். "பாரும்மா, புதுசா ஒரு இடத்துக்கு வேலைக்குப் போறே. அங்க எல்லாமே

    Enjoying the preview?
    Page 1 of 1