Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirai Mathithu Vidu!
Uyirai Mathithu Vidu!
Uyirai Mathithu Vidu!
Ebook267 pages2 hours

Uyirai Mathithu Vidu!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அன்புநிறை வாசக நெஞ்சங்களே...! சொந்தக் காரணங்களால் உங்களைச் சந்திப்பது சற்றே தாமதமாகிவிட்டது.
வழக்கமாக எனது நாவல்களில் நான் நல்ல மாமியார்களையே படைத்து வந்திருக்கிறேன். இந்த நாவலில் சற்றே மாறுபட்டிருக்கிறேன்.
நடைமுறை வாழ்க்கையில் நான் பார்த்த சில சம்பவங்களின் பிரதிபலிப்புத் தான் இது. வழக்கம் போல வாசகர்களாகிய தங்களின் நல்லாதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.
Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580106005594
Uyirai Mathithu Vidu!

Read more from Jaisakthi

Related to Uyirai Mathithu Vidu!

Related ebooks

Reviews for Uyirai Mathithu Vidu!

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirai Mathithu Vidu! - Jaisakthi

    http://www.pustaka.co.in

    உயிராய் மதித்து விடு!

    Uyirai Mathithu Vidu!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    என்னுரை

    அன்புநிறை வாசக நெஞ்சங்களே...! சொந்தக் காரணங்களால் உங்களைச் சந்திப்பது சற்றே தாமதமாகிவிட்டது.

    வழக்கமாக எனது நாவல்களில் நான் நல்ல மாமியார்களையே படைத்து வந்திருக்கிறேன். இந்த நாவலில் சற்றே மாறுபட்டிருக்கிறேன்.

    நடைமுறை வாழ்க்கையில் நான் பார்த்த சில சம்பவங்களின் பிரதிபலிப்புத் தான் இது. வழக்கம் போல வாசகர்களாகிய தங்களின் நல்லாதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

    அன்புடன்

    ஜெய்சக்தி

    ***

    1

    நல்லாப் பேசுங்க! என்று சொல்லிக் கொண்டிருந்தாள் ஆதிரை. அவள் கையிலே செல்ஃபோன் இருந்தது. இதழ்களிலே சிரிப்பு இருந்தது. கண்களிலே குறும்பு மின்னியது. நல்லாப் பேசுங்க. நான் வேண்டாம்னு சொல்லலையே! என்று சொல்லிக் கொண்டிருந்தாள் செல்ஃபோனில். ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் அந்தப் பக்கம் பேசுவது யார் என்றே அவளுக்கு தெரியாது.

    ஹலோ, நீங்க ரோஸ் தானே? கொஞ்சம் பேசலாமா? என்று அந்தப் பக்கம் இருந்து குரல் கேட்டது.

    ஆமா, நான் ரோஸ்தான். ஏன்னா நான் ரோஸ் கலராத்தான் இருப்பேன்! என்றாள் இவள்.

    ஹலோ! நீங்க... நீங்க... அந்தக் கடைத்தெருவில இருக்காங்களே ரோசி அவங்கதானே? என்று அந்தப் பக்கம் குரல் கேட்டது.

    கடைத்தெருவில் இல்லை. ஆனால் கடைவீதி எங்க ஊர்ல இருக்கு. ஆனா என் பேரு ரோஸி தான்! என்றாள் இவள்.

    அந்தப் பக்கம் சலித்துப் போனார்கள் போலும். பிறகு ஒரு நிமிடம் சுதாரித்துக் கொண்ட அந்தப் பக்கம் இருந்த பார்ட்டி இந்தப் பெண் குறும்பு செய்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு, ஹலோ, சரிங்க நீங்க ரோசிதான்னே வச்சுக்குவோம். உங்ககிட்டே கொஞ்ச நேரம் பேசலாமா? என்று கேட்டார்.

    பேசலாமே? எதைப் பத்திப் பேசணும்? சினிமாவைப் பத்தியா? அரசியலைப் பத்தியா? சமையலைப் பத்தியா? எதைப் பத்தி பேசணும்? என்றாள் இவள்.

    ம்... இது மூணும் இல்லைங்க. வேற ஒரு விஷயம் பேசணும்! என்றது அந்தக் குரல்.

    ‘ஆஹா! நமக்கு சரியாத்தான் இருப்பான் போல இருக்கு!’ என்று எண்ணிக் கொண்ட ஆதிரை சரி, சொல்லுங்க. என்ன பேசணும்? என்றாள்.

    பேசணும் மேடம். ஆனால் நேரிலே தான் பேசணும்! என்றார்கள்.

    நேர்லயா? ஹலோ! நான் எல்லாம் நேரில் வரணும்னா ரொம்ப காஸ்ட்லி! என்றாள் இவள்.

    ஓ! அவங்களா நீங்க? என்றார்கள் அவர்கள். அவங்க நாங்க இல்லைங்க. ஆனா நாங்க ரொம்ப பிஸியான பார்ட்டி. எங்க வரச் சொல்றீங்களோ வரோம். ஆனா அதுக்கு நீங்க நிறைய செலவு பண்ணனும்!

    அப்படியா? என்ன செலவு? எப்படிச் செலவு? என்றார்கள் அந்தப் பக்கம்.

    பெரிய பிட்சா ஆர்டர் பண்ணி வாங்கிட்டு வரணும். இல்லைன்னா நல்லதா காஞ்சிபுரம் பட்டுப் புடவை வாங்கிட்டு வரணும். இல்லைன்னா லேட்டஸ்ட் டிசைன்ல மாடர்ன் டிரஸ் எடுத்துக் கொடுக்கணும். இதெல்லாம் ஓகேன்னா நாங்க வரோம்! என்றாள்.

    ஓ,கே.ங்க வாங்க! என்றது அந்தப் பார்ட்டி.

    எங்கே வரணும்?

    நாங்க எங்க சொன்னாலும் வருவீங்களா?

    அதெல்லாம் முடியாதுங்க. நாங்க வந்து கோவிலுக்கு வருவோம். வேண்ணா சர்ச்சுக்கு வருவோம்! என்றாள் இவள்.

    அங்கெல்லாம் வந்து என்னங்க பண்றது? பஜனை பாடறதா? இல்லை ப்ரேயர் பண்றதா?

    அங்கெல்லாம்தாங்க வர முடியும். வேற இடத்துக்கெல்லாம் வர முடியாது.

    சரிங்க, நாங்க பிட்சா ஆர்டர் பண்ணிடறோம். உங்க வீட்டு விலாசம் சொல்லுங்க! என்றார்கள் அவர்கள்.

    இல்லல்லே, உங்க வீட்டு விலாசத்துக்கே பீட்சா ஆர்டர் பண்ணிட்டு வந்த உடனே எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க நாங்க வர்றோம்! என்று சொல்லி விட்டு கலகலவென்று சிரித்து விட்டு ஃபோனை ஆப் செய்தாள்.

    அந்த நேரத்தில் உள்ளே இருந்து அவளுடைய அண்ணி லாவண்யா,என்னம்மா ஃபோன்லே கலாட்டா? என்று கேட்டாள்.

    தெரியலை. அண்ணி. எவனோ ஃபோன் பண்ணி ரோஸா ரோஸாங்கறான். ரோஸ் இல்லைன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறான். ஆமாய்யா, நான் ரோஸ்னு கொஞ்ச நேரம் கலாய்ச்சேன்! என்றாள்.

    லாவண்யா அவளைக் கவலையுடன் பார்த்தாள்.வேண்டாம்மா வேண்டாம். ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது! என்றாள்.

    போங்கண்ணி, இவங்களையெல்லாம் இப்படித்தான் பேசி அடக்கணும்! என்றாள். ஆனால், அண்ணி அந்தப் பக்கம் போனதற்குப் பிறகு ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜைப் படித்துப் பார்த்தவுடன் அவள் முகம் மிகவும் சிவந்துவிட்டது.

    அந்த மெசேஜ் பற்றி அண்ணியிடம் சொன்னால் நன்றாக உதை கிடைக்கும் என்று எண்ணியவள் என்ன செய்வது என்று யோசித்து விட்டு தன்னிடத்திலே ஐந்தாறு சிம்களை வைத்திருந்தாளே அந்த சிம்மிலே ஒன்றை எடுத்துப்போட்டாள். முதல் வேலையாக அந்த செல்ஃபோனில் இருந்த சிம்மை மாற்றிவிட்டாள்.

    ‘அப்பாடா சாமி! இப்போதைக்குத் தப்பித்தோம்!’ என்று நினைத்தாள்.

    அண்ணி, பாருங்க! நான் சிம்மையே மாத்திட்டேன்! என்று சிரித்தாள்.

    லாவண்யா, ஏம்மா, அஞ்சாறு சிம் வச்சிருக்கே? சரி எத்தனை நாளைக்கு ஏமாத்த முடியும்?

    அதெல்லாம் நான் தப்பிச்சுடுவேங்க அண்ணி! என்றாள்.

    என்னமோ செய்! இன்னும் ரெண்டு மூணு தடவை பார்த்துட்டு உங்க அண்ணன் கிட்டே சொல்லிடுவேன்.

    அதை மட்டும் செய்யாதீங்க. அப்புறம் ஐடியா கொடுத்ததே நீங்கதான்னு சொல்லிடுவேன்! என்றாள் இவள்.

    லாவண்யா கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, அடிப்பாவி, நீ சொன்னாலும் சொல்லுவே? என்றாள்.

    அண்ணி, பேசிப் பேசி களைச்சுப் போயிட்டேன் அண்ணி. எனக்கு சூடா ஒரு காஃபியோ டீயோ கொடுங்க.

    இப்பத்தான் எனக்கு டீ போட்டேன். உனக்கும் சேத்திப் போடறேன். இரும்மா! என்றாள்.

    அதற்குள்ளாக லாவண்யாவிற்கு அவன் கணவன் கதிர்வேலிடம் இருந்து ஃபோன் வந்தது. என்னங்க சொல்லுங்க? என்றாள்.

    அவன் ஏதோ அந்தப் பக்கம் இருந்து சொன்னான். அப்படியா? சரி, சரி, ஒண்ணும் பிரச்சினை இல்லை. நீங்க கூட்டிட்டு வாங்க! என்றாள்.

    அவன் அந்தப் பக்கம் என்ன சொன்னானோ தெரியவில்லை.பலகாரம்தானே? செஞ்சர்றேன். நீங்க ஒண்ணும் வாங்கிட்டெல்லாம் வர வேண்டாம். நம்ம வீட்லயே செஞ்சர்லாம் என்றாள்.

    சரிம்மா! என்று அவன் அந்தப் பக்கம் ஃபோனை வைத்தான்.

    மளமளவென்று ஏதோ பலகாரம் செய்ய ஆரம்பித்தாள் லாவண்யா.

    என்ன அண்ணி? யாராவது விருந்தாளியா? என்றாள்.

    இதோ பாரு ஆதிரை, நான் உன்னை ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டுக்கறேன். உனக்குத் தெரியுமில்லே? எனக்கு கவனம் மாறுச்சுன்னா அளவு ஜாஸ்தியாவோ இல்லை கம்மியாவோ போட்ருவேன். உங்க அண்ணாவுக்கு ரொம்ப முக்கியமான கெஸ்ட்டாம். யாரையோ கூட்டிட்டு வரப் போறாங்க. இந்தா, இந்தக் கப்லே சூடா டீ இருக்கு. இந்தப் பிளேட்லே பிஸ்கட், முறுக்கு பக்கோடா எல்லாம் வச்சுருக்கேன். எடுத்துட்டுப் போய் ஹால்லே உட்கார்ந்து சாப்பிடுவியாம். என்ன? என்றாள்.

    ம்...! போனாப் போகுது அப்படின்னு போறேன். ஃப்ரெஷ்ஷா பக்கோடா பண்ணிக் கொடுத்திருக்கீங்க. ஒரு வாரமா இந்த முறுக்கையே வச்சுகிட்டுக் கொல்றீங்க! என்றாள்.

    சரி, இப்பத்தான் ஃப்ரெஷ்ஷா வேற பலகாரம் பண்ணப் போறேன்னில்லே? என்ன பண்ணலாம். அதை மட்டும் சொல்லிட்டுப் போ! என்றாள்.

    இப்ப ஒரு நேரத்துக்கு மட்டுமா? இல்லை ஒரு வாரத்துக்கு வச்சுக்கற மாதிரியா? என்றாள் ஆதிரை.

    நீ ஒரு பட்டிமன்றமே ஆரம்பிச்சுடுவே. சரி இந்த நேரத்துக்கு மட்டும் ஃப்ரெஷ்ஷா ஈஸியா செய்யற மாதிரி சொல்லு.

    வெஜிடெபிள் போண்டா பண்ணுங்க. நீங்க பெரிசு பெரிசா பண்ணுவீங்களே அந்த வெஜிடபிள் போண்டா.

    இதோ, இந்தப் பக்கம் காயை வேக வச்சுட்டு அந்தப் பக்கம் மாவைக் கலக்கினா வேலை முடிஞ்சது. ஸ்வீட்டு? என்றாள் லாவண்யா.

    அண்ணி ஸ்வீட்டெல்லாம் கடையில் வாங்கிகிட்டா என்ன? நான் போய் உங்களுக்கு பாதுஷா வாங்கிட்டு வந்து வைக்கிறேன். நான் டீ குடிச்சுட்டுப் போயிட்டு வரேன்! என்றாள.

    குட் கேர்ள்! என்று பாராட்டிய லாவண்டியா. அவசர அவசரமாக வெஜிடெபிள் போண்டா செய்ய ஆரம்பித்தாள். அவள் உருளைக்கிழங்கு கொஞ்சம் பீட்ரூட் கூட போடுவாள். பீட்ரூட், கேரட், பீன்ஸ் என்னென்ன காய்கறி உண்டோ எல்லாம் போட்டு ஒரு வெஜிடபிள் போண்டா செய்வாள். அது சுவையாகவும் இருக்கும், சத்தாகவும் இருக்கும்.

    ஹாலில் இருந்த ஆதிரை காலாட்டிக் கொண்டு தனக்குக் கிடைத்த அந்தத் தேனீரையும் தின்பண்டங்களையும் ஒரு வழியாக முடித்து விட்டு எதிரே இருந்த கடைக்குப் போனாள். போய் அரை கிலோ பாதுஷா வாங்கிட்டு வந்து விட்டு, அண்ணி, இந்தாங்க பாதுஷா வாங்கிட்டு வந்துட்டேன். இத பாருங்க, பாதாம் மில்க் மிக்ஸ் கூட வாங்கிட்டு வந்துட்டேன்! என்று கொடுத்தாள்.

    ரொம்பத் தாங்க்ஸ்ம்மா! என்று வாங்கிக்கொண்டாள் லாவண்யா.

    மறுபடியும் ஹாலில் வந்து அமர்ந்தாள். இப்பொழுதும் ஒரு ராங் கால் வந்தது. இந்த மாதிரி ராங் கால் வந்தாலே அவளுக்கு குஷியாகிவிடும். இப்பொழுது யாரோ நடுத்தர வயதுக்காரர் பேசினார்.

    அம்மா, நான் பழனியில் இருந்து பேசறேன்! என்றார்.

    பழனியில் இருந்துன்னா? முருகனா? என்றாள் இவள். தற்செயலாக அவருடைய பெயரும் முருகன் என்று அமைந்தது போலும்.

    ஆமாம்மா, முருகசாமிதான் பேசறேன்! என்றார்.

    எப்படி இருக்கீங்க? ஆண்டிக் கோலத்தில் இருக்கீங்களா? ராஜா வேஷத்தில் இருக்கீங்களா? என்று கேட்டாள் இவள். அந்தப் பக்கம் முருகசாமி ஒரு நிமிடம் திணறிப் போனார்.

    அம்மா, நீங்க யாரு பேசறது சுப்புலட்சுமியா? என்று கேட்டார் அந்தப் பக்கம் இருந்து.

    இல்லைங்க. தனலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி இந்தப் பேர்ல ஏதாவது ஒண்ணு வேண்ணா வச்சுக்கோங்க! என்றாள் இவள்.

    அந்தப் பக்கம் பேசியவர் கடுப்பாகிவிட்டார். ஏம்மா? நான் முக்கியமான ஒரு விஷயத்துக்குப் பேசணும்னு கூப்பிட்டேன். கால் தப்பா வந்துடுச்சாட்டம் இருக்கு. இப்படி வாயடிக்கிறியேம்மா! என்றார்.

    ஹலோ! கூப்பிட்டது நீங்க. நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னேன். இதுக்கு என்ன கோபிச்சுக்கறீங்க? என்றாள் இவள்.

    ம்... அம்மா. பெரியவங்க சின்னவங்கன்னு பாத்துப் பேசுங்க! என்றார் அவர்.

    நீங்க எவ்வளவு பெரியவர்னு எனக்கு என்ன தெரியும்?

    ஐய்யோ! ஆண்டவா! நேரமே சரியில்லை போல இருக்கு! என்று அவர் அந்தப் பக்கம் ஆஃப் செய்தார். இவள் இந்தப் பக்கம் கலகலவென்று சிரித்துக்கொண்டே ஃபோனை ஆப் செய்தாள். அந்த நேரத்திற்கு கதிர்வேல் உள்ளே நுழைந்தான்.

    என்னம்மா கலாட்டா? என்றான்.

    வழக்கம் போல ராங் கால்தான் அண்ணா. பழனியில், இருந்து முருகர்சாமி பேசறேன்னாரு. நான் வந்து ராஜா வேஷத்துல இருக்கீங்களா ஆண்டி வேஷத்தில் இருக்கீங்களான்னு கேட்டேன்! என்று சொல்லிக்கொண்டே திரும்பினாள். திரும்பியவள் ஒரு நிமிடம் திகைத்துப்போய் விட்டாள்.

    ஏனென்றால் கதிர்வேலுடன் இன்னொருவரும் நின்று கொண்டிருந்தார். இளைஞன்! நல்ல உயரம். அந்த உயரத்துக்கேற்ற ஆகிருதியோடு நின்று கொண்டிருந்தான். கண்களில் குறும்பு மின்னியது. இதழ்க் கடையோரத்தில் லேசான சிரிப்பு இருந்தது.

    லாவண்யா! என்று குரல் கொடுத்தான் கதிர்வேல். லாவண்யா உள்ளே இருந்து வேகமாக வந்தாள்.

    ‘நல்ல வேளை! அண்ணி முகம் திருத்திக்கொண்டு வருகிறாள்!’ என்று அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டாள் ஆதிரை.

    இவன் தான் விஜய் பிரகாஷ். நான் சொன்னேனில்லே? என்றான் அவன் லாவண்யாவிடம்.

    வாங்க வாங்க. நம்ம விஜய் அண்ணா! எனக்குத் தெரியுமே? என்று வரவேற்றாள் அவள்.

    இது என் சிஸ்டர்ப்பா. ஆதிரை.அறுந்த வாலு! என்று சிரித்துக்கொண்டே அறிமுகப்படுத்தினான் கதிர்வேல்.

    இரண்டு பேருக்கும் பொதுப்படையாக அவன் வணக்கம் சொன்னான்.

    ஆதிரைக்கு சற்றே வெட்கம் ஏற்பட்டுவிட்டது போலும். சிவந்த முகத்துடன் வணக்கம் சொல்லி விட்டு, அண்ணி, நான் உள்ளே போய் டிஃபன் எடுத்துட்டு வரேன்! என்று நல்ல பிள்ளையாக உள்ளே போய்விட்டாள்.

    லாவண்யாவும் கதிர்வேலும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.

    உட்காருப்பா! என்று அவனை அமர வைத்துவிட்டு, ஒரு நிமிஷம்! என்று கதிர்வேல் உள்ளே போனான். லாவண்யாவும் அவன் பின்னாலேயே போனாள்.

    உள்ளே இரண்டு தட்டிலே பாதுஷா, இன்னொரு தட்டிலே வெஜிடபிள் போண்டா இவற்றையெல்லாம் வைத்து ஒரு டிரேயிலே எடுத்துக்கொண்டு வந்தாள் ஆதிரை.

    சாப்பிடுங்க! என்று அவன் முன்னாலே வைத்தாள். அப்போதுதான் அவள் சற்றும் எதிர்பாராமல் அந்த வார்த்தைகளை சொன்னான் விஜயபிரகாஷ். அவள் திகைத்துப்போனாள்.

    ***

    2

    நீங்கதான் அந்த ரோஸ்ஸா? என்று விஜயபிரகாஷ் கேட்டு சிரிக்கவும் ஆதிரை திகைத்து விட்டாள்.

    நான்... நான்... சிம்மை மாத்திட்டனே? எப்படிக் கண்டுபிடிச்சீங்க? என்று கேட்டாள்.

    தெரியுதே! குரல் தெரியுது. அந்தக் குறும்பு தெரியுது என்றான்.

    அப்ப நீங்க தான் அந்த ரோஸைக் கூப்பிட்டவங்களா? என்றாள் அவள்.

    ஆமா, ரோஸ் எங்க ஆஃபீஸ் ஸ்டாஃப். அவங்களைக் கூப்பிட்டேன். நீங்க என்ன அந்தப் போடு போடறீங்க! என்றான்.

    ப்ளீஸ்! அண்ணாகிட்டே சொல்லிடாதீங்க! என்றாள்.

    சரி, சரி, ஆனா நான் ஒண்ணு சொல்லட்டுமா? என்றான் அவன்.

    சொல்லுங்க! என்று கேட்டாள்.

    இல்லே, இந்த மாதிரிக் குறும்பு செய்யறதெல்லாம் என்னைக்குமே டேஞ்சரஸ்தான். அந்தப் பக்கம் இருக்கற பார்ட்டி எப்படின்னு சொல்ல முடியாது. டிரேஸ் அவுட் பண்ணிட்டு வந்துட்டான்னு வச்சுக்கோங்க, உங்களுக்குப் பெரிய தொல்லையாப் போகும். எதுக்கும் வார்னிங் கொடுக்கறேன்! என்றான்.

    அதில் உண்மை இருந்ததால் அவளால் வாதாட முடியவில்லை.

    ஓ.கே. ஐ’ல் டேக் கேர்! என்றாள்.

    ஆனால் அவளைப் பார்த்தால் அப்படியெல்லாம் குறும்பை விட்டு விடுகிறவள் போல அவனுக்கு தெரியவில்லை. இருந்தாலும், சொல்கிற கடமைக்கு சொல்லிவிட்டோம் என்று எண்ணிக் கொண்டான்.

    அந்த ஒரு நிமிட இடைவெளிக்குள்ளாக கதிர்வேலும் லாவண்யாவும் திரும்ப வந்தார்கள். அவன் கதிர்வேல் லாவண்யா இரண்டு பேருக்குமே தூரத்து உறவு, ஏனென்றால் கதிர்வேலும் லாவண்யாவும் சொந்தத்துக்குள்ளே தான் திருமணம் செய்திருந்தார்கள்.

    நேரடியான உறவு முறை இல்லை. இரண்டாவது வட்டம் மூன்றாவது வட்டம் என்ற முறையிலேயே இரண்டு பேரும் மாமன் மகன், அத்தை மகள் என்கிற உறவில் திருமணம் செய்து கொண்டிருந்தார்கள்.

    விஜய்பிரகாஷ் அந்த வகையில் லாவண்யாவுக்கு சகோதரன் முறையானது. கதிர்வேலுக்கும் கிட்டத்தட்ட மச்சான் முறை

    Enjoying the preview?
    Page 1 of 1