Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Uyirin Urave
En Uyirin Urave
En Uyirin Urave
Ebook188 pages1 hour

En Uyirin Urave

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580106005593
En Uyirin Urave

Read more from Jaisakthi

Related to En Uyirin Urave

Related ebooks

Reviews for En Uyirin Urave

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Uyirin Urave - Jaisakthi

    http://www.pustaka.co.in

    என் உயிரின் உறவே!

    En Uyirin Urave!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 1

    நல்வரவு மிஸ்டர் இலக்கியன்! என்று வரவேற்றார் ஜெனரல் மேனேஜர்.

    தாங்க்யூ சார்! என்று எதிர்மொழிந்தான் இலக்கியன்.

    நல்ல வேளை! எங்க கம்பெனிக்கு வர ஒத்துகிட்டீங்க! என்றார் ஜெனரல் மேனஜர் ரவி.

    இல்லைங்க சார்! அந்தக் கம்பெனியிலே ஓனரோட சன்னும் வந்துட்டாரு. ஒரு உறையிலே இரண்டு கத்தி இருக்க முடியாதுங்களே சார்! நாம ஏதாவது ஒரு கருத்து சொல்வோம். அவர் அதுக்கு மாறுபடலாம். உறவுகள் கெட்டுப் போகும். அதனால நல்லவிதமா சொல்லிட்டு நான் வெளியே வந்துட்டேன். கரெக்டா அந்த நேரத்துக்கு நீங்களும் கூப்பிட்டீங்க. வேற ரெண்டு கம்பெனியிலே இருந்து கூட ஆஃபர் வந்தது! என்றான் எச்சரிக்கையாக.

    ஏதோ இந்த ஒரு கம்பெனியில் இருந்துதான் அழைப்பு வந்ததாகக் காட்டிக்கொண்டால் உடனே இவர்கள் நம்மைவிட்டால் வேறு வழியில்லை என்பது போல நடந்து கொள்வார்கள் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.

    அவர் சிரித்துக் கொண்டார். ஆமாமா, கேள்விப்பட்டேன். எங்களுடைய போட்டிக் கம்பெனியிலே இருந்து கூட கூப்பிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். இன்னைக்கு இன்னொரு லேடி கூட ஜாய்ன் பண்றாங்க. அவங்களை எச்.ஆர்.ல போட்ரலாம்னு இருக்கோம். ரொம்பக் கெட்டிக்காரங்க! என்றார் ரவி.

    அப்படிங்களா சார்? என்று அவன் மேலோட்டமாகக் கேட்டுக் கொண்டான். அந்த நேரத்தில் ரவியின் உதவியாளர் வந்து, சார், சௌபர்ணிகா வந்துட்டாங்க! என்றான்.

    சௌபர்ணிகா! பேரு நல்லாயிருக்கில்லே? என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் இலக்கியன்.

    ரெண்டு பேரு பேரும் வித்தியாசம் சார். நீங்க இலக்கியன். அவங்க சௌபர்ணிகா! என்று சிரித்த ரவி, வரச்சொல்லுங்க! என்றார்.

    அந்த சௌபர்ணிகா உள்ளே வந்தாள். வாங்க, மிஸ் சௌபர்ணிகா! என்று வரவேற்றார் ரவி. ஆனால் இலக்கியனுக்கு எழுந்து நின்று வரவேற்றதைப் போல அவளை எழுந்து நின்று வரவேற்கவில்லை என்பதை கவனித்துக் கொண்ட இலக்கியனுக்குக் கொஞ்சம் திருப்திதான்.

    உட்காருங்க, மிஸ் சௌபர்ணிகா! என்றார்.

    தாங்க் யூ சார்! என்று அவள் அமர்ந்தாள்.

    பரவாயில்லை. ரெண்டு பேருமே நல்ல நேரம் முடியறதுக்குள்ளே வந்துட்டீங்க! என்றவர் இவர் மிஸ்டர் இலக்கியன். இவரும் இன்னைக்கு நம்ம கம்பெனில ஜாய்ன் பண்றாரு. எக்ஸ்பீரியன்ஸ்ட். வேற ஒரு கம்பெனில பெரிய போஸ்ட்லே இருந்துட்டு இங்க வந்திருக்காரு. ஆக்சுவலா அவரும் என்னோட கேடர்ல இன்னொரு செக்ஷனுக்கு மேனஜராத்தான் வந்திருக்காரு! என்றார்.

    அப்படியா சார்? வணக்கம்! என்றாள் சௌபர்ணிகா.

    வணக்கம்! என்றான் அவனும்.

    இந்தப் பொண்ணு மிஸ் சௌபர்ணிகானுட்டு நம்ம எம்.டி.க்கு ரொம்ப வேண்டியவங்க பொண்ணு. கோல்டு மெடலிஸ்ட்! என்றார் ரவி.

    அவன் ஒரு லேசான புன்னகையுடன், அப்படியா? என்று கேட்டுக் கொண்டான். ஆனால் மனதுக்குள்,’கல்லூரியிலே பெரிய அளவிலே ஷைன் பண்றவங்களெல்லாம் வெளியில பெரிசா ஷைன் பண்றதில்லை!’ என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றியது.

    ஓகே, மேடம். நான் என் அஸிஸ்டெண்ட்டைக் கூப்பிட்டு உங்களுக்கு எங்கே இடம், உங்க டியூட்டி என்னன்னு சொல்லச் சொல்றேன்!

    ஜகந்நாதன் என்று அழைத்தார். ஜகந்நாதன் ஓடி வந்தார். ஜகந்நாதன் நம்ம பி.ஏ. என்று சொல்லிவிட்டு. ஜகன், இவங்களைக் கூட்டிட்டுப் போய் இவங்களோட சீட், இவங்க டியூட்டி பத்தியெல்லாம் சொல்லிடுங்க! என்றார்.

    சரிங்க சார்! என்று ஜகந்நாதன் அழைத்துக்கொண்டு போனார். இந்தப் பக்கம் இலக்கியனிடம் திரும்பி, அது யாரு சார் உங்களுக்கு இலக்கியன்னு பேரு வச்சாங்க! என்றார்.

    எங்க அப்பா சார். எங்க அப்பாவுக்கு இலக்கியத்திலெல்லாம் ரொம்ப ஆர்வம். அதனால எனக்கு இலக்கியன்னு பேரு வச்சாரு. என் சிஸ்டருக்கு பாரதின்னு பேரு வச்சாரு! என்றான்.

    நைஸ், நைஸ்! என்று சிலாகித்துக் கொண்டார் ரவி. சார், இப்ப உங்களை புரொடக்ஷன்ல தான் போட்டிருக்கு. ஏன்னா அதிலே உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. நான் மார்க்கெட்டிங் பார்த்துக்கறேன். நீங்க ஏற்கனவே இந்த ஃபீல்டிலே இருந்ததனாலே அதிலே ஏதாவது இன்னவேட்டிவா நீங்க செய்யறதுக்கெல்லாம் சௌகரியமா இருக்கும் சார்! என்றார்.

    ஓ, கே! நோ ப்ராப்ளம்! என்று தலை அசைத்துக்கொண்டான் இலக்கியன்.

    எம்.டி. உங்களைப் பார்க்கலைன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அவரு இன்னைக்கு பாம்பே போயிருக்காரு. இன்னைக்கு ஈவினிங் வந்துடுவாரு. ஆக்சுவலா உங்களுக்கு டைம் இருந்தா அவரோட ரெஸிடன்ஸுக்கே வரச் சொன்னாரு. அப்படி ஏதாவது புரோகிராம் இருந்தா நாளைக்கு உங்களை மீட் பண்றேன்னு சொன்னாரு! என்றார்.

    இலக்கியனுக்கு இப்போது வரை அது ஒரு குறையாக இருந்தது. தன்னொத்த கேடர்லே இருக்கிற ஒருத்தரை வைத்துத் தன்னை வரவேற்கிறார்களே என்று இருந்தது. அதுவும் இப்பொழுது தெளிவாயிற்று. பார்க்கறேன். இன்னைக்கு ஈவினிங் அநேகமா எதுவும் புரோகிராம் இல்லைன்னு நினைக்கிறேன். இருந்தாக் கூட மாத்திட்டு நான் போய் எம்.டி.யைப் பார்க்க முடியுமான்னு பார்க்கறேன்!

    தட்ஸ் ரியலி நைஸ்! என்றார் ரவி. அவனை அழைத்துக் கொண்டு போய் புரொடக்ஷன் பகுதியைக் காட்டினார்.

    கோவையில் மிகப்பெரிய கிரைண்டர் கம்பெனி அது. அங்கே தயாரிக்கிற கிரைண்டர்கள், பம்பு செட்கள் உலகம் முழுக்க பிரசித்தம். அதனால் அவனுக்கும் லகரங்களில் தான் சம்பளம் பேசப்பட்டிருந்தது. ஏற்கனவே இருந்த கம்பெனியிலும் அவன் நன்றாகவே சம்பாதித்துக் கொண்டிருந்தான் என்பதால் வாழ்க்கைத் தரத்திற்கெல்லாம் ஒன்றும் குறைவில்லை.

    அப்பா காலத்தில் ஒரு அரசாங்க வேலையில் இருந்தார். நடுத்தரமான குடும்பம். இன்றைக்குக் கொஞ்சம் வசதியான குடும்பம் என்ற அளவுக்குத் தன்னுடைய குடும்பத்தை கை தூக்கி விட்டிருக்கிறான் இலக்கியன்.

    ஏன்? அந்தப் பழைய கம்பெனியில் முதலாளியினுடைய மகனே வந்து பொறுப்பு எடுத்துக் கொள்கிறான் என்கிற போது இவனுக்கு கொஞ்சம்’கருக்’கென்றது. ஏனென்றால் முதலாளி நல்லவர். பொறுமையானவர். இவன் சொல்கிற திருத்தங்களையெல்லாம் ஏற்றுக்கொள்வார். ஆனால் மகன் வெளி நாட்டில் படித்து விட்டு வந்தவன் என்றதோடு அதை எப்போதும் தலைக்குள்ளேயே வைத்திருப்பவன். அனுபவம் போதாது. ஆனால் அனுபவசாலிகள் சொன்னால் ஒரு அலட்சியமாகத்தான் ஏற்றுக் கொள்வான். அவன் பேர் கௌரவ்.

    கௌரவினுடைய தந்தை கோடீஸ்வரன். பேருக்கு ஏற்ற மாதிரி அவர் கோடீஸ்வரன் தான். ஆனால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் தெரியும். கௌரவுக்கும் தனக்கும் கண்டிப்பாக ஒத்து வராது என்பதைத் தெரிந்து கொண்ட இலக்கியன் வெளியே வேலைக்கு முயற்சிக்கிறான் என்று தெரிந்தவுடனேயே இரண்டு மூன்று கம்பெனிகள் அவனை அழைக்கத்தான் செய்தார்கள். ஆனால் இந்த உலகப் புகழ்பெற்ற கம்பெனியில் ஒரு பங்காக இருப்பதற்கு அவனுக்கும் விருப்பமாக இருந்தது. இன்னும் ஐந்தாண்டுகள்! அதற்குப் பிறகு சொந்தமாகவே ஒரு கம்பெனி சின்ன அளவில் ஆரம்பித்து விட வேண்டும் என்பது அவனுடைய கனவாக இருந்தது. அதனால் தான் இந்த கம்பெனிக்கு உடனே ஒப்புதல் கொடுத்தான்.

    ரவி இயல்பாகப் பழகினார். வயதிலும் இவனை விட ஒரு நான்கைந்து வயதுதான் பெரியவராக இருந்தார். அதனால் சுலபமாக அவரிடம் எடுத்துரைக்க முடியும் என்று தோன்றியது.

    மேரேஜ் ஆயிடுச்சா இலக்கியன்? என்று கேட்டார்.

    இல்லைங்க சார்! இப்போதைக்கு அதை நினைக்கறதா இல்லை. என்ன இப்ப இருபத்தாறு வயசு தானே ஆச்சு? என்றான் இவன்.

    இருபத்தேழு சரியான வயசு சார்! அதுக்கு மேலே டிலே பண்ணிடாதீங்க. நான் பாருங்க இருபத்தேழிலே மேரேஜ் பண்ணினேன். இருபத்தெட்டிலே ஒரு குழந்தை. முப்பதிலே ஒண்ணு. இரண்டு குழந்தைங்களுக்காக வேலையை விட்டுட்டு ஹவுஸ் வைஃப்பா இருந்தாங்க நம்ம வைஃப். இப்ப ரெண்டு குழந்தைங்களும் ஸ்கூலுக்குப் போன உடனே வேலைக்குப் போக ஆசைப் பட்டாங்க. எங்க அம்மா இருக்காங்க. வேலைக்கு ஆளைப் போட்டுட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு! என்றார்.

    அப்படிங்களா? எந்தக் கம்பெனி? என்றான் இவன்.

    இல்லே, பேங்க் எக்ஸாம் எழுதினாங்க. அது கிடைச்சது. அதுக்குப் போயிட்டாங்க! என்றார்.

    நல்லதாப் போச்சே! என்றான் இலக்கியன்.

    ஆனா நம்பளுக்கு இந்த அரசாங்க வேலையெல்லாம் ஒத்து வராது இலக்கியன். நம்மளுக்கு இந்த மாதிரி த்ரில்லிங்கா, சேலஞ்சிங்கா ஏதாவது இன்னவேட்டிவா பண்ணத்தான் பிடிக்கும்! என்றார் ரவி.

    ம்... எனக்கும் கூட அதான் ஐடியா. எனக்கும் கவர்மெண்ட் ஜாபெல்லாம் கிடைச்சது நான் போகலை. ஏன்னா நைன் டு ஃபைவ் ஜாப் பண்ணி பழகிட்டோம்னா அப்படியே ஸ்டெரைல் ஆயிடுவோம். லெதார்ஜிக்காயிடுவோம் அப்படின்னு எனக்கு ஒரு எண்ணம்! என்றான் இலக்கியன்.

    அது நிஜம்தான். எனக்கும் அப்படித்தான் தோணுது! என்றார் ரவி. இப்படியே பேசிக் கொண்டே அவர்கள் அந்த உற்பத்திக் களம் முழுவதையும் பார்த்து விட்டு வந்தார்கள்.

    இரண்டு மூன்று பிரிவுகளாக அங்கே பிரித்து வேலை நடந்துகொண்டிருந்தது.

    பம்ப் செட் கம்பெனி அந்தப் பக்கம் இருக்குது. அதுக்கு இங்கே இருந்து கொஞ்சம் ஒரு பத்து இருபது நிமிஷம் போகணும். நீங்க இப்போதைக்கு இதிலே கான்சன்ட்ரேட் பண்ணுங்க! என்றார் ரவி.

    நல்லதுங்க சார்! என்றான் இலக்கியன். தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய அறைக்குப் போய் கேபினில் அமர்ந்தான். ஒவ்வொருவராக அலுவலர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ரவியும் கூட இருந்தார்.

    கடைசியாக சௌபர்ணிகா வந்து, நான்...! என்று ஆரம்பித்தாள்.

    இவங்களைத்தான் உங்க புரொடக்ஷன் செஷனுக்கு எச்.ஆரா போட்டிருக்கு! என்றார் ரவி.

    அப்படியா? என்றான் அமர்த்தலாக. சௌபர்ணிகா ஏதோ ஒரு ஓவியம் போல நின்றாள். அளவான உடல்வாகு. கொஞ்சம் கவர்ச்சியாக உடுத்திக்கொண்டால் கண்களை சுண்டி இழுக்கக் கூடிய உடல்வாகு. ஆனால் அவள் அதைத் தவிர்ப்பது போல கவனமாக உடை உடுத்திக் கொண்டிருந்தாள்.

    மதிப்புக்குரிய விதமாகத்தான் அவளுடைய உடை அமைந்திருந்தது. ‘பரவாயில்லை, நல்ல டேஸ்ட்தான்!’ என்று

    Enjoying the preview?
    Page 1 of 1