Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Nila! Nee Kathir!
Naan Nila! Nee Kathir!
Naan Nila! Nee Kathir!
Ebook137 pages1 hour

Naan Nila! Nee Kathir!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580106005382
Naan Nila! Nee Kathir!

Read more from Jaisakthi

Related to Naan Nila! Nee Kathir!

Related ebooks

Reviews for Naan Nila! Nee Kathir!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Nila! Nee Kathir! - Jaisakthi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நான் நிலா! நீ கதிர்!

    Naan Nila! Nee Kathir!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அலங்காரம் நன்றாகவே இருந்தது. சின்ன ஹால்தான்! அதிக பட்சம் ஒரு நூற்றைம்பது பேர் அமரலாம். ஆனால் மேடை நன்றாக பெரியதாக இருந்தது.

    இப்பொழுதே ஒரு நூறு பேருக்குப் பக்கம் அந்த ஹாலிலே அமர்ந்திருந்தார்கள். மேடையிலேயும் ஒரு நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அது ஒரு இலக்கியக் கூட்டம்.

    அன்றைக்குக் கவிதை வாசிப்பதாக இருந்தது. மேடையில் இருந்த ஐந்து பேரும் ஐந்து விதமாக இருந்தார்கள். வயதான ஒரு கவிஞர், நடுத்தர வயதுக் கவிஞர்கள் இரண்டு பேர், ஒரு இளம் பெண், ஒரு இளைஞன் என்று கலவையாக அமைந்திருந்தது, அந்த மேடை சபை.

    எதிரிலே அமர்ந்திருந்தவர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. மதுரை இலக்கியச் செம்மல்கள் என்றுகூட அவர்களைச் சொல்லலாம். அரங்கத்திலே பார்வையாளர்களாக அமர்ந்திருந்தவர்களிலும் சிறந்த கவிஞர்கள் இருந்தார்கள். சிறந்த எழுத்தாளர்கள் இருந்தார்கள். எனவே மற்ற இடங்களிலே இருப்பதுபோல இல்லாமல் அங்கே ஒரு அமைதி இருந்தது. ஒரு ஒழுங்கு இருந்தது.

    சிற்றுண்டியும்கூட அந்த ஹாலின் கடைசியிலே ஒரு பக்கத்திலே வைத்திருந்தார்கள். உள்ளே வந்தவர்கள் எல்லாம் நாகரீகமாக தடுப்புக்கு அந்தப்புறமிருந்த நான்கைந்து சேர்களிலே அமர்ந்து சாப்பிட்டு முடித்துவிட்டு, ஹாலுக்குள் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

    கூட்டம் துவங்கியது! தமிழ் வாழ்த்துடன் துவங்கினார்கள். தலைவர் உரை, சிறப்புரை என்றெல்லாம் ஒரு அரை மணிநேரம் ஓடியது.

    அந்த அமைதியான அரங்கத்துக்குள்ளே அவன் நுழைந்தான்! கௌசிக்! கிட்டத்தட்ட ஆறடி உயரம். மாநிறம். ஒரு கம்பீரமான தோற்றம். அவன் உள்ளே நுழைந்தவுடன் அந்த ஐந்து பேரும்கூட திரும்பிப் பார்த்தார்கள். நிகழ்ச்சிப் பொறுப்பாளரும், பதிப்பாளருமான தண்டாயுதபாணி ஓடிவந்து அவனை வரவேற்று முன் வரிசையிலே காலியாக இருந்த ஒரு இருக்கையிலே அவனை அமர வைத்தார்.

    அவன் புன்னகைத்தபடி வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தான். மேடையிலே சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்த அந்தப் பேச்சாளர்கூட ஒரு நிமிடம் நிறுத்தி அவனுக்கு வணக்கம் சொல்லிவிட்டுப் பிறகுதான் தொடர்ந்தார்.

    ஒவ்வொரு கவிஞரும் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேல் கவிதை படித்தார்கள். முதலிலே வயது முதிர்ந்த அந்தக் கவிஞர் பாலகிருஷ்ணனை கவிதை வாசிக்க அழைத்தார்கள்.

    அவர்கூட தன்னுடைய பெயரை தமிழ் படுத்திக்கொண்டு இளங்கண்ணன் என்று வைத்துக் கொண்டிருந்தார். பால என்பதை இள என்றும், கிருட்டினன் என்பதை கண்ணன் என்றும் தமிழ்ப் படுத்தியிருக்கிறார்.

    அவருடைய கவிதையிலே சற்றே பழைமை நெடி தூக்கலாக இருந்தது. எப்போதடா முடிப்பார் என்று எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

    பத்து நிமிடம் முடிந்தவுடன் கைதட்டல் வெடித்தது. அது அவர் படித்ததற்காக அல்ல முடித்ததற்காக என்பது ஒரு சிலருக்குத்தான் அங்கே புரிந்தது.

    அடுத்து அந்த இளம்பெண்ணை அழைத்தார்கள். பெயருக்கேற்ப, நட்சத்திரா என்ற பெயருக்கு ஏற்ப நட்சத்திரமாக ஜொலிக்கும் இனிய கவிதாயினியைக் கவிதை பாட அழைக்கிறோம்! என்று அழைத்தார்கள்.

    அந்தப் பெண் பெரிதாக ஒன்றும் அலங்காரமெல்லாம் செய்துக் கொண்டிருக்கவில்லை. மெல்லியதாக ஒரு செயின். கழுத்திலே வலது கையிலே இரண்டு வளையல்கள். வலது கை மோதிர விரலிலே ஒரு சன்னமான மோதிரம். இடது கையிலே வாட்ச். நெற்றியிலே ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தாள். அதன் மேலே ஒரு கீற்றாக திருநீறு இட்டிருந்தாள். காட்டன் புடவைபோல மொடமொடப்பாக நிற்கிற ஏதோ ஒரு சிந்தட்டிக் புடவைதான் உடுத்தியிருந்தாள். அவளுடைய அழகான உடல்வாகுக்கு அது எடுப்பாகவே இருந்தது.

    வந்தவுடன் வணக்கம் செலுத்தினாள். அழகாகப் புன்னகைத்தாள். தனது கவிதையை மெல்லிய குரலிலே சொன்னாள். பிறகு அடுத்த பகுதிக்குப் போகும்பொழுது குரலும் உயர்ந்தது. கவிதையின் தரமும் உயர்ந்திருந்தது. கட்டிப் போட்டாற்போல அந்தச் சபையினர் அந்தக் கவிதையை ஆழ்ந்துக் கேட்டார்கள்.

    இடையிலே லேசான நகைச்சுவையும் இழையோடியது. அப்போது சிரித்த அந்தச் சபை அடுத்த வரிக்குப் போகும்பொழுது சட்டென்று அமைதியானது.

    ஒவ்வொரு பத்தியிலும் கடைசி வரியிலே நெத்தியடிபோல ஒரு வரியை வைத்தாள். அதை எல்லோருமே ரசித்துக் கேட்டார்கள்.

    நட்சத்திரா கவிதை வாசித்தபடியே அவையை நோட்டம் விட்டாள். சிலபேர் தங்களை மறந்து ரசிப்பதைப் பார்க்கும்பொழுது அவளுக்கும் உற்சாகமானது. மேடையிலே இருப்பவர்களுக்கு, பேசுபவர்களுக்கு எதிரே இருக்கிறவர்களுடைய பிரதிபலிப்புத்தானே ஊக்கமாக அமைகிறது.

    அவர்களுடைய அந்த மகிழ்ச்சி அவளுக்கும் தொற்றிக்கொண்டது. ‘அடடே, ஆஹா!’ என்பது போன்ற முகபாவனைகளை எதிரிலே இருந்தவர்கள் வெளிப்படுத்தியதை அவளும் மிகவும் ரசித்தாள். ஆனால், சில சிறப்பான வரிகளை இரண்டு முறைகூட சொன்னாள். பொதுவாக இரண்டு முறை படிப்பது அவளுக்கு அவ்வளவாகப் பிடித்தமில்லை. ஆனால், அவர்கள் ரசிக்கிற விதத்தைப் பார்க்கும்பொழுது ஒரு சில வரிகளை இரண்டாவது முறையாக சொல்ல வேண்டும் என்று அவளுக்கும் தோன்றியது போலும். இரண்டாவது முறையாக படித்தாள்.

    நோட்டம் விட்டுக்கொண்டே வருகையில் அந்த முதல் வரிசையில் அவள் பார்வை படர்ந்தது. முதல் வரிசையில் அமர்ந்தவர்கள் எல்லாம் மதுரை மாநகரத்தினுடைய இலக்கியச் செம்மல்கள் என்று சொல்ல வேண்டும்.

    நடுத்தர வயதிலும், அதற்கு சற்றே அதிகமான வயதும் உடையவர்களாக நடுவிலே இடம்விட்டு அந்த வரிசையின் இரண்டு புறங்களிலும் வரிசையிலே அமர்ந்திருந்தார்கள்.

    வலது பக்கத்திலே இருந்த வரிசையை அப்படியே பார்த்து, அப்படியே படித்துக் கொண்டிருந்தவள், இடது பக்க வரிசையையும் பார்த்தாள். முதல் இருக்கையிலேயே கௌசிக் அமர்ந்திருந்தான்.

    அவனும் கவிஞன்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். கௌசிகன் என்ற பெயரிலேயும் விஸ்வாமித்திரன் என்ற பெயரிலேயும் அவன் கவிதைகள் எழுதுவதுண்டு. அவனுடைய கவிதைகளை அவள் படித்திருக்கிறாள். சிறப்பாகவே இருக்கும்.

    அவள் பார்வை அவன்மேல் ஒரு கணம் படிந்தது. அந்தக் கணத்தில் அவளுக்குள் ஏனோ ஒரு சிலிர்ப்பு ரேகை ஓடி மறைவதுபோல உணர்ந்தாள்.

    சட்டென்று பார்வை அடுத்தவர் பக்கம் தாவியது. கௌசிக்கின் முகத்தில் ஒரு புன்சிரிப்பும், அந்தக் கண்களிலே மின்னல்போல ஒரு குறும்பும் ஓடி மறைந்தாற்போல உணர்ந்தான்.

    கொஞ்சம் ஏமாந்திருந்தால் கவிதை படிப்பதில் தடுமாறியிருப்பாள். ஆனால், பல மேடைகளில் கவிதை படித்தவள் என்பதால் உடனே சுதாரித்துக் கொண்டு கவிதையைத் தொடர்ந்தாள். அதற்குப் பிறகும் ஐந்து நிமிடங்கள் படித்து விட்டு அமர்ந்தாள்.

    அந்த நூற்றைம்பது பேரின் கரகோஷம் ஏதோ ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து கைதட்டிய அளவுக்கு இருந்தது. இந்த தடவை அந்தக் கைதட்டல் கவிதையை முடித்ததற்காக அல்ல. படித்ததற்காக என்று அவளுக்கும் தெரிந்தது.

    ஓரக் கண்ணால் கௌசிக்கைப் பார்த்தாள். கௌசிக் நாகரீகமாகக் கைதட்டிக் கொண்டிருந்தான். ஏன் கொஞ்சம் நல்லாத்தான் கை தட்டினாத்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1