Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilankaatru Veesattum!
Ilankaatru Veesattum!
Ilankaatru Veesattum!
Ebook138 pages1 hour

Ilankaatru Veesattum!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சிவகாமவல்லியும் ஆதர்ஷும் காதலர்கள். சிவகாமவல்லி பொறுப்பான ஒரு நடுத்தர குடும்பத்து பெண். ஆனால் ஆதர்ஷ் பொறுப்பில்லாதவனாக சுற்றுபவன். இதனால் ஆதர்ஷை பொறுப்பானவனாக மாற்ற சிவகாமவல்லி முயற்சி செய்கிறாள். அந்த முயற்சியில் அவள் வெற்றி பெற்றாளா? இறுதியில் அவர்களது திருமணம் நடந்தேறியதா?

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580106007176
Ilankaatru Veesattum!

Read more from Jaisakthi

Related to Ilankaatru Veesattum!

Related ebooks

Reviews for Ilankaatru Veesattum!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilankaatru Veesattum! - Jaisakthi

    https://www.pustaka.co.in

    இளங்காற்று வீசட்டும்!

    Ilankaatru Veesattum!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் -10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம்- 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    ஆசிரியர் உரை

    அன்பு நிறை வாசக நெஞ்சங்களுக்கு!

    ஜெய்சக்தியின் அன்பான வணக்கங்கள்... எனது நாவல்களுக்கு வாசகர்களாகிய நீங்கள் நல்ல வரவேற்பு அளித்து ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருவதற்கு மிக்க நன்றி! 'இளங்காற்று வீசட்டும்!"... என்ற கதை மூலமாக உங்களைச் சந்திக்க வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்...

    உயிராக எனைத் தாங்கி எனது முயற்சிகள் அனைத்துக்கும் தோள் கொடுக்கும் எனது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்... எனது படைப்புகளை படித்து விமர்சித்து ஊக்கப்படுத்தும் தோழிகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்... இனியும் உங்கள் ஆதரவு தொடரும் என்ற நம்பிக்கையோடு...

    அன்புடன்

    ஜெய்சக்தி

    அத்தியாயம் - 1

    மகிழ்ச்சி அவளை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது!

    சிவகாமவல்லியும், ஆதர்ஷும் அந்த நகைக்கடையிலே ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்கள். சிவகாமவல்லி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆதர்ஷ் கேட்கவே இல்லை. அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும். முடியாது நீ குறைஞ்சது மூணு பவுனாவது வாங்கிக்கணும்! என்றான் அவன்.

    என்ன ஆதர்ஷ் விளையாடறீங்களா? மூணு பவுன் இப்ப எவ்வளவு தெரியுமா? அறுபது அறுபத்தைஞ்சு ரூபாய்க்கு மேல் வந்துடும்

    இருக்கட்டுமே! ஆறு மாசமா பின்னாடியே அலைஞ்சு நேத்தைக்குத்தான் நான் உங்கிட்டே சம்மதம் வாங்கியிருக்கேன். நீ மனசார சரின்னு சொல்லியிருக்கே. அந்த சந்தோஷத்துக்கு முன்னாடி இதென்ன பிரமாதம்? என்றான் அவன்.

    அவள் அவனை சற்றே கவலையுடன் பார்த்தாள். சின்னதா ஏதாவது ஒரு மோதிரம் வாங்கிக் குடுங்க. மொதல்லே நீங்க எனக்கு இந்த மாதிரித் தங்கத்தில வாங்கிக் கொடுக்கறதே பிடிக்கலை. கல்யாணம்னு ஆயிட்டா அதுக்கப்புறம் நீங்க எவ்ளோ வேண்ணா வாங்கிக் கொடுங்க. நான் வாங்கிக்கிறேன்

    அது அப்புறம். அப்பத் தங்க மழையிலே குளிப்பாட்டிடுவோமில்லே? என்றான் அவன்.

    ஹலோ, நிறையத் தங்கத்திலே காசு போட வேண்டாம் அப்படின்னு சொல்றாங்க! என்றாள்.

    சொல்றவனுக்கு என்ன? அதுக்காக வைஃபுக்குப் போய் சைட்டா வாங்கிக் கொடுத்துட்டு இருக்க முடியும்? கண்ணுக்கு முன்னாடி ரசிக்கிற மாதிரி காதுக்கு, கழுத்துக்கு ஏன் இடுப்புக்குக் கூட ஒட்டியாணம் கூட வாங்கித் தரலாம்! என்றான் அவன்.

    பிறகு சிரித்துக் கொண்டே ஆனா நீ புத்திசாலியா இருந்தா இப்ப ஒட்டியாணம் கேட்கக் கூடாது. எப்பக் கேட்கணும் தெரியுமா? என்றான்.

    அவளுக்கு புரிந்து போனது. ஹலோ! என்ன ரொம்ப தூரம் போயிட்டீங்க. நாம இன்னும் ஓரடி கூட எடுத்து வைக்கலை. ஜஸ்ட் இப்போ ஓ,கே சொல்லியிருக்கேன். அதுவும் உங்க குணம் எப்படி ஒத்துவருமா அப்படின்னு கொஞ்சம், பழகிப் பார்த்துட்டுத்தான் அதை கன்ஃபர்ம் பண்ணுவேன்! என்றாள் அவள்.

    இத பார்றா, குணம், மணம், நிறமெல்லாம் எடை போட்டுப் பார்த்துட்டுத்தான் சொல்லுவியாக்கும்? என்றான்.

    ஆமா, ஆயுசு முழுக்க பிழைக்கணுமில்லே? என்றாள் அவள் சற்றே நகைச்சுவையாகவும், சற்றே சீரியஸாகவும்.

    என்னமோ நீ சொல்றதைக் கேட்டா கொஞ்சம் யோசனையா இருக்கு! என்றான் அவன்.

    இருக்கும். இருக்கும். நான் இப்ப ஒரு கண்டிஷன் வச்சிருக்கேன். அதை வச்சாவது உங்ககிட்டே ஏதாவது தப்பு இருந்தா நீங்க கரெக்ட் பண்ணிப்பீங்கள்லே? என்றாள்.

    ஏன்? அது உனக்குப் பொருந்தாதா? என்றான் அவன்.

    எனக்கும்தான் பொருந்தும். நானும்தான். என்கிட்டே தப்பு இருந்தா நானும்தான் திருத்திக்கணும். என்ன தப்பை காண்றீங்களோ சொல்லுங்க. ஐ ஆம் ரெடி டு சேஞ்ஜ் மை செல்ஃப் என்றாள்.

    ஹலோ, ஹலோ, நீ ஏதாவது ரொமாண்டிக்கா பேசுவேன்னு பார்த்தா. தப்பு, திருத்தறது அட ஆண்டவா பெரிய தத்துவ வாதியா இருப்பே போலிருக்கு! என்றான் அவன்.

    அவள் களுக்கென்று சிரித்தாள். மொதல் தப்பு கண்டுபிடிச்சுட்டீங்க! என்றாள்.

    ம்... கரெக்ட் பண்ணிக்கோ! என்றான் அவன்.

    ம்... இனிமே நான் லைட்டா பேசறதுக்கு முயற்சி பண்றேன்! என்றாள். எதிரிலே நகையை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்த விற்பனையாளர் இவர்கள் இரண்டு பேரையும் ‘எப்பத்தான் வாங்குவீங்க?' என்பது போலப் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்த சிவகாமவல்லி லேசான குரலில் அவனிடம் பாவங்க, அவரு ரொம்பப் பரிதாபமாப் பார்க்கிறாரு! என்றாள்.

    சரி, சரி, நீ செலெக்ட் பண்ணு! என்றான் அவன்.

    மூணு பவுனுக்கே வாங்கணுமா? என்றாள் அவள் மறுபடியும்.

    அட, ஆமாங்கறேன்! என்றான்.

    என் விருப்பத்துக்கு செலெக்ட் பண்ணலாமா? என்றாள் அவள்.

    'சரி!' என்றான்.

    அவள் விவரமாக இரண்டு பவுனுக்கு ஒரு சின்னச் செயினும் அரை பவுனுக்கு அதிலே மாட்டிக் கொள்கிற மாதிரி லைட் வெயிட் டாலரும், காதுகளுக்கு அதே டிசைனில் அரைப் பவுனில் கம்மலுமாக வாங்கிக் கொண்டாள்.

    பரவாயில்லையே, மூணு பவுனுக்கு இப்படி கிராண்ட் லுக் கொண்டு வந்துட்டியே? என்றான். இதெல்லாம் சரிதான். இதைக் கொண்டு போய் நான் எப்படி எங்க அம்மா, அப்பாகிட்டே சொல்றது? என்றாள் அவள்.

    சொல்லு. உங்களுக்குத் தெரியாம நகைச் சீட்டுப் போட்டிருந்தேன். நகை சீட்டு விழுந்தது, வாங்கிட்டு வந்துட்டேன்னு சொல்லு! என்றான்.

    சூப்பர் ஐடியா! என்று அவள் அதை ஏற்றுக் கொண்டாள். பில் கொடுக்கப் போனார்கள்.

    சட்டென்று அவன் கிரெடிட் கார்டை எடுத்து நீட்டினான்.

    கிரெடிட் கார்டிலா வாங்கறீங்க? அப்பக் கையிலே பணம் இல்லையா? என்றாள் அவள்.

    அதையெல்லாம் நீ ஏன் கண்டுக்கறே? அடுத்த மாசம் ஃபர்ஸ்ட் வீக்லயே கட்டிடுவேன்! என்றான். மொத மொதல்ல நீங்க எனக்கு வாங்கித் தர்றது. கடன்லே வாங்கிக் கொடுக்கறீங்களா? என்றாள். அட போ! இந்தியாவே கடன்லேதான் இருக்கு. உனக்குத் தெரியுமா? ஆவரேஜா நம்ம ஒவ்வொருத்தர் தலையிலேயும் எவ்வளவோ கடன் இருக்கு தெரியுமா? என்றான்.

    அவள் அவனை முறைத்தாள். ஏன்? நீ தான் தத்துவம் பேசுவியா? நாங்க பேசக் கூடாதா? என்றான். கடையில் வைத்து விவாதம் வேண்டாம் என்பதற்காக அவள் ஒன்றும் பேசவில்லை.

    கிரெடிட்டில் வாங்கியதால் அதற்கு ஏதோ பர்சன்டேஜ் போட்டுத் தொகை கூடுதலாகத்தான் வந்தது. அவளுக்குள்ளே சற்றே கவலை ஏற்பட்டது. இவருக்கு சம்பளமே அறுபதாயிரத்துக்கு மேலே இருக்கு. சேமிப்பே இல்லாமல் கிரெடிட்டிலே வாங்குகிறாரே என்று அவளுக்கு கவலையாக இருந்தது.

    அவளும் அதே அளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு பேரும் ஒரு தனியார் நிறுவனத்திலே சென்னையிலே வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இப்படிக் கிரெடிட்டில் வாங்குகிறானே என்று எண்ணிக் கொண்டாள்.

    'சரி, பார்க்கலாம். இனிமேல் என்ன நிலவரமோ தெரிஞ்சு கரெக்ட் பண்ண முடியுமான்னு பார்க்கலாம்' என்று முடிவு செய்து கொண்டாள். ஹோட்டலில் போய் சாப்பிடலாம் என்று அமர்ந்தார்கள்.

    அவன் மக்கன் பேடா ஆர்டர் செய்தான். காசுக் கணக்குப் பார்த்துகிட்டே இருக்காதே. நல்லா சாப்பிடு! என்றான். சென்னா பட்டூரா ஆர்டர் செய்தான். அந்த சென்னா மசாலாவின் விலையைப் பார்த்தவுடனே அவளுக்கு தலை சுற்றியது.

    அவள் நடுத்தரக் குடும்பத்திலே இருந்து வந்தவள். அவளை எதிர்பார்த்து அவளுடைய குடும்பம் இல்லையென்றாலும் அம்மா ஒவ்வொன்றுக்கும் கணக்குப் போட்டுத்தான் செலவு

    Enjoying the preview?
    Page 1 of 1