Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nila Mugam Paarthu!
Nila Mugam Paarthu!
Nila Mugam Paarthu!
Ebook275 pages2 hours

Nila Mugam Paarthu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதுமலர்க்கு, வெங்கட் என்பவருடன் நிச்சயம் முடிகிறது. சில நாட்களில் திடீரென்று வெங்கட் இறந்து விடுகிறார். காரணம் ஹார்ட் அட்டாக் என்று சொல்கிறார்கள். பின் சிறிது நாள்களில் மறுமலர் தன் முதலாளியை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இதற்கு இடையில் மதுமலரின் கணவரான தயாளனின் அத்தை மகள் இந்துமதி இவர்கள் மீது பொறாமை கொண்டு இவர்கள் வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறாள். மதுமலரும் தயாளனும் இந்துமதியின் சதி வலையில் சிக்கினார்களா அல்லது இந்துமதியின் சதியை வென்றார்களா? பார்ப்போம்... ஜெய்சக்தியின் சுவாரசியமான நடையில்...

Languageதமிழ்
Release dateFeb 25, 2023
ISBN6580106008803
Nila Mugam Paarthu!

Read more from Jaisakthi

Related to Nila Mugam Paarthu!

Related ebooks

Reviews for Nila Mugam Paarthu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nila Mugam Paarthu! - Jaisakthi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நிலா முகம் பார்த்து!

    Nila Mugam Paarthu!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 1

    பூமாலை வந்தாச்சா... தேங்காய் பழத்தை உடையுங்கள். அம்மா... விளக்கைக்கொண்டு வந்து வையுங்க. என்று ஒருவர் பரபரப்பு பண்ணிக்கொண்டு இருந்தார்.

    பாவம்... ரொம்பச் சின்ன வயசு. என்று ஒருவர் இன்னொருவரிடம் சொல்ல அதற்கு அவர்

    ‘என்ன பண்ணறது... ராமசாமி… கலிகாலம்... இருபத்தெட்டு… இருபத்தொன்பது வயசுல ஹார்ட் அட்டாக்ங்கறாங்க... என்ன சொல்றது போ... நோய்களுக்கு என்னென்னவோ பேரு சொல்றாங்க’ என்றார்.

    ‘அப்படியில்லே... சுப்பிரமணி... எல்லாம் கலப்படமாப் போச்சு... சாப்பிடற சோத்தைக் கூட நம்பிச் சாப்பிட முடியல... நீயும்... நானும் பொளச்சுக் கெடக்கறதே பெரிய விஷயமா இருக்கு.

    ஒரு நிமிடம் மௌனம் நிலவியது. பிறகு ராமசாமி... ‘ஏப்பா. எப்ப பாடிய எடுக்கப் போறாங்களாம்?’ என்று கேட்க, ‘தெரியல குளிப்பாட்டக் கூட போறதில்லையாம். யாரோ கம்பெனி எம்.டி. வரணுமாம். வந்தா எடுத்துருவாங்களாம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கார் ‘சர்’ரென்று வந்து நிற்க அதிலிருந்து துக்கம் கொண்டாடுவதைக் குறிப்பதற்காகவே கறுப்பு டீஷர்ட்டுடன் வந்து இறங்கினான் தயாளன் எம்.டி.

    எல்லாரும் பரபரப்பாக அவனிடம் போனார்கள். அவன் முகத்திலும் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது. ஆனால் கம்பீரமாக இருந்தான். இறங்கி பி.ஏ. கொடுத்த மலர் வளையத்தை கையில் வாங்கிக்கொண்டு போய் வைத்தான்.

    உறங்குவது போல் படுத்துக்கிடந்த அந்த இளைஞனைப் பார்த்தான். வெங்கட் என்று அவனால் அழைக்கப்பட்ட வெங்கடேஷ். தயாளனின் முகத்தில் ஆழ்ந்த வேதனை படிந்தது. ஒரு நிமிடம் மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டான்.

    ‘சார்... அவங்க... பேரண்ட்ஸ்’ என்றான் அவன். பக்கத்தில் நின்ற ராஜேஷ். அவன் பி.ஏ. அவர்களை அணுகினான். தாயார் நடுத்தர வயதில் இருந்தார். ஐம்பதுகளின் கடைசியில் இருந்த தந்தையார் என்று பார்த்தபோது அவன் இதயத்தில் வருத்தம் பிசைந்தது.

    ‘ஐயா... ஒரு தூணா இருந்தான்... இப்படிப் போயிட்டானே... தங்கச்சியை நட்டாத்திலே வுட்டுட்டு’ என்று அந்த அம்மா பெருங்குரலெடுத்து அழுதபோது சற்றும் தயங்காமல் தோளில் சாய்த்துக் கொண்டான்.

    ‘அம்மா. நீங்க பெரியவங்க... பலதையும் பார்த்தவங்க. நீங்களே இப்படி மனசை விட்டீங்கன்னா எப்படி?’ என்று தேற்றினான்.

    அவன் அப்பாவிடமும் பேசினான். ‘நாங்கல்லாம் இருக்கோம். என்ன ஹெல்ப் வேணுமோ செய்யறோம்... பயப்படாதீங்க’ என்று ஆறுதல் சொன்னான்.

    ராஜேஷ்ஸை அழைத்து ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னான். இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணைப் பார்த்தான். பொங்கி அழவில்லை. ஆனால், அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வடிந்து கொண்டிருந்தது.

    தனது அலுவலகத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் அவளிடமும் சென்று விசாரிப்பதைக் கண்டான். ராஜேஷிடம் மெதுவாக விசாரித்தான்.

    ‘அது யாரு?’ என்று.

    ‘சார்... அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க? இந்தப் பெண்ணைத்தான் வெங்கட் கல்யாணம் செய்துக்கறதா இருந்தான்’ என்றான் ராஜேஷ்.

    ‘ஓ...!’ என்றான் திகைத்துப் போய்.

    மாசு மருவற்று இருந்த முகம்... கள்ளமில்லாத் தன்மை அந்த முகத்தில் பிரபலித்தது. துக்கத்திலும் அழகான மலரைப் போல் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் அவனுக்கு ஒரு கணம் இதயம் நின்றுவிடும் போல் இருந்தது.

    இப்படிப் பெண் கிடைத்தும் குடுத்து வைக்காமல் போனானே! என்று அவன் மனமே ஒரு கணம் கலங்கியது.

    அப்போது அந்தப் பெண்ணின் தோழி போலும்... ஒருத்தி ‘மது... நல்ல வேளைடி... கல்யாணம் ஆகலை...’ என்று அவளைக் கட்டிக்கொண்டு அழுதபோது,

    ‘அப்படிச் சொல்லாதே. சுதா... ஆயிருந்தாப் பரவல்லையே... கொஞ்ச நாளாவது என்னோட வாழ்ந்திருப்பாரே’ என்று அவள் திரும்பச் சொல்லி அழுவதைப் பார்த்ததும் தயாளன் திகைத்துப் போனான்.

    அப்போது ஏதோ ஏற்பாடுகளைச் செய்வதற்கு இன்ஸ்ட்ரக்ஷன் ‘கொடுத்து விட்டு வந்த ராஜேஷ்... சார்… அந்தப் பொண்ணும் நம்ப ஸ்டாப் தான். மதுமலர்ன்னு பேரு. டவுன்ஹால் பிராஞ்ச்...’ என்றான்.

    ‘ஓ. என்னவா இருக்காங்க...?’

    ‘எஸ்.ஆர். தான். கெட்டிக்காரப் பெண். ஆனா இந்த வெங்கட்டின் வலையில் விழுந்திருச்சு’

    ‘ஏன் அப்படிச் சொல்றே?’ என்றான் வியப்புடன்.

    ‘சார்... அதையெல்லாம்... அப்புறம் சொல்றேன். நமக்காக எல்லாரும் காத்திட்டிருக்காங்க. இப்ப நீங்க வாங்க...’ என்று அழைத்தான்.

    இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். வீட்டுக்கு வந்து குளித்துவிட்டுத் திரும்பவும் வெங்கட் வீட்டுக்குப் போனான்.

    அங்கே இரவு உணவுக்கான ஏற்பாடுகளை செய்யச்சொல்லி விட்டு வெங்கட்டின் அப்பாவிடம் செலவுக்கு ஒரு தொகை கொடுத்தான்.

    தயாளன் கோவையில் பெரிய பர்னிச்சர் ஷோரூம் தான் வைத்திருந்தான். இரண்டு இடங்களில் இருந்தன. கோயம்புத்தூரில் அவனுக்குக் கௌரவமிக்க வாடிக்கையாளர்கள் இருந்தார்கள்.

    ஒவ்வொரு நாளும் வியாபாரம் பல ஆயிரங்களில் இருக்கும் அளவுக்கு நல்ல பெயர். திருப்பூரில் ஒரு ஷோரூம் போடுவதற்காக ஏற்பாடுகள் செய்திருந்தான்.

    இயற்கையிலேயே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். வெளிநாட்டில் சென்று எம்.பி.ஏ. முடித்த கையோடு குடும்பத்துக்கு என்றிருந்த ஒரு தொழிற்சாலையைப் பார்த்துக்கொள்வதோடு தன்னுடைய சொந்த முயற்சியாக இந்த ஷோரூம்களை அமைத்திருந்தான்.

    பீளமேட்டுக்குப் பக்கத்தில் இந்த பொருட்களை உருவாக்குவதற்காக ஒரு பாக்டரி போட்டிருந்தான். நூறு பேர் வேலை செய்தார்கள். அடுத்ததாக மதுரை, திருச்சி, சென்னை என்று விரிவுபடுத்துகிற ஆர்வத்துடன் இருந்தான். அவனுடைய காந்திபுரம் பிராஞ்சிலே இறந்து போன வெங்கட் மானேஜராகயிருந்தான்.

    நியாயமான லாபம்... நீண்டகால உத்தரவாதம் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்த உறவு என்பது அவன் கொள்கையாக இருந்தது. அதனால் தொழில் வளர்ந்தது.

    எல்லோருக்கும் உணவு பரிமாறப்படுவதை அவனே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். வெங்கட்டின் தங்கை என்று ஒரு பெண்ணை அழைத்து வந்து அவன் முன் நிறுத்தினார்கள். தேம்பியழுத அவளைத் தோளில் தட்டிக் கொடுத்தான்.

    ‘அண்ணன் நான் இருக்கிறேன்னு... நெனச்சுக்கம்மா.’ என்று ஆறுதல் சொன்னான். மாடியிலே இரண்டு அறைகள் இருந்தன.

    ராஜேஷ் வந்து ‘சார்… கூட்டம் அதிகமாக இருக்கு. கீழே ஹாலிலும் பரிமாறணும் போல இருக்கு. நீங்க மேலே ரூம்லே இருங்க...’ என்று அழைத்துப்போனான்.

    ஒரு அறையில் புத்தம் புதியதான பர்னிச்சர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. ஜன்னல் வழியாகப் பார்த்தான். பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    அடுத்த அறையில் அவனுக்கு ஒரு சேர் கொண்டு வந்து போட்டார்கள். உள்ளே நுழைந்தவன் ஒரு கணம் திகைத்து நின்றான். உள்ளே அந்த மதுமலர் ஒரு சோபாவில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். இவன் வருகையைப் பார்த்தவுடன் கண்களைத் துடைத்துக்கொண்டு அவசரமாக எழுந்து நின்றாள்.

    அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தான் உட்கார்ந்து கொண்டு ‘ப்ளீஸ் உட்காருங்க’ என்றான்.

    அவள் நின்றாள். ‘ப்ளீஸ்... இந்த நேரம் ஃபார்மாலிட்டிஸ் பார்க்கிற நேரமில்ல. ப்ளீஸ் உட்காருங்க...’ என்றான். அவள் அமர்ந்தாள்.

    ‘ஐ ம் சாரி. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலே. மேன் ப்ரபோஸஸ் காட்...’ என்றான்.

    அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அவன் நீண்ட பெருமூச்சு விட்டான். ‘எல்லாத்தையும் மறக்கறதுக்கு முயற்சி பண்ணுங்க’ என்றான்.

    அந்த நேரம் ராஜேஷ் பரபரப்பாக வந்தான். மதுமலர் இருப்பதை அவன் கவனிக்கவில்லை.

    ‘சார்… மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்...’ என்றவன் திரும்பி மதுமலரைப் பார்த்தவன் பேச்சை நிறுத்தினான்.

    ‘சார்... கொஞ்சம் தனியா பேசணும்’ என்றான்.

    அவர்கள் அறை வாசலுக்கு சென்றார்கள். ராஜேஷ் மெதுவான குரலில் ஏதோ சொல்லி கொண்டு மெடிக்கல் ரிப்போர்ட்ஸை காட்டினான்.

    இருவருக்குமிடையே ஏதோ வாக்குவாதம் நடைபெறுவதை மதுமலர் கவனித்துக் கொண்டிருந்தாள். குனிந்து மெடிக்கல் ரிப்போர்ட்ஸைப் பார்த்த எம்.டியின் முகம் இருண்டு போவதைப் பார்த்தாள் மதுமலர்.

    எழுந்து அவர்களிடம் போனாள். ‘சார்... என்ன ஆச்சு?’ என்றாள்.

    சட்டென்று தன்னை மீட்டுக் கொண்ட ராஜேஷ்... ‘ஒண்ணுமில்ல. மாசிவ் ஹார்ட் அட்டாக்காம். ஹாஸ்பிட்டல்ல நிறைய சார்ஜ் பண்றாங்க...’ என்றான் மதுமலரிடம்.

    ஒரு நிமிடம் திகைத்துப் போய் அவனைப் பார்த்த தயாளன் சமாளித்துக் கொள்வது போலிருந்தது.

    ‘அதனாலென்ன. கொடுத்தர்லாம். பிழைக்க வச்சிருந்தாப் பரவாயில்லே... எந்த டாக்டர் குடு நான் பேசறேன்.’ என்று செல்ஃபோனை வாங்கிக்கொண்டு நகர்ந்தான்.

    ராஜேஷ் மதுமலரிடம் ‘மது… இங்கே இருந்தா நீ ரொம்ப அப்செட்டாயிருவேன்னு… உன்னை வீட்டுக்கு அனுப்பச் சொல்றாரு... எம்.டி என்றான். பிறகு வேறு இரு பெண்களை அழைத்து ‘பாரு சுதா… மது ஒரு பொட்டுக் கூட கண்ணை மூடலே... சாப்பிடவும் இல்லே. வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க. ரெஸ்ட் எடுக்கட்டும்.’ என்று அனுப்பினான்.

    அவர்கள் அந்தப்புறம் போனவுடன் தயாளனைத் தேடிப் போனான்.

    ‘நல்ல வேலை... செஞ்சே... ராஜேஷ்’ இந்த மெடிக்கல் லிப்போர்ட்ஸை என்கிட்டக் கொண்டு வந்து குடுத்தது கான்ஃபிடென்ஷியலா இருக்கட்டும்...’ என்று எச்சரிக்கிற குரலில் சொன்னான்.

    ‘சரிங்க சார்...’ என்றான்.

    தயாளன் புறப்படுகிற நேரத்தில் ராஜேஷை அழைத்து ‘ராஜேஷ்... அந்த மதுமலரை பற்றி ஒரு ஃபைல் கிரியேட் பண்ணு. எல்லா விவரங்களும் வேணும்’ என்று சொன்னான்.

    ராஜேஷ் திகைத்துப் போய்ப் பார்க்க... ‘நல்ல வேளை. அந்தப் பொண்ணு தப்பிச்சது... ஆனா, அந்தப் பொண்ணுகிட்ட நல்ல பொட்டென்ஷியல் இருக்கற மாதிரி தெரியுது. டூ வாட் ஐ சே...’ என்றான்.

    புறப்பட்டான்.

    அத்தியாயம் – 2

    நான்கு நாட்கள் சென்றிருக்கும்...

    தன் வீட்டில் முன்னேயிருந்த கார்டனில் அமர்ந்து கொண்டிருந்தான். ராஜேஷ் அவன் முன்னே நின்று விவரம் சொல்லிக் கொண்டிருந்தான்.

    ‘மதுமலர் எம்.பி.ஏ. தபாலில் படிச்சிட்டிருக்காம்...’ என்றான்.

    ‘ம். அப்படியா?’ என்று சிந்தனையுடன் தாடையைத் தடவிக் கொண்டான் மீண்டும்.

    ‘என்னப்பா, அப்படியொரு இன்டென்சிடி. கல்யாணம் ஆயிருந்தாக்கூடப் பரவாயில்லேன்னு அழுதது... அரண்டு போயிட்டேன்...’ என்றான் ஆச்சரியத்துடன்.

    ‘ஆமா சார்... அருமையான பொண்ணு சார். ஆனால் வெங்கட்டை நம்பிருச்சு. தன்னைப் பத்தி அப்படியொரு பிக்சர் கிரியேட் செய்திருக்கான்...’

    ‘ஓ!...’ என்றான். ‘ரெண்டு பக்கமும் காதலா?’ என்று கேட்டான் மறுபடியும்.

    ‘அப்படீன்னு சொல்லமுடியாது. அது பாட்டுக்கு இருந்துச்சு. இவன்தான் போய் ப்ரபோஸ் பண்ணினான் போல. நல்லாப் பேசுவான் சார்.’ என்றான்.

    ‘ஆமாமா.’ என்று புன்னகைத்தான் தயாளன். பிறகு ‘பேச்சுக்காகத்தானே அவனை பிரமோட் பண்ணினேன்...’ என்று மீண்டும் புன்னகைத்தான்.

    ‘அவங்க வீட்ல போய் பொண்ணை கேட்டான் போல. முடிவானதுக்கப்புறம் கொஞ்சம் பழக்கம். அப்படியொன்னும் இடம் கொடுக்கற பொண்ணில்லே. ஆனா... ரொம்ப லாயல்டி...’ என்றான்.

    ‘லாயல்டி’ என்று மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொண்டான்.

    பிறகு ‘ஒண்ணு செய் ராஜேஷ். அந்தப் பொண்ணையே காந்திபுரம் பிராஞ்சுக்கு மேனேஜராப் போட்டுடு...’ என்றான்.

    ராஜேஷ் திடுக்கிட்டுப் போய்... ‘சார் டேனியல்... ரொம்ப எதிர்பார்த்திட்டிருக்கான்’.

    ‘இல்ல... அவனைத் திருப்பூருக்குப் போட்டு, அங்க ஃபுல் இன்சார்ஜ் நீதான். இது என்டாடினிஷ்ட் பிராஜ்சுங்கறதுனால அந்தப் பொண்ணைப் போடறாங்க... கம்பாஷேக் கிரடிண்ட்லன்னு’ சொல்லிடு என்றான்.

    ‘சரிங்க சார்...’ என்றான். அப்புறம் நம்ம சிந்து இருக்குல்ல, அவளுக்கும் அங்கேயே போஸ்டிங் போட்டுரு’ என்றான்.

    ‘சரிங்க சார்’ என்றான்.

    ***

    இரண்டு நாள் போயிருக்கும்.

    ‘சார்... உங்களைப் பார்க்க மதுமலர்ன்னு ஒரு பொண்ணு வந்திருக்கு’ என்றான் வேலைக்காரன்.

    தயாளன் வந்தான். ‘என்னம்மா. உட்காருங்க’ என்று வரவேற்றான்.

    ‘பரவாயில்ல, சார்...’ என்றாள். தயங்கினாள்.

    ‘சொல்லுங்க...!’ என்றான்.

    ‘சார்… அந்த பிராஞ்ச் வேண்டாம் சார்...’ என்று கண்ணீர் விட்டாள்.

    அவன் அமைதியாய் அமர்ந்திருந்தான். அவளே நிறுத்தட்டும் என்பது போல்.

    அவள் அழுகையை நிறுத்திவிட்டு அவனை பார்த்தாள்.

    ‘பாருங்க... மிஸ். மதுமலர். நான் காரணமாத்தான் உங்களைப் போட்டிருக்கேன். இறந்து போன வெங்கட்டுக்கு ஒரு வகையில நெருங்கியவர் நீங்கள். வெங்கட்டைப் பற்றி இப்ப நான் கேள்விப்படற விஷயங்கள் ஒண்ணும் அவ்வளவு திருப்திகரமா இல்லே. ஏதாவது பிரச்சினைகள் கண்டுப்பிடிக்கப்பட்டால் கூட அது உங்களோடவும், என்னோடவும் போயிடட்டும்னு நெனைக்கிறேன்’ என்றான்.

    அவள் அவனைத் திகைத்துப் போய்ப் பார்த்தாள். பிறகு மெதுவான குரலில்...

    ‘ஏன்... சார்… ஏதாவது தவறு நேர்ந்திருக்குமோன்னு நெனக்கிறீங்களா?’ என்றாள்.

    ‘தெரியலே... அதுவுமில்லாம... எல்லாம் உங்க சின்சியாரிட்டியைப் பொறுத்தும் இருக்கு...’ என்றான்.

    எம்.டி. தனக்கும் சேர்த்துப் பரீட்சை வைப்பது போல் உணர்ந்தாள்.

    ‘சார். ஐ வில் பி ஆல்வேஸ்... சின்சியர். உறவு வேற. டியூட்டி வேற சார்...’ என்றாள் ஒரு ராணுவ வீரனைப் போல்.

    ‘தட்ஸ் குட்... நாளைக்கே சார்ஜ் எடுங்க...’ என்று புன்னகைத்தான்.

    அவளுக்கும் ஜுஸ் வந்தது. அருந்திவிட்டுப் புறப்பட்டுப் போனாள்.

    பால்கனியில் நின்றபடி தனது நீளப் பின்னல் அசைய நடந்து சென்று வெளியில் காத்திருந்த தன் தந்தையுடன் சேர்ந்து கொள்வதை தயாளன் ஆழ்ந்த கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

    ***

    மதுமலருக்கு வெகுநேரம் உறக்கம் வரவில்லை. அப்படியொன்றும் அவள் வெங்கட்டுடன் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. ஒன்றிரண்டு முறை அவளை வெளியே அழைத்துப் போயிருக்கிறான்.

    குறும்பாகவும், விளையாட்டாகவும் பேசிச் சிரிக்க வைப்பான். பெரிய அளவில் வசதிகள் இல்லாதவன். வீடு கூட வாடகை வீடுதான். ஆனால், பெரிய கனவுகள் வைத்திருந்தாற்போல் பேசுவான். துறுதுறுவென்று இருப்பான். ஆனால், எம்.டி. ஏன் அப்படிச் சொன்னார்? என்று எண்ணி எண்ணி தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

    ‘வாழ்க்கை வெறிச்சோடிப் போன மாதிரி நீண்டு கிடக்கிறதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் எம்.டி. இந்தப் பொறுப்பைக் கொடுத்தது கூட நல்லதுதான் என்று தோன்றியது. சிந்திப்பதற்கும் செய்வதற்கும் ஏதாவது ஒன்று இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டாள்.

    காலையில் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. ‘அம்மா… கடவுள் எல்லாம் ஏதோ... காரணமாய்த்தான் செய்கிறார். எல்லா பாரத்தையும் அவன் மேல் போடு...’ என்று.

    ‘போட்டு விட வேண்டியதுதான்’ என்று எண்ணிக் கொண்டாள். அதற்குப் பிறகுதான் உறக்கம் வந்தது.

    வெங்கட்டின் மறைவுக்குப் பிறகு அன்றைக்குத்தான் தூக்கம் பிடித்தது அவளுக்கு.

    ***

    பொறுப்பேற்று ஒரு வாரமாகி இருந்தது.

    வந்த முதல் வேலையாக தானே முன்நின்று ஸ்டாக் வெரிஃபிகேஷன் செய்தாள். நேரமாக ஆக முகம் இருண்டு போனது.

    பிறகு கணக்குகளைப் பார்த்தாள். அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டிடம் பேசினாள்.

    ‘நாங்க என்ன செய்ய முடியும்?’ மேனேஜர் சொன்னதைத்தானே செய்ய முடியும்?’ என்றார்கள்.

    அவளுக்கு வெங்கடேஷ் வீட்டில் மேலறையில் வைக்கப்பட்டுள்ள புதிய ஃபர்னிச்சர்கள் நினைவு வந்தது. வந்தவிதம் புரிந்தது.

    நிறைய ‘டேமேஜ்’ என்றும் மிசலேனியஸ் என்றும் கணக்கு காட்டியிருந்தான்.

    ‘டேமேஜ்’ என்றால் அந்த பீஸ் இருக்கணுமில்ல... எங்கே.?’ என்றாள். பதில் இல்லை.

    ஒரு நாள் முழுதும் அமர்ந்து கூட்டிக்

    Enjoying the preview?
    Page 1 of 1