Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anicha Malar...! - Part 2
Anicha Malar...! - Part 2
Anicha Malar...! - Part 2
Ebook278 pages2 hours

Anicha Malar...! - Part 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வாசுதேவன் கேள்விகளுக்கு சுசித்ரா பதில் கூறினாளா? சுசித்ராவை திருமணம் செய்த பிறகு வாசுதேவனின் நிலைமை என்னவாக மாறியது? வாசுதேவன் தன்னுடைய தொழிலில் வெற்றியடைந்து அவன் நினைத்ததை சாதித்தானா? சுசித்ராவின் மனநிலையை புரிந்து கொண்டானா? வாசிப்போம் அனிச்ச மலரை...

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580133810214
Anicha Malar...! - Part 2

Read more from Muthulakshmi Raghavan

Related to Anicha Malar...! - Part 2

Related ebooks

Reviews for Anicha Malar...! - Part 2

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anicha Malar...! - Part 2 - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அனிச்சமலர்...! - பாகம் 2

    Anicha Malar...! - Part 2

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    24

    அலைகடலைப் பார்த்தபடி அசைவற்று அமர்ந்திருந்தாள் சுசித்ரா... அவளது இறுக்கமான தோற்றத்தில் வாசுதேவனுக்குள் கவலை வந்தது... சும்மாவே அவள் துறவியைப் போலப் பற்றற்றுப் பேசுவாள்... இப்போதோ கையில் கமண்டலம் ஏந்தாத குறைதான்... காவி நிறம் போல ஏதோ ஓர் கலவை நிறத்தில் சேலை அணிந்திருந்ததால் புதிதாக காவியைத் தேட வேண்டிய அவசியமில்லை...

    ‘சுகபோகமா வாழ வேண்டிய கோடிஸ்வரியைக் காவியக் கட்ட வைச்சுட்டு அங்கே அந்தப் பல்லவி அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்கிறா... இவ என்னடான்னா சர்வம் புத்த மயம்ன்னு முகம் பூரா வெளிச்சத்த வர வைச்சுக்கிட்டு யோகியப் போல உக்காந்திருக்கா...’

    அப்ப நான் என்ஜினியரிங் ஃபைனல் இயர்ல இருந்தேன்...

    ‘அப்பா... வாயைத் திறந்து பிளாஷ் பேக்கைச் சொல்ல ஆரம்பிச்சுட்டா...’ ஆசுவாசமானான் வாசுதேவன்...

    என் கிளாஸ்மேட்ஸ் எல்லோருமே என் மீது பிரியமா இருப்பாங்க... நானும் அப்படித்தான்...

    ‘இவள் ஹைகிளாஸ், மிடில் கிளாஸ்ன்னு பிரிச்சுப் பார்க்காத மனசிருக்கிறவ...’ அவன் கனிவுடன் அவளைப் பார்த்தான்...

    என் பிரண்ட்ஸில கொஞ்சபேர் ஸ்டேட்டஸ் பார்த்துப் பழகுன்னு அட்வைஸ் பண்ணுவாங்க... நான் கேட்டுக்க மாட்டேன்...

    வாசுதேனுக்கு அவள் மீதான காதல் பெருகியது... எளிமையான தோற்றத்துடன் இருந்த அந்தக் கோடிஸ்வரி அவனது ‘ஏன்’ என்ற கேள்விகளுக்கான அவளது கடந்த காலத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள்... பூட்டி வைக்கும் பொருள்கள் மட்டுமல்ல... உணர்வுகளும் பூசணம் பிடித்து விடும்... மனதைத் திறந்து கொட்டி விட வேண்டும்... இதயத்தின் சாளரங்கள் திறந்தால் அங்கே சில்லெனும் தென்றல் காற்று உட்புகுந்து மனதின் வெக்கையைத் தணித்து விடும்...

    ஒரு நாள் என் பிரண்ட்ஸோட பஸ்ஸில் போக ஆசையாக இருந்தது... காருடன் வந்த டிரைவரிடம் பஸ்ஸை ஃபாலோ பண்ணச் சொல்லி விட்டு என் பிரண்ட்ஸீடன் பஸ்ஸில் ஜர்ன் பண்ணினேன்...

    உலகச் சுற்றுலாவை விவரிப்பதைப் போல அவள் விவரித்தாள்... குறுக்கே பேசாமல் தலையை மட்டும் அசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான் வாசுதேவன்... படாதபாடு பட்டு அவளை பிளாஷ்பேக்கை சொல்ல வைத்திருக்கிறான்... ஊம் கொட்டி அதை கெடுத்துக் கொள்ள வேண்டுமா என்ன...?

    செம ஜாலியா இருந்தது... பஸ்ஸை விட்டு இறங்கியதும் என் பிரண்ட்ஸ் டாட்டா சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க... நான் காருக்காக வெயிட் பண்ணினேன்...

    ஊடே குறுக்கிட்டால் அவள் பிளாஷ்-பேக்கிலிருந்து பின் வாங்கி விடுவாள் என்று சர்வ ஜாக்கிரதையாக வாய் பொத்தியிருந்த வாசுதேவன், ஆர்வக் கோளாறில்...

    பஸ்ஸை ஃபாலோ பண்ணின கார்... பஸ்ஸீக்கு முன்னாடி வந்து நின்னிருக்கனுமே... உங்க கார் டிரைவருக்குக் காரோட்டத் தெரியாதா...? என்று கேட்டு விட்டான்...

    அவர் பாவம்... பஸ்ஸை விடாம ஃபாலோ பண்ணியிருக்கார்... ஊடே ரெண்டு சிக்னல்... மனுசன் இந்த பஸ்ஸை விட்டுட்டு வேறு ஒரு பஸ் பின்னாலே போய் விட்டார்...

    பாருடா... அழகான பெண்ணை ஃபாலோ பண்றப்ப வேற ஒரு அழகான பெண் வந்தா இவளை விட்டுட்டு அவளை ஃபாலோ பண்ணுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்... பஸ்ஸிலும் அப்படியா...? இந்த பஸ்ஸை விட அந்த பஸ் அட்ராக்சனா இருந்துச்சோ...? இருக்காதே... நம்ம சென்னை சிட்டி பஸ்கள் எல்லாமே ஒன்னு போல இருக்குமே...

    இப்ப நான் பிளாஷ்-பேக்கை கண்டினியூ பண்ணவா... இல்லை எங்க காரோட டிரைவர் எதைக் கண்டு அந்த பஸ் பின்னாலே ஜொள்ளு விட்டுக்கிட்டுப் போனார்ன்னு கேட்டுத் தெரிந்துக்கிட்டு வரவா...?

    இதுக்குத்தான் வாயை மூடிக்கிட்டு இருந்தேன்... அடேய் வாசுதேவா... அடங்க மாட்டியாடா... மேடம் கோவிச்சுக்கிறாங்கள்ல... நீங்க பிளாஷ்-பேக்கை கண்டினியூ பண்ணுங்க...

    இதுதானே முக்கியம்...?

    ரொம்ப, ரொம்ப முக்கியம்...

    அஃது... டிரைவருக்குப் போன் போட்டேன்... வழி மாறி வேற பஸ் பின்னாலே போய் விட்டதாச் சொன்னார்... நான் எங்கே நிற்கிறேன்னு லொகேசனைச் சொல்லிட்டு காருக்காக வெயிட் பண்ணினேன்...

    இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமில்ல...

    இப்பச் சொல்லியாச்சில்ல...

    சரி... சரி... யு புரொசீடு...

    அப்பத்தான் பிரசன்னாவை பர்ஸ்ட் டைம் பார்த்தேன்... அவளது உதடுகள் துடித்தன...

    வாசுதேவனுக்குள் பிரளயம் வெடித்தது...

    சுசித்ராவின் வாழ்வில் ஓர் வாலிபன் குறுக்கிட்டிருக்கிறான் என்ற செய்தி அவனுக்கு வேம்பாக கசந்தது... கடைசியில் காதலில் விழுந்ததினால்தான் சுசித்ரா குடும்பத்தாருடன் போராடிக் கொண்டிருக்கிறாளா...? பொருளாதார ஏற்றதாழ்வா...? தனிமைப் பட்டு அவள் நிற்கும் கொடுமைக்கு அவளது மனது பிரகாரம் திருமணத்தை நடத்தி வைத்திருக்கலாமே என்று பலவற்றையும் யோசித்தவனுக்கு அது உறைத்தது...

    வாசுதேவனிடம் திருமண ஒப்பந்தம் போட விழைகிறவள் ஏன் அந்தப் பிரசன்னாவையே திருமணம் செய்து கொள்ளக் கூடாது...? அவனிடம்தானே அவள் கேட்டிருக்க வேண்டும்... சுசீந்திரன் இப்போது இருக்கும் மனநிலையில் அவள் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் இருகரம் நீட்டி வரவேற்பானே...

    ‘முதல் சந்திப்பு இனிமை நிறைந்திருந்ததாக இருந்திருக்கும்... பஸ் ஸ்டாப்பில் அவனும் நின்றிருப்பான்... இவளும் நின்றிருப்பாள்... பர்ஸ்ட் சைட்டே லவ் சைட்டா இருந்திருக்கும்... கண்ணோடு கண் கலக்க காதல் வந்திருக்கும்...’

    மனதுக்குப் பிடித்தவளின் காதல் அனுபவத்தைப் பற்றிக்காது கொடுத்துக் கேட்பதை விடக் கொடிது வேறொன்றுமில்லை...

    ‘கொடிது... கொடிது...

    காதலிக்கு கடந்தகாலக் காதல் இருப்பது...

    அதனினும் கொடிது...

    அவ்வனுபவத்தைக் காது கொடுத்துக் கேட்பது...’

    கரையில் உட்கார்ந்திருப்பதைவிடக் கடலில் இறங்கி விடுவது சாலச் சிறந்தது... எங்கே... அதைச் செய்ய முடியாமல் கண்ணியவான் வேடம் அவனைக் காவல் காக்கிறதே...

    பற்றற்ற துறவியைப் போல முகத்தை வைத்துக் கொள்ள அவன் படாத பாடு பட்டான்... காதலியின் காவியக் காதல் கதையின் அடுத்த கட்டம் எதுவாக இருக்கும் என்று கடுப்புடன் அவன் காத்திருக்க...

    கண் சிமிட்டற நேரம்தான்... பிரசன்னா என் கழுத்தில் இருந்த செயினை அறுத்துக்கிட்டு ஓடிட்டான்... என்றாள் சுசித்ரா...

    என்னது...?

    தான் சரியாகக் கேட்கவில்லையோ என்று தன் காதுகளைச் சந்தேகித்தான் அவன்... இப்போதுதான் இது போல அடிக்கடி நிகழ்ந்து தொலைக்கிறது... முதலில் எல்லாம் அப்படியில்லை... உதடுகளில் இருந்து சிறு சப்தம் வெளிப்பட்டால் கூட சொல்ல வருவதைச் சரியாக இவன் சொல்லி விடுவான்... இப்போது என்னவென்றால் தெள்ளத் தெளிவாக காதில் விழுகும் வார்த்தைகளைக் கூட இதைத்தான் சொன்னார்களா என்று சந்தேகித்து ஸ்தம்பிக்க வேண்டியிருக்கிறது...

    ‘எந்த நேரத்தில் இவளை மீட் பண்ணினேன்...?’

    அது அழகான இளங்காலைப் பொழுது என்று அவன் மனம் ஜொள்ளியது... என்ன பொழுதோ என்று அலுத்துக் கொண்டான் வாசுதேவன்... காதலனைப் பற்றிச் சொல்கிறாள் என்று பார்த்தால் அவள் கழுத்திலிருந்த செயினை அறுத்தத் திருடனைப் பற்றிச் சொல்லுகிறாள்... திருடனைப் பற்றிப் பேசும் போது ஏன் அவளது உதடுகள் துடிக்கின்றன...?

    ஏங்க... சரியாச் சொல்லுங்க... அந்த பிரசன்னா உங்க கழுத்தில இருந்த செயினை அறுத்தானா...?

    யெஸ்... ஹி டிட் இட்...

    என்னவோ மகத்தான சாதனையை அவன் செய்து விட்டதைப் போல அவள் சொன்னதில் கன்னத்தில் பொளேர் என்று ஒரு அறை விடலாம் போலக் காண்டாகிப் போனான் அவன்...

    செயினைப் பறிக்கறதெல்லாம் ஒரு பிழைப்பு... அப்பேற்பட்ட புறம்போக்கின் பெயரை இன்னும் நினைவில் வைத்திருக்கீங்க... உங்களை என்னன்னு சொல்றது...?

    திருடன்னுதான் நானும் நினைச்சேன்...

    ‘பின்னே... இல்லையா...?’

    என்னை யாருன்னு நினைத்த...? தி ஃபேமஸ் எஸ்.எஸ் குருப்ஸ் ஆஃப் கம்பெனியோட எம்.டி மகள்டா... டாடியிடம் சொல்லி உன்னை உள்ளே தூக்கிப் போடறேன் பார்... அவர் போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணினா ஒன் அவரில உன்னைக் கண்டு பிடித்து அரெஸ்ட் பண்ணிருவாங்கன்னு சத்தம் போட்டேன்... ஓடிக்கிட்டு இருந்தவன் நின்று திரும்பிப் பார்த்தான்... எனக்குப் பயமாகிருச்சு... பஸ் ஸ்டாப்பில் யாருமில்லை... தனியாக நின்றிருந்தேன்... அவன் என்னிடம் வந்தான்...

    வாயை வைத்துக்கிட்டு சும்மா இருக்க வேண்டியது தானே... எதையும் யோசித்துச் செய்ய மாட்டிங்களா...?

    இப்படியாகும்ன்னு எனக்கு எப்படித் தெரியும்...? நான் பஸ்ஸில போனதேயில்லையே...

    சரி... சரி... கிட்ட வந்தவன் என்ன செய்தான்...? கத்தியைக் காட்டிக் கிட்நாப் பண்ணப் பார்த்தானா...?

    செயின் திருடன் வேறு என்ன செய்திருக்கப் போகிறான் என்ற எண்ணம் வாசுதேவனுக்கு... யாரோ ஒரு பெண் என்று நினைத்து தனியாக நின்ற பெண்ணின் செயினை அறுத்துக் கொண்டு ஓடியிருப்பான்... அவள் கோடிஸ்வரி என்று தெரிந்ததும் ‘ஆஹா’ என்று அவளையே கடத்தி விடலாம் என்று பக்கத்தில் வந்திருப்பான் என்றுதான் அவன் கணக்குப் போட்டான்...

    சேச்சே... என்று சுசித்ரா அவனது கணக்கீடை மறுத்தாள்...

    ‘இவள் விசயத்தில் எதை நினைத்தாலும் எகனைக்கு மொகனையாகத்தான் இருந்து தொலைக்குது...’

    பாவமா என்னைப் பார்த்தான்...

    ‘இவ பாவம்ன்னு பரிதாபப் பட்டானா...? இல்லை... அவனே பாவம் போல பரிதாபமாய் நின்றானா...?’

    இதற்கான விடையையும் அவளே சொல்லி விடட்டும் என்று விட்டு விட்டான் வாசுதேவன்... சுசித்ராவே விசித்திரமான பிறவி... அவள் சொல்லும் கதையும் அப்படித்தான் இருந்து வைக்கும்...?

    கண்ணில தண்ணி விடாத குறைதான்... எனக்குப் பாவமாகிருச்சு...

    ‘அப்ப... அவன்தான் பாவம்போல முகத்தை வைச்சுக்கிட்டு நின்றிருக்கான்...’

    ஸாரிங்க... எங்க பக்கத்துவீட்டுக் குட்டிப் பாப்பாவுக்கு ஹார்ட் ஆப்பரேசன்... பணமில்லாத ஏழைங்க எங்கே போவோம்...? அதான்... வேற வழி தெரியாம செயினை அறுத்துட்டேன்... உங்க அப்பாகிட்டச் சொல்லி என்னை உள்ளே தூக்கிப் போட்டிராதீங்க... என்னைப் பத்திக் கவலையில்லைங்க... நான் பணம் கொண்டு போனாத்தான் அந்தப் பாப்பாவுக்கு ஆப்பரேசன் நடக்கும்ன்னு சொன்னான்...

    ‘இதைத் திரும்பி வந்து சொன்னானா...? எங்கேயோ இடிக்குதே... ஓடிப் போனவன் முகத்தைக்கூட இவ பார்த்திருக்க மாட்டா... அடையாளம் காட்டப் பக்கத்திலேயும் யாருமில்லை... அப்புறம் ஏன் திரும்பி வந்து விளக்கம் சொன்னான்... அந்த விளக்கத்தையும் அவன் வீட்டில் இருக்கும் யாரோ ஒருவருக்காக திருடினான்னு சொல்லலை... அடுத்த வீட்டுப் பாப்பாவுக்காக திருடியதாய் சொல்லியிருக்கான்... ஸோ... அவன் சிம்பதியைக் கிரியேட் பண்ணலை... ஊருக்கு உழைக்கும் ராபின்ஹீட் இமேஜைக் கிரியேட் பண்ண நினைச்சிரிக்கான்...’

    ஏமாளியே என்ற பார்வையை வாசுதேவன் பார்க்க...

    இந்தக் காலத்திலேயும் இப்படி ஒரு மனிதனான்னு ஆச்சரியமா இருக்கில்ல... என்று கேட்டாள் சுசித்ரா...

    ஆமாம்ன்னு எல்லாம் சொல்ல முடியாதுங்க... கட் அண்ட் ரைட்டாக அறிவித்து விட்டான் வாசுதேவன்...

    ஏன் இப்படியிருக்கீங்க...?

    அது என் இஷ்டம்ங்க... நான் இப்படித்தான் இருப்பேன்...

    பிரசன்னாவும் இப்படித்தான் சொன்னான்... அடுத்தவங்களுக்காக நீங்க திருடனாகலாமான்னு நான் கேட்டதுக்கு எல்லோரும் இப்படியே நினைத்தா அந்தக் குழந்தை பிழைக்க வேண்டாமான்னு கேட்டான்... எனக்கு ‘ஜிம்’முன்னு ஆகிருச்சு...

    அவன் பெரிய தியாகி... அதைக் கண்டு பிடித்த நீங்க மகா புத்திசாலி...

    ஏன் இப்படிச் சொல்கிறீங்க...?

    பின்னே என்னங்க... கவர்ண்மென்டில் காப்பீட்டுத் திட்டம்ன்னு இருக்கு... முதலமைச்சர், பிரைம் மினிஸ்ட்டர்ன்னு மனுப் போட்டு உதவி கேட்கலாம்... ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப்ன்னு ஷேர் பண்ணலாம்... இதையெல்லாம் விட்டுவிட்டு தனியா நின்ன பெண்ணின் செயினைப் பிடித்து இழுத்து அறுத்தானாம்... கதை கேக்கறப்பவே தலையை வலிக்குது...

    சுசித்ராவின் முகம் வாடி விட்டது... அதற்காக இந்த கிறுக்குத்தனத்தையெல்லாம் நம்ப முடியாது என்பதைப் போல கறாராக முகத்தை வைத்துக் கொண்டான் வாசுதேவன்...

    உங்களைப் போல எல்லாம் என்னால் நினைக்க முடியாது...

    நினைக்க வேண்டாம்... என்ன பண்ணித் தொலைச்சீங்க...?

    செயினை அறுத்ததுக்கு கில்ட்டியா ஃபீல் பண்ண வேண்டாம்ன்னு சொன்னேன்...

    அப்படியே உங்க காலேஜ் அட்ரஸைக் கொடுத்து அங்கே வந்தா நிறையச் செயினை அறுத்துக்கிட்டுப் போகலாம்ன்னு ஐடியாக் கொடுத்திருக்களாமே...

    கேலி பண்றீங்களா...?

    சேச்சே... எஸ்.எஸ் கம்பெனியோட அட்மினிஸ்ட்ரேசனை ஏன் உங்க அப்பா உங்க அண்ணன் கையிலே கொடுத்தார்ன்னு இப்போதுதான் புரியுது... உங்க கையில கொடுத்திருந்தா இந்நேரம் கம்பெனியே காணாமல் போயிருக்கும்...

    டாடி பேசினதைப் போலவே பேசறிங்க...

    சொல்லிட்டாரா...? சொல்லாமல் எப்படி இருப்பார்... உங்க டிசைன் அப்படி... என்ன டிசைனோ... பகவானே...!

    போதும்... மனிதத்தன்மையோட பேசுங்க...

    நீங்க ஒரு ஆள் மனிதத்தன்மையோட இருக்கறீங்கள்ல... அது போதும்... இதுக்கும் மேலே இருந்தா உலகம் தாங்காது...

    நீங்க என்ன வேண்டும்னாலும் சொல்லிக்கங்க... ஐ டோன்ட் கேர்...

    அதானே... கேர் பண்ணியிருந்தாத்தான் உருப்பட்டிருப்பீங்களே...

    நீங்க என்னைக் கலாய்க்கறீங்க...

    சத்தியமா இல்லைங்க... இதைக் கலாய்ப்புன்னு எடுத்துகிற மனோ தைரியம் உங்களுக்கு இருக்கு... எனக்கு இல்லை...

    எல்லோரையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாதுங்க...

    அது நமக்கு ஷேஃப் சுசித்ரா...

    அப்படி நீங்க நினைக்கறிங்க... நான் நினைக்கலை...

    அதுக்கான விலையைத்தான் இப்போது கொடுத்துக்கிட்டு இருக்கீங்க... பெண்கள் சந்தேகப்படனும்...

    கூர்மையாகப் பார்த்தபடி வாசுதேவன் சொன்ன வார்த்தைகள் சுசித்ராவின் இதயத்தில் தைத்தன... மனவலியின் அதிர்வோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்... விழிகளில் கண்ணீர்த் துளிகள் திரண்டிருந்தன... வாசுதேவன் சொல்வதைப் போல அவள் சந்தேகித்திருக்க வேண்டுமோ என்று அவள் தடுமாறினாள்...

    25

    அப்புறம் என்ன ஆச்சு...?

    என் கையிலிருந்த வைர வளையலைக் கழட்டிக் கொடுத்து விட்டேன்...

    வாட்...!

    பேசாமல் காதைக் கழட்டிக் கடலில் எறிந்து விடலாமா என்று வெறுத்துப் போனான் வாசுதேவன்... உனக்கு ஒரு கும்பிடு, உன் கதைக்கு ஒரு கும்பிடு என்று பெரிய கும்பிடுகளாகப் போட்டு விட்டு வீட்டைப் பார்த்து ஓடி விடுவது சாலச்சிறந்தது... சுசித்ராவின் கடந்த காலக் கதை இந்த அளவுக்குக் கடுப்படிக்கும் என்று ஏன் அவனுக்குத் தெரியாமல் போனது...? சர்வ முட்டாளாக இருப்பதற்குப் பெயர்தான் மனிதத்தன்மையா...?

    யெஸ் மிஸ்டர் வாசுதேவன்... ஏதோ என்னால் ஆன உதவி...

    ஆமாமாம்... பத்து பைசா தானம் செய்தீருக்கீங்க பாருங்க... தன்னடக்கமாகச் சொல்லிக்கறீங்க...

    பத்துப் பைசா...? யு மீன் டென் பெய்ஸ் காயின்...?

    அதானே... உங்களுக்கெல்லாம் கோடியே சர்வ சாதாரணம்... இதில் நான் பத்துப் பைசாவைப் பத்திச் சொல்கிறேன் பாருங்க...

    அது இன்வாலிட் காயின் ஆச்சே...

    இம்புட்டுப் புத்திசாலியா நீங்க...? பத்துப் பைசாக் காயின் செல்லாதுங்கிற அளவுக்கு உலக விவரம் தெரிஞ்சிருக்கே...

    ஹலோ... ஐ ஆம் பி.ஈ. அண்ட் எம்.பி.ஏ...

    படித்துக் கிழித்து என்ன பிரயோசனம்...? பத்துப் பைசாவுக்குப் பிரயோஜனமில்லை... அந்த வைர வளையல் என்ன விலைக்குப் போகும்...?

    ஹீ நோஸ்...? பரம்பரை வளையலாம் அது... அம்மா சொன்னாங்க... மார்க்கெட் வேல்யூ ஒரு கோடியோ என்னவோன்னு நினைவு...

    அறிவில்லை உங்களுக்கு...? உதவி செய்யனும்னு நினைக்கிறவங்க எந்த ஹாஸ்பிடல்ன்னு கேட்டு அங்கே போய் குழந்தையைப் பார்த்து விட்டுப் பணத்தைக் கட்ட வேண்டியதுதானே...? வைர வளையலையா கழட்டிக் கொடுப்பீங்க...?

    ஆமாமில்ல... அப்படியும் செய்திருக்கலாமில்ல...

    அப்படித்தான் செய்திருக்கனும்...

    அப்ப அதெல்லாம் எனக்குத் தோணலைங்க... அவன் சொன்னதைக் கேட்டதும் இரக்கப்பட்டுக் கையிலிருந்த வளையலைக் கழட்டிக் கொடுத்துட்டேன்...

    என்னவோ செய்து தொலை என்று மௌனமாகி விட்டான் வாசுதேவன்... அவனது மௌனம் அவளை பாதித்தது...

    தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்... அவன் விழியசைவில் என்னவென்று கேட்டான்... அவளது

    Enjoying the preview?
    Page 1 of 1