Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neethaney Enathu Nizhal...
Neethaney Enathu Nizhal...
Neethaney Enathu Nizhal...
Ebook230 pages2 hours

Neethaney Enathu Nizhal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“நான் யாருன்னு எனக்குத் தெரியாது... ஆனா... நீங்கதான் எனக்கு நிழல்...” என்று சித்தார்த்தன் மார்பில் சாய்ந்து கொண்டாள் யாமினி... இப்படி யாமினி அவன் வசம் தன்னை இழக்க காரணம் என்ன? இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தது எது? ரமணிக்கும் சிந்தார்த்தனனுக்கும் இடையே இருக்கும் பந்தம் என்ன? இவர்கள் இருவரையும் பிரிப்பதற்கென்றே வந்தவர்கள் யார்? வாசித்து தெரிந்து கொள்வோம்...

Languageதமிழ்
Release dateSep 4, 2023
ISBN6580133810113
Neethaney Enathu Nizhal...

Read more from Muthulakshmi Raghavan

Related to Neethaney Enathu Nizhal...

Related ebooks

Reviews for Neethaney Enathu Nizhal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neethaney Enathu Nizhal... - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீதானே எனது நிழல்...

    Neethaney Enathu Nizhal...

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    1

    ‘மெலிதாகப் பாப் இசை கேட்டுக் கொண்டிருந்த அந்த டிஸ்கொதே ஹாலில்... சிகரெட் புகையின் நெடியும்... மதுபானத்தின் வாசனையும் கலந்திருந்தன... இடுப்பை விட்டு... அபாயகரமான இறக்கத்தில்... இறங்கியிருந்த... ஜீன்ஸ் அணிந்திருந்த பெண்ணொருத்தியுடன்... இடுப்பை அசைத்து... நடனம் ஆடிக் கொண்டிருந்த சித்தார்த்தன்... செல் போனின் ஒலி கேட்டு... எடுத்துப் பேசினான்...

    என்ன ரமணி...லேட்டாகிருச்சா...? ஸோ வாட்...? வீட்டுக்குப் போகனுமா...? வீட்டில் எனக்காக யார் காத்திருக்கிறாங்க...? என்னது... உனக்காகக் காத்திருக்கிறாங்களா?... அப்படின்னா நீ போக வேண்டியதுதானே... என்னை விட்டுட்டு போக மாட்டியா...? நீ எனக்கு டிரைவரா... இல்லை... வொய்பா...? ஓகே... ஓகே... நான் வருகிறேன்...

    சித்தார்த்தன்... கிளம்ப யத்தனிக்க... அவனுடன் ஆடிக்கொண்டிருந்த பெண்... அவனைத் தடுத்தாள்...

    எங்கே போகிறீங்க டார்விங்...

    என் வீட்டுக்கு...

    இப்போதேவா...

    யெஸ்... பை...

    அவன் நடையில் லேசாக தள்ளாட்டம் இருந்தது... விழிகளில் போதையுடன் கூடிய ஒரு கிறக்கம் தெரிந்தது... அவனுக்காக... காத்துக் கொண்டிருந்த ரமணி... அவனைக் கண்டதும் அவசரமாய் கார்க் கதவைத் திறந்துவிட்டான்...

    வீட்டுக்கு போக ஏன் அவசரப்படுகிறாய் ரமணி... என்றபடி... காரின் முன் சீட்டில் ஏறிச் சரிந்து அமர்ந்தான் சித்தார்த்தன்...

    அவசரப்படுகிறேனா...? மணி என்னன்னு தெரியுமா...? என்றபடி... காரைக் கிளப்பினான் ரமணி...

    மணி என்ன...?

    ஒன்னு...

    இவ்வளவு கம்மியான நேரத்திற்கா அலறுகிற...?

    அலறுகிறதையெல்லாம் வீட்டுக்கு போய்த்தான் செய்வேன்...

    ஏன் அப்படி...?

    அங்கே என் பொண்டாட்டி... பூரிக் கட்டையை கையில் தூக்கிக்கிட்டு... நின்னுக்கிட்டிருப்பா... அவ கொடுக்கிற அடிகள வாங்கினா... அலறல் தானே வந்துரும்...

    அடிவாங்குவதற்காகவா கல்யாணம் செய்துகிட்ட ரமணி...? இதுக்குத்தான் நான் தலைப்பாடாய் அடித்துக்கிட்டேன்... கல்யாணம் வேண்டாம்டா... வேண்டாம்டான்னு... என் பேச்சைக் கேட்டியா...?

    அடிவாங்குறதுக்காக யாராவது கல்யாணம் பண்ணிக்குவாங்களா...? எல்லாம் வாழ்கிறதுக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... எங்கே...? உங்களுக்கு டிரைவராக இருக்கிறவன்... பெண்டாட்டிக்கு ஒழுங்கான புருஷனாக இருந்துற முடியுமா...?

    ஏண்டா... அலுத்துக்கறே...

    வேறு என்ன செய்யச் சொல்றீங்க... அதைத் தானே என்னால் செய்ய முடியும்...? அதுதான் அலுத்துக்கறேன்...

    உன் பெண்டாட்டிக்கு உன்மேல் என்னடா கோபம்...

    எல்லாம்... காலகாலத்தில் வீட்டிக்கு வரலைங்கிற கோவம்தான்... வேற என்ன...?

    உன்னை ஈவினிங்கே வீட்டுக்குப் போகச் சொல்கிறேனா இல்லையா...?

    போகத்தான் சொல்கிறீங்க...

    நீ ஏன் போக மாட்டேன்கிற...?

    நீங்க ஏன்... அடங்கி வீட்டில் உட்கார மாட்டேன்கறீங்க...

    ஏண்டா... வீட்டுக்குள் அடைந்து கிடக்க என்னால் முடியுமாடா...? என்னைப் பார்த்தால்... வீட்டிற்குள் அடைபட்டுக் கொள்ளும் ஆள் போலவா... உனக்குத் தெரிகிறது...?

    அதுதான்... பகலெல்லாம்... பிஸினெஸ்... பிஸினெஸ்ன்னு அலைகிறீங்களே... ராத்திரியாவது வீட்டில் அடங்கி உட்காரக் கூடாதா...?

    பகலில் சூடாகிவிடும் மூளையை... இரவில் குளிர வைத்துக் கொள்கிறேண்டா...

    தூங்கினால்... அது தானாக... சூடு தணிந்து விடுமே...

    என்னை நான் ரீசார்ஜ் பண்ணிக் கொள்ள வேண்டாமா...?

    நீங்க என்ன செல்போனா...? ரீசார்ஜ் பண்ணிக் கொள்ள...

    "ஸ்ஸ்... உனக்கு வேண்டியது என்ன...? காலகாலத்தில் வீட்டுக்குப் போய் உன் பெண்டாட்டியைக் கொஞ்ச வேண்டும்... நீ போக வேண்டியதுதானே... நான்

    நைட்டில் ஊர் சுற்றப்போனால் உனக்கென்ன...? காவலுக்கு உன்னைக் கூப்பிட்டேனா?"

    அது சரி... நீங்க... தண்ணியைப் போட்டுட்டு காரை ஓட்டுவீங்க... அது வேலைக்காகாது சார்... நான் வீட்டில போய் உங்களை நினைத்துக்கிட்டு... பக்கு... பக்குன்னு உட்கார்ந்தா... என் பெண்டாட்டி... அதற்கும் சண்டைக்கு வருவா...

    ஏண்டா...?

    வீட்டில் நானிருக்க... யாரை நீ மனதில் நினைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்னு... கரண்டியாலேயே... மண்டையில் ஒரு போடு... போடுவா... அது தேவையா எனக்கு...?

    உன்னை யாருடா... என்னை நினைக்கச் சொன்னது...?

    எல்லாம் ஒரு வேண்டுதல்தான்... வேற என்ன...? உங்கனைப் பத்திரமாக வீட்டில் விட்டுட்டு... கார் சாவியை கைப்பற்றிக்கிட்டு போனால்தான்... எனக்கு... தூக்கமே வரும்...

    நீ திருந்தவே மாட்டடா...

    அதை நீங்க... என்னைப் பார்த்துச் சொல்கிறீங்க...? எல்லாம் என் நேரம் சார்...

    அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல்... ஒரு முதலாளிக்கும்... கார் டிரைவருக்கும் நடக்கும் உரையாடல் போல இல்லாமல் அன்யோனியமாக இருந்தது... ரமணியின் பேச்சில்... அவன் தன் முதலாளியின் மேல் வைத்திருக்கும் பாசம் வெளிப்பட்டது... அந்தப் போதையிலும் அதை நினைத்து... சித்தார்த்தன் பரிவுடன் புன்னகை செய்து கொண்டான்...

    ஏண்டா... என்மேல் இவ்வளவு பாசத்தை வைத்திருக்கிற...?

    சம்பளத்தை அள்ளி... அள்ளி கொடுக்கிறீங்களே... அதனாலதான்... வேற எதுக்கு...?

    உனக்கு மட்டுமாமா சம்பளத்தை தருகிறேன்...?

    எனக்கு மட்டும்தானே பாசத்தை தந்தீங்க... அடைக்கலத்தை கொடுத்தீங்க... எனக்கு ஒரு அட்ரஸையும் உருவாக்கினீங்க...

    கடந்த கால நினைவில்... ரமணியின் கண்கள் கலங்கின... அநாதைச் சிறுவனாக... பிளாட்பாரத்தில் நின்று கொண்ருந்தவனைப் பார்த்த சித்தார்த்தன்... அவனைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்...

    இத்தனைக்கும்... சித்தார்த்தனுக்கு... ரமணியின் வயதுதான்... அப்போது... சித்தார்த்தனின்... தாய் தந்தை உயிரோடு இருந்தார்கள்...

    டாடி... மம்மி... இவன் நம்மோடு... நம் வீட்டிலேயே இருக்கட்டும்...

    மகனின் பேச்சைத் தட்ட முடியாமல்... ரமணியை வீட்டில் சேர்த்துக் கொண்டார்கள்... சித்தார்த்தனின் பெற்றோர்...

    அவனும் ஸ்கூலில் படிக்கட்டும்...

    இந்த வயதில் அவனை எந்த ஸ்கூலில் சேர்ப்பதுடா...? ஒன்று செய்யலாம்... நீ... டியுசன் படிக்கும் போது... அவனுக்கும் எழுதப் படிக்கச் சொல்லித்தரச் சொல்கிறேன்...

    சித்தார்த்தனின் உடைகளில் பாதி... ரமணியிடம் போய் சேர்ந்தது... அடிப்படைக் கல்வியை வீட்டிலிருந்தே கற்றுக் கொண்ட ரமணிக்கு... தமிழும்... ஆங்கிலமும்... எழுதப் படிக்க மட்டும் தெரியும்... மற்றபடி... அவன் முறையாக பள்ளிக்குச் சென்று பாடம் படிக்கவில்லை...

    வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வான்... சித்தார்த்தனின் தாய் தேவகி... ரமணியை ஒரு தத்துப் பிள்ளை போலதான் கவனித்துக் கொண்டாள்...

    என்னங்க... ரமணிக்கு... ஏதாவது ஒரு கைத் தொழிலை கற்றுக் கொடுங்க...

    கணவரிடம் தேவகி கோரிக்கை வைக்க... சித்தார்த்தனின் தந்தை மூர்த்தி யோசித்தார்...

    டிரைவிங் கற்றுக் கொள்கிறாயா?

    ரமணி சந்தோஷமாக தலையை ஆட்டினான்... சித்தார்த்தன் மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றபோது மூர்த்தியின் கார் டிரைவராக... அவருக்கு காரோட்ட ஆரம்பித்திருந்தான் ரமணி...

    சித்தார்த்தன் படிப்பை முடித்துவிட்டு வந்தபின்... கம்பெனி பொறுப்புக்களை எடுத்துக் கொண்டான்... அவனுக்குத் திருமணம் செய்து வைக்க... முயற்சிகள் எடுத்துக் கொண்ட... அவனது பெற்றோர்... அந்த முயற்சியில் தோற்றனர்...

    எனக்கு இப்போ மேரேஜ் வேண்டாம்... டாடி... என்று பிடிவாதமாகக் கூறிவிட்டவனை... வற்புறுத்த முடியாமல்... ரமணிக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்து... அவர்களை... தனிக் குடித்தனமாய் வைத்தார்கள் தேவகியும் மூர்த்தியும்...

    லீலா நல்ல பொண்ணுடா ரமணி... அவள் மனம் கோணாமல் குடும்பம் நடத்து...

    இதுதான் தேவகி... ரமணியிடம்... கடைசியாகக் கூறின அறிவுரை.

    கனடாவில் இருந்த உறவினர் ஒருவரைப் பார்க்க... பிளேனில் பறந்த மூர்த்தியும்... தேவகியும்... பிளைட் ஆக்ஸிடெண்டில் உயிரிழந்தார்கள்.

    மிகப் பெரிய கோடிஸ்வரனான சித்தார்த்தன்... ஒரே நாளில் பெற்றவர்களை இழந்து... அநாதையாக நின்றான்.

    அவனைச் சுற்றி பணம் இருந்தது... பாசம் இல்லை... சொத்து இருந்தது... சுற்றம் இல்லை... தனிமையை மறக்க... அவன் போதையின் துணையை நாடினான்...

    ரமணி துயரப்பட்டான்... சித்தார்த்தனை... போதையிலிருந்து மீட்கப் போராடினான்... முடியாமல் போனபோது... அவன் சித்தார்த்தனை... காவல் காக்கும் காவல்காரனாக மாறிவிட்டான்...

    நேரமானால் வீட்டுக்குப் போடா... என்று சித்தார்த்தன் சொன்னால்...

    நீங்க வீட்டுக்கு போங்க... நானும் போகிறேன்... என்று பதில் சொன்னான்...

    எனக்கென்ன... வீட்டில் பெண்டாட்டியா காத்திருக்கிறாள்...? என்று சித்தார்த்தன் கேள்வி கேட்டால்...

    நாளைக்கே ஒரு கல்யாணத்தை பண்ணிக்கங்க... வீட்டில் உங்க பெண்டாட்டி... உங்களுக்காக காத்திருப்பாங்க... என்று ரமணி பதில் கொடுப்பான்...

    சித்தார்த்தன்... அதற்கு மட்டும் பிடி கொடுக்க மாட்டான்... ரமணியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டான்... சித்தார்த்தன் கேட்கவில்லை... தினமும் டிஸ்கொதே... மது... என்று அவன்... தனக்கொரு பாதையை அமைத்துக் கொண்டு விட்டான்...

    அம்மா... அருகிலிருந்த சித்தார்த்தன் லேசாய் முனுமுணுக்கவும்... ரமணி காரை நிறுத்தினான்...

    என்ன சார் செய்யுது...? என்று கவலையுடன் கேட்டான்...

    நத்திங்... ஒரே தலைவலி... நீ காரைக் கிளப்பு...

    சதா சிகரெட்... குடின்னு இருந்தா தலைவலிக்காமல் என்ன செய்யும்...? 

    ரமணி காரை எடுத்துக் கொண்டே சலிப்பாய் கூறியபோது தான் அது நிகழ்ந்தது...

    காப்பாற்றுங்க. என்றபடி... சித்தார்த்தனின் காரின் மீது மோதி... நின்றாள் அந்தப் பெண்... அவளை துரத்திக் கொண்டுவந்த முரடர்கள் இருவரும்... தயங்கி நின்றனர்.

    2

    சித்தார்த்தனின் போதை பறந்துவிட்டது... அவன் வியப்புடன் காரின் கண்ணாடியைப் பார்த்தான்... அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த பயமும்... பதட்டமும்... அவனைப் பாதித்தது... சித்தார்த்தன் கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கிவிட்டான்...

    ரமணியால்... ‘போகாதே...’ என்று சித்தார்த்தனைத் தடுக்க முடியவில்லை...

    நடு இரவில்... ஆபத்தில் ஒரு இளம் பெண் மாட்டிக் கொண்டு ‘காப்பாற்றுங்க...’ என்று கதறும் போது... அதைச் சட்டை செய்யாமல் கடந்து செல்லும் அளவிற்கு... அவன் கல்மனம் படைத்தவனல்ல...

    ஆனால்... இரண்டு முரடர்கள் கையில் கத்தியோடு இருக்கும்போது... நிராயுதபாணியாக அவர்களை எதிர் கொள்வதும் புத்திசாலித்தனமல்ல... என்பதால் அவன்... காரில் வைத்திருந்த ஸ்பானர் செட்டை எடுத்தான்...

    அதற்குள் சித்தார்த்தன்... இறங்கியதைக் கண்ட அந்த இளம் பெண்... அவனருகில் ஓடிவந்து... நிற்க... ஒருவகையால் அவளை இழுத்து... தன் முதுகின் பின் நிற்க வைத்துக் கொண்டே... ரவுடிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தான் சித்தார்த்தன்...

    நீங்க இரண்டு பேரும் யாரு...?

    அதை நீ தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிற...?

    ம்ம்... நடுராத்திரியில் பேடித்தனமாய் பெண்ணைத் துரத்திக்கிட்டு வந்த வீரர்கள்ன்னு அவார்டு கொடுக்கப் போகிறேன்...

    நீ யாருகிட்ட பேசிக்கிட்டு இருக்கிறேன்னு தெரியுமா...?

    அதைத்தானே முதலில் கேட்டேன்...?

    கத்திக் குத்து கபாலிகிட்ட பேசிக்கிட்டு இருக்கிற...

    கத்திக் குத்து கபாலியா...? கபாலிங்கிறது பெயர்... அது என்ன ‘கத்திக்குத்து’... இவருக்கு யாரும்... பட்டம் கொடுத்திருக்கிறாங்களா என்ன...?

    என்னது... அண்ணனையே கிண்டல் பண்றயா...?

    "அண்ணனா...? நீங்க இரண்டு பேரும்

    Enjoying the preview?
    Page 1 of 1