Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammamma.. Keladi Thozhi...! - Part 2
Ammamma.. Keladi Thozhi...! - Part 2
Ammamma.. Keladi Thozhi...! - Part 2
Ebook357 pages2 hours

Ammamma.. Keladi Thozhi...! - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அதுக்காக மட்டும்தான் உன் கழுத்தில் நான் தாலி கட்டப் போறேன்... மத்தபடி... உனக்கும்... எனக்குமிடையே இனிமே ஒன்னுமேயில்லடி... முரளி இப்படி கூறியதை கேட்டவள், தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவளாக பேரதிர்வுடன் ராதிகா உறைந்து போனாள்... இப்படி அவள் உறைந்து போகக் காரணம் என்ன? எந்த காரணத்தால் முரளி இப்படி கூறினான்? வாசிப்போம் அம்மம்மா.. கேளடி தோழி...! - பாகம் 2

Languageதமிழ்
Release dateOct 5, 2023
ISBN6580133810196
Ammamma.. Keladi Thozhi...! - Part 2

Read more from Muthulakshmi Raghavan

Related to Ammamma.. Keladi Thozhi...! - Part 2

Related ebooks

Reviews for Ammamma.. Keladi Thozhi...! - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammamma.. Keladi Thozhi...! - Part 2 - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மம்மா.. கேளடி தோழி...! - பாகம் 2

    Ammamma.. Keladi Thozhi...! - Part 2

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    38

    சொன்னமொழி தவறு என்பதையே...

    சொன்னவன் என்றுதான் அறிவானோ...?

    ஊரே உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவு வேளையில்... உறங்காமல் கண்மூடிப் படுத்திருந்தாள் ராதிகா... அவளது மைவிழிகள் சிந்திய கண்ணீரை மையிருட்டு மறைத்தது... தலையணை நனைய... அதில் முகம் புதைத்து... மற்றவர்கள் அறியாமல் சப்தமின்றி விம்மியவளின் நெஞ்சம் சுக்கு நூறாக நொறுங்கியிருந்தது...

    ‘இனி என்ன செய்வேன்...?’

    நடந்து முடிந்து விட்ட நிகழ்வில் மனம் அதிர... அவள் முன் வாழ்வே சூன்யமாக நின்றது...

    எதற்கும் அழுகாத ராதிகாவை காதலினால் அழுக வைத்தவன்... அன்று கறைபடிந்தவளாக்கி அழுக வைத்துவிட்டான்...

    யாதுமாக அவள் நினைத்திருந்தவனே... அவளை சூறையாடிவிட்ட கொடுமையினை நினைத்து நினைத்து மனம் துடிக்க அழுதாள் ராதிகா...

    ‘எல்லாம் முடிந்து விட்டது...’

    அவள் மனம் வெறுமையாக வெம்பியது... தன் மனதில் சக்தியற்று போய் விட்டதை உணர்ந்தாள் அவள்...

    ‘இனியும் நான் உயிரோடுதான் இருக்கனுமா...?’

    நடந்ததை அவளது குடும்பம் அறிந்துவிட்டால் என்னவெல்லாம் நடக்கக் கூடும் என்ற நினைவில் நடுங்கினாள் ராதிகா...

    ‘அப்பா உயிரையே விட்டு விடுவார்...’

    நினைக்கும் போதே அவளது நெஞ்சம் பதறியது...

    ‘அம்மா என்னோடு சேர்த்து... எல்லாத்துக்கும் விஷத்தைக் கொடுத்துட்டு... தானும் சாப்பிட்டு விடுவாங்க...’

    லேடி ஹிட்லர் அந்த ஒன்றில் மகா உறுதியாக இருப்பாள் என்பதை அறிந்து வைத்திருந்த ராதிகாவுக்கு உலகமே இருட்டானதைப் போல தோன்றி உள்ளே குளிரெடுத்தது...

    ‘என்னாலே... என் குடும்பமே தலை குனியனுமா...? அழியனுமா...?’

    இந்தக் கேள்வியில் அவளுக்குள் இருந்த பழைய ராதிகா உயிர் பெற்று எழுந்தாள்... கண்ணீரும்... கம்பலையுமாக இருந்தவளை அதட்டினாள்...

    ‘ஏண்டி அழுகறே...? இப்ப என்ன நடந்திருச்சு...?’

    ராதிகா திகைத்து விட்டாள்... அவள் மனதிலிருந்த பழைய ராதிகாவிடம் தீனமான குரலில் கேட்டாள்...

    ‘என்னடி இப்படிக் கேட்கிற...? என் வாழ்க்கையே அழிஞ்சுருச்சே...’

    இதைக் கேட்ட பழைய ராதிகா அவளை முறைத்தாள்... அங்கே இழப்பை உணர்ந்து பரிதவித்த ராதிகாவிற்கும்... இயல்பான போராட்ட குணமுள்ள ராதிகாவிற்கும் இடையே வழக்காடு மன்றம் ஆரம்பமானது...

    ‘அழிஞ்சுட்டதா ஏன் நினைக்கறே...? வாழ்ந்துட்டதாய் நினை...’

    ‘அடிப்பாவி... இதுதான் நான் வாழ்ந்த லட்சணமா...?’

    ‘உனக்கு அவனைப் பிடிக்கும்தானே...?’

    ‘பிடிக்கும்...’

    ‘அவனை மட்டும்தானே பிடிக்கும்...?’

    ‘ஆமாண்டி... ஆமாம்... அவனைமட்டும்தான் பிடித்து தொலைச்சிருக்கு...’

    ‘அவனைத்தவிர வேறு ஒருத்தனால் உன்னை இவ்வளவு எளிதாக தொட்டிருக்க முடியுமா...?’

    அவளது அந்தரங்க மனதிலிருந்த ராதிகா கேட்ட கேள்வியில் அவள் அதிர்ந்தாள்... அது உண்மைதானே... வேறு ஒருவனின் விரல் நகம்கூட அவள் மீது பட்டிருக்க முடியாது தானே...

    ‘என்னடி பேச்சைக் காணோம்...? அவன் உன்னைத் தொட்டான் தான்... நீ முழுமனசாய் அவன்கிட்டயிருந்து விடுபடனும்னு போராடினயா...?’

    ‘அவனிடம் கெஞ்சினேன்டி... கதறினேன்டி...’

    ‘நீ போராடினயா...? இதுதான் என் கேள்வி...’

    ‘அவன் காலில் விழுந்தேண்டி...’

    ‘அதுக்குப் பதிலாய் அவன் தலையில் எதையாவது எடுத்து அடித்து அந்த இடத்திலேயே அவனைக் கொன்றிருக்கலாமே... ஏண்டி நீ அதைச் செய்யலை...?’

    ‘கொல்கிறதா...? அவனையா...? என்னப் பேச்சு பேசறடி... என்னால் அவனை மெல்ல அடிக்கக்கூட முடியாதுடி...’

    ‘ஏன்...? அதுதான் ஏன்...? அவன் உன் உயிரை விட மேலான கற்பை சூறையாடிக்கிட்டு இருக்கான்... நீ அவன் காலில் விழுந்து கெஞ்சினேன்னு சொல்ற... இதைச் சொல்ல உனக்கே அபத்தமாய் தோணலியா...?’

    ‘நான் என்னடி செய்வேன்...?’

    ‘எதை வேணும்னாலும் செய்திருக்கலாமே... உன் கைவிரல் நகங்களும்... பற்களும் கூட அந்த மாதிரியான சூழ்நிலையில் ஓர் ஆயுதம்தானே... நீ அவைகளைப் பயன்படுத்தினாயா...?’

    இந்தக் கேள்வியில் தலை குனிந்தாள் ராதிகா...

    ‘என்னடி பேச்சைக் காணோம்... ஏன் நீ அதைச் செய்யவில்லை...? அவன் உடம்பில் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் அவன் நினைத்ததை சாதித்து விட்டுப் போயிருக்கிறானே... அது எப்படி...?’

    எப்படியென்று சொல்வாள் ராதிகா...? அவன் தொட்டவுடன் பாகாய் குழைந்த உடலையும்... மனதையும் வைத்துக்கொண்டு... பிரியமானவனுடன் போராட முடியாமல் போய் விட்டதன் இயலாமையை எப்படி அவளால் சொல்ல முடியும்...?

    ‘ஊமையாகி விட்டாயே ராதிகா... இதுதான் நீ...! அவன் உன்னை தொட்டு விட்டதற்காக நீ துடிக்கவில்லை... தொட்டவன் உன்னை விட்டுவிட்டுப் போய் விட்டானே... அதனால்தான் நீ துடிக்கிறாய்...’

    அவளது மனநிலையை பழைய தெளிவான ராதிகா பிட்டுப்பிட்டு வைக்க...

    ‘என்னது...?’ என்று அதிர்ந்தாள் ராதிகா...

    ‘என்னடி... உண்மையைச் சொன்னால் அதை ஒப்புக் கொள்ள உனக்கு மனமில்லையா...? எங்கே... நான் சொன்னதை இல்லையென்று முழுமனதாய் சொல்லு பார்ப்போம்...’

    பழைய ராதிகா சவால்விட... பதில் சொல்ல முடியாமல் திருதிருத்தாள் ராதிகா...

    ‘உன்னுடன் அவன் கழித்த அந்த மணித்துளிகளை மரணப்படுக்கையிலும் நீ மறக்காமல் நினைவில் வைத்திருப்பாய்... இதுதான் நிதரிசனமான உண்மை...! உன் அந்தரங்கத்தில் அந்த வினாடிகள் தேன்துளிகளாக புதைந்திருக்கும்... எவரும் அறியாமல் அதை நினைத்து... நினைத்து... நீ மனம் சுகிப்பாய்...’

    மனம் மயக்கும் அந்த வினாடிகளில் தன் மனம் புதைந்திருந்ததை அந்த நொடியில் உணர்ந்தாள் ராதிகா... அவன் தொட்ட மணித்துளிகள் அந்தரங்கத்தின் பெட்டகத்தில் தேன் துளிகளாக சேர்ந்து விட்டதையும் அவள் மனம் உணரத்தான் செய்தது...

    ‘இருந்தாலும்...’ ராதிகா மனம் தவித்தாள்...

    ‘இனியும் என்னடி...?’ பழையவன் அதட்டினாள்...

    ‘அம்மா... அப்பா... கீதா... சுந்தர்...’

    ‘இவங்களுக்கு என்ன...?’

    ‘இதைத் தெரிந்தால் குடும்பத்தின் நிலைமை என்ன ஆகும்? அதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு...’

    ‘ஒரு மண்ணும் ஆகாது... இப்ப என்ன ஆகிருச்சுன்னு இப்படி பயப்படுகிற ராதிகா... நீ உன்னுடையவனுடன் வாழ்ந்திருக்கிறாய்...’

    ‘அதை ஊரறிய சொல்ல முடியுமா...?’

    ‘ஏன் முடியாது...? ஊரும்... உலகமும் அறிய அவன் உன் கழுத்தில் தாலிகட்டினால் சொல்ல முடியும்...’

    ‘அவன்தான் எனக்கு இது தண்டனைன்னு சொல்லிட்டுப் போய் விட்டானே...’

    ‘அவன் போனால்... நீ அப்படியே விட்டு விடுவியா...?’

    ‘வேறென்ன செய்வது...?’

    ‘ச்சீ... இப்படிக் கேட்க உனக்கு வெட்கமாயில்லை...? அவன் கட்டையைப் பிடித்து நாலு கேள்வி கேட்டு... உன் கழுத்தில் தாலியைக் கட்டவை... அதை விட்டு விட்டு புலம்பாதே... குழம்பாதே...’

    ‘விருப்பமில்லாதவனை... என்னை வெறுக்கிறவனை... தேடிப்பிடித்து அவன் காலில் விழுந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி... கெஞ்சச் சொல்கிறயா...?’

    ‘உன்னை யாருடி அவனிடம் போய் கெஞ்சச் சொன்னது...? அவனைத்தேடி நீயேன் போகனும்...? அவனை உன்னைத் தேடி வர வை ராதிகா... உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அவன் வாயால் சொல்ல வை...’

    ‘த்சு... நடக்காததைப் பேசாதே... அவன் என்னை வெறுத்துட்டான்... அந்த ஷோபா வெறுக்க வைச்சுட்டா...’

    ‘ஊஹீம்...? அப்படியா...? உன்னை வெறுத்தவன் எதுக்காக உன்னை அவன் தொட்ட பண்ணை வீட்டை விலைக்கு வாங்கறான்...? அது எதற்கான நினைவுச் சின்னம்...?’

    பழைய ராதிகா கண்சிமிட்ட...

    ‘ஏய்ய்...’ என்று முகம் சிவந்தாள் ராதிகா...

    ‘உன்னை அவனுடன் அந்த வீட்டில் இருந்து விடும்படி அவன் சொன்னானா... இல்லையா...? வெறுக்கிறவன் அப்படிச் சொல்வானா...?’

    ‘அந்தக் கொடுமையை நினைவு படுத்தாதே... அவன் என்னை அவன் மனைவியாக இருக்கச் சொல்லவில்லை... ஆசைநாயகியாக இருக்கச் சொன்னான்...’

    அவமானத்தில் முகம் கன்றிவிட்டது ராதிகாவிற்கு...

    ‘அவன் சொன்னால்... நீ அப்படி இருந்து விடுவியா...? எப்ப அவன் உன்னைத் தொட்டு... உன்னுடன் கலந்து விட்டானோ... அப்போதே அவன்தான் உன் கணவன்... நீதான் அவன் மனைவின்னு ஆகிவிட்டது... அதுக்கு மேலேயும் அவன் சொன்னதை நினைத்து நீ மனம் துன்பப்படனுமா...?’

    ‘அவன் அப்படிச் சொல்லலாமா...?’

    ‘நீ சங்கரைப் பற்றிப் பேசின பேச்சுக்களை கேட்ட பின்னாலே அவன் வேற எப்படிச் சொல்லுவான்...? வெறி பிடித்துப் போனவன் எதை வேண்டும்னாலும் செய்வான்... எதையும் பேசுவான்...’

    ‘என் மனதில் அவன் மட்டும்தானே...’

    ‘உன் அந்தரங்கத்தை அவன் அறிவானா ராதிகா...?’

    அந்தக் கேள்வியில் ராதிகா யோசிக்க ஆரம்பித்தாள்... அவளின் பழைய தெம்பு மீண்டு வந்து கொண்டிருந்தது...

    ‘யோசி ராதிகா... இதை சரிபண்ண என்ன வழின்னு யோசி... நேற்று வரைக்கும் அவன் உன் காதலன்... இன்றைக்கோ உனக்குத் தாலிகட்டாமல் தொட்டு விட்ட உன் கணவன்... இந்த உறவை ஊரறிய உண்மையாக்க என்ன வழின்னு யோசி... உன் குடும்பம் தலை நிமிர்ந்து வாழனும்னா... அவன் உன்னைத் தேடி வரனும்... உன்னைப் பெண் கேட்கனும்... உலகறிய உன் கழுத்தில் தாலி கட்டனும்... அதற்கு என்ன வழின்னு யோசி... உன்னைத் தொட்டவன் உன்னை விட்டுவிட்டுப் போனால் நீ சும்மாயிருந்து விடுவதா...? அவன் பதறிக் கொண்டு உன்னிடம் ஓடி வரனும்... அதுக்கு என்ன வழின்னு யோசி... அதை விட்டுவிட்டு தேவையில்லாததை யோசிக்காதே... அழுது புலம்பாதே... அது உன் சக்தியை குறைக்கும்...’

    காண்டிபனுக்கு பாதை காட்டி அந்தக் கண்ணன் உபதேசித்ததைப் போல... அவளின் மனதிலிருந்த அவள்... அவளுக்கு உபதேசித்தாள்... வாழ்க்கையென்னும் குருஷேத்திரத்தில்... எதிர்பட்டிருக்கும்... சக்கரவியூகத்தை உடைக்கும் வழியைச் சொல்லிக் கொடுத்தாள்... உள்ளே போனவள்... வெளியே வர வழி கண்டுபிடித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு... அவளுக்குள் கரைந்து போனாள்...

    மகளே இனி உன் சமத்து... என்று அவளின் மனச்சாட்சி சொல்லி விட்ட பின்பு ராதிகா சமர்த்தாகி விட்டாள்... அவளது கண்ணீர் உலர்ந்து... நின்று விட்டது... விடிவதற்குள் இனிச்செய்ய வேண்டியது என்ன என்ற முடிவை அவள் எடுத்து விட்டாள்... தெளிவான தீர்மானத்தோடு... உறங்கிப் போனாள்...

    அவள் முகத்தில் மழைச்சாரலின் நீர்திவலைகள் நனைக்க...

    கீதா... ஜன்னலை மூடுடி... மழை பெய்யுது... என்றபடி புரண்டு படுத்தாள்...

    மழையா...? இது ஒரு தம்ளர் தண்ணீர்டி... கீதாவின் குரல் சிரிக்க... கண் விழித்தாள் ராதிகா...

    அவள் முகமெங்கும் நீர் திவலைகள் படிந்திருந்தது... ஒரு கையில் பேஸ்டும்... பிரஷ்ஷீம்... மறுகையில் காலிதம்ளருமாக நின்றிருந்த கீதாவைக் கண்டதும் அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது...

    ஏண்டி பிசாசே... என் முகத்தில் தண்ணிய ஊத்தின...? என்று பாய்ந்தாள்...

    கீதா அதற்கெல்லாம் அயர்ந்து போகிற பெண்ணில்லை... அவள் அலட்சியமாக பல்லைத் துலக்கியபடி...

    ஊம்... அப்படியொரு நேர்த்திக்கடன்டி எனக்கு... உன்கோபத்தை என்கிட்டக் காட்டாதே... இதைச் செய்யச் சொன்ன லேடி ஹிட்லர்கிட்டக் காட்டு... என்றாள்...

    அம்மாதான் தண்ணிய ஊத்தச் சொன்னாங்களா...? அடங்கிப் போனவளாக எழுந்தாள் ராதிகா...

    இப்ப மூச்சே விட மாட்டியே... லேடி ஹிட்லர்கிட்ட இருக்கிற பயம்... அவங்களோட இரண்டாவது மககிட்ட உனக்கு இல்லாமப் போயிருச்சில்ல...? கீதா கேட்டாள்...

    ராதிகா அவளை முறைத்த முறைப்பில் ஓடி விட்டாள்...

    39

    யாரென்று எனை நினைத்தாய்...?

    லேசாக எடை போட்டாய்...

    முகமெங்கும் மத்தாப்பூ போல ஒளிர்வுடன்... ஸ்கூட்டியில் வந்து இறங்கிய ராதிகா...

    ஹாய்... ஹாய்... என்று கையை ஆட்டியபடி தோழிகளை நோக்கி வந்த உற்சாகத்தைக் கண்டு ஷோபா யோசனையானாள்...

    ‘இவ இன்னுமா அடங்கலை...?’

    சங்கரைப் பற்றி ராதிகா அள்ளி விட்ட மறு நொடியே... அவள் விரைவாக தன் வேலைகளை ஆரம்பித்து விட்டிருந்தாள்...

    முதலில் ராதிகா சொன்ன செய்திகள் உண்மையானது தானா என்று உறுதிப் படுத்திக் கொண்டாள்...

    என்ன சொல்ற ஷோபா...

    மகள் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போன பரந்தாமன் அவள் முன்னாலேயே ராமாமிர்தத்திற்கு போன் செய்தார்...

    ராம்... ஒரு நியூஸ் கேள்விப் பட்டேன்...

    .....

    என்னடா இப்படிச் சொல்ற...? நீ எப்படி அந்தப் பெண்ணின் வீடு தேடி குடும்பத்துடன் போய் பெண் கேட்கலாம்...?

    .....

    சங்கர் விரும்பினா... நீ ஊம்ன்னு தலையை ஆட்டலாமா...? நம்ம ஸ்டேட்டஸைப் பத்தி யோசிக்க வேண்டாமா...?

    .....

    ஷோபாவுக்கு நான் என்ன பதிலைச் சொல்வேன்...?

    .....

    இல்லைதான்... சங்கருக்கு ஷோபாவின் மேல் இன்ட்ரெஸ்ட் இல்லைதான்... அதை உண்டாக்கத்தான் நீயும்... நானும்... பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறோமே... அதுக்குள்ளே நீ என் தலையில் இடியைத் தூக்கிப் போடலாமா...?

    .....

    மறுமுனையில் ராமாமிர்தம் நீண்ட விளக்கத்தைக் கொடுக்க... சுரத்தில்லாமல் அவற்றை ‘ஊம்’ போட்டுக் கேட்டு விட்டு போனை அணைத்தார் பரந்தாமன்...

    மகளை நிமிர்ந்து பார்த்த அவர் கண்களில் தெரிந்த வேதனை ராதிகா சொன்ன செய்திகள் உண்மைதானென்று ஊர்ஜிதம் செய்ய... அந்தத் தோல்வியின் பாரம் தாங்காமல் விழி மூடிக்கொண்டாள் ஷோபா...

    ‘கடைசியில் என் வாழ்க்கையிலயும் என்னை தோற்கடித்து விட்டயேடி...’ அவள் மனம் பதறியது...

    இப்படி நிகழுமென்று முன்கூட்டியே தெரிந்திருந்தால்... அன்றைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ராதிகாவை அவள் அழைத்திருக்கவே மாட்டாளே...

    அவள் எதையோ நினைத்து செய்யப்போக... அது அவள் வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டி வைப்பதில் வந்து முடிந்து விட்டதே...

    உன்னால்தான் ஷோபா... பரந்தாமன் குற்றம் சாட்டினார்...

    நீதான் அவளை உன் பர்த்டே பார்ட்டிக்கு இன்வைட் பண்ணினாய்...

    டாட்... இதை நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை... அவளெல்லாம் எனக்கு ஈக்குவலா டாட்...?

    அப்படி யாரையும் ஈஸியா எடைபோட்டு விடக் கூடாது ஷோபா... உனக்கு சங்கரின் டேஸ்டைப் பத்தித் தெரியும்... அவன் நேச்சரை லைக் பண்ணுகிறவன்... அவன் கண் முன்னாலே... அவன் விரும்புகிறதைப் போல ஒரு பெண்ணைக் கொண்டு வந்து நிப்பாட்டித் தொலைச் சிருக்கயே... உன்னை என்ன பண்ணினால் தேவலாம்...?

    டாடி... ப்ளீஸ்... நானே நொந்து போயிருக்கேன்... போயும் போயும்... அந்த ராதிகாவிடம் தான் நான் தோற்கனுமா...?

    இது நீயாய் தேடிக்கிட்ட தோல்வி ஷோபா... அவளைத் தான் மேரேஜ் பண்ணிக்குவேன்னு... சங்கர் அடித்துச் சொல்லி விட்டானாம்... ராமுக்கும்... அவன் வொய்புக்கும் இதில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லையாம்... இருந்தாலும்... ஒரே மகன்... அவன் மனதுக்கு மாறாய் எதையும் அவங்களாலே செய்ய முடியாதில்லையா...? அதுக்காக பெண் கேட்டுப் போயிட்டாங்க... அனேகமா... அடுத்த மாதமே மேரேஜ் நடந்தாலும்... நடந்து விடலாமாம்...

    இதைக் காது கொடுத்து கேட்பதற்காகவா... அன்று வரமாட்டேன் என்று மறுத்த ராதிகாவை வருந்தி... வருந்தி... வற்புறுத்தி தன் வீட்டு விருந்துக்கு வரவைத்தாள் ஷோபா...?

    உன்னைப் புத்திசாலின்னு நினைத்தேன்...

    பெருமூச்சுடன் அவளைத் தனியாக விட்டு விட்டு நகர்ந்து விட்டார் பரந்தாமன்...

    அவளை புத்திசாலியென்று நினைத்த தன் நினைவு தவறானது என்பதை அந்தப் பெருமூச்சின் மூலம் அவர் உணர்த்தி விட்டுப் போக... காலேஜில் ஷோபாவை மக்காக்கியது போதாது என்று... அவளின் வீட்டுக்குள்ளேயும் ‘மக்கு...’ என்ற பெயரை வாங்கிக் கொடுத்து விட்ட ராதிகாவின் மீது ஷோபாவின் மனதிற்குள் வன்மம் பெருகியது...

    ஷோபா... சுசிலா உள்ளே வந்தாள்...

    என்னவென்று கேட்காமல் கண் மூடிப் படுத்திருந்த மகளின் முகத்தைப் பார்த்தே அவளின் மனநிலையை எடைபோட்டு விட்ட சுசிலா... மகளின் அருகே அமர்ந்து... ஆதரவாக அவளின் நெற்றியை வருடிக் கொடுத்தாள்...

    அம்மா...

    அந்தப் பரிவில் ஷோபாவின் மனத்துயரம் கண்ணீர் கோடாக வெளிவந்து... கன்னத்தில் இறங்கியது...

    அடச்சீ... அழுகாதே... நீ எதுக்காக அழுகனும்...? இந்த உலகத்திலேயே... அந்த சங்கர் ஒருத்தன்தான் மாப்பிள்ளையா...? அவனை விடப் பணக்காரனாய்... என் அக்கா மருமகளின் தம்பி... பாலமுரளி இருக்கிறான்... இந்த சங்கரைப் பற்றிச் சொன்னா... இந்தச் சென்னைக்குள்ளே எத்தனை பேருக்குத் தெரியும்...? அதுவே பாலமுரளியைப் பற்றிச் சொன்னா... தென்காசிப் பட்டினம் முழுவதும் தெரியும்... இன்னாருக்கு பெண்டாட்டி... இன்னார் வீட்டு மருமகள்ன்னு... நீ அந்த சங்கரின் முன்னாலே விரலைச் சொடுக்கி நிற்கலாம் ஷோபா... இதுக்குப் போயா இப்படி அழுது வைக்கிற...? சுசிலா மகளை அதட்டினாள்...

    ஷோபா... யோசனையுடன் தாயைப் பார்த்தாள்... அவளது யோசனை எதற்காகவென்று புரியாதவளாய் மகளைத் தேற்றிக் கொண்டிருந்தாள் சுசிலா...

    "உன் அப்பா பிரண்டுன்னார்... அவனும் சென்னைக்காரனா இருந்தான்... ஆளும் அழகாய்... உனக்குப் பிடித்த மாதிரி... வெள்ளை வெளேருன்னு இருந்து வைச்சான்... வெளிநாட்டு படிப்பு வேற...

    சரி... அமைஞ்சா உனக்கும் சந்தோசம்தானேன்னு நினைச்சேன்... இது அமையல... விட்டுத் தள்ளிட்டு அடுத்த இடத்தைப் பார்ப்பியா... அதை விட்டுட்டு கண்ணைக் கசக்கிக் கிட்டு இருக்க..."

    இல்லேம்மா... இனிக் கண்ணைக் கசக்க மாட்டேன்...

    ஷோபாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாதவளாய் அவளது வார்த்தைகளில் சுசிலா மனநிம்மதியடைந்தாள்...

    அஃது... இதுதான் என் மகள் ஷோபா...! இப்படித்தான் தைரியமா இருக்கனும்... இப்ப எதையும் யோசிக்காம படுத்துத் தூங்கு... நாளைக்கு இதைப் பத்தி நினைச்சுப் பார்த்தின்னா... இதுக்கா நாம கண்ணைக் கசக்கினோம்ன்னு உனக்கே தோணும்...

    அறைக்கதவை மெதுவாக... சத்தமில்லாமல் மூடிவிட்டு... சுசிலாசென்று விட... ஷோபா அவளுடைய செல் போனை எடுத்து நம்பர்களை அழுத்தினாள்...

    ஹலோ... மறுமுனையில் பாலமுரளியின் குரல் ஒலித்தது...

    நான் ஷோபா... என்றவளின் குரலைக் கேட்டதும்...

    என்ன விசயம்...? என்று ஒட்டாத குரலில் பட்டுக் கத்தரித்தான் பாலமுரளி...

    ‘உனக்கும்... அவளைத்தானே பிடிக்கும்...’ ஷோபா மனம் பொறுமினாள்...

    நிறைய விசயம் இருக்கு... உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்...

    எனக்கு அர்ஜண்ட் வொர்க் இருக்கு ஷோபா... எதைச் சொன்னாலும் ஒரே நிமிசத்தில சொல்லி முடிங்க...

    இப்படிச் சொன்ன பாலமுரளி...

    ராதிகாவுக்கும்... சங்கருக்கும் மேரேஜ் நடக்கப் போகுது..., என்று ஷோபா சொன்னவுடன்...

    விவரமாகச் சொல்லுங்க... என்று சொன்னான்...

    ‘நீ கில்லாடிடா...’ பல்லைக்கடித்தாள் ஷோபா...

    அவள் பேசினால் அவனுக்கு அதி முக்கியமான வேலைகள் இருக்கிறதாம்... அதுவே ராதிகாவைப் பற்றிய பேச்சாக இருந்தால் அதை அவள் விவரமாகச் சொல்ல வேண்டுமாம்... அதை கேட்பதை விட முக்கியமாய் அவனுக்கு எந்த வேலையும் இல்லையாம்...

    ‘அவகிட்ட அப்படி என்னதான் இருக்கு...?’

    ஷோபாவும் யோசித்துப் பார்த்து விட்டாள்... என்னதான் யோசித்தாலும்... ஷோபாவை விட அழகிலோ... பணத்திலோ... ராதிகா உயர்ந்தவளில்லையென்ற

    Enjoying the preview?
    Page 1 of 1