Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammamma.. Keladi Thozhi...! - Part 3
Ammamma.. Keladi Thozhi...! - Part 3
Ammamma.. Keladi Thozhi...! - Part 3
Ebook374 pages2 hours

Ammamma.. Keladi Thozhi...! - Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாலமுரளியின் மனதிலிருந்த சந்தேகங்களும்... சஞ்சலங்களும் கரைந்து மறைந்து கொண்டிருந்தபோது... செல்போன் ஒலித்தது... அவன் அதை அலட்சியம் செய்தான்... இடைவிடாமல் மீண்டும்... மீண்டும்... மணியொலிக்க... “த்ச்சு... முதலில் இதை ஆஃப் பண்ணித் தூரப் போடனும்...” என்ற கோபத்துடன் அதை கைநீட்டி எடுத்தான்... முகம் மாறினான்... ஒலித்துக் கொண்டிருந்தது அவனின் செல்போனல்ல... ராதிகாவின் செல்போன்... அழைத்துக் கொண்டிருந்ததும் வேறு யாருமில்ல... சங்கர்...!

ராதிகாவின் வாழ்க்கையை சீரழித்தே தீர வேண்டும் என்ற வெறியோடு ஷோபா முரளியின் வீட்டில் காலடி எடுத்து வைகிறாள். இனி நடக்க போகும் விபரீதங்களை பார்ப்போமா?

Languageதமிழ்
Release dateOct 7, 2023
ISBN6580133810197
Ammamma.. Keladi Thozhi...! - Part 3

Read more from Muthulakshmi Raghavan

Related to Ammamma.. Keladi Thozhi...! - Part 3

Related ebooks

Reviews for Ammamma.. Keladi Thozhi...! - Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammamma.. Keladi Thozhi...! - Part 3 - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மம்மா.. கேளடி தோழி...! - பாகம் 3

    Ammamma.. Keladi Thozhi...! - Part 3

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    அத்தியாயம் 89

    அத்தியாயம் 90

    அத்தியாயம் 91

    அத்தியாயம் 92

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 94

    அத்தியாயம் 95

    அத்தியாயம் 96

    அத்தியாயம் 97

    அத்தியாயம் 98

    அத்தியாயம் 99

    அத்தியாயம் 100

    அத்தியாயம் 101

    அத்தியாயம் 102

    அத்தியாயம் 103

    அத்தியாயம் 104

    அத்தியாயம் 105

    அத்தியாயம் 106

    அத்தியாயம் 107

    72

    நீயா... இதைச் சொன்னது...?

    என் உயிரைக் கொன்று தின்றது...?

    ராதிகாவிடம் ஷோபா ஒரு சவாலை விட்டாள்...

    ‘உன் கழுத்தில் முரளி தாலியைக் கட்டுவான்... ஆனால் அதற்குப்பின்னால் வாழும் வாழ்க்கையை உன்னுடன் வாழ மாட்டான்...’ என்று...

    அதை அவள் சொன்ன போது... ‘போடி...’ என்ற எகத்தாளம்தான் ராதிகாவின் மனதில் தோன்றியது...

    இவளுக்கு என்ன தெரியும்...? திருமணத்திற்கு பின்னால் தொட வேண்டிய தொடுகையை... திருமணத்திற்கு முன்னாலேயே முரளி தொட்டு விட்டானே என்ற நிச்சய உணர்வில் அவள் ஷோபாவின் வார்த்தைகளை அலட்சியம் செய்தாள்...

    ‘பார்க்கலாமா...?’ என்ற அவளின் அறை கூவலுக்கு...

    ‘பார்க்கலாம்...’ என்று தன்னம்பிக்கையுடன் பதில் சொன்னாள்...

    இன்று அந்த தன்னம்பிக்கையின் ஆணிவேர் ஆட்டம் கண்டு விட்டது... அவளுடன் வாழ வேண்டியவனே... அந்த வாழ்வைத் தரமுடியாது என்று அறிவித்து விட்டான்...

    நினைப்பில் வைச்சுக்கடி... நீ என் அம்மாவுக்கு மருமகளாய் என் வீட்டில் வாழலாம்... எனக்குப் பெண்டாட்டியாய் வாழ முடியாது...

    அவளது உயிர் குடிக்கும் வார்த்தைகளை மீண்டும் சொன்னான் பாலமுரளி...

    ஏன் என்று அவனது சட்டையைப் பிடித்து உலுக்கும் ஆவேசம் அவளுக்குள் கனன்று எழுந்த போதும்... அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு கடலை வெறித்தாள் ராதிகா...

    இப்போது அவள் பேசக்கூடாது... இது அவள் பேசுவதற்கான நேரமில்லை... காலமும்... கடவுளும் அவளைச் சோதித்துக் கொண்டிருக்கும் போது அவள் யாரிடம் கேள்வி கேட்க முடியும்...?

    "ஆண்டவனும் கோவிலில்...

    தூங்கி விடும் போது...

    யாரிடத்தில் கேள்வி கேட்பது...?"

    அவளது மனதை உணர்ந்து கொண்டதைப் போல அருகில் நின்று கொண்டிருந்த தள்ளு வண்டியிலிருந்து எப்.எம். ரேடியோ பாடியது...

    ராதிகாவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் அவளது கன்னத்தில் கோடாக இறங்கி... அவள் புடவையில் தெறித்து விழுந்து சிதறின...

    அவளது துயரத்தைக் கண்டும்... முரளியின் மனம் இளகவில்லை... அவன் முகம் கல்லைப்போல கடினமாக மாறியிருந்தது...

    ‘ஏன்... என்னைக் கைவிட்டாய் கடவுளே...!’ ராதிகா மனதிற்குள் மறுகினாள்...

    "ஏழைகளின் ஆசையும்...

    கோவில் மணியோசையும்...

    வேறுபட்டால் என்ன செய்வது...?

    தர்மமே... மாறுபட்டால்

    எங்கு செல்வது...?"

    ராதிகா பாடலில் குமுறி அழுதாள்... போக இடமில்லாமல்... சொல்லி அழ ஆளில்லாமல்... சாய்ந்து கொள்ளத் தோளில்லாமல்... தனிமைப் பட்டுப் போனவளாக அழுதாள்...

    அனைத்தையும் கொடுக்க வேண்டியவன் அருகிலிருந்தும் அநாதையாகிப் போய்விட்ட அவலத்தை நினைத்து அழுதாள்...

    அவன் கட்டப் போகும் தாலிக்கயிறு... அவளை அவளது பிறந்த வீட்டிலிருந்து பிரிக்கப் போகிறது... அவனுடன் வாழ வேண்டிய வாழ்க்கை... அவளை அவள் பழகிய தோழிகளிடமிருந்து பிரிக்கப் போகிறது... அவனின் தவறான புரிந்து கொள்ளுதல்... அவளை அவனிடமிருந்தே பிரிக்கப் போகிறது...

    கண்முன்னே காத்து நிற்கும் வாழ்க்கை உணர்த்திய தனிமையைக் கண்டு மனம் பதறிப் போனவளாக அவள் அழுதாள்...

    பார்த்துப் பார்த்துப் பழகியும்... அவளது பழக்க வழக்கத்தில் பழி வந்து சேர்ந்து விட்டதை நினைத்து நினைத்து அழுதாள்...

    ஒருவனையே நினைத்து... அந்த ஒருவனுடன் மட்டுமே கலந்து... அந்த ஒருவனையே கைபிடித்து வாழும் பாக்கியம் கிடைக்கப் பெற்றாலும்... அவளின் அந்த ஒருவன்... அவள் மனதில் வேறொருவன் இருப்பதாக நினைத்து விட்ட கொடுமையில் அவள் நிலை தடுமாறி அழுதாள்...

    காத்திருக்கும் வாழ்க்கை அவளுக்கு அளிக்கப் போவது எதை...? சொர்க்கமா... இல்லை நரகமா...? என்ற நடுக்கத்தில் அவள் அழுதாள்...

    "காற்றினிலே... பெருங்காற்றினிலே...

    ஏற்றிவைத்த தீபத்திலும்

    இருளிக்கும்...

    காலமென்னும் கடலினில்

    சொர்க்கமோ... நரகமோ...

    அக்கரையோ... இக்கரையோ..."

    பாடல் பிழிந்தெடுத்து வடித்த சோகத்தில் அவள் நனைந்தவளாக மனம் விட்டு அழுதாள்...

    நீ அழுது தீர்த்துடுவடி... நான் என்ன செய்ய முடியும் சொல்லு... அவன் மனம் குமுறினான்...

    நானுண்டு... என் வேலையுண்டுன்னு இருந்தேண்டி... என்னைக்கு உன்னைப் பார்த்தேனோ... அன்னைக்கு நிம்மதியைத் தொலைச்சவன்தாண்டி... இன்னும் அதை மீட்டு எடுக்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்...

    முரளி... நான் சொல்வதைக் கொஞ்சமாவது காது கொடுத்துக் கேளுங்க...

    வேணாம்... என் பெயரைச் சொல்லாதே... நீ சொன்னதைக் கேட்டுக் கேட்டு பித்துப் பிடிச்சு நின்னதெல்லாம் போதும்... ஒரு நிமிசம் சிரிக்க வைச்சு... மறு நிமிசமே சாகடிக்கிறயேடி... பாவி... படுபாவி... நான் உனக்கு என்னடி கெடுதல் பண்ணினேன்...? காலையில என்னிடம் போனில மச்சான்ங்கறே... மயங்கி ஓடி வந்தா... அவனிடம் சங்கர்ங்கிற... போதும்டி... எனக்கு வெறுத்துப் போச்சு...

    கண்ணால் கண்டதும் பொய்... காதல் கேட்பதும் பொய்ன்னு நீங்க கேள்விப் பட்டதே இல்லையா...?

    இதைச் சொல்லியே இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஏமாத்துவீங்க...? ஏண்டி... கண்ணாலே காண்கிறது எல்லாமே... பொய்யாய் போய் விடுமா...? காதால் கேட்கிற எல்லாமே உண்மையில்லைன்னு ஆகி விடுமா...? உன்னைக் கண்ட நாள் முதல்... இந்த நாள் வரைக்கும்... அவன் உன்னிடம் பேசின எல்லாமே வில்லங்கமாத்தானேடி இருக்கு...?

    நான் பேசலையே...

    ஏன் பேசலை...? ஷோபா ரிகார்டு பண்ணி அனுப்பின உன் பேச்சு... இன்னும் என்கையில்தான் இருக்கு... மறந்து போக வேணாம்...

    ‘அவன் மறக்க மாட்டான்...’

    ஷோபாவின் நிச்சயமான பேச்சு ராதிகாவின் காதுகளில் ஒலித்தது...

    எவ்வளவு தெளிவாக கணித்திருக்கிறாள்...! எவ்வளவு நிச்சயமாக அதைச் சொன்னாள்... அவள் சொன்னது பலிக்கிறதே...

    இந்த உலகத்தில் கெட்டவர்கள் நினைப்பது நடப்பதும்... அவர்கள் மட்டுமே ஜெயிப்பதும் எப்படி சாத்தியமாகிறது...?

    சாகஸக்காரர்கள் மட்டுமே ஜெயிக்க முடியுமென்றால் மற்ற அப்பாவிகள் இந்த உலகத்தில் எப்படி வாழ்வது...?

    ஷோபா சொன்ன சொல் பலிக்கிறது... ராதிகா சொன்னசொல் பொய்க்கிறது என்றால்... நல்லவர்களின் சொல்லுக்கு சக்தியே இல்லையா...?

    நிலைமாறும் நெஞ்சம் கொண்டவள் சொன்ன சொல் ராதிகாவைப் பாதிக்கலாம்... அவள் வாழ்வு முழுவதும் துரத்தலாம்... அவள் மட்டும் நிம்மதியாக வாழ்வாள் என்றால்... இதுதான் இந்த வாழ்க்கை வகுக்கும் நியதியா...?

    ‘கடவுளே...! நீ வெறும் கல்லா...? இரக்கம் என்பதே உனக்கில்லையா...?’ ராதிகா மனம் மருகினாள்...

    ‘என்ன தவறு செய்தேனென்று என்னை இப்படி தொடர்ச்சியாக வதைக்கிறாய்...? மனமார நான் சிரித்தால் உனக்கு அது பொறுக்காதா...? என் சிரிப்பு நிலைத்திருக்க நீ வரம் கொடுக்க மாட்டாயா...? பொய்யான பேச்சு... பொய்யான சிரிப்பு... பொய்யான வாழ்வு என்ற மற்றவர்கள் முன்னால் நடிக்க வைத்து விட்டாயே... பொய்யே பிடிக்காதவளை பொய் கோட்டையின் மீது நிற்க வைத்து விட்டாயே இது முறையா...?’

    அழுது... அழுது ஓய்ந்து... கண்ணீர் கடல் வற்றியவளாக நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் ராதிகா...

    கலங்கிச் சிவந்திருந்த அவள் முகத்தை உணர்வுகள் துடைத்த முகத்துடன் ஒட்டாத பார்வை பார்த்து வைத்தான் முரளி...

    அழுது முடிச்சாச்சா... இன்னும் பாக்கியிருக்கா...?

    குத்தலாகக் கேட்டான்... அவள் பதில் சொல்லாமல் மௌனித்தாள்... என்னவென்று சொல்வது...? அவளது கண்ணீரை மதிக்காதவன் முன்னால் கண்ணீர் விட்டதே பெருந்தவறு... இதில் ரோசப்பட்டு ஆகப் போவது என்ன...?

    பாக்கியிருந்தா இப்பவே அழுது தீர்த்துக்க... கடையில் போய் மத்தவங்க சந்தேகப்படற மாதிரி கண்கலங்கி வைக்காதே... என் அக்காவுக்கு உன்னைக் கண்டாலே ஆகாது... கல்யாணத்தை நிப்பாட்ட எதுடா சாக்குன்னு தேடிக்கிட்டு இருக்கு... நீ அழுது வைச்சா... காதல் கல்யாணத்தில பொண்ணு கண்ணில் தண்ணி எப்படி வரும்ன்னு கேள்வியைக் கிளப்பிரும்...

    ம்ம்ம்... ராதிகா அவசரமாக முகத்தை துடைத்துக் கொண்டாள்...

    அப்படியே உன் ஹேண்ட் பேகில் பவுடர் கிவுடர் இருந்தா எடுத்து முகத்தில் பூசிக்க... அவன் பார்க்க வர்றப்போ பளிச்சுன்னு இருக்கனும் கிறதுக்காக உன் ஹேண்ட் பேக்கில் கட்டாயம் பவுடரை பதுக்கி வைச்சிருப்ப... அவன் கண்ணுக்கு மட்டும் பளிச்சுன்னு இருந்தாப் பத்தாது... என் வீட்டு ஆளுக கண்ணுக்கும் பளிச்சுன்னு இருக்கனும்... அழுது வடிகிற மூஞ்சியை இளிச்சாவாயன் நான் சகிச்சுக்குவேன்... என் வீட்டாளுக சகிச்சுக்க மாட்டாங்க... உடனே வேற பெண்ணைத் தேட ஆரம்பிச்சுடுவாங்க...

    ராதிகா தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளும் மார்க்கம் தேடியவளாக கடலை வெறித்தாள்... பரந்து விரிந்திருந்த கடலில் ஏதும் மார்க்கம் தென்படவில்லை...

    உனக்கு அதுகூட வசதிதான்... ஓடிப் போய் காத்திருக்கிற சங்கர் தியாகியின் கையைப் பிடிச்சு கண்ணில் ஒற்றிக்கலாம்... உன் அம்மாவுக்கு அவனைத் தானே மாப்பிள்ளைன்னு கொண்டாடப் பிடிக்கும்... நான் மாப்பிள்ளையாய் வந்து நின்னவுடன் உன்னுடன் பேசவே பேசாத புண்ணியவதியாச்சே உன் அம்மா... நீ சங்கரைக் கட்டிக்கிட்டா... தாயும் மகளும் ஒன்னாய் சேர்ந்துக்கலாம்...

    ராதிகா உதடுகளைக் கடித்த வேகத்தில் பல் பதிந்து காயமானது...

    அதையெல்லாம் நடத்திப் புடலாம்கிற கணவை விட்டுட்டு ஒழுங்கா... மரியாதையாய்... சிரிச்ச முகமாய் வந்து சேரு... அதை விட்டுட்டு முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டுத்தான் இருப்பேன்னு அடம் பிடிச்ச... மகளே... பேசாம இந்தக் கடலில் உன்னைத் தள்ளி விட்டுட்டுத்தான் வேற ஜோலியைப் பார்ப்பேன்...

    ‘முதலில் அதைச் செய்... உனக்கு கோடி புண்ணியமாகப் போகும்...’

    சொல்ல நினைத்ததை தொண்டைக் குழிக்குள்ளேயே புதைத்து விட்டு ராதிகா ஊமையாகி விட... பாலமுரளி கோபம் தணியாதவனாக காரைக் கிளப்பினான்...

    வழி நெடுக அவளைத் திட்டித் தீர்த்துக் கொண்டே காரை ஓட்டினான்... ஒவ்வொரு சிக்னலிலும் திட்டல் வலுத்தது... ஒருவழியாக ஜவுளிக்கடையை அடைந்த போது ராதிகாவிற்கு ‘அப்பாடா...’ என்றிருந்தது...

    அந்த விடுதலை உணர்வை உணர்ந்தவளுக்கு மனதிற்குள் திடுக்கிடல் ஏற்பட்டது...

    ‘இது சரியில்லையே...’

    அவனிடமிருந்து அவள் தப்பிக்க முனைகிறாளா...?

    தன்னைக் கண்டே பயந்து போனவளாக அவள் காத்திருந்த உறவினர் கூட்டத்தில் கலந்து கொண்டாள்...

    இதை எடுங்க... அதை எடுங்க... இது வேணாம் ஜரிகைக் கரை குறைவாயிருக்கு... இது ஜரிகைக்கரை அதிகமாய் உடம்பு பூராவும் படர்ந்திருக்கு... இது லைட்கலர் வேண்டாம்... இது டார்க் கலர் வேண்டாம்... இந்தப் புடவை லேசாயிருக்கு வேண்டாம்... இந்தப் புடவை கனமாயிருக்கு வேண்டாம்...

    பெண்மணிகளின் புடவைப் புரட்டலில் கடைச் சிப்பந்திகள் கதிகலங்கிப் போனார்கள்... ஏறக்குறைய கடையிலிருந்த அத்தனை புடவைகளை இறக்கிப் போட்டும் அவர்களை திருப்தி பண்ண முடியவில்லை...

    ராஜேஸ்வரிக்கு பிடித்த புடவை... பாலசரஸ்வதிக்கு பிடிக்காமல் போனது... அவள் தேர்ந்தெடுப்பதை ராஜேஸ்வரி ஒதுக்கித் தள்ளினாள்... இந்தப் போட்டா போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகி நின்ற ராதிகாவின் பார்வை... ஏக்கத்துடன் முரளியைத் தேடித்தேடி... அவன்மீது படிந்து விலகிக் கொண்டிருந்தது...

    இவங்க இன்னைக்குள்ள முகூர்த்தப்பட்டை எடுக்க மாட்டாங்க போலடி...

    ராதிகாவின் காதைக் கடித்தாள் கீதா...

    ஒருவழியாய் ராஜேஸ்வரியும்... பாலசரஸ்வதியும் ஒரு சேலையை அரை மனதாக தேர்ந்தெடுத்து முடித்தார்கள்...

    உனக்குப் பிடித்திருக்கிறதா என்று ஒப்புக்குக்கூட ராதிகாவை அவர்கள் கேட்கவில்லை... இதற்கு எதற்காக... அடித்துப் பிடித்துக் கொண்டு அவள் வர வேண்டும் என்று கீதா கேட்ட போது... அதற்கான பதில்... ராதிகாவிடம் இல்லை...

    அவர்கள் தேர்ந்தெடுத்த சேலைகளை யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் சொந்தமில்லாமல் பார்த்தபடி பணத்தைக் கொடுத்து முடித்தான் முரளி...

    அப்ப... நாங்க கிளம்பறோம் சம்பந்தியம்மா... மேகலா அப்போதே விடைபெற்றுக் கொண்டாள்...

    ராதிகாவின் குடும்பத்தை வீட்டில் விடும் பொறுப்பில் காரை ஓட்டிக் கொண்டு வந்தான் பாலமுரளி...

    காரை விட்டு இறங்கியவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட... தேங்கி நின்ற ராதிகாவை தன் சிவந்த விழிகளால் உறுத்துப் பார்த்தான்...

    கிளம்பறேண்டி... நான் இல்லைங்கிற தைரியத்தில அவனைத் தேடிப் போனன்னு வைய்யி... உன்னை வெட்டிப் போட்டிருவேன்... எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிராதே... உன்னைக் கண்கானிக்க ஆள் ஏற்பாடு பண்ணிட்டுத்தான் போறேன்...

    தேவையே இல்லை... நான் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன்...

    அவன் வீட்டுக்கே வந்தா...?

    ராதிகா அவனது கேள்வியில் அதிர்ந்து நோக்க... அவன் தோள்களைக் குலுக்கினான்...

    காலேஜீக்கே உன்னைத் தேடி வந்தவன் வீட்டுக்கு வராம இருப்பானா...? உன் வீட்டுக்குத்தான் நான் காட்டான்... அவன் ஜென்டில் மேனாச்சே... உன் அம்மா என்னை வான்னு கூட கேட்க மாட்டாங்க... அவனைக் கண்டா பறந்தடிச்சுக்கிட்டு காபியோட ஓடிவந்து உபசரிப்பாங்களே...

    நடக்காததைப் பற்றி எதுக்குப் பேசனும்...?

    நடக்கக் கூடாது... அவன் வீட்டுக்கே வந்தாலும்... நீ உன் ரூமை விட்டு வெளியே வரக்கூடாது...

    சரி...

    கல்யாணம் முடிகிற வரைக்கும் காலேஜைப் பத்தின நினைப்பே உனக்கு வரக் கூடாது...

    ம்ம்ம்...

    மீறி ஏதாவது ஒரு பேச்சு என் காதுக்கு வந்தது... நான் மனுசனா இருக்க மாட்டேன்...

    வராது...

    நல்லது... நான் கிளம்பறேன்...

    ம்ம்ம்...

    அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அவன் காரில் ஏறிப் பறந்து விட்டான்... தொலை தூரத்தில் புள்ளியாக கார் மறையும் வரை அசையாமல் நின்று பார்த்துக் கொண்டேயிருந்தாள் ராதிகா...

    அன்றொரு நாள் அவளைத் தொட்டு சூரையாடி விட்டு... அவளை இதே போலத்தான் அநாதையாக தெரு முனையில் இறக்கி விட்டுச் சென்றான்...

    இன்று அவளைத் தொட்டுத் தாலிகட்டப் போகிறான்... அந்த நினைவு கொஞ்சம் கூட இல்லாமல் யாரோ ஒரு மூன்றாம் மனிதனை போல அவளை அநாதையாக அவள் வீட்டு வாசலில் இறக்கி விட்டுப் போகிறான்...

    அன்றைய நாளுக்கும்... இன்றைய நாளுக்கு-மிடையே பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை என்று ராதிகாவுக்குத் தோன்றியது...

    களைத்துப் போன மனதுடன்... அவள் வீட்டுப் படியில் காலடி எடுத்து வைத்தாள்...

    73

    பார்த்த விழி பார்த்திருந்தேன்...

    பாவை மனம் புரியவில்லை...

    "வாராயென் தோழி வாராயோ...

    மணப்பந்தல் காண வாராயோ..."

    திருமண மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டபடி காரை விட்டு இறங்கி தென்காசிப் பட்டினத்தின் தரையில் கால் பதித்தாள் ராதிகா...

    கண்சிமிட்டும் வர்ணப் பூக்களாக... கண்சிமிட்டிக் கொண்டிருந்தன மண்டபத்தைச் சுற்றி வளைக்கப் பட்டிருந்த சீரியல் விளக்குகள்...

    பிரம்மாண்டமான அந்த மண்டபத்தின் முன்புறத்தில் வரிசைவரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்களின் அணிவகுப்பு... பால முரளியின் பணக்காரப் பெருமையை பறைசாற்றியது...

    அதே நேரத்தில்... மணமகள் திருமண மண்டபத்தில் கால் பதித்த அந்தத் தருணத்தில் ஒலிபரப்பியில் ஒலித்த பழைய பாடல் அந்த மக்களின் கிராமிய கலாச்சாரத்தை அறிவுறுத்துவதாக இருந்தது...

    நாதஸ்வர ஓசையுடன்... மண்டபத்திலிருந்து வெளிப்பட்ட மாப்பிள்ளை வீட்டார்... பெண் வீட்டாரை சம்பிரதாயப்படி வரவேற்றுவிட்டு... ராதிகாவிற்கு ஆரத்தி எடுத்து மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றார்கள்...

    பளிங்குக் கற்களால் இழைக்கப்பட்டிருந்த திருமண மண்பத்தின் உட்புறத்தைப் பார்த்ததும் கீதா பிரமித்துப் போய்விட்டாள்...

    வாவ்... நம்ம ஏரியா அளவுக்கு பெரிசா இருக்குடி ராது... நீ கொடுத்து வைத்தவ... போ...

    இதைக் கேட்ட அந்தக் கொடுத்து வைத்தவளோ... இதயத்திலிருந்து வெளிப்பட்ட பெருமூச்சை அடக்கிக் கொண்டாள்...

    ‘மண்டபம் பெரிசா இருந்து என்ன பண்ண...? நாளைக்கு காலையில் எனக்குத் தாலிகட்டப் போகிறவனின் மனசில எனக்குன்னு துளியளவாவது இடமிருக்குமா...?’

    அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்த பெரிய வீட்டுப் பெண்மணிகளின் வைர ஒளிர்வைக் கவனித்த ராஜேஸ்வரியின் முகத்தில்கூட ஒளிர்வு வந்தது...

    ‘பரவாயில்ல... மாப்பிள்ளையும்... மாப்பிள்ளையோட அக்காவும் திமிர் பிடிச்சவங்களா இருந்தாலும்... சங்கரை விட பணக்காரங்களாத்தான் இருக்காங்க...’

    பணமிருந்தால் போதுமா...? குணமிருக்க வேண்டாமா...? என்ற சிந்தனைக்கே அவள் போகவில்லை...

    பாலமுரளி குணக்குன்று என்று அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்... பாலசரஸ்வதியும் கூட வலியத்தான் திமிர் பிடித்தவளின் முகமூடியை மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்பது அவளின் கணிப்பு...

    ‘அந்தம்மா மேகலா... அப்படியே கருணைக் கடலா இருக்காங்க... கொஞ்சம்கூட பணக்காரத்தனமில்லை... ஒரு தலைக் கனமில்லை... சங்கரின் அம்மாவைப் போல ரப்பு இல்லை... ராங்கி இல்லை... திமிர் இல்லை... தெனா வெட்டு இல்லை... அவங்க வயித்திலே பிறந்த பிள்ளைகளுக்கு மட்டும் அதெல்லாம் வந்துருமா... என்ன? அவங்க அப்படியா பிள்ளைகளை வளர்த்திருப்பாங்க...?’

    ராஜேஸ்வரியின் சிந்தனை இப்படித்தான் போனது...

    அம்மா... நமக்குன்னு மண்டபத்தில் நாலு ரூம் ஒதுக்கியிருக்காங்களாம்... நம்ம சொந்தக்காரங்களுக்கு ஹோட்டலில் ரூம் புக் பண்ணியிருக்காங்களாம்... போகவர நாலு காரையும் கொடுத்திருங்காங்க...

    கீதா தகவல் ஒலிபரப்பினாள்...

    ராஜேஸ்வரிக்கு மாப்பிள்ளை வீட்டாரின் அதீதக் கவனிப்பு மனதிற்கு இதத்தைக் கொடுத்தது... ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுக்கமாக முகத்தை வைத்தபடி...

    ஓஹோ... என்று மட்டும் சொன்னாள்...

    அடேங்கப்பா... ராஜி... உன் பொண்ணுக்கு பணக்கார இடத்திலே மாப்பிள்ளை கிடைச்சிருக்குன்னு சொன்னாங்க... இவ்வளவு பெரிய பணக்காரங்கன்னு யாரும் சொல்லவே இல்லையே... இங்கே வந்து பார்த்த பின்னாலேதானே தெரியுது... உன் பெரியப்பா மகளுக்கும் ஒரு சம்பந்தம் அமைஞ்சது... நம்மள விட கொஞ்சம் வசதி கூடுதல்... அவ அதுக்கே என்னமாய் அலட்டினா தெரியுமா...? நீ இவ்வளவு பெரிய இடத்திலே பெண்ணைக் கொடுக்கப் போகிற... ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி பெருமையாய் பேசலயே...

    ராஜேஸ்வரியின் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி நேரம் காலம் தெரியாமல் ராஜேஸ்வரியைப் புகழ்ந்து வைக்க... கிருஷ்ணமூர்த்தி...

    ‘கேட்டுக்கிட்டியா...’ என்ற ஒரு பார்வையை மனைவியின் மீது வீசி வைத்தார்...

    கணவரின் முன்னிலையில் தந்நிலையை விட்டுக் கொடுக்க முடியாத சூழலில் மாட்டிக் கொண்ட ராஜேஸ்வரி... உறவுக்காரப் பெண்மணியின் புகழ்ச்சியை காதில் வாங்கிக் கொள்ளாததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு...

    சரிசரி... நம்ம பக்கத்து ஆளுகளுக்கெல்லாம் ஹோட்டலில் ரூம் போட்டிருக்காங்களாம்... போய் குளிச்சு... டிரெஸ் பண்ணிக்கிட்டு வாங்க... நைட்டு சாப்பிட்ட பின்னாலே தூங்கப் போயிக்கலாம்... என்றாள்...

    அதுவும் சரிதான்...

    அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது காபியும்... டிபனும் அவர்கள் இருந்த இடத்திற்கே தேடிவந்தது... அதைக் கொண்டு வந்த பணியாள்களின் கவனிப்பில்... கொதித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி குளிர்ந்து விட்டாள்...

    "இது என்ன ராஜி... இங்கே பொண்ணு வீட்டுக்காரங்க நாமளா... இல்ல... அவங்களா...? இப்படி விழுந்து... விழுந்து கவனிக்கிறாங்க...! என் பொண்ணு கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க... உங்களுக் கெல்லாம் ஒரு கணக்கான்னு முகத்தை வைச்சுக்கிட்டு கண்டுக்கவே இல்லை தெரியுமா... ஒப்புக்கு வாங்கண்ணு சொல்கிறதைப் போல தலையை அசைச்சுட்டு...

    அதுவே அதிகம்ன்னு சொல்கிறதைப் போல முகத்தை வைச்சுக்கிட்டு போனவங்கதான்... நாங்களா டைனிங் ஹாலுக்குப் போய் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டோம்... இங்கே கதையே வேறயா இருக்கே ராஜி..."

    ‘வயிறெரியாதேடி...’

    வெளிப்படையாகச் சொல்ல முடியாமல்... லேசாக சிரித்து வைத்தாள் ராஜேஸ்வரி...

    அதற்குள் கிருஷ்ணமூர்த்தியின் ஒன்று விட்ட தம்பி... அடுத்த பிரமிப்பை வெளிப் படுத்தினார்...

    மனுசங்கன்னா... இவங்கதான் மனுசங்க அண்ணா...

    அதைச் சொல்லு...

    துரும்பைக் கிள்ளிப் போட்டு அதை மாப்பிள்ளைன்னு சொன்னாலும்... அது உடனே அவ்வளவு கெத்து காட்டுமாம்...

    என்ன சொன்ன... என்ன சொன்ன...? திருப்பிச் சொல்லு...

    சங்கரின் பெற்றோர் காட்டிய அலட்சியத்தைச் சுட்டிக் காட்டிய ராதிகாவிடம் ராஜேஸ்வரி சொன்ன வார்த்தைகள் இவை... அதை நினைவு கூர்ந்தவராக மனைவியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி...

    Enjoying the preview?
    Page 1 of 1