Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Punnagai Poovey Mayangathey Part - 2
Punnagai Poovey Mayangathey Part - 2
Punnagai Poovey Mayangathey Part - 2
Ebook274 pages1 hour

Punnagai Poovey Mayangathey Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இக்கதையின் முதல் பாகத்தின் படி, கதிர் ஓரிடத்தில் அவனுக்கே தெரியாமல் கலைக்கு இழைக்கும் ஒரு பெரிய தவறால் கலையின் உயிருக்கு கெடு வைக்கப்படுகிறது. இந்த ஆபத்தை கதிருக்கு தெரியாமல் மறைத்து அவனிடமிருந்து பிரிந்து தன்னைத்தானே தனிமைச் சிறைக்குள் தள்ளிக்கொண்டு நரகவேதனையுடன் தனியாக வாழ்கிறாள் கலை. அப்போது அவள் வாழ்வில் நுழையும் முகம் தெரியாத ஒரு இளைஞனால் கலைக்கு புதுவாழ்வு கிடைக்கிறது. அது எங்கே போய் முடிகிறது?, அந்த இளைஞன் யார்?, மீண்டும் உயிர்பிழைத்து கதிருடன் கலை சேர்வாளா?, அல்லது அந்த இளைஞனுடன் வாழ்கிறாளா? படித்து அறிந்துகொள்ளுங்கள் ஃப்ரெண்ட்ஸ்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580148407533
Punnagai Poovey Mayangathey Part - 2

Read more from Yamuna

Related to Punnagai Poovey Mayangathey Part - 2

Related ebooks

Reviews for Punnagai Poovey Mayangathey Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Punnagai Poovey Mayangathey Part - 2 - Yamuna

    https://www.pustaka.co.in

    புன்னகை பூவே மயங்காதே பாகம் – 2

    Punnagai Poovey Mayangathey Part – 2

    Author:

    யமுனா

    Yamuna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yamuna

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பகுதி 1

    பகுதி. 2

    பகுதி. 3

    பகுதி. 4

    பகுதி. 5.

    பகுதி. 6

    பகுதி 7.

    பகுதி. 8.

    பகுதி 9.

    பகுதி. 10

    பகுதி. 11

    பகுதி. 12.

    பகுதி 13.

    பகுதி. 14

    பகுதி. 15

    பகுதி. 16

    பகுதி. 17.

    பகுதி 18.

    பகுதி. 19

    பகுதி. 20

    பகுதி 21.

    பகுதி 22.

    பகுதி. 23

    பகுதி. 24.

    பகுதி. 25

    பகுதி. 26.

    பகுதி.27.

    பகுதி. 28.

    பகுதி. 29.

    பகுதி. 30

    பகுதி.31.

    பகுதி.32.

    எல்லா புகழும் இறைக்கே..

    அன்பான வாசக நண்பர்களுக்கு வணக்கம்... மீண்டும் உங்கள் யமுனா... உங்களோடு அடுத்த பயணத்தை தொடர்வதில் பெரு மகிழ்ச்சி.

    பகுதி 1

    கதிரின் கிராமத்திலிருந்து தொடங்குகிறது இந்த பயணம்...

    கலை... ஏய் கலை.. பாப்பா அழத்தொடங்கி பத்து நிமிஷமாச்சி... உன் காதுல விழுந்திச்சா இல்லியா.. இன்னும் அங்க என்ன பாத்திரத்த உருட்டிட்டிருக்ற... சீக்கிரம் வந்து பாலக்குடு... மஞ்சு என்ற ஜெரி பாப்பா தொட்டிலில் வீறிட...கதிருக்கு வந்ததே கோபம்..

    கலை அடுப்படியிலிருந்து வெளியில் வந்தபாடில்லை... கதிரே எழுந்து போய் ஜெரியை தொட்டிலிலிருந்து தூக்கினான்... கனநேரம் அழுதிருந்ததால் ஜெரியின் முகம் சிவந்து வீங்கியிருந்தது கண்டவனுக்கு கலைமேல் ஆத்திரம் பொத்துக்கொண்டு வர.. குழந்தையை தோளில் சாய்த்து தட்டிக்கொடுத்துக்கொண்டே அடுப்படிக்கு விரைந்தான்... அங்கே அவள் இல்லை.

    எங்க போயிட்டா இந்த நடுராத்திரியில... கோபமும் கேள்வியுமாய் பின்புற வாசல் வந்தவனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி... ஆம். கலை வாசலில் சுருண்டு பந்து போல் கிடந்தாள்... கைகள் இரண்டும் தலையை முடியோடு சேர்த்து இருக்கப்பற்றியிருக்க... கண்கள் நிலைக்குத்திக்கிடந்தன.

    விழுந்த வேகத்தில் சுவற்றில் மோதியிருப்பாள் போலும்... கன்னம் சிவந்து கன்னிப்போயிருந்தது.. அவளின் வாயில் நுறைதள்ளி..அஷ்டகோணலான முகம் கண்ட ஜெரி பாப்பா பயத்தில் வீல் எனக்கத்தினாள்.

    பதறிப்போன கதிர்.. குழந்தையை ஒருதோளிலும் கலையை மறு தோளிலுமாய் ஏந்திக்கொண்டு கட்டிலுக்கு கொண்டுவந்து கிடத்தினான்..முகத்தில் தண்ணீர் தெளித்து துடைத்துவிட்டு எழுப்பி கட்டிலோடு சாய்த்தவன்...குடிக்கவும் கொடுத்தான்...

    சாய்ந்து அமர்ந்தவளை ஜெரி தாவிச்சென்று அணைத்துக்கொள்ள...கதிருக்கு தன் முகத்தைத்திருப்பிக்கொண்டு அமர்ந்தாள் கலை... அவளின் கோபம் ஞாயமானதுதான்...

    சொந்த ஊரில்தான் தன் மகள் வளரவேண்டும் என்ற பிடிவாதத்தில் ஜெரியின் பிரசவத்திற்காக ஊருக்கு வந்த கலையை அங்கேயே தன் அப்பா அம்மாவுடன் தங்க வைத்தவன்.. ஜெரியின் மூன்றாம் மாதத்தில் தன் வேலை வேண்டாம் என எழுதிக்கொடுத்துவிட்டு...அங்கு இருந்த அத்தனை பொருட்களையும் வாரிக்கட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு தானும் ஊர்வந்து சேர்ந்தான்...

    வந்து சேர்ந்தவனுக்கு அந்த கிராமத்தில் எந்த வேலையும் ஒத்துவந்தபாடில்லை...இதனால் வீட்டில் சாப்பாட்டிற்கு பணம்தரவில்லை... பாப்பாவிற்கு தேவையான எந்த பொருளும் வாங்கவும் அவனுக்கு வக்கில்லாமல் போகவே... தன் தாய் தந்தையுடன் வாக்குவாதம் முற்றி... அவர்களிடம் கோபித்துக்கொண்டு பக்கத்து ஊரில் ஒரு குடிசையில் குடியேறினான் கலை ஜெரியுடன்...

    அந்த குடிசை கதவில்லாமல் கிடுவினால் அடைக்கப்பட்டு சுற்றி நான்கு சுவருக்கும் ஓலைவேயப்பட்டு... தரைத்தளம் கடல் மணல் மட்டுமே நிரப்பப்பட்டு நாலுக்கு மூன்று என்ற பரப்பளவில் இருந்தது. அதற்கு முன் அது ஆட்டுத் தொழுவமாக பயன்படுத்தப்பட்டிருந்தது..வீட்டின் உரிமையாளர் ஆடுகளை விற்றுவிட்டதால்... கதிருக்கு அந்த வீடாவது கிடைத்ததே என்றிருந்தது..

    அன்று இருந்த இக்கட்டான சூழ்நிலையில் கோபம் ஒருபுறம்... பிடிவாதம் ஒருபுறம் என இருந்ததால் தற்சமயம் கிடைத்த அந்த குடிசை போதும் என வாடகை பேசிவிட்டான்.. சுற்றிலும் முட்செடிகளும் காட்டு வேலிப்பற்றிக்கொடிகளும் படர்ந்து... அஸ்திவாரம் இல்லாமல்... இரண்டு பேர் மட்டுமே கால் மடக்கி படுக்கும் அளவு வீடு இருந்ததாலும்.. கதவு ஜன்னல் இல்லாமல் பாதுகாப்பு இல்லாததாலும் வீட்டுக்கு உண்டான எந்த பொருட்களும் அங்கே இல்லை..

    ஒரு சாக்குப்பையில் ஒரு சோற்றுப்பானை.. ஒரு மண்சட்டி ... ஒரு குடம்... தண்ணீர் குடிக்க ஒரு தம்ளர்..இரண்டு ப்ளேட். மற்றொரு சாக்குப்பையில் மூவருக்குமான உடைகள் இவற்றோடு தொடங்கியது குடிசையில் ஜெரியின் மூன்றாம் மாதத்தில் கலை கதிரின் பயணம்.

    கலைக்கு என்ன பிரச்சினை... நாளை தெரியும் நட்பூக்களே...

    பகுதி. 2

    தன் அவசர புத்தியும் வறட்டு பிடிவாதமும்தான் இன்று குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசில்லாத நிலையில் கொண்டு விட்டிருக்கிறது என்று புத்திக்கு உறைத்தாலும் சுயமரியாதை தடுத்ததால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திமிராகவே திரிந்தான் கதிர்..

    ஏன்டி... இந்த நேரத்துல எதுக்கு வெளிய போன.. போனவ எப்டி கீழே விழுந்த.. வாயெல்லாம் நுரை தள்ளுற அளவு என்னத்த அப்டி சாப்ட்டு தொலச்ச..

    கிடுவுப்பக்கமாய் திரும்பி ஜெரியை மாரோடு அணைத்து பால் தந்து கொண்டிருந்த கலைக்கு பால் சுரக்காமல் போகவே பாப்பா உறிஞ்சலுக்கு ரத்தம் பீறிட்டு பாய்வது போல் வலித்தது...பாவம் பச்சை மழலை பசியின் கோரத்தில் சற்று அதிகமாகவே உறிந்தெடுத்தது ரத்தம் கலந்த பாலை...

    உன் இதழ்கள் பசியில்

    என் காம்பில் பரிதவிக்க!!!

    உறிஞ்ச ஏதுமின்றி

    உதிரம் மட்டும் ஊரல்பெற!!!

    பாவமாய் ஏனம்மா??? என

    என்முகம் நீ நோக்க!!!

    பட்டினியில் காய்ந்த

    முலைமறைத்து!!!

    நெஞ்செரிய!!! வயிறேங்க!!! நித்திரைவிட்டு!!!

    கண்ணீரோடு நான் உன்

    கன்னத்தில் முத்தமிட்டால்!!!

    போதுமடி அழகே!!! நீ என்

    கண்ணீர் குடித்தே!!! மறுநொடி

    உன் பசியும் பறந்துபோகுமடி அங்கே!!!

    அதற்கு மேல் வலிதாங்க முடியாதவளாய் ஜெரியின் வாயை இழுத்து எடுத்து அவளைத்தோளில் போட்டு முதுகைத்தட்டிக்கொடுக்க முயன்றாள்... பசி ஆறாத பச்சிளம் பிஞ்சு கதறியது பாலுக்காக... கலைக்கோ கண்ணீர்கூட வராமல் இறுகிப்போய் கிடந்தது...

    நான் கேட்டுகிட்டே இருக்றேன்... நீ பதில் சொல்றியா கலை... நீ பாட்டுக்கு எழும்பி போயிட்டேயிருக்ற...

    என்ன சொல்ல சொல்றீங்க கதிர்.. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த கொடுமைய இந்த குழந்தை அனுபவிக்கணும் சொல்லுங்க.. என்ன விடுங்க...இது நமக்கு வந்து பொறந்ததைத் தள்ளி வேறென்ன பாவம் செய்துச்சி...

    நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம ஏதேதோ பேசிட்டிருக்ற கலை... உன் வாயில நுறை ஏன் வந்துச்சி...அதுக்கு பதில் சொல்லப்போறியா இல்லியாடி..என்ன நடந்துச்சி சொல்லுடி..

    அவன் கோபமாய் கத்தியதில் ஜெரி அரண்டு அதிகமாய் கதறினாள்...

    அதனால் அதற்குமேல் கலையிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காதவன் குழந்தையை வாங்கி அவளை கையில் ஏந்தி ஆராட்டினான்...

    பசும்பால் இருந்தால் அதைக் காய்ச்சி எடுத்துட்டு வா கலை... நான் இவளை பாத்துக்றேன்..

    பால் சாயங்காலமே தீந்துச்சி கதிர். கூவரகு மாவுதான் இருக்கு... இருங்க காய்ச்சி எடுத்து வரேன்...என்றவள் அடுப்பை பற்ற வைக்க தீப்பெட்டி தேடினாள்..

    கதிர் இங்க இருந்த தீப்பெட்டி எடுத்தீங்ளா...

    ஆமா கலை நீ விழுந்த சத்தம் கேட்டப்போ விளக்கு கொழுத்த எடுத்தேன்... அந்த மண்ணெண்ணய் கேன் பக்கம் இருக்குதா பாரு...

    தேடிப்பார்த்தவளுக்கு தீப்பெட்டி கிடைத்தது.. பக்கத்தில் இருந்த தண்ணீர் குடத்திற்குள் இருந்து... இங்கோ ஜெரியின் கதறல் அதிகமாகிக்கொண்டே போனது..

    அடங்கிக்கிடந்த கண்ணீர் இப்போது பெருக்கெடுத்தது அவளுக்கு...சத்தமின்றி கேவினாள்... கிடுவைத்திறந்து கொண்டு வெளியே செல்ல கால்வைக்கவும்...

    கலை.. நீ வரவர நடந்துக்றது எதுவுமே சரியில்ல... சொல்லாம கொள்ளாம நீபாட்டுக்கு இந்த நேரத்துல எங்க வெளியப்போற...என்ன பாத்தா உனக்கு கிறுக்கன் மாதிரியா தெரியுது.. பதில் சொல்லிட்டு போடி..

    தீப்பெட்டி தண்ணில விழுந்து நமத்துப்போச்சி கதிர்... கமலாக்கா வீட்ல போய் வாங்கிட்டு வறேன்...

    உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா கலை... கால் கிலோமீட்டர் தூரத்தில இருக்ற வீட்டுக்கு இப்போ இருட்டுல போறேங்கற..சுத்தீலும் செடி அடைஞ்சி கிடக்குடி... இரு நான் போய் வாங்கிட்டு வறேன்...

    எழுந்து ஜெரியை கலையிடம் கொடுத்துவிட்டு வெளியேறினான் கதிர்... கையில் ஜெரியை வாங்கிக்கொண்டவள்... கதிர் வரும் வரை குழந்தையின் அழுகையை நிறுத்த நினைத்து பாலூட்ட அமர்ந்தாள் அந்த மணல் தரையில்...

    முந்தைய நாள்களில் கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களாக.. அதாவது இந்த வீட்டிற்கு வந்த நாள் முதற்கொண்டு கலையின் கழுத்தில் கிடந்த மூன்று கிராம் அளவிலான ஒற்றை சங்கிலியை அடகு வைத்து கிடைத்த சொற்ப பணத்தில் அரைவயிறும் கால் வயிறுமாக கஞ்சி காய்ச்சி குடித்து நாட்களைக் கடத்தியிருந்தனர்...கதிருக்கு எந்த வேலையும் இதுவரை கிடைத்தபாடில்லை... வேலை தேடுகிறேன் என்ற பெயரில் எங்கோ சென்றுவந்தான் தினமும்.

    அந்த கஞ்சியைக் காய்ச்ச விறகு... அருகில் காய்ந்து கிடந்த காஞ்செறிச்செடிச் சுள்ளிகள் பொறுக்கிக்கொண்டு வந்தாள்... கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள அதே வேலிகளின் மேல் படர்ந்து வளர்ந்து கிடந்த காட்டு அவரையும்.. சில நாட்கள் செடிளுக்கிடையில் முளைத்திருந்த காட்டுக் காளான்களும்...உப்பு வாங்க வழியின்றி.. சில நேரங்கள் கமலாக்காவின் கடன் உப்பு.சிலநேரம் உப்பே இல்லா கூட்டு...

    இந்த நிலையில் நேற்று கடையில் அரை விலைக்கு வாங்கியிருந்த ரேசன் அரிசியும் தீர்ந்து போக... கஞ்சியும் காய்ச்சாமல் வெரும் தண்ணீர் மட்டுமே உணவானதால் கலையால் எழும்பி நடக்கக்கூட இயலாதவளாய் விழுந்து கிடந்தாள்...

    இப்படி அவள்தான் நினைத்திருந்தாள்... ஆனால் விதி அப்படி எழுதப்படவில்லையே... இன்னும் ஒருசில நாட்களில் அவளுக்கு தெரியவர இருக்கும் உண்மையை அவளால் ஜீரணிக்க முடியுமா? கதிரிடம் சொல்வாளா? அல்லது மறைத்துவிடுவாளா?... இதனால் நேரவிருக்கும் விழைவுகள் என்னென்ன...

    பகுதி. 3

    இதயத்தின் இயக்கத்திற்குள் பாய்ந்து

    துடிப்பை திக், திக் என்றாக்கும் மந்தகார நடுக்கம்/

    வானுறைந்த தெய்வங்களுடன் இப்

    பிரபஞ்சத்தின் பிரார்த்தனை நேரம்/

    பஞ்ச பூதங்களும் அண்ட சராசரங்களுடன்

    ஆலோசனை செய்யும் கணம்/

    விண்ணிற்கும் மண்ணிற்குமான வேள்வி அறங்கேறும் பொழுது/

    கசியும் நிலவொளி அணைக்கும் முகிலோடு கூடல் புரியும் தருணம்/

    வீழ்ந்த விதைகள் விலாசம் தேடித் தன்னுடைத்து,

    முளைத்து முகம் காட்ட முற்படும் முன்பகல் பொழுது/

    விடியலை வரவேற்று வெறுமையை வெற்றி கொள்ள நடக்கும்

    சுய பரிசீலனையின் ஜாமம்/

    இருள் பேசும் 'நிசப்தம்' என்ற மௌனமொழி

    இந்த இரவின் அந்தகாரம்!

    ……

    கிடுவை இழுத்துக் கயிற்றால் கட்டிவிட்டு முட்செடிகளுக்குள் காலூன்றி நடந்த கதிருக்கு உள்ளுக்குள் கிலி அடித்தது... அந்த இரவின் நிசப்தம் அவன் இதயத்தை சற்றே உலுக்கியது.. இன்னும் நடக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி எண்ணத்தில் எழுந்தாலும் உடனே மறைந்தது... ஜெரிக்கு கூழ் காய்ச்ச தீப்பெட்டி வேணுமே...தந்தை பாசம் பயத்தை மறக்கடித்தது...தைரியமாய் நடந்தான்...

    எங்கோ தூரத்தில் தெருநாய்கள் ஒன்று தொடங்கி... வரிசையாய் நான்கு ஐந்து என கோரஸாக குலைத்துக்கொண்டே தன்னைநோக்கி ஓடிவருவது தெரிந்தது...வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவோடு காலுக்கு அடியில் தட்டுப்பட்ட ஒரு தென்னை மட்டையை கையில் எடுத்துக்கொண்டு நடந்தான் கமலாக்காவின் வீட்டை நோக்கி...

    அவன் அருகில் கேட்டது குலைப்பு சத்தம்... திரும்புவதற்குள் மொத்தமும் மேலே தாவியிருந்தன. சுதாரித்துக்கொண்டவன் கையிலிருந்த மட்டையால் அவைகளின் தலையைக் குறிவைத்துத் தாக்கினான்..ஒரு நாய் சுருண்டு விழுந்ததும் மற்றநாய்கள் பயந்து அவ்விடம் விட்டு குலைத்துக்கொண்டே ஓடின..

    விரைந்து நடந்தவன் கமலாக்கா வீட்டருகில் வருவதற்குள் நாய்களின் குலைப்பு சத்தத்தில் கண்விழித்து கதவு திறந்து லைட் போட்டாள் கமலாக்கா..

    யாருப்பா அது இருட்டுக்குள்ள வர்றது.. கதிர் மாதிரி தெரியிது...

    நான்தான்கா... கொஞ்சம் தீப்பட்டி தருவீங்ளா.. ஜெரி பசியில அழுறா...அவளுக்கு கூழ் காய்ச்சணும்... தீப்பெட்டி நமத்துப்போச்சி... அதுதான் உங்கட்ட வாங்கலாம்னு வந்தேன்.. அவர்களின் சூழ்நிலையை அறிந்தவள் கமலாக்கா... கதிர்மேல் அவளுக்கும் கோபம் இருக்கத்தான் செய்தது....முட்டாப்பய, கொழுப்பெடுத்து அந்த ரெண்டு உசுரையும் பட்டினிபோட்டு கொல்றான்... மனதிற்குள் திட்டியபடியே... அந்த நேரம் எதுவும் பேசக்கூடாது... நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று கதிரை முறைத்துக்கொண்டே தீப்பட்டி கொடுத்து அனுப்பினாள். அவன் வீடுபோய் சேரும்வரை வெளி லைட்டை அணைக்கவில்லை..

    தீப்பெட்டியை வாங்கி அடுப்பு பற்றவைக்க சுள்ளிக்கட்டைத் தூக்கியவளுக்கு அந்த சத்தம் கேட்டது... இதென்னடா... இந்த சத்தம் எங்கிருந்து வருது... சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு கண்களில் ஏதும் பிடிபடவில்லை... சரி கீர்ச்சானா இருக்கும் என்று தன் வேலையைப்பார்த்தாள்... அந்த சத்தம் சிறிது நேரம் கழிக்க மீண்டும் கேட்டது...

    அவளால் அது என்ன சத்தம் என்று முதலில் கண்டுபிடிக்க இயலவில்லை... கூழைக்காய்ச்சி எடுத்து வந்து கதிரிடம் சூடாற்றித்தரக்கேட்டாள்.. கதிர் ஜெரியை தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டிருந்தான்... அதை தான் வாங்கி ஆட்டிக்கொண்டே...

    கதிர் உங்களுக்கு அந்த சத்தம் கேட்டுச்சா..

    எந்த சத்தம் கலை.. எனக்கெதுவும் கேக்கலியே...

    நல்ல கூர்ந்து கேழுங்க... உஸ் உஸ் உஸ் னு கேக்குது கதிர்... அவள் சொல்லி முடிக்கவும் அந்த ஸ்ஸ்ஸ்ஸ் பலமாய் கேட்டது... பகீர் என்றானது இருவருக்கும்... கலை நீ வெரசா ஜெரிக்கு கூழ கொடு...அவ பசி முதல்ல அடங்கட்டும்...

    அது என்ன சத்தம்

    Enjoying the preview?
    Page 1 of 1