Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aval Oru Thiru Nangai
Aval Oru Thiru Nangai
Aval Oru Thiru Nangai
Ebook144 pages1 hour

Aval Oru Thiru Nangai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரு நாகங்களுக்கு இடையிலான முன்ஜென்மத் தீராக் காதலும் பகையும் மறுஜென்மத்தில் தொடர, ஆண்நாகம் நரேன் என்ற பெண்டகத் திருநங்கையாகவும் பெண்நாக தேவதை நிலானி என்ற நாகப்பெண்ணாகவும் மனித உருவெடுத்து மூன்று ஜென்மங்களாய் பிறந்து ஒருவரோடு ஒருவர் போரிட்டு அதேபொழுதில் காதல் வெக்கை மேவ கூடல் கொண்டு ஒரு சிசுவையும் ஈன்று மூன்றாம் ஜென்ம முடிவுப் போரில் சேர்வார்களா? அந்த சிசு யார்? சிவனோடு தொடர்புடைய அந்த ஆண்நாகம் யார்? என்ற பிரம்ம ரகசியம் உடைக்கப்படுவதே இக்கதையின் சாராம்சம். சற்று வித்தியாசமான விசித்திரமான காதல் கதை இது. பிரம்மிப்புடன் வாசிக்கும் அனைத்து நல்லுள்ளங்களும் பாராட்டத் தகுதியுடைய கதை.

அன்புடன்.

யமுனா.

Languageதமிழ்
Release dateOct 26, 2021
ISBN6580148407535
Aval Oru Thiru Nangai

Read more from Yamuna

Related to Aval Oru Thiru Nangai

Related ebooks

Reviews for Aval Oru Thiru Nangai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aval Oru Thiru Nangai - Yamuna

    https://www.pustaka.co.in

    அவள் ஒரு திருநங்கை

    Aval Oru Thiru Nangai

    Author:

    யமுனா

    Yamuna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yamuna

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    யாரும் இல்லாத அந்த ஒருவழிச்சாலை...

    நிலானி தனியே நடந்துகொண்டிருந்தாள் தன் ஒருவயது கைக்குழந்தையுடன்...எங்கிருந்தோ கேட்டது அந்தக்குரல்..அவளை அறியாமலேயே ஓட்டமெடுத்தன அவள் கால்கள் குரல் வந்த திசை நோக்கி...

    ஐயோ...இந்த வீட்டுக்குள்ளையா சத்தம் கேக்குது...இங்க உள்ளாறப் போக விட மாட்டாய்ங்களே...வேகவேகமாய் ஓடியக்கால்கள் அங்கேயே நின்று தயங்கின...திரும்பி நடக்கலானாள்..

    அப்போதுதான் பார்த்தாள்...தான் வேகமாய் ஓடியதில் தன் கைக்குழந்தை தெவங்கி தண்ணீருக்காக மூச்சை இறைத்துக்கொண்டு தன் தோளில் தலைசாய்த்துப் படுத்திருந்ததை...

    பாப்பா...எழுந்துக்கோ...இங்க பாரு...என்று அதன் கன்னத்தைத்தட்டி எழுப்பினாள்...

    மெதுவாய்த்தலையைத்தூக்கி...தன் அழகான மொழியில்அம்ம..நன்ணிஎன்று தன் கை விரல்களை மடக்கி வாயோரம் வைத்துக் குறிப்பு காட்டிச்சொன்னது...

    சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு...அந்த ஒற்றை மாளிகை வீட்டைத்தவிர வேறேதும் கண்ணுக்குத்தெரியவில்லை...

    சரி..ஆபத்துக்குப் பாவமில்லை..என்று நினைத்தவள் அதே வீட்டிற்கு திரும்ப நடந்தாள்...

    வீட்டை அவள் நெருங்க நெருங்க...அங்கிருந்து வந்த சத்தம் வலுத்துக்கொண்டிருந்தது...

    ச்சை..புள்ள பெறத்தெரிஞ்சவளுக்கு..அத பாத்துக்கத்தெரியல...பெருசா படிச்சி கிழிச்சாங்களாம் ஆபீஸ் உத்தியோகத்துக்கு...தூ...வெக்கமா இல்ல இதச்சொல்ல...வெளியத்தெரிஞ்சா அசிங்கம்...போ..கண்ணு முன்ன நிக்காத..அத கொண்டு எங்கியாச்சும் போய் தொல

    இதைக்கேட்டுக்கொண்டே வந்த நிலானிஎன்ன ஆனாலும் பரவால்ல...உள்ள நுழைஞ்சே ஆகணும் சொல்லிக்கொண்டே அந்த பெரிய கருப்பு கேட்டை தள்ள முடியாமல் தள்ளி அவள் நுழையும் அளவுக்கு திறந்துவிட்டாள்...

    அவள் நினைத்ததுபோல் அங்கு நாயோ..வாட்ச்மேனோ..வேறு எந்த காவலுமோ இல்லாமல் வெறிச்சோடிதான் கிடந்தது...கேட்டைத்தாண்டி ஒரு கால் கல்லளவு தள்ளி இருந்தது அந்த பெரிய வீடு...

    அருகில் வந்துவிட்டாள்...சுற்றிலும் எந்த வீடுகளும் இல்லாத ஆள் அரவமற்ற இடமானதால்...உள்ளே ஒரு பெண்ணின் அழுகுரல் நிலானிக்கு தெளிவாகக்கேட்டது...

    படியில் ஏறி நின்றவள் காலிங் பெல்லைத்தேடினாள்...கண்ணில் படவே இல்லை..சரி கதவைத்தட்டிப்பார்க்கலாம் என்று கையைக் கதவில் வைத்தாள்..

    அட..இதென்ன...தானே திறக்குது..உள்ளே நுழைந்து நிமிர்ந்து பார்த்ததும்....கண்கள் அகல விரிந்தன...

    ஆஆஆஆஆஆ...வாய்மூட முடியவில்லை...கைகளைக்கொண்டு தன் வாயைப் பொத்திக்கொண்டாள்...

    இது நிஜமா...இப்படியும் நடக்குமா...என்று நம்பமுடியாமல் நிலைகுலைந்து நின்றாள் நிலானி...

    ஆம்...அந்த பெரிய வீட்டுக்குள் மிகப்பெரிய மர்மமாய் அந்தப்பெண் நின்றிருந்தாள்...இவளின் வருகைக்காக..

    வா, நீலானி...

    ஏன் நிலானி இவ்வளவு லேட்...எத்தனை காலமாய் நான் காத்திருக்றது...அவள்தான் கேட்டாள் உரிமையுடன்...

    நிலானியின் இதயத்துடிப்பு எகிறிவிட்டது..

    என்னது? யாருமா நீங்க...எனக்காக எதுக்கு நீங்க வெயிட்பண்ணணும்?

    சீக்கிரம் கொடு நிலானி என் குழந்தையை..தோ பாரு...அவ எனக்காத்தான் அழுதிருக்றா...இங்க கொண்டுவா குழந்தையை..அவள் தன் கையைக் குழந்தையை நோக்கி நீட்டினாள்..

    அம்மா..என்னம்மா பெனாத்துறீக...ஐயய்ய...இங்க வந்ததே தப்பாவில்ல போச்சி..நான்பாட்டுக்கு என் கருமத்த தொலைக்க போயிட்டிருந்தேன்..ஏதோ அழுகசத்தம் கேட்டுச்சே..ஐயோ பாவம்னு வந்தா...நீங்க என்னம்மா என் அடிமடியிலியே கை வெக்கிறீக..இதென்ன பெரிய வம்பாவில்ல போச்சி...தாயி...செத்தோல குடிக்க தண்ணிமட்டுங் குடுங்க...பச்சப்புள்ள கொரவள காஞ்சிகெடக்கு..அத நனைச்சிப்போட்டு நா வந்த வழியப்பாத்து போறேன் தாயி..

    இப்போது வெளியே பத்துப்பதினைந்து நாய்கள் சேர்ந்ததுபோல் ஊளையிட்டுக்கொண்டிருந்தன...அந்த ஓலம் வீட்டின் கதவருகேக்கேட்டதும் நிலானிக்குக்குழப்பம் வந்தது...

    நாம உள்ள வர்றச்ச ஒரு நாயும் இல்லியே..அதுக்குள்ளாற இம்புட்டு நாயும் எங்கன இருந்து வந்திச்சி..அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த அவள் தான் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து மெதுவாய்க் கீழே இறங்கி நிலானியின் அருகே வந்தாள்...

    அப்போதுதான் நிலானி கவனித்தாள்...மின்மினிகள் மட்டுமே வெளிச்சம் வீசிக்கொண்டிருந்த அந்த பிரம்மாண்டமான ஹாலின் ஒரு பகுதிக்கு அந்த அவள் இறங்கி வரும்போதுதான் சலக்...சலக்...சலக்..சலக் என்ற சத்தம் நிலானியை கூர்ந்து அவளைப்பார்க்கவைத்தது...

    ஆம்...அவளின் கை கால்கள் மிகப்பரம்மாண்டமான அலுமினியச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததையும்...அவள் கண்கள் தோண்டப்பட்டு பார்வை இழந்து நிற்பதையும்...

    ஐயய்யோஓஓஓ..

    அவள்(ன்)

    உடுத்தியிருந்ததென்னவோ புடவைதான்...ஆனால் அவள் தோற்றம் இருபது வயது இளைஞனின் தோற்றம்..நன்கு மழித்த முகம்...இடையை ஆட்டி நடக்கும் நளினம்...திருப்பம்வைத்து நீளமாக பின்னப்பட்ட கூந்தல்... நன்கு கல்விபெற்றவள் போன்று தெரிந்தாள்...

    ஆனால் அந்தச்சங்கிலியின் கொடுமையில் கால்களில் வழிந்த ரத்தம் அவள் நடக்க நடக்க தரையில் சொட்டுச்சொட்டாக விழுந்துகொண்டிருந்தது..தன் புடவைச்சுருக்கத்தை ஒற்றைக்கையில் தூக்கிப்பிடித்துக்கொண்டே முகத்தில் ஏதோ கிடைக்கவேகிடைக்காது என்றிருந்த ஒன்று கையில் கிடைத்துவிட்ட பூரிப்பில் நடந்துவந்துகொண்டிருந்தாள் அவள்..

    அதே நேரம் வெளியில் ஊளையிட்டுக்கொண்டிருந்த நாய்கள் அந்த ரெத்த வாடை அதன் மூக்கில் எட்டிய மறுநிமிடம் அத்தனையும் மொத்தமாய்ப் பாய்ந்து வீட்டிற்குள் படையெடுத்தன...அவள் வடித்துக்கொண்டே வந்த அந்த கால்களின் ரெத்தத்தை நக்கிசுவைக்க...நாக்கைத்தொங்கவிட்டுக்கொண்டு பேய்களைப்போல பாய்ந்தன..

    அந்த நாய்கள் நிலானியைத்தாண்டி...அவள் பக்கமாகத் தெறித்து ஓடின..

    அவ(ன்) பெயர் நீரா...

    நிலானிக்கு அப்போது பதினெட்டுவயது..அந்த மேல் நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் இரண்டாவது பெஞ்சில் முதல் ஆளாக அமர்ந்திருந்தாள்...பெரிய வீட்டுப்பெண் என்ற திமிர் எப்போதும் அவளுக்கு உண்டு...தன் தகுதிக்கு சமமான பெண்தோழி ருத்ராவிடம் மட்டுமே பேசுவாள்...

    பணத்திற்கு பஞ்சமில்லாததால்...குறைவான அழகையும் மிகைப்படுத்திக்காட்டியிருந்தாள்.. மற்ற மாணவிகள் அவளுக்கு வைத்திருந்த பட்டப்பெயர் கோல்ட் ஃபிஷ்

    அவளின் இருக்கைக்கு நேர் எதிர்பக்கம்தான் அவனின் பெஞ்ச்...வரிசையிலிருந்து மூன்றாவதாக அமர்ந்திருந்தான்...நரிக்குறவனின் மகன் நரேன்... ஆசானுபாகுவான உடற்கட்டு...குனிந்த தலை நிமிராத அம்மாஞ்சி...அவன் கொண்டுவரும் தேனுக்காகவும் மாவுக்காகவும் கிழங்கு போன்ற பலவகை மலை உணவுக்காகவுமே அவனைச்சுற்றி எப்போதும் பட்டாளம் இருக்கும்...

    அவனுக்கு கதை சொல்வது பிடித்தமான ஒன்று..அதிகமானக் கற்பனைத்திறனுடன் பிறந்திருந்தான்...தினமும் ஏதாவது ஒரு கதை யோசித்து வந்து... மதிய சாப்பாட்டு வேளையில் தன் நண்பர்களுக்குச்சொல்லுவான்..

    அன்றும் வழக்கம்போல கதைசொல்லத்தொடங்கினான்.. அவனைப்பிடிக்காது என்றாலும் தன் பெஞ்சில் ஓரமாய் அமர்ந்து..அவன் கதைகளை ஒட்டுகேட்டுக்கொண்டிருப்பாள் நிலானி...அது அவனுக்கும் தெரியும்...ஆனால் தெரியாததுபோலவே இருந்தான்...

    எந்த கிரகணத்தின் தாக்கமோ தெரியவில்லை...அவன் சொன்ன அந்தக்கதையே இன்னும் கொஞ்சநாளில் தனக்கு நிஜமாய் நடக்கவிருக்கின்றது என்பதை அறியாத அப்பாவியாய் இதோ சொல்லத்தொடங்கினான்..

    உயரமான மிகப்பெரிய சிகப்பு வண்ணக்கதவு அது..அதன் சித்திர வடிவமைப்புகளின் வேலைப்பாடுகள் மேலிருந்து கீழாக நரகத்தின் எரிதழல் பாய்ந்து வருவதுபோன்றும்...அதன் பாய்ச்சலை அறியாத ஒரு குழந்தை தலைகீழாகக் காட்சிதரும் பெரிய ஆலமரத்தை நிமிர்த்திவைக்க முயற்சிசெய்துகொண்டிருப்பதுபோலவும் செதுக்கி வடிக்கப்பட்டிருந்தது...

    கதவின் அருகில் அமர்ந்திருந்த ஒரு தாய் அந்த குழந்தையைப்பார்த்து கதறி அழுதுகொண்டிருந்தாள்...தன் இரு கரங்களையும் குழந்தைக்கு நேராக நீட்டிவா மகளே என்று கண்ணீரோடு அழைத்தாள்.

    அப்போது அந்த சிவப்புக்கதவுமீது இருந்த குழந்தை மெதுவாய் அந்தத்தாயின் பக்கம் திரும்பியதுபோல் நேரடியாகப்பார்த்தாள்...அது தன் பிரம்மைதானோ என்று நினைத்தவளா இல்லை உண்மை எனப் பிறகு புரிந்தது அவளுக்கு...இருள் கொஞ்சம் கொஞ்சமாய் சூழத்தொடங்கியது..திடீரென

    அந்தத்தாயிடம் குழந்தைத்தாவியது...அவள் குழந்தையைக்கையில் எடுக்கும்முன்பே...எங்கிருந்தோ மிகவேகமாகப் பறந்துவந்த

    Enjoying the preview?
    Page 1 of 1