Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naaladi Gopurangal...!
Naaladi Gopurangal...!
Naaladi Gopurangal...!
Ebook100 pages39 minutes

Naaladi Gopurangal...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.

1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580120002320
Naaladi Gopurangal...!

Read more from Jayasree Shanker

Related to Naaladi Gopurangal...!

Related ebooks

Reviews for Naaladi Gopurangal...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naaladi Gopurangal...! - Jayasree Shanker

    http://www.pustaka.co.in

    நாலடிக் கோபுரங்கள்…!

    Naaladi Gopurangal…!

    Author:

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    Jayasree Shanker

    For more books
    http://www.pustaka.co.in/home/author/jayasree-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    11-12-13

    தாய்மையின் தாகம்

    நாலடிக் கோபுரங்கள்…!

    கண்கள் மாற்றும்..!

    நாலடிக் கோபுரங்கள்…!

    ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்.

    11-12-13

    ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... என்று செல்லமாக ஒரு விரலை வாயில் வைத்தபடி மலங்க விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த வெள்ளைக்காரக் குழந்தையின் படத்தையே, பரிசோதனைக்காக படுக்கையில் படுத்திருந்த உமா கண்களில் குழப்பத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் மனசு பூராவும் பயம் வியாபித்திருந்தது.

    டாக்டர் சுசிலா அவளது வயிற்றில் புனல் போன்ற கருவியை வைத்து லேசாக அழுத்தி அதிலிருந்து உமாவின் வயிற்றிலிருந்த குழந்தையின் இதயத் துடிப்பைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

    உமாவின் உள்ளுணர்வு பயத்தில் துடித்துக் கொண்டிருந்தது.... முருகா... டாக்டரு நல்லதாச் சொல்லோணும்... என்னையும் என் குழந்தையையும் பத்திரமாக் காப்பாத்து மனசு உள்ளுக்குள் அரற்றிக் கொண்டே இருந்தது.

    ம்ம்ம்.... குட்.... குழந்தையின் ஹார்ட்பீட் நல்லாருக்கு. எப்டியும் இன்னும் ரெண்டே நாள் தான். பயப்படத் தேவையே இல்லை... நார்மல் டெலிவரி தான் உனக்கு. குழந்தை நல்ல அக்டிவாத் தான் இருக்கு. இன்னைக்கு என்ன டேட்..... எய்த்தா, அநேகமா, கரெக்டா லெவெந்த் ஆஃப் திஸ் மன்த்... நீ அம்மாவாகப் போறே உமா, லேசான புன்முறுவலுடன் சொல்லிக் கொண்டே தனது கழுத்திலிருந்த ஸ்டெத்தை கழற்றி டேபிளின் மீது வைத்தாள் டாக்டர் சுசீலா.

    மெல்ல பரிசோதனை பெஞ்சில் இருந்து கீழே காலை ஊன்றியபடி இறங்கிய உமா, அருகில் இருந்த தனது அம்மாவின் தோளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு மெல்ல வந்து டாக்டரின் அருகிலிருந்த நாற்காலியில் உட்காருகிறாள். பயம்... நடையில்,. கண்களில், வார்த்தையில், மனசுக்குள் எங்கும் அந்த முகம் தெரியாத 'பயம்' மட்டுமே ஆட்கொண்டிருந்தது.

    இப்பத்தேன் மாட்டுத்தாவணி வரை போயி பார்த்து சம்மந்தி ஊட்டாண்ட சொல்லிப்போட்டு கட்டிக்குடுத்த மவள பெரசவத்துக்கு எங்கூட்டுக்கு கூட்டீட்டு போறேன் டாக்டரம்மா. அவுக வீட்டுல அங்கனயே புள்ளப்பேறு வெச்சிகிடுறோம்ன்னு சொன்னாக, எனக்குத்தேன் மனசு கேக்காமே, போய் கூட்டியாந்தேன். புள்ளையப் பாருங்க ஏதோ பேயறைஞ்சாப்படி இருக்குறா... நேராப் போயி முனியாண்டி கோவில்ல மந்திரிச்சி தாயத்து கட்டோணம்.

    ஏன்.... ? வளைகாப்பு முடிச்சி நீங்க தான் கூட்டீட்டு வந்துருவீங்களே? உமா கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பி உட்காரும்மா... டாக்டர் பேச்சுக் கொடுத்தபடியே தனது பரிசோதனையில் மும்முரமாய் இருந்தாள் . உமா திரும்பி உட்கார்ந்தபோது கைவளைகள் குலுங்கிச் சிரித்தன.

    இல்ல டாக்டரம்மா, இதோட புருசன்காரன் இத்த உடமாட்டேன்னு சொல்லிட்டாரு .. பெறவு போய்க்கிறலாம்னு இருந்துச்சாம்.. அங்கனகுள்ள கொஞ்சம் வசதி ஜாஸ்தி. நாந்தான் இப்ப மனசு கேக்காமே இவளை அழைச்சிட்டு இங்கிட்டு ஓடியாந்தேன்.

    அது சரி... உள்ளூரு தானே.... ? ஓகே.... எல்லாம் சரியா இருக்குது உமா.. நீங்க கெளம்புங்க.... நான் சொன்னபடிக்கி வந்தாப் போதும்.

    டாக்டர்... என் மவ ரொம்ப பயந்தமேனிக்கு இருக்குறா. எப்பப்பாரு, புள்ள நல்ல படியாப் பொறக்குமா ? என் உசுருக்கு ஒண்ணுமில்லாமா நா பெத்துப் பிழைச்சு வந்துருவேனா? குழந்த உசுரோட பெறக்குமா ? ண்டு பொழுதோட்டும் இதே கேள்வியத்தான் கேட்டு என்னிய துளைச்செடுக்குது. நீங்க தான் டாக்டர் இதுக்கு தெகிரியம் சொல்லோணும். நானே படிக்காத கொள்ளாத நாலு செவத்துக்குள்ளார நாட்டாமை ஆளுரவ. எனக்கே சக்கரை நோயி, ரத்தக் கொதிப்பு எல்லாம் வந்து வாட்டி எடுக்குது. இது வேற என்னிய இப்பிடி பயங்காட்டுது.

    என்ன பயம் உமா ... ? டாக்டர் சுசிலாவின் முகத்தில் மென்மையான புன்னகை தவழ கேட்கிறாள். உங்க அம்மா கவலைப் படறாங்க பாரு... அவங்களே உடம்பு சரியில்லாதவுங்க. உனக்கு ஒண்ணுமேயில்லை. நல்லா சந்தோஷமா இரு.

    டாக்டர்.... எனக்கு ரொம்ப பயம்மா இருக்குதுங்க. ரொம்ப... ரொம்ப... போன வாரம் நா ஒரு படம் பார்த்தேன், அதுல ஒருத்தங்க இப்படித் தான் பெரசவத்துல இறந்து போயிடறாங்க.. அதே என் கண்ணுக்குள்ளாற வந்துட்டே இருக்கு டாக்டர்.

    நீ ஏன் போயி இப்படி கண்ட கண்ட காட்சியை பாக்குறே? அதெல்லாம் சினிமா.... வெறும் தலையணையை வயித்துல கட்டி வெச்சுருப்பாங்க. நீ வெளையாட்டுப் பொண்ணும்மா.அதெல்லாம் வெறும் கதை தான்... இதுக்கு போயி எதுக்கு பயம்மா... ? நான் தான் இருக்கேனே..உனக்கு டெலிவரி நான் தான் பண்ணப்போறேன். ஏன் கவலை... பயம்... ? நீ அம்மாவாகப் போறது, சந்தோஷமான விஷயம் தானே.! அதை நினைச்சி சந்தோஷப்படு...! வீணா எதையும் மனசில போட்டு குழப்பிக்காத.

    அதில்லை டாக்டர், குழந்தை பத்திரமா வெளியே வந்துருமா... ? எனக்கு அதைப் பத்தி நெனைச்சாலே ஈரக்கொலை நடுங்குது சொல்லிக் கொண்டே தனது பெரிய வயிற்றை ஒரு முறை லேசாகக் கைவைத்துப் பார்த்துக் கொள்கிறாள்,

    குழந்தை வெளியே வராம போனா, நாட்டுல நீயும் நானும் இருந்திருக்க முடியுமா? அதிர்வில்லாமல் சிரித்த டாக்டர், இந்த பயம் எல்லா பெண்களுக்கும் கடைசி நிமிஷத்தில் ஏற்படற சாதாரண பயம் தான். அதெல்லாம் ஒண்ணும் தப்பா நடக்காது. நீ தைரியமா இருக்கணம். கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கோ. வேண்டாத

    Enjoying the preview?
    Page 1 of 1