Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

100 Oru Pakka Kathaigal
100 Oru Pakka Kathaigal
100 Oru Pakka Kathaigal
Ebook217 pages3 hours

100 Oru Pakka Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனம், மொழி, மெய் மூன்றுக்கும் உகந்த ஆரோக்கியம் அளிப்பது நல்ல எழுத்துக்கள் ஆகும். எழுத்து இலக்கியத்தில் மனம் வசப்படுவது நிதர்சனம். நறுக்கு தெறித்தார் போல என்றொரு வாசகம் உண்டு. புத்தம் புதிய துணியை நறுக்கி கச்சிதமான உடையாக உருவாக்குவது போல, மிகப்பெரிய விஷயத்தை கருத்தாக செதுக்கி 100 வார்த்தையில் கதை சொல்ல அனுபவ நேர்த்தி வேண்டும்.

செய் நேர்த்தியோடு நெய்யப்பட்ட நெசவு போல எழுதிய இக்கதைகள் தமிழ் முன்னணி இதழ்களால் பிரசுரிக்கப்பட்டவை. தன்னை நினைப்பதற்கென்றே நெஞ்சம் கிடைத்தார் போல கதைகளைப் படிக்கும் வாசகர்கள் தான் சார்ந்த அனுபவங்களை அதில் காணும் போது உள்ளம் அன்பால் நெகிழ்ந்து வெதும்புகின்றது. ஊனும், உடலும் உணர்வுடன் கலந்த படைப்பே மனிதன்; என்பதைப் போல சிறுத்தும், கருத்தும் திருத்தும் வல்லமை படைத்த "100 ஒரு பக்க கதைகள்" நூறு கருத்துக்களையும் பன்நூறு சிந்தனைகளையும் தருவனவாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி.

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580158809395
100 Oru Pakka Kathaigal

Read more from V. Tamilalagan

Related to 100 Oru Pakka Kathaigal

Related ebooks

Reviews for 100 Oru Pakka Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    100 Oru Pakka Kathaigal - V. Tamilalagan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    100 ஒரு பக்க கதைகள்

    100 Oru Pakka Kathaigal

    Author:

    வெ. தமிழழகன்

    V. Tamilalagan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-tamilalagan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒன்னே ஒன்னு

    2. நேயம்

    3. உயிர் வரம்

    4. நேசக் கடன்

    5. மீதி

    6. உண்டியலில் போடாத பணம்

    7. பாச சேலை

    8. பந்தியிட்ட இலை

    9. சித்தி

    10. உதவி

    11. ஈரப்பணம்

    12. முரண்

    13. நேசக் கடன்

    14. மீதி

    15. மனசெல்லாம்

    16. பழைய அப்பா

    17. அடிதாங்கி

    18. காணாமல் போனவன்

    19. காலணி

    20. வியூகம்

    21. மத்தாப்பு

    22. தங்கமான தங்கச்சி

    23. சுடும் ஈரம்

    24. முடிவு

    25. பூ மனம்

    26. அணில் பிள்ளைகள்

    27. வந்துட்டார்!

    28. அவர் வருவாரா?

    29. மனக்கனல்

    30. பூ போட்ட பணம்!

    31.நேர்மை

    32. அதுகள் அப்படி...

    33. மகராசி

    34. தொழில்

    35. பிரிவு

    36. சொன்னது ஏன்?

    37. வாழ்வின் வரம்

    38. உயிர்த்தொட்டி

    39. சரியும் தவறு

    40. மனசு

    41. பிரதிபம்பம்

    42. நீயாக தந்தது

    43. சருகுகள்

    44. நேர்மை

    45. கணவன்

    46. கிரீன் சிக்னல்

    47. வராத வார்த்தை

    48. மாறிய கோணம்

    49. இனியும் அவளே

    50. இரவு ஒரு மணி

    51. அதே முகம்

    52. வழி

    53. அழுக்காக இருந்த பெண்

    54. கொலை நாள்

    55. பெண் நெஞ்சம்

    56. சாட்டை

    57. தம்பி

    58. கிடைத்த பாடம்

    59. விரும்பிய மனம்

    60. உறவுசரம்

    61. நிஜ நிழல்

    62. மின்னல் பொன்னே

    63. ஒரே வெட்டு

    64. மாற்றான் மனைவி

    65. மாடல்

    66. மனசு

    67. ருசிகண்ட பூனை

    68. சன்மானம்

    69. மனப்பார்வை

    70. இதுதான் இதம்!

    71. சவால் சந்திரன்

    72. நியாயத் துடிப்பு

    73. ஒரே வெட்டு

    74. மாற்றான் மனைவி

    75. மாடல்

    76. மனசு

    77. ருசிகண்ட பூனை

    78. சன்மானம்

    79. அடேங்கப்பா!

    80. தாய் பாடம்

    81. பதிலுக்கு அவள்

    82. அந்த சமாச்சாரம்

    83. மாற்றியது யாரோ

    84. தேடல்

    85. பாடம்

    86. கொன்னுட்டா நிம்மதி

    87. பெண் மனசு

    88. மந்திரி

    89. நெருப்பு மூச்சு

    90. முழு 'நீல' பேட்டி

    91. கௌரவம்

    92. வாய்ப்பு

    93. ஒன்னு போதும்!

    94. வாழ்க்கை விபத்து

    95. கண் நிறைந்தவன்!

    96. மாறிய திசை

    97. தந்திரம்

    98. ஊருக்கு தீபம்

    99. பேசும் பாசம்

    100. நிலா வெள்ளை

    101. கிடைத்த இடம்

    102. பலன்

    103. நிஜ ரூபா

    104. சுடர் விட்ட கவிதை

    105. சொல்லும் உள்ளம்

    106. புதுக் கனவு

    107. இதழ்

    108. பொறப்பு

    1. ஒன்னே ஒன்னு

    மனைவியின் பேச்சைக் கேட்டு வந்து விட்டான் மனோ. ஆனால்... அம்மாவிடம் அதை எப்படி கேட்பது? என தெரியாமல் தவித்தான். மாலினிதான், என்ன மௌனமா நிக்கிறீங்க? ஒத்த மனுஷி. பிரிட்ஜ்ஜை என்ன செய்யப் போறாங்க? நமக்கு வேணும்னு சொல்லிட்டு எடுத்து வைங்க!என்றாள். அமைதியாக நின்றாள் கல்யாணி .அவளது ஒரே மகன்தான் மனோ. ஆறு வயதில் அப்பாவை இழந்தவன் எல்லாமே கல்யாணி தான்...

    வளர்த்து ,ஆளாக்கி... படிக்க வைத்து.. வேலை வாங்கித் தந்து... திருமணமும் செய்து வைத்து விட்டாள். மனோகரன் வேலையை காரணம் காட்டி தனி குடித்தனம் போய்விட்டாள், மாலினி!

    மகனின் நலன் கருதி கல்யாணி மறுப்பேச்சு பேசவில்லை.

    மாமியார் _மருமகள் இருவருக்கும் ஒத்துப்போகாததால் பேசுவதில்லை.

    மனோ மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு போவான். கல்யாணிக்கு கணவனின் பென்ஷன் கை கொடுத்தது ஜீவிக்க!

    மகனுடன் மருமகளும் வந்த நோக்கம் புரிந்தது. பிரிட்ஜ் வேண்டுமாம்! எடுத்துக்கப்பா உனக்கு இல்லாததா?என்றாள் கல்யாணி.

    அதான் உங்க அம்மா சொல்லிட்டாங்க, இல்ல, எடுத்து டெம்போவில் வையுங்க!என்றாள் மாலினி .

    ஆட்கள் வந்து தூக்கிச் சென்று பிரிட்ஜை டெம்போவில் ஏற்றினர். உங்க ஆபீஸ்ல இருந்து தினம் நாலு பேர் வந்து போறாங்க. இந்த சோபாவையும் எடூங்க என கேட்டாள் மாலினி. நிதானமாக நிமிர்ந்து பார்த்தாள் கல்யாணி. "இதெல்லாம் உனக்காக வாங்கி சேர்த்தது தானேப்பா! உன் மனைவி எதை எல்லாம் கேட்கிறார்களோ அதை எல்லாம் எடுத்துக் கொள்ளட்டும்! நான் என்ன மறுப்பு சொல்லவா போகிறேன்? என்றாள். சொன்னது தான் தாமதம். கட்டில், பீரோ ,கேஸ் அடுப்பு டிவி .. என எல்லா பொருட்களையும் எடுத்து டெம்போவில் ஏற்றச் செய்தால் மாலினி!

    வீட்டை பார்வையால் அளந்தான் மனோ.

    காலி செய்யப்பட்ட வீட்டை போல வெறிச்சோடி கிடந்தது.

    உனக்கு தேவையான எல்லா பொருட்களையும் கேட்டு வாங்கிட்டியா மாலினி?என்றான் மனோ. வாங்கிட்டேங்க புறப்படலாம் ,சீக்கிரம் வண்டியில் ஏறுங்கள்என அவசரப்படுத்தினாள் மாலினி .

    உனக்கு வேண்டியதை நீ எடுத்துகிட்ட. எனக்கு ஒன்று வேண்டும். கேட்டு வாங்கிக்கவா மாலினி?கேள்விக்குறியுடன் பார்த்தவள்,

    வாங்கிட்டு கிளம்புங்க.மருமக கேட்டதை எல்லாம் கொடுத்துட்டேன். மகன் கேட்கிறான்,எனக்கு ஒன்னு வேணும். தருவியா?"என்று!

    என்ன வேணும் கேளு மனோ!

    நீதான், நீதானம்மா... உன்னை அனாதைய விட்டுட்டு போக என்னால முடியாது. வந்து வண்டியிலே ஏறு

    கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது...

    2. நேயம்

    தள்ளு கதவை தள்ளி கொண்டு மூசிரைக்க வந்து நின்றான் வடிவேல்.

    டாக்டர் பார்த்திபன் அவனை குழப்பத்துடன் ஏறிட்டான்.

    டாக்டர்! ரொம்ப அவசரம். நீங்க உடனே என் கூட வந்து டிரீட்மென்ட் தரணும். என்று மூச்சிரைக்க சொல்லி முடித்தான். அவனிடம் தெரிந்த படபடப்பிலிருந்து அவசரம் புரிந்தது. வெளியே பேசன்ட்ஸ் நிறைய வெயிட் பண்றாங்க. இவங்களை விட்டுட்டு வரணும்னா ,பீஸ் நிறைய ஆகும். போக்குவரத்து செலவு, கன்சல்டிங் பீஸ் ,மெடிசன் எல்லாம் சேர்ந்து 1000 ரூபாய் முன்கூட்டியே கொடுத்தால்... நான் உங்களோடு வருகிறேன்"

    என்று கராராக சொன்னான் கார்த்திபன். டாக்டரின் கண்டிப்பான வார்த்தைகளை கேட்டு அவசரமாய் பாக்கெட்டை பார்த்தான், வடிவேல். அவசரம்வேறு. பண பற்றாக்குறை வேறு. என்ன செய்யலாம் ?என்று யோசித்தவன் சட்டென தன் கழுத்தில் இருந்த மைனர் செயினை கழற்றி டாக்டரின் டேபிள் மீது வைத்தவன் ப்ளீஸ் டாக்டர் ஒரு பவுன் மைனர் செயின் அது எடுத்துக்கோங்க சீக்கிரம் வந்து டிரீட்மென்ட் கொடுத்தால்தான் ஓர் உயிர் போவதை தடுக்க முடியும்!

    என்று டாக்டரின் கரங்களை பிடித்து தூக்கி நிறுத்துவது போல அவசரப்படுத்தினான். டாக்டர் அவநுடையடையகாரில் புறப்பட்டார்.

    ஒரு மர நிழலில் பிளாட்பாரம் ஓரமாய் வண்டியை நிறுத்தச் சொன்னான், வடிவேல்! என்ன பிளாட்பாரத்துல நிக்க சொல்ற! என்று டாக்டர் கார்த்திக் கேட்க நாம காப்பாத்த வந்த பேஷண்ட் இங்கதான் படுத்து இருக்கிறார் யாரோ பாவம் கிராமத்து ஆசாமி எதற்கோ இங்கே வந்திருக்கிறார் திடீரென உடல்நலம் பாதித்து அப்படியே சுரண்டு கிடந்தார் அவசரமான இந்த அவசரஉலகத்திலேயே இவரை திரும்பிப் பார்க்க யாரும் இல்லை .ஆகவே தான் ஓர் உயிரை காப்பாற்றும் பொருட்டு நான் ஓடி வந்தேன். வந்து சீக்கிரமா சிகிச்சை கொடுங்கஎன்று சொல்லி வேகமாக ஓடிச்சென்று போர்வையை விலக்க பேஷண்டின் முகத்தைப் பார்த்த கார்த்திபன் வெடிபட்ட உப்பு பாறையாய் சிதறி னான். காரணம் அங்கே அவன் பார்க்க வந்த பேஷன்ட் அவனது அப்பாதான் .முன் பின் தெரியாமலே தனக்கு அவர் அப்பா என்கிற உறவு முறை அறியாமலே உதவி செய்ய வந்த வடிவேல் எங்கே.. படித்த படிப்பிற்கு பலனைத் தேட விலை பேசிய தான் எங்கே என கேட்டு அவனது மனதராசுகள் மேலும் கிழுமாய் உயர்ந்து தாழ்ந்தது. வெகு நேரம் அவன் அது சமன்படவே இல்லை சட்டென வடிவேலின் கரங்களைப் பிடித்துக் கொண்டு நெஞ்ச தழுதழுத்த கண்கள் தழும்பிய மாற்றத்திற்கான காரணம் புரியாமல் தவித்தான் வடிவேல்...

    3. உயிர் வரம்

    இந்தக் கருவை கலைத்துவிடுங்கள்என்று இந்திரா சொன்னபோது.. ஏன்? என்று கேட்டாள் டாக்டர் ஜெயந்தி. அதையேதான் நானும் கேட்கிறேன் டாக்டர். ஆனால் பதில் சொல்ல மறுக்கிறாள். ஆனால்.. கருவை கலைக்க வேண்டும் என்கிறாள் என்றான் ராஜ். அவர்களுக்கு மனமாகி ஐந்து ஆண்டுகள் வரையில் குழந்தை ஏதும் பிறக்கவில்லை. எனவே அனாதை விடுதியில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர் .

    இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும் .இப்போது கரு உண்டாகி இருக்கிறாள்,இந்திரா. வளர்ப்பு குழந்தையின் மீது பாசமழை பொழிந்து வந்தாள் பெற்றோர் இல்லாத குறையை சிறிதும் தெரியாதபடி அவளை வளர்த்து வந்தனர்.

    அந்த குழந்தை வந்த நேரம் தான் தான் உண்டாகி இருப்பதாக அவள் நினைத்தாள் .இப்போது வயிற்றில் சுமக்கும் குழந்தை பிறந்து வளரும் போது தனது மனம் மாறி முழு

    Enjoying the preview?
    Page 1 of 1