Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poovukul Uyir Vaasam
Poovukul Uyir Vaasam
Poovukul Uyir Vaasam
Ebook112 pages41 minutes

Poovukul Uyir Vaasam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மண் மீது மழை தூறல் படும்போது வீசும் சுகந்த மணம்போல... இந்த நாவலின் பாத்திரங்கள், மணம் வீசுபவை. எந்த ஒரு மனிதனும் வெற்றிக்கு உரியவனே! தன் லட்சியத்திற்காக அடுக்கடுக்கான சோதனைகளை எதிர்கொள்ளும் இளைஞன் செவத்தான். அவனது கொள்கை போரில் பங்கு எடுத்துக் கொள்ளும் செம்பாவுக்கு அவன் மீது காதல் மலர்கிறது. துன்பங்கள் வந்தாலும் தொடர்ந்து வைத்தியம் செய்பவர் சின்னப்பன். ஒரே ஒரு தவறு செய்ததால்; செய்யாத தவறுக்கு சிறை தண்டனை தனக்குத்தானே ஏற்றுக் கொண்டவர் மேகமுத்து! சுத்தமான பாலை போன்றவள் முத்தம்மா. பூவான அவளுக்குள் உயிர் வாசம் செய்தபடி ரகசியப்பட்டு கிடக்கிறது ஒரு உறவு.

இந்த பாத்திரங்களின் கோர்வையில் நிஜம் அவிழும் போது முத்தம்மா என்ற அந்த பூவுக்குள் இவ்வளவு காலமும் வாசம் செய்தது இவள்தானா? என்ற நிஜம் அதிர்ச்சியை உண்டாக்கும். கதையின் துவக்கத்திலிருந்து மாடுகளும் பாத்திரங்களாகி; கதாபாத்திரங்களோடு இணைந்து கதையின் கடைசியில் உச்சபட்சமான ஒரு அதிர்ச்சியை அளிக்கிறது. மாடுகளுக்கும் ஆத்மார்த்தமான உணர்வுகள் பொங்கிப் பிரவகித்து பாசத்தை நுகர்கிற நறுமணம் வாசிப்போரும் நுகரத்தக்கது. செவத்தானும், செம்பாவும் சமுதாய வளர்ச்சிக்கான கொள்கையில் வெற்றி பெற்று நிமிர்ந்து நிற்பது எப்படி? என்பதுதான் பூவுக்குள் உயிர் வாசம் நாவல். வாசகர்களும் அந்த சுகந்தத்தை நுகருங்களேன்!

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580158809521
Poovukul Uyir Vaasam

Read more from V. Tamilalagan

Related to Poovukul Uyir Vaasam

Related ebooks

Reviews for Poovukul Uyir Vaasam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poovukul Uyir Vaasam - V. Tamilalagan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    பூவுக்குள் உயிர் வாசம்

    Poovukul Uyir Vaasam

    Author:

    வெ. தமிழழகன்

    V. Tamilalagan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-tamilalagan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15.

    அத்தியாயம் - 16.

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் - 1

    உலகம் விழித்துக் கொண்டது போல பறவைகள் ஆர்ப்பரித்தது.

    பூமிக்கும், பொழுதுக்கும் ஏற்பட்ட முதல் தழுவலை கண்டு அவை முனுமுனு க்கின்றதா?

    பேருந்தை விட்டு இறங்கி இயற்கையின் அழகில் பிரமித்து நின்ற அவனுக்கு அப்படித்தான் தோன்றியது.

    பார்வைக்கு எட்டிய தூரம் வரை பசுமை. அதன் நடுவே மலைப்பாம்பாய் நெளிந்து கிடந்தது செம்மண் பாதை.

    செவத்தான் திரும்பிப்பார்த்தான்.

    ஆணும் பெண்களுமாய் வந்து கொண்டிருந்தனர். முறுக்கிபோட்ட சும்மா ட்டுத்துணி தோளில் தொங்கியது. சுரைகுடுக்கையில் ஊற்றிய கஞ்சி இன்னொரு பக்கதோளில்.

    .நான் பட்டணத்திலிருந்து வரேன். சோலைமலை கிராமத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?

    அதோ ...தெரியுதே, அது தான் சோலை மலை கிராமம். நடையை எட்டிப் போட்டா நாலு நாழியில் போயிறலாம் .நாங்களும் அந்த கிராமத்து வழியா தான் போகணும் .எங்க கூட வாங்க என்றாள் செண்டு. வயது பெண்.

    அவன் அவர்களுடன் நடந்தான் . தோளில்ப்ரீப்கேசும் , கையில் சூட்கேஷும் கனத்தது.

    இந்த ஊருக்கு எதுக்காக அண்ணா வந்திருக்கிறீக? எனக் கேட்டால் செண்டு.

    நானும் உங்க மாதிரி கொஞ்ச நாளைக்கு ஒத்துழைத்து பார்க்கலாம்னு தான் இங்க வந்திருக்கேன்

    செவத்தான் சொல்ல செண்டு உட்பட அனைவரும் களுக்கிட்டு சிரித்தனர்.

    ஏன் சிரிக்கிறீங்க? சரி .ஒரே இடத்திலிருந்து செய்யுற மாதிரி உங்களுக்கு வேலை கொடுத்தா செய்வீங்களா?

    மொதல்ல வேலையை சொல்லு. செய்யலைன்னா ஏண்டா ன்னு கேளு..என்றார் முன்பு பேசிய பெரியவர்.

    நாளைக்கே ஏற்பாடு பண்ணுறேன் என்றான். எல்லார் பார்வையிலும் ஆச்சரியத்தை கலந்து விட்டு அவன் மீதுபதித்திருந்தனர். .என்ன செய்யப் போகிறான் ?என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை.

    செண்டு தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்பது போல பார்த்தான்.

    "அண்ணா! உங்க வார்த்தையிலே எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு. நான் கேட்க நினைத்த அர்த்தமே வேற. உழைத்து முன்னேற நும்னு நீங்க எடுத்த முடிவில் தப்பில்லை. ஆனா அந்த குறிக்கோளோடு இந்த கிராமத்துக்கா வரணும்? என்பதுதான் நான் படுற கவலை. என்றா ள் செண்டு.

    ஏன் அப்படி சொல்ற தங்கச்சி ?இந்த கிராமத்துக்கு என்ன? என்றான்.

    அதையெல்லாம் நீங்களே தெரிஞ்சுக்குவீங்கஎன்று சொல்லி புறப்பட செவத்தான் நடந்தான்

    வீட்டின் முன்நீள வெற்றிடம். தாழ்வாரத்தின் முன்பக்கம் ஒரு வயசான மாடு படுத்தபடி இருந்தது.

    அதற்கு சோளத்தட்டை மடித்து கொடுத்துக்கொண்டிருந்த சின்னப்பன் தாத்தா திரும்பினார்.

    தன் ஒடுங்கிப்போன கண்களால் அவனை அடையாளம் கண்டு கொண்டு, செத்தான்! என தழுதழுத்தார். அவனை சிறுவயது முதல் வளர்த்தவர். ஆனாலும் வாலிப வயது திரும்பும் வரையில் பட்டணத்திலேயே பாதி நாட்களை கழித்துவிட்டான்.

    நீண்ட இடைவெளியில் அவனைப் பார்த்து ஏதோ கேட்க எத்தனித்தபோது,

    தூரத்தே கூக்குரல் கேட்டது .அவலமான மனிதர்களின் கூட்டு குரல்கள்.

    சரேலென பாய்ந்து ஓடினான். பார்த்தான்.

    நான்கைந்து மாடுகள் படையாய் ஓடி வந்தன. மூர்க்கமாய் முட்டித் தள்ளியது. மாட்டு வண்டி ஒன்று மலைச்சரிவில் விழுந்து அதிலிருந்த வண்டி ஓட்டி ஒரு பொம்மையைப் போல் மிதந்து பாதாளத்தில் விழுந்தான்.

    மரத்தை முட்டி சாய்த்தது.

    ஒரு குழந்தையை மிதித்து கூழாக்கி விட்டு வெறித்தனமாய் ஓடி வந்தது.

    வயதான மூதாட்டி ஒருத்தி தடியூன்றி நடந்து வர, அவளை முட்டித் தூக்கி எறியும் ஆக்ரோஷத்தோடு அந்த கொழுத்த காளைகள் ஓடிவந்தன.

    நிமிஷ நேரம் தான் இடைவெளி.

    பெரிய மரக்கட்டை ஒன்று. தூக்கி ஆ...என குரலெழுப்பி தன் பலத்தை எல்லாம் ஒன்று சேர்த்து அதன் முகத்தில் கிடீரென இறக்கினான்.

    "ம்... ஆ.... என அலறியபடி தள்ளாடி கீழே விழுந்தது. மாட்டின் மண்டையிலிருந்து ரத்தம் சொட்டச்சொட்ட மீண்டும் எழுந்து அவனை வன்மமாய் வெறித்து விட்டு ஓட ,மற்ற மாடுகளும் மாயமாய் மறைந்தன.

    அடுத்த கணமே அவனை அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.

    தம்பி! விவரம் தெரியாம இப்படி மாட்டை அடித்து விட்டியேப்பா.. நீ உசுரு பொழைக்கணும்னா இந்த ஊரை விட்டு ஓடிப் போயிரு..என அச்சத்துடன் சொல்ல, செவத்தான் திடுக்கிட்டான்.

    அதே சமயம்,

    மாட்டை அடித்த செய்தி கேள்விப்பட்டு தானே அடிபட்டது போல் கர்ஜித்து துப்பாக்கியை எடுத்தான் பனங்காயன்.

    அத்தியாயம் - 2

    எங்க எல்லாருக்கும் ஒரே இடத்துல செய்யற மாதிரி வேலை தரேன்னியே, தம்பி! என்னப்பா வேலை ?" என கேட்டனர்.

    அதை சொல்லத்தான் உங்களை எதிர் பார்த்திட்டு இருந்தேன். தங்கச்சி, மசக்காளி தாத்தா எல்லாரும் இப்படி வாங்க.இந்த கிராமத்தில சொந்தமாக செங்கல் சூலை வைக்கலாம்னு இருக்கேன். அதுக்கு. நாமதான் முதலாளிகள்என்றான் செவத்தான்.

    ஈரல் துண்டுகளாய் செம்மண் பூமி. வயல்

    Enjoying the preview?
    Page 1 of 1