Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Unnodu
Uyir Unnodu
Uyir Unnodu
Ebook92 pages30 minutes

Uyir Unnodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466817
Uyir Unnodu

Read more from N.C.Mohandass

Related to Uyir Unnodu

Related ebooks

Related categories

Reviews for Uyir Unnodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Unnodu - N.C.Mohandass

    1

    அந்த இடம் விஸ்தாரமாயிருந்தது. கண்ணுக்கெட்டுகிறவரை பூமியை வளைத்துப் போட்டு சுற்றிலும் முள்வேலி கைகோர்த்திருந்தது.

    நடுவில் கான்க்ரீட் தூண்கள் அங்கங்கே குத்திட்டு நின்றிருந்தன. அவற்றுக்கிடையே சிமெண்ட்! மணல்! ஜல்லி குவியல்கள்! அஸ்திவாரத்திலிருந்து டீசல் என்ஜின் தண்ணீரை கக்கி வெளியே துப்பிக் கொண்டிருந்தது.

    சித்தாள்கள் தலையில் சிம்மாட்டுடனும், சிமெண்ட்டுடனும் கலவை சுமந்துக் கொண்டிருக்க, வெற்றிலையும் குடையுமாயிருந்த ராமன் மேஸ்திரி, சீக்கிரம்! சீக்கிரம் அகட்டும்! என்று விரட்டினார்.

    பிஸ்கட் கம்பெணி - இன்னும் ரெண்டு மாசத்துல ஆரம்பிச்சாகணுமாம்! முதலாளி ஜனார்தனம் அவசரப்படுத்தறார். ஏமாற்றாமல் மளமளன்னு வேலையை பாருங்கள்!

    அந்த மேஸ்திரிக்கு நாற்பது வயதிருக்கலாம். கதர்சட்டை! தலையில் அங்கங்கே வெள்ளை ரேகை! வாய் காவி பூசியிருந்தது. கக்கத்தில் குடை ஒண்டியிருந்தது. வழக்கத்திற்கு மாறாக குட்டையாயில்லாத நடுவிரலில் மோதிரம் மின்னிற்று.

    "இன்னுமா டிபன் ரெடியாகலே...?"

    தலை சீவிக்கொண்டு, கதர்சட்டையில் பட்டன் போட்டபடியிருந்த ஜனார்தனன் சமையல்கட்டை நோக்கி கத்தினார்.

    காமாட்சி சூடான இட்லியையும் வடைகளையும் டைனிங் டேபிளில் வைத்தபடி இதோ ஆச்சுங்க! என்று குரல் கொடுத்துவிட்டு சட்னி மட்டும் தாளிச்சா போதும்!

    ஜனார்தனத்திற்கு கட்டை மீசை. ஐம்பது வயதிற்கான மிடுக்கு. கரகர குரல். அவர் அவசரமாய் இட்லியைக் காலி பண்ணி, காபி கல! பில்டிங்கை பார்க்கப் போகணும்! என்று கை கழுவினார். அடுத்த மாதத்தில் மந்திரி ஒரு தேதி தரேன்னிருக்கார். அதுக்குள்ளே வேலையை முடிக்கணும். நான் போனால்தான் வேலை நடக்கும்!

    ஊரிலிருந்து ரத்னா வரேன்னு போன் பண்ணியிருந்தாளே. நீங்க ஸ்டேஷனுக்கு போக வேணாமா?

    எல்லாத்துக்கும் நான் தானா?

    மகளை கூட்டிவரதுக்குக் கூடக் கணக்குப் பார்த்தால் எப்படியாம்?

    கணக்கு பார்க்கலடி. டென்ஷன். சடையனை வேணுமானால் அனுப்பு!

    சடையனா... அவனோட வேலையை அவன் ஒழுங்கா செஞ்சா பத்தலையா? உங்கப்பாவை குளிப்பாட்டி அவருக்கு ஆகாரம் கொடுக்கவே அவனுக்கு நேரம் போதலை.

    அந்த சமயம் அறை ஒன்றிலிருந்து இருமும் சப்தம் கேட்டது. தொடர்ந்து, கணேசா... வேலா என்று முனகல்.

    போச்சு! பினாத்த ஆரம்பிச்சுட்டாரா... இவரோட பெரிய உபத்திரவம்! ஜனார்தனம் சலித்துக் கொண்டார். காலா காலத்துல போய் சேராமல் என் உயிரை எடுக்கறார்!

    காமாட்சி அவரது வாயைப் பொத்தி, மெல்ல பேசுங்க. காதுல விழப் போகுது. பாவம்! நாட்களை எண்ணிகிட்டிருக்கார்!

    ஆமாம்! எண்ண ஆரம்பிச்சு எத்தனை வருஷமாச்சு! என்று அவர் காபி கப்பை வைத்துவிட்டு செருப்பை மாட்டினபோது, ஜனா... ஏய் ஜனா! என முனகல்.

    உங்களைத்தான் கூப்பிடறார்!

    அவருக்கு வேறு வேலையில்லை! நான் போயிட்டேன்னு சொல்லு போ!

    அவர் போனதும் காமாட்சி, தன் ஈர கூந்தலை முடிந்தபடி மாமனார் கிடந்த அறைக்குள் பிரவேசித்தாள்.

    அங்கே ராஜநாயகம் கயிற்றுக்கட்டிலில் அன்னாந்து படுத்திருந்தார். அவரது கண்கள் லேசாக திறந்து திறந்து மூடிற்று. பெருமூச்சில் மார்பு எம்பி எம்பி தாழ்ந்தது. அறை முழுக்க மூத்திர கவிச்சை.

    அவருக்கு சரியாய் பேச்சு வராது. எழ முடியாது. பார்வையும் மட்டு. எல்லாமே படுக்கையில்தான்.

    எண்பது வயதிற்கு மேல் வாழ்ந்தால் இதுதான் பிரச்சினை. காலாகாலத்தில் போய் சேர்ந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இப்படி அனுபவிக்க வேண்டியதுதான்.

    காமாட்சி, மாமா... என உரக்க கூவினாள்.

    யாரு... காமாட்சியா... ஜனா இல்லே...?

    என்ன வேணும்?

    எழுந்து உட்காரணும் போலிருக்கு!

    இதோ சடையனை வரசொல்றேன்!

    சொல்லிவிட்டு தொழுவத்தின் பக்கம் நடந்தாள். வீட்டின் பின் பகுதியில் பெரிதாய் தாழ்வாரம் போடப்பட்டு மாடுகள் நவீன முறையில் உண்டு கொழுத்திருந்தன.

    அது பால்பண்ணை. சடையன் தான் அவற்றை பராமரித்து வந்தான். அவனுக்கு முப்பது முப்பத்தைந்து வயதிருக்கலாம். அப்போது தலையில் சிகப்பு துண்டை பெல்ட் போல கட்டி, பசு ஒன்றிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தான். வெளியே பால் கேன்கள் வரிசை பிடித்திருந்தன. கன்றுகுட்டிகள் கயிற்றை முறுக்கிக்கொண்டு நின்றிருந்தன.

    சடையா!

    என்னங்கம்மா? என்று திரும்பினான்.

    பெரியவர் கூப்பிடறார்!

    இன்னும் ரெண்டு மாடு பாக்கிம்மா. முடிச்சிட்டு...

    அதை அப்புறம் பார்த்துக்கலாம். முதலில் அவரை போய் கவனி!

    சடையன் பாலை கேனில் ஊற்றிவிட்டு கையை துடைத்துக்கொண்டு ராஜநாயகத்தை பார்க்கப் போனான்.

    அவரது அறையை சுத்தப்படுத்தினான். பெரியவரை தூக்கிப் போய் குளிப்பாட்டி வேறு உடை! திரும்ப படுக்க வைத்து கஞ்சி ஊட்டப் போனபோது அவர் தழும்பி தழும்பி அழ ஆரம்பித்தார்.

    "சடையா! நான்... நா

    Enjoying the preview?
    Page 1 of 1