Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஆசை ஊஞ்சலில்...
ஆசை ஊஞ்சலில்...
ஆசை ஊஞ்சலில்...
Ebook57 pages20 minutes

ஆசை ஊஞ்சலில்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எதிரே வந்து நின்ற அபியை உணர்ந்து தலையை உயர்த்தினார் மார்க்கபந்து.
 "உட்காரம்மா!"
 'நாக்கில் தேனைத் தடவிக் கொண்டிருக்கும் நச்சுப் பாம்பு' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவள். "காளிதாஸைக் கல்யாணம் செஞ்சுக்க எனக்கு பூரண சம்மதம் டாடி!"
 "குட். இதை நீ அப்பவே சொல்லியிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன். நடக்கப்போறது எனனவோ அதுதான். ஆனாலும் உன் சம்மதத்தோட நடந்தா இன்னும் உசத்தி. இதப்பாரமமா கழுத்துல தாலி ஏறி, ராத்திரி அவனோட ஸ்பரிசத்துல... ஸாரி ஒரு தகப்பன் மகள்கிட்ட பேசக்கூடாது தான். ஆனாலும் வழியில்லை... உன்னை நீ மறந்தா, கைலாஷாவது மண்ணாவது எந்தக் காதலும் நிலைக்காதம்மா!"
 பல்லைக் கடித்தாள் அபி,
 "காளிதாஸ் இன்னிக்கு உன்னைப் பார்க்க வர்றான். உன் அலங்காரம் அவனை அசத்தணும். உங்கம்மாவை நான் பார்க்கப் போனப்ப இப்படித்தான்... டிபன் சாப்பட்டு கை கழுவ பாத்ரூம் வந்தப்ப, செம்புல தண்ணி எடுத்துட்டு பின்னால வந்தா. சட்டுனு இறுக்கி, முத்தம் கொடுத்துட்டேன். முதல் முத்தம்!" லஜ்ஜையில்மாமல் மார்க்கபந்து சிரிக்க.
 அபி விலகினான் அங்கிருந்து. தன் அறைக்கு வந்தாள்.
 'அலங்காரமாம் அலங்காரம் கல்யாணம்தானே உன் சவால் காளிதாஸ் சமூக அந்தஸ்த்தும், கான்வென்ட் ஆங்கிலமும் பேசுபவன். அதனால் உன் மாப்பிள்ளை! லட்சக்கணக்கில் பேங்க் பலன்ஸ். அதனால் உன் மகளைப் பணயம் வைக்கிறாய். கௌரவம் அதுதானே உன் சுவாசம்? உன் சுவாசத்தைப் பறித்து, உன்னைப் பிணமாக்குகிறேன் வா!' பல்லைக் கடித்தாள் அபிராமிவெகுநேரம் படுத்திருந்தவள்.
 மார்க்கபந்துவின் குரல் கேட்டு, தலையை உயர்த்தினாள்.
 "நீ இன்னும் ட்ரஸ் பண்ணிக்கல? காளிதாஸ் புறப்பட்டாச்சு இப்பத்தான் போன் வந்தது. என்ன அபி இது? பொறுப்பு இல்லையா உனக்கு? இல்லை, உன் எதிப்பை மறைமுகமா காட்டறிபா? நான்சென்ஸ்!" அடிக்குரலில் உறுமிவிட்டு விலக.
 வேண்டா வெறுப்பாக முகம் கழுவிக் கொண்டாள்.
 தலைவாரி, தளரப் பின்னலிட்டுக் கொண்டாள். லேசாக பவுடர் பூசி, சின்னதாகப் பொட்டு. கைத்தறிச் சேலை ஒன்றைத் தேர்ந்தெடுத்து வேண்டுமென்றே கட்டிக் கொண்டாள்.
 வாசலில் கார் நிற்கும் சப்தம் கேட்டது...
 ஒரு ஆர்வத்தில், ஜன்னலை அணுகி எட்டிப் பார்த்தாள். காளிதாஸ் இறங்கிக் கொண்டிருந்தான். பின்னால் டிரைவர். அவன் கையில் பெரிய சூட்கேஸ் ஒன்று இருந்தது. சாம்பல நிறி சபாரியில் அழகாகத்தான் இருந்தான் காளிதாஸ். ஒரு நொடி அச்சமாக இருந்தது அபிராமிக்கு.
 'தகப்பனும். மகளும் நடத்தும் அகங்கார யுத்தத்தில் நீ பலியாகப் போகிறாயா இளைஞனே' நோ. பாவப்படக் கூடாது. சற்று ஈரம் கசிந்தாலும், டாடி ஜெயித்து விடுவார். அனுமதிக்க கூடாது...
 பத்தாவது நிமிடம் டாடி வந்தார். இவளைப் பார்த்தார்.
 "பட்டுப்புடவை, நகை எதுவுவே உங்கிட்ட இல்லையா அபி?" குரலில் சீற்றம் இருந்தது.
 "காளிதாஸுக்கு மனைவியாக சம்மதம்! புடவைகூட உங்களைக் கேட்டு நான் கட்டனுமா டாடீ? மிஸஸ் காளிதாஸ் ஆயிட்டா. என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடற அதிகாரம் கூட உங்களுக்கு இல்லை. மைண்ட் யூ"
 மார்க்கபந்து ஒரு நொடி தடுமாறிப் போனார்.
 "சரி உன் இஷ்டம். வா."
 கீழே வந்தாள்அவளைப் பார்த்ததும். ஒரு வசீகர உந்துதலில் தன்னை மறந்து எழுந்து நின்று விட்டான் காளிதாஸ்.
 "ஹலோ" என்றாள் சன்னமான குரலில். உதட்டில் மெல்லிய சிரிப்பை சேர்த்திருந்தாள்.
 "உட்காருங்க மிஸ் அபிராமி" சொல்லிவிட்டு விழிகள் எடுக்காமல் பார்த்தான். மார்க்காந்து தொண்டையை ஒரு முறை செருமிக் கொள்ள, கலைந்தான் காளிதாஸ்.
 "பட்டுகட்டி நகை மூட்டையா வந்து போலியா நமஸ்காரம் பண்ணி... எதையும் செய்யல உங்க டாட்டர் இந்த எளிமை எனக்குப் பிடிச்சிருக்க, அவங்க சம்மதம் முக்கியம் அது பாசிட்டிவா இருந்தா எப்ப முகூர்த்தம்னு நீங்க சொல்லலாம் சார்"
 "எனக்கு சம்மதம் டாடி!" நறுக்கென்று மூன்றே வார்த்தைகள். வேண்டாத வெட்கமோ. தருவித்து கொண்ட இல்லாத யதார்த்தமான பெண். இன்னும் உயத்தில் போய் அவள் நின்றதை உணர்ந்தான் காளிதாஸ்.
 "நாங்க கொஞ்சம் தனியா பேச அனுமதியுண்டா சார்?"
 "யை ஆல் மீன்ஸ்" கையை விரித்து விட்டு, உள் நோக்கி நடந்தார் மார்க்கபந்து

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223791379
ஆசை ஊஞ்சலில்...

Read more from Devibala

Related to ஆசை ஊஞ்சலில்...

Related ebooks

Related categories

Reviews for ஆசை ஊஞ்சலில்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஆசை ஊஞ்சலில்... - Devibala

    1

    போட்டோவை நீட்டினார் அப்பா.

    யாரு டாடி இது? கண்களை அகட்டிக்கொண்டு கேட்டாள் அபிராமி.

    பிடிச்சிருக்கா உனக்கு?

    எனக்கு எதுக்குப் பிடிக்கணும்?

    கேள்விக்கு பதில். நல்லாயிருக்கானா?

    போட்டோவில் இருந்த அவளைப் பார்த்தாள் அபிராமி. நல்ல கோதுமை நிறத்தில் அகல நெற்றியும், சுருண்ட கேசமுமாக ஜெமினிகனேசன் மீசை வைத்து, சவந்த உதடுகளோடு வசீகரமாக இருந்தான் அந்த இளைஞன்.

    ‘அசப்பல டிவி ராமாயண லட்சுமணன் மாதிரி இருக்கு முக ஜாடை. யார் இவர்?’

    பேரு காளிதாஸ். சமீபத்துல செத்துப்போன தொழிலதிபர் சங்கரதாஸோட ஒரே பிள்ளை. தற்சமயம் தனி. சொத்துக்கள் லட்சங்கள்ள. வயசு 28. படிப்பு ஏதோ ஒரு டிகிரி. அப்பாவிப் பையன். ஆனா பிஸினஸ்ல சூரன்.

    எனக்கெதுக்கு இவளோ விவரம் டாடி?

    பிகாஸ் நீ காளிதாசுக்கு மனைவியாகப் போறதினால,

    டாடி, விளையாடறீங்களா?

    இல்லம்மா அபி. நிஜம் தான் பேசறேன்!

    டாடி என் விருப்பம் என்னன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

    உனக்கு வயசு 23. உன்வயசுக்கு தேர்ந்தேடுக்கற தகுதி இன்னும் பூரணமா வரலை. வீட்ல ஐஸ்க்ரீம் செஞ்சு தந்தாலும் வண்டில தள்ளிட்டுப்போற குச்சி ஐஸ்க்ரீமைக் கேக்கற குழந்தை மாதிரி நீ, பெத்தவன் அனுமதிக்க கூடாது. எது நல்லதுன்னு அனுபவம் சொல்லும். எப்ப பெண் பார்க்க வரச் சொல்லட்டும் கானிதாஸை?

    நோ. நான் சம்மதிக்க மாட்டேன் இதுக்கு!

    உன் சம்மதம் எனக்கு அவசியமில்லை!

    டாடி இது வயலன்ஸ். நான் மேஜர். வயசுக்கு வந்த பெண். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கற பக்குவம் வந்து வருஷம் நாலாசசு. வாழப்போறது நான், உங்க வார்த்தைகள் இல்லை!

    அபி

    யெஸ் டாடி. நான் காளிதாஸை விரும்பலை!

    பட் எந்த தகுதியும் இல்லாத கைலாஷ் மட்டும் உனக்குத் துணையா வரலாமா? சொல்லுமா?

    டாடீ?

    எனக்கு எல்லாம் தெரியும் மை டியர் யங் லேடீ. ஒரு தகப்பனா இருந்து பல் குத்திட்டு உட்கார நானில்லை ஆள். நீ கைலாஷை தீவிரமா லவ் பண்றது எனக்குத் தெரியும்

    தெரிஞ்சும் ஏன் டாடி?

    அவனோட அந்தஸ்த்தை நான் பெரிசா நினைக்கலை. பட் காலம் முழுக்க உன்னை சந்தோஷமா வெச்சுக்க, இன்னும் அவன் உயரணும். அதுக்கு ஏழெட்டு வருஷங்கள் குறையாம ஆகும், ப்ரொவைடட் அவனுக்கு கடுமையான உழைப்பிருந்தா; அது அவன்கிட்ட இருக்காது. மற

    நோ சட்டையை மாத்திக்கற மாதிரி ஒரு பெண்ணால மனசை மாத்திக்க முடியாது

    குட். டயலாக் நல்லாருக்கு. குறிச்சு வச்சுக்கறேன்.

    டாடி நான் விளையாடலை, நான் கல்யாணம் செஞ்சுகிட்டா, அந்த கைலாஷ் கூடத்தான்

    சேலன்ச் பண்றியா அபி? உங்கப்பன் யாருனு உனக்குத் தெரியாதா? காளிதாஸை வச்சு உன் கழுத்துல தாலிகட்ட வைக்கிறேன்

    அய்யோ டாடி! உங்க சவாலும், போர் குணமும். பரிசோதனைக்கு இலக்காற இடம் என் வாழ்க்கையில்லை. ஞாபகம் இருக்கட்டும்

    "அட்ப நான் சொல்லறதைக்

    Enjoying the preview?
    Page 1 of 1