Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பட்டு வண்ண ரோஜா!
பட்டு வண்ண ரோஜா!
பட்டு வண்ண ரோஜா!
Ebook86 pages1 hour

பட்டு வண்ண ரோஜா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாரங்கன், நடராஜன்-கோமளாவுக்கு ஒரே மகன்!

நடராஜன் மாநில அரசில் பணி புரியும் ஒரு மிடில் க்ளாஸ் ஊழியர்! கஷ்டப்பட்டுத்தான் சாரங்கனை படிக்க வைத்தார்! லோன் வாங்கி, ஆயிரம் சதுரஅடியில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் ஒரு வீடு! அதுகூட சாரங்கன் பிறந்து, ஆறு வருஷங்களுக்கு பிறகு கட்டிய வீடு! 

இன்னும் அதன் லோன் பாக்கி இருக்கிறது! நடராஜனுக்கு இரண்டு சகோதரிகள்! அவர்களது  கல்யாணக் கடன் வேறு! 

தாய்-தகப்பனார் பராமரிப்பு, அவர்கள் காலமாகி மூன்று வருஷங்கள்! சாரங்கன் என்ஜினியரிங் படிக்க, பேங்கில் கடன்! இப்படி ஒரு சம்பளத்தில் சகல கடன்களையும் வாங்கி, மிடில் க்ளாசில் முதுகு வளைந்து போன சராசரி மனிதர் நடராஜன்! 

சாரங்கன் அதிபுத்திசாலி! என்ஜினியரிங் படிப்பை முடிக்கும் முன்பே, அவனது திறன்களை தேடி எடுத்து, மந்திரா க்ரூப், நேர் முகத்துக்கு அழைத்துவிட்டது! எட்டு சுற்றுகளிலும் பிரமாதமாக செய்து வேலையை வாங்கி விட்டான்! 

எடுத்த எடுப்பில் அறுபதாயிரம் சம்பளம்! ஆறே மாதத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு! அங்கு மூன்று வருஷ பயிற்சி முடித்து திரும்பினான்! அங்கே பெரிய சம்பளம்! அதை விள்ளாமல் விரியாமல் அப்பாவுக்கு அனுப்பி, அவரது சகல கடன்களையும் அடைத்து, கொஞ்சம் சேமிப்பும் செய்யும் நிலைக்கு குடும்பத்தை கொண்டு வந்து விட்டான்! 

ஒரே மகனாக இருந்தாலும் அவனைப் பெற்றதற்காக நடராஜன், கோமளா பெருமைப்படாத நாளே இல்லை! மூன்று வருஷங்களில் இவர்களும், மூன்று மாதங்கள் லண்டனுக்குப் போய் மகனுடன் இருந்து விட்டுவரும் வாய்ப்பு கிடைத்தது! அதனால் கோமளாவை கையில் பிடிக்க முடியவில்லை! 

இங்கே நிரந்தரமாக சாரங்கன் திரும்ப, பெரிய புதிய யூனிட்டுக்கு அவனை தலைமைப் பொறுப்பேற்க வைத்தார் சேர்மன் மந்திரமூர்த்தி! இங்கே அவனது மாச சம்பளம் மூன்று லட்சம், தவிர கார், மற்ற வசதிகளையும் கம்பெனி ஏற்றுக் கொண்டது! இரண்டே மாதங்களில் வீட்டுக்குத் தேவையான அத்தனை நவீனப் பொருட்களையும் வாங்கி விட்டான்! அம்மாவை அழைத்துப் போய் நகைகள்! 

"எனக்கு எதுக்குடா நகைகள்?" 

"உங்கிட்டஇருந்த சொற்ப நகைகளையும் குடும்பச் செலவுக்காக வித்து, வெறும் மஞ்சள் கயிறைத்தானே நீ கட்டியிருந்தே? இப்ப உனக்குப் புடிச்ச நகைகளை வாங்கிக்கோம்மா!" 

கோமளா அழுது விட்டாள்! 

"அப்பா! இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு பெரிசா ஒரு வீடு வாங்கலாம்!" 

"நீ என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் சாரங்கா!" 

அந்த வீட்டில் அவன் வைத்ததுதான் சட்டம்! ஆனால் அப்பா, அம்மா பேச்சை மீறி இன்றளவும் ஒன்றைக் கூட செய்ய மாட்டான்! 

இவர்களைத் தாண்டி இன்னொரு ஜீவன் அந்த வீட்டில் உண்டு! அதுதான் அட்சயா! யாரது? 

கோமளாவின் அண்ணன் மகள்! அட்சயா பிறந்த அடுத்த வருஷமே, அண்ணனும் அண்ணியும் ஒரு விபத்தில் காலமாக, அட்சயாவை பேசாத உறவுகள் பாக்கி இல்லை! 

அவள் பிறந்த நேரம், அவளது நட்சத்திரம், ஜாதகம் என சகலமும் ஒரு கூட்டம் அலசி, அவளை வறுத்துக்  கொட்டி, ஒரு வயதுப் பெண் குழந்தையை நெஞ்சில் ஈரமில்லாமல் அனைவரும் விமர்சிக்க, கோமளாவுக்கு மனசு உடைந்து போனது! 

"எல்லாரும் பேசினது போதும்! அட்சயா இனிமே எங்க குழந்தை! அவளை தயவு பண்ணி யாரும் பேச வேண்டாம்!" 

கையோடு கோமளா, நடராஜன் அட்சயாவை அழைத்து வர, இங்கே புயல் வீசத் தொடங்கியது! நடராஜனின் அம்மாவும், சகோதரிகளும் தன் வேலையைக் காட்டினார்கள்! 

"எதுக்கு இந்தக் குழந்தையை நீங்க கூட்டிட்டு வந்தீங்க நடராஜா? ஒரு குழந்தை, சாரங்கன் போதும்னு சொன்னீங்க! அதுவும் ஆண் குழந்தை! பிரச்சினையில்லை! இப்ப பெண் குழந்தையை தூக்கிட்டு வந்து பாரத்தை ஏத்திக்கணுமா?" 

"என்ன பாரம்மா? அட்சயா, தாய் தகப்பனை இழந்து நிக்கற குழந்தை!" 

"சொல்றேன்னு நீ கோவப்படாதே! அதோட ராசி மோசமா இருக்கு! அது உங்களையும் தாக்கக்கூடாதுன்னு விரும்பறேன்!" 

"அம்மா! இதுவே நம்ம பக்கத்து குழந்தைனா, நீ இப்படிப் பேசுவியா? கொஞ்சம் மனசாட்சியோட பேசும்மா!" 

"என்னடா? யாரோ ஒரு குழந்தைக்காக, பெத்தவளை தூக்கி வீசப் போறியா?" 

"அப்படி எதுவும் யாரும் செய்யப்போறதில்லை! நானும் மனுஷன்தான்! ஆனா அட்சயா எங்ககிட்டத்தான் வளரப் போறா!" 

உள்ளே வந்து கோமளா, கண்ணீருடன் நன்றி சொன்னாள்! 

Languageதமிழ்
Release dateFeb 26, 2024
ISBN9798224012954
பட்டு வண்ண ரோஜா!

Read more from Devibala

Related to பட்டு வண்ண ரோஜா!

Related ebooks

Reviews for பட்டு வண்ண ரோஜா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பட்டு வண்ண ரோஜா! - Devibala

    1

    வீ ட்டு வாசலில் பெரிய கார் வந்து நிற்க, கோமளா, யார் என்ற ஆர்வத்துடன் எட்டி பார்க்க, அவர்கள் வீட்டு படியேறி, ஒரு மத்திய வயதை கடந்த ஜோடி உள்ளே வர, கோமளாவுக்கு, குழப்பமாக இருந்தது!

    என்னங்க! யாரோ நம்ம வீட்டுக்கு வர்றாங்க! உங்களுக்குத் தெரிஞ்சவங்களா? பாருங்க!

    அவள் கணவன் நடராஜன் முகத்தை துடைத்துக் கொண்டு, வெளியே வந்தார்! இவர்கள் படியேறிவந்து விட்டார்கள்!

    யாருங்க?

    சாரங்கன் வீடு இதுதானே?

    ஆமாம்!

    நீங்க ரெண்டு பேரும் சாரங்கனோட அப்பா, அம்மாவா?

    ஆமாம்!

    அப்ப நாங்க, சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கோம்! டிரைவர் எல்லாத்தையும் எடுத்துட்டு உள்ளே கொண்டு வந்து வை!

    சீருடை போட்ட டிரைவர், வரிசையாக பழங்கள், இனிப்புகள், பலகாரங்கள், இன்னும் மூடி வைத்த பார்சல்கள் என ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டையே பரப்பினான் கூடத்தில்! அவன் காருக்கு போக,

    மன்னிக்கணும்! நீங்க யாருன்னு இன்னும் சொல்லலை! எதுக்காக இத்தனை பொருட்களை, சீர் வரிசை மாதிரி கொண்டு வந்து எங்க வீட்டுக் கூடத்துல பரப்பறீங்க? எனக்கு உங்களை யாருன்னே தெரியலை!

    சொல்றேன்! சொல்லத்தானே வந்திருக்கோம்! என் பேரு மந்திரமூர்த்தி! இது என் மனைவி கனகவல்லி! மந்திரா க்ரூப் கம்பெனியோட சேர்மன் நான்!

    படக்கென எழுந்து விட்டார் நடராஜன்!

    அவர் முகத்தில் ஒரு அச்சம் பரவியது!

    யாருங்க இவங்க?

    நம்ம சாரங்கன் வேலை பாக்கற, மல்ட்டி நேஷனல் கம்பெனியோட சேர்மன்!

    கோமளா கலவரமாகப் பார்த்தாள்!

    ரெண்டு பேரும் உக்காருங்க! எதுக்கு பதட்டம்? நாங்க நல்ல விஷயமாத்தான் வந்திருக்கோம்! நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை! புரியுதா? உக்காருங்க!

    நீங்க விஷயத்தை சொல்லுங்க!

    நான் நேராவே விஷயத்துக்கு வர்றேன்! உங்க மகன் சாரங்களை, எங்க மாப்பிள்ளை ஆக்கிக்க நாங்க முடிவு செஞ்சிருக்கோம்! எங்க ஒரே மகளான இனியாவை, சாரங்கன் கல்யாணம் செஞ்சுக்கணும்! அதுக்கு உங்ககிட்ட பேசத்தான் நாங்க வந்திருக்கோம்!

    நடராஜன் முகம் மாறிவிட்டது!

    சாரங்கன் இதைப்பற்றி இது வரைக்கும் எங்ககிட்ட சொல்லவேயில்லையே?

    தெரிஞ்சாத்தானே சொல்லுவார்? அவருக்கே நாங்க உங்களைப் பார்க்க வர்றது தெரியாது!

    நடராஜன் அதிர்ச்சியானார்!

    அவன் உங்க மாப்ளை ஆகணும்னு சொல்றீங்க! ஆனா இது அவனுக்கே தெரியாதுனு சொல்றீங்க? இதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு புரியலை! நீங்க அவன் வேலை பாக்கற கம்பெனிக்கே சேர்மன்! அவனுக்கு சம்பளம் தர்ற முதலாளி! எனக்கு குழப்பமா இருக்கு!

    குழப்பமே வேண்டாம்! உங்க மகனுக்கு சொர்க்கத்தை காட்டத்தான் நாங்க வந்திருக்கோம்! நீங்க பயப்படவே வேண்டாம்! இது காதல் கல்யாணம் இல்லை! பெரியவங்க நாம், முறையா பேசி, அழகா நடத்தி வைக்கப் போற கல்யாணம்! நாங்க எந்த முடிவை எடுத்தாலும் பெரியவங்க சம்மதம் இல்லாம செய்ய மாட்டோம்! அதனால் எல்லாம் சரியா நடக்கும்! உங்க மகன் சாரங்கன்தான் எங்க மாப்பிள்ளை! இதை தெரிவிக்கத்தான் வந்தோம்! சம்பந்தம் பேச வரும் போது முறையோடதான் வரணும்னு இதெல்லாம் கொண்டுவந்திருக்கோம்! எடுத்து உள்ளே வைங்க! நாங்க வர்றோம்!

    அவர்கள் எழுந்து விட்டார்கள்!

    மன்னிக்கணும்! ஒரு நிமிஷம் காத்திருங்க! நானும், என் மனைவியும் பேசணும்! கோமளா உள்ளே வா!

    நடராஜன், அவளை உள்ளே அழைத்து வந்தார்!

    என்னம்மா இது? நம்ம பையனுக்கே தெரியாதாம், அவன் இவங்க மாப்பிள்ளை ஆகப் போறது? இவங்க என்ன லூசா? இதையெல்லாம் நாம ஏத்துக்கிட்டா, நமக்கும் சம்மதம்னு ஆகாதா?

    அதனால? கொண்டு வந்ததை திருப்பி எடுத்துட்டுபோங்கனு சொல்லப் போறீங்களா?

    அதுதான்மா எனக்கும் புரியலை!

    அது அவங்களை அவமானப்படுத்தற மாதிரி ஆயிடும்! நம்ம பையன் வேலை பாக்கற கம்பெனியோட சேர்மன்! முதலாளி! அகில இந்திய அளவுல பெரிய ஆள்! நம்ம சொல்லால, செயலால, நம்ம சாரங்கனுக்கு, ஒரு சிக்கல் வந்துடக் கூடாதில்லையா? அவசரப்படாதீங்க! பொருட்களை அனுமதிச்ச காரணமா எல்லாத்துக்கும் நமக்கு சம்மதம்னு அர்த்தம் இல்லீங்க! விட்ருங்க! அவங்க போகட்டும்! மரியாதையா அனுப்பி வைப்போம்! சாரங்கன் வந்த பிறகு பேசலாம்!

    அதுவும் சரிதான்! வா!

    இருவரும் வெளியே வந்தார்கள்!

    சாரங்கன் சாயங்காலம் வரட்டும்! அவன்கிட்ட நாங்க சொல்றோம்!

    உங்க பிள்ளை, நாங்க கிழிச்சகோட்டை தாண்ட மாட்டார்!

    அதில் பணக்கார திமிரும், அகங்காரமும் தூக்கலாக இருந்தது!

    காரில் புறப்பட்டார்கள்!

    இவர்கள் முகத்தில் கலக்கம் படர்ந்தது!

    2

    சாரங்கன், நடராஜன்-கோமளாவுக்கு ஒரே மகன்!

    நடராஜன் மாநில அரசில் பணி புரியும் ஒரு மிடில் க்ளாஸ் ஊழியர்! கஷ்டப்பட்டுத்தான் சாரங்கனை படிக்க வைத்தார்! லோன் வாங்கி, ஆயிரம் சதுரஅடியில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் ஒரு வீடு! அதுகூட சாரங்கன் பிறந்து, ஆறு வருஷங்களுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1