Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதலிக்க முடியலே!
காதலிக்க முடியலே!
காதலிக்க முடியலே!
Ebook96 pages34 minutes

காதலிக்க முடியலே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அப்பா, அம்மா, தம்பி மூவரையும் உட்கார வைத்தாள் ரேவதி!
 "உங்களுக்கெல்லாம் புடிச்சிருக்கா?"
 "அந்தப் பையன் லட்சணமா, யதார்த்தமா இருக்கான். ஆனா..."
 "என்ன ஆனா? சொல்லும்மா!"
 "உன்னைவிட எல்லா விதத்திலும் குறைச்சலா இருக்கானேம்மா?"
 "எதை நீ குறைச்சல்னு சொல்றேம்மா? மேலே படிக்க அவருக்கு வயசில்லையா? முயற்சி செஞ்சா பெரிய உத்யோகம் கிடைக்காதா? அம்மா! படிப்பும், பணமும் நம்மால தேடிக்க முடிஞ்ச ஒண்ணுதான். ஆனா குணம்? அது பிறவியிலேயே நல்லா இருக்கணும். மனைவி உசந்தா, புருஷனுக்கு அது பெருமைதானேனு கேட்டாரே! இதுதான்மா ஒரு பொண்ணுக்கு மிகப்பெரிய சொத்து!"
 "ஆனா அந்த அக்காக்காரி திமிர் புடிச்சவளா இருக்காளே?"
 "அம்மா! அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. சங்கரே அவளை அடக்கிட்டாரே!"
 "அதில்லைடி! மகள் பேச்சை அம்மா கேட்டு, உன்னை வெறுக்கத் தொடங்கினா?"
 "வெறுக்கட்டும்! சங்கருக்கு என்னைப் பிடிச்சிருக்கு. அது போதும்! நான் வாழப் போறது சங்கரோடதான்!"
 "புருஷன் மட்டும் போதும்னு ஒரு பெண் சொல்லலாமா ரேவதி?"
 "எனக்கும் நீ சொல்றது புரியுதும்மா! எல்லாரும் நேசிக்கத் தயார்னா, வாழப்போற பெண் ரெண்டு மடங்கா நேசம் காட்டணும்! விலக்கி நிறுத்தினா, விழுந்து புடுங்க முடியுமா? நாம என்ன குடுக்கறோமோ, அதுதானே நமக்குத் திரும்பக் கிடைக்கும்?"
 தம்பி சிரித்தான்"அக்கா சொல்றதுதான் சரி!"
 ரேவதி அம்மாவிடம் வந்தாள்.
 "நீ கவலையே படாதே! நல்ல புருஷனுக்கு முதல் தகுதி நல்ல குணம்தான். தனக்கு மனைவியா வரப்போறவளை முதல் பார்வைல அவன் நேசிக்கத் தொடங்கிட்டா, கடைசி சுவாசம் வரைக்கும் அந்த நேசம் தொடரும்! சங்கர்கிட்ட எனக்கந்த நம்பிக்கை இருக்கு!"
 அப்பா அருகில் வந்தார்.
 "எனக்குமந்த நம்பிக்கை இருக்குடா! சிலபேர் எங்கே இருந்தாலும், அவங்கதான் தலைமைப் பொறுப்புல இருப்பாங்க! அது அவங்களோட தனித்திறமை! என் பொண்ணு அந்த ரகம்தான்!"
 "அப்பா! கல்யாணத்தை சிம்பிளா நடத்துங்க!"
 "உனக்காக சேர்த்து வச்சதை வேற யார்கிட்ட குடுக்கப் போறோம். எல்லாம் உனக்குத்தான்!"
 தம்பியிடம் வந்தாள்.
 "சொல்லுடா! சங்கர் நல்லா இருக்காரா?"
 "உனக்குத் தோதா ஒரு அழகான ஜால்ரா கிடைச்சாச்சு!"
 "படவா!" - அவன் காதைப் பிடித்துத் திருகினாள்.
 "என் காது தப்பிச்சது! காலம் முழுக்க இனி சங்கரோட காதுகள் மாட்டிக்கிடுச்சு!"
 ஓடினான் தம்பி!
 துரத்தினாள் ரேவதி!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798215368626
காதலிக்க முடியலே!

Read more from Devibala

Related to காதலிக்க முடியலே!

Related ebooks

Related categories

Reviews for காதலிக்க முடியலே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதலிக்க முடியலே! - Devibala

    1

    "இந்த வரன் வேண்டாம் தரகரே!" - படக்கென பார்வதி சொல்ல, அப்பா நிமிர்ந்தார்.

    ஏன் பார்வதி?

    நம்ம சங்கரை விட இந்தப் பொண்ணு கூடுதலா படிச்சிருக்கா! அதிகமா சம்பாதிக்கறா! புருஷனை விட மனைவி உசத்தியா இருந்தா, வாழ்க்கைல நிம்மதி இருக்காதுங்க!

    ஏன்? நான் சம்பாதிச்சும், நீ வெறும் குடும்பத் தலைவியா இருந்தும் கூட, உன் கைதானே நம்ம வீட்ல ஓங்கியிருக்கு?

    போதும் கேலி!

    இல்லைம்மா. ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கு! நல்ல குடும்பம்! சங்கரைக் கேட்டுப்போம். அவன் வேண்டாம்னா விட்ருவோம்!

    சங்கர் உள்ளே நுழைந்தான்.

    என்னப்பா? என் தலை உருளுது!

    இந்த போட்டோவைப் பாரு சங்கர். இந்தப் பொண்ணை உனக்குப் புடிச்சிருக்கா?

    சங்கர் வாங்கிப் பார்த்தான்.

    போட்டோல பாக்க அழகா இருக்கா!

    இவ படிப்பு எம்.காம். வேற ஏதோவும் படிச்சிருக்கா! ஒரு கம்பெனியில் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம். நல்லா கார் ஓட்டுவாளாம். எல்லா திறமைகளும் உள்ள பொண்ணுனு தரகர் சொன்னார்!

    வெரிகுட்!

    நீ பி.காம். உன் சம்பளம் இருபதாயிரம். உனக்கு பைக்கு கூட ஓட்டத் தெரியாது. உன்னை விட எல்லா விதத்திலும் உசந்த இந்த ரேவதியைப் பாக்கணுமா?

    இருவரையும் ஏற இறங்கப் பார்த்தான் சங்கர்.

    எனக்குத் தடையில்லை!

    என்னடா சொல்ற? புருஷனைவிட மனைவி உசத்தியா இருந்தா, புருஷனுக்கு அது கௌரவமா?

    எதை நீ உசத்தினு சொல்ற?

    படிப்பு, உத்யோகம், அழகு - இப்படி எல்லாமேதான்!

    சங்கர் சிரித்தான்.

    நான் அப்படி நினைக்கலைமா! மனசு இணைஞ்சு போச்சுனா, மற்றதெல்லாம் ரெண்டாம் பட்சம்

    வெரிகுட் சங்கர்! - அப்பா கை குலுக்கினார்.

    என்னடா பேசற நீ? எல்லாரும் உன்னை மட்டம் தட்டிப் பேச மாட்டாங்களா?

    மட்டம் தட்ட என்னம்மா இருக்கு? இதப்பாரு! அந்தப் பொண்ணு சம்மதிச்சா, எனக்குத் தடையில்லை!

    உங்கக்காவை ஒரு வார்த்தை கேக்கணும்!

    இதப்பாரு! வாழப் போற ரெண்டு பேர் முதல்ல முடிவெடுக்கணும். மற்றவங்க பிறகு!

    சரிப்பா! பெண் பார்க்க நாளைக்குப் போகலாமா?

    நான் தயார்!

    அப்பா போனில் தரகருக்கு விவரம் சொல்லி விட்டார்.

    உள்ளூரில் இருந்த சங்கரின் அக்கா மீனா அன்று மாலை வந்து விட்டாள்.

    விவரம் கேட்டதும் புலம்பினாள்.

    அம்மா! உன் மாப்ளை இதுக்கு ஒப்புக்க மாட்டார்!

    கட்டிக்கப் போறது உன் தம்பிம்மா! இதுல உன் புருஷன் ஒப்புக்க என்ன இருக்கு?

    என்னப்பா இப்படி பேசறீங்க? அவர் இந்த வீட்டு மாப்ளை! இங்கே எது நடந்தாலும், அவரையும் கலந்து பேச வேண்டாமா?

    ஆமாங்க!

    அப்பா முகம் சுளித்தார்.

    அந்த வீட்டு மாப்பிள்ளை சண்முகம் ஒரு பந்தா பேர்வழி! இத்தனைக்கும் பெரிய படிப்போ, உத்யோகமோ இல்லை. மீனாவுக்கு பல விதங்களிலும் உதவி பிறந்த வீட்டின் மூலம்தான். இருந்தாலும் ‘மாப்பிள்ளை முறுக்கை’ சண்முகம் விடமாட்டார்.

    அப்பாவுக்கு சுத்தமாகப் பிடிக்காது.

    வேறு வழியில்லை.

    அம்மா, மீனா முகம் கோணக் கூடாதே என்று ஜால்ரா அடிப்பாள். அது எல்லாரையும் எரிச்சல் மூட்டும்.

    சரி! நாளைக்கு பாத்துட்டு வந்த பிறகு முடிவெடுக்கலாம்!

    அந்தப் பொண்ணோட குடும்ப பின்னணி என்னா?

    அப்பா - பேங்க்ல ஆபீசர். அம்மா - ஸ்கூல் டீச்சர். காலேஜ்ல படிக்கற ஒரு தம்பி - சொந்த வீடு - கார் எல்லாம் இருக்கு!

    மீனா முகத்தில் பொறாமைக் கனல்!

    மீனாவுக்கு வசதிகள் குறைவு. வசதியான ஒரு குடும்பத்துப் பெண் இந்த வீட்டு மருமகளாக வந்தால் கை ஓங்கி விடுமோ என்ற எரிச்சல்!

    எப்படியாவது இதைத் தடுத்துவிட வேண்டும் என்ற வேகம் மீனாவிடம் இருந்தது.

    மறுநாள் காலை ஒரு கால்டாக்ஸி வரவழைத்து அப்பா, அம்மா, சங்கர், மீனா நாலு பேரும் புறப்பட்டு விட்டார்கள்.

    ரேவதியின் அப்பா - அம்மா இவர்களை வரவேற்றார்கள்.

    உட்கார வைத்து ஆரம்ப அறிமுகம் ஆன பிறகு, யாரும் அழைக்காமல் இயல்பாக ரேவதி ஒரு சூடிதாருடன் வந்து விட்டாள். வணங்கினாள்.

    பளிச்சென்ற - சிரித்த முகம்.

    பத்தே நிமிடங்களில் கலகலப்பாகப் பேசத் தொடங்க, சங்கருக்குப் பிடித்து விட்டது.

    இயல்பான பேச்சு - படக்கென மற்றவர்களைத் தன்பக்கம் ஈர்க்கும் அந்த வசீகரம் - பேச்சில் தெளிவு - புத்திசாலித்தனம் - யதார்த்தமான பெண்!

    யாரும் அவளை மறுக்க முடியாது!

    ரேவதியிடம் மீனா தோரணையாக சில கேள்விகளைக் கேட்க, ரேவதி அழகாக பதில் சொல்ல,

    நான் உங்ககிட்ட தனியாப் பேசணும் ரேவதி!

    வாங்க மிஸ்டர் சங்கர்! - உள்ளே அழைத்து வந்தாள்.

    உக்காருங்க சங்கர்!

    ரேவதி! உங்களை முதல் பார்வையிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு!

    தேங்க்யூ சங்கர்!

    ஆனா படிப்பு, சம்பாத்தியம், இதர திறமைகள் எல்லாத்துலேயும் உங்களை விட நான் நல்லாவே குறைச்சல்தான்! அதனால என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கானு தெரியணும்!

    அவனை நிமிர்ந்து நன்றாகப் பார்த்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1