Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண் பேசும் வார்த்தைகள்...
கண் பேசும் வார்த்தைகள்...
கண் பேசும் வார்த்தைகள்...
Ebook93 pages1 hour

கண் பேசும் வார்த்தைகள்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகேஷ் வேகமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான்.

காரிடாரில் அக்கா மல்லிகா தென்பட்டாள்,

"என்னாச்சுக்கா?"

அவள் அழத் தொடங்கினாள்.

"நல்லாத்தான் இருந்தாங்க அப்பா திடீர்னு நெஞ்சு வலி வந்திருக்கு. அவரால தாங்கிக்க முடியலை. துடிக்க ஆரம்பிச்சார். நானும் அம்மாவும் பதறிப் போனோம். நீ போன்ல கிடைக்கவேயில்லை. நாங்க பயந்து போய் ஆட்டோ வச்சிட்டு வந்துட்டோம்."

மகேஷ் அவளோடு நடந்தான். அவசர சிகிச்சைப் பிரிவை எட்ட, அம்மா அங்கு இருந்தாள். மகனைப் பார்த்ததும் அழுகை பீறிட்டது.

"அம்மா பயப்படாதே! அப்பாவுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. நீ தைரியமா இரு..."

டாக்டர் வெளியே வந்தார்.

"என்ன டாக்டர்?"

"ஹார்ட் அட்டாக் ஹெவியா வந்திருக்கு. இன்னிக்கு ராத்திரி தாண்டனும். 12 மணி நேரம் கழிச்சுத்தான் எதுவும் சொல்ல முடியும். பிரார்த்தனை பண்ணுங்க..."

போய் விட்டார். அம்மா கதறி விட்டாள்.

"உங்கப்பா நம்மை விட்டுப் போயிடுவாரா மகேஷ்? கல்யாண வயசு தாண்டியும் மல்லிகா கழுத்துல தாலி ஏறலை. உள்ளுக்குள்ளே இதைப் போட்டு குமைஞ்சிருக்கார் உங்கப்பா. அதுதான் இதயத்தைத் தாக்கியிருக்கு..."

மகேஷுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

"அம்மா! உன்னையும், அக்காவையும் வீட்ல கொண்டு போய் விடட்டுமா?"

"இல்லை. நான் போக மாட்டேன்."

"சரி!" இங்கேயே இருக்கலாம்..."

அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே ஓரளவு ஆட்கள் காத்திருந்தார்கள். மகேஷ் வெளியே. வந்தான்.

'அடுத்த வாரம் வெளிநாட்டுப் பயணம். தாராவின் கர்ப்பத்தில் என் குழந்தை. கழுத்தில் தாலி இல்லை. அப்பாவின் உயிர் ஊசலாடுகிறது.'

ஒரே வாரத்தில் யாருக்கும் வர முடியாத சிக்கலான பிரச்சனைகன்.

'தாரா தன் வீட்டில் இந்த நேரம் விவரத்தை உடைத்திருப்பாளா?'

'நாளைக்கு விடியும் போது என்ன நடக்கப் போகுது?'

கேள்வி மேல் கேள்வி வந்தது.

அதே நேரம் தாரா வேறுவிதமான குழப்பத்தில் இருந்தான்.

அண்ணன் ஏதோ ஒரு படத்துக்காக அவுட்டோர் போயிருந்தான்.

'வர நாலு நாளாகும்!'

'விவகாரத்தை அண்ணியிடம் சொல்லி விடலாமா?'

'சொல்லத்தான் வேண்டும். அண்ணன் கடுமையான கோபக்காரன். அண்ணி வழியாக பக்குவமாகத்தான் பேசணும்."

'சரி. இந்த ஒரு நாளை விட்ரலாம். மகேஷ் தன் வீட்டில் பேசின பிறகு, பின்விளைவுகள் என்னன்று தெரியணும். அதுக்குத்தக்க நான் செயல்படனும்.'

'மகேஷ் அடுத்த சனிக்கிழமை விமானம் ஏற வேண்டும்!'

'நாளை விடிந்தால் ஒரு நாள் குறைந்து விடும். ஆறு நாட்களாகி விடும்.'

'இது வாழ்க்கைப் பிரச்சனை. நாளை மாலைக்குள் ஒரு முடிவை எடுத்தே ஆகவேண்டும்.'

இரவு தாரா சரியாகச் சாப்பிடவில்லை. அண்ணி கேட்டே விட்டாள்.

"தாரா ஏதாவது பிரச்னையா? உன் முகம் பேயறைஞ்ச மாதிரி இருக்கு. சரியா சாப்பிடவும் இல்லை. ஏதாவது பிரச்னையா?"

"ஆபீஸ்ல வேலை அதிகம் அண்ணி!"

"அது மட்டும்தான் காரணமா?"

"வே... வேறென்ன?"  

"காலாகாலத்துல கல்யாணம் நடக்கணும். உனக்கும் இருபத்தி அஞ்சு வயசாச்சு. இனிமே வீட்ல வச்சுக்கக் கூடாது. உங்கண்ணன் வரட்டும். இந்த வாட்டி பேசி, ஒரு முடிவுக்கு வரணும்."

தாரா எந்தப் பதிலும் சொல்லவில்லை. போய்ப் படுத்து விட்டாள். நெஞ்சு முழுக்க கவலை அப்பிக் கிடந்தது.

'இரு குடும்பமும் சம்மதித்து, ஆறே நாட்களில் கல்யாணம் முடிந்து மகேஷ் விமானம் ஏற முடியுமா?'

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN9798224117963
கண் பேசும் வார்த்தைகள்...

Read more from Devibala

Related to கண் பேசும் வார்த்தைகள்...

Related ebooks

Related categories

Reviews for கண் பேசும் வார்த்தைகள்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண் பேசும் வார்த்தைகள்... - Devibala

    1

    "அடுத்த வாரமே அமெரிக்கா போகணும். புது ப்ராஜக்ட் வந்திருக்கு தாரா!"

    எப்ப திரும்பி வருவீங்க?

    இது பதினெட்டு மாச ப்ராஜக்ட் தாரா!

    ஒண்ணரை வருஷமா?

    ஆமாம்! இதை முடிச்சுட்டுத் திரும்பி வந்தா, வாய்ப்புகள் அதிகம். எதிர்காலம் பளிச்சுன்னு இருக்கும் தாரா!

    இதை நான் எதிர்பார்க்கலை மகேஷ்!

    உனக்கு இதுல சந்தோஷம் இல்லையா தாரா?

    அவள் பேசவில்லை.

    ஏன்மா?

    ரெண்டு பேரும் விரும்பறதை வீட்ல இன்னும் தெரிவிக்கல

    நான் திரும்பி வந்தபிறகு சொல்லிக்கலாம். உடனடியா கல்யாணத்தையும் நடத்திடலாம். என்ன சொல்ற?

    அது கஷ்டம் மகேஷ் எனக்கு நாள் தள்ளிப் போகுது. இன்னிக்கு முப்பத்தி எட்டு நாளாச்சு. டிசம்பர் 20ம் தேதி ரெண்டு பேரும் பட்ட அவசரம் இப்ப வேற மாதிரி வந்திருக்கு!

    மகேஷ் முகத்தில் சிரிப்பு ஒரு நொடி தொலைந்தது.

    உடனடியா வீட்ல சொல்லி, நம்ம கல்யாணத்தை முடிச்சே ஆகணும் மகேஷ்!

    நான் அமெரிக்கா போறதுக்குள்ளேயா?

    ஆமாம்.

    ‘எப்படி தாரா? ஒரு வாரத்துல கல்யாணமா?"

    ஏன் முடியாது? கோயில்ல வச்சு சிம்பிளா நடத்திட்டு, ரிஜிஸ்டர் பண்ணிக்க முடியாதா? நான் உங்க கூட வரலை. இங்கியே இருத்துக்கறேன். நானும் வேலையை விட முடியாது. நீங்க திரும்பி வரும்போது உங்க குழந்தை தவழ்றதைப் பார்க்கலாம்...

    தாரா வீட்ல இதைப்பற்றி ரெண்டு பேருமே எதுவும் பேசலையே?

    பேச சந்தர்ப்பப்படலை!

    இப்பவும் அப்படித்தான் தாரா! எங்கக்கா கல்யாணம் முடியாம இதை எப்படி தான் சொல்ல முடியும்?

    சொல்லித் தான் ஆகணும் மகேஷ்!

    இல்லை தாரா! எதுக்குமே அவகாசம் இல்லை. நான் சொல்றதைக் கேளு. இதைக் கலைச்சிடு. ரெண்டு பேருக்குமே அதுதான் நல்லது...

    வேண்டாம் மகேஷ்! ஒரு நாலாந்தர அயோக்கியன் பேசற மாதிரி நீங்க பேசக் கூடாது!

    நிறுத்து தாரா. வார்த்தைகளை விடாதே, நான் பிராக்டிகலா போறேன், ஒரு கல்யாணத்தை எல்லோரும் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டு சந்தோஷமா நடத்தணும். அதுக்கான சூழ்நிலை இப்ப இல்லை.

    அப்படீன்னா, நீங்க அமெரிக்கா போகாதீங்க!

    என்ன உளர்ற? பதினெட்டு மாசத்துல இருபது லட்சத்துக்கு மேல நான் கொண்டுவர முடியும். அதை விடலாமா?

    அந்தப் பணம் உங்கக்கா கல்யாணத்துக்கு, உங்க குடும்ப பிரச்னைகளுக்கு உதவும். எனக்கு பதினெட்டு மாசத்துல மிஞ்சப் போறது அவமானம்தான், புருஞ்சுக்குங்க மகேஷ்!

    அதுக்குத்தான் சொல்றேன், கலைச்சிடுன்னு, எந்தச் சிக்கலும் இல்லை...

    இப்ப இப்படிச் சொல்ற நீங்க, திரும்பி வந்தப்புறம் என்னை ஏத்துக்குவீங்கன்னு என்ன நிச்சயம்?

    என்ன பேசற தாரா நீ?

    நான் கலைக்க முடியாது மகேஷ். உங்க வீட்ல நீங்க பேசலைன்னா நான் வந்து பேசுவேன். இன்னிக்கு எங்க வீட்ல நான் பேசிட்டு, நாளைக்கு உங்க வீட்டுக்கு வரப்போறேன். அழுதுக்கிட்டு நிக்க நான் அந்தக் காலப் பெண் இல்லை. புரியுதா?

    மகேஷ் ஆடிப் போனான்.

    நீங்களே உங்க வீட்ல பேசிடுங்க. சாபத்தோட விமானத்துல ஏறாதீங்க. சந்தோஷமா நடந்தாத்தான் எதுவுமே நல்லதா நடக்கும்!

    சரி, போகலாம்...

    அவனை ஓரிடத்தில் இறக்கிவிட்டு மகேஷ் பைக்கை எடுத்தான்.

    வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவன் மகேஷ். படிப்பு எம்.டெக்! அவர்களோடு இணைந்த ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் வேலை பார்ப்பவள் தாரா.

    மகேஷ் அங்கு அடிக்கடி செல்வதால் மெதுவாக நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறி, கடந்த ஒரு வருடமாக இருவரும் நெருங்கிப் பழகி வருகிறார்கள்.

    சென்ற மாதம் கொஞ்சம் அவசரப்பட்டு எல்லை மீறி விட்டார்கள்.

    மகேஷுக்கு அப்பா சமீபத்தில் ஒய்வு பெற்றவர். அம்மா உண்டு, ஒரு அக்கா. செவ்வாய் தோஷம் காரணமாக முப்பதைத் தொட்டும் கல்யாணமாகவில்லை. இது குடும்பத்தில் பெரிய கவலை. ஒரு தம்பிக்கு டெல்லியில் வேலை. மகேஷ் இங்கு.

    நடுத்தரக் குடும்பம்தான். கடன் வாங்கித்தான் அப்பா மகேஷைப் படிக்க வைத்தார். ஓய்வு பெற்ற பிறகு வந்த மொத்தப் பணமும் படிப்புக் கடனை அடைக்கவே சரியாகி விட்டது. அக்கா கல்யாணத்தைக் கூட மகேஷ்தான் நடத்த வேண்டும் என்ற நிலை.

    இந்த நிலையில் தாராவைக் காதலித்து, அவளுக்கும் நாள் தள்ளிப் போகிறது. ‘அதனால் கல்யாணம் முடித்த பிறகுதான் விமானம் ஏற வேண்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்?’

    ‘ஆனா நான் எதுவும் சொல்லாம போனா தாராவின் கதி என்ன?’

    ‘கலைச்சிட்டா எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒப்புக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறாளே!’

    ‘யார்கிட்ட இதைச் சொல்றது? அப்பாவுக்கு கோவம் வந்துடும். அக்காகிட்ட சொல்ல முடியாது. அம்மாகிட்டத்தான் மெதுவாச் சொல்லணும்.’

    ‘சரி, பேசிப் பார்க்கலாம். தாரா பிடிவாதக்காரி. தான் சொல்லலைனா, அவ வீடு தேடி வந்துடுவா. அது விபரீதமா ஆய்டும் நானே பேசணும்.’

    ‘தாரா இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1