Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சின்ன மணிக் குயிலே!
சின்ன மணிக் குயிலே!
சின்ன மணிக் குயிலே!
Ebook119 pages40 minutes

சின்ன மணிக் குயிலே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நந்தினி தன் கைக் கடிகாரத்தைத் தவிப்புடன் பார்த்தாள்.
 "என்ன மேடம் நேரமாச்சா?"
 "ம்! ஆறு மணிக்கு சபால நான் இருக்கணும்! இப்ப அஞ்சே முக்கால். வழில ட்ராஃபிக் ஜாம் வேற இருக்கும். நாளைக்குக் காலைல நீங்கள்லாம் வந்தா நிதானமாப் பேசலாமே!"
 "சரி! ஞாயிற்றுக் கிழமை வேற ப்ரோக்ராம் உங்களுக்கு இருக்குமேனு இப்ப வந்தம்! அடுத்த மாசம் 12ம் தேதியை எங்களுக்கு ஒதுக்கிருங்க!" அந்த மனிதர் தோல்பை திறந்து ஒரு கட்டுப் பணத்தை வெளியே எடுத்தார்.
 "ஸாரி! டேட்ஸ் எல்லாம் நான் பாக்கறதில்லை. நீங்க அப்பாகிட்டப் பேசிக்குங்க! நேரமாச்சு! வரட்டுமா?"
 எழுந்து விட்டாள்.
 கூடத்துக்கு வர, அம்மா காத்திருந்தாள்.
 அதீத ஒப்பனையுடன் நடிகை போல அம்மா இருந்தாள்.
 "போலாமாடா ராஜா?"
 "வாம்மா!"
 காரில் இருவரும் ஏற, அது புறப்பட்டது.
 அப்பா வேறொரு அறையிலிருந்து வெளிப்பட்டார். வந்தவர்கள் அவரை நெருங்க,
 "ஒக்காருங்க, எல்லாரும்!"
 "சார்! அடுத்த மாசம் 12ம் தேதி எங்களுக்கு வேணும்!"
 "சான்ஸே இல்லை. புக் ஆயாச்சு!"போன மாசமே நாங்க போன்ல சொல்லியிருக்கோம் சார்!".
 "இருக்கலாம். தேதி இல்லையே சார்!"
 "நாங்க பப்ளிஸிட்டிக்கு நிறைய செலவு பண்ணப்போறம். நந்தினி ப்ரோக்ராம்னு நம்பிக்கிட்டு இருக்கம். தயவு பண்ணணும் நீங்க!"
 "உங்க நிலைமை எனக்குப் புரியாம இல்லை. ஏற்கனவே முழுப்பணமும் தந்து புக் பண்ணின பார்ட்டியை நான் என்ன செய்ய முடியும்?"
 "நாங்களும் முழுப்பணமும் தர்றம்!"
 "நீங்க புரிஞ்சுகலை! பணம் எனக்குப் பெரிசே இல்லை! தேதி இல்லைனா, நான் என்ன செய்ய முடியும்?"
 நிர்வாகிகள் தனியாகப் போய் பேசினார்கள் சற்று நேரம். திரும்பி வந்தார்கள்.
 "அதிகச் சம்பளம் தர்றம் சார். எங்களுக்குத்தான் முதலிடம் தரணும் நீங்க!"
 "என்ன நீங்க? பணத்தால் நந்தினியோட இசையை விலை பேசு வந்திருக்கீங்களா?"
 "அப்படியில்லை! அந்தத் தேதி எங்க கௌரவப் பிரச்னை! நீங்க தந்தே ஆகணும் பிடிங்க செக்கை!"
 சாதாரணமாக நந்தினி வாங்கும் சம்பளத்தில் மூன்று பங்குத் தொகை. அவர் கையில் திணித்தார்கள்.
 "பத்திரிகை விளம்பரம் அடுத்த வாரமே தொடங்கிடுவோம். நாங்க புறப்படறம் சார்!"
 அவரைப் பேசவிடாமல் அவர்களே பேசி விட்டு எழுந்தார்கள். புறப்பட்டு வாசலை அடைந்து விட்டார்கள்.
 அயல்நாட்டுக் கார் பளபளத்தது. அவர்களை அனுப்பி விட்டு அப்பா உள்ளே வர, விஜய் எதிர்ப்பட்டான்.
 "டாடி! நிஜம்மாவே 12ம் தேதி நந்தினிக்கு புக் ஆயாச்சா?"
 அவர் சிரித்தார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223807742
சின்ன மணிக் குயிலே!

Read more from Devibala

Related to சின்ன மணிக் குயிலே!

Related ebooks

Reviews for சின்ன மணிக் குயிலே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சின்ன மணிக் குயிலே! - Devibala

    1

    நந்தினி தன் கைக் கடிகாரத்தைத் தவிப்புடன் பார்த்தாள்.

    என்ன மேடம் நேரமாச்சா?

    ம்! ஆறு மணிக்கு சபால நான் இருக்கணும்! இப்ப அஞ்சே முக்கால். வழில ட்ராஃபிக் ஜாம் வேற இருக்கும். நாளைக்குக் காலைல நீங்கள்லாம் வந்தா நிதானமாப் பேசலாமே!

    சரி! ஞாயிற்றுக் கிழமை வேற ப்ரோக்ராம் உங்களுக்கு இருக்குமேனு இப்ப வந்தம்! அடுத்த மாசம் 12ம் தேதியை எங்களுக்கு ஒதுக்கிருங்க! அந்த மனிதர் தோல்பை திறந்து ஒரு கட்டுப் பணத்தை வெளியே எடுத்தார்.

    ஸாரி! டேட்ஸ் எல்லாம் நான் பாக்கறதில்லை. நீங்க அப்பாகிட்டப் பேசிக்குங்க! நேரமாச்சு! வரட்டுமா?

    எழுந்து விட்டாள்.

    கூடத்துக்கு வர, அம்மா காத்திருந்தாள்.

    அதீத ஒப்பனையுடன் நடிகை போல அம்மா இருந்தாள்.

    போலாமாடா ராஜா?

    வாம்மா!

    காரில் இருவரும் ஏற, அது புறப்பட்டது.

    அப்பா வேறொரு அறையிலிருந்து வெளிப்பட்டார். வந்தவர்கள் அவரை நெருங்க,

    ஒக்காருங்க, எல்லாரும்!

    சார்! அடுத்த மாசம் 12ம் தேதி எங்களுக்கு வேணும்!

    சான்ஸே இல்லை. புக் ஆயாச்சு!

    போன மாசமே நாங்க போன்ல சொல்லியிருக்கோம் சார்!.

    இருக்கலாம். தேதி இல்லையே சார்!

    நாங்க பப்ளிஸிட்டிக்கு நிறைய செலவு பண்ணப்போறம். நந்தினி ப்ரோக்ராம்னு நம்பிக்கிட்டு இருக்கம். தயவு பண்ணணும் நீங்க!

    உங்க நிலைமை எனக்குப் புரியாம இல்லை. ஏற்கனவே முழுப்பணமும் தந்து புக் பண்ணின பார்ட்டியை நான் என்ன செய்ய முடியும்?

    நாங்களும் முழுப்பணமும் தர்றம்!

    நீங்க புரிஞ்சுகலை! பணம் எனக்குப் பெரிசே இல்லை! தேதி இல்லைனா, நான் என்ன செய்ய முடியும்?

    நிர்வாகிகள் தனியாகப் போய் பேசினார்கள் சற்று நேரம். திரும்பி வந்தார்கள்.

    அதிகச் சம்பளம் தர்றம் சார். எங்களுக்குத்தான் முதலிடம் தரணும் நீங்க!

    என்ன நீங்க? பணத்தால் நந்தினியோட இசையை விலை பேசு வந்திருக்கீங்களா?

    அப்படியில்லை! அந்தத் தேதி எங்க கௌரவப் பிரச்னை! நீங்க தந்தே ஆகணும் பிடிங்க செக்கை!

    சாதாரணமாக நந்தினி வாங்கும் சம்பளத்தில் மூன்று பங்குத் தொகை. அவர் கையில் திணித்தார்கள்.

    பத்திரிகை விளம்பரம் அடுத்த வாரமே தொடங்கிடுவோம். நாங்க புறப்படறம் சார்!

    அவரைப் பேசவிடாமல் அவர்களே பேசி விட்டு எழுந்தார்கள். புறப்பட்டு வாசலை அடைந்து விட்டார்கள்.

    அயல்நாட்டுக் கார் பளபளத்தது. அவர்களை அனுப்பி விட்டு அப்பா உள்ளே வர, விஜய் எதிர்ப்பட்டான்.

    டாடி! நிஜம்மாவே 12ம் தேதி நந்தினிக்கு புக் ஆயாச்சா?

    அவர் சிரித்தார்.

    பதில் சொல்லுங்க!

    அதாண்டா பிஸினஸ்! தேதிகள் இருந்தாலும் இல்லைணு சொல்லி, அலைய விடணும்! சம்பளத்தை மூணு பங்கு இவன் ஏத்திவிட்டாச்சு. இந்தச் செக்கைக் காட்டியே இதுதான் இனிமே நந்தினி சம்பளம்னு எல்லாருக்கும் சொல்லுவேன்!

    இது அநியாயம் டாடி!

    இல்லை! இதுதான் நியாயம். நந்தினியோட பாட்டுக்கு இப்ப நல்ல மவுசு. மார்க்கெட் சூடு பிடிச்சிருக்கு. ஒரே நேரத்துல கர்நாடக சங்கீதமும், மெல்லிசையும் பாடக்கூடிய ஒரே பாடகி நந்தினி தான்.

    ஆனா நீங்க இப்படி பணம் கேட்டா, பேரு கெட்டுப் போகாது?

    நான் எங்கேடா கேட்டேன்? தானா வருது! இதெல்லாம் நீ பேசச்கூடாது. சின்னப் பையன் பிஸினஸ் விஷயத்துல தலையிடாதே! போ... போ!

    சங்கீதம் கூட பிஸினஸா?

    நிச்சயமா! கலையை காசாக்கினாத்தாண்டா பிழைக்க முடியும். வீட்டுக்குள்ள ஒக்காந்து உங்கக்கா பாடினா யாருக்கு லாபம்? சொல்லு!

    விஜய் பேசாமல் உள்ளே வந்தான்.

    நந்தினிக்கு அற்புதமான குரல். அவள் பாடத் தொடங்கினால், இசையில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூட ஒரு நொடி போல நின்று கேட்பார்கள். ஒரு மாதிரி காந்தம் இருக்கும் அவள் குரலில். கல்லூரியில் படிக்கும் சமயம், தனிப்பட்ட முறையில் சங்கீதம் பயிலத் தொடங்கி விட்டாள்.

    ஏறத்தாழ ஐந்து வருடகாலம். எம்.காம். முடிக்கும் போது கர்நாடக சங்கீதம் முழுமையாக வசப்பட்டது. தவிர ஹிந்துஸ்தானி, க்ளாசிக், மேற்கத்திய இசை, ராக் பாடல்கள் என எதையும் அவள் விட்டு வைக்கவில்லை.

    சின்னச் சின்ன இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை வசிகரிக்கத் தொடங்கினாள்.

    நாளாவட்டத்தில் அவளுக்கென தனி இசைக் குழுவே உருவாகத் தொடங்க, மெல்ல மெல்ல இசை வர்த்தகமாகத் தொடங்கி விட்டது.

    அங்கங்கே சின்னச் சின்ன நிகழ்ச்சிகள்.

    மாதத்தில் நாலு, ஐந்து என வர, பத்திரிகைகள் மெல்ல மெல்ல நந்தினியை உயர்த்த, வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி விட்டாள் நந்தினி.

    இதோ இந்த மூன்று வருடங்களில் பிரபலமே ஆகிவிட்டாள்.

    கச்சேரி மேடைகளிலும் நந்தினி...

    இசை நிகழ்ச்சிகளிலும் நந்தினி.

    மாதத்தில் நிச்சயமாக 18 நாட்கள் நிகழ்ச்சி என்பது தீர்மானமாகி, அது 24 நாட்களாக வளர்ந்து..

    இதோ அபிராமபுரத்தில் வீடு...

    மாருதி எஸ்டீம் என்று சொத்துக்கள் சேர, அப்பா ‘பக்கா’ வியாபாரியாகி கடை விரிக்கத் தொடங்கிவிட்டார்.

    விஜய் நந்தினியை விட ஏழு வயது இளையவன். இருபது. கடைசி வருஷ பி.எஸ்.ஸி! நந்தினிக்கு இருபத்தேழு!

    அப்பாவின் வியாபார புத்தியால் சமீப காலத்தில் லேசான எரிச்சலுக்கு உள்ளானவன் விஜய்.

    அக்காவிடம் இதைப் பற்றிப் பேசவும் நேரமில்லை!

    விஜய் வெளியே புறப்பட்டு விட்டான்.

    அப்பா யாருடனோ தொலைபேசியில் திரும்பவும் கச்சேரி தேதி இல்லை எனக்கூறி ஸ்டன்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

    நந்தினியைப் பேட்டிகாண வரும் நிருபர்களைக் கூட இப்போதெல்லாம் அப்பா மடக்கி உண்டு இல்லை என்று செய்து கொண்டிருக்கிறார்.

    இது எங்கே போய் முடியுமோ என்ற கவலையுடன் விஜய் வாசலில் இறங்கினான்.

    2

    நந்தினி தன் பக்கவாத்தியங்களுடன் மேடையில் வந்து உட்கார, ஒரு ரசிகர் கூட்டம் ஆர்வத்துடன் காத்திருந்தது.

    அன்று பாரம்பர்ய இசை!

    நந்தினி ஒரு முறை தன் பார்வையை சுழலவிட்டாள்.

    முதல் வரிசையில் அவன்!

    கடந்த் நாலைந்து மாதங்களாகத் தொடர்ந்து நந்தினி கவனித்து வருகிறாள். உள்ளூரோ, வெளியுரோ எங்கேயானாலும். அந்த இளைஞன். நந்தினியின், கச்சேரி தொடங்கி விட்டால் முதல் வரிசையில் அவன்.

    ஆறு மாதங்களாகத் தொடர்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1