Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சரித்திரம் திரும்புகிறது!
சரித்திரம் திரும்புகிறது!
சரித்திரம் திரும்புகிறது!
Ebook129 pages1 hour

சரித்திரம் திரும்புகிறது!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

24 மணிநேரம் தாண்டின பின்னாலதான் எதுவும் சொல்லமுடியும்மா!" டாக்டர். குண்டைத் தூக்கிப் போட்டதும் சியாமளா நிலை குலைந்தாள்.
 "எங்களால முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்றோம். அப்புறம் தெய்வம் இருக்கு" டாக்டர் உள்ளே போய்விட்டார்.
 நர்ஸ் வந்தாள்.
 "நீங்க ஏன் இங்கேயே இருக்கிங்க. வேணும்னா வீட்டுக்குப் போயிட்டு வாங்க! எப்படியும் இப்போதைக்கு உங்க வீட்டுக்காரரை நீங்க பார்க்க முடியாது!"
 "பக்கத்துல கோயில் எதுவும் இருக்கா சிஸ்டர்?"
 "வலது பக்கம் நேராப் போய் இடது பக்கம் திரும்பினா, பிள்ளையார் கோயில் இருக்கு!"
 சியாமளா பத்தாவது நிமிடம் கோயிலில் இருந்தாள்.
 நேற்று காலை ஆபிசுக்கு புறப்படும் போது கூட வரதராஜன் உற்சாகமாகத்தான் இருந்தார்.
 நாற்பத்தி ஐந்து வயது! வங்கியில் அதிகாரி! இரட்டை நாடி உடம்பு. ஓரளவு ஆரோக்யமானவர்தான் வரதராஜன்.
 "அப்பளம் இல்லை சியாமளா?"
 "நேத்துதான் பொரிச்சேன். எண்ணை விக்கற விலைல தினசரி பொரிச்சா, கட்டுப்படியாகாது. உடம்புக்கும் நல்லதில்லை!"
 "சாம்பார் சாதத்துக்கே ஊறுகாயா?"
 "காரம் அதிகம் சாப்பிடாதீங்க. நாக்கைக் கட்டுப்படுத்தினா, நோய் இல்லை!"
 "நாளைக்கு லீவு எனக்கு! வெளிய எங்கே போகலாம்?"ஏன் காசுக்கு நீ இப்படி அழற? மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம் வருது உன் கைக்கு!"
 "வரட்டும்! உங்க பையன் இன்ஜினியரிங் படிக்கறான். அதுவும் ஹாஸ்டல்ல இருந்து. மாசம் ரெண்டாயிரம் ரூபா அவனுக்கு அனுப்ப வேண்டியிருக்கு. பொண்ணு கோயம்புத்தூர்ல விவசாயம். அவளும் ஹாஸ்டல. சம்பளத்துல பாதி போயிடுது. புரியுதா? சிக்கனம் இருந்தாத்தான் நல்லது. நானும் வேலைக்குப் போகலை! சமாளிக்க வேண்டாம்?"
 "சரி நான் வர்றேன்! இன்னிக்கு சாயங்காலம் உனக்குப் பிடிச்ச முந்திரி அல்வா வாங்கிட்டு வர்றேன். ரொம்ப நாளாச்சு!"
 "அல்வா வாங்கியா?"
 "இல்லைடி!" வரதராஜன் ஒரு மாதிரி சிரிக்க, "ஆளை விடுங்க!"
 "நீ எனக்கு அல்வா குடுத்துட்டே வர்ற! இன்னிக்கு உன்னை விடப்போறதில்லை"
 மாலை ஐந்தரைக்கு வந்துவிடுவார் வரதராஜன். வெளியே சுற்றும் வழக்கமில்லை. தாமதமாகும் என்று தோன்றினால், தொலைபேசி மூலம் சொல்லி விடுவார்.
 ஆறாகியும் காணவில்லை. ஆறரை கடந்தது. சியாமளாவுக்குக் கவலையாக இருந்தது.
 ஏழு மணிக்கு வங்கியிலிருந்து ஒரு ஆள் வந்து "அம்மா புறப்பட நேரத்துல சார் திடீர்னு நெஞ்சு வலினு சொன்னார். மயக்கமாயிட்டார். ஆஸ்பத்திரில் சேர்த்திருக்கோம்!'
 சியாமளா அலறி அடித்துக் கொண்டு ஓடினாள்.
 இதோ டாக்டர் கெடு வைத்து விட்டார்.
 "இது முதல் அட்டாக்கா?"
 "ஆமாம் டாக்டர்! அதிர்ச்சிகரமாக எதுவும் நடக்கலையே?'
 "அவசியமில்லைமா! ஹார்ட் அட்டாக் வர, காரணம் எதுவும் தேவையில்லை! ஆனா பலமா வந்திருக்கு!"4 மணி நேரம் கெடு வைத்து விட்டதால் மகன், மகள் இருவருக்கும் தந்தி அடித்து விட்டாள்.
 வரதராஜனின் அம்மா, அவரது தம்பியிடம் இருந்தார். பெற்ற தாயாச்சே! நாளைக்கு ஒரு பேச்சு வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கும் தந்தி மூலம் தகவல் கொடுத்துவிட்டாள். வரதராஜனின் தங்கை உள்ளூர்தான்.
 தங்கை அந்த சமயம் வெளியூர் போயிருந்ததால், இருக்கவில்லை! சியாமளா கோயிலில் ஒரு மாதிரி நிச்சலனமாக உட்கார்ந்திருந்தாள். இருட்டத் தொடங்கிவிட்டது!
 நேராக ஆஸ்பத்திரிக்கு வந்தாள்.
 கோவையில் பிடிக்கும் பெண் ரம்யா வந்து விட்டாள்.
 "அப்பாவுக்கு என்னம்மா?"
 "திடீர்னு ஹார்ட் அட்டாக். நம்ம விதிடி ரம்யா! டாக்டர் 24 மணி நேரம் கெடு சொல்லிருக்கார்!"
 மகளைப் பார்த்ததும் அழுகை வந்தது!
 "பிரகாஷ் வந்துட்டானாம்மா?"
 "தந்தி குடுத்திருக்கேன். காரைக்குடிலேருந்து வரணுமேம்மா!"
 இரவு எட்டு மணிக்கு பிரகாஷ் வந்து விட்டான் ஒன்பது மணிக்கு மாமியாரும், மச்சினனும்.
 மாமியார் அழுது சீன் க்ரியேட் பண்ணிவிட்டாள்.
 நர்ஸ் வந்து விரட்டினாள்.
 "இதப் பாருங்கம்மா! இதெல்லாம் இங்கே கூடாது! டாக்டர் கோவப்படுவார். அவங்க அமைதியாத்தானே இருக்காங்க!"
 "பெத்த தாய்மா!"
 "சரி ரம்யா நீ பாட்டியை, சித்தப்பாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு போ! ராத்திரி இங்கே ஒருத்தர்தான் தங்கலாம்!"
 டாக்டர் வெளிப்பட்டார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223912538
சரித்திரம் திரும்புகிறது!

Read more from Devibala

Related to சரித்திரம் திரும்புகிறது!

Related ebooks

Reviews for சரித்திரம் திரும்புகிறது!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சரித்திரம் திரும்புகிறது! - Devibala

    1

    24 மணிநேரம் தாண்டின பின்னாலதான் எதுவும் சொல்லமுடியும்மா! டாக்டர். குண்டைத் தூக்கிப் போட்டதும் சியாமளா நிலை குலைந்தாள்.

    எங்களால முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்றோம். அப்புறம் தெய்வம் இருக்கு டாக்டர் உள்ளே போய்விட்டார்.

    நர்ஸ் வந்தாள்.

    நீங்க ஏன் இங்கேயே இருக்கிங்க. வேணும்னா வீட்டுக்குப் போயிட்டு வாங்க! எப்படியும் இப்போதைக்கு உங்க வீட்டுக்காரரை நீங்க பார்க்க முடியாது!

    பக்கத்துல கோயில் எதுவும் இருக்கா சிஸ்டர்?

    வலது பக்கம் நேராப் போய் இடது பக்கம் திரும்பினா, பிள்ளையார் கோயில் இருக்கு!

    சியாமளா பத்தாவது நிமிடம் கோயிலில் இருந்தாள்.

    நேற்று காலை ஆபிசுக்கு புறப்படும் போது கூட வரதராஜன் உற்சாகமாகத்தான் இருந்தார்.

    நாற்பத்தி ஐந்து வயது! வங்கியில் அதிகாரி! இரட்டை நாடி உடம்பு. ஓரளவு ஆரோக்யமானவர்தான் வரதராஜன்.

    அப்பளம் இல்லை சியாமளா?

    நேத்துதான் பொரிச்சேன். எண்ணை விக்கற விலைல தினசரி பொரிச்சா, கட்டுப்படியாகாது. உடம்புக்கும் நல்லதில்லை!

    சாம்பார் சாதத்துக்கே ஊறுகாயா?

    காரம் அதிகம் சாப்பிடாதீங்க. நாக்கைக் கட்டுப்படுத்தினா, நோய் இல்லை!

    நாளைக்கு லீவு எனக்கு! வெளிய எங்கே போகலாம்?

    எங்கேயும் வேண்டாம். அநாவசியமா செலவாகும்!

    ஏன் காசுக்கு நீ இப்படி அழற? மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம் வருது உன் கைக்கு!

    வரட்டும்! உங்க பையன் இன்ஜினியரிங் படிக்கறான். அதுவும் ஹாஸ்டல்ல இருந்து. மாசம் ரெண்டாயிரம் ரூபா அவனுக்கு அனுப்ப வேண்டியிருக்கு. பொண்ணு கோயம்புத்தூர்ல விவசாயம். அவளும் ஹாஸ்டல. சம்பளத்துல பாதி போயிடுது. புரியுதா? சிக்கனம் இருந்தாத்தான் நல்லது. நானும் வேலைக்குப் போகலை! சமாளிக்க வேண்டாம்?

    சரி நான் வர்றேன்! இன்னிக்கு சாயங்காலம் உனக்குப் பிடிச்ச முந்திரி அல்வா வாங்கிட்டு வர்றேன். ரொம்ப நாளாச்சு!

    அல்வா வாங்கியா?

    இல்லைடி! வரதராஜன் ஒரு மாதிரி சிரிக்க, ஆளை விடுங்க!

    நீ எனக்கு அல்வா குடுத்துட்டே வர்ற! இன்னிக்கு உன்னை விடப்போறதில்லை

    மாலை ஐந்தரைக்கு வந்துவிடுவார் வரதராஜன். வெளியே சுற்றும் வழக்கமில்லை. தாமதமாகும் என்று தோன்றினால், தொலைபேசி மூலம் சொல்லி விடுவார்.

    ஆறாகியும் காணவில்லை. ஆறரை கடந்தது. சியாமளாவுக்குக் கவலையாக இருந்தது.

    ஏழு மணிக்கு வங்கியிலிருந்து ஒரு ஆள் வந்து "அம்மா புறப்பட நேரத்துல சார் திடீர்னு நெஞ்சு வலினு சொன்னார். மயக்கமாயிட்டார். ஆஸ்பத்திரில் சேர்த்திருக்கோம்!’

    சியாமளா அலறி அடித்துக் கொண்டு ஓடினாள்.

    இதோ டாக்டர் கெடு வைத்து விட்டார்.

    இது முதல் அட்டாக்கா?

    "ஆமாம் டாக்டர்! அதிர்ச்சிகரமாக எதுவும் நடக்கலையே?’

    அவசியமில்லைமா! ஹார்ட் அட்டாக் வர, காரணம் எதுவும் தேவையில்லை! ஆனா பலமா வந்திருக்கு!

    24 மணி நேரம் கெடு வைத்து விட்டதால் மகன், மகள் இருவருக்கும் தந்தி அடித்து விட்டாள்.

    வரதராஜனின் அம்மா, அவரது தம்பியிடம் இருந்தார். பெற்ற தாயாச்சே! நாளைக்கு ஒரு பேச்சு வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கும் தந்தி மூலம் தகவல் கொடுத்துவிட்டாள். வரதராஜனின் தங்கை உள்ளூர்தான்.

    தங்கை அந்த சமயம் வெளியூர் போயிருந்ததால், இருக்கவில்லை! சியாமளா கோயிலில் ஒரு மாதிரி நிச்சலனமாக உட்கார்ந்திருந்தாள். இருட்டத் தொடங்கிவிட்டது!

    நேராக ஆஸ்பத்திரிக்கு வந்தாள்.

    கோவையில் பிடிக்கும் பெண் ரம்யா வந்து விட்டாள்.

    அப்பாவுக்கு என்னம்மா?

    திடீர்னு ஹார்ட் அட்டாக். நம்ம விதிடி ரம்யா! டாக்டர் 24 மணி நேரம் கெடு சொல்லிருக்கார்!

    மகளைப் பார்த்ததும் அழுகை வந்தது!

    பிரகாஷ் வந்துட்டானாம்மா?

    தந்தி குடுத்திருக்கேன். காரைக்குடிலேருந்து வரணுமேம்மா!

    இரவு எட்டு மணிக்கு பிரகாஷ் வந்து விட்டான் ஒன்பது மணிக்கு மாமியாரும், மச்சினனும்.

    மாமியார் அழுது சீன் க்ரியேட் பண்ணிவிட்டாள்.

    நர்ஸ் வந்து விரட்டினாள்.

    இதப் பாருங்கம்மா! இதெல்லாம் இங்கே கூடாது! டாக்டர் கோவப்படுவார். அவங்க அமைதியாத்தானே இருக்காங்க!

    பெத்த தாய்மா!

    சரி ரம்யா நீ பாட்டியை, சித்தப்பாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு போ! ராத்திரி இங்கே ஒருத்தர்தான் தங்கலாம்!

    டாக்டர் வெளிப்பட்டார்.

    எதுவும் வேண்டாம்மா! உங்க போன் நம்பர்தான் எங்ககிட்ட இருக்கே! நீங்களும் போயிடுங்க!

    சியாமளா வீடு திரும்பினாள்.

    திடீர்னு வரதுவுக்கு ஏன் இப்படி ஆச்சு?

    தெரியலை அத்தே! காலைல பேங்க் புறப்படும் போது கூட நல்லாத்தான் இருந்தார்.

    அவனுக்கு கொஞ்ச நாளா உடம்புல சதை போடுது!

    கூட இருக்கறவங்க பார்த்துக் கேட்டு சமைச்சுப் போடணும்! மாமியார் குறை காணத் தொடங்கி விட்டாள்.

    பாட்டி! அப்பாவுக்கு உடம்புக்கு முடியலைனு அம்மா நொந்து கிடக்காங்க. இப்பக் கூடவா குறை காணணும்?

    ரம்யா சுருக்கென கேட்டு விட்டாள்.

    "ரம்யா! நீ சும்மாரு!’

    என்ன பேச விடாம ஏன்மா செய்யற? உன்னை விட அவஸ்தை யாருக்கு?

    நிறுத்துடி! உங்கப்பாவை பெத்தவள்தான் நான்!

    பாட்டி...!

    ரம்யா! நீ உள்ள போ!

    சியாமளா அதட்டினாள். எல்லாரும் சாப்பிட்டு விட்டுப் படுத்து விட்டார்கள். மச்சினன் ஏற்கனவே ஒட்ட மாட்டான். பாசம் இல்லாத பிறவி! குறட்டையே விடத் தொடங்கி விட்டான்.

    இருபது வயது மகன் பிரகாஷ் அருகில் வந்தான்.

    அம்மா! நீ தூங்கலியா?

    இல்லப்பா! எப்படி தூக்கம் வரும்?

    அப்பாவுக்கு எதுவும் ஆகாதும்மா!

    ஆகக் கூடாதுப்பா! குடும்பம் நிர்கதியாயிடும்!

    பிரகாஷ் அருகில் வந்து அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

    நீ போ கண்ணா! போய்ப்படு!

    இல்லைமா! நான் உன் பக்கத்துலேயே இருக்கேன்!

    விடிய விடிய உட்கார்ந்திருந்தாள் சியாமளா.

    காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து முடித்தாள். பால் வந்து விட்டது.

    "சியாமளா! காபியைப் போடு!’

    சரி அத்தே!

    காபி போட்டுக் கொடுத்தாள்.

    நேத்திக்கு ராத்திரியே கோபால் சரியாச் சாப்பிடலை! என்ன டிபன் பண்ணப் போற?

    அத்தே! அதுக்கெல்லாம் நேரமில்லை!

    நீ வீட்ல இருந்து சித்தப்பாவுக்கு பண்ணிக்குடேன் பாட்டி!

    ஏண்டி! நான் என்ன சமைச்சு போடவா இங்கே வந்தேன்?

    ரம்யா! சும்மாரு! வெளியே பாத்துக்கலாம். அத்தே! பிரகாஷ் வாங்கிட்டு வருவான்! நான் புறப்படறேன்! பிரகாஷ் நீ எல்லாருக்கும் டிபன் வாங்கிக் குடுத்துட்டு, கூட்டிட்டுவா!

    மச்சினன் ஒரு காசு செலவழிக்க மாட்டான்!

    சியாமளா புறப்பட்டு விட்டாள். ரம்யாவும் உடன் வந்தாள். ஆஸ்பத்திரியை அடைந்ததும் படபடப்பாக இருந்தது.

    டாக்டர் வெளிப்பட்டார்.

    அவர் தற்சமயம் ஆபத்தைக் கடந்துட்டார்மா!

    தேங்க்யு டாக்டர்!

    இன்னும் நினைவு திரும்பலை! ஆனா ஒண்ணுமா! இனிமேத்தான் நீங்க ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்! அவர் நாலஞ்சு மாசம் பெட்ரெஸ்ட்ல இருக்கணும். எந்த அதிர்ச்சியும் அவருக்கு வரக்கூடாது. அடுத்த அட்டாக் வந்தா. ஆள் இல்லை!

    சரி டாக்டர்!

    லீவு இருக்கா அவருக்கு?

    தெரியலை டாக்டர்!

    Enjoying the preview?
    Page 1 of 1