Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்புடன் கொஞ்சம் வம்பு
அன்புடன் கொஞ்சம் வம்பு
அன்புடன் கொஞ்சம் வம்பு
Ebook97 pages1 hour

அன்புடன் கொஞ்சம் வம்பு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரியாக மூன்றே நாட்கள்.
 யமுனா - சிங்கிள் பெட்ரூம் வீடொன்றை பிடித்துவிட்டாள்..
 அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இருந்தது அந்த வீடு.
 சின்னதாக இருந்தது. ஆறுநூறு சதுர அடி! ஒரு ஹால், படுக்கை அறை, சமயல்கட்டு - குளியல், கழிப்பறை இணைப்பு. வாடகை ரெண்டாயிரம் - முன் பணம் - இருபதாயிரம்.
 பாஸ்கியையும் அழைத்துப் போய் வீட்டைப் பார்த்தாள். இருவருக்கும் பிடித்திருந்தது!
 'நாளைக்கு முன்பணம் தருகிறேன்' என்று சொல்லிவிட்டாள்!
 வெளியே வந்தார்கள்.
 "யமுனா! பணத்துக்கு எங்கே போவ?"
 "பாஸ்கி! இதுக்கு இருபதாயிரம் - கோயில்ல வச்சு நம்ம கல்யாணம். அதுக்கு தாலி, வேட்டி, புடவை... கோயில் செலவுனு ஒரு பத்து ரூபா வரும்! தவிர, குடித்தனம் ஆரம்பிக்க குறைஞ்ச பட்சம் இருபது ரூபா வேணும்!"
 "மொத்தமா அம்பது ரூபாயா?"
 "என் சேமிப்புல இருபது ரூபா இருக்கு! ஆபீஸ்ல ஃபைனல் வித்ட்ராயல் ஒரு முப்பது ரூபா போட்டுட்டா, எல்லாம் சரி!"
 "இப்ப நீ போட்டிருக்கற தங்க செயின், வளையல்கள்?"
 "கழட்டி வச்சிட்டு வந்துடுவேன். கழுத்துல மஞ்சள் கயிறு - ஒரு சவரன்ல தாலி. அவ்ளோதான்!"பாஸ்கி எதுவும் பேசவில்லை!
 இருவரும் ஆலயத்துக்கு வந்தார்கள். அங்கே தெரிந்த ஒருவரை வைத்து முகூர்த்தத் தேதியைக் கேட்டார்கள். அந்த வாரக் கடைசியில் இருந்தது!
 குறித்துக் கொண்டார்கள்.
 கோயிலில் கட்டணம் செலுத்தி, அந்த நாளைப் பதிவு செய்து கொண்டார்கள்!
 எல்லாம் தயார்!
 கடைக்குப் போய் தாலி, கூறைச் சேலை, வேட்டி என எளிமையாக வாங்கிக் கொண்டார்கள்!
 இருவரும் வெளியே வந்தார்கள்.
 "உங்க வழிகாட்டி துரை சாருக்கு விவரத்தைச் சொன்னீங்களா?"
 "லேசு பாசா சொல்லிட்டேன்!"
 "நல்லா சொல்லிடுங்க! அவர் நம்ம கல்யாணத்துக்கு வந்து ஆசீர்வாதம் பண்ணணும்! உங்களுக்கு அப்பப்ப ஏதாவது வாய்ப்புகளை வாங்கிக் குடுத்து தாங்கிப் பிடிக்கறவர் அவர்தான்! அவரை நீங்க மறக்கக்கூடாது!"
 "மறப்பேனா? அவரை மறந்தா, நான் மனுஷன் இல்லை! இன்னிக்கே பேசிர்றேன்!"
 "நானும் வர்றேன். போனை அடிங்க!"
 ஒரு பப்ளிக் பூத்தில் போய் பாஸ்கி எண்களைச் சுழற்றினான்.
 எதிர்முனையில் துரை!
 "அண்ணா! நான் பாஸ்கி பேசறேன்!"
 "சொல்லுடா!"
 "எங்கே இருக்கீங்க? உங்களைப் பாக்க வரணுமே!"
 "வாயேன்!" இடத்தைச் சொன்னார்இருவரும் புறப்பட்டார்கள்.
 துரை ஒரு கதாசிரியர். பத்திரிகை, சின்னத்திரை, சினிமா என்று எதையும் விடாதவர்! எழுதியே பெரிய நிலைக்கு வரமுடியும் என்று நிரூபித்தவர். தனக்கென ஒரு மார்க்கெட்டைப் பிடித்துக் கொண்டு அதில் ஜெயித்துக் கொண்டிருப்பவர்!
 அவர் ஒரு கம்பெனிக்கு எழுதும்போது அங்கே உதவி இயக்குநராக இருந்தான் பாஸ்கி!
 அவனது வேலைத்திறன், நகைச்சுவை, பவ்யம், பணிவு எல்லாம் துரையைக் கவர்ந்துவிட்டது!
 அதிலிருந்து நட்பு ஆரம்பமானது!
 பாஸ்கிக்கு அந்த வேலை போய்விட்டது! அன்று முதல், அவனை எங்காவது ஓரிடத்தில் அமர்த்தி வேலையில் இருக்கச் செய்வது துரைதான்.
 அவனது கடன்களை அடைத்தார்.
 அவ்வப்போது சில்லறைச் செலவுகளுக்கெல்லாம் அவனுக்குத் தருவார்!
 கணக்கே பார்க்க மாட்டார்.
 அவன்மேல் அப்படி ஒரு பாசம். பாஸ்கியும், துரையைக் கேட்காமல் எதையும் செய்யமாட்டான்!
 இருவரும் துரை இருந்த இடத்துக்கு வந்துவிட்டார்கள்.
 பாஸ்கி, விவரங்களைச் சொல்லத் தொடங்கினான்.
 யமுனாவுக்கு ஏற்கனவே துரையைத் தெரியும்!
 பாஸ்கி அறிமுகப்படுத்தியிருக்கிறான்!
 பாஸ்கி சொல்லி முடித்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798215617519
அன்புடன் கொஞ்சம் வம்பு

Read more from Devibala

Related to அன்புடன் கொஞ்சம் வம்பு

Related ebooks

Related categories

Reviews for அன்புடன் கொஞ்சம் வம்பு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அன்புடன் கொஞ்சம் வம்பு - Devibala

    1

    கண்ணாடி முன் நின்று முகத்துக்கு பவுடர் அடித்துக் கொண்டிருந்தாள் யமுனா.

    முன் உச்சியில் இரண்டு வெள்ளை முடிகள் நீட்டிக் கொண்டு தெரிந்தன. அம்மா உள்ளே வந்தாள்.

    யமுனா! நாளைக்கு உன்னைப் பொண்ணு பாக்கவர்றாங்க! மத்யானம் லீவு போட்டுட்டு வந்துடு!

    யமுனா சிரித்தாள்.

    என்னடீ சிரிக்கற? நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்!

    எனக்கு வயது இருபத்தியெட்டு! முன்னுச்சில நரை வந்தாச்சு!

    போதும் யமுனா! உங்கக்கா கல்யாணம் முடியாம உன்னுது நடக்கக் கூடாதுனு இருந்தோம். இப்ப அந்தப் பிரச்னை இல்லை! ஜாதகம் பொருந்தியாச்சு! பையன் வெளிநாட்லேருந்து போன வாரம்தான் வந்திருக்கான். பார்த்து, மனசுக்குப் புடிச்சு, மற்ற சங்கதிகளும் பொருந்திட்டா, நீயும் வெளிநாட்டுக்குப் போக என்ன தேவைகளோ அதை செஞ்சிட வேண்டியதுதானே?

    யமுனா திரும்பினாள்.

    என்னை யாரும் பாக்க வரவேண்டாம்!

    ஏன்? கேட்டபடி அப்பா உள்ளே வந்தார்.

    எனக்கு வெளிநாட்டுக்குப் போக இஷ்டமில்லை! இந்த வரன் வேண்டாம்!

    என்ன யமுனா பேசற நீ? அவனோட சம்பளம் என்ன தெரியுமா? மூவாயிரம் அமெரிக்க டாலர்கள்! கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம்! முடியுமா? இங்கே கிடைக்குமா இத்தனை பெரிய தொகை? அஞ்சு வருஷம் பாடு பட்டா போதும். வாழ்க்கைல நிரந்தரமா செட்டில் ஆயிடலாம். யாருக்குக் கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம்?

    அப்பா! வாழப் போறது நான். இதுல என் விருப்பத்தையும் நீங்க பாக்கணும்! இஷ்டமில்லாம என்னை கஷ்டப்படுத்தாதீங்க. எனக்கு நேரமாச்சு!

    தன் பொருட்களை எடுத்துக் கொண்டு வேகமாக வாசலைத் தாண்டிக் கொண்டேயிருந்தாள்.

    ஏண்டீ! இவ தட்டிக் கழிக்கற மூணாவது வரன் இது! எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருக்கா! என்ன அர்த்தம் இதுக்கு?

    புரியலையே? விரும்பாம கட்டி வச்சிட்டு, நாளைக்கு ஒரு பிரச்னைனா, ஆயுள் முழுக்க நம்ம தலை உருளும்! வேணுமா?

    அதுக்காக அவளை இந்த வீட்ல எத்தனை காலம் வச்சுக்க முடியும்?

    உண்மைதான்! ஏற்கனவே கல்யாண வயசைத் தாண்டிக்கிட்டு இருக்கா!

    ஒருவேளை யாரையாவது விரும்பறாளோ?

    அப்படி இருந்தா சொல்லுவாங்க! கை நிறைய சம்பாதிக்கறா. தைரியசாலி. அவ எதுக்கும் பயப்படமாட்டா!

    எதுக்கும் கேட்டுப் பாத்துடேன்!

    இன்னிக்கு ஆபீஸ் விட்டு வரட்டும் - கேட்ரலாம்!

    இவர்கள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் யமுனா பஸ் ஸ்டாப்பில் இருந்தாள்.

    ஆபீசுக்கு கடையில் உள்ள தொலைபேசி மூலம் லீவைச் சொல்லிவிட்டு, இன்னொரு முறை டயல் செய்தாள்.

    எடுத்தது பாஸ்கர்.

    நான் யமுனா பேசறேன்!

    சொல்லு!

    புறப்பட்டு வாங்க! வழக்கமா மீட் பண்ற கார்டன்ல இருக்கேன். பேசணும்!

    சரி!

    பாஸ்கரும், யமுனாவும் கார்டனில் இருந்தார்கள்.

    அடுத்த வரன் வந்தாச்சு பாஸ்கி! வெளிநாட்ல வேலை! மூவாயிரம் டாலர் மாசச் சம்பளம். நாளைக்கு பொண்ணு பாக்க வரத் தயாராயாச்சு! ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கு!

    வாழ்த்துக்கள்! தேதி முடிவாயாச்சா?

    பாஸ்கி! விளையாடறீங்களா?

    என்ன யமுனா நீ? இத்தனை சொன்னப்புறம், உனக்கொரு நல்ல வாழ்க்கை வருதுன்னா, அதைத்தானே உங்க வீட்ல தேர்ந்தெடுப்பாங்க?

    இதுக்கு முன்னால ரெண்டு வரன் வந்தது! நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேனா? நான் தட்டிக் கழிக்கற மூணாவது வரன் இது!

    அவன் பேசவில்லை!

    பாஸ்கி! வீட்ல இதுவரைக்கும் எதையும் சொல்லலை! இனிமே சொல்லிடப் போறேன்!

    எதை.

    நம்ம காதல் விவகாரத்தை!

    உங்க வீட்ல சம்மதிப்பாங்களா?

    கண்டிப்பா மாட்டாங்க! ஆனா நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கறோம்!

    பிரச்னை பெரிசாகுமே?

    வேற வழியில்லை பாஸ்கி! ஏதாவது செஞ்சுதானே தீரணும்? எத்தனை நாளைக்கு எந்த முடிவும் எடுக்காம இழுத்துக்கிட்டு நிக்கறது

    யமுனா! நல்லா யோசிச்சுத்தான் முடிவெடுக்கறியா?

    ஆமாம்!

    நான் வெத்து வேட்டு. நிரந்தரமான வருமானம் இல்லை! உறவுகள் யாரும் என்னை மதிக்கலை! இப்ப ஏறத்தாழ நான் ஒரு அனாதை! முப்பத்தஞ்சு வயசு வரைக்கும் வெளிச்சம் வரும்னு காத்துக்கிட்டு இருக்கேன். வரலை! இனிமே வருமானும் தெரியலை! எந்த தைரியத்துல நம்ம கல்யாணம் நடக்கும்?

    நான் உத்யோகம் பாக்கறேன் பாஸ்கி! நிரந்தர சம்பளம். ரெண்டு பேர் வாழக்கூடிய அளவுக்கு நியாயமான சம்பளம். நீ தைரியமா ரிஸ்க் எடுக்கலாம். உன்னை நான் ஆதரிக்கறேன்!

    பாஸ்கர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவளைப் பார்த்தான்.

    நீ பெரிய மனுஷனா வருவேனு எனக்கு நம்பிக்கை இருக்கு பாஸ்கி!

    பாஸ்கி பேசவில்லை!

    இன்னிலேருந்து எனக்கு சோதனை காலம்!

    உனக்கு மட்டும் இல்லை யமுனா. எனக்கும்தான்!

    தைரியமா இரு பாஸ்கி! உங்கிட்ட திறமை இருக்கு. நச்சயமா நீ ஜெயிப்பே!

    யமுனா புறப்பட்டு விட்டாள்.

    மாலை வீடு திரும்பி முகம் கழுவி, நைட்டிக்கு மாறினாள்.

    யமுனாவுடன் பிறந்தவர்கள் ரெண்டு பேர். ஒரு அக்கா - சமீபத்தில் கல்யாணமாகிவிட்டது. ஒரு தம்பி இன்ஜினியரிங் கடைசி வருஷம் படித்துக்கொண்டிருக்கிறான்.

    அப்பாவுக்கு ஓய்வு பெற ரெண்டே வருஷங்கள்.

    ‘அதற்குள் யமுனாவுக்கு கடனை வாங்கிக் கல்யாணத்தை முடித்துவிடலாம். ஓய்வு பெறுவதற்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1