Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

புலி வால்
புலி வால்
புலி வால்
Ebook97 pages33 minutes

புலி வால்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை எழுந்து குளித்து ஜெயா ஆபீசுக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
 காலை, மதிய உணவை அலுவலகமே கொடுத்து விடும். இரவு மட்டும்தான் வீட்டில்!
 அம்மா ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள். ஜெயா வாங்கிக் குடித்தாள்.
 கைப்பை திறந்து பணத்தை எடுத்தாள். எண்ணினாள். அம்மாவிடம் தந்தாள்.
 "இதுல அஞ்சாயிரம் இருக்கும்மா! வச்சுக்கோ!"
 அம்மாவுக்குப் புரியவில்லை.
 "உனக்கு முழுச் சம்பளம் வரலியா ஜெயா?"
 "வந்ததே! பிடித்தம் போக முப்பத்தி ஏழாயிரம் ரூபாய் வந்திருக்குமா! என் செலவுக்குனு இந்த அஞ்சாயிரத்தை உங்கிட்ட நான் தந்திருக்கேன்!"
 அம்மா பேச நினைத்து முடியாமல் ஒரு மாதிரி தடுமாற,
 "வர்றேன்மா! நேரமாச்சு!" நேராக வாசலை நோக்கி நடந்தாள். அப்பா காலை நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு எதிரே வர,
 "பை ப்பா!" போய்க் கொண்டே இருந்தாள்.
 அப்பா உள்ளே வந்தார்.
 "என்னங்க! அஞ்சாயிரம் ரூபாய் பணம் குடுத்தா! முப்பத்தி ஏழாயிரம் கைக்கு வந்ததாம். அவ செலவுக்குனு அஞ்சாயிரம் தந்திருக்கா! வரவர இந்த வீடு ஹாஸ்டல் மாதிரி ஆயாச்சு!"
 அம்மாவின் குரலில் கோபம் இருந்தது.புஷ்பா உள்ளே இருந்தபடி இதைக் கேட்டாள். கணவன் ரவியிடம் வந்தாள்.
 "ஜெயா அஞ்சாயிரம்தான் குடுத்திருக்காளாம்!"
 "அப்படியா?"
 "நீங்களும், நானுமா முப்பத்தி அஞ்சாயிரம் சம்பாதிக்கறோம். இருபதைக் குடுக்கறோம். கொஞ்சம் அதிகமாயில்லை?"
 ரவி திரும்பினான்.
 "என்ன பேசற புஷ்பா நீ?"
 "தப்பில்லீங்க! அவ தனி ஆள். இது முதல் சம்பளம். இத்தனை கணக்கா இருக்காளே! நமக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கு! எத்தனை தேவைகள் இருக்கு?"
 அம்மா உள்ளே வந்தாள்.
 "புஷ்பா! நீங்க குடுக்கற பணத்தையெல்லாம் நாங்க முழுங்கறதில்லை! குடும்பத்துக்கு என்ன செலவாகுதுன்னு ஒவ்வொரு ரூபாய்க்கும் நான் கணக்கு எழுதி வச்சிருக்கேன்! குடும்பம் நடத்தறது சுலபமில்லை."
 "நீங்க எங்கிட்ட ஏன் அத்தே கோவப்படறீங்க? உங்க பொண்ணே அப்படித்தானே இருக்கா?"
 "புஷ்பா! சும்மா இரு!"
 "நான் சும்மாத்தாங்க இருக்கேன். இப்ப முளைச்ச செடிதான் பேயா ஆடுது!"
 "நிறுத்துடி! எதுக்கு ஜெயாவை விமர்சிக்கற?" ரவி கோபமாக கூச்சலிட, அம்மா குறுக்கிட்டாள்.
 "ரவி! உன் தங்கச்சியை ஆதரிச்சு, புஷ்பாவை கோவப்படாதே! அது நியாயமில்லை. வீட்ல பிறந்த பொண்ணுக்கே பொறுப்பு இல்லைனா, வந்தவங்க கிட்ட அதை எப்படி நாம எதிர் பார்க்க முடியும்?"
 "நீங்க என்னை ஆதரிக்கறீங்களா? குத்தறீங்களா?"
 "உன்னைக் குத்த நான் யாரும்மா? நானே குத்துப்பட்டு ரத்தம் சொட்ட நிக்கறேன்!"புஷ்பா வேகமாக உள்ளே போய்விட, ரவி அருகில் வந்தான். அப்பா கதவோரம் நின்றார்.
 "அம்மா! புஷ்பாவுக்கு நேரே உன்கிட்ட நான் பேசக்கூடாதுனு அடக்கி வாசிச்சேன். ஆனா ஜெயா பண்றது நல்லால்லை. உலகத்துல எல்லாரும் சுயநலமா சிந்திக்கத் தொடங்கிட்டா, குடும்பம்னு ஒரு அமைப்பு எதுக்கு?"
 கேட்டு விட்டு அவனும் உள்ளே போக,
 அப்பா அருகில் வந்தார்.
 "பாத்தீங்களா? ஜெயாவோட செயல் எப்படி இந்த வீட்டுக்குள்ள புயலா வீசுது பாத்தீங்களா?"
 "இருடி! நீங்க யாருமே நடந்துக்கற விதம் எனக்கு உடன்பாடா இல்லை."
 "என்ன சொல்றீங்க?"
 "வேலை கிடைச்சு, நல்ல சம்பளம் கைக்கு வந்தா, முதல் நாலஞ்சு மாசம் மனசு பறக்கும்! நம்ம உழைப்புல வந்த சொந்த சம்பாத்யம்னு ஒரு பரபரப்பு எல்லாருக்குமே இருக்கும். தாறுமாறா செலவழிக்கத் தோணும். விட்டுப் பிடிக்கணும். அந்த ஆரவாரம் அடங்கி, குடும்பத்தைப் பற்றி யோசிக்கத் தோணும்!"
 "எப்ப?"
 "இதப்பாரு மங்களம்! ஜெயா சம்பளம் நமக்கு சாசுவதமா? அதை கமிட் பண்ணிக்கிட்டு, நாளைக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டா, பெரிய பள்ளம் விழும். கமிட் பண்ணிக்காம இரு! அவளும் இப்ப சந்தோஷமா இருப்பா! நமக்கும் எதிர்பார்ப்பு இருக்காது!"
 "என்ன பேசறீங்க? ஒரு வருஷம் கழிச்சே கல்யாணம்னு வச்சுக்கிட்டாக் கூட, அவ செலவு போக மூணு லட்ச ரூபாய் தேறினா நல்லதில்லையா? கல்யாணச் செலவுல ஒரு கணிசமான பாரம் குறையுமே! லட்சக் கணக்கா செலவழிச்சு கல்யாணம் நடத்த நமக்குப் பணம் வேண்டாமா?"
 "அது நம்ம கடமை மங்களம்!"
 "கடமை பிள்ளைகளுக்கும் உண்டுங்க!"திரும்பவும் சொல்றேன். நீ உன் மனசை மாத்திக்கணும். அதை இறுக்கமா எதிர்பார்ப்புகளோட நீ வச்சிருந்தா, ரொம்பக் கஷ்டப்படுவே! இப்ப காலம் மாறியாச்சு! இதுக்கு மேல் நான் என்ன சொல்ல?"

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223736615
புலி வால்

Read more from Devibala

Related to புலி வால்

Related ebooks

Related categories

Reviews for புலி வால்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    புலி வால் - Devibala

    1

    ஜெயா முதல் சம்பளம் வாங்கிக் கொண்டு வரப் போகிறாள் என்று அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என குடும்பமே ஆர்வமுடன் காத்திருக்கிறது.

    ஜெயா அந்த வீட்டுக்கு ஒரே பெண். செல்லப் பெண். பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் லஞ்சம் எதுவும் தராமல் கவுன்சிலிங் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல கல்லூரியில் பி.டெக்கில் இடம் கிடைத்து.

    அப்பா தனியாரில் உத்யோகம்!

    அம்மா குடும்பத் தலைவி!

    மூத்தவன் ரவி வங்கியில் மானேஜர். அவன் மனைவி பள்ளிக் கூடத்தில் டீச்சர். ஓரளவுக்கு சம்பாதிக்கும் குடும்பம்தான். ரவிக்கு மூன்று வயதில் ஒரு மகன்.

    ஜெயாவின் படிப்புக்கு ரவியை நாடாமல் அப்பாவே லோன் போட்டு சமாளித்து கவனித்துக் கொண்டு விட்டார்.

    சொந்தமாக ஒரு வீடு இப்போது வாழும் வீடு!

    ரவிக்கு ஒரு கார். அப்பாவுக்கு ஸ்கூட்டர்.

    ஒரே குடும்பமாக வாழ்ந்தாலும் ரவி தன் பங்கைக் கொடுத்து விடுவான். அம்மாவின் நகைகள், சேமிப்பில் கொஞ்சம் பணம் இருக்கிறது.

    ஜெயாவின் கல்யாணம் என்று வரும்போது கட்டாய ஓய்வு பெற்று, அதில் வரும் மொத்தப் பணத்தில் நடத்தி விடலாம் என்ற நம்பிக்கை!

    ஒரு வருடமாவது அவள் சம்பாதித்தால் அந்தப் பணமும் சேர்ந்து விடும் என்பது அம்மாவின் கணக்கு!

    மூன்றாவது ஆண்டு முடிவில் கல்லூரி வளாகத்தில் நேர்முகம் வந்து, பிரபலமான நிறுவனத்தில் ஜெயாவுக்கு வேலை கிடைத்து விட்டது. ஆரம்பச் சம்பளமே நாற்பதாயிரம் ரூபாய் என்றதும் குடும்பமே வாய் பிளந்தது.

    இதோ அந்த வேலையில் சேர்ந்து ஜெயா வாங்கும் முதல் சம்பளம்!

    குடும்பமே காத்திருக்கிறது.

    இந்த ஒரு மாத காலத்தில் புதுவேலை ஜெயாவுக்கு பிடிபட்டு விட்டது.

    காலை எட்டு மணிக்கு புறப்பட்டால் வீடு திரும்ப இரவு பத்தாகி விடுகிறது.

    இது ஒரு கவலை.

    பெண் குழந்தைகளை இத்தனை நேரம் இருக்க விடலாமா? அம்மா புலம்பல்.

    ஆணுக்கு நிகர் பெரிய சம்பளம் வரும்போது பெண்ணும் உழைக்கலைனா விடுவாங்களா?

    அண்ணியின் கேள்வி!

    எட்டரை மணிக்கு ஜெயா வீட்டுக்குள் நுழைந்தாள்.

    அனைவரின் முகத்திலும் மலர்ச்சி!

    ஜெயா முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு வர, காபி தரட்டுமா ஜெயா?

    எனக்கு பசிக்குதும்மா! என்ன இருக்கு?

    குருமா பண்ணி வச்சிருக்கேன். சூடா சப்பாத்தி போட்டுத் தரட்டுமா?

    தோசை மாவு இல்லையா?

    இருக்கே!

    தோசை ஊத்திக் குடும்மா! கொத்துமல்லி சட்னி அரை!

    இதோ செஞ்சிர்றேன். புஷ்பா! தேங்காயைத் துருவு! நான் தோசை ஊத்தறேன்!

    பதினைந்து நிமிடங்களில் சூடான நெய் தோசையும், காரமான கொத்துமல்லி சட்னியும் வர, ஜெயா உட்கார்ந்து சாப்பிட்டாள். கூடவே பாலையும் குடித்தாள்.

    இரவு ஒன்பதரை! அடுக்கடுக்காக கொட்டாவிகளை விட்டாள்.

    காலைல ஏழு மணிக்குப் போகணும். நான் போய்ப் படுக்கறேன்! எழுந்து போனாள்.

    அத்தனை பேருக்கும் ஏமாற்றம்!

    முதல் சம்பளம் என்றதும் ஸ்வீட்ஸ், பரிசுப் பொருட்கள் என ஏதாவது வாங்கி வருவாள் என்று குடும்பமே எதிர்பார்த்தது.

    இல்லை.

    வந்து சாப்பிட்ட பிறகு சம்பளக் கவரை வெளியில் எடுப்பாள் என எதிர் பார்த்தார்கள்.

    அதுவும் இல்லை.

    அம்மா பின்பற்றி நடந்து உள்ளே வந்தாள்.

    சம்பளம் வரலியாம்மா ஜெயா?

    காலைல தர்றேனேம்மா! ஓடியா போயிடுவேன்?

    அம்மாவுக்கு சுருக்கென்றது. கதவோரம் வந்து நின்ற அண்ணி புஷ்பா இதைக் கேட்டாள்.

    அவரவர் கலைந்து தங்களது படுக்கை அறைக்குள் போய் விட்டார்கள்.

    ரவி பெட்ஷீட்டை உதறிக் கொண்டிருந்தான்.

    குழந்தை ஒரு ஓரமாக உறங்கிக் கொண்டிருந்தது.

    என்னங்க! ஜெயா ஏன் இப்படி இருக்கா?

    எப்படி இருக்கா?

    நமக்குத் தரவேண்டாம். முதல் சம்பளம் வாங்கிட்டு, பெத்த அம்மா வாய் விட்டுக் கேட்டும், வெடுக்குனு கடிக்கறாளே! பதவி வேலை செய்யுதா?

    நீ ஏன் இதைப் பெரிசு படுத்தறே?

    நான் என்னங்க பெரிசு படுத்தறேன். நான் எதுல தலையிட்டேன் இந்த வீட்ல? வீட்டு வேலைகளை செஞ்சுகிட்டு, உத்யோகமும் பாத்துட்டுத்தான் இருக்கேன். நானும் பிடித்தம் போக பத்தாயிரம் ரூபாய் கொண்டு வரத்தான் செய்யறேன். இப்படி முதல் சம்பளத்துக்கே தலைக்கனம் புடிச்சு ஆடலை!

    ரவி அருகில் வந்தான்.

    புஷ்பா! ஏன் கோவப்படற?

    எனக்கென்ன கோபம்? நல்லால்லை ஜெயா நடந்துக்கற விதம்!

    விடு! களைப்பா இருந்திருப்பா!

    உங்க தங்கச்சியை நீங்க விட்டுக் குடுக்க மாட்டீங்களே?

    இதப்பாரு! படிப்பு முடிச்சாச்சு! அடுத்தது கல்யாணம். பாவம் எத்தனை நாளைக்கு இந்த வீட்ல இருக்கப் போறாளோ? சந்தோஷமா இருக்கட்டுமே!

    இதை இவர்கள் பேசும் நேரம், அம்மா தன் அறையில் குமுறிக் கொண்டிருந்தாள்.

    ‘காலைல தர்றேனேம்மா! ஓடியா போயிடுவேன்’னு கேக்கறாங்க! எனக்கு முகத்துல அடிச்ச மாதிரி இருந்தது. நான் பணத்துக்கு பறக்கறேனா என்ன?

    விட்றி! பசி, தூக்கம்னு வரும்போது சிரிச்சுகிட்டே பேச முடியாது. ஜெயா எப்பவுமே கொஞ்சம் படக்குனு பேசற பொண்ணுதானே? உனக்குத் தெரியாதா?

    "அதில்லிங்க! இத்தனை நான்

    Enjoying the preview?
    Page 1 of 1