Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadai Thenkai
Kadai Thenkai
Kadai Thenkai
Ebook140 pages44 minutes

Kadai Thenkai

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465438
Kadai Thenkai

Read more from Devibala

Related to Kadai Thenkai

Related ebooks

Reviews for Kadai Thenkai

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadai Thenkai - Devibala

    13

    1

    ஏற்கனவே பஸ் லேட்டு! அதிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்! சகலமும் கடந்து ஆபீசுக்குள் நுழைவதற்குள் மணி பத்தரை!

    வங்கியின் ஆரம்ப நேரம் பத்து! அரை மணிநேர தாமதம்!

    புவனாவுக்கு மூச்சு வாங்கியது!

    தன் இருப்பிடத்துக்கு வந்து உட்கார்ந்தாள்! வியர்வை வழிந்தது! துப்பட்டா எடுத்து துடைத்துக் கொண்டாள்! தண்ணீர் குடித்தாள்!

    அட்டெண்டன்ஸ் உள்ளே போய்விட்டது!

    அட்டெண்டர் வந்தான்!

    மானேஜர் வரச் சொல்றார்!

    புவனா எதிர்பார்த்ததுதான்! இன்று கேஷ் கவுன்டரில் உட்காரும் வேலை. தாமதமாகி விட்டதால் சுமதி உட்கார்ந்துவிட்டாள். உள்ளே டோஸ் இருக்கு!

    மெதுவாக மானேஜர் அறைக்குள் நுழைந்து வணங்கினாள்.

    ஒக்காருங்க புவனா!

    திட்டுவதற்கு பதில் மெதுவாகப் பேசுவதும் பயமாக இருந்தது!

    ஸாரி ஸார்! ட்ராபிக் அதிகம்! அதான் லேட்டு!

    இருக்கட்டும்! ஒக்காருங்க!

    புவனா எதிரே உட்கார்ந்தாள்!

    மானேஜருக்கு காஃபி வந்தது!

    புவனாவுக்கும் கொண்டு வாங்க!

    நிமிர்ந்தார்!

    புவனா... ஸாரி டு ஸே! உங்களுக்கு புனேவுக்கு மாற்றல் வந்திருக்கு!

    படக்கென நிமிர்ந்தாள்!

    என்ன சார் சொல்றீங்க?

    இப்பத்தான் ஹெட் ஆபீஸ்லேருந்து ஃபேக்ஸ் வந்தது! உங்களுக்கும் லெட்டர் வரும்! ஒரு வாரத்துல நீங்க அங்கே வேலைல சேரணும் புவனா!

    சார்! இப்பக் குடும்பம் இருக்கற நிலைல இது கஷ்டமாச்சே! இதை நிறுத்த முடியாதா சார்? இங்கியே என்னைத் தக்க வைக்க வழி எதுவும் இல்லையா? நான் யாராவது ஆபீசர்களைப் பார்த்துப் பேசினா பலன் கிடைக்குமா?

    கஷ்டம் புவனா! என்னால முடிஞ்சா, நானே உங்களுக்குச் செய்ய மாட்டேனா! அகில இந்திய அளவுல நம்ம பேங்க்ல இந்த வருஷம் ஏகப்பட்ட மாற்றல் உத்தரவு! இஷ்டத்துக்கு தூக்கி அடிச்சிருக்காங்க! எதுவும் செய்ய முடியலை.

    புவனா இருண்டு போயிருந்தாள்!

    புனேல உங்களுக்கு யாராவது இருக்காங்களா புவனா?

    நண்பர்கள் யாரும் இல்லை! உறவுக்காரங்க மும்பையில தான் இருக்காங்க! என் வீட்டுக்காரரை கேட்கணும்!

    கேட்டுப் பாருங்க! இல்லைனா நான் ஏற்பாடு பண்றேன், புவனா!

    இவருக்கு தமிழ்நாடு அரசாங்கம் தொடர்பான வேலை. அதனால வடநாட்டுக்குப் போக வாய்ப்பே இல்லை. பையன் இப்பத்தான் ரெண்டாவது படிக்கிறான்! வயசான மாமனார், மாமியார்! எப்படி இவங்களை எல்லாம் விட்டுட்டு நான் போவேன்! எதுவுமே புரியலியே?

    உங்க பிரச்னைகள் புரியுது புவனா! எனக்கே கஷ்டமா இருக்கு! வேற வழியில்லை!

    புவனா மூட் அவுட்டாகி தன் இருப்பிடம் வந்தாள்!

    எந்த ஒரு வேலையும் ஓடவில்லை!

    காலையில் தலையில் விழுந்த இடி! ஆனாலும் வேலை செய்துதானே ஆக வேண்டும்!

    மீனாட்சி அருகில் வந்தாள்!

    உனக்கு பூனாவா? எனக்கு திருநெல்வேலி!

    அப்படியா?

    தமிழ்நாட்டுக்குள்ளே கிடைச்சது வசதி! இந்தி ஊருக்குப் போய் என்னால குப்பை கொட்ட முடியாது! நீ என்ன செய்யப்போறே புவனா?

    தெரியலை. மூளையே வேலை செய்யலை.

    சரி புவனா! உன் பையனுக்கு ஆறு வயசாகுது இல்லையா? சமாளிச்சுக்க வேண்டியதுதான்! உங்க வீட்டுக்காரர் இருக்காரே?

    அவரென்ன வீட்லயா இருக்கார்? அவருக்கும் ஆபீசுக்குப் போகணுமே?

    உன் மாமனார், மாமியார் சும்மாத்தானே இருக்காங்க?

    இவன் வாலு! அவங்களால சமாளிக்க முடியாது. நானே சமயத்துல ஆடிப்போறேன். அவங்களால என்ன செய்ய முடியும்? பகல்ல நான் ஆபீசுக்கும், அவன் ஸ்கூலுக்கும் வந்துர்றோம்! மற்றபடி என்னைவிட்டு ராத்திரி தூங்க மாட்டான் என் பையன். அவருக்கு ஒரு காஃபி கூட போடத் தெரியாது! மாமியார் துரும்பைக்கூட கிள்ளிப் போட மாட்டாங்க! எனக்கு எதுவுமே புரியலை!

    யாரோ அழைக்க, மீனாட்சி போய் விட்டாள்!

    புவனா சாய்ந்து உட்கார்ந்தாள்!

    பி.காம் படிப்பை முடித்ததும், புவனாவுக்கு பேங்கில் வேலை கிடைத்துவிட்டது. அப்பாவுக்கு இரண்டு வருஷங்களுக்கு சர்வீஸ் இருந்தது!

    அக்காவின் கல்யாணக்கடன் நிறைய இருந்தது!

    புவனாவின் வருமானம் பெரிய அளவுக்கு அவளது பிறந்த வீட்டைத் தாங்கிப் பிடித்தது.

    அடுத்த வருஷமே வரன் தேடி வந்தது!

    கோபால், மாநில அரசில் ஒரு நல்ல வேலையில்! ஒரு அண்ணன் வெளிநாட்டில்- ஒரு தம்பி பெங்களூரில்! வயதான பெற்றோர்! கல்யாணம் தீர்மானிக்கப்பட்டதும் புவனா சொல்லிவிட்டாள்:

    இன்னும் மூணு வருஷங்களுக்கு எங்கப்பாவுக்கு பாதி சம்பளத்தை நான் குடுப்பேன்!

    சரி புவனா!

    கோபால் ஒப்புக் கொண்டதை தன் அப்பா, அம்மாவிடம் சொல்லவில்லை!

    கல்யாணமும் எளிமையாகத்தான் நடந்தது!

    அம்மா லக்ஷ்மிக்கு இது பெரிய குறை! குத்தல் பேச்சு நிறையவே இருந்தது! புவனா பொருட்படுத்தவில்லை!

    முதல் மாதச் சம்பளத்தில் பாதி பெற்றோருக்குப் போக, விவரம் தெரிந்ததும் கடுப்பாகி விட்டார்கள்!

    ஏண்டா எங்ககிட்ட சொல்லலை?

    விடும்மா! அதுவா ஒரு பிரச்னை?

    பேங்க் உத்யோகம்- கை நிறைய சம்பளம் வரும்னுதானே இவளைத் தேர்ந்தெடுத்தோம்?

    புவனா அவர்களிடம் எதுவும் பேசவில்லை.

    என்னங்க! உங்க குடும்பத்துல என்ன பிரச்சனை? யாரைக் கல்யாணம் செஞ்சு குடுக்கணும்? இத்தனை நாளைக்கு உங்க சம்பளம் மட்டும்தானே வந்தது? அதில் குடும்பம் நடக்கலையா? இப்ப மட்டும் என்ன?

    அப்படி இல்லை புவனா! சம்பாதிக்கற பெண் வாழ வரும்போது நம்மையும் அறியாம ‘கமிட்’ பண்றோமில்லையா? எதிர்பார்த்தது கிடைக்கலைன்னு வந்த ஏமாற்றம்!

    வாழ்க்கை தொடங்கி விட்டது!

    அடுத்த

    Enjoying the preview?
    Page 1 of 1