Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naanal
Naanal
Naanal
Ebook134 pages58 minutes

Naanal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466695
Naanal

Read more from Devibala

Related to Naanal

Related ebooks

Related categories

Reviews for Naanal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naanal - Devibala

    1

    காலையில் பரபரப்பாக ஆபிசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் மீனாட்சி! நாலுமணிக்கே எழுந்து டிபன், சமையல் வேலைகளை பரபரப்பாக முடிந்து, டப்பா கட்டி, வாஷிங் மெஷினில் துணிகள் போட்டு, என்ன பாக்கி?

    எட்டு மணிக்கு ஆபிஸ் பஸ் வந்து விடும்! அதற்குள் எல்லாம் முடித்து புறப்பட்டாக வேண்டும்!

    மூச்சு முட்டிவிடும்! மாமியார் லஷ்மி ஏழரை மணிக்கு எழுந்து வந்தாள்!

    விசாலிக்கு கஞ்சி போட்டியா? அவளுக்கு ஹாட் பேக்ல எல்லாம் எடுத்து வச்சியா?

    ரெடியா இருக்கு அத்தே!

    அவ பசி பொறுக்கமாட்டா! குளிச்சிட்டு வந்ததும் குடுத்துடு!

    எனக்கு நேரமாச்சு! ஹாட் பேக்ல எடுத்து வச்சிருக்கேன் அத்தே!

    இதப்பாரு! சாக்கு போக்கு சொல்லாதே! புரியுதா?

    மீனாட்சி எதுவும் பேசவில்லை!

    சொன்னதை செய்துவிட்டு, புடவை மாற்றிக்கொள்ள உள்ளே போக, விசாலி வெளியே வந்தாள்.

    அண்ணி! ரெடியா?

    டேபிள்ள வச்சிருக்கேன் பாரு!

    எடுத்துதான் கைல குடேண்டி! மாமியார் குரல் கொடுக்க, லஷ்மிமா! வீட்ல இருக்கீங்களா? குரல் கேட்டது!

    வெளியே வந்தாள்.

    தெரிந்த குடும்பம். கணவன், மனைவி சகிதம் உள்ளே நுழைந்தார்கள்!

    வாங்க! என்ன இந்தக் காலை நேரத்துல? ஒக்காருங்க! மீனாட்சி! காப்பி கொண்டு வா!

    இதோ வர்றேன் அத்தே!

    என்ன விசேஷம்?

    மருமகளுக்கு வளைகாப்பு! அஞ்சாம் மாசம் வீட்ல வச்சு நடத்தப் போறோம்! அதுக்கு குடும்பத்தோட நீங்க அவசியம் வரணும்! சார் இல்லையா?

    வர்க் போயிருக்காரு!

    அந்தம்மா குங்குமம் தர, மீனாட்சி காபியுடன் வந்தாள்!

    எப்படீம்மா இருக்கே?

    நல்லா இருக்கேன்மா!

    கல்யபாணமாகி நாலு வருஷம் ஆகலை! வாரிசு எதுவும் வரலியா?

    லஷ்மி நிமிர்ந்து பார்த்தாள்.

    ஊர்ல கேக்காதவங்க பாக்கியில்லை! வெளில தலை காட்ட முடியலை. உங்க மகளுக்கு இப்பத்தான் கல்யாணமாச்சு! அவ உண்டாயிட்டா! என் பொண்ணு விசாலிக்கு நாள் தள்ளிப் போயிருக்கு! மூணாம் மாசம் இது! வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்கேன். இவளுக்குத்தான் எதுவும் வரலை! மூத்த பிள்ளை! குடும்பவாரிசு வரலியேனு வேண்டாத தெய்வம் இல்லை!

    மீனாட்சி ஒரு ஓரமாக நின்றாள்.

    டாக்டர்கிட்ட போனீங்களா?

    ம்! போகாத இடமில்லை!

    என்ன சொல்றாங்க?

    அவங்க எதுவும் தப்பாச் சொல்லலை! நமக்கு நேரம் குதிரலை

    அப்படி விட்ராதீங்க! டாக்டர், கடவுள் ரெண்டையும் கெட்டியா கைப் பிடிங்க! பலிக்கும்!

    அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.

    மீனாட்சி புறப்பட்டு விட்டாள்.

    கேட்டியா அவங்க சொல்றதை? என்னால வெளில நடமாட முடியலை!

    அத்தே! எனக்கு ஆபிசுக்கு நேரமாச்சு!

    மீனாட்சி அரக்கப் பரக்க புறப்பட்டு, ஆபிஸ் பேருந்தை ஓட்டமும், நடையுமாக வந்து பிடித்தாள்.

    அது ஓடத் தொடங்கியது!

    மீனாட்சிக்கு மத்திய அரசாங்கத்தில உத்யோகம், கணிசமான நல்ல சம்பளம்!

    தாயை சிறுவயதில் இழந்தவள்!

    அப்பா பள்ளிக் கூட வாத்தியார். ஒரு அக்கா- ஒரு தம்பி! கண்யமான குடும்பம்!

    கடன் வாங்கி அக்காவை கட்டிக் கொடுத்து விட்டார் அப்பா! அதன் பிறகு அவரிடம் சேமிப்பு எதுவும் பெரிதாக இல்லை. ரிடையர் ஆனபோது கொஞ்சம் பணம் வந்தது!

    தம்பிக்கும் வேலை கிடைக்க, மீனாட்சியின் கல்யாணம் நடத்தக் கஷ்டப்படவில்லை!

    மீனாட்சியின் கணவன் சுபாஷுக்கு தனியாரில் உத்யோகம். மீனாட்சியை விட சம்பளம் குறைவு!

    சுபாஷ் மூத்த மகன் - அப்பா மளிகைக் கடை வியாபாரம். அம்மா லஷ்மி குடும்பத்தலைவி!

    சுபாஷுக்கு அடுத்தது ஒரு தம்பி - நரேன் - மெடிக்கல் ரெப்! மாசத்தில் இருபது நாட்களும் டூர்!

    கடைசிப் பெண் விசாலி!

    மீனாட்சி இங்கு வந்த பிறகுதான் விசாலிக்குக் கல்யாணம் நடந்தது!

    ஏறத்தாழ மீனாட்சியே ஆறு லட்ச ரூபாய் வரை லோன் போட்டுத் தந்தாள்.

    கல்யாணம் நன்றாகவே நடந்தது!

    விசாலிக்கு அண்ணியிடம் மரியாதை உண்டு!

    நரேனும் அந்த ரகம்தான்!

    ஆனால் லஷ்மிக்கு மட்டும் மாமியார் குணம் விட்டபாடில்லை! மீனாட்சி பொறுமையான பெண்! சகலமும் சகித்துக் கொள்வாள்! கோபமே படமாட்டாள்...

    தாயில்லாமல் வளர்ந்து குடும்ப நிர்வாகத்தை ஏற்று நடத்தியதால் வந்த பொறுமை! கோபமும், பதட்டமும் எதற்குமே தீர்வு இல்லை என்று நம்பும் ரகம் மீனாட்சி!

    யாரையும், எந்தக் காரணத்தைக் கொண்டும் வெறுக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருப்பவள்!

    பகையும், கசப்பும் மனித வாழ்க்கையின் நிம்மதியை குலைத்து விடும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவள் மீனாட்சி!

    முதல் இரண்டு வருடங்கள் குழந்தையில்லாமல் போக, கசகசவென பேச்சு தொடங்கி விட்டது!

    மீனாட்சியும் பொறுமையாக இருந்தாள்.

    டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கிடு மீனாட்சி! இதுவே லேட்! உடன் வேலை பார்த்தவர்கள் தொடங்க,

    கணவன் சுபாஷிடம் இதுபற்றிப் பேசினாள்!

    சுபாஷ் எப்போதுமே சுயசிந்தனை இல்லாத ஒரு மனிதன். நல்லவன்-தப்பான எந்தப் பழக்கமும் இல்லை!

    அப்பா எதிலும் பட்டுக் கொள்ளமாட்டார்.

    ஆரம்பம் முதலே குடும்பத்தில் அம்மாவின் ஆட்சி! மூத்த மகன் என்பதால் சுபாஷிடம் அளவு கடந்த பாசம்!

    அவன் கேட்ட சகலத்தையும் அம்மா, கொடுத்துவிட்டதால், அவனைப் பொறுத்தவரை அம்மா ஒரு தேவதை!

    அம்மா சொல்லுக்கு மறுபேச்சில்லாமல் வளர்ந்தவன் சுபாஷ். பெண் பார்த்து நிச்சயிக்க வந்த போதே,

    அம்மாதான் என் கடவுள்! அவங்களைத் தாண்டி ஒரு சொல் அந்த வீட்ல கேக்கக்கூடாது! சொல்லி விட்டான்.

    மீனாட்சியின் தம்பி பதட்டமாகி விட்டான்.

    அக்கா! இந்த இடம் வேணுமா?

    ஏண்டா தம்பி?

    காலம் முழுக்க நீ அடிமையா இருக்க வேண்டி வரும். இது சரிப்படுமா? பட்டதாரி நீ! அரசாங்க உத்யோகம்! எதுக்கு அங்கே போய் கைகட்டி நிக்கணும்?

    நீ ஏன் அப்படி நினைக்கற? அளவு கடந்து ஒரு பிள்ளை தாயை, நேசிச்சா என்ன தப்பு? இதப்பாருடா! நமக்கு அம்மாகூட வாழக் குடுத்து வைக்கலை! அப்படி - வாழறவங்களுக்கு பக்கபலமா இருக்கலாமில்லையா! இனிமே அவங்கதானே எனக்கும் அம்மா!

    தம்பிக்கு புரியவில்லை!

    மீனாட்சிக்கு அத்தனை அமைதியான குணம். தாயின் பாசம் மாமியாரிடம் கிடைக்கும் என ஆசைப்பட்டாள்!

    அதற்கு அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை!

    லஷ்மி அந்த ரகம் இல்லை!

    எல்லா தகுதியும் இருந்தும், பாசத்துக்கு ஏங்கும் ஒரு பெண்ணை, தாயாக நடத்தாமல், மாமியார் புத்தியைக் காட்டத் தொடங்கி விட்டாள்!

    ஏற்கனவே தன் கையை விட்டு பதவி போய் விடக்கூடாது என்ற அதிகார வெறி இதில் ஏற்றி விடும் கூட்டம்!

    இதப்பாரு லஷ்மி! சுபாஷ் உன் மூத்த பிள்ளை! உன் மேல உயிரையே வச்சிருக்கான். வர்றவ படிப்பு, பதவி, பணம் எல்லாம் உள்ளவ! சுலபமா உன் பிள்ளையை தன் பக்கம் இழுத்துடுவா! ஜாக்ரதை! கொஞ்சம் கூட விட்டுக் குடுத்துடாதே!

    லஷ்மிக்கு ஒரு பயம் அடிவயிற்றில் உருள, முதல் நாளிலிருந்தே தன் வேலையை காட்டத் தொடங்கி விட்டாள்!

    சுபாஷ் எதிரில் ஒரு மாதிரி நாடகமாடி இல்லாத போது வேறு முகம் காட்ட, மீனாட்சி அதிர்ந்து போனாள். புரிந்து கொண்டு விட்டாள். ஆனாலும் அதை யாரிடமும் சொல்லாமல் பொறுமை காத்தாள்.

    மாடுபோல உழைத்தாள்.

    பணத்தால், மனதால் இப்படி எல்லா விதத்திலும் ஒரு பெண் பக்கபலமாக இருந்தும்

    Enjoying the preview?
    Page 1 of 1