Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வருவது நீதானா?
வருவது நீதானா?
வருவது நீதானா?
Ebook104 pages33 minutes

வருவது நீதானா?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிருஷ்ணமூர்த்தி ஒரு ஜாதகத்தை எடுத்து மனைவி லக்ஷ்மியிடம் காட்டினார்.
 "இந்த ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்குடி லக்ஷ்மி! பையன் பெரிய எலக்ட்ரானிக் நிறுவனத்துல என்ஜினீயரா இருக்கான். மாசச் சம்பளம் நாப்பதாயிரம் ரூபாய்! ரெண்டு வருஷம் அமெரிக்கால இருந்துட்டு வந்துட்டான். அப்பா புரோகிதர்னா நீ நம்புவியா?"
 "அப்படியா?"
 "பழுத்த வைதீகக் குடும்பம். பூஜை, புனஸ்காரம்னு ஆச்சாரத்தை விடாதவா! மாமி, மடிசார் தான் கட்டிண்டு இருப்பா! இந்தப் பையனோட அண்ணா, டெல்லில குடும்பத்தோட இருக்கார். அக்கா, பெங்களூர்ல! தம்பி படிச்சிண்டு இருக்கான். சொந்த வீடு, கார் எல்லாம் இருக்கு!"
 "அப்ப நல்ல இடம்தான்!"
 "நம்ம காயத்ரி வரட்டும். பேசிட்டு, அவாளைப் பாக்க வரச் சொல்ல வேண்டியதுதான்!"
 காயத்ரி உள்ளே நுழைந்தாள்.
 "வாம்மா! கை, காலை அலம்பிட்டு, சாமியை நமஸ்காரம் பண்ணிட்டு வா!"
 காயத்ரி - உடைமாற்றி, முகம் கழுவி, தலைவாரி, பொட்டு வைத்துக் கொண்டு வந்தாள்!
 "காயத்ரி! இந்த போட்டோவை பாரு! பேரு சம்பத்! எம்.டெக். படிச்சிருக்கான்."
 காயத்ரி வாங்கினாள்.
 மீசையில்லாத முகத்துடன், பெரிய கண்கள் சிரிக்க, நல்ல நிறத்துடன், பிராமணக்களை சொட்ட இருந்தான் சம்பத்!
 "பையன் லட்சணமா இல்லை?"காயத்ரி எதுவும் பேசவில்லை!
 "நல்ல நாள் பார்த்து அவாளை வரச்சொல்லட்டுமா?"
 "ஏண்டீம்மா... ஒரு மாதிரியா இருக்கே?"
 "ஒ... ஒண்ணுமில்லைம்மா!"
 அப்பா அருகில் வந்தார். "காயத்ரி! ஏதாவது பிரச்னையா?"
 "என் ஸ்நேகிதிக்கு பிரச்னை!"
 "என்ன?"
 "ஒருத்தரைக் காதலிச்சிருக்கா! அவர் வேற்று மதக்காரர்! காதலை வீட்ல சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்திருக்கு! அவளைப் பெத்தவா சம்மதிக்கவே இல்லை! அவ மனசு உடைஞ்சு தற்கொலை வரைக்கும் போயிட்டா!"
 "அப்புறம்?"
 "இப்ப ஆஸ்பத்திரில இருக்கா! பிழைச்சிட்டா! குடும்பமே கலங்கிப் போயிருக்கு!"
 அப்பா நிமிர்ந்தார்.
 "இந்த மாதிரி ஜென்மங்கள் எதுக்கு உயிரோட இருக்கணும்? செத்துட்டா, தப்பேயில்லை!"
 "அப்பா!"
 "ஸாரிமா! உன் ஸ்நேகிதியா இருந்தாலும் மனசுக்குத் தோணினதை சொல்லாம இருக்க முடியலை! வேற்றுமதக்காரனை எப்படி பெத்தவா ஏத்துப்பா? இவளுக்கு அறிவு வேண்டாம்? தன்னைப் பெத்தவாளை, குடும்பத்தை இப்படி ஒரு
 குழப்பத்துல விடறது தர்மமா?"
 "அப்பா! ஜாதி, மதம் பாக்கப்படாதுனு எல்லாரும் பேசறதில்லையா?பேசலாம் காயத்ரி! அது ஊருக்கு உபதேசம்தான். தன் குடும்பம்னு வரும்போது எல்லாரும் பாக்கத்தான் செய்யறா!
 அரசியல்வாதிகள்கூட ஜாதி ஓட்லதான் ஜெயிக்கறா! நட்புக்கு ஜாதி, மத பேதமில்லை! தாம்பத்ய வாழ்க்கைக்கு அதை பாக்கத்தான் வேணும். பெத்தவாளை அவமானப்படுத்தியிருக்கா உன் தோழி! நான் அவளோட அப்பா எடத்துல இருந்திருந்தா, தலை முழுகியிருப்பேன். தெவசம் நடத்தியிருப்பேன்!"
 காயத்ரி ஆடிப்போனாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223037392
வருவது நீதானா?

Read more from Devibala

Related to வருவது நீதானா?

Related ebooks

Related categories

Reviews for வருவது நீதானா?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வருவது நீதானா? - Devibala

    1

    பீட்டர் அவளை ஊடுருவி ஆழமாகப் பார்த்தான்!

    என்ன சொல்ற காயத்ரி?

    அப்பா என் கல்யாணப் பேச்சை எடுத்தாச்சு! ஜாதகங்கள் குவியுது! சீக்கிரம் முடிவுக்கு வந்துடுவார்!

    நீ என்ன செய்யப்போற?

    இன்னிக்கு ராத்திரி பேசப் போறேன்!

    நான் ஒரு கிறிஸ்துவன். நீ பிராமணப் பொண்ணு! உங்கப்பா நம்ம காதலை ஒப்புக்குவாரா?

    நிச்சயமா மாட்டார்!

    அப்புறம்?

    ஒரு வருஷமா உயிருக்குயிரா காதலிக்கறோம். பீட்டரைத் தவிர்த்து இன்னொருத்தர் கூட நிம்மதியா வாழ முடியாதுனு சொல்லுவேன்!

    உடனே சரினு சொல்லுவாரா?

    தெரியலை! ஒரு போராட்டம் நடக்கும். முடிவுல நான் கட்டின துணியோட வெளில வர வேண்டியதுதான்! வேற என்ன வழி?

    வேண்டாம் காயத்ரி!

    என்ன வேண்டாம்?

    நான் ஒரு அனாதை! பெத்தவங்களை சிறு வயசுல இழந்து மத்தவங்க ஆதரவுல எப்படியோ படிச்சு கரையேறினவன். இப்ப ஒரு சுமாரான வேலைல இருக்கேன். மாசம் பிடித்தம் போக கைக்கு ஏழாயிரம் ரூபாய் வருது! ஒரு மேன்ஷன்ல தங்கி காலத்தை ஓட்டறேன். கல்யாணம் முடிச்சு, ஒரு பொண்ணை வச்சுக் காப்பாத்த எனக்குத் துப்பிருக்கா?

    பீட்டர்! நானும் சம்பாதிக்கறேன். உங்களைவிட ஒரு மூணு ரூபாய் கூடவே வருது! பத்தும் ஏழும் பதினேழு! நாம குடித்தனம் நடத்தப் போதாதா?

    பீட்டர் நிமிர்ந்து பார்த்தான்.

    வேண்டாம் காயத்ரி!

    ஏன் பீட்டர்? பயப்படறீங்களா? நானே வீட்டைவிட்டு வெளில வரத் தயாராத்தானே இருக்கேன். உங்களுக்கு என்ன பயம்?

    பயமில்லை காயத்ரி! மனசுக்கு சங்கடமா இருக்கு! உன்னைப் பெத்து, ஆளாக்கி இந்த நிலைக்குக் கொண்டு வந்தவங்களை - கேவலம் இந்தப் பீட்டருக்காக உதறிட்டு வர்றது எனக்கே நியாயமா படலை!

    பீட்டர்..!

    காதல் உசத்திதான்! நான் மறுக்கலை! ஆனா நான் ஒரு அனாதை! நீயும் பிறந்தவீட்டு உறவுகளை உதறிட்டு அனாதையா வரப்போற! ரெண்டு அனாதைகள் சேர்ந்து எதை சாதிக்கப் போறோம்?

    என்ன பேச்சு இது பீட்டர்?

    மனுஷங்க வேணும் காயத்ரி! நாளைக்கு யதார்த்த உலகத்துல வாழும்போது இந்த ஏக்கம் வரும். ஒரு சமயத்துல காதல்கூட கசந்து போகலாம்!

    காயத்ரிக்குக் கோபம் வந்துவிட்டது.

    நீங்க ஒரு கோழை பீட்டர். கோழைகள் காதலிக்கக் கூடாது!

    கோவப்படாதே காயத்ரி!

    காதல் உங்களுக்கு மலிவாப் போச்சா? ஒரு பொண்ணு மனசுக்குள்ள புகுந்து ஆக்ரமிச்சிட்டு, இப்ப பின்வாங்கறது உங்களுக்கு சுலபமா இருக்கலாம். ஆனா நெஞ்சுக்குள்ள காதலை வளர்த்துகிட்ட நான், எப்படி தவிக்கறேன் தெரியுமா? மனசுல உங்களையும், மடில இன்னொருத்தரையும் சுமக்க என்னால முடியுமா?

    அழுதுவிட்டாள்.

    காயத்ரி... என் விரல்கூட உன் மேல பட்டதில்லை!

    அதனால என்ன? மனசால உங்ககூட நான் வாழத் தொடங்கியாச்சு!

    தப்பு காயத்ரி! நான் கோழையில்லை! ஒரு கூட்டைக் கலைக்க எனக்கு விருப்பமில்லை! உங்கப்பா முழுமனசோட என்னை ஏத்துக்கத் தயாரா இருந்தா, நான் சந்தோஷமா உனக்குப் புருஷன் ஆகறேன்! அவங்க சாபத்தோட நம்ம வாழ்க்கை தொடங்க வேண்டாம்!

    இதுதான் முடிவா?

    ஆமாம் காயத்ரி! கொஞ்ச நாளாவே என் மனசுல இந்த உறுத்தல் இருக்கு! வழிபாடு, சாப்பாடு, பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் மாத்திக்கிட்டு ஒரு புது உலகத்துக்குள்ளே நுழையணும்!

    நான் தானே?

    இருக்கட்டுமே! காதலுக்காக எல்லாத்தையும் தியாகம் பண்றது பெருமையாத் தெரியலை! அப்புறம் காதல் கொஞ்சம் முரட்டுத்தனமா இருக்கும். அதுமேல வெறுப்பு வரும்! நான் தனிமனுஷன். வாழ்க்கைல கூடுமானவரைக்கும் யாரோட வெறுப்புக்கும், எதிர்ப்புக்கும் ஆளாக எனக்குப் பிடிக்கலை! முடிஞ்ச வரைக்கும் எல்லாரையும் நேசிக்கணும்!

    காயத்ரி பேசவில்லை!

    நான் சொல்றதை மனசுல வச்சுக்கோ! யோகமிருந்தா, சந்திக்கலாம்!

    பீட்டர் நடக்கத் தொடங்கினான்.

    காயத்ரிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை! ‘இப்படி ஒரு காதலனா?’

    2

    கிருஷ்ணமூர்த்தி ஒரு ஜாதகத்தை எடுத்து மனைவி லக்ஷ்மியிடம் காட்டினார்.

    இந்த ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்குடி லக்ஷ்மி! பையன் பெரிய எலக்ட்ரானிக் நிறுவனத்துல என்ஜினீயரா இருக்கான். மாசச் சம்பளம் நாப்பதாயிரம் ரூபாய்! ரெண்டு வருஷம் அமெரிக்கால இருந்துட்டு வந்துட்டான். அப்பா புரோகிதர்னா நீ நம்புவியா?

    அப்படியா?

    பழுத்த வைதீகக் குடும்பம். பூஜை, புனஸ்காரம்னு ஆச்சாரத்தை விடாதவா! மாமி, மடிசார் தான் கட்டிண்டு இருப்பா! இந்தப் பையனோட அண்ணா, டெல்லில குடும்பத்தோட இருக்கார். அக்கா, பெங்களூர்ல! தம்பி படிச்சிண்டு இருக்கான். சொந்த வீடு, கார் எல்லாம் இருக்கு!

    அப்ப நல்ல இடம்தான்!

    நம்ம காயத்ரி வரட்டும். பேசிட்டு, அவாளைப் பாக்க வரச் சொல்ல வேண்டியதுதான்!

    காயத்ரி உள்ளே நுழைந்தாள்.

    வாம்மா! கை, காலை அலம்பிட்டு, சாமியை நமஸ்காரம் பண்ணிட்டு வா!

    காயத்ரி - உடைமாற்றி, முகம் கழுவி, தலைவாரி, பொட்டு வைத்துக் கொண்டு வந்தாள்!

    காயத்ரி! இந்த போட்டோவை பாரு! பேரு சம்பத்! எம்.டெக். படிச்சிருக்கான்.

    காயத்ரி வாங்கினாள்.

    மீசையில்லாத

    Enjoying the preview?
    Page 1 of 1