Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தொடாதே..!
தொடாதே..!
தொடாதே..!
Ebook150 pages1 hour

தொடாதே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வரன் பார்த்து வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாமாவையும் அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டாள் காவேரி. 

மாமா வீட்டுக்கு விட்டல் வந்தான். அவனுக்கு அப்பா வழி, அம்மா வழி எல்லா சொந்தங்களும் பிடிக்கும். யாரையும் புண்படுத்த மாட்டான். 

"ஸாரி மாமா! காவேரி ஓவரா பேசிட்டா!"

"விட்ரா! மனசு வலிக்குது!" 

"அத்தை நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க!" 

"இல்லைடா விட்டல்! சொந்தம் எப்படீடா விட்டுப்போகும்? உங்கப்பாவும் போன நேரத்துல உங்கம்மாவை விட்டுத்தர முடியுமா? ஆனாலும் காவேரி இப்படி பேசக்கூடாது!" 

"தம்பி! யசோதா அவளை அடக்கணும்! வளர்ப்பு சரியில்லை!"

"மாமா! அம்மா பாவம்! அவங்களைச் சொல்லாதீங்க!" 

"நான் உங்கம்மாவை தப்பா பேசலைடா! ஆனாலும் மூத்த பொண்ணு! இத்தனை கோபமும், ஆத்திரமும் இருந்தா நீங்க பொறுத்துக்கலாம். என்னாலயே சகிச்சுக்க முடியலை! வர்றவன் எப்படி தாங்கிப்பான்? இந்த குணத்தோட இன்னொரு வீட்ல போய் இவ வாழ முடியுமா?" 

"மாமா! இதுக்கு முக்கியக் காரணம் அப்பாதான்!" 

"செத்தவரை விமர்சிக்கக்கூடாது தம்பி. இப்ப உங்கம்மா எடுத்துச் சொல்லலாம் இல்லையா!" 

"நிலம் நீச்சு கொஞ்சம் பணம் இருக்கு. யார் தயவும் வேண்டாம்னு காவேரி ஆடறா!" 

"மழை வராம போயி, ஏதாவதொரு கஷ்டம் வந்தா, விவசாயம் கை குடுக்காது! மனுஷன் எப்பவும் காலை வாருவான்! மண்ணும் சில சமயம் ஏமாற்றும்!" 

"விடுங்க மாமா! அம்மாவுக்காக பொறுத்துக்குங்க!" 

"சரிப்பா! ஆம்பளை நீ! உனக்குள்ள பதவிசும், பண்பும் காவேரிக்கு ஏன் இல்லை?" 

விட்டல் வந்து விட்டான். 

அன்று கல்லூரி விடுமுறை. 

காவேரி கடைக்குப் போயிருந்தாள். 

அம்மா கட்டிலில் விட்டல் படுத்திருக்க அவனது தலை தடவி அப்பா பற்றிப் பேசி அம்மா கண்கலங்க, 

"அழாதேம்மா! போதும்மா? அப்பா வரவா போறார். நீ தெம்பா இருக்கணும்மா! இந்த மாதிரி உன்னைப் பார்த்தா படிப்புகூட ஏறலை!" 

யசோ பதறி விட்டாள். 

"அப்படி சொல்லாதேடா ராஜா!" 

அவனை இறுக அணைத்துக் கொண்டாள். 

"அம்மா! மாமாவை காவேரி அவமானப்படுத்தினது எனக்குப் புடிக்கலை!" 

"எனக்கும்தான் பிடிக்கலை!" 

"அவளை நீ கொஞ்சம் அடக்கணும்! இவ கோபம் எல்லாரையும் நம்மை விட்டு விலக வச்சிடும்! நமக்கும் மனுஷங்க வேணும்மா!"

"சரிப்பா! அதுக்காக பெத்த பெண்ணை கோவப்பட முடியுமா?"

"அம்மா! சீக்கிரம் வரன் பார்த்து அவளை அனுப்பு!" 

"ஏண்டா இப்படி பேசற?" 

"எனக்கு சுத்தமா அவ குணம் புடிக்கலை! அப்பா போய், நீ ஒடுங்கி உட்கார்ந்த காரணமா இவளோட ஆட்டம் தாங்கலை. பழையபடி நீ என் தலைக்கு எண்ணை வச்சு எத்தனை நாளாச்சு!" 

"சரிப்பா! அவளும் உழைக்கறாளே! காலைல எழுந்தா ராத்திரி வரைக்கும் பாடுபடறா. நான் எந்த வேலையும் செய்யறதில்லை. அவ என்னை செய்ய விடறதில்லை. உன் பாசம் வேற. அவ பாசம் வேற. ரெண்டுமே எனக்கு வேணும்டா விட்டல்!" 

"அது நிரந்தரம் இல்லைம்மா! அவ புருஷன் வீட்டுக்கு போறவ!"

"அதுக்கு அவ தயாரா இல்லை!" 

"தப்பும்மா! ஊரே சிரிக்கும். நீதான் அவளை சம்மதிக்க வைக்கணும். அப்பா போன துக்கம் கரையணும்னா, இந்த வீட்டுக்கு சந்தோஷம் வரணும். ஏதாவது செய்மா. நான் சொல்றது தப்பா?" 

அம்மா யோசிக்கத் தொடங்கினாள்

Languageதமிழ்
Release dateFeb 27, 2024
ISBN9798224538652
தொடாதே..!

Read more from Devibala

Related to தொடாதே..!

Related ebooks

Reviews for தொடாதே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தொடாதே..! - Devibala

    1

    முதலில் இந்தக் குடும்பம் பற்றி ஒரு அறிமுகம் செய்து விட்டால் கதைக்குள் போவது சுலபம்! குடும்பத் தலைவன் உயிருடன் இல்லை! அவன் இறந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. அப்பா கேசவன் ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் போர்மன் பதவி. யசோதா மனைவி குடும்பத் தலைவி. அந்தக் குடும்பத்தின் தாய். மூத்த மகள் காவேரி. பள்ளிக் கூடப் படிப்பு தான். அதற்கு மேல் தாண்டவில்லை. வீட்டு வேலைகளை நன்றாகச் செய்வாள்.

    இழுத்துப் போட்டுக் கொண்டு பார்ப்பாள். முதல் மகள் என்பதால் அப்பா, அம்மாவுக்கு அவள் மேல் பாசம் அதிகம். அந்தப் பக்கம் காவேரியை கோபக்காரியாக, பிடிவாதம் கொண்டவளாக மாற்றிவிட்டது. படக்கென கோபம் வந்து விடும். வார்த்தைகளை கொட்டி விடுவாள். அதுதான் அவள் வாழ்க்கையை கேள்விக் குறி ஆக்கிவிட்டது.

    ஆரம்பத்தில் அப்பா, அம்மாவை அது பாதிக்கவில்லை. இயல்பாக எடுத்துக் கொண்டார்கள்.

    ஏங்க காவேரி நியாயம்தான் பேசுவா! யாராவது தப்பா பேசினா, படக்குனு கோபம் வந்துடும்! யாருக்கும் பயப்படமாட்டா! தூக்கி வீசிடுவா!

    இது பெருமையல்ல! அவளைக் கொம்பு சீவி விட்ட கூர்மையான ஆயுதம். பெற்றவர்களையே ஒரு கட்டத்தில் அது பதம் பார்த்து விட்டது. அந்தக் கதை பிறகு!

    இரண்டாவது ஒரு மகன் விட்டல். அமைதியானவன். காவேரிக்கு நேர் எதிர். அதிகம் பேச மாட்டான். அலட்டிக் கொள்ள மாட்டான். எதையும் கூர்ந்து கவனிப்பான்.

    யாரும் அவனை அப்படி சொல்லி வளர்க்கவில்லை.

    இயல்பாகவே அவனுக்கு அந்த குணம் அமைந்துவிட்டது. அப்பாவின் குணம். எதையும் கேட்க மாட்டான்.

    தருவதை வாங்கிக் கொள்வான்.

    புத்திசாலி நன்றாகப் படிப்பு ஏறும்.

    மூன்றாவது ஒரு பெண் ரேவதி. அழகான பெண். குடும்பத்தில் அதிக அழகு இவள் தான்.

    அது தான் அவளுக்கு ஆணவத்தையும், குடும்பத்துக்கு அவமானங்களையும் நிறைய கொண்டு வந்தது.

    அதன் பிறகும் அம்மா யசோதாவுக்கு இருமுறை கருச்சிதைவு ஏற்பட்டது. மூன்று போதும் என்று முயற்சிகளை நிறுத்தவில்லை. தாம்பத்யம் எந்த வயதிலும் இருக்கலாம். அதில் தப்பில்லை. ஆனால் பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் குறிப்பாக பெண் குழந்தைகள் இருந்தால் அடக்கி வாசிக்க வேண்டும்.

    இங்கே அது கிடையாது.

    என்றைக்குமே கேசவன் - யசோதா தம்பதிக்கு தனி அறை தான். தாத்தா நிலம் வாங்கிக் கட்டிய பழைய வீடு. பெரிய வீடு. தாழ்வாரம், தூண், நடுவில் ஊஞ்சள், பின்கட்டு என பழைய வீடாக இருந்தாலும் நிறைய இடம் உண்டு. கும்பகோணத்துக்கு உள்ளே நாலைந்து கிலோ மீட்டர் தள்ளி கொஞ்சம் கிராமத்தனமான ஊர். அது கொஞ்சம் நிலம் நீச்சு வசதிகள், இந்த வீடு என்று தாத்தா சொத்துக்களை வைத்து விட்டுத்தான் போனார். நிலம் இருப்பதால் அதில் விளையும் அரிசி, தானியங்கள் காய்கறிகளுக்கு பஞ்சமில்லை. வீட்டைச் சுற்றி தென்னை, வாழை என மரங்கள் உண்டு. கொடியில் காய்க்கும் காய்கறிகள், மல்லிகை ரோஜாப் பூக்கள்.

    எல்லாம் நிறைந்தவர்கள் தான் . ஊரில் கொஞ்சம் வசதியான வீடும் கூட!

    ஆனாலும் கேசவன் உத்யோகம் பார்ப்பது முக்கியம் என வேலைகளில் சேர்ந்து விட்டார்.

    பத்து கிலோ மீட்டர் தொலைவில் ரசாயன பேக்டரி. அதில் நல்ல பதவி கணிசமான சம்பளம்.

    வீட்டின் சகல பராமரிப்புகளும் அம்மா யசோதாவும், மூத்தவள் காவேரியும்தான்.

    அதனால் காவேரி பள்ளி இறுதியில் கூட பெயில்தான்.

    அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை.

    வீட்டை பளிங்கு போல சுத்தமாக வைத்துக் கொள்வாள். காவேரிக்கு 22 வயதாகும்போது விட்டலுக்கு 17 வயசு பள்ளிப் படிப்பு முடிந்து என்ஜினீயரிங் கல்லூரியில் சுலபமாக இடம் கிடைத்துவிட்டது. அடுத்தவள் ரேவதி எட்டாம் வகுப்பு.

    நிலம், காய்கறிகள் வீட்டுச் செலவுக்கு போக வெளியிலும் விற்பனைக்கு அனுப்புவதால் அதில் ஒரு வருமானம் தாராளமாக வந்தது.

    காவேரிக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பித்தார்கள்.

    ஓரளவுக்கு வசதியான குடும்பம் வேண்டும் என்று யசோதா நினைத்து தன் தேடலைத் தொடங்கி விட்டாள்.

    அலசல் 2 வருடங்களாக நடக்க அந்த எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டது.

    அப்பா கேசவன் பேக்டரியில் நடந்த ஒரு விபத்தில் மிக பலமாக காயப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மூன்றாவது நாளே உயிரை விட்டார்.

    இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

    குடும்பம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது விபரீதமாக இது நடந்துவிட்டது. பெரும் அதிர்ச்சி.

    ரசாயன பொருட்களால் முகமே சிதைந்து கோரமான விபத்தில் உண்டான பலி.

    போலீஸ் வழக்கு என பிரச்சனை பெரிதானது. அது கேசவன் தப்பல்ல எந்திரக் கோளாறு.

    உறவும் நட்பும் கூடி வழக்குத் தொடரச் சொல்லி இது பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பை ஊட்ட பேக்டரி ஓனர் மேல் வழக்கு தொடர அவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். அதை அமுக்கப்பார்த்தார். ஊர் மக்கள் கூடி ரகளை செய்ய பிரச்சனை பெரிதாகிவிட்டது.

    தேர்தல் நெருங்கும் நேரம் இது விபரீதமாக முடியும் என அரசியல் கட்சிகள் இவர்களுக்கு சாதகமாக ஒரு கட்டத்தில் பேக்டரி ஓனர் வந்து விட்டார்.

    பெரிய ஒரு தொகை நஷ்ட ஈடுக்கு ஒப்புக் கொண்டார். யசோதாவுக்கு வேலை தரவும் தயாரானார்.

    யசோதாவுக்கு அதில் விருப்பமில்லை. காவேரிக்கு அந்த வாய்ப்பு வந்தது. அவளும் மறுத்து விட்டாள்.

    இந்த வாய்ப்பை விடாதே. உன் கால்ல நீ நிக்கலாம். ஒப்புக்கோ! அவள் தீர்மானமாக நிராகரித்து விட்டாள்.

    விட்டலை அழைத்தார்கள்.

    அவன் படிக்க வேண்டும். தடை செய்ய விரும்ப மாட்டேன். என யசோதா அறிவிக்க,

    பெரிய நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.

    தவிர இவர்களுக்கு நிலம் மூலம் வரும் பணமும் இருந்ததால் குடும்பத்துக்கு நஷ்டமில்லை.

    ஏறத்தாழ 15 லட்சம் நிர்வாகம் தந்தது.

    கேசவன் இருந்தால் அவரது ஏழாண்டு சம்பளம்

    அவரது காரியங்கள் முடிந்து எல்லாம் ஓய,

    இந்தப் பணத்தை வச்சு காவேரியைக் கட்டிக் கொடுத்துடு. அது தான் புத்திசாலித்தனம். விட்டல் தலையெடுத்து ரேவதிக்கு கல்யாணம் பண்ணிடுவான். புரிஞ்சுக்கோ!

    நான் அம்மாவை விட்டுப் போக மாட்டேன். அப்பாவும் இல்லை. அம்மாவும் ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க.

    "சரிம்மா! அதுக்காக எத்தனை காலம் நீ கூடவே இருக்க முடியும்? காலா காலத்துல கல்யாணம் நடக்க வேண்டாமா?’

    வேண்டாம்!

    கோவப்படாதே காவேரி. அண்ணி நீங்க எடுத்துச் சொல்லுங்க! அத்தை ஒருத்தி மகனை வைத்திருந்தாள்.

    அவள்தான் ஆரம்பித்தாள்.

    காவேரி அவள் முகத்தில் அடித்தாள்.

    என்னை மருமகள் ஆக்கிட்டு நீங்க செட்டில் ஆயிடலாம்னு பாக்கறீங்களா?

    ஏம்மா இப்படி பேசற?

    இங்கே எல்லா வசதிகளும் இருக்கே! கசக்குதா?

    அப்படியெல்லாம் பேசாதேம்மா!

    காவேரி ஆத்திரப்பட்டு வார்த்தைகளை விட உறவுகள் விலகிப் போனது.

    அம்மா துக்கத்திலிருந்து மீளவில்லை.

    விபத்துக்கு முதல் நாள் கூட கணவனுடன் யசோதாவுக்கு எல்லாம் நடந்தது.

    நமக்கு மூணு வளர்த்த பிள்ளைங்க, ஞாபகம் இருக்கட்டும்!

    அதனால் என்ன? தாம்பத்யம் எந்த வயசிலும் தப்பில்லை! இப்பவும் நீ இளமையாத்தான் இருக்கே!

    நம்ம புள்ளைங்க மூணு பேருக்கும் வாழ்க்கை அமைஞ்ச பிறகு என்ன செய்யப் போறோம்?

    நான் ரிடையர் ஆயிடுவேன்! இதே வீட்ல கடைசி வரைக்கும் சந்தோஷமா இருப்போம்!

    விட்டலுக்கு கல்யாணம் ஆனா, மருமகள் வருவா!

    தனிக்குடித்தனம் வச்சிடலாம்!

    எதுக்கு?

    அவங்க சந்தோஷமா வாழட்டுமே! நாம அப்படித்தானே இருந்தோம்?

    ம்ஹும்! என் பிள்ளையை நான் பிரிய மாட்டேன்! அவன் எப்பவும் இந்த வீட்லதான் இருக்கணும்!

    புருஷனை விட புள்ளைதான் உசத்தியா?

    இரண்டு பேரும் உசத்திதான்!

    விடிய விடிய அவரை இறுக அணைத்து விடாப்பிடியாக் கிடந்தாள்.

    யசோ! விடு! நான் பேக்டரிக்கு போகணும்! விடிஞ்சாச்சு! இன்னமும் கதவு சாத்தியிருந்தா புள்ளைங்க என்ன நினைக்கும்?

    எல்லாருமே வயசுப் புள்ளைங்க தான் எல்லாம் தெரியும் உங்களை விட மனசில்லை!

    இப்படி நீ பேச மாட்டியே!

    அவரை விட மனமில்லாமலே இருந்தாள். அதுவே கடைசி சங்கமமாக இறுதி அணைப்பாக மாறும் என அவள் நினைக்கவில்லை!

    அந்த துக்கம் அகலவேயில்லை.

    பெரும்பாலான மனைவிகளுக்கு அந்த வலி அதிகம். அதைத்தான் யசோதா அனுபவித்தாள்.

    மேலும் 2 மாதங்கள் ஓடி விட்டன.

    உறவுகள் காவேரியின் வாய்க்கு பயந்தே இந்தப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

    காவேரியின் மாமன் - யசோதாவின் அண்ணன் மட்டும்

    Enjoying the preview?
    Page 1 of 1