Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Urimai Urangukirathu!
Urimai Urangukirathu!
Urimai Urangukirathu!
Ebook101 pages39 minutes

Urimai Urangukirathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்வில் சித்தியின் கொடுமையால் மிகவும் நொடிந்த பெண் கௌரி. தானாக ஒரு மணவாளனான தேவநாதனை தேர்ந்தெடுத்து தன் குழந்தைகளுடன் மிகவும் அன்பான ஒரு இல்லற வாழ்க்கை வாழ்கிறாள். அவளின் வாழ்வில் ஏற்பட இருக்கும் புயல் அறியாமல் வாழும் அந்த அப்பாவி பெண் கௌரின் இல்லற சந்தோசம் நீடித்ததா? கதையை தொடர்ந்து வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580155608536
Urimai Urangukirathu!

Read more from Lakshmi

Related to Urimai Urangukirathu!

Related ebooks

Reviews for Urimai Urangukirathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Urimai Urangukirathu! - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உரிமை உறங்குகிறது!

    Urimai Urangukirathu!

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    மாலை வேளையின் மஞ்சள் வெயில் மங்கிக் கொண்டு வருவதைக் கௌரி கவனித்தாள்.

    எத்தனையாவது தடவை? அவளுக்கே கணக்கு விட்டுப் போயிற்று. உள்ளுக்கும் வாயிலுக்கும் நடந்து நடந்து அவள் கால்கள் ஓய்ந்து போயின. இன்னும் தேவநாதனைக் காணவில்லை.

    வழக்கம் போல சமையலை முடித்ததும், முகத்தைக் கழுவிப் பொட்டிட்டு தலையை வாரி முடித்துக் கொண்டாள். அலமாரியில் அடுக்கி வைத்திருந்த சுத்தமானதொரு நூல் சேலையை எடுத்து உடுத்திக் கொண்டாள். பூக்காரியிடம் வாங்கிய கதம்பச் சரத்தில் பாதியைப் பராசக்தி படத்திற்கு சாத்திவிட்டு மீதியைக் கூந்தலில் சுற்றிக் கொண்டாள்.

    கண்ணாடியில் ஒருமுறை தன்னை கவனித்துக் கொண்டு முன்னறைப் பக்கம் வந்தாள்.

    குழந்தை ரேவதி பாடப் புத்தகத்தைத் தரைமீது வீசிப் போட்டுவிட்டு வாசலில் விளையாட ஓடி விட்டாள்.

    நடையில், மகன் சுகுமார் கழற்றிப் போட்டிருக்க பாத அணிகள் மூலைக்கொன்றாகக் கிடந்தன.

    வீட்டைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றதொரு ஆவேசமான ஆசை அவளுக்கு எப்பொழுதுமே உண்டு. பரபரப்புடன் தரையில் கிடந்த புத்தகத்தை எடுத்துத் தட்டி, மூடி மேஜை மீது வைத்தாள். பாத அணிகளை ஒன்றாகச் சேர்த்து அதற்கென்று வீட்டில் சுவரோடு பதித்துக் கட்டியிருந்த அலமாரியில் வைத்து மூடினாள்.

    கொஞ்ச நாட்களாகக் குழந்தைகளும் அத்துமீறி நடக்கத் தொடங்கியிருந்ததைக் கவனிக்கத்தான் செய்தாள்.

    வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.

    கேட்டைப் பிடித்துக் கொண்டு முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தாள் ரேவதி. தோட்டத்திலே ஒரு பக்கம் பம்பரம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான் சுகுமார்.

    பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததுமே குழந்தைகள் பாத அணிகளைக் கழற்றிப் பத்திரமாக வைத்துவிட்டு குளியல் அறையில் கைகால்களைக் கழுவிக்கொண்டு உடை மாற்றிக்கொண்டுதான் டிபன் சாப்பிட வர வேண்டும். கொஞ்சம் நேரம் விளையாடிவிட்டு உள்ளே வந்து மறுபடியும் கை கால்களைக் கழுவிக் கொண்டு. வீட்டுப் பாடங்களை கவனமாகப் படிக்க வேண்டும். அப்பா வேலையிலிருந்து திரும்பி வந்து, உடைமாற்றிக் கொண்டு சாப்பிடத் தயாரான பிறகுதான் குழந்தைகள் சாப்பிட வரவேண்டும். பின்னர் எட்டு மணிவரை படித்துவிட்டுத் தூங்க வேண்டும்.

    அப்பா வீட்டிலிருக்கும் போது சளசளவென்று பேசி சப்தமிட்டு அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது.

    இப்படி கண்டிப்பும் கறாருமாக வளர்க்கப்பட்ட குழந்தைகள், அவள் பலமுறை உள்ளே வரச்சொல்லிக் கூப்பிட்டும் கேட்காதது போல் விளையாடிக் கொண்டிருந்தனர். வேளை தவறி சாப்பிட்டனர். இரவு உறங்காது வெகு நேரம் விழித்துக் கொண்டிருந்தனர்.

    எண்ணையிட்ட சக்கரம் போல ஒழுங்காக இயங்கிக் கொண்டிருந்த குடும்பத்தில் இப்போது எல்லாமே தாறு மாறாகிக் கொண்டு வந்தன.

    அவள் சரியாகச் சாப்பிட்டு தூங்கி, ஒரு மாத காலமாயிற்று. தேவநாதன் வழக்கத்திற்கு மாறாக தினமும் நேரம் கழித்து வரத் தொடங்கியதுதான் இவை எல்லாவற்றிற்கும் காரணம்.

    ஆனாலும் அவள் ஒரு நாள் கூட அதைப் பற்றி அறிய முயலவில்லை. ஒன்பது வருஷ தாம்பத்திய வாழ்க்கையில் அவள் என்றுமே அவனிடம் சில விஷயங்களைக் கேட்டதில்லை. இன்னிக்கு ஏன் இத்தனை நாழி என்று ஒரு நாளும் குறுக்கு விசாரணை செய்ததில்லை. அவனும் ஒரு நாளும் வேளை தவறி வீட்டிற்கு வந்தது இல்லை.

    வேலை முடிந்ததும் ஒரு கணம்கூட அவன் அலுவலகத்தில் வீணே நண்பர்களுடன் பேசிக்கொண்டு நிற்க மாட்டான். போக்குவரத்து நெரிசலில் நீந்திக் கொண்டு ஒரே மூச்சாக ஸ்கூட்டரில் வீட்டுக்குப் பறந்து வந்து விடுவான்.

    களைத்துச் சோர்ந்து வீடு வரும் கணவனை வாயிலில் நின்றுகொண்டு, சிரித்த முகத்துடன் வரவேற்க அவளுக்கும் கொள்ளை ஆசை.

    சுகுமார்! அப்பாவுடைய ப்ரீப்கேசை வாங்கி உள்ளே கொண்டு வை. நீ பெரிய பையனாயிட்டியே... அப்பாவுக்கு உதவ வேண்டாமா? தனது ஏழு வயது மகனுக்கு உத்தரவிடுவாள்.

    ரேவதி கண்ணு! அப்பாவுக்குக் கை துடைக்க துவாலை எடுத்துக் கொண்டு கொடு ஐந்து வயது மகளுக்கு ஆணையிடுவாள்.

    பையில் கொண்டுவந்த சாக்லெட் கட்டியின் வெள்ளிக் காகிதத்தை உரித்துவிட்டு குழந்தைகளின் வாயில் அடைத்து அவர்களை இருபக்கமும் வாரி அணைத்துக் கொண்டு அவன் உள்ளே வருவதைக் கண்டு பெருமையில் பூரித்தாலும், போதும்! செல்லம் கொடுத்து அவங்களைக் கெடுக்காதீங்க என்று அன்போடு கணவனை அதட்டுவாள்.

    உங்களுக்குப் பிடிச்ச பறங்கிக்காய் பால்கூட்டு. நம்ம தோட்டத்திலே காய்ச்சது ஆசையோடு பேசிக் கொண்டே அவர்கள் மூவருக்கும் உணவு பரிமாறுவாள்.

    பார்த்தீங்களா உங்க மகளை? அப்பாவை அப்படியே கொண்டு வந்திருக்காள். உணவுப் பழக்க வழக்கங்களிலும் உங்க அச்சுதான் போங்க கணவனை மகிழ்ச்சியுடன் பரிகசிப்பாள்.

    உன் மகன் மட்டும் என்ன விதத்தில் குறைச்சல்? அப்படியே உன் அச்சு சாப்பாட்டினின்று நிமிர்ந்து தேவநாதன் அவளைக் கேலி செய்துவிட்டால் போதும், உலகத்தையே ஒரு தட்டில் வைத்துத் தன்னிடம் கொடுத்து விட்டது போலப் பூரிப்பில் பொங்கிப் போவாள்.

    "என் ஆசைக்கு ஒரு மகன், உங்கள் அன்புக்கு ஒரு மகள். போதும் குழந்தைகள்

    Enjoying the preview?
    Page 1 of 1