Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalaattu Maari Ponatho?
Thalaattu Maari Ponatho?
Thalaattu Maari Ponatho?
Ebook134 pages51 minutes

Thalaattu Maari Ponatho?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாலாட்டு மாறிப்போனதோ நாவல் நெகிழ்வான படைப்பு நடுத்தர வர்க்கத்து ஒரு தாயின் தவிப்பே நாவல் தன் பிள்ளைகளை சரிசமமாக வளர்த்து ஆளாக்க வேண்டும் தன் பெண்ணை நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டு ஆண் பிள்ளையை குடும்ப சுமையை சுமக்க வைக்கும் பூங்கோதை என்ற ஒரு நடுத்தர வர்க்கத்து தாய் அவளுடைய தவிப்பு ஏமாற்றம் அவமானம் ஆக்ரோஷம் இறுதியில் எடுக்கும் நல்ல முடிவு இதுதான் தாலாட்டு மாறி போனதோ நாவலின் சுருக்கம் பெரும்பாலான பிள்ளைகள் சுயநலவாதியாகவே இருக்கிறார்கள் தாயின் பாசத்தை புரிந்து கொள்வதே இல்லை இந்த கதையில் வருகிற கதாபாத்திரங்கள் அதை பிரதிபலிக்கின்றன நம்மோடு வாழ்கிறவர்களின் கதை நாம் முன் நிகழ்கிற கதை இந்த கதையை படித்த பிறகாவது ஒரு சிலர் மனம் திருந்தினால் அதுவே இந்த கதைக்கு கிடைத்த வெற்றி இந்த நாவலைப்படித்தவர்கள் அனைவருமே இது விருதுக்குரிய படைப்பு என்றார்கள் விருது என்பது வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவதே ஆகும் அப்படி பார்த்தால் இந்த கதை கண்டிப்பாக விருதுக்குரிய கதைதான் இந்த கதையில் தீப்தி நரேன் காதலை மிகவும் நுணுக்கமாக கண்ணியமாக கௌரவமாக உருவாக்கி இருக்கிறேன் எந்த சூழ்நிலையிலும் கண்ணியம் தவறாத நரேன் போன்ற இளைஞர்களை கணவனாக அடைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் நரென் போன்ற ஒழுக்கமான பிள்ளையை மகனாக பெறுவதற்கு பெற்றோரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த கதையை படிப்பவர்கள் நரேன் மாதிரி ஒரு பிள்ளை தமக்கு பிறக்க வேண்டுமே என்று ஏங்குவார்கள்

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580128310811
Thalaattu Maari Ponatho?

Read more from Maheshwaran

Related to Thalaattu Maari Ponatho?

Related ebooks

Reviews for Thalaattu Maari Ponatho?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalaattu Maari Ponatho? - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தாலாட்டு மாறிப்போனதோ?

    Thalaattu Maari Ponatho?

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 1

    கீழே சரிந்து விழலாம் போல தோன்றினாலும் தன்னை திடப்படுத்திக் கொண்டு இந்த ஐம்பத்திரண்டு வயதிலும் அடுக்களைக்குள் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் பூங்கோதை...

    ஏற்கனவே பருப்பு ரசமும் தூதுவளை துவைய லும் தயார் பண்ணி விட்டாள். இன்னும் சாதம் மட்டும் தான் பாக்கி, அதுவும் குக்கரில் வெந்து கீழே இறக்கி வைத்திருந்தாள்.

    பொரியலுக்காக நறுக்கி வைத்திருந்த கேரட் அப்படியே இருந்தது, அதை வாணலியில் எடுத்து கொட்டி வதக்கினால் சமையல் முடித்துவிடும். காலையில் சாப்பிடாமலேயே வேலைக்கு போய்விட்டார் சதாசிவம்.

    நல்ல பசியோடு வருவார், அவரை காக்க வைக்க முடியாது, அதனால் தான் இத்தனை வேகமாய் இயங்கினாள். தினமும் விடியற்காலமே எழுந்து குளித்து வாசல் தெளித்து அழகாய் மாக்கோலமிட்டு துளசி மாடத்தில் தீபம் ஏற்றி தூபக்காலில் சாம்பிராணி புகை போட்டு முகத்தில் மலர்கின்ற புன்னகையை இரவு உறங்கப் போகும் வரை அப்படியே வைத்திருப்பாள் பூங்கோதை.

    ஏனோ தெரியவில்லை காலையில் எழுந்ததிலிருந்து பூங்கோதைக்கு உடல்நிலை சரியில்லை, தலையை சுற்றுவது மாதிரி இருந்தது. வயிற்றை புரட்டுவது மாதிரி இருந்தது. எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

    உடம்பு முடியவில்லை என்று சொன்னால் இருவருமே பயப்படுவார்கள். வேலைக்கு போக மாட்டார்கள் இருவருக்குமே தினக்கூலி அடிப்படையில் வேலை.

    துணிமணிகளை மொத்தமாய் விற்கும் ஜவுளிக்கடையில் கணக்கு பிள்ளையாக வேலை பார்க்கிறார் சதாசிவம். வியாபாரம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் தினமும் நானூறு ரூபாய் கொடுத்து விடுவார்கள்.

    அந்த நானூறு ரூபாய்க்காகவே முப்பது நாட்களும் வேலைக்கு ஓடிவிடுவார். மூத்தவன் நரேனுக்கு பெரிய மெக்கானிக் செட்டில் வேலை, எந்த விதமான பைக்காக இருந்தாலும் தனித்தனியே பிரித்து கோர்த்து விடுவான்.

    நரேன் பார்க்கும் வேலைக்கு தகுந்த மாதிரி சம்பளம் கிடைக்கும்,எப்படியும் எழுநூறு ரூபாயாவது கொண்டு வந்து விடுவான், இருவருமே சரி ஒரு ரூபாய் கூட அதில் தொட மாட்டார்கள், அப்படியே பூங்கோதையிடம் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள்,

    அந்த பணத்தை வைத்து தான் வீட்டு வாடகை,மளிகை சாமான், தினப்படி செலவு என சமாளிக்க வேண்டும் அதனாலேயே சிக்கனத்தை கடைப்பிடிப்பாள். எந்த உடல் உபாதையாக இருந்தாலும் கை வைத்தியத்திலேயே சரி பண்ணி விடுவாள்.

    காலையிலேயே சுக்கையும் மிளகையும் தட்டி போட்டு கசாயம் எல்லாம் வைத்து தான் குடித்து இருந்தாள், எந்த பலனும் இல்லை. தலை சுற்றலும் கண்ணை சுற்றிக்கொண்டு வருவதும் நிற்கவே இல்லை.

    இனி சமாளிக்க முடியாது அவர் வந்ததும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போக சொல்ல வேண்டியதுதான். ‘பிரஷர் குறைஞ்சிருக்கும் வேற எதுவும் இருக்காது"...நினைத்தபடியே சமைத்து இருந்த உணவையெ ல்லாம் பாத்திரத்தோடு கொண்டு வந்து கூடத்தில் பரப்பினாள்.

    வாசலில் சைக்கிள் மணிசத்தம் கேட்டது, சதாசிவம் வீடு திரும்பி விட்டதற்கு அறிகுறி இதுதான்/ சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு வாசற்படி ஒரமாய் இருந்த பிளாஸ்டிக் வாளியில் நிறைத்திருந்த தண்ணீரில் கை கால்களை கழுவிய பின்னால் உள்ளே வந்தார் சதாசிவம்.

    வறுமையும் கடன் பிரச்சனையும் இருந்தால் எவ்வளவு பெரிய மனிதனும் உருக் குலைந்து பொலிவிழந்து போய் விடுவான் என்பதற்கு சதாசிவமே சாட்சி. அயன் பண்ணாத பேண்டும் சட்டையும் அணிந்து நரை கேசத்தோடு பரிதாபமாக தான் தெரிந்தார்

    எப்படி இருந்த மனுஷன் மாதம் 25 ஆயிரம் பென்ஷன் பணம்வருது, ராசாவாட்டம் உட்கார்ந்தே சாப்பிடலாம், ஆனால் நாயாட்டம் அலையிறாரே...’ வாங்குற பென்ஷன் வாங்கின கடனுக்கு வட்டி கொடுக்கவே போதவில்லையே...

    எல்லாம் என்னால தானே... பெரிய செலவு இழுத்து விட்டதே... நான் தானே!’

    பூங்கோதைக்கு முதல் வியாதியை குற்ற உணர்ச்சி தான் எதையும் மறக்க முடியவில்லை நினைக்காமல் இருக்க முடியவில்லை உள்ளுக்குள் தன்னை தானே வதைத்துக் கொண்டிருந்தார்.

    சதாசிவத்துக்கும் நரேனுக்கும் அதெல்லாம் தெரியவே தெரியாது

    சாப்பிடலாமா கோதை? இன்னைக்கு ஸ்பெஷலா என்ன செஞ்சிருக்கே? ஈரக்கையை தேங்காய்ப் பூ தூண்டில் துடைத்துவிட்டு கூடத்தில்சம்மணம்இட்டு அமர்ந்தார் சதாசிவம்.

    பருப்பு ரசமும் தூதுவளை துவையலும் செய்திருக்கேன். தொட்டுக்க கேரட் பொரியல்... அமைதியாக பரிமாறத் தொடங்கினாள். சதாசிவத்திற்கு கொள்ளை பசி, வேகமாக சாப்பிட ஆரம்பித்தார்.

    நரேனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டியா!

    காலையில்சாப்பிட்ட இட்லியையே மதியானத்துக்கும் எடுத்து போய்ட்டாங்க என்றாள் சுரத்தையே இல்லாத குரலில்.

    ஆறிப்போனது அதுவும் காலையில சாப்பிட்டத மத்தியானத்துக்கும் கொண்டு போய் சாப்பிட்டா அவன் உடம்பு என்னத்துக்கு ஆகிறது? வயசு பிள்ளை... குடும்பத்துக்காக உழைச்சு கொட்டுறவன்... வயித்துல சூடா இறங்கினா தானே களைப்பில்லாம வேலை செய்ய முடியும்? படபடத்தார்

    நா என்னங்க பண்ணட்டும்? இனி மத்தியானம் சாப்பாட்டுக்கு வரமாட்டேன் சாப்பிட போறதால ஒரு மணி நேரம். வேஸ்டா போகுது கஸ்டமர் காத்திருக்காங்கன்னு முதலாளி திட்றதா சொல்லி அவன் தாங்க...இட்லியை டிபன் பாக்ஸ்ல எடுத்து தரச் சொன்னான்... என்றாள் வேதனை படர்ந்த தொனியில்.

    நா உன்னை குறை சொல்லலை கோதை... மனுஷங்க ஓடி ஓடி உழைக்கிறதே ஒருவாய் சோத்துக்காக தானே, நம்ம நரேன் வயசு பிள்ளை அவனால் அந்த சாப்பாட்டை கூட ஒழுங்கா சாப்பிட முடியலையேன்னு தான் வருத்தப்படுகிறேன்... அவ்வளவுதான்... இன்னும் கொஞ்சம் துவையல் வை... உன் கை பக்குவமே தனிதான்...அலாதி சுவையா இருக்கு... பேச்சை மாற்றினார்...பூங்கோதையின் மனமோ முகமோ வாடி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக நடந்து கொண்டார்.

    அவளூடைய பூ முகம் வாடினால் அவரால் தாங்க இயலாது. இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் அவளுடைய மனசு நோகும்படியாய் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.

    சுவாதியின் கல்யாணவிஷயத்தில் சதாசிவம் சின்னதாய் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் கூட குடும்பம் இந்த அளவிற்கு நொடித்து போயிருக்காது. மனைவியின் விருப்பத்திற்கு விட்டுவிட்டார்.

    அதனால் தான் இந்த நிலை இவ்வளவு கஷ்டம்... சொந்தமாக நரேனுக்கு வைத்துக் கொடுத்த மெக்கானிக் செட் தான் அது.

    சுவாதியின் கல்யாணத்துக்காக தான் அதையே இன்னொருவரிடம் விற்கும்படியாக ஆகிவிட்டது. தன்னால் விற்கப்பட்ட மெக்கானிக் செட்டிலேயே தினக் கூலியாக வேலை செய்வது எந்த இளைஞனுக்கும் வரக்கூடாது.

    ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம் கடை குட்டி விஷ்ணுவுக்கு அடுத்ததாய் பூங்கோதைக்கு சுவாதியைத்தான் ரொம்ப பிடிக்கும்.

    சுவாதி டிகிரி முடித்துவிட்டு வீட்டில் இருந்தாள் நிறைய வரன்கள் வந்தது சொந்தத்திலேயே கூட மாப்பிள்ளைகள் இருந்தார்கள் எதுவும் வேண்டாம் என்னை கொடுத்தால் போதும் என்றார்கள் சொந்தங்களும் விட்டு போய் இருக்காது.

    சொந்தத்தில எல்லாம் கல்யாணம் பண்ணி அனுப்ப முடியாது இப்ப வேணாம்னு சொல்றவங்கதான் பின்னால ஏராளமாக சீர்வரிசை கேட்டு பொறுமை பண்ணுவாங்க ராஜகுமாரன் ஒரு மாப்பிள்ளை பார்த்து அரண்மனையாக இருக்கிற வீட்டுக்கு மருமகளா எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிறாப்ல சீர்வரிசைகள் செய்து அனுப்புவேன் இந்த ஊரு உறவுகள் முக்கு மேல முத்து மேல விரைவில் வைக்கிறாப்புல என் பொண்ணோட கல்யாணம் நடக்கும்

    எந்த நேரமும் இதே நினைப்புதான் பூங்கோதைக்கு.அவளுக்குகவாதியைப் பற்றி ஏராளமான கனவுகள் இருந்தது. தன் எண்ணத்தை நிறைவேற்ற அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் பலி கொடுத்துவிட்டாள்.

    "மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலை பார்க்கிறார் நாலு லட்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1