Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthaimanal
Puthaimanal
Puthaimanal
Ebook224 pages1 hour

Puthaimanal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பத்தலைவர் ஒருவர் தன் சௌகர்யத்திற்காக ஊதாரித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தலைவி தன் இரு மகள்களின் வாழ்விற்காக மகன்களின் ரத்தத்தை உறிஞ்சுக் கொண்டிருக்கிறாள். இவர்களின் கொடுமையிலிருந்து மீண்டு மித்ரன் தனியே சென்று வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஆனால் சந்திரன் தன் குடும்பம் என்னும் புதைமணலில் மாட்டிக்கொண்டு மீண்டானா? இல்லையா? இறுதியில் அவன் வாழ்வின் நிலைமை என்ன? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம்...!

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580155608809
Puthaimanal

Read more from Lakshmi

Related to Puthaimanal

Related ebooks

Reviews for Puthaimanal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthaimanal - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புதைமணல்

    Puthaimanal

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    நெடுஞ்சாலையில் ஓடிய லாரி எழுப்பிய ஓசையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகரன் விழித்துக் கொண்டான். பூம்பாவை நர்ஸிங்ஹோமின் மூன்றாவது தளத்தில் டாக்டரின் அறையில் உறங்கிக் கொண்டிருந்ததை அவன் புரிந்துகொள்ள சில வினாடிகள் பிடித்தன. தூக்கம் கவிழ்ந்து கொண்டிருந்த கண்களைக் கசக்கிக் கொண்டு மேஜைமீது தான் அவிழ்த்து வைத்திருந்த கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். காலை மணி ஆறு.

    அவுட்பேஷண்ட்டுக்கு தயாராக வேணுமே? அவசரத்தில் கட்டிலினின்று வேகமாக இறங்கினான். இரவுப் பணி செய்யும் வைத்தியர்களுக்கு சிறிதுநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள பூம்பாவை நர்ஸிங்ஹோமின் அதிபர் டாக்டர். அழகேசன் தாராளமாக செய்துகொடுத்த வசதி அந்த அறை. கட்டில்... மெத்தை... மின்விசிறி... அலமாரி.. மேஜை நாற்காலி இத்தியாதிகளுடன் உள்ளடங்கிய குளியலறையும் கொண்டது.

    முதல்நாள் ஏழுமணியளவிலே பகல் பணிசெய்த டாக்டரிடமிருந்து வார்டுகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். நிற்க நேரமின்றி சிவராத்திரியாக இரவைக் கழிக்க நேர்ந்தது. அந்த வேளை பார்த்து மண்டையை உடைத்துக்கொண்டு அவசரமாக நர்ஸிங்ஹோமுக்கு வந்திருந்த வாலிபனைக் கவனித்து உள்ளே அனுமதித்துவிட்டு திரும்புமுன்... ஒரு அப்பண்டிசைடிஸ் கேஸ் அவசரமாக அறுவை செய்தாக வேண்டிய நிலை... அழகேசனுக்கு உதவியாக அதை முடித்துக்கொண்டு அறுவை அறையைவிட்டு வெளி வந்தவன்... வார்டு ரவுண்டுகள் செய்யக் கிளம்ப வேண்டிவந்தது. சதா குறை சொல்லும் மூன்றாவது தளத்து எட்டாம் நம்பர் அறை நோயாளியிடம் கொஞ்சம் தமாஷாகப் பேசிவிட்டு நர்ஸ் கொண்டுவந்து வைத்த காப்பியை சாப்பிட மறந்து... வயிற்று வலிக்கு அறுவை சிகிக்சை மேற்கொண்ட ஒரு நோயாளிக்கு உடல் நிலை கடுமையாகி விட்டதென்று விழுந்தடித்துக்கொண்டு ஓடி... வலியில் துடித்த அவருக்கு அமைதியான தூக்கத்தைக் கொடுக்க ஊசி மருந்தை ஏற்றிவிட்டு, சுற்றிச்சுற்றி நிற்க நேரமில்லாது ஓடி உழைத்த பின்பு அவன் தன் அறையில் மிகவும் சோர்வோடு வந்து உட்கார்ந்தபோது விடியற்காலை மணி நான்காகிவிட்டது. மருத்துவமனைக்கு எதிர் சாரியிலிருந்த டீக் கடையை நாயர் திறக்கும் சத்தம் கேட்டது. பனியனும் லுங்கியுமாக முடிவில் படுக்கைமீது சாய்ந்தபோது இன்னும் அரைமணிப்பொழுது ஓடிவிட்டிருந்தது.

    முதல் நாள் பிற்பகல்வரை அவன் தொடர்ந்து மருத்துவமனையில் வேலை செய்தான். பிற்பகல் சில மணி நேரம்தான் ஓய்வு கிடைத்தது. அதற்குப் பின்னர் இரவு டியூட்டிக்கு வீட்டிலிருந்து விரைந்தோடி வந்தான். இனி காலை அவுட்பேஷண்டுகளை கவனித்து விட்டுத்தான் வீட்டிற்குக் கிளம்ப முடியும்...

    டாக்டர் அழகேசன் கொடுத்த சம்பளத்திற்கு தனது உதவி டாக்டர்களைச் சாறு பிழிந்தார் என்பது உண்மை. நாளின் இருபத்து நான்கு மணிநேரமும் நிற்காது வேலை செய்தால்கூட அவரிடம் நல்ல பெயர் வாங்கமுடியாது...! அப்படி அவர் ஒரு திருப்தியில்லாத ஜன்மம்!

    கையோடு இரவுப்பணிக்காக கொண்டு வந்திருந்த தோள் பையைத் திறந்து சோப்பு துவாலை - பிரஷ் முதலியவற்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான். ஷவரைத் திருப்பி இளஞ்சூடாக உதிர்ந்த நீரில் தலையைக் காட்டியபோது இரவுப் பணியினால் புண்ணாக வலித்த உடலுக்கு மிகவும் இதமாகத்தானிருந்தது. வெகுநேரம் அதனடியில் நிற்கவேண்டும் என்றதொரு ஆவல். ஆனால் வராந்தாவிலே டிராலிகள் எழுப்பிய ஓசை அவனது குளியலைத் துரிதப்படுத்தியது.

    நாற்காலி கைமீது பத்திரமாக கழற்றி மடித்து வைத்திருந்த வெள்ளை சபாரி ஸுட்டை எடுத்து அணிந்து கொண்டான். அவனுடன் கூடப் படித்த மதன் ஒரு சுற்றுலா பயணத்திற்கு மனைவியோடு சென்னைக்கு வந்திருந்தான். நண்பனை மறக்காது ஒரு ஜோடி வெள்ளை சபாரி ஸுட்டுகளைப் பரிசாகக்கொண்டு வந்திருந்தான்.

    அளவு பார்த்துத் தைத்தது போன்று அவனுக்குக் கச்சிதமாகப் பொருந்திய அந்த ஸுட்டுகள்தான் இப்போது அவனுக்கு கைகொடுத்து உதவின. மாற்றி உடுத்த சௌகர்யமாக இருந்தன. அவனது பழைய பாண்டுகளும் சட்டைகளும் பாத்திரக்காரனுக்குப் போடும் நிலையில் கழுத்துப் பட்டையும் கால் ஓரங்களும் நைந்து திரியாகி விட்டிருந்தன. தங்கை திவ்யாவின் கல்யாணத்துடன் அவனது பாங்கு புத்தகத்தில் இருப்பு அனைத்தும் காலியாகிவிட்டிருந்தது. தனக்கென்று எதுவும் வாங்கிக்கொள்ள முடியாத பற்றாக்குறை பட்ஜெட்டில் வீட்டின் பொருளாதார நிலை கேவலமாகிக் கொண்டிருந்தது.

    கண்ணாடியில் பார்த்தபடி வேகமாக முடியை சீவிக் கொண்டான். உபயோகித்த லுங்கி-பனியன்-துவாலை அனைத்தையும் ஒழுங்காக எடுத்துத் தோள் பையில் மடித்து உள்ளே வைத்து ஜிப்பை இழுத்து மூடினான். ஆணியில் மாட்டியிருந்த டாக்டர் கோட்டை எடுத்து மேலே அணிந்து கொண்டு ஸ்டெதஸ்கோப்பை பைக்குள் சொருகிக் கொண்டான்.

    அதற்குள் லேசாகக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது.

    வெளியே நர்ஸ் சிந்தாமணி நின்று கொண்டிருந்தாள். அவள்தான் நர்ஸிங்ஹோமின் தலைமை நர்ஸ், அறுவை சிகிச்சை அறையில் உதவுவதற்கு வந்து நிற்கும் தனித் தகுதி வாய்ந்தவள். பல ஆண்டுகள் பதவியிலிருக்கும் மகிழ்ச்சியில் பூரித்துவிட்ட உடம்பு, அதன்மீது கஞ்சியில் மொட மொடத்த சீருடை வாயிற்படி முழுவதையும் அடைத்தபடி நின்றாள். இரு காதுகளையும் தொட்ட பெரிய சிரிப்பு முகத்திலே படர்ந்து கொண்டிருந்தது.

    டாக்டருக்கு நேத்து ராத்திரி ரொம்ப வேலை. பாவம் எழுப்ப மனசில்லை. ஆனால் ஓ.பி. கேஸ்கள் வந்து குவிஞ்சிடும். அதுக்குள்ளே காலை டியூடி டாக்டரோட வார்டுகளை ரவுண்ட் செய்துட்டா நல்லது.

    சாதாரணமாக அவள் கொஞ்சம் முன் கோபக்காரி. வேலை அதிகமான நாட்களில் முகத்திலே கடுமை தெரிக்க பம்மென்ற சீருடையில் சிங்கம் போலத்தான் மருத்துவமனையிலிருந்த ஊழியர் அனைவருக்கும் நடுக்கத்தைக் கொடுப்பாள்.

    வயதும், அனுபவமும் அவளுக்கு அதிக உரிமைகளைத் தந்திருந்தன. தலைவரிடம் அதட்டிப் பேசும் அளவிற்கு அதிகாரத்தை வளர்த்துக்கொண்டு விட்டவள். ஆனாலும் அவளுக்கு டாக்டர் சந்தர் மேல் ஒரு துளியளவு அன்பு உண்டு.

    முகத்தைச் சுளிக்காது அலுத்துக் கொள்ளாமல் கொடுக்கப்பட்ட வேலைகளை கருத்தோடு செய்கிறான் என்றதனாலோ...

    சின்னஞ்சிறு வயதிலே எம்.எஸ். பட்டம் பெற்று விட்டதுடன் அறுவை சிகிச்சையில்... டாக்டர் அழகேசனை தோற்கடிக்குமளவுக்குத் திறமையுடையவனாக இருக்கிறான் என்பதினாலோ...

    அந்தக் கூர்மூக்கும்... பளபளத்த கண்களும், சுருண்ட முடியும்... பளிச்சென்று தெரியும் வரிசைப்பற்களும்... தன் இறந்துபோன மகனை நினைவுபடுத்துவதால் ஏற்பட்ட தாயன்போ... என்னவோ...!

    அவளுக்கு அவன்மீது... கொஞ்சம் அதிகப்படியானதொரு நட்புரிமை ஏற்பட்டிருந்தது. டாக்டருக்கு சீக்கிரமா காப்பி பலகாரம் எடுத்துவரச் சொல்லவா? ராத்திரிகூட ஏதும் சாப்பிடலைன்னு கேள்வி... சிரித்தபடி உரிமையோடு கேட்டாள் சிந்தாமணி.

    வராந்தாவிலே உருண்டு சென்ற டிராலி அறை அருகே நெருங்கியது. சீருடையில் சுத்தமாகத் தெரிந்த மருத்துவமனையின் உணவு பரிமாறும் பையன், குட்மார்னிங் டாக்டர் என்றபடி வெள்ளைத் துணி போர்த்திய தட்டை எடுத்துக்கொண்டு வந்தான். நர்ஸ் சிந்தாமணி வாயிற்படியினின்று விலகினாள்.

    பெட்காப்பியா? கேட்டுக்கொண்டே தட்டின்மீது போர்த்தியிருந்த நாப்கினை விலக்கிப் பீங்கான் கெட்டிலைத் திறந்து பார்த்தாள். இது காப்பியா? கழுநீர்போல என்னத்தையோ கொண்டு வந்திருக்கியே? ராத்திரியெல்லாம் மாடா உழைச்ச மனுஷனுக்கு நல்லா ஸ்ராங்கா? ஒரு டம்ளர் நிறையக் காப்பி கொண்டு வந்து தரப்படாதா? கெட்டிலின் கால் பாகத்தை வியாபித்துக் கொண்டிருந்த கரும் திரவத்தையும் பீங்கான் தட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு மேரி பிஸ்கட்டுகளையும் வெறுப்போடு பார்த்தாள்.

    வார்ட் ரவுண்ட் முடிஞ்சதுந்தான் டாக்டருக்கு காப்பி பலகாரம் கிடைக்கும். அதுவும் உள்ளங்கை அகலத்திலே மூணு இட்லி, ஒரு கப் காப்பி. யாருக்கு இந்தப் பணத்தை சேக்கறாப்போல இப்படிக் கருமித்தனம்? அதட்டினாள். நீண்ட காலம் பதவியில் இருக்கும் உரிமையில் அவள் வெளிப்படையாகத் தன் அபிப்பிராயத்தை உதிர்த்தாள். பதினோரு மணிக்கும் டீ தராங்களே. அதை மறந்துட்டீங்களே... பற்களைக் காட்டி இளித்த பையன் டிராலியைத் தள்ளிக்கொண்டு நகர்ந்தான்.

    காப்பி சாப்பிடறேளா? உபசாரமாக கேட்டுவிட்டு… சிந்தாமணி வேண்டாம் என்று தலையை அசைத்ததும் கெட்டிலிலிருந்து காப்பியை கோப்பையில் ஊற்றிக்கொண்டு ஒருபிஸ்கட்டை கடித்துக்கொண்டே அவசரமாக நெருங்கினான் சந்திரன்.

    அப்போ உங்களை... ஏ வார்டிலே முதலில் சந்திக்கிறேன். வரேன் தேர் அசைவதைப் போன்று... ரப்பர் வைத்து தைத்த பாதணி ஓசையின்றி தரையை அழுத்தமாகப் பற்ற அவள் மெல்ல நடந்து அப்பால் சென்றாள்.

    அன்று இரவு டாக்டர் சந்திரன் புறப்பட்ட அவசரத்தில் சரியாகக் கூட சாப்பிடவில்லை. சீரக ரசத்தைவிட்டு பிசைந்த சூடான சாதத்தை வேகமாக அள்ளி இரண்டு வாய் போட்டுக்கொண்டு கிளம்பியிருந்தான். பிறகு நேரம் கிடைத்தபோது எதிர் சாரியிலிருந்த தாசப்பா ஈட்டிங் ஹவுசில் பரோட்டாவையும் குர்மாவையும் ஒரு பிடி பிடிக்கலாம் என்ற யோசனையுடன்தான் கிளம்பியிருந்தான். ஆனால் வந்ததிலிருந்து டியூடியை ஒப்புக்கொண்ட நிமிஷத்திலிருந்து வேலை அவனை பிடியாக பிடித்துக் கொண்டு விட்டிருந்தது. அவனுக்குக் கோரப் பசி. பிஸ்கட்டுகளும் காப்பியும் எங்கேயோ பாதாளத்தில் விழுந்து விட்டதைப்போல மீதமாயிருந்த காலி வயிறு சுருட்டிக்கொண்டு குடைந்தது.

    அவனுக்கும் டாக்டர் அழகேசன்மீது ஆத்திரம் பற்றிக் கொண்டுதான் வந்தது.

    ஆஸ்பத்திரி நிர்வாகத்திலே அவ்வளவு கருமித்தனம் செய்து நோயாளிகளிடமிருந்து குவிக்கும் அத்தனை பணத்தை அவர் யாருக்குச் சேர்க்கிறார்?

    பிள்ளை குட்டிகள் இல்லாத மனிதன். செலவழிக்க மனைவிகூட இல்லை. அவள் இவரது சிக்கனத்தைத் தாள முடியாது சின்ன வயதிலேயே தன் உலக வாழ்க்கைச் சீட்டைக் கிழித்துக்கொண்டு போய் விட்டிருந்தாள்.

    மிடாஸ் மன்னன்போல பணத்தைச்சேர்க்கும் இவருக்கு இப்படி ஒரு அர்த்தமற்ற ஆசை ஏன்?

    அப்பொழுதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்று மாதத்தின் முதல் தேதி. தேநீர் வேளையின்போது சம்பள செக்கை வாங்கிக்கொண்டு அருகிலிருந்த பாங்க்கில் தன் கணக்கில் சேர்த்து விட்டு அதே அளவுதொகையை எடுத்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அவன் வேலை முடிந்து கிளம்புமுன் மூடி விடுவார்கள். வீட்டிற்குப் போனதும் அம்மா இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு... ‘சம்பளம் வந்துட்டது இல்லையா...?’ என்று கேட்கத் தவறவே மாட்டாள்.

    மகாசம்பளம்! அவனது படிப்புக்கும், திறமைக்கும் உழைப்புக்கும் தகுதியில்லாத சம்பளம். வேறு வழியின்றி அதாவது கிடைக்கிறதே என்று, பிடிப்புகள் போக மாதத்தின் முதல் தேதி அழகேசன் தாராளமாக வழங்கும் தொகை தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு ரூபாய்களைப் பெற்றுக்கொள்கிறான். ஆனால் வீட்டு வாடகைபோக, அவர்கள் குடும்பத்திற்குப் பற்றும்பற்றாத தொகையை நன்றியோடு ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி?

    ஸபாரிஸுட் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு அறையின் கதவைப் பூட்டினான். சாவியையும் கைக்குட்டையையும் பையில் போட்டுக்கொண்டு மாடிப்படிகள்மீது விரைந்தான்.

    ரிசப்ஷனைத் தாண்டி, டாக்டர் அழகேசன் அறையைத் தாண்டி அடுத்தபடியாக இருந்த பெரிய அறைப் பக்கம் விரைந்தபோது ஒரு கணம் அயர்ந்துபோய் நின்றான்!

    பொறுப்புமிக்க டாக்டராக இல்லாது கல்லூரி மாணவனாக அவன் இருந்திருந்தால் ‘விஷ்... ஷ்...?’ என்று சீட்டியடித்துக்கொண்டு இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்த படி அவளை விழியாலேயே விழுங்கி விட்டிருப்பான்.

    டெட்டால், ஸ்பிரிட், பினாயில் என்ற கலவை மணத்தைத் தாண்டி லாவண்டர் பவுடரின் மென்மையான மணம் முகத்தைத் தழுவ... ரிசப்ஷனில் எதையோ கேட்க விரும்புகிற பாவனையில் மெல்ல அங்கே சென்று திரும்பிப் பார்த்தான்.

    வானவில் கோடுகள் ஓடிய மக்கலான நூல் சேலையில்… கொடிபோல அவள்யார்?

    குப்பென்று நெஞ்சை அடைத்துக்கொண்ட மகிழ்ச்சியும் திகைப்புமாக அவளை... காலோடு தலைவரை ஊன்றி பார்த்தான்.

    டாக்டர் அழகேசன் அறைக்கு முன் நின்ற அவள், விரல்களால் மெல்லக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைவதைக் கவனித்தான். யார் அவள்? நோயாளியைப் பார்க்க வந்தவளா? அப்படியிருந்தால் அழகேசனுக்காக வரவேற்பறையில் அல்லவா காத்திருக்க வேண்டும் தலைவருக்கு ஒரு தமையன் இருப்பதாகக் கேள்வி... ஒரு சமயம் அந்தத் தமையனின் பேத்தியா?

    டாக்டர் சந்திரன் அவுட்பேஷண்ட் அறையின் நர்ஸ் அருகில் வந்து அழைத்தபோது விழித்துக்கொண்டான்.

    முதலில் வார்ட் ரவுண்டை முடிச்சுட்டு இதோ வரேன் கூறிவிட்டு வேகமாக வராந்தாவில் நடந்தான். டக் டக்கென்று ஒலித்த அவனது பாதணிகளுடன் போட்டியிட்டது போன்று அவன் நெஞ்சிலே ஒரு இன்பத் துடிப்பு!

    2

    சிகிச்சைக்கு மட்டும் அன்றாடம் வந்து போய்க் கொண்டிருந்த அவுட்பேஷண்ட் என்ற வகை நோயாளிகளை கவனிக்கவும், முக்கியமான கேஸ்களை உள்ளே அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யவும் அந்த மருத்துவமனையில் மூன்று பெரிய தனி அறைகள் இருந்தன. மூன்றாவது அறையில் பெண்களும் குழந்தைகளும் பரிசோதிக்கப்பட்டனர். இரண்டாவதில் காய்ச்சலிலிருந்து இருதயநோய் வரை மெடிக்கல் கேஸ்கள் கவனிக்கப்பட்டன. முதலாவதாக இருந்த பெரிய அறையில்தான் அறுவை சிகிச்சை கேஸ்கள் பரிசோதிக்கப்பட்டன.

    ‘விலைவாசிகளின் உயர்வினால் மக்கள் பணப்பற்றாக் குறையில்

    Enjoying the preview?
    Page 1 of 1