Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kaviriyai Pola...
Oru Kaviriyai Pola...
Oru Kaviriyai Pola...
Ebook486 pages3 hours

Oru Kaviriyai Pola...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் சொந்த ஊரான ஆப்பிரிக்காவில் ஏற்படும் துன்பங்களால், இந்தியா வரும் பெண் காவேரி. அவள் தமிழ்நாட்டை அடைந்து பல்வேறு துன்பங்களை அடைகிறாள். அவளுக்கு ஏற்பட்ட துன்பங்களும், கவலைகளும் என்ன என்பதையும் அவள் அதிலிருந்து மீண்டாளா? எவ்வாறு மீண்டாள்? என்பதையும் பார்ப்போம் ஒரு காவிரியாய்...

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580155608817
Oru Kaviriyai Pola...

Read more from Lakshmi

Related to Oru Kaviriyai Pola...

Related ebooks

Reviews for Oru Kaviriyai Pola...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kaviriyai Pola... - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு காவிரியைப் போல...

    Oru Kaviriyai Pola...

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    1

    இன்னும் கொஞ்ச நேரம் போர்வைக்குள்ளேயே சுருண்டு கொண்டிருக்க வேண்டுமென்று காவேரிக்கு ஆசைதான். குளிர்கால விடியற்காலைத் தூக்கத்திற்கே ஒரு தனி இன்பம் இருப்பதை அவள் பலமுறை அனுபவித்திருக்கிறாள். ஆனால் விடியும் தருவாயாகி விட்டதை அறிவுறுத்தத் தலைமாட்டிலிருந்த அலாரம் கடியாரம் ஒருமுறை அடித்து எச்சரித்துவிட்டது.

    பக்கத்துப் படுக்கை அறையில் நோயாளியாகப் படுத்திருக்கும் பெரிய அண்ணி சவுந்தரி இருமுவது கேட்டது. அண்ணியும் விழித்துக் கொண்டுவிட்டாள் என்பதின் அறிகுறி அந்த இருமல் சத்தம். மேலும் வேலைக்குக் கிளம்ப வேண்டிய வாரத்தின் முதல்நாள். போர்வையை வழித்து எறிந்துவிட்டு எழுந்தாள்.

    பிளானல் நைட் டிரஸ்ஸையும் மீறிக் குளிர் ஊசியாக உடம்பைக் குத்தியது.

    அப்பாடா என்று கத்தி அழவேண்டும் போல்தான் அவளுக்கு இருந்தது. ஆனால் மழை, இடி, குளிர் எதுவானாலும் அவள் கட்டாயமாக வேலைக்குக் கிளம்பி ஆக வேண்டுமே!

    அலாரம் மறுமுறை அடிக்கும்முன் அதன் தலையை அழுத்திவிட்டு அவள் துவாலையுடன் பெரிய அண்ணி உபயோகிக்கும் குளியலறைக்கு ஓடினாள்.

    இருபத்து நான்கு மணிநேரமும் சூடான நீரை எல்லா அறைகளில் உள்ள குழாய்களும் கொட்டும் வசதிகள் பல நிறைந்த வீடு அது.

    தன் அறையை ஒட்டிய குளியலறையிலிருந்து ஸ்நானத் தொட்டியில் வாசனைப் பொடியைத் தூவி... வெந்நீரை நிரப்பி ஜலக்கிரீடை செய்து கொண்டு நீரில் படுத்துக்கிடக்க அவளுக்கு இப்போது நேரம் ஏது?

    ஆப்பிரிக்காவில் வந்து குடியேறி ஆண்டுகள் பல ஆகிய போதிலும் பெரிய அண்ணி சவுந்தரி குளியல், உடை, சாப்பாடு அத்தனையிலும் தமிழ்நாட்டின் பழக்கவழக்கங்களைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டிருந்தாள். பட்டதாரி என்ற போதிலும் எப்பொழுதும் தமிழிலேயேதான் பேசினாள். தாயற்ற அவளையும், சின்ன அண்ணன் லோகேந்திரனையும் தன் குழந்தைகளாக வளர்த்து ஆளாக்கியதன் பலன்... அந்த வீட்டில் தமிழ்ப் பேச்சு வழக்கிலிருந்தது.

    ஆனால் சின்ன அண்ணி யசோதா கேப் மாகாணத்திலிருந்து வந்தவள். தமிழில் பேசத் தடுமாறினாள். அவள் ஒருத்திதான் வீட்டிலே ஆங்கிலத்திலும், ஆப்பிரிக்கன் மொழியிலும் இடையே ஸுலுவிலும் உரத்த குரலில் எல்லோரிடமும் கத்திக்கொண்டிருப்பாள்.

    முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை சின்ன அண்ணி தன் கணவனுடன் காலையிலேயே தங்கள் நண்பர்களைப் பார்க்கப் புறப்பட்டுப் போனாள். இரவு பத்து மணிக்கு மேல்தான் வீடு திரும்பினாள். அதனால் அடித்துப் போட்டாற்போல அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அண்ணன் லோகேந்திரனுக்கு விடியும்வரை தூங்கிக்கொண்டிருக்கக் கட்டுப்படியாகாதே! சீக்கிரம் எழுந்து சென்று அவர் நடத்திவரும் அந்த பிரபல உணவுக்கடையைத் திறந்தாக வேண்டும்.

    அண்ணி சவுந்தரியின் குளியலறையில் குழாயடியில் கிடந்த அந்தப் பெரிய பித்தளை அண்டாவிலே காவேரி மிதமான சூட்டில் நீரை நிரப்பிக்கொண்டு பல்துலக்கிவிட்டு வேகமாகக் குளியலை முடித்தாள்.

    அரசு நிர்வாகத்திலிருக்கும் பள்ளி மருத்துவச் சோதனைப் பகுதியில் அவள் சில ஆண்டுகளாக நர்ஸ் வேலை பார்க்கிறாள். வெளிர்நீலச் சீருடையைத் தரித்துக்கொண்டு தன் பெயர் பொறித்த பிளாஸ்டிக் பட்டையை இடது தோளின் கீழ் உடை மீது குத்திக்கொண்டாள்.

    பள்ளிப் பரிசோதனை வேலையிலிருக்கும் நர்ஸ்கள் ஆஸ்பத்திரி நர்ஸ்களைப் போலத் தலையில் வெள்ளைத் துணியால் ஆன விசிறி அலங்காரம் செய்துகொள்ளத் தேவையில்லை என்பது அரசு உத்தரவு. அவள்வரை அது நல்லதாகி விட்டிருந்தது. இடைவரை மயில் தோகையாக விரிந்து தொங்கிய தன் அடர்ந்த கூந்தலை வாரி அழகானதொரு கொண்டையாக அவசரமாகச் சுற்றி முடித்துக்கொண்டாள். வெளிர் ரோஜா வண்ண உதட்டுச் சாயத்தில் உதடுகள் மின்னுவதையும், மஸ்காராவில் கண் இமைகள் பட்டாம் பூச்சியின் சிறகுபோல அலங்காரமாகத் துடிப்பதையும் கண்ணாடியில் பார்த்துத் தன் அழகிலே ஒரு கணம் மயங்கி மகிழ்ந்து போனாள்.

    மறுகணம் மனதை முள்போன்றதொரு வேதனை நெருடுவதை உணர்ந்தாள். அண்ணா எழுந்துவிட்டார் என்பதை அடுத்து குளியலறையிலிருந்து வந்த ஓங்கார ரீங்கார சப்தங்கள் உணர்த்தின. அவர் காலை வேளையில் பல்துலக்கி ஒரு கோப்பைத் தேநீர் குடித்துவிட்டு கடைக்கு ஓடிவிடுவார். இரவு படுக்கப் போகுமுன்தான் அவர் குளிப்பது வழக்கம். டர்பன் நகரைவிட அவள் போய் வேலை செய்ய வேண்டிய பகுதியில் குளிர் அதிகமாகவே இருக்கும் என்பதை அறிவாள். எனவே அவசரமாகத் தனது நைலான் பாண்டிஹோசை எடுத்து அணிந்துகொண்டு பரபரப்புடன் ஷூக்களைக் காலில் திணித்துக்கொண்டாள். அலமாரியில் தொங்கிய கனமான சிவப்புக் கம்பளிக் கோட்டை எடுத்துப் போட்டுக்கொண்டாள்.

    சமையலறைக்குள் புகுந்து விளக்கைப் போட்டு மின்விசைக் கெட்டிலில் நீரைப் பொங்கவிட்டாள். வழிப் பயணத்துக்குத் தேவையான ரொட்டி ஸாண்ட்விச்சுகளைத் தயாரித்துப் பிரம்புக் கூடைக்குள் போட்டாள். தேநீரைச் சட்டென்று கலக்கி ஃபிளாஸ்கில் மாற்றிப் பத்திரமாகக் கூடைக்குள் வைத்தாள்.

    வண்டி ஓட்டிக்கொண்டு போகும்போது தூக்கம் வந்து தொலைத்தால்...? ஏதாவது தின்றால் தூக்கம் கலையும் என்ற எண்ணத்தில் இரண்டு ஆப்பிள் பழங்களையும் கூடைக்குள் போட்டு அதன்மேல் ஒரு வெள்ளைத் துவாலையைப் போட்டு மூடித்தயாராக்கினாள்.

    ஐந்து நாட்கள் லேடீஸ் ஸ்மித்தில் தங்க ஏற்கனவே தன் சிறு பெட்டியில் மாற்றுச் சீருடை, சில புடவைகள், ரவிக்கைகள் எல்லாம் எடுத்துத் தயாராக வைத்துவிட்டிருந்தாள். கைச்செலவுக்குப் பணம் எடுத்துப் பர்சில் திணித்துக்கொண்டு அதைத் தோள் பையில் போட்டு மாட்டிக்கொண்டாள்.

    அவள் கிளம்பத் தயாராகிவிட்டாள். அவசரமாகத் தயாரித்த தேநீரைக் கப்புகளில் ஊற்றி ஒன்றை எடுத்து வேகமாகப் பருகி முடித்தாள்.

    அண்ணா லோகேந்திரன் சமையலறைக்குள் வந்தார். அவரும் வெளியே செல்ல ஆயத்தமாகப் பளிச்சென்ற உடையில் காணப்பட்டார். குளிர் தாங்க முடியாது அவரும் ஒரு கனமான ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த வாரம் உனக்கு லேடீஸ் ஸ்மித்தில் வேலையா? ஓ.கே... தோள்களைக் குலுக்கிக்கொண்டு தயாராக இருந்த ஒரு கப் தேநீரை எடுத்து ஒரே மூச்சில் குடித்தார்.

    குட்பை என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓட்டமும் நடையுமாகச் சென்றார். சில நிமிடங்களில் அண்ணாவின் வெள்ளை பென்ஸ் கார் உறுமிக்கொண்டு காராஜிலிருந்து புறப்பட்டுத் தெருவுக்குள் ஓடி மறைந்து விட்டது.

    குளிர் காலமாகையால் இன்னமும் சூரியன் தலையைக் காட்டவில்லை. வானம் முழுவதும் புகையைப்போலப் பனி கப்பிக் கொண்டிருந்தது. மீதமாக மேஜை மீதிருந்த தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு பெரிய அண்ணியின் அறைக்குள் புகுந்தாள் காவேரி. அதற்குள் சீராக்கிக்கொண்டு இஸ்திரி மடிப்புக் கலையாத புடவை ஒன்றில் சுத்தமாகப் படுக்கைமீது தலையணையின்மேல் சாய்ந்து கொண்டிருந்தாள்.

    பெரிய அண்ணன் இறந்த பின்னர் அண்ணி ரொம்பவும் இடிந்து போய்விட்டாள். அத்துடன் இருதய நோய் வேறு. சமீபகாலத்தில் அவளது ஆரோக்கியம் மிகவும் கெட்டுவிட்டிருந்தது என்பது காவேரிக்குத் தெரியும்.

    சவுந்தரியைக் கவனித்த ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் காவேரியிடம் உண்மையைச் சொல்லிவிட்டிருந்தார். இன்னொரு மாரடைப்பு வந்தால் உடம்பு தாங்காது... இருதயம் வீங்கி மிகவும் பழுதடைந்து விட்டிருக்கிறது. ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். வேறு எதுவும் செய்ய இயலாது...

    எந்தச் சமயமும் அண்ணிக்கு மரணம் வரக்கூடும் என்ற நினைவு நெருப்பாகக் காவேரியின் நெஞ்சைச் சுட்டுக்கொண்டிருந்தது.

    வாய்விட்டு அழ முடியாத ஒரு இறுக்கமான துயரத்தில் அவள் சித்திரவதைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    அந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலைவரை தொடர்ந்தாற்போல நான்கு முழு நாட்கள் அவள் வீட்டில் இருக்க மாட்டாள். அப்போது அண்ணிக்கு ஏதேனும் ஏற்பட்டுவிட்டால்...? அம்மாவின் முகத்தைக்கூட அவள் பார்த்ததில்லை. அண்ணி சவுந்தரிதான் அவளுக்கு அம்மா... அப்பாவுக்குப் பின் அப்பா... அண்ணா, தோழி எல்லாம். சவுந்தரிக்குக் குழந்தைகள் ஏதும் கிடையாது. அந்தக் குறையை அவள் நினைத்துப் பார்க்க நேரமின்றி அந்தக் குடும்பத்தின் தாயாக அண்ணனையும், அவளையும் மனைவியை இழந்த வயதான மாமனாரையும் அவர்கள் நடத்தி வந்த உணவுக் கடையையும் எத்தனை சிறப்பாகக் கவனித்துக் கொண்டாள்! சதா சுறுசுறுப்பாக வளைய வந்தவள் இப்போது படுத்த படுக்கையாகி விட்டிருந்தாள்.

    தாயைப் போன்ற பாசம் மிகுந்த அண்ணிக்கு உடம்புக்கு முடியாதுபோது, கூட இருந்து பணிவிடை செய்யமுடியாமல், எங்கேயோ போய்ப் பள்ளிக்கூடக் குழந்தைகளைப் பரிசோதித்துக் கவனிக்கப் புறப்பட்டு விட்டிருக்கிறாளே!

    தன் இயலாமையை நொந்துகொண்ட வண்ணம் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டாள் காவேரி.

    டீ கொண்டு வந்திருக்கேன். சாப்பிடுங்க அண்ணி... என்று அன்புடன் கோப்பையை அவளிடம் நீட்டினாள்.

    லேடீஸ் ஸ்மித் பள்ளிக்கூடத்துக்குப் போகணும் இல்லையா? இங்கிருந்து இருநூத்தம்பது கிலோ மீட்டர் தொலைவாச்சே... பத்திரமா காரை ஓட்டிக்கிட்டுப் போ. பராக்குப் பாக்காதே. வீட்டைப்பத்தியும் வேறே எந்தக் கவலையும் மனதிலே வச்சுக்காதே. அங்கே தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டே இல்லியா...?

    சவுந்தரி அண்ணி அன்புடன் கேட்டாள்.

    ஆமாம் அண்ணி, டிபார்ட்மெண்டிலிருந்து டிரங்க்கால் போட்டு நம்ம ஜோதி சித்தப்பா வீட்டிலே தங்க ஏற்பாடு செய்திருக்கேன்.

    உனக்கு லேடீஸ் ஸ்மித் போக இஷ்டமில்லேங்கிறது எனக்குப் புரியுது. நீ திரும்பி வரதுக்குள்ளே எனக்கு ஒண்ணும் ஆயிடாது. கவலைப்படாதே. அந்தப் பள்ளிக் கூடத்திலே இப்போ மோகன்தான் பிரின்ஸ்பால்னு கேள்விப்பட்டேன். அதைப்பத்தியும் நீ கவலைப்படத் தேவையில்லை. தைரியமா போயிட்டு வா.

    சவுந்தரி அவள் கன்னத்தை அன்போடு வருடினாள்.

    கண் இமைகளைச் சுட்ட கண்ணீரைக் காவேரி சமாளித்துக் கொண்டாள். உங்களுக்குச் சாப்பிட ஏதாச்சும் எடுத்துக் கொடுத்துவிட்டு போகட்டுமா அண்ணி?

    சாப்பிட ஒண்ணும் வேணாம். நான் தினமும் கேட்டு ரசிக்கிற சீர்காழியின் அந்தப் பாட்டை டேப் ரிகார்டில் போட்டுட்டுப் போ; அதைக் கேட்கும் போதெல்லாம் எனக்குத் தாய்நாட்டின் நினைப்பு வரது... அந்த அகண்ட காவேரி என் கண் முன்னே தெரியறா. உன் அண்ணன் உசிரோடு இருந்தப்போ ஒருவாட்டி நானும் அவரும் தாய்நாட்டுக்குப் போய் என் பக்க மனுஷாளைப் பார்த்துட்டு வந்தோம். அதுக்குப் பிறகு போக எனக்கு நேரம் கிடைக்கவில்லை. இப்போ இந்த உடம்போட என்னாலே போக முடியாது. ஊருக்குப் போகணுங்கிற ஆசையை நிதமும் அந்தப் பாட்டைக் கேட்டாவது தீர்த்துக்கிறேன். போட்டுட்டுப் போம்மா...

    சவுந்தரியின் குரல் தடைப்பட்டது.

    அவளது ஏக்கம் காவேரியின் மனதைத் தொட்டது.

    அலமாரியிலிருந்த கேசட்டை எடுத்து டேப்ரிகார்டில் பொருத்தி அருகிலிருந்த மேசை மீது வைத்து பட்டனை அழுத்தினாள்.

    சீர்காழி கோவிந்தராஜன் தமது இனிய குரலில் கணீரென்று பாடத் தொடங்கினார்:

    நடந்தாய் வாழி காவேரி

    நாடெங்குமே செழிக்க

    நன்மையெல்லாம் சிறக்க

    நடந்தாய் வாழி காவேரி

    அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் – இந்த

    அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்

    நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய்

    நங்கையர் உனை வணங்கவும் – மலர்கள்

    கொஞ்சும் சோலைகள் நெருங்கவும்

    இன்ப யாழிசை முழங்கவும் – செவியில்

    செந்தமிழ்த் தேன் வழங்கவும்...

    அசைந்து - வளைந்து – நெளிந்து - தொடர்ந்து...

    அலைகடல் எனும் ஒரு

    மணமகன் துணை பெறவே...

    நடந்தாய் வாழி காவேரி...

    எனக்குப் பிடிச்ச காவேரி நதியின் பேரையே என் மாமியார் உனக்கு வச்சிருக்கிறதைப் பத்தி எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. காவேரி... எனக்கு ஒண்ணு செய்வியா... கிட்டவா... சவுந்தரி அழைத்தாள்.

    உணவளிக்கும் உழவர்களுக்கெல்லாம் கண்ணாக பண்பு

    உயர் தமிழ்நாட்டின் செல்லப் பெண்ணாக

    புலவர் எல்லாம் பாராட்டும் பொன்னாக

    அன்பு பொங்கி வரும் காவிரியே வாழியே...

    சீர்காழி பாடி முடித்ததும் அதை மீண்டும் கேசட்டில் சுழற்றி திரும்பப் பாடத் தயாராக வைத்துவிட்டு... கன்னத்தில் கோடிட்ட கண்ணீரை சவுந்தரி மெல்ல முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

    கே.டி. சந்தானம் என்கிறவர் எழுதியிருக்கிறார். சீர்காழி இனிய குரலில் பாடியிருக்கிறார். என் நாட்டையும்’ எங்கள் ஊரில் அகண்டு விரிந்து ஓடும் காவிரியையும் நினைத்தால் உடம்பு புல்லரிக்கிறது. மறுபடியும் தாய்நாட்டுக்குத் திரும்பிடணும். அந்தக் காவிரிக் கரையிலே உயிரை விடணும்... என் உடல் சாம்பல் அந்தப் புனித நதியுடன் இணைந்து கரைந்து ஒண்ணாகிடணும்னு ஆசையா இருக்கு... ஆனால் நம்பிக்கை இல்லை... அதனாலே...

    அண்ணி என்ன பேச்சு இது? ஓங்கிக் கத்திவிட்டாள் காவேரி.

    முழுக்கக் கேட்டுக்கோ. நெருப்புன்னா வாய் வெந்துடாது. நான் செத்துட்டா இங்கே உள்ள நம்ப உறவினர்கள் என் சாம்பலை இந்த ஊர் அம்கேணி ஆற்றில்தான் கரைப்பாங்க. ஒரு சமயம் டர்பன்பேயில் கரைச்சாலும் கரைச்சு காரியத்தை முடிச்சுடுவாங்க. நீ சின்னப்பெண். உன் வார்த்தையை யாரும் கேட்டுக்கமாட்டாங்க. அதனாலே நீ லீவு எடுத்துக்கொண்டு எப்பவாகிலும் இந்தியாவுக்குப் போனால் என்னுடைய துணிமணிகளில் ஏதாவது ஒரு கைக்குட்டையையாகிலும் எடுத்துப்போய் எங்க ஊர்க் காவேரியில் என்னை நினைச்சுட்டுப் போட்டுக் கையெடுத்துக் கும்பிடு போதும்... என் ஆன்மா சாந்தியடைஞ்சுடும்...

    அண்ணி, நான் வெளியூருக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும்போது இப்படிப் பேசறது நியாயமா... செல்லமாக அதட்டியபடி மறுபடியும் டேப்ரிக்கார்டரைத் தட்டிவிட்டாள்.

    மீண்டும் சீர்காழியின் கம்பீரக் குரல் காதுகளைத் தழுவியது.

    அறைக்கதவைத் திறந்துகொண்டு நைட்கவுன் சரசரக்கக் கோபாவேசமாகச் சின்ன அண்ணி யசோதா உள்ளே வந்து நின்றாள்.

    பக்கத்தறையிலே நான் தூங்கறது பிடிக்கலையா? விடியறதுக்கு முந்தி பாட்டுப் போட்டுக்கிட்டு ஊரையே எழுப்பணுமா? எரிச்சலுடன் ஆங்கிலத்தில் ஓரகத்தியிடம் கத்தினாள்.

    ஸாரி யசோதா, இனிமேலே ஹெட்போன் வச்சுக்கொண்டு டேப்ரிக்கார்டரைப் போடறேன். உன் தூக்கத்தைக் கெடுத்திட்டேன். மன்னிச்சிக்கோ... சவுந்தரி அண்ணி மெல்லிய குரலில் பேசியதைக் கேட்டுக் கொதித்துப் போனாள் காவேரி.

    தாயைப் போன்ற பெரிய அண்ணியிடம் யசோதா மட்டு மரியாதையில்லாமல் இப்படியா வந்து கத்துவாள்! அதுவும் இருதய வியாதிக்காரி... பாவம்... சே இவளும் ஒரு பெண்ணா!

    யசோதாவை வெறுப்புடன் வெறித்துவிட்டு சவுந்தரி பக்கம் திரும்பினாள்.

    அண்ணி நான் போய்யிட்டுவரேன். நம்ப வேலைக்காரி லீனா உங்களைக் கவனிச்சுக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். மருந்துகளை மறக்காம சாப்பிடுங்கோ. ஏதாச்சும்னா உடனே போன் பண்ணுங்கோ. லீவு போட்டுட்டு ஓடி வந்திடுவேன், வரட்டுமா?

    சின்னவளின் முகத்தைக் கூடப் பாராது விடைபெற்றுக் கொண்டு, பெட்டி, கூடை இவைகளைத் தானே தூக்கி எடுத்துக்கொண்டு தயாராகக் காராஜில் நின்ற கவர்மெண்ட் காரின் டிக்கியில் வைத்து மூடினாள்.

    முன் கண்ணாடியில் படிந்திருந்த பனி மூட்டத்தைத் துடைத்துச் சரிசெய்து விட்டுக் காரில் ஏறி உட்கார்ந்து வேகமாக அதைக் கிளப்பினாள்.

    நெடுஞ்சாலைக்குள் புகுந்ததும் ஒரு ஓரமாகக் காரை நிறுத்தினாள். அவளுக்கு லேடீஸ் ஸ்மித்திற்குப் போகவே விருப்பமில்லை.

    அங்கே மோகனைச் சந்திக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வேதனையாக நெஞ்சை நொறுக்கியது. கருணை கடுகளவுமில்லாத யசோதாவிடம் இருதய நோயில் வேதனைப்படும் பெரிய அண்ணியை விட்டுப் போகிறோமே என்கிற துயரத் தவிப்பும் சேர்ந்துகொள்ளவே, அவள் ஸ்டியரிங் மீது தலையைக் கவிழ்த்துக்கொண்டு குமுறி அழுதாள்.

    2

    ஹலோ அதிகாரத் தோரணையில் மிடுக்காக அழைத்த ஆணின் குரலைக் கேட்டு அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். விர்விர் என்று நெடுஞ்சாலையில் விரைந்த கார்கள் எழுப்பிய ஓசையில் அந்த மோட்டார் சைக்கிள் அருகே ஊர்ந்துவந்து நின்றது அவளுக்குக் கேட்கவில்லை.

    வெளிர் நீல ஷர்ட்டும், கருநீல அரைக்கால் பாண்டுமான சீருடையில் பளிச்சென்று மோட்டார் சைக்கிள் மீது உட்கார்ந்திருந்த அந்த வெள்ளைக்காரப் போக்குவரத்துப் போலீஸ்காரரின் நீலக் கண்கள் சிரித்தன.

    ஏதாவது உதவி தேவையா நர்ஸ் அதிகாரத் தோரணையும் அனுசரணையும் கலந்த மிடுக்கான குரலில் கேட்டபடி புன்முறுவலித்தார்.

    தாங்க்யூ ஆபீசர். ஒன்றும் தேவையில்லை என்று முணுமுணுத்த காவேரி சட்டென்று தன்னைச் சமாளித்துக்கொண்டாள். கைக்குட்டையால் அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

    ஸ்கூல் மெடிக்கல் இன்ஸ்பெக்ஷனுக்குத் தானே கிளம்பியிருக்கீங்க? வெகுதூரம் போகணுமா? அவளது தோள்பட்டையில் தெரிந்த பிளாஸ்டிக் பட்டையைப் பார்த்தபடி கேட்டார்.

    லேடீஸ் ஸ்மித்வரை போகணும்.

    நேற்று இரவு மூய் ரிவர் அருகே நல்ல மழை பெய்திருக்கு. டிராகன்ஸ்பர்க் மலை பனியால் மூடப்பட்டுக் கிடக்கு. சாலையில் நிதானமாகப் பார்த்து வண்டியை ஓட்டிக்கொண்டு போங்க எச்சரித்தார் அதிகாரி.

    சாலை விபத்துக்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் கணிசமானதொரு தொகைக்கு நான் இன்ஷ்யூர் செய்து கொண்டிருக்கிறேன் ஆபீசர்! கவலைப்படாதீங்க புன்னகைத்தபடி அவள் வண்டியைக் கிளப்பினாள்.

    உங்கள் குடும்பத்திற்கு அந்தப் பணம் பெருத்த அளவில் உதவலாம். அதற்காக நம் அரசு ஒரு துடிதுடிப்பான இளம்பெண் நர்ஸை இழக்க மனம் ஒப்புமா? விஷ் யூ எ வெரி பிளசண்ட் ஜர்னி பை... பை... என்று கையசைத்து விட்டுக் கனவேகமாக நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்த கிளைச்சாலைக்குள் புகுந்து மறைந்து போனார் போலீஸ்காரர்.

    சிறிதுதூரம் ஓட்டிய பின்னர்தான் அவளுக்கு அந்த எண்ணம் மனதில் தோன்றியது.

    புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஹைவே வழியாகப் போகாது, நேட்டாலின் தலைநகரான மாரிட்ஸ்பர்க்கிற்குப் போகும் பழைய சாலை வழியாகப் போனால்... மறுபடி ஒருமுறை அந்த அற்புதக் காட்சியை ஒரு சில நிமிடங்கள் பார்க்க வாய்ப்பு ஏற்படுமே!

    வார இறுதியில் திரும்பி வந்ததும், நர்ஸ்களின் தலைவி, அந்த வெள்ளைக்காரி, கார் ஓடிய தூரத்தின் விவரம் குறிக்கப்பட்டிருக்கும் லாக் புக்கை வாங்கிப் பார்ப்பாளே. அந்த கவர்மெண்ட் கார் எத்தனை கிலோ மீட்டர் அந்த வாரம் ஓடியிருக்கிறது என்று கணக்கிடுவாளே, அவளுக்கு நேட்டால் சாலைகள் எல்லாம் மனப்பாடம். ‘நேர்வழியாகப் போகாது குறுக்குச் சாலை வழியே போனால், பின்னர் ஏன் இந்த அதிகப்படியான கிலோ மீட்டரை உன் கார் காட்டுகிறது?’ என்று எல்லோர் முன்னாலும் கேட்டு அவமானப்படுத்துவாள்.

    மேல் அதிகாரிக்கு அந்தச் சில கிலோ மீட்டர் எதனால் அதிகமாகியது என்பதற்குக் காரணம் காட்டி ஒரு கடிதம் எழுதித் தொலைக்கவேண்டுமே! பிக்கல் பிடுங்கல் நிறைந்ததொரு தொல்லையான வேலையாச்சே அவளுடையது!

    ஆனாலும் இறந்துபோன பெரிய அண்ணனின் நினைவு நெஞ்சைப் பாறாங்கல்லாக அமுக்குவதை உணர்ந்தாள்.

    கடைசி முறையாகப் பெரிய அண்ணன், அண்ணி இருவருடன் ஒரு, ஞாயிற்றுக்கிழமை காலை அங்கே போய் அந்த அற்புதக் காட்சியைப் பார்த்து ரசித்துச் சிரித்து மகிழ்ந்த நினைவு மனதை வருடவே, அவள் துணிவுடன் காரை அந்தச் சாலையின் பக்கம் திருப்பினாள்!

    நேட்டால் ராஜதானிக்கே தனிச் சிறப்பைத் தரும், சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்து மகிழும் ‘தி வாலி ஆஃப் தவுசண்ட் ஹில்ஸ்’ என்பதை மீண்டும் ஒருமுறை பார்க்காது போனால்... பள்ளிக்கூடத்தில் வேலை ஓடாது போன்றதொரு இறுக்க உணர்வு ஏற்பட்டிருந்தது.

    பெரிய அண்ணன் இறந்து போவதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் அவர்கள் மூவரும் அங்கே வந்திருந்தனர்.

    வெகு தொலைவு பயணம் போல், அண்ணி சவுந்தரி விஜிடபிள் பிரியாணியுடன் தயிர்ப்பச்சடியும் எடுத்து வந்திருந்தாள்.

    பார்த்தியா உங்க அண்ணி வேலையை. கேப்டவுனுக்கு நாம் புறப்பட்டாப்பல சோத்து மூட்டையோட வந்துட்டாங்க. இதோ கொஞ்ச தூரத்திலே மாரிட்ஸ்பர்க் இருக்கு. அங்கே என் மாமன் மகன் வீடு இருக்கு. அத்தை என்னைக் கண்டதும் சூடா மீன் குழம்பு வச்சி, கறி கபாப் பண்ணிட மாட்டாங்களா?" பெரிய அண்ணன் கலகலவென்று சிரித்த நினைவை நெஞ்சினின்று உதற முடியவில்லை அவளால்.

    அண்ணி சவுந்தரியும் அவளும் மட்டுந்தான் அந்த வீட்டில் சைவ உணவுக்காரர்கள். மற்றவர்கள் அசைவ உணவு உட்கொள்கிறவர்கள். அத்துடன் அண்ணன்மார்கள் இருவருக்கும் குடிப்பழக்கமும் உண்டு. பெரிய அண்ணன் ஓய்வு நாட்களில் மட்டும்தான் குடிப்பார். சின்ன அண்ணன் வேலையின் போதும் சரி, வீட்டில் இருக்கும் போதும் சரி, கொஞ்சம் தாகத்துக்குப் போட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர்.

    காரை நிறுத்திவிட்டுக் காவேரி இறங்கினாள். சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ, பள்ளத்தாக்கை நன்றாக பார்க்குமிடத்தில் பலத்த இரும்புக் கம்பித் தடுப்புப்போட்டு வைத்திருந்தார்கள் சுற்றுலா அலுவலகத்தார். கம்பிக் கைப்பிடி மீது சாய்ந்தபடி கீழே கிடுகிடுபள்ளமாகத் தெரிந்த அந்தப் பள்ளத்தாக்கைப் பார்த்துப் பரவசமடையாப் பயணிகள் யாருமே இருக்க முடியாது.

    பச்சைப் போர்வையணிந்ததுபோல ஒன்றன் அருகே ஒன்றாக எழுந்து குவியலாகக் காணப்படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு குன்றுகளும் அந்தப் பசிய போர்வையிலே சிதறிக் கிடக்கும் ரத்தினச் சுடர்கள்போல் சிவந்த பூக்களைத் தாங்கி நிற்கும் கல்யாண முருங்கை மரங்களும்

    அவைகளினிடையே சூரிய ஒளியில் வெள்ளிக்கோடு போல நெளிந்து ஓடிக் கடலுடன் கலக்க அவசரப்படும் அம்கேனி ஆற்றின் அழகுத் தோற்றமும்... பார்க்கக் கண்களுக்குப் பெரும் விருந்து என்பதில் சந்தேகமில்லை.

    பைனாகுலரை வைத்துப் பார்த்துக்கொண்டே நின்ற அவளிடம் அண்ணா ஐஸ்கிரீம் கோன் ஒன்றை அருகிலிருந்த கடையில் வாங்கிக் கொண்டுவந்து நீட்டினார். அதை அவள் நாவால் வழித்துச் சுவைத்துக்கொண்டு நிற்கையில் ஐஸ்கிரீம் உருகி முழங்கைவரை ஓட அதைக்கண்ட அண்ணி சிரித்தாள்.

    சரியான குழந்தை நீ இன்னமும் என்று அன்புடன் கடிந்தபடி தன் கைக்குட்டையால் துடைத்துவிட்டாள்.

    சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவள் நம் குழந்தைதானே சவுந்தரி.

    இந்தக் குழந்தையைச் சீக்கிரம் கல்யாணம் செய்து வச்சு, அவள் குழந்தையை நான் என் மடிமேல் வச்சுக் கொஞ்சணும்னு ஆசைப்படுகிறேன். நேத்துக்கூட மோகனைப் பார்த்தேன்... பொருள்பட அண்ணன் பேசியதும் அவள் நெஞ்சு இன்பத்தில் துடித்தது. முகம் சிவந்து போனாள்.

    அதோ பாருங்க. அம்கேனி ஆறு எத்தனை அழகா இருக்கு... பேச்சை வேறு திசையில் திருப்ப முயன்றாள்.

    மோகனுக்கும் அவளுக்கும் நடக்க இருந்த கல்யாணம் நின்றுபோனது என்பதை அறியாமலே பெரிய அண்ணன் இறந்து போனது ஒரு வகையில் நல்லதுதான், அவரால் அந்த அவமானத்தை அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டிருக்க இயலுமா?

    ஆயிரம் குன்றுகளைப் பார்த்துவிட்டு அவர்கள் திரும்பிய அன்று இரவே அண்ணனுக்குத் தாங்கமுடியாத வயிற்றுவலி வந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பல பிரபல வைத்தியர்கள் கவனித்தும் அண்ணன் இறந்து போனார். அக்யூட் ஹெமராஜிக் பான்கிரியாட்டைட்டிஸ் என்றார்கள் வைத்தியர்கள். விதி என்றாள் எதிர்வீட்டுப் பாட்டி. பேரிழப்பு என்றார்கள் அவளது நண்பர்கள்.

    பெரிய அண்ணனை அழுத்தமாக நினைவுறுத்திய அந்த ஆயிரம் குன்றுப் பள்ளத்தாக்கைப் பார்க்க அவள் கைப்பிடி மீது சாய்ந்துகொண்டாள்.

    அப்பப்பா என்ன குளிர் ஊசிபோல முகத்தைக் குத்துகிறதே என்று முனகியபடி தனது கம்பளிக் கோட்டை இழுத்து மூடிக்கொண்டு கைகளைப் பின்னியபடி நின்றாள்.

    கீழ்வானம் லேசாகச் சிவக்கத் தொடங்கிவிட்டிருந்தது. குளிர்காலமானதால் பசிய போர்வைக்குமேல் குன்றுகளை வெள்ளைப் பனிப்படலம் மூடிக்கொண்டிருந்தது. இங்குமங்கும் அதையும் மீறிக் கல்யாண முருங்கையின் சிவந்த பூக்கள் சில எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

    டிசம்பர் மாதத்திலே சூரியன் பளிச்சென்று புறப்படும் காலை வேளையிலே வந்து பார்த்தால் இது ஒரு கோலாகலமான காட்சி. இப்போ பள்ளத்தாக்கு பனிப்போர்வையிலே தூங்கிகிட்டு இருக்கே... ஆமாம், எங்கே போறாப்பல?... கேட்டபடி மிக அருகில் வந்து கைப்பிடி மீது சாய்ந்துகொண்டு நின்றான் தாமோதரன்.

    காவேரிக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவன் இந்தக் காலை வேளையில் இங்கே எப்படி?

    அவள் மனதினுள் எழுந்த கேள்விக்கு உடனே அவன் பதில் தந்துவிட்டான்.

    ஜபுலானா என்கிற கல்லூரி மாணவனுக்குப் பயங்கரவாதி என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை வழங்கியிருக்காங்க இல்லையா? அவனை பிரிட்டோரியா ஜெயிலில் பார்த்து, அப்பீல் செய்யப் போகிறோம். அவசரப்பட வேண்டாம் என்று ஆறுதல் சொல்லிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன் என்றான்.

    குளிருக்கு அடக்கமாகத் தாடைவரை எட்டிய கழுத்து வைத்த கம்பளிச் சட்டைக்குள் அவன் முன்னைவிடப் பருமனாகத் தோன்றினான்.

    அப்படி ஒண்ணும் பார்க்க வேணாம். நான் எப்போதும்போல ஒரே சீரான உடல் எடையில்தான் இருக்கேன். கம்பளிச் சட்டையில் குண்டாகத் தெரிகிறேன். மற்றப்படி அதே தாமோதரன்தான் சிரித்தான்.

    பளிச்சென்று அவனது முகத்தில் களையிட்ட அந்தச் சிரிப்பை வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றாள். பல்வேறு கலவை உணர்வுகளால் அவள் மனம் கொந்தளித்தது.

    இந்தத் தங்க நிறக் கைகள் பக்கத்திலே என் கைகளைப் பார். எத்தனை கருப்பு! பிரிட்டோரியா குளிரில் முன்னைவிட நான் கருத்துப் போனேன். கவனிச்சியா? கலகலவென்று சிரித்தான் தாமோதரன்.

    நிறம் கருப்பானாலும் கம்பீரமான தோற்றம். களையான முகம், கனிவு நிறைந்த கண்கள், கூர்மூக்கின் கீழ் அழகான கட்டை மீசை, வரிசையான பற்கள். எல்லாவற்றையும்விடப் பிரபலமானதொரு வழக்கறிஞர். எஸ்டேட் ஏஜன்சி நடத்தி, பணத்தில் புரள்கிறவன் என்கிற தகுதி, அவனை மணந்துகொள்ள அந்த ஊரில் பெண்கள் பலர் ஆவலுடன் கியூவில் நிற்பார்களே!

    நமக்குள் கருப்பு, வெள்ளைன்னு வித்தியாசம் பாராட்டுகிற மனப்பான்மை இருக்கும்போது வெள்ளைக்காரர்கள் நிற பேதம் காட்டுகிறார்கள் என்று அவர்களை நாம் சாட என்ன உரிமை இருக்கு... சொல்லிக்கொண்டே சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான்.

    உனக்காகக் குடிப்பதை விட்டுவிட்டேன். நான் மாமிசம் சாப்பிடுவதைக்கூட நிறுத்திவிட்டிருந்தேன். ஆனால் என்ன பயன்? உன் சின்ன அண்ணிக்கும், அண்ணனுக்கும், ஏன் பெரியவருக்குக்கூட என் நிறம் பிடிக்காமல் போயிடுச்சு. மோகனைப்போலக் கோதுமை நிறத்தில் உனக்கு மாப்பிள்ளை தேட ஆசைப்பட்டார்கள்.

    கீழ் உதட்டை அழுத்திக் கடித்துக்கொண்டு கோபமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

    உண்மை அதுவல்ல என்பது உங்களுக்கே தெரியும், மிஸ்டர். தாமோதரன், காலை வேளையில் தொலைதூரம் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது என்னிடம் வம்புச்சண்டை இழுக்கிறீங்க... இல்லையா?

    ஏதோ ஒரு காரணம். அதை விட்டுத்தள்ளு. ரொம்பதூரம் நீ போக வேண்டியிருக்கும். நேர்சாலையில் போகாது, இப்படி இந்த வழி வந்ததுக்கு ஈடுகட்ட நீ ஏதாவது வழிசெய்து லாக் புக் எழுதணும். கொஞ்சம் இரு என்று கையமர்த்தினான். அருகிலிருந்த கடையில் ஒரு பெரிய சாக்லெட் கட்டியை வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் நீட்டினான். ஆல்பேனி சாக்லெட் உனக்குப் பிடிக்கும் என்பதை நான் மறக்கலை. அதில் உள்ளது போலக் கசப்பும், இனிப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை. சிலருக்கு ஒரே இனிப்பாக வாழ்க்கை அமைந்து விடுகிறது. சிலருக்கு... முடிக்காது அவளிடம் அதைக் கொடுத்தான். வழியில் தூக்கம் வந்தால் ஒரு விள்ளலை ஒடிச்சு வாயில் போட்டுக்கொண்டு மென்றுதின்றபடி வண்டியை ஓட்டு. தூக்கம் கலைஞ்சு போயிடும்.

    தாங்க்யூ மிஸ்டர் தாமோதரன் அதை அவள் பெற்றுக்கொண்டாள். எனக்கு இந்த மிஸ்டர் பிடிக்காது. நீ எப்பொழுதும் என்னைத் தாமு என்று நட்புரிமையோட கூப்பிடலாம்னு சொல்லியிருக்கேனே... ப்ளீஸ்...? என்றான்.

    துயரமும் வெட்கமும் நெஞ்சை நொறுக்க, அவள் மௌனமாக முறுவலித்தாள்.

    உங்க அம்மா இறந்தபோது என்னால் சாவுக்கு வரமுடியலை, புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன் தாமு?

    அரசியல் கோதாவிலே குதிச்சிருக்கிற என்னை, சதா சி.ஐ.டி. கண்காணிச்சிட்டிருக்காங்க. அரசு ஊழியரான நீ என் வீட்டுக்கு வரது சாத்தியப்படாது. புரிகிறது. மேலும் சாவுக்கோ வாழ்வுக்கோ பெருத்த கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யறது எனக்குப் பிடிக்காது. அம்மாவை அமைதியாக அனுப்பி வைத்துவிட்டேன். மெல்லியதாகச் சிரித்தான் அவன்.

    அம்மாவுக்குப் பிறகு வீட்டை?...

    "அம்மாவை ஆர்ப்பாட்டமில்லாமல் அனுப்பிவச்சது போல் சத்தம் போடாம ஒரு பதிவுத் திருமணம் செய்துகொண்டு விட்டேன்னு நினைச்சா அது தப்பு. ஒரே ஒருத்தியைத்தான் நான்

    Enjoying the preview?
    Page 1 of 1