Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paathaiyil Kidantha Oru Panimalar
Paathaiyil Kidantha Oru Panimalar
Paathaiyil Kidantha Oru Panimalar
Ebook142 pages50 minutes

Paathaiyil Kidantha Oru Panimalar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாந்தாவிற்கும், கிரிதரனிற்கும் கல்யாணம் நிச்சையமாகிறது. கல்யாணத்திற்கான இந்த இடைவெளியில் கிரிதரன், தன் முதலாலியின் மகளை பணத்திற்காக திருமணம் செய்து கொள்கிறான். சாந்தா தன் அப்பாவையும் இழந்து அனாதையாக வாழ்கிறாள். இப்பொழுது அவளுடைய சிநேகிதன் நந்தகோபால் வருகிறான். அந்த நந்தகோபால் சாந்தாவை ஏற்றுகொள்வானா? இல்லை, பாதையில் கிடந்த ஒரு பனிமலராக அவள் வாழ்ந்தாளா? என்பதை படித்து அறிவோம்!

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580155610933
Paathaiyil Kidantha Oru Panimalar

Read more from Lakshmi

Related to Paathaiyil Kidantha Oru Panimalar

Related ebooks

Reviews for Paathaiyil Kidantha Oru Panimalar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paathaiyil Kidantha Oru Panimalar - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாதையில் கிடந்த ஒரு பனிமலர்

    Paathaiyil Kidantha Oru Panimalar

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    அறையைவிட்டு வெளியேறு முன் சாந்தா ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்றாள்.

    மிதமான ஒப்பனையில் நீல வண்ண பனாரஸ் பட்டில் கண்ணாடிக்குள் தெரிந்த அந்த அழகான பெண்ணுக்கு வயது இருபத்தேழு என்றால் யாருமே நம்பமாட்டார்கள்.

    இருபதைக்கூடத் தாண்டாத இளமையின் பொலிவு. தொட்டால் சிவந்துவிடும் தங்க நிறம், மூக்கு, கண், முடி எதிலும் குறையில்லாத கச்சிதமான அழகு உருவம்.

    தெருவில் சிறிது தூரம் நடந்தாலோ, அலுவலகத்திற்குள் புகுந்தாலோ யாரும் மறுபடியும் திரும்பிப் பார்க்கத்தூண்டும் கவர்ச்சியான தோற்றம்.

    உதட்டைத் தாண்டி முகவாய் மீது பரவிக்கொண்டுவிட்ட உதட்டுச் சாயத்தை டிஷ்யூ காகிதத்தால் மெல்ல ஒத்தி சரிசெய்து கொண்டாள்.

    இமைகளை மூடி கண்களைத் திறந்து, மைக்கோட்டை சரி பார்த்துக்கொண்டாள். வாரி சுருட்டி உயரமாகப் போடப்பட்டிருந்த கொண்டை ஓரத்திலே ஒயிலாகச் சொருகப்பட்டிருந்த ஒத்தை ரோஜா முடியலங்காரத்திற்கு சிகரம்போல மிகவும் பொருத்தமாகத்தானிருந்தது.

    அத்தை கற்பகம் ஜன்னல் கதவுகளை மூடும் சப்தம் கேட்டது. தொடர்ந்து அவள் தனக்குள்ளே பேசிக்கொண்டதும் கேட்டது. இன்னிக்கு முகூர்த்த நாள். ஊரில் ஒரு கல்யாண மண்டபமும் பாக்கியிருக்காது. சாமான்கள் விலை விஷமா ஏறிக்கிட்டு போவுதுண்னு புலம்பறாங்க. ஆனால் கல்யாணங்களுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. விலைக்கு பயந்துகிட்டு எதை நிறுத்த முடிகிறது? பெருமூச்சுடன் பின்பக்கத்து கதவை ஓங்கி சாத்தி பூட்டிக்கொண்டிருந்தாள் அத்தை. அவளது அலுவலகத்து மேனேஜர் வேதகிரியின் கடைசி மகள் சர்மிளாவுக்கு அன்று திருமணம். நகரத்தில் புதிதாக உருவாகியிருந்த தேவகி மண்டபத்திலே கல்யாணம். ஞாயிற்றுக்கிழமை மெல்ல எழுந்து குளித்து, உடுத்திக்கொண்டு சாவகாசமாக வந்து கல்யாண சாப்பாட்டை ஒரு கை பார்த்துவர, சௌகர்யமாக அமைந்த காலை பத்தரை பனிரெண்டுக்குள் அமைந்த முகூர்த்தம்.

    வார முழுவதும் வீட்டைக் கட்டிக்கொண்டு பாடுபடும் அத்தை கற்பகத்தை அவள் நாடகம், கச்சேரி, கல்யாணம் முதலியவற்றிற்குகூட அழைத்துச்செல்வது வழக்கம்.

    சின்ன வயதிலேயே விதவையாகி அண்ணன் வீட்டிற்குள் வந்து அண்டிக்கொண்டுவிட்ட அத்தை கற்பகந்தான் அன்றிலிருந்து இன்றுவரை குடும்ப நிர்வாகப் பொறுப்பை சுமந்து கொண்டிருந்தாள். அவளுக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அவள் தாய் ஒரு நோயாளி. வருஷத்தின் பெரும்பகுதியை அவள் படுக்கையிலேயே கிடந்து ஓட்டிவிட்டாள்.

    நல்லவேளை, வீட்டுக்கு சாந்தா ஒரே பெண். அப்பாவின் சொத்துக்கு ஒரே வாரிசு.

    அம்மாவுக்குப்பின் அத்தைதான் அவளைப் பாடுபட்டு வளர்த்தாள். அந்த ஒன்றுக்காக சில சமயம் கற்பகம் உறுத்தலாகப் பேசும் சொற்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டித்தானிருந்தது.

    பெயருக்கேற்றபடி சாந்தாவுக்கு அந்த குணம் சிறிதுமே கிடையாது என்பது உண்மை. படபடவென்று பேசிவிடத் துடிக்கும் ஆத்திரக்காரிதான். ஆனாலும் அத்தையிடம் எதிர்த்து நின்று சண்டைபோட விரும்பியதேயில்லை.

    வயதாகிவிட்டது. என்னவோ உளறிக்கிட்டிருக்காங்க... போகட்டும் என்று ஒதுங்கிப்போவது அவள் வழக்கம்.

    மேலும் அப்பாவுக்குப்பின் அவளுக்குத் துணையென்று அந்த வீட்டில் அத்தையைத் தவிர வேறு நெருங்கிய உறவினர் யாரும் கிடையாது.

    சண்டை ஏற்பட்டு மனத்தாங்கல் காரணமாக அத்தை கற்பகம் மூட்டையைக் கட்டிக்கொண்டு வெளிக்கிளம்பிவிட்டால்... அவள் எப்படி வீட்டு நிர்வாகத்தை சமாளிப்பாள். படித்தவள் தான் சாந்தா. அலுவலகத்தில் நல்ல பதவியில் இருப்பவள் தான். இளமை கொடுக்கும் துணிச்சலும் நிரம்பியவள் தான்.

    முற்போக்கு... என்று வாய்கிழியப் பேசினாலும் ஒரு இளம் பெண் தன்னந்தனியே வாழ்வதை நாகரீகமாகக் கருதும் நிலை நம்மிடையே பரவலாக இன்னும் வரவில்லையே?

    அத்தை எனும் துணை அவளது இளமைக்கு இப்போது பாதுகாப்பாகத் தேவைப்பட்டது.

    வாயிற்படியில் நிழலாடியது, திரும்பிப் பார்த்தாள். கருப்பும், வெள்ளையுமாக இழை ஓடிய முடியை அழுத்தி வாரி கோடாலி முடிச்சிட்டுக்கொண்டு, அத்தை வெள்ளை ரவிக்கையுடன், இணைந்த மேக வர்ண காஞ்சிபுர பட்டுச்சேலையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தாள்.

    பத்தடிக்கப் போவுது. இன்னும் என்ன பண்ணிக்கிட்டிருக்கே? கற்பகம் அதட்டிக்கொண்டு தன் இடது கை மணிக்கட்டிலிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள்.

    நாடகம், கல்யாணம் எதுவானாலும் சரி கற்பகத்திற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே சபைக்குள் சென்று ஆசனத்தில் அமர்ந்திட வேண்டும். நிம்மதியாக முன்வரிசையில் உட்கார்ந்தபடி கண்களை ஓடவிட்டு... யார் வந்திருக்கிறார்கள்? யார் வரவில்லை... என்ற பட்டியலை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பேச விஷயங்கள் தேவைப்படுமே?

    இதோ கிளம்பிட்டேன் அத்தை... காரில் போகப்போறோம். கல்யாண மண்டபம் கிட்டத்திலேதான் இருக்கு... சிணுங்கியபடி பரிசுப்பொட்டலத்தையும், கைப்பையையும் தூக்கிக்கொண்டாள் சாந்தா.

    கற்பகம் மீண்டும் ஒருமுறை சமையலறைக்குள் சென்று காஸ் சிலிண்டரின் திருகு சரியாக மூடியிருக்கிறதா என்று சோதித்துவிட்டு வேகமாகக் கதவை சாத்தினாள்.

    அப்பாவுடைய வெள்ளை பியட் எட்டு வருஷத்துக்கு முந்திய மாடல். அப்பா அதைப் பத்திரமாகக் கையாண்டதின் பயன்... தொல்லைகள் அதிகம் கொடுக்காத, நன்றியுள்ள நாய்க்குட்டியாக அவள் இழுத்த இழுப்பிற்கு அது ஓடிக்கொண்டிருந்தது.

    கல்யாண மண்டபத்தின் வாயில் அருகே அத்தையை இறக்கி விட்டுவிட்டு கார்கள் நிறுத்தப்பட்டிருக்குமிடத்தில் முன் பக்கத்திலே ஒரு இடத்தைப் பிடிக்க அவசரப்பட்டாள் சாந்தா.

    காரைப் பின்னால் நகர்த்தி வரிசையில் நிற்க வைத்துவிட்டுக் கதவைத் திறக்க குனிந்தவள்... அங்கு விரைவாக வந்துகொண்டிருந்த ஒரு நீல அம்பாசிடரை கவனித்துவிட்டாள்.

    அதை ஓட்டிக்கொண்டு வந்தவனையும் அவன் பக்கத்திலிருந்தவளையும் ஒரு கணம் தான் பார்த்தாள். திக்கென்ற உணர்வில், உடலும் உள்ளமும் பதைக்க அப்படியே ஆசனத்தில் சாய்ந்துகொண்டு விட்டாள்.

    ஹலோ கிரி! நீ எந்தப் பக்கம்... பெண் வீட்டைச் சேர்ந்தவனா... பிள்ளை வீட்டைச் சேர்ந்தவனா? ஒரு ஆண் குரல் அவனுக்கு உற்சாகமான வரவேற்புக்கொடுத்தது.

    யாருக்கும் சொந்தமில்லை. நண்பர் வீட்டுக் கல்யாணம். வந்திருக்கேன். ஆமாம்... நீ மட்டுமா வந்திருக்கே? வீட்டிலே அவங்க வரலையா? கேட்டபடி நண்பனுடன் கிரிதரன் தன் வீட்டுக்காரியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை நோக்கி விரைந்தான். குனிந்த நிலையில் குற்றம் புரிந்துவிட்டவள் போல நெஞ்சு துடிதுடிக்க அவள் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள்.

    காதோரம் விழித்த வியர்வையை துடைத்துக்கொண்டு மெல்ல காரிலிருந்து இறங்கினாள். உயிர்போய் உடம்பு சக்கையாகிவிட்டது போன்றதொரு தள்ளாடலில் கால்கள் நடுங்குவதை உணர்ந்தாள்.

    இதென்ன கொடுமை? வருஷங்கள் ஐந்தாகியும் இன்னமும் கிரிதரன் அவளது உணர்வுகளை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு அவளிடம் ஒரு பாதிப்பை உண்டு பண்ணியிருக்கிறானே பாவி!

    அதற்குப் பின்னர் அவள் மனதிலே ஒரு சலிப்பு. ஞாயிற்றுக்கிழமை வாரத்தில் ஒரு முழு ஓய்வுநாள். எண்ணை தேய்த்து ஸ்நானம் செய்துவிட்டு அத்தை தயாரிக்கும் மிளகு ரச சாதம் சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக ஒரு கதைப் புத்தகத்துடன் கட்டிலில் படுத்துக் கிடக்கலாம். உடம்புக்கும், மனதிற்கும் இதமாக இருந்திருக்கும்.

    அதை விட்டு காசைக்கொடுத்து தேளைக் கொட்டிக்கொண்டது போலப் பரிசுப்பொருளுக்காகக் கடைகளில் அலைந்து தேடி வாங்கிக்கொண்டு அவசரமாகக் குளித்துவிட்டு வியர்வையால் புழுங்க பட்டுச்சேலையைக் கட்டிக்கொண்டு கிளம்பி வந்து இங்கே அந்த பழைய கதையை நினைத்து துயரப்படவா வேண்டும்?

    மண்டபத்தின் வாயிலில் கால் கடுக்க நின்றுகொண்டிருந்த அத்தை முகத்திலே கடுமை தெரிந்தது.

    உனக்குப் பின்னால் எத்தனை பேர் கார்களை கொண்டாந்து நிறுத்திட்டு சீக்கிரம் வந்துட்டாங்க. நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்தே. பெரிய இடத்துக் கல்யாணம். கூட்டம் ஏராளமா இருக்கு உட்கார இடம் கிடைக்குமோ என்னவோ... முணுமுணுத்தாள்.

    தன்னுள்ளே கொதித்துப்புரண்ட உணர்வுகளை

    Enjoying the preview?
    Page 1 of 1