Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அச்சம் விடு பச்சைக் கிளியே!
அச்சம் விடு பச்சைக் கிளியே!
அச்சம் விடு பச்சைக் கிளியே!
Ebook109 pages38 minutes

அச்சம் விடு பச்சைக் கிளியே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாப்பிள்ளையின் தாய் ஆடு திருடிய கள்ளியைப் போல் விழித்தாள். செய்தியைக் காதோடு காதாக தன்னோடு வந்திருந்தவர்களுக்கும் பரப்பினாள். தொடர்ந்து அனைவரின் முகமும் இருண்டது. ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.
 சங்கர மூர்த்திக்கு எதுவோ தவறாகப் பட்டது. மகளை உள்ளே போகச் சொல்லி கண் ஜாடை காட்டினார்.
 மலர்விழியும் ராதிகாவும் உள்ளே சென்றனர்.
 "பொண்ணைப் பார்த்தீங்க. உங்க அபிப்பிராயத்தை சொன்னா மேற்கொண்டு பேசலாம்" என்று நேரடியாக விஷயத்தைத் தொட்டார்.
 நேருக்கு நேராக மாப்பிள்ளையின் முகம் பார்த்தார்.
 அவன் சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.
 பரணியின் தாய் நெளிந்தாள்.
 "அது வந்து... நாங்க போய் லெட்டர் போடறோமே!"
 "லெட்டர் போடறதா? எந்தக் காலத்துல இருக்கீங்க?"
 "சரி... போன் பண்றோம்,"
 "எதுக்கு சுத்தி வளைக்கறீங்க? எதுவாயிருந்தாலும் நேரடியா சொல்லிடுங்க."
 "வந்து... பையன் பொண்ணு தன் கலருக்கு ஏத்த மாதிரி இல்லைன்னு சொல்றான். கொஞ்சம் கருப்பா... இல்ல மாநிறமா இருக்கறதால..."
 "இங்க பாருங்க... பொண்ணோட ஃபோட்டோவைத் தரகர் மூலமா பார்த்துட்டு புடிச்சிருக்குன்னு சொல்லித்தானே நேர்ல பார்க்க வந்தீங்க. இப்ப இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?"மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
 "மாப்பிள்ளைக்கு பொண்ணு நிறம் கொஞ்சம் கம்மிங்கறதால தடுமாற்றமா இல்லை... பொண்ணோட சிநேகிதி நல்ல நிறமாயிருந்தாளே... அவளைப் பிடிச்சுப் போனதால வந்த தடுமாற்றமா?"
 மாப்பிள்ளை வீட்டாருக்கு பெரும் சங்கடமாகப் போய்விட்டது.
 மாப்பிள்ளை மட்டும் சட்டென்று நிமிர்ந்தான்.
 "உண்மைதான். எனக்கு அந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க பொண்ணைத்தான் பார்க்க வந்தேன். இல்லேன்னு சொல்லலை. ஆனா... அந்தப் பொண்ணைப் பார்த்ததும் கட்டினா இவளைத்தான் கட்டனும்னு என் மனசு சொல்லிட்டு. அப்புறம் எனக்குப் பொய்யாப் பேசத் தெரியலை. என்னை நீங்க எப்படி எடுத்துக்கிட்டாலும் சரிதான். தாலி கட்டாத வரைக்கும் எந்தப் பொண்ணையும் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமையிருக்கு. எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் உரிமையிருக்கு. இதுல வருத்தப்பட எதுவுமே இல்லை. என்னைவிட நல்ல மாப்பிள்ளை உங்க பொண்ணுக்கு அமையலாம்."
 மாப்பிள்ளையின் பேச்சில் சங்கர மூர்த்தியும் வேணியும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தவர்களாக நின்றிருந்தனர்.
 "உங்களால ஒரு உதவி செய்ய முடியுமா?"
 இருவரும் அதிர்ச்சியிலிருந்து மாறாதவர்களாக அவனையே பார்த்தனர்.
 "அந்த பெண் வீட்டு அட்ரஸ் தந்தா நல்லாயிருக்கும். அவங்கப்பாகிட்ட பேச வசதியாயிருக்கும்."
 சங்கர மூர்த்திக்கு வந்த ஆத்திரத்திற்கு அப்படியே அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றி நான்கு அறை கொடுத்தால் தேவலாம் போலாகிவிட்டது.
 சிரமப்பட்டு தன் கோபத்தை அடக்க முயற்சி செய்தார்.
 அதே சமயம் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் மலர்விழி. நேராக பரணியின் எதிரே வந்து நின்றாள்மிஸ்டர் பரணி. எங்க அப்பா அம்மாவுக்கு உங்க மேல கோபமும் வருத்தமும் இருக்கிறது நியாயமில்லை. எனக்கு அதிகமா கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா எங்க அம்மா அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. இன்னார்க்கு இன்னாரைத் தீர்மானிக்கறவன் கடவுள்னு சொல்றவங்க எனக்காகத் தீர்மானிக்கப்பட்டவர் நீங்க இல்லைன்னு ஏன் நம்பமாட்டேங்கறாங்க? ஏன் சாதாரணமா இருக்காம கோபப்படறாங்கன்னு தெரியலை. அவங்க நம்பாததை நான் நம்பறேன். எனக்குன்னு தீர்மானிக்கப்பட்டவர் நீங்க இல்லை. அதனால எனக்கு எந்த வருத்தமுமில்லை. நீங்க என் தோழியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு சந்தோஷம்தான். பெரியவங்க என்ன நினைப்பாங்களோன்னு பயந்துக்கிட்டு என் தோழியைப் பார்த்து மயங்கின மனசோடு என் கழுத்துல தாலியைக் கட்டிட்டு அவ வரும்போதும் போகும்போதும் சலனப்பட்டுகிட்டே வாழறதோட இப்படிப் பட்டுன்னு நேர்மையா - வெளிப்படுத்தினீங்க பாருங்க... உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்றவள் ஒரு துண்டுக் காகிதத்தை நீட்டினாள்
 "இது ராதிகாவோட வீட்டு அட்ரஸ். நீங்க போய் முறைப்படி அவ அப்பாக்கிட்ட பேசுங்க. உங்க ஆசை நிறைவேற என்னோட வாழ்த்துக்கள்."
 அவள் நீட்டிய காகிதத்தை "தாங்க்ஸ்' என்று சொல்லிப் பெற்றுக் கொண்டான்.
 மறுநிமிடம் "நாங்க வர்றோம்" என வாசலை நோக்கிச் சென்றான்.
 மற்றவர்களும் எழுந்து தயக்கமாக ஒரு முணு முணுப்பாக விடைபெற்றுக் கொண்டு அவன் பின்னால் நகர மாப்பிள்ளையின் தாய் மட்டும் தலைகுனிந்தபடியும் அதிர்ச்சியில் உறைந்தபடியும் நின்றிருந்த மலர்விழியின் பெற்றோரிடம் வந்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 2, 2024
ISBN9798224025299
அச்சம் விடு பச்சைக் கிளியே!

Read more from R.Sumathi

Related to அச்சம் விடு பச்சைக் கிளியே!

Related ebooks

Related categories

Reviews for அச்சம் விடு பச்சைக் கிளியே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அச்சம் விடு பச்சைக் கிளியே! - R.Sumathi

    1

    கையில் கனகாம்பரப் பூச்சரத்துடன் மலர்விழியின் அறைக்குள் நுழைந்த

    வேணி, மலர்விழி செல்போனில் யாருக்கோ முயற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

    மலர்விழி யாருக்கு போன் பண்றே? என்றாள்.

    ராதிகாவுக்குத்தான்.

    வேணியின் முகம் மாறியது.

    இப்ப எதுக்கு அவளுக்கு போன் பண்றே?

    வீட்டுக்கு வரச் சொல்லத்தான்.

    வேணியின் முகம் இன்னும் மாறியது.

    அவளை எதுக்கு இப்ப வரச் சொல்றே? உன்னைப் பெண் பார்க்க இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க. இந்த நேரத்துல அவ எதுக்கு?

    அதனாலதான் வரச் சொல்றேன். அவ வந்தா எனக்கு கொஞ்சம் தைரியமாயிருக்கும். படபடப்பு இருக்காது.

    நல்லாயிருக்குடி உன் கதை? வேலியில போற ஓனானை எடுத்து எவளோ காதுக்குள்ள விட்டாளாம். அந்தக் கதையாயிருக்கு.

    மலர்விழி சிரித்தாள்.

    ராதிகாவை ஓணான்னு சொல்ல உனக்கு எப்படிம்மா மனசு வருது. எங்க காலேஜ்ல அவதான் நம்பர் ஒன் அழகி. அழகிப் போட்டியில கலந்துக்க முயற்சி எடுத்துக்கிட்டிருக்கிற அவ காதுல மட்டும் இந்த வார்த்தை விழுந்தது பாவம்... அப்படியே மனசு உடைஞ்சு போய்டுவாம்மா.

    அதனாலதான்டி சொல்றேன். அவ உன்னைவிட அழகு. பளிச்சுன்னு இருப்பா. உன்னைப் பெண் பார்க்க வர்றவங்க அவளைப் பார்த்துட்டு உன்னை வேண்டாம்னு சொன்னா என்ன பண்றது?

    நல்லதாப் போச்சு. வர்றவனை வேண்டாம்னு சொல்லிடுவேன். அப்படிப்பட்டவனைக் கட்டிக்கிட்டாலும் பிரச்னைதாம்மா. அவன் கூட சேர்ந்து போனா ரோட்ல எதிர்ல ஒரு அழகான பொண்ணு வந்தா என்னைத் தெருவிலேயே அம்போன்னு விட்டுட்டு அவ பின்னாடி போயிடுவான்மா.

    மலர் சும்மா எதையாவது விளையாட்டாப் பேசாதே. இந்த மாப்பிள்ளையை எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடியிருக்கோம்னு உனக்கே தெரியும். உனக்கு செவ்வாய் தோஷம். எத்தனை வரன் வந்து தட்டிக்கிட்டுப் போயிருக்கு. இந்த பையனுக்கும் செவ்வாய் தோஷம்கிறதால ஒத்து வந்திருக்கு நல்லபடியா முடியணும். நீ பாட்டுக்கு எதையாவது பண்ணி வைக்காதே!

    "அதனாலதாம்மா நானும் தைரியமா கூப்பிடறேன் நீ ஒண்ணும் கவலைப்படாதே. செவ்வாய் தோஷம் உள்ள பொண்ணு கிடைக்காம மாப்பிள்ளை வீட்டிலே இருபதுக்கும் மேலே பொண்ணு பார்த்து ஒத்து வராமத்தான் கடைசியா நம்ம வீட்டுக்கு வர்றாங்க. தவிர மாப்பிள்ளை ஃபோட்டோவைப் பார்த்துட்டு பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னதால்தானே நேர்ல பார்க்க வர்றாங்க.

    ராதிகாவைப் பார்த்து எப்படி மனசு மாற முடியும் அந்த மாப்பிள்ளையோட தலையெழுத்து என் கழுத்துல தாலி கட்டியே தீரணும். வேற வழி இல்லை. என்னை வேண்டாம்னு சொன்னா அவர் வேற செவ்வாய் தோஷம் பெண்ணைத் தேடி அலையணும்."

    ஏன் இப்படியெல்லாம் பேசறே? அம்மா சொன்னா கேட்க மாட்டியா?

    அம்மா நீ தானே அடிக்கடி சொல்லுவே. இன்னார்க்கு இன்னாருன்னு ஆண்டவனே முடிச்சுப் போட்டுடுவான் வரப்போறவரைத்தான் ஆண்டவன் எனக்குன்னு முடிச்சு போட்டிருக்கான்னா ராதிகாவோட அழகு அதை மாத்திடுமா என்ன?

    உன்கிட்ட பேச முடியுமா? கடைசியில என்னையே கவிழ்த்துடுவே. என்னமோ பண்ணு. இந்தா பூ தலையைப் பின்னி அழகா வச்சுக்க. என்ன புடவை கட்டிக்கப் போறே?

    ராதிகா வரட்டும்மா. அவ வந்து செலக்ட் பண்ணித் தர்ற புடவையைக் கட்டிக்கறேன். ராதிகாவோட ரசனையே தனிம்மா.

    ராதிகா புராணத்தை விடவே மாட்டியா?

    வேணி எரிச்சலாக வெளியே வந்துவிட்டாள்.

    ராதிகாவிற்கு மலர்விழி தொலைபேசி செய்தாள்.

    சொல்லுடி! என ராதிகாவின் குரல் கேட்டதும் கோபப்பட்டாள் மலர்விழி.

    என்னடி பண்ணிக்கிட்டிருக்கே? நேத்தே சொன்னேனா இல்லையா? வர்றேன்னு சொன்னே ஆளைக் காணோம்.

    இதோ கிளம்பிட்டேன். வாசலுக்கு வந்து செருப்பு போட்டுக்கிட்டிருக்கேன். ஆட்டோ புடிச்சு அரை மணி நேரத்துல வந்துடுவேன்.

    சீக்கிரம் வந்து தொலை. நீ வந்துதான் நான் புடவையே கட்டிக்கணும்.

    அடிப்பாவி... வெறும் பாவாடை ஜாக்கெட்டோடவா நிக்கறே? நான் வழியில டிராபிக் பிரச்சனைன்னு வர லேட்டானா வர்றவங்க முன்னாடி அப்படியே போய் நின்னுடாதே.

    உதைபடப் போறே! - சிரித்தபடி செல்லை அணைத்தாள்.

    சொன்னபடியே அடுத்த அரை மணி நேரத்தில் வந்துவிட்டாள் ராதிகா. ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்த ராதிகாவையும் அவளுடைய பளிச்சென்ற தோற்றத்தையும் பார்த்த வேணிக்கு பகீரென்றிருந்தது. மகள் மீது கோபம் கோபமாக வந்தாலும் அதை ராதிகாவின் மேல் காட்ட முடியுமா? எரிச்சலை மறைத்துக் கொண்டு சிரித்து வரவேற்றாள்.

    ராதிகா நேராக மலர்விழியின் அறைக்குள் நுழைந்தாள்.

    சாவகாசமாக அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த மலர்விழியைப் பார்த்து,

    ஏய்... என்ன தலைகூட சீவாம உட்கார்ந்திருக்கே?

    நீ வந்து பின்னி விடுவேன்னுதான்.

    சரியாப் போச்சு. குளிச்சியா இல்லை நான் வந்து குளிப்பாட்டி விடுவேன்னு இருக்கியா?

    சீசீ... அசிங்கமா பேசாதே.

    முதல்ல என்ன புடவை கட்றதுன்னு செலக்ட் பண்ணு என எழுந்து பீரோவைத் திறந்து வைத்தாள் எல்லாச் சேலைகளையும் எடுத்து மெத்தை மீது போட்டாள்.

    கோழி குப்பையைக் கிளறுவதைப் போல அனைத்தையும் கிளறினாள் ராதிகா.

    இது... அது... இல்லை இதப் பார்! வேண்டாம். இதைக் கட்டிக்கோ என கடைசி கடைசியாக ஊதா நிறத்தில் அரக்கு நிற பார்டர் போட்ட சேலை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.

    அழகாக தலையை சீவி பின்னி பூவை வைத்துவிட்டாள்.

    உதட்டு நிறத்திற்கேற்ற லிப்ஸ்டிக் போட்டு பளிச்சென பொட்டு வைத்து கண் மை விடட்டுமா? என்றாள்.

    வேண்டாம். வர்ற மாப்பிள்ளைக்கு இதுவே அதிகம். என்று மலர்விழி சிரித்தபோது எதற்கோ உள்ளே வந்த வேணி மகளை பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள்.

    "என்னடி... என்ன பேசறே? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? செவ்வாய் தோஷம் உள்ள உனக்கு மாப்பிள்ளை தேடி அலைஞ்ச எங்களுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும். இதப்பாருடி ராதிகா, வர்ற மாப்பிள்ளையைப் பார்த்துட்டு இவ சும்மா இது குறை

    Enjoying the preview?
    Page 1 of 1