Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Samharam
Samharam
Samharam
Ebook220 pages1 hour

Samharam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெகுஜன பத்திரிகைகளில் வருவதற்கு முன்பே எனது சில சிறுகதைகள் சிற்றிதழ் ஒன்றில் வந்துவிட்டன, 1983-ல் சிற்றிதழில் வெளியான எனது முதல் சிறுகதையான "ஆத்மா அழுகிறான்" கதையும், வெகுஜன பத்திரிகையான மங்கையர் மலர் இதழில் 1984-ல் வெளியான எனது "முதல் கோணல்" என்ற சிறுகதையும் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன, எண்பதுகளில் துவங்கி பல்வேறு வார, மாத, மற்றும் தீபாவளி மலர்களில் வெளியான இச்சிறுகதைகள் ஒவ்வொன்றும் அன்றைய காலக்கட்டங்களின் வாழ்வியல், மற்றும் மனிதர்களின் குணாதிசயங்களின் வெளிப்பாடுகளாக இருக்கும்.

Languageதமிழ்
Release dateDec 11, 2023
ISBN6580105710475
Samharam

Read more from Vidya Subramaniam

Related to Samharam

Related ebooks

Reviews for Samharam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Samharam - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சம்ஹாரம்

    (சிறுகதைகள்)

    Samharam

    (Sirukadhaigal)

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    சம்ஹாரம்

    பிணந்தின்னி கழுகுகள்

    முதல் கோணல்

    அகல்யா

    மாறுபட்ட ராகங்கள்

    கழிக்கப்பட்ட எண்

    கறுப்பு ஆடு

    தூரத்து நட்சத்திரம்

    குட்டிகள்

    கேட்கப்படாத தேவைகள்...

    காற்றினிலே

    துணை

    தேடித்தேடி இளைத்தேனே!

    மனம் வெளுக்க...

    ஊனம்

    சுமை

    கலைந்த மேகங்கள்...

    காரம்

    அக்கம் பக்கம்

    ஆத்மா அழுகிறான்!

    கள்ளியில் பூத்த ரோஜாப்பூ

    சம்ஹாரம்

    நள்ளிரவில் தாகமெடுத்தது, தாகத்தால் தூக்கம் கலைந்து போயிற்று. பத்ரி எழுந்து உட்கார்ந்தான். அந்த சின்னக்கூடத்தில் தங்கை புவனா மெய்குறுக்கிப் படுத்திருந்தாள். அம்மா மட்டும் தூக்கம் வராமல் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அவள் பார்வை இலக்கின்றி எங்கோ நிலைத்திருந்தது. விடிவிளக்கின் ஒளியில் அவள் முகம் இன்னும் சோகத்தைப் பூசியிருந்தது. பத்ரி மூலையில் வைத்திருந்த மண்பானையிலிருந்து ஜில்லென்று ஒரு சொம்பு நீர் எடுத்து குடித்தான். தாகம் அடங்க, அம்மாவிடம் வந்தான். அம்மா இன்னும் சலனமின்றி உட்கார்ந்திருந்தாள். பத்ரி மெல்ல அவள் தோளைத்தொட அவள் பார்வை, அவன்மீது படிந்தது.

    என்னம்மா தூங்கலையா?

    தூக்கமா...? இனிமே எனக்கு மரணம்தான் தூக்கம்.

    ஏம்மா இப்படியெல்லாம் பேசற? பத்ரி வியந்தான். அம்மாவா இப்படிப் பேசுகிறாள்! எவ்வளவு தைரியசாலி! எத்தனை பேருக்கு இவள் தைரியம் கொடுத்திருக்கிறாள்! எத்தனையோ புயல்களைச் சமாளித்தவள் இன்று ஏன் இப்படி முடங்கிவிட்டாள்? பத்ரி அம்மாவுக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான்.

    இதைக் குடிச்சுட்டுத் தூங்கும்மா. நீ கண் விழிக்கறதுனால காணாமல்போன நகையெல்லாம் கிடைச்சுடப்போறதா? முன்பின் தெரியாதவன் கொள்ளை அடிச்சுண்டு போயிருந்தாலும் போலீஸ்ல புகார் கொடுத்து, கண்டு பிடிச்சுடலாம். இங்க அதுக்கும் வழியில்லையே. சொந்த அப்பனே இல்ல...? பத்ரி வெறுப்போடு வார்த்தைகளை நிறுத்தினான். இன்னும் ஒருவாரத்தில் தங்கை புவனேஸ்வரிக்குக் கல்யாணம் என்கிற நிலையில் பெற்ற அப்பனே நகைகளைக் களவாடிச் சென்றிருக்கும் அவலம் வேறெந்த வீட்டிலும் நிகழாத ஒன்று.

    முழுசாய் இருபது சவரன் நகை! புவனேஸ்வரியின் வாழ்க்கை! எப்படித்தான் மனம் வந்ததோ? எதற்காக அவரை உள்ளேவிடவேண்டும்? இப்போது அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு அமர்ந்திருக்க வேண்டும்? ஆரம்பத்திலேயே பத்ரி வேண்டாமென்றான்.பதினஞ்சு வருஷமா இல்லாத அப்பா இப்பொ மட்டும் எதுக்கும்மா. அவர் வந்தால் பிரச்சனைதான் ஏற்படும்.

    என்னடா செய்யறது நமக்காக இல்லாட்டாலும் சபை மரியாதைக்காகவானும் பார்க்கணுமே. கழுத்துல தாலியும் நெத்தில குங்குமமும் இன்னும் வெச்சுண்டுருக்கேனே! அந்தப் பாவத்துக்கு பிடிச்சுதோ பிடிக்கலையோ கூப்ட்டுதான் ஆகணும். கூலிக்குத்தானே வந்து கல்யாணம் பண்ணப்போறார்! கல்யாணம் முடிஞ்ச கையோட கூலியைக்கொடுத்து, போகச்சொல்லிடுவோம். வேறென்ன செய்ய?

    அம்மா சொன்னால் சொன்னதுதான், பத்ரி அதற்குமேல் எதிர்க்கவில்லை.

    அப்பா உள்ளூரிலேயேதான் இருந்தார். அப்பாவுக்குச் சினிமா பைத்தியம் அதிகம். நாளடைவில் அது சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற வெறியாக மாறிற்று. சினிமாக் கம்பெனிகளின் வாசலில் பழிகிடந்தார். ஸ்டுடியோ ஸ்டுடியோவாக அலைந்தார். வாட்ச்மேனுக்குப் பணமாகவும் பொருட்களாகவும் லஞ்சம் கொடுத்து பல இயக்குநர்களைச் சந்தித்துத் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினார். இவரது தொந்தரவு பொறுக்கமுடியாமல் வசனமின்றி நாலைந்து பேரோடு வந்துபோகும் காட்சிகளில் இவர் முகத்தையும் திரையில் காட்டினார்கள். வினாடிக்கும் குறைவாய்த் தன்முகம் திரையில் தெரிந்ததற்கே அப்பாவின் திமிர் ஆகாசத்தையும் பரிகசித்தது. எல்லோரும் துச்சம்! எல்லாமும் துச்சம்! அதற்கேற்றாற்போல், முதலில் முகம் மட்டும் காட்டியவருக்கு, பின்னர் ஒன்றிரண்டு வசனமும் பேசக்கிடைத்தது.

    பல படங்களில் மரத்தடி பஞ்சாயத்து கும்பலில் ஊர்ப்பெரிய மனிதர்களுள் ஒருவராய் ஓரிரு வசனம் பேசினார். பூசாரியாய் வேப்பிலையடித்துப் பேய் விரட்டினார். கட்டுக்குடுமியோடு கல்யாணக் கும்பலில் மாங்கல்யம் தந்துநானே என்று வாயசைத்தார். சோடா பாட்டில் எறிந்தார். பண்ணையாருக்கு அடியாளாய்ப் பெண் கடத்தினார். தினமும் ஐம்பது நூறு தேறியது. ஆனால் அத்தனையும் வந்த வேகத்தில் பீடாக்கடைக்கும் ஒயின் ஷாப்புகளுக்கும் போயிற்று. நாற்றத்தோடு வீட்டுக்கு வந்தவருடன் அம்மாவின் போராட்டம் அதிகரித்தது.

    பத்து வயது பத்ரியையும் எட்டு வயது புவனாவையும் அம்மா அவர்முன் நிறுத்தி இந்தக் குழந்தைகளுக்கென்ன வழியென்று கேட்டாள். சரிதான்போடி என அலட்சியமாகக் கூறினார் அப்பா. அம்மா தன் குழந்தைகளின் பசிபோக்க, திண்ணையில் இட்லிக்கடை போட்டதும்,. அப்பா இன்னமும் பொறுப்பிழந்தார். பெண்டாட்டி தானாகாவே பிழைத்துக்கொள்ளும் சந்தோஷத்தில் அவரது பழக்கவழக்கங்களும் கூடின. செலவு அதிகமாக, வருமானம் போதவில்லை. வருமானம் குறைய, மூளை குறுக்குவழியில் சென்றது. தப்பான வழிகளில் காசு பண்ண ஆரம்பித்தார். திரையில் வினாடி நேரம் நடிப்பதைவிட திரைக்குப் பின்னால் நடிப்பதற்கு காசு அதிகம் கிடைத்ததைக் கண்டு அகமகிழ்ந்தார்.

    அலட்டலும் வாய்ச்சவடாலும் அவரைச் சிலருக்கு பெரிய மனிதனாய்க் காட்டியது. இவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட வேலைகளிலெல்லாம் கமிஷன் அடித்தார். பொய்க்கணக்கு கொடுத்தார். சினிமா ஆசையால் வீட்டைவிட்டு ஓடிவரும் பெண்களுக்கு அடைக்கலம் அளித்து சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, பணம்பறித்து, அவர்களைப் பலருக்கு விற்கவும் துணிந்தார். இத்தனை பழக்கம் வந்தபின் இன்னொரு பழக்கம் மட்டும் வராமலா போகும்? ஒரு துணை நடிகையைத் தனக்கென்று வைத்துக்கொண்டார். வீட்டுக்கு வருவது மெல்லமெல்லக் குறைந்து ஒருகட்டத்தில் சுத்தமாய் நின்றது. அம்மா முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு குழந்தைகளுக்குத் தந்தையுமானாள்.

    இட்லிக்கடையை மெஸ் ஆக மாற்றினாள். புவனாவும் பத்ரியும் படித்துக்கொண்டே அம்மாவுக்கும் உதவினார்கள். மாதம் முப்பதுபேர் ரெகுலராகச் சாப்பிட்டார்கள். அம்மா கடுமையாய் உழைத்தாள். இலையெடுக்கவும் பற்றுப்பாத்திரம் தேய்க்கவும் மட்டும் ஒரு ஏழைப்பெண்ணை வேலைக்கு வைத்துக்கொண்டாள். தினம் ஐம்பது இலை போடவேண்டிய அளவுக்குக் கூட்டம் வர ஆரம்பித்தது. சப்புக்கொட்டியவாறு சாப்பிட்டவர்களில் முக்கால் வாசிப்பேர் பிரம்மச்சாரிகள். ஊர்விட்டு ஊர் பிழைக்க வந்தவர்கள், படித்தவர்கள்.

    அம்மாவின் கௌரவமான பிழைப்பு, ஓரளவுக்கு வறுமையை விரட்டியது. சட்டைகளில் ஒட்டுத்தையல்கள் மறைந்தன. நல்ல துணிமணிகள் உடுத்தமுடிந்தது, பையனையும் பெண்ணையும் கல்லூரிக்கு அனுப்பமுடிந்தது. பெண்ணுக்கு வருடத்திற்கொரு நகை சேர்க்கமுடிந்தது. நகை சேர்ப்பதோடு நிறுத்திக்கொள் என்றாள் பெண். மாப்பிள்ளையைத் தானே பார்த்துக் கொண்டுவிட்டதாக அவள் கூறியபோது அம்மாவின் முகம் மாறியது. மெஸ்ஸுக்குச் சாப்பிட வருபவர்களில் ஒருவனை அவள் காதலிப்பதாகக் கூறியபோது கை ஓங்கினாள். அடி செருப்பால் என்று அதட்டினாள். உன் புத்தி கெட்டா போச்சு? என்று கத்தினாள்.

    ஏன் என் புத்திக்கென்ன?

    என்னவா...? அந்த ஆளைப்பத்தி என்னடி தெரியும் உனக்கு?

    என்ன தெரியணுங்கற?

    அவன் நல்லவனான்னு தெரிஞ்சுக்கணும். அவன் கல்யாணமானவனான்னு தெரிஞ்சுக்கணும். அவனுக்குக் குழந்தையிருக்கான்னு தெரிஞ்சுக்கணும்.

    பெண் அம்மாவை பயத்தோடு பார்த்தாள்.எனக்கு தெரியும்டி அவன் பெண்டாட்டி பிரசவத்துக்குப் போயிருக்கா. அவனுக்குப் பிள்ளை பொறந்து நாலு நாளாறது.

    பெண் அதிர்ந்தாள்.

    அவன் சிநேகிதன் சொல்லாட்டி எனக்கும் தெரிஞ்சிருக்காது. இப்பொ சொல்லு உனக்கு புத்தி இருக்கா இல்லையான்னு.

    பெண் கதறியபடி உள்ளே ஓடினாள். அன்றிரவு கிணற்றில் விழப்போனாள். இவள் வருவாளென்று தெரிந்தாற்போல அம்மா கிணற்றடியில் இவளுக்காகக் காத்திருந்தாள்.

    மொதல்ல என்னைத் தள்ளிவிட்டுட்டு அப்பறம் நீயும் விழு என்றாள்.

    கடங்காரன் இப்டி நல்லவனா நடிச்சு என்னை ஏமாத்திட்டானேம்மா.

    வேற ஒண்ணும் ஆகலையே?

    சத்தியமா இல்லம்மா.

    அந்தவரைக்கும் புத்தியிருந்துதே. போ... உள்ள போ. இதுக்கே கிணறுன்னா, வாழ்க்கைல இன்னும் எவ்ளவோ இருக்கு சமாளிக்க! இருப்பது ஒரே ஒரு உசிர்தாண்டி, ஒவ்வொண்ணுத்துக்கும் அதை விடணும்னா கோடி உசிர் வேணும். உனக்குக் கல்யாண ஆசை வந்துடுத்துன்னா எங்கிட்ட சொல்லியிருக்கலாமே. நகை வாங்கிவெக்கத் தெரிஞ்ச எனக்கு வரன் பார்க்கத் தெரியாதா?

    பெண் மௌனம் சாதித்தாள். அம்மா வரன் தேட ஆரம்பித்தாள். மஞ்சள் தடவிய ஜாதகங்கள் பல கைகள் மாறின. பலபேர்கள் வந்து சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிட்டுச் சென்றார்கள். பேரம் படியவில்லை. வரன் தேடுவதே யுத்தமாயிற்று. பதினெட்டாவது யுத்தத்தில் வரன் வெல்லப்பட்டது. இருபது சவரன் நகை, பத்தாயிரம் வரதட்சணை, மூன்றுகிலோ வெள்ளி, தலைதீபாவளிக்கு நவரத்ன மோதிரம் என்ற பேரத்தோடு யுத்தம் ஒருமுடிவுக்கு வந்தது. பதினைந்து பவுன் நகை கைவசம் இருந்தது. ஐந்து பவுன் நகைக்கு அம்மா கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறியது. அவள் தாலிக்கொடிக்கு அவசரமாய் மெருகு போடப்பட்டது. பத்ரிக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. சரீர ஒத்தாசைகளை மட்டுமே அவனிடம் எதிர்பார்க்கலாம். அம்மா இன்னும் கடுமையாய் உழைத்தாள். நிச்சயதார்த்தத்திற்கு நாள்குறித்த போதுதான் பெண்ணின் அப்பா எங்கேயென்ற கேள்வி பிள்ளை வீட்டினரிடமிருந்து நாகாஸ்திரமாய்ப் பறந்து வந்தது. பத்ரி உண்மையைச் சொல்ல வாயெடுத்த போது அம்மா அவனைப் பார்வையால் அடக்கிவிட்டு, தானே கூறினாள்.

    அவர் வெளியூர்ல இருக்கார்.

    கல்யாணத்துக்கு வந்துடுவார் இல்லையா?

    வராம பின்ன? கண்டிப்பா வந்துடுவார்...

    அதன்பின் நிச்சயதார்த்தம் நல்லபடியாய் நடந்தது.

    நீ பாட்டுக்கு இப்டிச் சொல்லிட்டயே. பதினஞ்சு வருஷமாச்சும்மா. எங்கபோய் அவரைத் தேடுவ. அப்டியே கிடைச்சாலும் எப்டி உன் மரியாதையைக் கெடுத்துண்டு கூப்டுவ?

    என் மரியாதையைவிட என் பெண்ணுக்கு மாங்கல்யம் ஏறுவதுதான் ரொம்ப முக்கியம். உங்கப்பன் எங்க இருக்கான்னு எனக்குத்தெரியும்.

    தெரியுமா...?

    போ... இந்த விலாசத்துல போய் அவரைப் பார்த்துப் பேசு, ஒருநிமிஷம் வந்துட்டுப் போகச்சொல்லு.

    ஏம்மா எதுக்கு அந்தாளை கூப்டணும்? பேசாம உண்மையை மாப்பிள்ளை வீட்டுல சொல்லிடறது நல்லதில்லையா?

    வேண்டாம் என் பொண்ணு எவ்ளோதான் பதவிசா நடந்துண்டாலும் என்னால அவ மரியாதை போய்டும். வாழாவெட்டியோட பொண்ணுன்னுதான் சொல்லத்தோணும். என் கஷ்டம் என்னோட போகட்டும். நா ஆயிரம் பொய்யெல்லாம் சொல்லலை. ஒரே ஒரு பொய்தானே? அதுவும் யாருக்கும் ஆபத்தில்லாத பொய்! தப்பில்லன்னுதான் சொன்னேன். எனக்காகப் போய் அவரை அழச்சுண்டுவா.

    பத்ரி அம்மா கொடுத்த விலாசத்திற்குச் சென்றான். கோடம்பாக்கத்தில் ஏதோவொரு நாற்றமடித்த குறுகலான சந்துக்குள் அதைவிடக் குறுகலான ஒரு வீட்டுக்குள்தான் இருந்தார் அப்பா. இவனை அடையாளம் தெரியாமல் விழித்தார். வேண்டாவெறுப்பாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அடடே! என்று வியந்தார். வியந்தாரே தவிர பரவசப்பட்டதாய்த் தெரியவில்லை. உட்கார். என்ன விஷயம்? என்றார். உள்ளிருந்து துணை நடிகை எட்டிப்பார்த்தாள். இந்த முகத்தைக்கண்டா அம்மாவைத் தூக்கியெறிந்தார்? தூக்கின கன்ன எலும்பும், தடித்த உதடும், கண்மை அப்பிய கண்களும் லிப்ஸ்டிக் வழிந்த உதடுமாய் பார்க்கவே குமட்டியது பத்ரிக்கு. முறையற்ற தாம்பத்தியத்தை ஒழுங்காய் நடத்திக்கொண்டு வருபவருக்கு, அருந்ததி பார்த்து ஆரம்பித்த தாம்பத்தியத்தை எப்படி உதறிவிட்டுப் போகத்தோன்றியது? தவறுகளைத்தான் சிலபேர் சரியாகச் செய்வார்களா?

    புவனாவுக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்கு அது விஷயமா உங்களிடம் ஏதோ பேசணுமாம். உங்களை ஒருநிமிஷம் வந்துட்டுப் போகச்சொன்னா அம்மா. இயந்திரமாய்ச் சொல்லிவிட்டு எழுந்தான். நாற்றத்தைக் கடந்துவந்து பஸ் ஏறியதும் நாசியை விடுவித்தான்.

    அன்றுமாலையே சலவை வேட்டி சட்டையோடு பீடா மென்ற வாயுடன் வந்துநின்றார். தான் ரொம்ப நன்றாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். அவரைப் பார்க்கும்போதே அந்தத் தெரு நாற்றம்தான் நினைவுக்கு வந்து, மூக்கை பிடித்துக்கொள்ளத் தோன்றியது பத்ரிக்கு.

    பரவால்லயே இன்னும் என்னை நினைவு வெச்சுண்டு கூப்ட்டனுப்பியிருக்கயே, என்ன சொல்லு, என்னதான் என்னை வேண்டாம்னு நீ உசிரைக்குடுத்து தனியா நின்னு வளர்த்தாலும் நா வந்தாதான் சபையில உனக்கு மரியாதைன்னு இப்பவாவது புரிஞ்சுண்டயா?

    தேகம் குறைந்து ஒடுங்கினாலும் இந்தச் சவடால் மட்டும் குறையாது போலும். அம்மா பெண்ணுக்காகப் பொறுத்துக்கொண்டாள்.

    எத்தனைநாள் நா இங்க இருக்கணும்?

    கல்யாணத்துக்கு முதல்நாள் வந்தாலும் போதும்.

    பெண்ணுக்கு என்னவெல்லாம் செய்யற?

    அம்மா சொன்னாள்.

    அடேயப்பா. நிறையத்தான் செய்யற. எப்டி இவ்ளோ வருமானம்? ஆச்சர்யம்தான். இட்லியை தவிர வேறெதுவும் விற்கலையே என்று கேட்டுவிட்டு அசிங்கமாகச் சிரித்தார். அம்மா அதையும் பொறுத்துக் கொண்டபோது பத்ரிக்கு கோபமாய் வந்தது. இப்படியாவது எதற்கு சபை கௌரவம்? ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்ணுக்கு மட்டும்தானா. ஆணுக்கில்லையா? இந்தப்பேச்சுக்கு அவரது நாக்கை இழுத்து வைத்து அறுத்துப்போடாமல் இந்த அம்மா எதற்குப் பொறுமை காட்டுகிறாள்?

    அப்பா போனதும் அந்த இடத்தில் ஒரு பக்கெட் நீரைக் கொட்டினான். அம்மா அதற்கும் எதுவும் சொல்லவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு பெண்ணைக் கரையேற்ற நினைத்தாள். இல்லாவிட்டால் கழுநீரில் கைவிட்ட கதையாகிவிடும் என்ற பயமோ என்னவோ.

    முதல்நாள் போனவர் மறுநாளே மீண்டும் வந்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1