Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kondru Vidu Vishalakshi
Kondru Vidu Vishalakshi
Kondru Vidu Vishalakshi
Ebook95 pages33 minutes

Kondru Vidu Vishalakshi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விசாலாட்சிக்கும் சீனிவாசனுக்கும் திருமணமாகி 32 ஆண்டுகள் முடிந்ததை எண்ணி இவர்களின் பிள்ளைகள் அறுபதாம் கல்யாணத்திற்கு ஆயத்தம் பண்ணியிருந்தனர். விடிந்தால் அறுபதாம் கல்யாணம். ஆனால் சீனிவாசன் அன்றிரவு கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். சீனிவாசனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? பல மர்மங்கள் அடங்கிய கொன்றுவிடு விசாலாட்சியை வாசிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580111009804
Kondru Vidu Vishalakshi

Read more from Arnika Nasser

Related to Kondru Vidu Vishalakshi

Related ebooks

Related categories

Reviews for Kondru Vidu Vishalakshi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kondru Vidu Vishalakshi - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொன்று விடு விசாலாட்சி

    Kondru Vidu Vishalakshi

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    விடிந்தால் அறுபதாம் கல்யாணம். விசாலாட்சிக்கும் சீனிவாசனுக்கும் திருமணமாகி 32 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

    முப்பத்திரெண்டு ஆண்டு திருமண வாழ்வில் இருமகள்கள் ஒரு மகன்.

    மூத்தவள் ஜீவிதா. வயது 30 உயரம் 5’ 2". மாநிறம் அம்மாவை உரித்து வைத்த தெய்வீக அழகு. ஆனால் குணத்தில் எதிர்மறை. சுயநலக்காரி. கணவன் விஜய் அமெரிக்க சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தில் இன்ஜினியர். வாஷிங்டன் டிஸியில் செட்டில் ஆனவர்கள். அறுபதாம் கல்யாணத்துக்காக ஏர் அமெரிக்கா விமானத்தைப் பிடித்து சென்னை வந்திருக்கிறார்கள். 5 வயதில் மகன். இரண்டு வயதில் மகள்.

    இரண்டாவது பெண் கீர்த்தி வயது 28. உயரம் 5’ 5." சிவந்த ரோஜா நிறம். விளம்பரக்கம்பெனி எக்ஸிக்யூடிவ் அஜீத்தை காதல்மணம் செய்தவள். மும்பையில் செட்டில் ஆனவள். மூன்று வயதில் மகன் கணவனை முழுதும் சார்ந்திருக்காது ப்யூட்டி பார்லர் நடத்துகிறவள்.

    மூன்றாவது கடைக்குட்டி மகன் பிரசாந்த் வயது 24. மகா உயரன். சிவப்பன். பிலிம் இன்ஸ்டிடியூட் படித்துவிட்டு சினிமா வாய்ப்புக்காக அலைபவன். சில படங்களில் சிற்சில வேடங்களும் பண்ணியிருக்கிறான். இடைப்பட்ட நேரங்களில் டெலி சீரியல்களில் அஸிஸ்டென்ட் டைரக்டராக பணிபுரிகிறான். ப்ளேபாய் தனம் அதிகம் பெண் நண்பிகள் எண்ணிக்கை கூறினால் படிக்கும் நீங்களே பொறாமைப்படுவீர்கள்.

    விசாலாட்சிக்கு சொந்தஊர் தஞ்சாவூர். சீனிவாசனுக்கு அரியலூர் சீனிவாசன் பரம்பரை பணக்காரர். திருமணத்துக்குப் பின் பலதொழில்கள் செய்து தோற்று கிரானைட் ஏற்றுமதியில் மெஹா வெற்றி பெற்றார். பெற்றுக் கொண்டும் இருக்கிறார்.

    அறுபதாம் கல்யாணத்தின் கோலாகல உற்சாகம் அனைவரையும் தொற்றியிருந்தது.

    மகள்களும் மகனும் பெற்றோருக்கு பரிசுகள் வாங்கி குவித்திருந்தனர்.

    மற்ற நெருங்கிய சொந்தங்களும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தனர்.

    இருபதுக்கும் மேற்பட்ட நண்டானும் சிண்டான்களும் பங்களாவுக்குள் விளையாடிக் களித்தன.

    பங்களாவும் தோட்டத்துச் செடிகளும் மின்பழங்களை தாங்கியிருந்தன. தோட்டத்தில் சாமியானா போர்டிகோ ஒட்டி பந்தலும் வாழைமரங்களும்.

    அம்மாவுக்கு நல்லியில் பத்தாயிரம் பெறுமானமுள்ள பட்டுப்புடவை வாங்கியிருந்தனர். அப்பாவுக்கு பட்டுவேட்டி பட்டு சட்டை அங்கவஸ்திரம் புதுகாலணி இதர இதர.

    அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தாள் கீர்த்தி.

    என்னம்மா… எங்க டாடிய காணம்?

    ஏதோ பதில் சொல்ல விழைந்தவள் நொடி தாமதித்து பதில் கூறினாள் எப்பவும் அவருக்கு பிசினஸ்தான். வர மிட் நைட் கூடஆகும்!

    விடிஞ்சா அறுபதாம் கல்யாணம். ஆனா உன் முகத்ல பெரிசா எந்த சந்தோஷத்தையும் காணம்?

    கல்யாணமாகி 32 வருஷமாகுது மகளே. நாளைக்கி நடக்கப்போறது ஒரு சடங்கு. அவ்வளவுதான். மகிழ்ச்சி என்றால் வானத்துக்கு குதிப்பதும் துக்கம் என்றால் பூமிக்குள் புதைவதும் எனக்கு பழக்கமில்லை மகளே!

    போம்மா நீ எப்பவும் இப்படி விட்டேத்தியாத்தான் பேசுவ. நூறு ஜோடிகள் திருமணம் செஞ்சுக்கிட்டா அதில் பத்துபேருக்குத்தான் அறுபதாம் கல்யாணம் பண்ற வாய்ப்பே கிடைக்குது. தேர்ட்டி டூ லாங் இயர்ஸ் த பார். எனக்கு கல்யாணமாகி நாலு வருஷந்தான் ஆகுது. அதுக்குள்ள எத்ன அலுப்பு சலிப்பு புளிப்பு தெரியுமா? கடவுள்ட்ட நான் வேண்டுரதெல்லாம் கண்மூடி கண் திறக்கிறதுக்குள்ள எனக்கு வயசாகி என் புள்ளைக பெருசாகி அதுகளுக்கு கல்யாணம் பண்ணிக்குடுத்து பேரன்பேத்தி எடுத்து செத்ரனும்னுதான்.

    மௌனித்தாள் விசாலாட்சி.

    இன்னும் 15 வருஷத்தில உனக்கும் அப்பாவுக்கும் கல்யாணமாகி அம்பது வருஷமாகிடும். இதவிட செம கிராண்டா கொண்டாடுவோம்!

    அது வரைக்கும் நான் பொழைச்சுக்கிடந்தா சரி!

    நல்ல கதை போ. நம்ம தலைமுறைல பொம்பளைகளுக்கு ஆயுள் அதிகம். கொள்ளுப்பாட்டி 102 வருஷம் இருந்தா. பாட்டி 96. நீ ஒரு 90 வரைக்கும் இருக்கமாட்ட? இருப்ப இருப்ப. உன் உடம்பு வலு எங்களுக்கு ஏது? இதோ ஒரு புள்ளை பெத்ததும எப்டி ஆய்ட்டேன் பாரு? மார்பு லோஹிப் வரைக்கும் சரிஞ்சு போச்சு. இடுப்ல சதை மடிப்புகள் அடிவயிற்றில் சந்தனகோடுகள்.

    வெறுமையாக புன்னகைத்தாள் விசாலாட்சி.

    "ஏன்ம்மா… உனக்குத் தெரிஞ்சு யாராவது

    Enjoying the preview?
    Page 1 of 1