Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nerungi... Nerungi...
Nerungi... Nerungi...
Nerungi... Nerungi...
Ebook90 pages32 minutes

Nerungi... Nerungi...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நெருங்கி நெருங்கி. குடும்பத் தலைவர் கிருஷ்ணா மகா அழகன். அவரின் மனைவி கறுப்பு குண்டு குள்ளம்.மனைவி முருகேஸ்வரியுடனான காதலை மகன் மகள்களிடம் சொல்லும்போது புறாக்கள் செத்து விழுகின்றன. முருகேஸ்வரியை கொல்ல தொடர் முயற்சிகள் நடக்கின்றன. டிடக்டிவ் நிலாமகனும் மேகாவும் துப்பறிய ஆரம்பிக்கின்றனர்.

தொடர்ந்து பல அமான்ஷ்யங்கள். ஸ்பை கேமிராக்கள் வைத்து கிருஷ்ணாவின் வீட்டை ஆராய்கிறான் நிலாமகன். கிருஷ்ணாவின் பழைய காதலிகள் கொல்லப்படுகின்றனர். கொலையாளி கிருஷ்ணாவின் குடும்பத்திற்குள். கிருஷ்ணாவின் மகன் நந்தாதான் கொலையாளி. எதற்கு நந்தா கொலையாளி ஆனான் என்பதனை நாவல் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580111006381
Nerungi... Nerungi...

Read more from Arnika Nasser

Related to Nerungi... Nerungi...

Related ebooks

Related categories

Reviews for Nerungi... Nerungi...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nerungi... Nerungi... - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    நெருங்கி... நெருங்கி...

    Nerungi… Nerungi…

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    சென்னையின் மடிப்பாக்கம்...

    ராகவா நகர் விரிவாக்கத்தில் தனி வீடாய் அமைந்திருந்தது. அந்த மினி பங்களா. வீட்டு வாசலின் இருபுறமும் அலங்காரக் குடை விரித்திருந்தன பூந்தாவரங்கள்.

    குடும்பத் தலைவர் கிருஷ்ணாவுக்கு வயது 40. ஆறடி மீறிய உயரம். எம்.ஜி.ஆர் நிறம், சரத்குமார் உடல்வாகு. சங்கர் மகாதேவன் குரல். கிருஷ்ணா எல்ஜஸியில் உயரதிகாரியாய் பணிபுரிபவர். ஒரே வருடத்தில் பத்து கோடி ரூபாய்க்கு பாலிஸி பிடித்து சாதனை புரிந்தவர்.

    கிருஷ்ணாவின் மனைவி பெயர் முருகேஸ்வரி. வயது 41. நான்கடி பத்தங்குல உயரம். வடிவேலு நிறம், போண்டாமணி கிரேன் மனோகர் பருமன். நாக்கு மூக்கு பாடிய பாடகியின் குரல்.

    கிருஷ்ணா - முருகேஸ்வரி தம்பதிக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் நந்தா. வயது 20. இளங்கலை மின்னியல் இரண்டாமாண்டு படிப்பவன். தந்தை சாயல். இரண்டாவது மகள் ஸ்ருதி வயது 18. மருத்துவம் முதலாமாண்டு படிப்பவள். மூன்றாவது மகள். சிந்துஜா வயது 16. ப்ளஸ்டூ மாணவி

    கிருஷ்ணாவின் பிறந்த ஊரான ராஜபாளையத்திலிருந்து அழைத்து வரப்பட்ட வேலைக்காரி பங்கஜம் வயது 65.

    வளர்ப்புப் பூனை மியோ... வளர்ப்பு நாய் ஜிலோ.

    அனைவரும் அதிகாலையில் எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து பூஜையறையில் கூடினர்.

    ஸ்ருதி, வீட்டு அங்கத்தினர்களே...! இன்று நம் குடும்பத்துக்கு படு விசேஷமான நாள். யூகிங்க பார்ப்பம்!

    நம்ம வளர்ப்பு பூனை மியோவுக்கு காது குத்தப் போறோமா? என்றாள் கடைக்குட்டி சிந்துஜா.

    ஸ்ருதி தங்கையை முறைத்தாள் இல்லை!

    நமது வேலைக்கார பாட்டி பங்கஜம் பூப்பெய்தி விட்டாளா? சிந்துஜா.

    வயதுக்கு மீறிய பேச்சு சனியனுக்கு!

    நம்ம மம்மி பரதம் கத்துக்க டான்ஸ் ஸ்கூல் போகுதா?

    கிருஷ்ணா மனைவியின் குண்டு உடல் பார்த்து அர்த்த புஷ்டியாய் சிரித்தார். அவள் ஆடினால் மடிப்பாக்கத்தில் பூகம்பம் பூக்குமே!

    இதுக்கு மேல நான் பேசாம இருந்தா சிந்துஜா இன்னும் நாலு அபத்தங்களை கக்குவா... நானே சொல்லிடுறேன்... இன்று நமது பெற்றோரின் இருபதாவது திருமண நாள்!

    காங்கிராட்ஸ் டாடி... மம்மி! கை குலுக்கினான் நந்தா.

    வாழ்த்துக்கள்...! நூறாண்டு தாம்பத்யம் பண்ணப்போகும் கணவன் மனைவியாக வாழ்வீராக! என்றாள் சிந்துஜா.

    அப்பாவின் கன்னத்திலும் அம்மாவின் கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டாள் ஸ்ருதி. அப்பாவின் கன்னத்தில் முத்தமிடும் போது மென்த்தால் ஜிருஜிருப்பு உதடுகளில் ஏறியது. அம்மாவின் கன்னத்தில் முத்தமிடும்போது உதடுகள் உப்புக் கரித்தன.

    டாடி... சில கேள்விகள்!

    கேள் சிந்துஜா!

    உங்க கல்யாணம் காதல் கல்யாணமா அரேன்ஞ்சுடு கல்யாணமா?

    காதல் கல்யாணம்!

    அம்மாவை முதன்முதலாக எங்க சந்திச்சீங்க?

    நானும் அம்மாவும் ஒரே யுனிவர்சிட்டில படிச்சோம். இருவருமே பி.காம் படிச்சுக்கிட்டு இருந்தோம்!

    உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒரே வயசா?

    சொல்லாதிங்க என்பது போல சமிக்ஞை காட்டினாள் முருகேஸ்வரி.

    அம்மாவுக்கு என்னை விட ஒரு வயசு கூட!

    அப்ப அம்மா ஒல்லியா அழகா மாநிறமா இருக்குமா?

    இதே நிறம்தான் இதே குண்டுதான். உங்கம்மாவுக்கு கறுப்பு பப்ளிமாஸ்னு பட்டப் பெயர் கூட வைச்சிருந்தேன்!

    உங்களுக்குள்ள காதல் எப்டி அரும்புச்சு?

    வாத்சல்யமாய் திரும்பி மனைவியை உறுத்தார் கிருஷ்ணா. உங்கம்மா எங்கப்பா வழி பாட்டி மாதிரி குண்டு, கறுப்பெல்லாம். நான் சின்ன வயசிலயிருந்து பாட்டி மடில வளர்ந்தவன். பாட்டியின் சாயலில் இருக்கும் உங்கம்மா மீது எனக்கொரு கண்.

    இருவர்ல காதலை யார் மொதல்ல சொன்னது?

    நான்தான். பயந்து பயந்து சொன்னேன். நானும் காதலிக்கிறேன்' அல்லது 'உங்க காதலை ஒத்துக்கிறேன்’னு உங்கம்மா சொல்ல முழுசா நாப்பது நாளாச்சுது!"

    அம்மாவிடம் உங்களுக்கு பிடிச்ச அம்சம் என்ன?

    "தி ஹோல்ஸம் முருகேஸ்வரியும் எனக்கு பிடிச்சவதான். ஆயிரம் பெண்களை நான் எனது வாழ்க்கையில் கடந்து வந்திருந்தாலும் முருகேஸ்வரிக்கு ஈடு இணை

    Enjoying the preview?
    Page 1 of 1