Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சொன்னது என்னாச்சு?
சொன்னது என்னாச்சு?
சொன்னது என்னாச்சு?
Ebook129 pages30 minutes

சொன்னது என்னாச்சு?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாந்தி! அப்பாவும், ரமணியும் வந்தாச்சு! சாப்பாடை எடுத்துட்டு வா!”
லஷ்மி நாராயணன் சொன்னது கேட்டது.
“நான் சமையல் பண்ணலை!”
“என்னடீது? குண்டைத் தூக்கிப் போடற?”
“என்னால முடியலை! பசங்களுக்கு பிரெட் தந்தாச்சு! எனக்கு ஒரு டம்ளர் பால் போதும்! நீங்களும் பிரெட் சாப்பிட்டுக்குங்க!”
“நான் சாப்பிடறது இருக்கட்டும். அப்பாவும், ரமணியும் எதைச் சாப்பிடுவாங்க?”
“நானும் மனுஷிதான்! காலைல எழுந்தா, ராத்திரி வரைக்கும் வேலை சரியா இருக்கு! ஒரு நாளைக்கு முடியலைனு உட்காரக் கூடாதா?”
“அதை சாயங்காலமே சொல்லித் தொலைக்கக் கூடாதா நீ? அண்ணிகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணி இருப்பேனே!”
“உங்கப்பாவும், தம்பியும் ஓட்டல்ல ஒரு நாளைக்கு சாப்பிடட்டுமே! குறைஞ்சா போய்டுவாங்க?”
“சாந்தி! நீ என்ன பேசற? அப்பாவுக்கு ஓட்டல் சாப்பாடு சேராதுனு உனக்குத் தெரியாதா?”
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? ரமணிக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கட்டும். புது மருமகள் வந்து சமைச்சுப் போடட்டும்!”
“அதை நீ சொல்ல வேண்டியதில்லை!”
“நான் சொல்லாம், யார் சொல்லுவாங்க?சாந்தி பேசாம இரு!”
“இதப்பாருங்க! நீங்க ஒரு சம்பளக்காரர். பிடித்தம் போக நீங்க கொண்டு வர்ற பணத்துல குடித்தனம் நடத்த மூச்சு முட்டுது! உங்கப்பா, ரமணி ரெண்டு பேருக்கும் மாசம் பதினஞ்சு நாளைக்கு சாப்பாடு! என்ன செலவு?”
“அடிப்பாவி! பெத்த தகப்பன்கிட்ட, கூடப்பிறந்த தம்பிகிட்ட கணக்கு பாக்கச் சொல்றியா?”
“தாயும், பிள்ளையும் ஆனாலும் வாயும், வயிறும் வேறதாங்க! உங்கப்பாவுக்கு பென்ஷன் இருக்கு! தம்பி சம்பாதிக்கறார். என்ன தர்றாங்க?” ரமணி எழுந்து விட்டான்.
“இரு ரமணி! அவ பேசட்டும்! நீ குறுக்கே போகாதே!”
“இல்லைப்பா! இத்தனை நாள் சாப்பிட்டதுக்கு செக் போட்டுத் தந்துர்றன். எனக்கும் தன்மானம் இருக்கு!”
ரமணியின் குரல் கேட்டு லஷ்மி, சாந்தி இருவரும் வெளியே வந்தார்கள்.
“ரமணி நீ இரு! அண்ணிகிட்ட நான் சொல்றேன்!”
அதற்குள் கெளரிசங்கரும், சரோஜாவும் வெளிப்பட்டார்கள்.
“அண்ணி! அப்பா, ரமணிக்கு இன்னிக்கு நீங்க சாப்பாடு தந்துருங்க!”
“ஏன்? சாந்திக்கு என்னாச்சு?”
“அவளால முடியலியாம்!”
“என்னங்க! உங்க தம்பி பொண்டாட்டியால முடியலியாம். என் உடம்பு மரக் கட்டையா? இருக்கறவங்களுக்கெல்லாம் வடிச்சுக் கொட்டவா நானிருக்கேன்?”
ரமணி அதிர்ந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
சொன்னது என்னாச்சு?

Read more from தேவிபாலா

Related to சொன்னது என்னாச்சு?

Related ebooks

Reviews for சொன்னது என்னாச்சு?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சொன்னது என்னாச்சு? - தேவிபாலா

    1

    "உன் கடைசிப் பையனுக்கு இன்னும் கல்யாணம் முடியலை இல்லையா?"

    கிருஷ்ணசாமி பதில் சொல்ல வில்லை!

    அட! உன்னைத்தான்டா நான் கேட்டது புரியலையா?

    புரியுது! நானே நொந்து கிடக்கேன்! நீ வேற!

    ஏன்? என்ன பிரச்னை? உன் பேச்சைக் கேக்காம ஜாதி விட்டு ஜாதில லவ் பண்றானா உன் பையன்?

    அப்படி பண்ணினாக் கூட தேவலையே! சரினு சொல்லிட்டு பச்சைக்கொடி காட்டிடுவேனே!

    அந்த அளவுக்குப் போயிட்டியா

    தபாரு சண்முகம்! எனக்கு வயசு அறுபத்தி நாலு! மத்த ரெண்டு பிள்ளைகளுக்கும் கல்யாணம் முடிச்சு குழந்தை, குட்டிகள்னு ஆயாச்சு. ரெண்டு பொண்ணுகளையும் ஜாம் ஜாம்னு கட்டிக் குடுத்தாச்சு. சாகறதுக் குள்ளே இவன் ஒருத்தனுக்கும் குடும்பம் அமைக்கணும்னு நான் படாதபாடு இல்லை!

    ஏன்! என்ன சொல்றான்?

    கல்யாணப் பேச்சை எடுத்தாலே சள்ளு புள்ளுனு விழறான்.

    காரணம்?

    சிடுமூஞ்சி! நீ பத்து வார்த்தை பேசினா, அரை வார்த்தை பதில் வரும். சில சமயம் அது கூட வராது! ஏன்தான் இப்படி இருக்கானோ?

    பேசிப் பார்த்தியா?

    என்னத்தப் பாக்கறது? எந்திர மாட்டம் இருக்கான்!

    சரி! நீ பேச வேண்டாம். அவனோட அண்ணன்மார், அண்ணிகள் பேசக் கூடாதா? ஊர்லேருந்து அக்கா தங்கைகளை வரவழைச்சு பேச வை!

    யாராலயும் இவனை அசைக்க முடியாது. எம்பொண்டாட்டி, புண்ணியவதி பூவும், பொட்டுமா போய்ச் சேர்ந்து அஞ்சு வருஷமாச்சு! அம்மா மேல ரமணிக்கு உசிரு! அவ போன பின்னால இப்படித்தான் இருக்கான்!

    இதப்பாரு கிருஷ்ணசாமி! விட்ராதே!. நல்ல ஒரு நண்பனா அவனை அப்ரோச் பண்ணு! இல்லைனா, அவனுக்கு யாரு நெருங்கின நண்பர்கள்னு பார்த்து அவங்களைப் பேசவை!

    அப்பா நிமிர்ந்து உட்கார்ந்தார்.

    இதுகூட நல்ல யோசனைதான்!

    என்ன வயசு ரமணிக்கு?

    வர்ற ஆவணிக்கு இருபத்தெட்டு! நல்ல ஜாதகம். எந்த தோஷமும் இல்லை! அவன் மனசுல சந்தோஷமே இல்லை!

    அவனோட ஜாதகம், மற்ற டீடெய்ல்ஸ் எல்லாம் குடு! நானும் நல்ல வரனாப் பாக்கறேன்! நான் சொல்ற மாதிரிச் செய்!

    வந்த நண்பர் போய் விட்டார். கிருஷ்ணசாமி அக்கடா என சாய்ந்தார்.

    மூத்த மருமகள் சரோஜா டிபன், காபியோடு மாடியேறி வந்தாள். மாமா... டிபன்!

    வச்சிட்டுப் போம்மா

    ஆறிடப் போகுது மாமா! உங்களுக்குப் பிடிச்ச அடை! சூடாவே சாப்ட்ருங்க!

    ஒரு நிமிஷம் இரம்மா!

    என்ன மாமா?

    ரமணி எப்படி இருக்கான் உங்கிட்ட?

    அண்ணன்கிட்டயே ரமணி ஒரு வார்த்தை பேசினா அதிகம். எங்கிட்ட எப்படி மாமா?

    அண்ணி, அன்னைக்குச் சமம்னு சொல்லுவாங்க! நீதான் அவனை நெருங்கணும்!

    மாமா! அவன் ஆபீஸ் முடிஞ்சு வெளில சுத்திட்டு, வீட்டுக்கு வரும் போது மணி ஒன்பது தாண்டிடும். குளிச்சிட்டு சாப்பிட வரும்போது ஏறத்தாழ பத்து. வேகமா கொஞ்சம் அள்ளிப்போட்டுக்கிட்டு அஞ்சே நிமிஷத்துல மொட்டை மாடிக்குப் போயிடுவான். யாரு, என்னத்த பேசறது? காலைல எழுந்தா எல்லாரையும் அனுப்பற பரபரப்பு எனக்கு. பேச நேரமிருக்காது!

    அவனுக்கு ஒருத்தி வரணும்மா! இப்படியே அவன் இருந்தா எனக்கு ஒரு நாள் பைத்தியம் பிடிக்கும்!

    சரோஜா போய் விட்டாள்.

    கிருஷ்ணசாமி வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே இந்த வீட்டைக் கட்டிவிட்டார். சற்றே பெரிய வீடுதான். எல்லா வசதிகளும் உண்டு! மூத்தவன் கௌரிசங்கர், அடுத்தவன் லஷ்மி நாராயணன் எல்லாருமே இந்த வீட்டில்தான். அவரவர் தனித்தனி போர்ஷன். தனிச் சமையல்!

    ஒரே வீட்டுக்குள் தனிக்குடித்தனம் இருக்கும்படி அமைத்துக் கொடுத்து விட்டார்.

    இரண்டு மருமகள்களும் சுமாராகப் படித்தவர்கள். அதனால் வேலைக்குப் போகவில்லை!

    அவ்வப்போது பூசல்கள், குடும்பரீதியான சண்டைகள் எல்லாம் உண்டு! ஆனால் சமாதானமாகி விடும். யாரும் வீட்டை விட்டு வெளியே போக நினைக்குமளவுக்கு மோசமில்லை!

    மாதத்தில் முதல் பதினைந்து நாள் மூத்த மருமகள் சரோஜாவின் சாப்பாடு... அடுத்த பதினைந்து நாள் அடுத்த மருமகள் சாந்தியின் சமையல்! அப்பாவும், ரமணியும் இருக்கும் போர்ஷனுக்கே காலை உணவு வந்து விடும். இரவு மட்டும் பொதுவான உணவு மேஜையில் சேர்ந்து அவரவர் வீட்டுச் சமையல்களை சாப்பிட்டுக் கொள்வார்கள்.

    சமையல்கட்டு, மற்ற வசதிகளுடன் கூடிய தனி போர்ஷன் ரமணிக்கும் இருந்தது. ஆனால் கல்யாணம்தான் ஆகவில்லை!

    வருடத்தில் ஒரு நாள் வீட்டுப் பெண்கள் இருவரும் வரும்போது, இந்தப் பிரிவினை எல்லாம் இருக்காது. எல்லாரும் சேர்ந்து சமைத்து, சாப்பிட்டு ஜாலியாக இருப்பார்கள்.

    ரமணியும் பட்டதாரிதான். தனியார் நிறுவனம் ஒன்றில் ஆறாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறான். அவனுக்கு மனைவி என்று ஒருத்தி வந்தால், அவள் வேலைக்குப் போகும் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது கிருஷ்ணசாமியின் ஆசை! மற்ற இருவரும் வேலைக்குப் போகாதது அவருக்கு மிகப் பெரிய மனக்குறை!

    மறுநாள் ஞாயிற்றுக்கிழமை!

    அவர் சீக்கிரமே எழுந்து காலை வாக்கிங்கை முடித்து விட்டு ஹாலுக்குள் நுழைந்தார். நாளிதழ் காலடியில் கிடந்தது.

    சாந்தி காபி கொண்டு வந்தாள்.

    ஓ... இன்னிக்கு பதினாறாம் தேதியா? உனக்கு ட்யூட்டி வந்தாச்சா?

    சாந்தி சிரித்தாள்.

    ரமணி எழுந்துட்டானா?

    மாடில யோகா பண்ணிட்டு இருக்கார்!

    அப்பா எழுந்தார்.

    கதவு தட்டப்பட்டது! போய்த் திறந்தார்.

    ரமணியின் ஸ்நேகிதன் சுரேஷ்! அடிக்கடி வீட்டுக்கு வரும் ஒரே நண்பன்.

    ஹலோ அங்கிள்! ரமணி எழுந்தாச்சா?

    மாடில யோகா பண்றான்!

    நான் போய்ப் பாக்கறேன்!

    சுரேஷ்! ஒரு நிமிஷம்! உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்!

    சொல்லுங்க அங்கிள்!

    நீ ரமணிக்கு ரொம்ப நெருக்கமா?

    ஓரளவுக்கு!

    நீ சொன்னா, ரமணி அதைக் கேட்டுப்பானா?

    என்ன சொல்லணும்?

    அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் சுரேஷ்! வீட்ல யார்கிட்டேயும் அவன் நின்னு கூடப் பேசறதில்லை! ஏன் இப்படி இருக்கான்னு தெரியலை! உனக்குத் தெரியுமா?

    கல்யாணம் அவனுக்குப் பிடிக்கலை அங்கிள்!

    உங்கிட்ட சொன்னானா?

    ம்! கேஷுவலா ஒரு வாட்டி கேட்டுப் பார்த்தோம்! வேண்டாம்னு சொல்றான்! ஏன்னு கேட்டா, சுதந்திரம் போயிடும்... ஒரு கட்டுப்பாடு வந்திரும்னு சொல்றான். அதை அவன் விரும்பலை! குடும்பம், குழந்தைகள்னா டென்ஷன் அதிகம். தேவையில்லைனு சொல்றான்!

    அதெல்லாம் இருந்தாத்தான் சுரேஷ் வாழ்க்கைல ஒரு பிடிப்பு வரும்!

    சொல்லிப் பார்த்துட்டோம் அங்கிள்! காதுல போட்டுக்கறதில்லை!

    நீ திரும்பவும் பேசிப் பாரேன்!

    முயற்சிக்கறேன். அங்கிள்! உங்க வீட்ல மற்ற பிள்ளைகள், மனைவிகள் அவங்க சண்டை போட்டுப்பாங்களா?

    உண்டு! சின்னச் சின்ன சண்டைகள்! ஆனா. மத்தவங்களை அது பாதிக்காது!"

    பாதிக்கணும் அங்கிள்!

    புரியலை!

    கொஞ்சம் ரமணியின் கவனத்தைக் கவர்ற மாதிரி சண்டைகள் நடக்கணும்!

    அது ஆபத்தாச்சே சுரேஷ்! சுத்தமா கல்யாணமே வேண்டாம்னு சொல்லுவானே?

    மாட்டான் அங்கிள்! இது ஒரு மாதிரி அதிர்ச்சி வைத்தியம்!

    புரியும்படியா சொல்லு!

    "உங்களுக்கும், ரமணிக்கும் மற்ற

    Enjoying the preview?
    Page 1 of 1