Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தானாகத் தெரியும்!
தானாகத் தெரியும்!
தானாகத் தெரியும்!
Ebook98 pages31 minutes

தானாகத் தெரியும்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாடோடிகள்’ சரியாகப் போகவில்லை!
பாஸ்கி இயக்கும்போதே, நாடோடிகள் தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தது.
ஜனா இயக்கத்துக்கு வந்த பிறகு இன்னும் மோசமானது!
தயாரிப்பாளர் அதை நிறுத்திவிட்டு வேறு தொடரை ஆரம்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
ஜனா, முருகன் இருவரையும் அழைத்தார்.
“கைல எவ்ளோ எபிசோட் இருக்கு?”
“ஷூட் பண்ணினது அஞ்சு இருக்கு சார்!”
“இன்னும் ஒரு பத்து எபிசோட்ல முடிச்சுக்குங்க!”
“சார்! கதைல இனிமேதான் ஒரு முக்கியமான திருப்பம் வரப்போகுது!” முருகன் சொன்னான்.
“போதும் முருகன். என்ன பொல்லாத திருப்பம்? ஆரம்பம் முதலே உங்க சொந்தக் கற்பனை எதுவும் இல்லை. ‘நட்சத்திரம்’ ஜெயிச்சப்ப, அதுலேயிருந்து நிறைய காட்சிகளை உருவி இதுல போட்டீங்க. காப்பியடிக்கறதைத் தவிர, உருப்படியா என்ன செஞ்சீங்க?”
முருகனின் முகம் இருண்டது!
“இங்கே வேலைக்குச் சேர்ந்த புதுசுல நீங்களும் பாஸ்கியும் மாறி மாறி துரை சாரைக் குறை சொன்னீங்க. அவருக்கு எந்தத் திறமையும் இல்லை. ‘நட்சத்திரம்’ வெற்றிக்கு நீங்க ரெண்டு பேரும்தான் காரணம்னு வாய் கூசாம பொய் சொன்னீங்க. பாலமுருகன் டைரக்ஷன்ல துரைசார் எழுதி ‘நட்சத்திரம்’ கடைசிவரைக்கும் நல்லாத்தான் போச்சு! இப்ப வேற கம்பெனிக்கு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்றாங்க. அதுக்கும் நல்ல பேரு. மத்தவங்களைப் போட்டுக் குடுக்கறதை தவிர, உங்களுக்கு என்ன தெரியும்?“....!”
“பத்து எபிசோட்ல முடிச்சிட்டு, எடத்தைக் காலி பண்ணுங்க.”
இருவரும் எழுந்தார்கள்.
“எப்பவுமே நம்ம உழைப்புல, திறமைல வாழணும்! மத்தவங்களை நாசப்படுத்திட்டு வாழற நம்ம வாழ்க்கை நிலைக்காது முருகன்! புரிஞ்சுக்குங்க!”
அவர் எழுந்து போய்விட்டார்.
இருவரும் வெளியே வந்தார்கள்.
“ரொம்பத் தொங்குதுங்க! நீங்க இன்னும் கொஞ்சம் நல்லா எழுதினா, இந்தத் தொடரை நிறுத்த வேண்டிய நிலைமை வந்திருக்காது!” ஜனா ஆரம்பித்தான்.
முருகனுக்கு சுருக்கென வந்துவிட்டது.
கண்ணாடியை இறக்கிக்கொண்டு பார்த்தான்.
“என் எழுத்தை விமர்சனம் பண்ற தகுதி இங்கே எந்த நாய்க்கும் இல்லை!”
“இதப் பாருங்க முருகன். மரியாதையாப் பேசுங்க!”
“உனக்கென்ன மரியாதை ஜனா?”
“நான் ‘நாடோடிகள்’ டைரக்டர்.”
முருகன் சிரித்தான்.
“என்ன சிரிப்பு?”
“பாஸ்கியைக் கவுத்துட்டு, நீ டைரக்டர் ஆயிட்டே! அதுவும் நிலைக்கலை பாரு! அடுத்தவங்களைக் கவுத்தா, இந்த நிலைமைதான்!”
“நீங்க மட்டும் என்ன யோக்யம்? துரை சாரை நீங்க கவுக்கப் பாத்தீங்க! இப்ப உங்க கதி என்ன?எங்கிட்ட பேனா இருக்குடா!”
“அதுல இங்க் இருக்கானு முதல்ல பாருங்க. துரை சாருக்கு பத்தாம் தேதி சம்பளம் தருவாங்க கம்பெனில. ஆனா உங்களுக்கு ஒண்ணாம் தேதி அவர் செக் தருவார். துணிமணி, கேட்டப்ப கடன், நல்ல ஓட்டல்ல சாப்பாடுனு சொந்தத் தம்பி மாதிரி அவர் உங்களை வச்சிருந்தார். பாஸ்கியையும், துரை சாரையும் பிரிச்சீங்க! சத்யமா நீங்க உருப்படப் போறதில்லை! நாசமாத்தான் போவீங்க!”
“சாபம் விடறியாடா?”
“விடாம? நான் தனிமனுஷன். நீங்கள்ளாம் குடும்பஸ்தன். பொண்டாட்டி கையால செருப்படி பட்டு தெருவுக்கு வரணும்யா நீ! ஆனா நீ மாமா வேலை செஞ்சாவது பொழைச்சுப்பே! உனக்கு ஏது மான, ரோஷம்?”
முருகனுக்கு ஆத்திரம் உச்சந்தலைக்கு வந்துவிட்டது!
ஆனால் பேச முடியாது!
‘துரை நாக·கமானவர். ஓரளவுக்கு எதையும் பொறுத்துக்கொள்வார்!’
இந்த ஜனாவெல்லாம் பொறுக்கிக்கூட்டம்!
சாக்கடையில் கல் எறிவதைப் போலதான் இவர்களிடம் பேசுவது!
“நீ எதுக்குடா இத்தனை காலம் பாஸ்கிகிட்ட ஜால்ரா போட்டுக்கிட்டு ஒட்டிக்கிட்டிருந்தே? உன் தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் கேட்டிருந்தே! கொடுக்கலியோ?”
“தேவையில்லை. இந்த இருபது எபிசோட்ல எனக்கு டைரக்டர் சம்பளம்தானே? அதுபோதும். பாஸ்கியை நம்பியா நான் பொறந்தேன்? அந்தக் குடிகாரனை நம்பி, அவன் பொண்டாட்டியே வாழ முடியாதே! மத்தவங்க எப்படி? சரி சரி மீதியை எழுதிக்குடுத்துட்டு நடையைக் கட்டுங்க!
“நான் இப்ப காளிகாம்பா கோயிலுக்குப் போறேன்!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
தானாகத் தெரியும்!

Read more from தேவிபாலா

Related to தானாகத் தெரியும்!

Related ebooks

Reviews for தானாகத் தெரியும்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தானாகத் தெரியும்! - தேவிபாலா

    1

    துரையால் புறக்கணிக்கப்பட்டு வெளியே வந்த பாஸ்கி, நேராக தன் வீட்டுக்கு வந்தான். கையில் இருந்த காசில் ஒயின் ஷாப்புக்குப் போய் ஒரு ரவுண்ட் ஏற்றிக்கொண்டான்.

    நேராக வீட்டுக்கு வந்துவிட்டான்!

    அப்படியே படுத்துவிட்டான்!

    வேலையில்லை என்றதும் சுற்றியிருந்த ஜால்ராக் கூட்டம் மொத்தமும் சிதறிவிட்டது!

    பாஸ்கிக்கு பசி எடுத்தது. எழுந்து சமையல் கட்டுக்கு வந்தான். எல்லாம் காலி!

    விதம்விதமாக சமைத்துத் தருவாள் யமுனா!

    அவளும் இல்லை!

    ‘யமுனா - ஸ்நேகிதி வீட்டுக்குப் போனவள் - வருவாளா? மாட்டாளா?’

    ‘வருவாள் - ஒரு கோபத்தில் போய்விட்டாள். கண்டிப்பாக வருவாள்!’

    படுத்து பசியுடன் பாஸ்கி உறங்கிவிட்டான்!

    அதே நேரம் தோழி வீட்டில் உணவு மேஜையின் முன் யமுனா உட்கார்ந்திருந்தாள்.

    யமுனா! சாப்பிடும்மா!

    சாப்பிடப் பிடிக்கலை!

    என்ன சொல்ற நீ?

    பாஸ்கி இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்காரோ? தெரியலையே!

    வந்த முதல் இதையேதான் நீ புலம்பிக்கிட்டு இருக்கே! அப்ப நீ வந்திருக்கக்கூடாது!

    இல்லை சித்ரா! அவருக்கொரு பாடம் கற்பிக்கணும். அதுல என் பங்கு முக்கியம். ஆட்டம் உச்சத்துல இருந்திருக்கு! அதுக்கொரு முடிவு வர வேண்டாமா? இப்ப வந்திருக்கு! அவர் தனிமைல தவிக்கணும்!

    விடு! விட்டுட்டு நீ சாப்பிடு!

    ஆனா பயம்மா இருக்கு!

    என்ன பயம்?

    தனிமை அதிகமானா, இன்னும் குடிப்பார். இப்ப ஒரு வாரத்துக்குக் கையில் பணம் இருக்கும். அது தீர்ந்ததும் என்ன செய்வார்னு பாக்கணும்!

    இதப்பாரு! தண்ணில தள்ளி விட்டா, தானே நீச்சல் வரும்! நீ பொறுமையா இரு!

    அன்று இரவு முழுக்க யமுனா உறங்கவில்லை!

    மறுநாள் காலை எழுந்து குளித்து ஆபீசுக்கு புறப்பட்டாள்.

    துரையின் வீட்டு வழியாகத்தான் அவள் ஆபீசுக்கு புறப்பட வேண்டும்!

    அந்த வீட்டு வாசலில் அவள் செல்லும் ஆட்டோ பிரேக் டவுன் ஆகிவிட்டது!

    போகாதும்மா! வேற வண்டி புடிச்சுக்குங்க!

    யமுனா இறங்கிப் பணத்தைக் கொடுத்தாள்; திரும்பினாள்!

    துரை வெளியே வந்து கொண்டிருந்தார். யமுனாவைப் பார்த்துவிட்டார்.

    யமுனாவுக்குத் தாங்க முடியாத குற்ற உணர்ச்சி. துரை அருகில் வந்துவிட்டார்.

    யமுனா! என்னம்மா இங்கே நிக்கற?

    ஆட்டோ நின்னு போச்சு!

    வீட்டுக்கு வாம்மா! ஒரு காபி குடிச்சிட்டுப் போகலாம்!

    இல்லை சார். ஆபீசுக்கு டயமாயிடும்!

    உன்னை நான் கார்ல ட்ராப் பண்றேன். உள்ளே வா!

    யமுனா அவருடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

    துரையின் மனைவி கல்பனா யமுனாவை வரவேற்றாள்.

    எப்படி இருக்கே யமுனா?

    யமுனா மெதுவாக அழத் தொடங்கினாள்.

    ஏம்மா அழற?

    நான் எப்படி சார் இருப்பேன்? எல்லாரும் நல்லா இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

    இருவரும் பேசவில்லை!

    அகங்காரம் புடிச்சு, இருக்கற தொழிலை - நல்ல நட்பை - எதிர்காலத்தை பாஸ்கி இழந்தாச்சு! குடியைத் தவிர மீதி எல்லாத்தையும் விட்டாச்சு! எனக்கும் ஆத்திரம் தாங்க முடியாமல்தான் கொஞ்ச நாள் ஸ்நேகிதி வீட்ல இருந்துட்டு வர்றேன்னு புறப்பட்டேன். ஆனா மனசு கேக்கலை! தனியா இருந்தா குடிப்பழக்கம் அதிகமாகும்! பயம்மா இருக்கு!

    கைல பணம் இருக்கா அவனுக்கு?

    அதிக பட்சம் ஒரு வாரத்துக்குத் தாங்கும்!

    மீதியை உன் பேர்ல டெபாஸிட்டா நீ வச்சிருக்கியா?

    இல்லைண்ணா! ஒரு நிலமா வாங்கி வச்சிட்டேன். பாஸ்கி பேர்லதான். ஆத்திரத்துல பத்திரத்தைக்கூட அவர்கிட்டக் குடுத்துட்டு வந்துட்டேன்!

    அதை வித்துடப் போறார்! கல்பனா சின்னக் குரலில் சொன்னாள்.

    அது தான்கா நடக்கும்! உடனே வேலை தேட மாட்டார். இருக்கறதை வித்துக் குடிக்கற புத்திதான் வரும்!

    தடுக்க முடியாதா?

    நான் அந்த வீட்டுக்குப் போகணும். அவரை நெனச்சா, கவலையாவும் இருக்கு. அதே சமயம் என் வீட்டுக்குப் போக எனக்குப் பிடிக்கவும் இல்லை! ஒழுங்கா இருந்து, சம்பாதிச்சுக்கிட்டிருந்தா, ஒரு வீடு வாசல்னு சேர்த்திருக்கலாம். சரி! அதுக்கெல்லாம் ஒரு யோகம் வர வேண்டாமா?

    கல்பனா தந்த காபியைக் குடித்துவிட்டு யமுனா எழுந்தாள்.

    யமுனா! நீ எப்ப வேணும்னாலும் இங்கே வரலாம். இது உன் பிறந்த வீடுனு நினைச்சுக்கோ!

    துரை சொல்ல,

    யமுனாவின் கண்கள் கலங்கியது!

    சரிண்ணா! அவரை மனசுல நெனச்சுகிட்டு என்னையும் நீங்க வெறுத்துடுவீங்களோனு நெனச்சேன்!

    யமுனா! நீ என்னை சரியாப் புரிஞ்சுக்கலை!

    என்ன சொல்றீங்க?

    அவனையே இப்பக்கூட நான் வெறுக்கலை! எல்லாத்தையும் இழந்து இந்த வீட்டு வாசலுக்கு அவன் வந்தப்ப, விரட்டித்தான் விட்டேன். ஆனா அன்னிக்கு ராத்திரி முழுக்க நான் தூங்கலை தெரியுமா?

    யமுனா அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

    "நானும், அவனும் சேர்ந்து வேலை செய்யறது இந்த ஜென்மத்துல இல்லை! ஆனா அவன் திருந்திட்டு,

    Enjoying the preview?
    Page 1 of 1